Saturday, September 30, 2023

கைகளை இழந்தாலும்

கைகளை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை எந்தவொரு இரவுக்கும் விடிவு உண்டு எமக்கொரு விடிவு வராமலா போய்விடும்?

கொள்கை “திராவிடம்”

கொள்கை “திராவிடம்” கட்சி “திராவிடர் கழகம்” ஆனால் பட்டம் மட்டும் “தமிழர் தலைவர்” ஏன் அதையும் “திராவிடர் தலைவர்” என்று வைத்துக்கொள்ளலாமே? #திராவிட உருட்டு

தமிழ் சினிமாவின் “சுப்பர் ஸ்டார்” தானே

தமிழ் சினிமாவின் “சுப்பர் ஸ்டார்” தானே என்று அடம்பிடிக்கும் நடிகர் ரஜனி, காவிரியில் தமிழக மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பாரா?

கனடிய சீக்கிய தலைவர் கொலையில்

கனடிய சீக்கிய தலைவர் கொலையில் இந்தியாவின் பங்கு இருப்பதற்கு ஆதாரம் இருப்பதாக கனடிய பிரதமர் தெரிவித்துள்ளார். இந்தியா இதுவரை பல நாடுகளில் 40ற்கு மேற்பட்ட இவ்வாறான கொலைகளை செய்திருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. இந்தியா விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியதன் மூலம் இப் பிரச்சனையில் அது கனடாவை ஆதரிக்கின்றது. பிரிட்டன், பிரான்ஸ், அவுஸ்ரேலிய நாடுகளும் கனடாவை ஆதரிக்கும் சூழ்நிலைகள் உருவாகின்றன. இந்தியா கனடியர்களுக்கான விசாவை நிறுத்தியுள்ளது. கனடாவும் இந்தியர்களுக்கான விசாவை நிறுத்தினால் சுமார் 3 லட்சம் இந்திய மாணவர்கள் பாதிக்கப்படுவர். இந்திய மகேந்திரா கம்பனியில் இருந்து கனடிய நிறுவனம் வெளியேறியுள்ளது. இதனால் பங்கு சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு இனி என்னென்ன நெருக்கடிகள் வரப் போகின்றன என்று உறுதியாக கூற முடியவில்லை. ஆனால் எல்லை தாண்டிய பயங்கரவாதம் பற்றி பேசுவதற்குரிய தார்மீக தகுதியை இந்தியா இழந்துவிட்டது என்பதை உறுதியாக கூறலாம்.

ஆழ்ந்த இரங்கல்!

• ஆழ்ந்த இரங்கல்! 1995ம் ஆண்டு மார்கழி மாதம் 15ம் திகதி. ஈழத் தமிழர்களுக்காக அப்துல் ரவூப் தன்னையே எரித்துக்கொண்ட நாள். அப்துல் ரவூப் மரணம், • ஈழத் தமிழர்களுக்கு தமிழக மக்களின் ஆதரவு உண்டு என்பதை உலகிற்கு வெளிப்படுத்தியது • தடா சட்டத்தின் மூலம் தமிழக மக்களின் அதரவுக் குரலை நசுக்க முடியாது என்பதை காட்டியது. • ராஜீவ் மரணத்தால் தமிழக மக்களின் ஈழ ஆதரவு நிலை மாறவில்லை என்பதைக்காட்டியது. • எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்காக மரணத்தை தழுவவும் தமிழக இளைஞர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை இந்திய அரசுக்கு காட்டியது. • தமக்காக குரல் கொடுக்க தாய்த் தமிழகம் இருக்கிறது என்பதை ஈழத் தமிழர்களுக்கு உணர்த்தியது. இத்தனை பயன் உள்ள செய்திகளையும் அப்துல் ரவூப் தன் மரணம் மூலம் உலகத்திற்கு எடுத்துக் கூறினான். அப்துல் ரவூப் இறந்தபின்பு ஜெயா அம்மையாரின் பொலிஸ் அவரது தாய் தந்தையரை மிரட்டியது. காதல் தோல்வியில் அப்துல் ரவூப் தற்கொலை செய்தான் என்று கூறும்படி வற்புறுத்தியது. அவ்வாறு கூறினால் பணம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியது. ஆனால் அந்த ஏழைப் பெற்றோர் எதற்கும் அஞ்சவில்லை. ஆசை வார்த்தைகளுக்கு மசியவில்லை. ஈழத் தமிழர்களுக்காக தம் மகன் உயிர் விட்டதை எண்ணிப் பெருமைப்படுவதாகவே கூறினார்கள். இன்றுவரை அவர்கள் அந்த கருத்தையே கொண்டிருந்தார்கள். இன்று அப்துல் ரவூப் அவர்களின் தந்தை அசன் முகமது காலமானார். அவருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்.

நீங்கள் மலர்களை நசுக்கலாம்.

நீங்கள் மலர்களை நசுக்கலாம். ஆனால் வசந்தம் வருவதை தடுக்க முடியாது! நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் 21 பேர் சிங்கள அரசின் குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்ட 28ஆவது ஆண்டு நினைவு நாள்

உங்கள் நிறைவேறாத ஆசை

உங்கள் நிறைவேறாத ஆசை என்ன என்று சில்க் சுமிதாவிடம் கேட்டபோது “நான் நக்சலைட் போராளியாக விரும்பினேன். அந்த ஆசை நிறைவேறவில்லை” என்றார். இதை அவர் புகழின் உச்சியில் இருந்த போது கூறினார். ஒருவேளை அவர் விரும்பியபடி நக்சலைட் போராளியாகியிருந்தால் அவரது தற்கொலை முடிவு நிகழ்ந்திருக்காதோ? இன்று சிலக் சுமிதாவின் நினைவு தினம்.

மதுரையில் சிவபெருமான் பிட்டுக்கு

மதுரையில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்ததாக கூறுகின்றார்கள். அவர் குழல் பிட்டுக்கு சுமந்தாரா அல்லது நீத்து பிட்டுக்கு சுமந்தாரா? யாழ்ப்பாணத்தில் நீத்துப்பெட்டி பிட்டு பிரபல்யமான உணவு. ஆனால் தமிழகத்தில் மதுரையில்கூட இன்று பிட்டு இருப்பதாக தெரியவில்லை. என்ன காரணம்? ஒரு டவுட்! பிட்டு, புட்டு இதில் எது சரி?

வாழ்த்துக்கள்!

• வாழ்த்துக்கள்! கனடாவில் ஒன்றாரியோ மாகாண அரசில் ஈழத் தமிழர் விஜய் தனிகாசம் அமைச்சராகியுள்ளார். அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். கனடா சென்ற ஈழத் தமிழர் குடியுரிமை பெற்று அமைச்சராக முடிகிறது. ஆனால் வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டிற்கு சென்ற ஈழத் தமிழர் 40 வருடமாக அகதியாகவே உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழருக்கு எப்போது விடிவு வரும்?

திலீபன் நினைவாக ரத்த தானம்.

திலீபன் நினைவாக ரத்த தானம். உண்மையில் சிறந்த பணி. சிறந்த முன்மாதிரி. நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களுக்கும் , நிகழ்வில் பங்கெடுத்து ரத்தம் வழங்கியவர்களுக்கும், பாராட்டுகளும் வாழ்த்துகளும்

வளர்ந்த மரத்தை பாதியில் தறித்து

வளர்ந்த மரத்தை பாதியில் தறித்து வீழ்த்திவிட்டு அது பட்டுவிட்டது என்று நினைத்திருப்பர். ஆனால் அதன் ஆழமான வேர்களோ தக்க தருணத்திற்காக காத்து கிடக்கும். சிறுதுளி ஈரம் கண்டவுடன் துளிர்த்து எழும். அதன் பிஞ்சுஇலைகள் காற்றில் ஆடும்போது “வீழ்வேன் என்று நினைத்தாயோ” என கேட்பதுபோல் இருக்கும் திலீபன் நினைவிடத்தில் பறக்கும் மஞ்சள் சிவப்பு கொடிகள் சிங்கள அரசுக்கு அச்சத்தைக் கொடுக்கிறதாம். அக் கொடிகளை தடை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் கோரியுள்ளன. வெற்றியை விட பெருசா ஒன்னு இருக்குதுன்னா அது எதிரிகளுக்கு நாம குடுக்கிற நடுக்கம்தான்.

நாம் எதை அறுவடை செய்ய விரும்புகிறோமோ

நாம் எதை அறுவடை செய்ய விரும்புகிறோமோ அதை முதலில் விதைக்க வேண்டும் #அடுத்த தலைமுறைக்கும் திலீபன் கடத்தப்படுகிறான்

திலீபன் நினைவாக ரத்த தான முகாம்

திலீபன் நினைவாக ரத்த தான முகாம் நடத்த யாழ் இந்துக்கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் யாழ் இந்திய தூதரின் வைபவங்களில் மாணவர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது. திலீபன் பயங்கரவாதி என்று இந்திய அரசு கூறுகின்றது. திலீபன் நினைவு கூரப்படுவதை யாழ் இந்திய தூதர் விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இருந்து வந்த பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தி இந்திய அரசுக்கு பதில் அளித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் அளித்துள்ள பதிலை இனியாவது இந்திய அரசு புரிந்துகொள்ளுமா?

விசாரணக்கு தயார் என்றும்

விசாரணக்கு தயார் என்றும் தான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் குண்டு வெடிப்பு திடீரென்று நடந்தது அல்ல. அது நீண்ட காலமாக திட்டமிடப்பட்டு நடந்தது என்றும் அவர் கூறியிருக்கின்றார். தமக்கு பிரேமதாசா ஆயுதம் தந்தார். மகிந்தா உதவினார். ஜேவிபி குண்டுகள் தந்தது என்று கூறியிருக்கிறார். இதை அவர் பாராளுமன்றத்தில் கூறியிருக்கிறார். ( வீடியோ கீழே பின்னூட்டத்தில் உள்ளது) பிரேமதாசா மற்றும் மகிந்த ராஜபக்சா உதவியது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஜே.வி.பி உதவியது என்ற அவரது குற்றச்சாட்டு புதிதாக உள்ளது. இது குறித்து ஜே.வி.பி கட்டாயம் பதில் அளித்தே ஆக வேண்டும். அதேவேளை தமிழ்நாட்டில் உள்ள ஒரு இஸ்லாமிய அமைப்பையும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். இந்த ஈஸ்டர் குண்டு வெடிப்பில் இந்தியாவில் உள்ளவர்களின் தொடர்பு குறித்து இதுவரை பலர் கூறி வருகின்றனர். ஆனால் இந்திய அரசோ இது குறித்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வருகிறது. பிள்ளையானின் உரையில் இருந்து தெரியவருவது என்னவெனில் தனக்கு ஆபத்து வருமாயின் தான் பலரை காட்டிக் கொடுப்பேன் என்பதையே அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். எனவே இப்போது எழும் கேள்வி என்னவெனில் மகிந்த ராஜபக்சா கும்பல் பிள்ளையானை காப்பாற்றுவார்களா அல்லது கைகழுவி விடப் போகிறார்களா என்பதே.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்காக

•எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்காக இந்திய அரசு தண்டிக்கப்படுமா? கனடாவில் கனடிய குடியுரிமை பெற்ற சீக்கிய தலைவர் ஒருவரை இந்திய அரசு கொன்றுள்ளது. இதனை இந்திய அரசின் எல்லை தாண்டிய பயங்கரவாதமாக கனடா பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சீக்கிய தலைவர் கொல்லப்பட்டதும் உடனடியாக கண்ணை மூடிக்கொண்டு இந்தியாதான் காரணம் என்று கனடா பிரதமர் கூறவில்லை. மாறாக கடந்த மூன்று மாதமாக நன்கு விசாரணை செய்து தேவையான ஆதாரங்களை திரட்டிய பின்பே குறிப்பிட்டிருக்கின்றார். அதுவும் அமெரிக்க, பிரித்தானிய அவுஸ்ரேலிய உளவுதுறைகள் உறுதிப்படுத்திய பின்பே கூறியிருக்கிறார். தமது உளவுத்துறையின் தகவல்களை பெற்ற பின்பே கனடா பிரதமர் இந்தியாவை குற்றம் சாட்டியிருப்பதாக அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார். இதன் மூலம் கனடா பிரதமரின் கூற்றையே அமெரிக்காவும் கொண்டிருப்பதை உணர முடிகிறது. இதற்கிடையில் தமக்கு பாதுப்பு அளிக்கும்படி பிரித்தானியாவில் உள்ள சீக்கிய மற்றும் காஸ்மீரிய அமைப்புகள் கோரியுள்ளன. தமது குடியுரிமை பெற்றவர்களை பாதுகாக்க வேண்டியது பிரித்தானிய அரசின் கடமை. எனவே பிரித்தானிய அரசு இனி இந்திய தூதரகத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் நிச்சயம் கவனிக்கும். கனடாவில் சீக்கிய தலைவர் கொல்லப்பட்டமைக்கு இந்திய அரசு தண்டிக்கப்படுமா என்று தெரியவில்லை. ஆனால் விசாரணைக்கு ஒத்துழைக்காவிடின் இந்திய அரசு தனிமைப்படுத்தப்படும் என்றே தோன்றுகிறது. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிடில் பாஜக ஆட்சிக்கு வந்திருக்குமா என்பது சந்தேகம். ஆனாலும் ஆட்சிக்கு வந்த பாஜக தலைவர் அத்வானி “ என்ன இருந்தாலும் இந்தியா வந்து எமது தலைவர் ஒருவரை கொன்றதை ஏற்க முடியாது” என்றார். இப்போது அவருடைய கட்சியின் அரசு மீதே எல்லை தாண்டி வந்து கனடாவில் தலைவர் ஒருவரை கொன்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இனி எல்லை தாண்டிய பயங்கரவாதம் பற்றி பேச பாஜக அரசுக்கு எந்த தார்மீக தகுதியும் இல்லை.

நல்லவேளை வள்ளுவருக்கும்

நல்லவேளை வள்ளுவருக்கும் தமிழ் பேசவும் எழுதவும் கற்றுக் கொடுத்தது கலைஞர்தான் என்று கூறவில்லை. பசி கொடுமையானதுதான். ஆனால் அது இந்தளவு கொடுமையானதா?

1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி எ

1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும் கிராமத்தில் இந்திய ராணுவம் வீடு வீடாக சென்று சோதனையிட்டது. அப்போது ஒரு வீட்டில் பெண் ஒருவர் தனியாக இருந்துள்ளார். அப் பெண்ணுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர்தான் குழந்தை பிறந்திருந்தது. அவர் குழந்தையுடன் வீட்டில் இருந்தபோது நான்கு சீக்கிய ராணுவத்தினர் சென்றுள்ளனர். இனி அதை அந்த பெண் கூறுவதை படியுங்கள். ஜயோ பிள்ளையாரப்பா! குறுக்கால போவார், தொலைவார் இன்னைக்கு பகல்ல வந்துட்டான்களே இந்நேரம் என்ர மனுசனும் இல்லையே யாரைத்தான் இப்ப அனுப்ப முடியும் உடனே அவரைக் கூட்டி வா என்று வழக்கமாக மதவடியில் இருக்கும் பொடியன்களையும் காணவில்லையே பாவம், அவங்களும் எத்தனை தரம்தான் பூவரசம் கதியால அடி வாங்குவது? சப்பாத்தி வாசம் வரும் முன்னே இந்தியன் ஆர்மி வரும் பின்னே ஒழுங்கையால யார் போனாலும் வீரமாக குரைக்கும் நாயும்கூட இந்தியன் ஆர்மி என்றவுடன் குண்டிக்குள் வாலைச் செருகிக்கொண்டு ஓடி வந்து வீட்டுக்குள் பதுங்குதே. வீட்டை சுற்றி விறைப்பாக நிக்கிறாங்க தலையிலே துண்டு கட்டியிருக்கிறாங்க இவங்கதான் சீக்கிய ஆர்மி போல இருக்கு முன்னால படலை இறுக்கி கட்டியிருக்கு பின்னால வேலியில் கண்டாயம் வைச்சு வந்திட்டாங்களே அத்துளு அம்மாளாத்தையே இந்த சண்டாளப் பயலுகளிடமிருந்து நீதான் என்னைக் காப்பாத்தனும் அடுத்த திங்கட்கிழமை கட்டாயம் உனக்கு பொங்கல் வைக்கிறேன் அம்மா! ஒருத்தன் கிணத்தடியில் இருந்த தென்னையில் தேங்காய் பறித்து தின்கிறான் இன்னொருத்தன் வீட்டு வாசலில் இருந்த மாமரத்தில் மாங்காய் ஆய்ஞ்சு தின்கிறான் வேறு ஒருத்தன் பேப்பரால் சுத்திக் கட்டிய மாதுளம்பழத்தை பறித்து பாக்கெட்டுக்குள் செருகுகிறான் கடைசியாக ஒருத்தன வீட்டுக்கள் எட்டிப் பார்க்கிறானே? ஜயோ! உள்ளே வந்துவிடுவானா? பொல்லாத கனவுதான் ராத்திரி கண்டேனே வெள்ளாட்டுக் காம்பில் விஷம் வடியக் கண்டேனே ஓடை எல்லாம் ரத்தம் ஓடிவரக் கண்டேனே காத்து கறுப்பாச்சே கண்ட கனா பலிச்சிடிச்சே என் மேலேயே இடி வந்து விழுந்திடுச்சே! பள்ளிக்கு போயிருக்கும் மனுசன் இன்னும் வரல்லையே அப்பு வீட்டுக்குபோன என் மகனையும் காணல்லையே ஒத்தையிலே நான் பச்சை உடம்போடு படுத்து இருக்கையில் துப்பாக்கியோடு வந்து வாசற்பக்கம் எட்டிப் பார்க்கிறானே! கொல்லையில என் மகன்தான் மல்லிகை நட்டிருக்கான் நீர் பிடிச்ச கொடி இப்ப வேர் பிடிச்சு வளர்ந்திருக்கு பொத்தி வளர்த்த கொடி பூ பூக்கும் முன்னால பூட்ஸ் காலால மிதிச்சு சிதைக்கிறாங்களே ஆசையில வச்ச கொடியை இரக்கமின்றி அழிக்கிறாங்களே இவங்களுக்கு “அமைதிப்படை” என்று பெயர் வைச்சவன் எவன்டா? பல வருசமாய் நெல்லியடி சந்தியில திரிஞ்ச “மெண்டல்” பத்மநாதனை சுட்டுக் கொன்றுவிட்டு புலித் தளபதியை சுட்டுவிட்டதாக அறிக்கை விட்டவன்கள் என்னையும் கொன்றுவிட்டு அதுபோல் அறிக்கை விடுவாங்களோ? சீ, இருக்காது. என்ன இருந்தாலும் பச்சை உடம்புக்காரி என்று கொஞ்சம் இரக்கம் காட்டாமலா விடுவாங்கள்? எட்டிப் பார்த்தவன் எத்தி உதைத்தான் பூட்டிய கதவு திறப்பு போடாமலே திறந்தது மாங்காய் தேங்காய் திருடி தின்னவும் பூட்டிய வீட்டை உதைத்து திறக்கவும் நன்கு பயிற்சி பெற்று வந்திருக்கிறாங்கள் இதுக்குத்தான் டாங்கி, பீரங்கி சகிதம் “அமைதிப்படை” என்று பெயர் கூடி வந்தாங்களா? நான் பட்டபாடு நாய்படுமா பேய்படுமா கடையும் தயிர் படுமா இல்லை தறி படுமா புதுசா கட்டின வீட்டுக்கு ஓடு போட அப்பு தந்த சங்கிலியை அடகு வைச்சேன் கதவு ஜன்னல் போடுவதற்கு அத்துளுவில் வெங்காயம் செய்து வித்தேன் பிள்ளைத்தாச்சி வயிறோடு கிடுகு பின்னி வீட்டைச் சுற்றி வேலி போட்டேன் அத்தனையும் ஒரு நொடியில் நாசமாக்கி விடுவாங்களோ நாசமாய் போவான்கள், என்ன செய்யப் போறானுகளோ? வீட்டுக்குள் வந்தவன் சுவரில் தொங்கிய நாஷனல் பன்சோனிக் ரேடியோவை எடுத்து தன் தோளில் தொங்க விட்டான் கீரை வித்த காசில் அப்பு தன் பேரனுக்கு ஆசையாக வாங்கிக் கொடுத்த ரேடியோ இது பள்ளியால வந்து தன் ரேடியோ எங்கே என்று என் மகன் கேட்டால் என்ன சொல்வேன்? பிறந்து மூனு நாளே ஆன குழந்தை அருகில் படுத்து இருக்கு பச்சை உடம்புக்காரி என்று பக்கத்துவீட்டு மாமி அரைச்சு தந்த சரக்கு தண்ணி தலை மாட்டில இருக்கு இவனுகளைக் கண்டதும் பயத்தில பசியும் மறந்து போயிடுச்சே! ரேடியோவை திருடியவன் அறைக்குள் வருகிறானே ஜயோ என்ன செய்வேன்? அறைக்குள் வந்தவன் காலைப்பிடித்து விட்டுடுங்கய்யா, என்னை விட்டுடுங்கய்யா என்று கெஞ்சியதுமட்டும் நினைவிருக்கு அழுதாலும் ஏழை சொல்லு அம்பலத்தில் ஏறாது அருகம்புல்லு புத்தி சொல்லி அருவாள் கேட்காது கண்ணாடி கடைக்குள் காட்டு யானை புகுந்தது போல் எல்லாத்தையும் சிதைச்சிட்டு போயிட்டாங்களே கடைசில ஒண்ணு மட்டுமே கூற விரும்புகிறேன் அத்துளு அம்மாள் சக்தி உள்ள கடவள்தான் அவள் நிச்சயம் எனக்கு பதில் சொல்வாள்! குறிப்பு- கொஞ்சம்கூட இரக்கமின்றி அந்த பெண்ணை நாலு சீக்கிய ராணுவத்தினரும் மாறி மாறி பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். அதிகளவு ரத்தம் வெளியேறி மயங்கிய நிலையில் இருந்த பெண்ணை அயலவர்கள் மந்திகை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு கடமையில் இருந்த செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த பிரஞ்சு பெண் டாக்டர் ஒருவர் அப் பெண்ணை சிகிச்சை கொடுத்து காப்பாற்றியதோடு இதனை இந்திய ராணுவ உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதையடுத்து அப் பெண் அந்த நாலு ராணுவத்தினரையும் அடையானம் காட்டினார். ஆனால் அவர்களுக்கு இதுவரை இந்திய அரசால் எத்தகைய தண்டனையும் வழங்கப்படவில்லை. ஆனால் பச்சை வயிற்றுக்காரியை ராணுவம் பாலியல் வல்லறவு செய்ய காரணமான ராஜீவ்காந்தி வயிறு வெடித்து சாவதற்கு அத்துளு அம்மாள் கோபம்தான் காரணம் என்று சிலர் கரவெட்டியில் நம்புகின்றனர். (இது ஒரு மீள் பதிவு.)

இருவரும் இலங்கையர்கள்

இருவரும் இலங்கையர்கள் ஒருவர் சிங்களவர். இன்னொருவர் தமிழர் சிங்களவர் “திலீபன் இந்து சமுத்திரத்தில் மட்டுமல்ல முழு உலகத்திற்கும் சமாதானத்தின் அடையாளமாக இருக்கிறான்” என்று கூறுகின்றார். ஆனால் தன்னை தமிழர் என்று கூறுபவர் “ திலீபன் பயங்கரவாதி. பல மெய்யான தமிழ் தலைவர்களை கொன்றவர்கள்” என்று கூறுகின்றார். திலீபனை ஒரு சிங்களவரால்கூட உணர முடிகிறது. ஆனால் இந்த தமிழரால் ஏன் உணர முடியவில்லை?

ஈஸ்டர் குண்டு வெடிப்பு குறித்த

•ஈஸ்டர் குண்டு வெடிப்பு குறித்த சர்வதேச விசாரணையை இந்திய அரசு ஆதரிக்குமா? சனல் 4 ஆவணப்படம் வெளிவந்த பின்பு சர்வதேச விசாரணை வேண்டும் என்ற குரலகள் பலமாக ஒலிக்கின்றன. ஆனால் இந்திய அரசு மட்டும் இது குறித்து கருத்து தெரிவிக்காமல் மௌனமாக இருக்கின்றது. இந்திய அரசு சர்வதேச விசாரணையை மட்டுமல்ல இலங்கையில் உள்ளக விசாரணையைக்கூட அனுமதிக்காது என்றே தோன்றுகிறது. ஏனெனில் அசாத் மௌலானா வழங்கிய வாக்குமூலத்தில் இந்திய உளவுத்துறையின் பங்கு பற்றியும் கூறியிருக்கிறார். (1) றோ தலைவர் தமக்கு 25000 டாலர் பணம் தந்ததாக குறிப்பிடுகிறார். (2) கேரளாவில் தமது உறுப்பினர்களுக்கு பயிற்சி தரப்பட்டதாக கூறுகின்றார். (3) இந்தியாவின் தாஜ் ஓட்டலில் குண்டு வைக்கப்போனபோது இறுதி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறுகின்றார். அதைவிட இச் சம்பவத்திற்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி சிறிசேனா தன்னை இந்திய உளவுப்படை கொல்ல முயற்சி செய்கிறது என்று பகிரங்கமாக கூறியிருந்தார். எனவே விசாரணை என்று ஒன்று வந்தால் இந்திய அரசு பல விடயங்களுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலை வரும். அதனால் இந்திய அரசு எந்த விசாரணையும் நடைபெற அனுமதிக்காது. அதைவிட தற்போது கனடாவில் சீக்கிய தலைவரை கொன்ற பிரச்சனையும் வந்துள்ளது. எனவே இலங்கையில் விசாரணைக்கு ஆதரித்தால் கனடா விசாரணையையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இந்திய அரசுக்கு எற்படும். அதனால் இந்திய அரசு அனைத்து விசாரணைகளையும் மறுக்கும் என்றே தோன்றுகிறது.

பங்களாதேஷ் நாட்டில் முக்திபானி

பங்களாதேஷ் நாட்டில் முக்திபானி என்ற இயக்கத்திற்கு ஆயுதம் பயிற்சி அனைத்தும் வழங்கி உதவி செய்துவிட்டு வங்கதேச விடுதலை அடைந்ததும் அந்த இயக்கத்தை கொன்று அழித்தது இந்திய அரசு. இதுதான் வங்கம் தந்த பாடம் இந்த “வங்கம் தந்த பாடம்” நூலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் புளட் இயக்க சந்ததியார். இதனை றோ உளவுப்படையிடம் கொண்டுபோய் போட்டுக் கொடுத்தவர் (இன்று புரட்சியாளர் என்று சிலை வைக்கப்பட்டிருக்கும்) தோழர் பத்மநாபா. வேடிக்கை என்னவெனில் இதே பத்மநாபாவின் EPRLFவினர் யாழ்ப்பாணத்தில் அலன் தம்பதிகள் என்ற வெள்ளைக்காரர் இருவரைக் கடத்தியபோது சென்னையில் இருந்த நாபாவை பிடித்துச் சென்று உதைத்து அந்த அலன் தம்பதிகளை விடுவித்தது இந்திய அரசு EPRLFவினரின் கோரிக்கையை ஏற்று சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா முன்வந்தார். சிங்கள அரசு முன்வந்தபோதும்கூட அதனை தடுத்து நிறுத்திவிட்டு அலன் தம்பதிகளை விடுவித்தவர் அன்றைய இந்திய அரசின் பிரதமர் இந்திரா காந்தி. அடுத்து, யாழில் இருந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் மற்றும் ஆலாலசுந்தரத்தை இந்திய உளவுப்படையே டெலோ இயக்கத்தின் மூலம் கொன்றது. ஆனால் அதே டெலோ இயக்கத்தின் தலைவர் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டபோது அவரை இந்திய அரசு காப்பாற்றவில்லை. சிங்கள அரசு கேட்காமலேயே அலன்தம்பதிகளை விடுதலை செய்வித்த இந்திய அரசு, விரும்பியிருந்தால் சென்னையில் இருந்த பிரபாகரனை பிடித்து டெலோ இயக்க தலைவரை காப்பாற்றியிருக்க முடியும். அதாவது அலன் தம்பதிகளில் இருந்த அக்கறைகூட தமக்காக கொலை செய்த டெலொ இயக்க தலைவர் மீது இந்திய அரசு கொண்டிருக்கவில்லை என்பதையே இது காட்டுகின்றது. ஆனால் வேதனை என்னவென்றால் இத்தனை அனுபவங்களை பெற்றபின்பும் , வங்கம் தந்த பாடத்தை அறிந்த பின்பும் இன்றும் இவர்கள் இந்திய அரசின் விசுவாசிகளாக இருக்கின்றனரே?

தலைவர்களை விலைக்கு வாங்கலாம்.

"தலைவர்களை விலைக்கு வாங்கலாம். ஆனால் மக்களை ஒருபோதும் விலைக்கு வாங்க முடியாது"- சே இந்துக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடத்தவிடாமல் தடுத்தவர்களால், அவ் இந்துக் கல்லூரி மாணவர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்துவதை தடுக்க முடியவில்லை.

மாணவர் சமூகம் ஆர்வமுடன்

மாணவர் சமூகம் ஆர்வமுடன் நாம் தமிழரை நோக்கி நகர்வதை நோக்குகையில், அவர்கள் எதை அறுவடை செய்ய விரும்புகிறார்களோ அதை நன்றாக விதைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அவர்கள் எதோ சிறு கல்லை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆரியம் திராவிடம் என்ற இரண்டு மலைகளை உடைத்துக் கொண்டிருந்தார்கள் என்றே வரலாறு பதிவு செய்யப்போகிறது.

தோழர் பாலன் என்பவர் மதுரையில்

தோழர் பாலன் என்பவர் மதுரையில் ஒரு வீதிக்கு “திலீபன்தெரு” என்ற பெயர் வரக் காரணமாக இருந்தார் என்ற செய்தியை படிக்கும் பலர், ஒவ்வொரு வருடமும் “அந்த தோழர் பாலன் நீங்களா?” என்று என்னிடம் கேட்கின்றனர். மன்னிக்கவும். அது நான் இல்லை. நானும் அவரை அறிய ஆவலாக இருக்கிறேன்.

நாம் தமிழர்” மேடையில் ஏறி வீரம்

“நாம் தமிழர்” மேடையில் ஏறி வீரம் காட்டும் அந்த தாத்தா காலத்து திமுக வினர் இந்த கன்னட வெறியர்கள் மீது ஏன் வீரம் காட்டுவதில்லை? கலைஞர் மகள் செல்வி குடும்பம் பெங்களுரில் உள்ளது. மாறன் சகோதரர்களின் வியாபாரம் கர்நாடகாவில் உள்ளது. கலைஞர் குடும்ப நலனுக்காக தமிழக விவசாயிகளின் நலன் காவு கொடுக்கப்படுகிறதா?

பயங்கரவாதி” என்றார்கள்

“ “கொலைகாரன்” என்று தமது கைக்கூலிகளை வைத்து பிரச்சாரம் செய்தார்கள் நினைவு ஊர்தியை காடையர்களை வைத்து தாக்கினார்கள் நினைவு கூர்பவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பகிரங்கமாக மிரட்டினார்கள். எத்தனை தடைகள்? எத்தனை நெருக்கடிகள்? அத்தனையும் எப்படி இந்த மக்களால் தகர்க்கப்படுகிறது? வழி நடத்த தலைவன் இல்லை. பற்றிப் பிடிக்க ஒரு அமைப்பு இல்லை. ஆனாலும் இந்த அதிசயம் எப்படி நிகழ்கிறது? கொட்டும் மழையிலும் பெரியவர் முதல் சிறியவர் வரை திரண்டு வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். தமிழ் மக்கள் தமக்கே உரிய பாணியில் அளித்துள்ள பதில் இது. இதை இனியாவது சிங்கள அரசும் இந்திய அரசும் புரிந்து கொள்ளுமா?

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

•எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே! புலம் பெயர்ந்தவர்கள் கொஞ்சக்காலத்தில் தாயகத்தை மறந்துவிடுவார்கள் என்றார்கள் அடுத்து, முதல் சந்ததி நினைவு கூர்ந்தாலும் அடுத்த சந்ததி நினைவு கூராது என்றார்கள் இப்போது அடுத்த சந்ததியும் நினைவு கூர்வதைக் கண்டதும் இனி என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர். லண்டன், பிரான்ஸ், கனடா, சுவிஸ் என புலம்பெயர் தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் நினைவு கூரப்படுகிறது புலம்பெயர்ந்த தமிழர்களால் மட்டுமன்றி இந்தியாவில் தமிழக தமிழர்களாலும் நினைவு கூரப்படுகிறது.

வலியை தந்தவனுக்கு

வலியை தந்தவனுக்கு திருப்பி கொடுத்துவிடு வரலாறு வித்தியாசமாக இருக்கும்

தோழர் பகத் சிங் அவர்களுக்கு வீர வணக்கம்

• தோழர் பகத் சிங் அவர்களுக்கு வீர வணக்கம்! ஓ! மரணித்த வீரனே! நீ விரும்பிய சுதந்திர இந்தியா மலர்ந்தது , வெள்ளையர் ஆட்சி போயிற்று – ஆனால் கொள்ளையர் ஆட்சி வந்துவிட்டது. வெள்ளையரை விரட்ட நீ குண்டெறிந்தபோது உன்னை தியாகி என்றழைத்தவர்கள் தமிழரசன் எறிந்தபோது பயங்கரவாதி என்கிறார்கள். இந்த கொள்ளையர் ஆட்சியில் கல்லெறியும் காஸ்மீர் சிறுவன் ஜிகாத் பயங்கரவாதி ,சதீஸ்கரில் ஆதிவாசி மாவோயிஸ்ட் பயங்கரவாதி .தமிழகத்தில் ஈழ அகதிகள் புலிப் பயங்கரவாதிகள் தலைநகர் டில்லியில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு கறுப்பு பூனை பாதுகாப்பு அன்று முஸ்லிம்களும் சேர்ந்து சுதந்திர இந்தியாவுக்கு போராடினார்கள். இன்று முஸ்லிம்களை கொன்று குவித்தவர் மாண்புமிகு பிரதமர். வெள்ளையர் உன்னை பயங்கரவாதி என்றனர். ஆனால் சுதந்திர இந்தியா உன்னை தியாகி என்றது. இன்று கொள்ளையர் எம்மை பயங்கரவாதி என்கின்றனர். நாளைய விடுதலை எம்மை போராளிகள் என்றழைக்கும். தோழனே! நீ எறிந்த குண்டை கொடு கொள்ளையரை விரட்ட குறிப்பு - இன்று தியாகி பகத் சிங் அவர்களின் பிறந்த தினம். (28.09.1907)

ஈஸ்டர் குண்டு வெடிப்பு சூத்திரதாரி

ஈஸ்டர் குண்டு வெடிப்பு சூத்திரதாரி சஹ்ரானுடன் இந்திய உளவுப்பிரிவு தொடர்பு வைத்திருந்தது என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்கா தெரிவித்துள்ளார். “அபூஹிந்” என்பது இந்திய புலனாய்வு பிரிவு சஹ்ரான் மற்றும் சிலருடன் கலந்துரையாட பயன்படுத்திய சொல் என முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார். அசாத் மௌலானா சனல் 4 க்கு வழங்கிய வாக்குமூலத்தில் இந்திய உளவுத்துறையின் பங்கு பற்றி கூறியிருக்கிறார். (1) றோ தலைவர் தமக்கு 25000 டாலர் பணம் தந்ததாக குறிப்பிடுகிறார். (2) கேரளாவில் தமது உறுப்பினர்களுக்கு பயிற்சி தரப்பட்டதாக கூறுகின்றார். (3) இந்தியாவின் தாஜ் ஓட்டலில் குண்டு வைக்கப்போனபோது இறுதி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறுகின்றார். ஈஸ்டர் குண்டு வெடிப்பில் இந்திய புலனாய்வு பிரிவின் தொடர்பு குறித்து பல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இவை குறித்து இந்திய அரசோ அல்லது இந்திய தூதுவரோ இதுவரை கருத்து தெரிவிக்காதது ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு சாதாரண மனிதனுக்கு

ஒரு சாதாரண மனிதனுக்கு அச்சுறுத்தல் என்றால் அவன் நீதிமன்றத்தை நாடுவான் அந்த நீதிமன்றத்தின் நீதிபதிக்கே அச்சுறுத்தல் என்றால் என்ன செய்ய முடியும்? உள்ளக விசாரணை மூலம் இனப்படுகொலைக்கு நீதி பெற முடியும் என்றவர்கள் இனி என்ன கூறப்போகின்றார்கள்? தமிழ் நீதிபதி அச்சுறுத்தல், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் அச்சுறுத்தல், மாட்சிமை பொருந்திய அரச பொறுப்பில் உள்ள தமிழருக்கே இந்நிலை என்றால் , சாதாரண தமிழர் நிலை என்ன?

கர்நாடாவில் தமிழ் நடிகரை

கர்நாடாவில் தமிழ் நடிகரை வெளியேறுமாறு கூற முடிகிறது. பதிலுக்கு தமிழ் நாட்டில் கன்னட நடிகர் வெளியேறுமாறு கூற முடியுமா? கன்னட நடிகர் ரஜனிக்காக மண் சோறு சாப்பிட்ட தமிழர்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

பாக்கிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும்

பாக்கிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தண்ணீர் பிரச்சனை இல்லை பங்களாதேசுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தண்ணீர் பிரச்சனை இல்லை இதில் இருந்து என்ன தெரிகிறது? தமிழ்நாடும் தனி நாடாக இருந்தால் இந்தியாவுடன் தண்ணீர் பிரச்சனை இருக்காது.

இதுவரை “நாம் திராவிடர்” என்று

இதுவரை “நாம் திராவிடர்” என்று சொல்லிவந்தவர் இப்போது “நாம் இந்தியர்” என்கிறார். நாம் இந்தியர் என்பதால்தான் அவர்கள் தண்ணீர் தர மறுக்கிறார்கள். ஒருமுறை “நாம் தமிழர்” என்று சொல்லிப் பாருங்கள். எந்தப் பிரச்னையும் இன்றி தண்ணீர் தானாக வருவதை காண்பீர்கள்

இருவரும் தமிழர்கள்

இருவரும் தமிழர்கள் இருவரும் நீதிபதிகளும்கூட ஒருவர் சட்டமா அதிபரின் உத்தரவை ஏற்க மறுத்து பதவியை துறந்தவர் இன்னொருவர் பதவியில் இருக்கும்வரை சட்டமா அதிபரின் உத்தரவுக்கமைய பல தமிழருக்கு தண்டனை வழங்கியவர் ஒருவர் பாதுகாப்பு இன்மையால் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இன்னொருவர் தமிழர் பாதுகாப்பிற்கு துப்பாக்கி இல்லாத பொலிஸ் போதும் என்று கூறுகின்றார்.

கலைஞர் தத்தெடுத்து வளர்த்த அகதிச் சிறுவன்

•கலைஞர் தத்தெடுத்து வளர்த்த அகதிச் சிறுவன் எங்கே என்று கேட்கும் தைரியம் தமிழக ஊடகவியலாளர் யாருக்காவது உண்டா? சீமானிடம் ஓடி ஓடி கேள்வி கேட்கும் ஊடகவியலாளர் யாராவது கலைஞர் தத்தெடுத்த அகதிச் சிறுவன் எங்கே என்று ஸ்டாலினிடம் கேட்கும் தைரியம் உண்டா? முதன் முதலாக பொது வெளியில் கலைஞர் தத்தெடுத்த ஈழ அகதிச் சிறுவன் எங்கே என்று கேட்டவர் முன்னாள் அமைச்சர் பரிதிஇளம் வழுதி. மணி என்னும் அகதிச் சிறுவனை கலைஞர் தத்தெடுத்து வளர்த்தது உண்மைதான் என்று நெடுமாறன் ஐயா அவர்கள் அண்மையில் ஆவல் கணேசன் என்பவரிடம் கூறியுள்ளார். இது தொடர்பான விபரங்களை தமிழக ஊடகவியலாளர் பலருக்கு தெரிவித்து அந்த அகதிச் சிறுவனை கண்டு பிடிக்க உதவுமாறு கோரினேன் ஆனால் எந்தவொரு ஊடகவியலாளரும் இது குறித்து உதவ முன்வரவில்லை. ஸ்டாலினிடம் கேட்கவும் தயாராக இல்லை.

செய்தி – நீதித்துறைக்கு பெரும்

செய்தி – நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தல் - சுமந்திரன் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் என்பது இப்பதான் இந்த ஜனாதிபதி சட்டத்தரணிக்கு தெரிந்ததா? இனப்படுகொலைக்கு உள்ளக விசாரணை போதும் என்று ஜ.நா வில் கூறியபோது தெரிந்திருக்கவில்லையா? நீதிமனறங்கள் மூலம் விகாரைகள் அமைப்பதை நிறுத்துவேன் என்றபோது அறியவில்லையா?

பெங்களுரில் இருக்கும் கலைஞர் மகள் செல்வி

பெங்களுரில் இருக்கும் கலைஞர் மகள் செல்வி கன்னட வெறியர்களின் இச் செயலை பார்த்திருப்பாரா? இது பற்றி தன் சகோதரர் ஸ்டாலினிடம் என்ன கூறியிருப்பார்?

வாசாத்தி

• வாசாத்தி விடுதலை படத்தில் ஒரு கிராமத்தை சுற்றி வழைத்து அங்குள்ள பெண்களை பிடித்துச் சென்று பொலிசார் சித்திரவதை செய்வதை காட்டியிருப்பார்கள். அதில் பெண்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்யும் காட்சிகளை பார்த்த பலரும் மிகவும் கொடுமையாக இருப்பதாக கூறியிருந்தார்கள். இது வாசாத்தியில் நடந்த சம்பவத்தையே குறிக்கின்றது. ஆனால் உண்மையில் அங்கு நடந்தவை படத்தில் காட்டப்பட்டதைவிட கொடுமையானவை. வழக்கமாக காவல்துறையினர் செய்யும் இவ் அக்கிரமங்களுக்கு துணையாகவே அரசும் நீதித்துறையும் இருக்கும். ஆனால் அதிர்ஸ்டவசமாக வாசாத்தி சம்பவத்தில் நீதித்துறை சம்பந்தப்பட்ட காவல்துறையினரை தண்டித்துள்ளது. முதன்மை நீதிமன்றம் விதித்த தண்டனையை உயர்நீதிமன்றமும் இன்று உறுதிசெய்துள்ளது. இது அப்பாவி பெண்களை பாலியல் வல்லுறவு செய்யும் காவல்துறையினருக்கு ஒரு பாடமாக அமையும்.

கோழியை பிடிக்க விரும்புவோர்

கோழியை பிடிக்க விரும்புவோர் “பெப் பெப்பே” என அழைப்பர் கோழியும் தன் மொழி பேசுகிறார்களே என நம்பி வந்து மாட்டும். அதுபோல தமிழனை ஏமாற்ற ராகுல் காந்தி தான் தமிழன் என்கிறார். மோடி திருக்குறள் கூறுகின்றார். ஆனால் தமிழர் இப்போது நம்பி ஏமாறுவதற்கு கோழிகள் இல்லை. அழைப்பவர்களை இனங்காணும் அறிவு தாராளமாக உள்ளது.

Wednesday, September 20, 2023

யாரு பார்த்த வேலையடா

யாரு பார்த்த வேலையடா இது? 😂😂

தனது சொந்த தொகுதியில்

தனது சொந்த தொகுதியில் தமிழர் நிலம் பறிபோவதைத் தடுக்க தமிழர் தலைவர் சம்பந்தர் ஐயா களம் காணுவாரா?

நீட் தேர்வை ரத்து பண்ணுவதாக

நீட் தேர்வை ரத்து பண்ணுவதாக கூறி பதவிக்கு வந்தவர்கள் இன்னும் ரத்து செய்யவில்லை. அவர்கள் அனிதாவையே மறந்து விட்டார்கள். நீட் தேர்வு ரத்து ரகசியம் தன்னிடம் இருப்பதாக கூறிய உதயநிதி ஸ்டாலினும் அனிதாவை மறந்து சினிமாபட விநியோகத்தில் மும்முரமாக இருக்கிறார். என்னே கொடுமை இது? இன்று அனிதாவின் 6 வது நினைவு தினம்

சிங்கப்பூரின் ஜனாதிபதியாக

சிங்கப்பூரின் ஜனாதிபதியாக ஈழத்தை பூர்வீகமாக கொண்ட தமிழர் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றுள்ளார். வாழ்த்துக்கள். தமிழ்நாட்டில் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தும் 33 வருடங்களாக தொடரும் ஈழத் தமிழர் சாந்தனின் சிறைவாசம். சிங்கப்பூரில் ஒரு ஈழத் தமிழன் ஜனாதிபதியாக வர முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் சிறப்புமுகாமில் இருந்து விடுதலை பெற முடியவில்லையே. திராவிட முதல்வர் எப்போது இரங்குவார்?

செய்தி – அமரர் வி.தர்மலிங்கத்தின்

செய்தி – அமரர் வி.தர்மலிங்கத்தின் 38வது நினைவுதினம் யாழில் அனுஷ்டிப்பு 02.09.1985 யன்று தமிழர் விடுதலைக்கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் மற்றும் ஆலாலசுந்தரம் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இக் கொலையை தலைவர் சிறீ சபாரட்ணம் உத்தரவுக்கு அமைய டெலோ இயக்கத்தின் பொபி குறூப் செய்தது. அன்று வடமராட்சியில் இருந்த பாராளமன்ற உறுப்பினர்களான துரைரத்தினம் மற்றும் இராசலிங்கத்தையும் கொல்லுமாறும் சிறீ சபாரட்ணம் உத்தரவிட்டிருந்தார். ஆனால் தலைமையுடன் இருந்த முரண் காரணமாக டெலோவின் வடமராட்சிப் பொறுப்பாளர் தாஸ் இவர்களை கொலை செய்ய மறுத்துவிட்டார். இந்த நான்கு பாராளமன்ற உறுப்பினர்களும் அமிர், சம்பந்தர் போல் இந்தியா செல்லாமல் ஊரில் மக்களோடு மக்களாக வாழ்ந்தவர்கள். இவர்களுக்கு டெலோ இயக்கத்தோடு மட்டுமன்றி எந்தவொரு இயக்கத்துடன் முரண் இருந்ததில்லை. ஆனாலும் இவர்கள் கொல்லப்படுவதற்கு காரணம் இந்திய உளவுப்படையே. இந்திய உளவுப்படை கூறியபடியே இவர்களை டெலோ கொன்றது. இந்திய உளவுப்படையின் உத்தரவுப்படியே டெலொ இயக்கம் கொன்றது என்பது தர்மலிங்கத்தின் மகன் சித்தார்த்தனுக்கு மட்டுமன்றி அமிர், மாவை, சம்பந்தர் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியும். ஆனால் இதுவரை ஏன் தமது பாராளுமன்ற உறுப்பினர்களை கொன்றீர்கள் என்று இந்திய அரசை இவர்கள் கேட்கவும் இல்லை. இந்திய அரசை கண்டிக்கவும் இல்லை. மாறாக கொல்லச் சொன்ன அந்த இந்திய அரசிடம் தீர்வு கேட்டு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தமது பதவி நலனுக்காக எதையும் செய்வார்கள் என்பது தெரிந்த விடயம்தான். ஆனால் “இந்திய அரசு பல உதவிகள் செய்தது. ஈழத் தமிழர்தான் நன்றி கெட்டத்தனமாக இருக்கிறார்கள்” என்று இன்றும் சிலர் இந்தியாவில் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை இந்திய அரசு ஏன் கொன்றது என்பதற்கு என்ன பதில் கூறுவார்கள்?

கூமுட்டைகள் குஞ்சு பொரிப்பதில்லை

கூமுட்டைகள் குஞ்சு பொரிப்பதில்லை

எதிர்வரும் அக்டோபர் 22ம் திகதி நடைபெறவுள்ள

எதிர்வரும் அக்டோபர் 22ம் திகதி நடைபெறவுள்ள சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் ஈழத்தமிழர் ஜெகதீஸ்வரன் அருளீஸ்வரன் போட்டியிடுகின்றார். தொழிலாளர்கள் நலன் சார்ந்த உரிமைக்கு குரல் கொடுக்கும் பிரதான கட்சியாக விளங்கும் SP கட்சியின் சார்பிலேயே இவர் போட்டியிடுகின்றார். இவர் வெற்றி பெற வாழ்த்துக்கள். சுவிஸ் சென்ற ஈழத் தமிழர் குடியுரிமை பெற்று தேர்தலில் போட்டியிட முடிகிறது. சிங்கப்பூர் சென்ற ஈழத் தமிழர் குடியுரிமை பெற்று தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாக முடிகிறது. கனடா சென்ற ஈழத் தமிழர் குடியுரிமை பெற்று தேர்தலில் போட்டியிட்டு அமைச்சராக முடிகிறது. லண்டன் சென்ற ஈழத் தமிழர் குடியுரிமை பெற்று கவுன்சிலராக முடிகிறது. நோர்வே சென்ற ஈழத் தமிழர் குடியுரிமை பெற்று நகர மேயராக முடிகிறது. உலகெங்கும் செல்லும் ஈழத் தமிழர் அங்கெல்லாம் குடியுரிமை பெற்று வாழ முடிகிறது. ஆனால் வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டிற்கு சென்ற ஈழத் தமிழர் மட்டும் 40 வருடங்களாக அகதிகளாகவே வாழ்கின்றனர். என்னே கொடுமை இது?

அவதூறு என்பது இரு பக்க ஆயுதம்.

அவதூறு என்பது இரு பக்க ஆயுதம். அது எய்தவனையும் தாக்கும். நாம் ஒரு அவதூறை வீசினால் அது ஒன்பது அவதூறாக திரும்பி எம்மை நோக்கி வரும் கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியக்கூடாது என்று முன்னோர்கள் சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள்? அவதூறு அரசியல் வேண்டாம் என்று கூற திமுக அரசில் ஒருவர்கூட இல்லையா?

நந்தினி , நிரஞ்சனா இருவரும்

நந்தினி , நிரஞ்சனா இருவரும் RSSற்கு எதிராக குரல் கொடுத்தமையினால் திராவிட அரசு பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தது. 52 நாட்கள் சிறைவாசத்தின் பின் இருவரும் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விஜயலட்சுமி ,வீரலட்சுமிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இந்த நந்தினி நிரஞ்சனாவிற்கு ஊடகங்கள் ஏன் கொடுக்கவில்லை?

யார் இவர்?

யார் இவர்? இவரை நாம் ஏன் நினைவு கூர வேண்டும்? இவர் வியட்நாம் தந்தை என அழைக்கப்படும் ஹோ சிமின். இன்று அவரின் நினைவு தினம் ஆகும். (03.09.1969) பிரான்ஸ் அமெரிக்க வல்லரசுகளுக்கு எதிராக 20 வருடங்களுக்கு மேலாக போராடி வியட்நாமை விடுதலை பெற வைத்தவர். சரி. இவரை தமிழர்கள் ஏன் நினைவு கூர வேண்டும்? (1) எந்தப் பெரிய வல்லரசாக இருந்தாலும் ஒரு தேசிய இனத்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்க முடியாது என்ற உண்மையை உலகிற்கு காட்டியவர் இவர். (2) தேர்தல் பாதை மூலம் வியட்நாமை விடுவிக்க முடியும் என இவர் மக்களை ஏமாற்றவில்லை. மாறாக மக்களை திரட்டி ஆயுதப் போராட்ட பாதை மூலமே வெற்றி பெற்றார். (3) மிக முக்கியமாக வெற்றி பெற்ற பின்பு இவரிடம் உங்களின் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டபோது “ கசப்பான உண்மையாக இருந்தாலும் அதை மறைக்காமல் மக்களிடம் கூறினேன். மக்கள் எனக்கு வெற்றியை பெற்றுத் தந்தார்கள்” என்றார். இந்தியா என்ற பெரிய நாட்டை ஈழத் தமிழர்கள் எதிர்க்க முடியாது என்பவர்கள், தேர்தல் பாதை மூலம் தமிழருக்கு தீர்வு பெற முடியும் என்பவர்கள், அடுத்த தீபாவளிக்கு தீர்வு வரும் என்று ஒவ்வொரு வருடமும் மக்களுக்கு பொய் அறிக்கை விடுபவர்கள், படிக்க வேண்டிய வரலாறு ஹோ சிமின் வரலாறு ஆகும்.

மக்களிடம் செல்வது பயன் அற்றதா?

• மக்களிடம் செல்வது பயன் அற்றதா? ஜெனிவாவில் கோஷம் போடுவதால் தீர்வு வந்துவிடுமா? அல்லது ஜெனிவாவுக்கு சயிக்கிளில் செல்வதால் என்ன பயன்? என்று சிலர் கேட்கின்றனர். உண்மைதான். தீர்வு வந்துவிடப் போவதில்லைதான். ஆனாலும் இதில் ஒரு பயன் இருக்கத்தான் செய்கிறது. வல்லரசு நாடுகள் தாமாக ஒருபோதும் எம்மீது இரக்கம் கொண்டு தீர்வு கிடைக்க வழி செய்யப் போவதில்லை என்பதும் எமக்கு தெரிந்துதான் இருக்கிறது. ஆனால், அமெரிக்க வல்லரசுக்கு எதிராக வியட்நாம் மக்கள் வெற்றிபெற எப்படி உலக மக்களின் ஆதரவு உதவியாக இருந்ததோ, ரஸ்சிய வல்லரசுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மக்கள் வெற்றிபெற எப்படி உலக மக்களின் ஆதரவு உதவியாக இருந்ததோ, 2ம் உலக யுத்தத்தின் பின்னர் யூத மக்கள் தமக்கென்று ஒரு நாடுபெற எப்படி உலக மக்களின் அதரவு உதவியாக இருந்ததோ, அதேபோன்று ஈழத் தமிழ்மக்களும் தமக்குரிய தீர்வுபெற உலக மக்களின் ஆதரவை வென்றெடுப்பது அவசியம். அதைத்தான் ஜெனிவாவில் ஒன்றுகூடும் எமது மக்கள் செய்கிறார்கள். இனியும் செய்வார்கள். நீதி கோரி ஜெனீவாக்கு சயிக்கிள் பயணம், பிரான்சில் இருந்து நடை பயணம், லண்டனில் பிரதமர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் கனடாவில் கவனயீர்ப்பு பேரணி என உலகெங்கும் மக்களை சந்திக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் படுகொலை படங்களை மக்களுக்கு காட்டி நீதி கோருகிறார்கள். உலக மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறார்கள். அதனால்தான் சிங்கள அரசு அச்சம் கொள்கிறது. புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களை நசுக்க பல வழிகளிலும் அது முயற்சி செய்கிறது. தலைவர்களை விலைக்கு வாங்கிவிட்டால் தமிழர்களின் போராட்டம் தானாக மங்கிவிடும் என சிங்கள ஆட்சியாளர்கள் நினைத்தார்கள். ஆனால் தமிழ் மக்கள் தாமாகவே இந்தளவு விரைவாக திருப்பி எழும்புவார்கள் என அவர்கள் நினைத்திருக்கவில்லை. தமிழன் திருப்பி எழும்புவது ஆச்சரியம் இல்லை. அவன் எழும்பாவிட்டால்தான் ஆச்சரியம். ஏனெனில் அவன் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றின் சொந்தக்காரன் அல்லவா!

பிள்ளையார் ஊர்வலம்!

பிள்ளையார் ஊர்வலம்! முதலில் பம்பாயில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார்கள் இனி இதனை யாழ் இந்திய தூதர் யாழ்ப்பாணத்திற்கும் விரைவில் கொண்டு வந்துவிடுவார். ஏன் இது? என்று கேட்டால் நம்ம முருகன் சுவாமியின் அண்ணன்தானே பிள்ளையார். அவருக்கு ஊர்வலம் வைப்பது தவறில்லையே என்கிறார்கள். சரி அப்ப தம்பி முருகனின் சூரன்போர் ஏன் பம்பாயில் நடத்துவதில்லை என்று கேட்டால் அது வந்து ....... .... இழுக்கிறார்கள். பதில் சொல்வதில்லை ஏன் உங்கள் வட இந்திய கோயில்களில் முருகன் சுவாமி இல்லை?

உழைத்து உழைத்து உருக்குலைந்து போன

"உழைத்து உழைத்து உருக்குலைந்து போன மக்களை மேலெழும்ப விடாமல் அழுத்தி வைத்திருக்கும் ஆபத்தான ஆயுதங்களே மதங்களும் அவற்றின் கடவுள்களும்" - தோழர் லெனின் குறிப்பு –கிருத்தவ பங்கு தந்தையின் காலடியில் மண்டியிட்டு பாவமன்னிப்பு கேட்கும் திராவிட பகுத்தறிவு தலைவர் உதயநிதிக்கு லெனின் கூறிய வரிகளின் அர்த்தம் புரியுமா?

திராவிடத்தை ஒழிக்காமல்

திராவிடத்தை ஒழிக்காமல் தமிழ்த்தேசியம் வளர முடியுமா? தமிழ்த் தேசியம் வளர்வதை திராவிடம் ஒருபோதும் அனுமதிக்காது. அது தமிழ்த்தேசியத்தை அழிக்க ஆரியத்துடனும் கூட்டுச் சேர தயங்காது. இதையே கடந்த கால வரலாறுகள் நன்கு காட்டுகின்றன.

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

•ஆசிரியர் தின வாழ்த்துக்கள் இந்தியாவில் இன்று (05.09.2023)ஆசிரியர் தினம் கொண்டாடுகிறார்கள். இலங்கையில் அடுத்த மாதம் (05.10.19) கொண்டாடப்படும் என நினைக்கிறேன். ஆனால் எமது ஆசிரியர்களை ஒவ்வொரு நாளும் நாம் கொண்டாட முடியும். மாதா பிதா குரு தெய்வம் என்று பெற்றவர்களுக்கு அடுத்து கடவுளுக்கும் மேலாக ஆசிரியர்களை மதிப்பதும் எம் தமிழ் இனம் மட்டுமே! பொதுவாக ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுப்பார்கள் ஆனால் ஈழத்தில் ஆசிரியர்கள் பாதுகாப்பும் கொடுப்பார்கள். தன் உயிர் போனாலும் பரவாயில்லை தம் மாணவர் பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என்று நினைக்கும் அசிரியர்களைப் பெற்றதால்தான் எம் தமிழ் இனம் மீண்டும் கல்வியில் தலைநிமிர்கிறது. பாடசாலை பகிஸ்கரிப்பு செய்து பருத்தித்துறை பொலிசில் பிடிபட்டபோது ஓடி வந்து எம்மை மீட்ட காட்லிகல்லூரி அதிபரை மறக்க முடியுமா? பாடசாலையில் இருந்து அப்படியே இயக்கத்திற்கு சென்றுவிட்ட மாணவர்களின் சயிக்கிளை எடுத்துச் சென்று வீடுகளில் ஒப்படைத்ததோடு, பெற்றோருக்கு ஆறுதலும் கூறிய அந்த ஆசிரியர்களையும் மறக்க முடியுமா? தமிழ் ஆசிரியர்களின் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் தமிழ் மக்களின் போராட்டம் இந்தளவு வளர்ந்திருக்குமா?

இவர் வட இந்தியாவில் பிறந்திருந்தால்

இவர் வட இந்தியாவில் பிறந்திருந்தால் இந்நேரம் இவரது தியாகம் பெரிதாக கொண்டாடப்பட்டிருக்கும். ஆனால் இவர் தமிழ்நாட்டில் அதுவும் தமிழனாக பிறந்துவிட்டார். ரயிலில் டிக்கட் இன்றி வந்து நாட்டையே சுருட்டியவருக்கு 80 கோடி ரூபாவில் சிலை, நாட்டுக்காக தனது சொத்தை இழந்தவர் புறக்கணிப்பு.

ஒருவேளை நீட் ரத்து ரகசியம் போல

ஒருவேளை நீட் ரத்து ரகசியம் போல சனாதன ஒழிப்பு ரகசியம் தன்னிடம் இருப்பதாக உதயநிதி கூறுகின்றாரோ?

திராவிடம் சனாதனத்துடன்

திராவிடம் சனாதனத்துடன் சமரசம் செய்துகொள்ளுமே யொழிய ஒருபோதும் அதனை ஒழிக்காது #திராவிட உருட்டு

தமிழர்களை இல்லாதொழிக்க சிங்கள

தமிழர்களை இல்லாதொழிக்க சிங்கள பௌத்த பேரினவாதம் திட்டமிடுகிறது என்பதையே தமிழர் தலைவர் சம்பந்தர் ஐயா, இப்பதான் கண்டு பிடித்தாரா என எரிச்சல் அடைவதா? அல்லது, இப்பவாவது கண்டுபிடித்தாரே என ஆறுதல் அடைவதா? சரி. பரவாயில்லை. இனிமேலாவது சிங்கள அரசின் இத் திட்டத்தை முறியடிக்க ஐயா என்ன செய்யப் போகிறார்? மீண்டும் சிங்கள அரசு வழங்கிய சொகுசு மாளிகைளில் வெட்கமின்றி உறக்கத்தில் இருக்கப் போகிறாரா? அல்லது, மக்களுடன் சேர்ந்து போராடப் போகிறாரா?

உண்மை உறங்குவதில்லை

• உண்மை உறங்குவதில்லை கோத்தபாயா ராஜபக்சா பதவிக்கு வருவதற்காக நடத்தப்பட்ட தாக்குலே ஈஸ்டர் குண்டு வெடிப்பு என்ற உண்மையை சனல்-4 வெளிப்படுத்துகிறது. இந்த உண்மை ஓரளவுக்கு மக்களுக்கும் இதுவரை தெரிந்திருந்தது. ஆனால் இப்போது சாட்சிகளின் ஆதாரங்களோடு வெளிப்படுத்தப்படுகிறது. இப்போது எழும் கேள்வி என்னவெனில் இந்த குண்டு வெடிப்பிற்காக மகிந்த ராஜபக்சா கும்பல் கைது செய்யப்;படுவார்களா அல்லது அவர்களை இந்திய அரசு வழக்கம்போல் காப்பாற்றுமா என்பதே.

1991ம் ஆண்டு நடைபெற்ற தமிழர்

1991ம் ஆண்டு நடைபெற்ற தமிழர் தன்னுரிமை பிரகடன மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றதால் கைது செய்யப்பட்டவர். “தமிழ் தமிழன் தமிழ்நாடு” நூலை எழுதியதற்காக குற்றவியல் வழக்கை சுமந்தவர் நடிகர்களின் பிறந்த தினத்தை கொண்டாடும் தமிழ் சமூகம் , தமிழ் மொழிக்காக பாடுபட்ட இவ் அறிஞர்களை கொண்டாடுமா?

திராவிட பகுத்தறிவு ?

திராவிட பகுத்தறிவு ? சுவாமிக்கு படைத்தால் சுவாமி வந்து தின்பாரா என்று கேட்டவர்கள் இப்போது கலைஞருக்கு படைக்கிறார்கள். கலைஞர் வந்து தின்பாரா என நாம் கேட்டால் என்ன பதில் தருவார்கள்?

பயன்படுத்திவிட்டு தூக்கியெறியப்படும்

•பயன்படுத்திவிட்டு தூக்கியெறியப்படும் கறிவேப்பிலை பிள்ளையான் ஈஸ்டர் குண்டு வெடிப்பிற்கு கோத்தபாயா ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டார். மாறாக ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்கு பிள்ளையான் பலி கொடுக்கப்படுவார். அப்போது கறிக்கு பயன்படுத்திவிட்டு கறிவேப்பிலையை தூக்கியெறிவதுபோல் தன்னையும் பயன்படுத்திவிட்டு தூக்கியெறிந்துவிட்டார்கள் என்று பிள்ளையான் உணர்வார். இது சிங்கள அரசுக்கு விசுவாசமாக தம் தமிழ் இனத்திற்கு துரோகம் செய்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.

இன்னும் வெளிவராத உண்மைகள்!

• இன்னும் வெளிவராத உண்மைகள்! ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பாக சில உண்மைகளை ஆதாரத்துடன் சனல்-4 வெளியிட்டிருக்கிறது. ஆனால் இன்னும் சில உண்மைகள் வெளிவர வேண்டியுள்ளது. (1) குண்டு வெடிப்பதற்கு முன்னரே இந்திய புலனாய்வு அமைப்பு சகல விபரங்களையும் இலங்கை அரசுக்கு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அன்றைய ஜனாதிபதி மைத்திரி பிரதமர் ரணில் ஆகியோர் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? (2) குண்டு வெடிப்பின் சூத்திரதாரி சஹரான் பல தடவை தமிழ்நாடு சென்றுள்ளார். தமிழ்நாட்டில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? (3) தமிழ்நாட்டில் இருந்தே இக் குண்டு வெடிப்பிற்கு தேவையான ஆர்டி எக்ஸ் வெடி மருந்து வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது உண்மையா? (4) இக் குண்டு வெடிப்பு தொடர்பாக இந்தியாவில் விசாரணை செய்ய இந்திய அரசு ஒத்துழைக்கவில்லை என இலங்கை பொலிசார் கூறியுள்ளனர். ஏன் இந்திய அரசு ஒத்துழைக்க மறுக்கிறது? (5) இக் குண்டு வெடிப்பு இந்திய தேர்தலுக்காக தமிழ்நாட்டில் நடக்க இருந்தது என்றும் இறுதி நேரத்திலேயே இலங்கைக்கு மாற்றப்பட்டது என்றும் கூறப்படுவது உண்மையா? ஒரு சர்வதேச விசாரணை நடந்தால் மட்டுமே இவை தொடர்பான உண்மைகள் வெளிவரும்.

ஒருவனை முட்டாளாக்குவது எளிது.

ஒருவனை முட்டாளாக்குவது எளிது. ஆனால் அவனை "நீ முட்டாளாக்கப்பட்டிருக்கிறாய்" என உணர வைப்பது மிகவும் கஷ்டம்.

07.09.1996 யன்று மாணவி கிருஷாந்தி

07.09.1996 யன்று மாணவி கிருஷாந்தி சிங்கள ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்து புதைக்கப்பட்டார். அவரை தேடிச்சென்ற தாயார், சகோதரன், மற்றும் அயல்வீட்டார் கூட கொன்று புதைக்கப்பட்டனர். ஜனாதிபதி சந்திரிகா ஆட்சியில் இவ்வாறு 600 க்கு மேற்பட்டவர்கள் செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டனர். நன்றாக படர்ந்து வளர்ந்த மரத்தை பாதியில் தறித்து வீழ்த்திவிட்டு அது பட்டுவிட்டது என்று நினைத்திருப்பர். ஆனால் அதன் ஆழமான வேர்களோ தக்க தருணத்திற்காக காத்து கிடக்கும் சிறு துளி ஈரம் கண்டவுடன் துளிர்த்து எழும். அதன் பிஞ்சு இலைகள் காற்றில் ஆடும்போது “வீழ்வேன் என்று நினைத்தாயோ” என கேட்பது போல் இருக்கும்

ஈஸ்டர் தாக்குதலுக்கு ஒரு நியாயம்

•ஈஸ்டர் தாக்குதலுக்கு ஒரு நியாயம் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு இன்னொரு நியாயம் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை தேவை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா கோரியுள்ளார் அவர் மட்டுமன்றி கிருத்தவ மத தலைவர் மால்கம் ரஞ்தித் அவர்களும் சர்வதேச விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளார். ஆம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் சர்வதேச விசாரணை அவசியமே. ஆனால் இவர்கள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை மறுக்கிறார்கள். ஈஸ்டர் குண்டு வெடிப்பில் 269 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் முள்ளிவாய்க்காலில் இரண்டு நாளில் நாற்பதாயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 269 பேர் கொல்லப்பட்டமைக்கு சர்வதேச விசாரணை கோரும் இவர்கள் நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டமைக்கு சர்வதேச விசாரணையை மறுக்கிறார்கள். இவர்களுக்கு வந்தா ரத்தம். தமிழர்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? இது என்ன நியாயம்?

பிரித்தானியாவின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின்

பிரித்தானியாவின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக ஈழத் தமிழர் பேராசிரியர் கனகராஜா நியமிக்கப்பட்டுள்ளார். மகிழ்ச்சியும் வாழ்த்துகளும். பிரித்தானியாவுக்கு சென்ற ஈழத் தமிழர் கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பெற்று லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கு சென்ற ஈழத் தமிழர் மருத்துவ உயர் கல்வியைக்கூட பெற முடியாத நிலையில் உள்ளனர். உலகெங்கும் சென்ற ஈழத் தமிழர் குடியுரிமை பெற்று உயர் கல்வி பெற்று உயர் பதவிகளை வகிக்க முடிகிறது. ஆனால் வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டிற்கு சென்ற ஈழத் தமிழர் 40 வருடமாக அகதியாகவே வைக்கப்பட்டிருக்கின்றனர்.

அப்பாவி ஈழத் தமிழன் - தோழர்!

அப்பாவி ஈழத் தமிழன் - தோழர்! சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழரை விடுதலை செய்யும்படி குரல் கொடுக்க முடியுமா? தமிழக முற்போக்குவாதி – சீமான் ஒரு இனவெறியர். அவர் ஒரு பாசிசிட். அவரை ஒழிக்க வேண்டும். அப்பாவி ஈழத் தமிழன் - உச்சநீதிமன்றம் விடுதலை செய்த பின்பும் நான்கு தமிழரை சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருப்பது தவறு அல்லவா? தமிழக முற்போக்குவாதி – சீமான் ஒரு சங்கி. அவர் பாஜக வின் B டீம். அப்பாவி ஈழத் தமிழன் - சிறப்புமுகாமில் இருப்பவர்கள் சொந்த செலவில் நாடு திரும்ப விரும்பினால் அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் திராவிட முதல்வர் நாடு திரும்ப விரும்பும் சாந்தனுக்கு அனுமதி மறுப்பது தவறு இல்லையா? தமிழக முற்போக்குவாதி – சீமான் ஒரு காமுகன். அவர் பல பெண்களை ஏமாற்றியுள்ளார். அப்பாவி ஈழத் தமிழன் - தான் இறப்பதற்கு முன் தன் மகனை ஒருமுறை நேரில் பார்க்க வேண்டும் என சாந்தனின் தாயார் விரும்புகிறார். அவரின் விருப்பத்தை திராவிட முதல்வர் நிறைவேற்றுவாரா? தமிழக முற்போக்குவாதி – விஜயலட்சுமி வடிக்கும் கண்ணீருக்கு சீமான் பதில் சொல்லியே ஆக வேண்டும். அப்பாவி ஈழத் தமிழன் - ?????? (குறிப்பு - இது ஒரு கற்பனை உரையாடல்.)

ஏழு முறை கருக்கலைப்பு.

ஏழு முறை கருக்கலைப்பு. அதற்கு 13 வருடங்கள் கழித்து மருத்துவ பரிசோதனை. இத்தனை ஆண்டுகள் கழித்து ஒரு நடிகைக்கு நீதி பெற்றுக்கொடுக்க திராவிட அரசு எடுக்கும் முயற்சிகளை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஆனால் இதேபோல் தன்னை பயன்படுத்திவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை சிறீரெட்டி கூறினாரே. அவருக்கும் பரிசோதனை செய்து நீதி பெற்றுக் கொடுக்கப்படுமா? அல்லது, நடிகை நயன்தாராவிற்காக ஒரு இளம் தலைவர் பால்டாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றாரே. அவருக்காக நயன்தாராவிற்கு பரிசோதனை செய்யப்படுமா? ஒருபுறம் சனாதன ஒழிப்பு பிரச்சனை. இன்னொரு புறம் விஜயலட்சுமி பிரச்சனை. மக்கள் கவனத்தை திருப்பி ஏமாற்றுகிறது திராவிட அரசு. மக்கள் பிரச்சனைகளை எப்போதுதான் இந்த திராவிட அரசு கவனத்தில் எடுக்கப்போகிறது? குறிப்பு – விஜயலட்சுமிக்கு நீதி கிடைக்கக்கூடாது என நான் கூறவில்லை. மாறாக இதேபோல் மற்றவர்களுக்கும் கிடைக்குமா என்பதே என் கேள்வி. உதாரணமாக கவிஞர் வயிரமுத்து மீது இதுவரை 17 பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே. அது ஏன்?

சுமந்திரனுக்கு ஒரு வேண்டுகோள்!

சுமந்திரனுக்கு ஒரு வேண்டுகோள்! சேர்! பிளீஸ் , பழக்கதோஷத்தில் ஈஸ்டர் தாக்குதலுக்கு உள்ளக விசாரணை போதும் என்று ஏதும் பேட்டி கொடுத்திட வேண்டாம்.

சிங்கம் மானைக் கொல்வது தவறு அல்ல.

சிங்கம் மானைக் கொல்வது தவறு அல்ல. மாறாக மான் தப்பி ஓடுவதே தவறு. இதுதான் காட்டில் சிங்கத்தின் நீதி. அதேபோல் சிங்கள அரசும் இந்திய அரசும் தமிழ் மக்களை கொல்வது தவறு அல்ல. மாறாக தமிழர்கள் அதற்கு எதிராக போராடுவது பயங்கரவாதம். இதுவே சிங்கள அரசு மற்றும் இந்திய அரசின் நீதி.

தோழர் மாஓசேதுங் நினைவு தினம்.

தோழர் மாஓசேதுங் நினைவு தினம். செப்-9, மாபெரும் ஆசான் தோழர் மாஓ சேதுங் அவர்களின் நினைவு தினமாகும். அவர் “மக்கள் சக்தியே மகத்தான சக்தி” என்றார் . “மக்கள் சக்தி அணுகுண்டை விட வலிமையானது” என்றார். “மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள் மக்களோடு சேர்ந்து உறங்குங்கள் மக்களோடு சேர்ந்து உழையுங்கள்” என்று போராளிகளுக்கு வழி காட்டினார். “துப்பாக்கி குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது” என்பதை சுட்டிக் காட்டினார். “மக்களை அணிதிரட்ட ஆயிரம் பொதுக் கூட்டங்களை விட கொரில்லா தாக்குதல் மேன்மையானது” என்றார். ஆயுதப் போராட்டத்தின் மூலம் புதிய ஜனநாயகப் புரட்சியை வென்று காட்டினார். பாட்டாளி வர்க்க சர்வாதிகார தலைமையில் கலாச்சாரப் புரட்சியை வழி நடத்தினார். “நூறு மலர்கள் மலரட்டும் ஆயிரம் கருத்துகள் முட்டி மோதட்டும்” என்றார். “மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை” என்றார். ” ஒரு புரட்சி என்பது மாலை நேர விருந்தோ, ஒரு கட்டுரை எழுதுவதோ, ஓவியம் தீட்டுவதோ, பூத்தையல் வேலைப்பாடோ அல்ல……….. ஒரு புரட்சி நிதானமுள்ளதாகவும் பொறுமை, கருணை, பெருந்தன்மையுள்ளதாக இருக்க முடியாது. புரட்சி என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தினை பலாத்காரமாக தூக்கி எறிவதாகும் " - மாவோ மாக்சிச லெனிச மாவோசிச சிந்தனையின் வழிகாட்டலில் புதிய ஜனநாயகப் புரட்சியை வென்றெடுப்போம்!

மடியில் கனம் இல்லை எனில்

•மடியில் கனம் இல்லை எனில் நடையில் பயம் எதற்கு? ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பாக தகுந்த ஆதாரங்களுடன் சனல் -4 சுமத்திய குற்றச்சாட்டை கோத்தபாயா மறுத்துள்ளார். கோத்தபாயா மட்டுமன்றி பிள்ளையான் மற்றும் உளவுத்துறை அதிகாரி சுரேஸ் சாலேயும் மறுத்துள்ளனர். இவர்களுக்கு உண்மையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சம்பந்தம் இல்லை எனில் எதற்காக சர்வதேச விசாரணையை மறுக்க வேண்டும்? விசாரணைக்கு ஒத்துழைத்து அதன் மூலம் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று தாரளமாக நிரூபிக்கலாமே? ஆக, இப்போதுள்ள கேள்வி என்னவெனில் கோத்தபாயா கும்பல் சர்வதேச விசாரணையை ஏற்கிறார்களா இல்லையா என்பதல்ல, மாறாக இலங்கை அரசு இறந்த 269பேருக்குரிய நீதியை எப்போது, எப்படி வழங்கப் போகிறது என்பதே? ஈஸ்டர் குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு நீதி வழங்கப்பட்டாயேக வேண்டும். ஏனெனில் இனி யாரும் தமது பதவி நலனுக்காக அப்பாவி மக்களை கொல்வதை தடுப்பதற்காக.

காடுகளில் உள்ள மரங்கள் அழிந்துகொண்டே வந்தன

காடுகளில் உள்ள மரங்கள் அழிந்துகொண்டே வந்தன. ஆனால் மரங்களோ மீண்டும் மீண்டும் கோடரிக்கே வாக்களித்தன. ஏனெனில் மரத்தினால் செய்யப்பட்ட தன் கைப்பிடியைக்காட்டி “ நானும் உங்களில் ஒருவன்தான்” என கோடாரி ஏமாற்றியதை மரங்கள் நம்பின. – துருக்கிய பழமொழி

கோத்தா – மிஸ்டர் பிள்ளையான்!

கோத்தா – மிஸ்டர் பிள்ளையான்! நாங்க ஒன்றரை லட்சம் தமிழர்களையும் ஒரு மாட்டையும் கொல்ல வேண்டும். பிள்ளையான் - ஏன் சேர் ஒரு மாட்டை கொல்ல வேண்டும்? கோத்தா – பார்த்தியா, உன்னைப் போலவே மற்றவர்களும் ஒன்றரை லட்சம் தமிழர் கொல்லப்படுவதை மறந்துவிடுவர். மாட்டைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க வேண்டும். பிள்ளையான் - குட் ஐடியா சேர். ஆனால் நீங்க சொன்ன அந்த மாடு நான் இல்லைதானே? கடைசியில் என்னை பலி கொடுத்திட மாட்டீங்கதானே? 😂😂

செய்தி – விஜயலட்சுமி புகார் மீது விரைந்து

செய்தி – விஜயலட்சுமி புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஜனநாயக மாதர் சங்கம் புகார் மனு. விஜயலட்சுமிக்காக குரல் கொடுக்கும் இந்த மாதர் சங்கம் பாதிக்கப்பட்ட இந்த பழங்குடி பெண்ணுக்காக ஏன் குரல் கொடுப்பதில்லை? குறிப்பு – ஒவ்வொரு சொல்லுக்கு பின்னும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒழிந்திருக்கும் - லெனின்

பசி இந்தளவு கொடுமையானதா?

பசி இந்தளவு கொடுமையானதா?

திலீபன் மரணம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன?

•திலீபன் மரணம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன? திலீபன் ஆயுதம் ஏந்திய போராளி. அவர் ஆயுதப் போராட்டத்தில் மரணித்திருந்தால் மடிந்த ஆயிரக்கணக்கான போராளிகளில் ஒருவராக இருந்திருப்பார். ஆனால் அவர் அகிம்சைப் போராட்டத்தில் மரணித்தார். அதனால் அவரது மரணம் எமக்கு சில பாடங்களை கற்றுக் கொடுக்கிறது. எல்லா போராளிகளின் மரணங்களும் ஏதோ ஒரு வகையில் எமக்கு வரலாற்றுப் பாடங்கள்தான். ஆனால் திலீபன் மரணம் கூடவே சில படிப்பினைகளையும் கற்றுத் தந்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் திலீபன் பெயர் உச்சரிக்கப்படும்போதும் பின்வரும் விடயங்களையும் நாம் கற்றுக்கொள்ளதான் போகிறோம். • அகிம்சைப் போராட்டதின் மூலம் எந்த தீர்வையும் பெற முடியாது. • அகிம்சைப் போராட்டத்தை இலங்கை அரசு மட்டுமல்ல காந்தியின் தேசம்கூட மதிக்காது. • இந்திய அரசை ஈழத் தமிழர்கள் ஒருபோதும் நம்பக்கூடாது. • இந்தியாவில் இருந்து வந்தது அமைதிப்படை இல்லை. அது ஆக்கிரமிப்பு படை. திலீபன் ஒரு புலி உறுப்பினர். அதனால்தான் இந்திய அரசு அவரது அகிம்சைப் போராட்டத்திற்கு மதிப்பு அளிக்கவில்லை என சிலர் காரணம் கூறுகிறார்கள். அவர்களிடம் நாம் கேட்க விரும்புவது “ அப்படியென்றால் அன்னை பூபதி யின் அகிம்சைப் போராட்டத்தை ஏன் இந்திய அரசு மதிக்கவில்லை?” ஆக திலீபன் தன் மரணத்தின் மூலம் எமக்கு எதை கற்றுத் தந்தாரோ அதையே அன்னை பூபதியும் உறுதிப் படுத்தியுள்ளார். ஆம். அகிம்சைப் போராட்டம் மூலம் எதையும் நாம் பெற முடியாது. அகிம்சைப் போராட்டத்தை இந்திய அரசும் மதிக்காது

இலங்கை தீவில் ஈழத் தமிழர்கள்

இலங்கை தீவில் ஈழத் தமிழர்கள் பூர்வ குடிகளாக வாழ்கிறார்கள் என்பதை நன்கு தெரிந்திருந்தும் , சிங்கள தீவினிற்கோர் பாலம் அமைப்போம் என்று பாரதி பாடியது ஏன்? அதாவது இலங்கைத் தீவை சிங்களத் தீவு என்று ஏன் அவர் குறிப்பிட்டார்?

தந்தை செல்வா மற்றும் அமிர்தலிங்கம்

தந்தை செல்வா மற்றும் அமிர்தலிங்கம் பெரியாரை சந்தித்து ஈழத் தமிழருக்கு ஆதரவு கேட்டபோது “நாமே இங்கு அடிமையாக இருக்கிறோம். உங்களுக்கு எப்படி ஆதரவு தருவது?” என்று கூறி மறுத்துவிட்டார். ஒருவேளை பெரியார் தமிழராக இருந்திருந்தால் அவர் பதில் என்னவாக இருந்திருக்கும்? குறிப்பு – பெரியாரே தன் பெரியாரியத்தை பின்பற்றுங்கள் என்று ஈழத் தமிழரிடம் கூறவில்லை. ஆனால் இன்று சிலர் தமிழின விடுதலைக்கு பெரியாரியத்தையும் அம்பேத்காரியத்தையும் இறக்குமதி செய்ய வேண்டும் என்கிறார்கள்.

நீ ஊமையாக இருக்கும்வரை

"நீ ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும்" தமிழின அழிப்புக்கு நீதி கோரி மக்களினூடாக பயணிக்கும் ஈருளிப் பயணம். 2 நாளில் 40 ஆயிரம் மக்களை கொன்று புதைத்தால் ஈழத் தமிழ் இனம் போராட்டத்தை கைவிட்டு அடிமையாக கிடக்கும் என இலங்கை இந்திய அரசுகள் நினைத்தன. ஆனால் கடல் கடந்து போனாலும் தமக்கு தெரிந்த வழியில் தம்மால் இயன்ற போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்பதை புலம்பெயர் தமிழர்கள் காட்டி வருகின்றனர். ஓட முடியாதவர்கள் நடப்பார்கள். நடக்க முடியாதவர்கள் தவழ்ந்து செல்வார்கள். ஆனால் இலக்கை அடையும்வரை அனைவரும் நகர்ந்துகொண்டே இருப்பார்கள். தமிழ் மக்கள் தமது இலக்கை நிச்சயம் அடைவார்கள் ஏனெனில் அதற்காக அவர்கள் பல வழிகளில் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நல்லவேளை நாவலர் சோமசுந்தர பாரதியார்

நல்லவேளை நாவலர் சோமசுந்தர பாரதியார் இப்போது உயிருடன் இல்லை. உயிரோடு இருந்து இப்போது “தமிழ்நாடு தமிழருக்கே” என்று கூறியிருந்தால் இவர் ஒரு பிரிவினைவாதி என்று இந்திய அரசு கூறியிருக்கும் இவர் ஒரு இனவெறியர் என்று கம்யுனிஸ்டுகள் முத்திரை குத்தியிருப்பர். இவர் ஒரு சங்கி என்றும் பாஜகவின் B டீம் எனவும் திராவிட முற்போக்குவாதிகள் கூறியிருப்பர். இவர் மீது ஏதாவது பெம்பிளை கேஸ் போட்டு சிறையில் அடைக்க முடியுமா என்று திராவிட அரசு முயற்சி செய்திருக்கும்.

தமிழ்நாட்டில் தமிழ் மொழியை அமுல் படுத்தும்படி

தமிழ்நாட்டில் தமிழ் மொழியை அமுல் படுத்தும்படி கோருவதை “தமிழ்இனவெறி” என கூறுவோர், கர்நாடகத்தில் கன்னட மொழியை அமுல்படுத்தும்போது அதனை “கன்னடஇனவெறி” என்று ஏன் கூறுவதில்லை?

செப்-12 தியாகிகள் தினம்.

• செப்-12 தியாகிகள் தினம். தோழர்கள் அப்பு, பாலன் ஆகியோருக்கு வீர வணக்கம் நக்சல்பாரி புரட்சியாளர்கள் நினைவு நீடூழி வாழ்க! வசந்தத்தின் இடி முழக்கம் தூரத்தில் கேட்கிறது என்று தோழர் மாவோ சேதுங் அவர்களால் வர்ணிக்கப்பட்ட நக்சல்பாரி எழுச்சியை தமிழகத்தில் தோற்றுவித்த தியாகிகளை நினைவு கூர்வோம். நக்சல்பாரி புரட்சித் தோழர்கள் அப்பு மற்றும் பாலன் நினைவுகள் நீடூழி வாழ்க. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள். அவர்களில் இருந்து எண்ணற்ற புரட்சியாளர்கள் முளைக்கிறார்கள். ஆம், தோழர்கள் அப்பு பாலன் வரிசையில் தோழர்கள் தமிழரசன் புலவர் கலியபெருமாள் என பல புரட்சியாளர்கள் தோன்றினார்கள். இனியும் தோன்றிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் புரட்சி என்னும் இலட்சியக் கனவு நிறைவேறும்வரை உருவாகுவார்கள். ஆனால் தோழர்கள் அப்பு , பாலன் வழி வந்த மாவோயிச அமைப்புதான் வீரப்பனை காட்டிக் கொடுத்தது என்று ஊடகவியலாளர் சிவசுப்ரமணியம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. மாவோயிச அமைப்பின் தமிழக தலைவர் தோழர் சுந்தரமூர்த்தி என்பவரே வீரப்பனை காட்டிக் கொடுத்து கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தார் என்று அவர் கூறியிருப்பதை நம்பமுடியவில்லை. ஏனெனில் ஒரு அமைப்பில் ஒரு சில உறுப்பினர்கள் காட்டிக் கொடுப்பவர்களாக மாறலாம். ஆனால் ஒரு மாவோயிச அமைப்பின் தலைமையே காட்டிக் கொடுக்கும் தலைமையாக இருக்க முடியுமா? வீரப்பனைக் காட்டிக் கொடுத்தது மட்டுமன்றி அவர்களே உண்மை அறியும் குழுவை நியமித்து பொய் அறிக்கை வெளியிட்டதாகவும் இவ் ஊடகவியலாளர் குற்றம் சாட்டுகிறார். இது குறித்து மாவோயிச அமைப்பின் பதிலை அறிய நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். குறிப்பு – ஊடகவியலாளர் சிவசுப்ரமணியத்தின் வீடீயோ லிங்க் கீழே தந்துள்ளேன்.

1991ல் நான் மதுரை சிறையில்

1991ல் நான் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தவேளை எனது ஷெல் அருகில் மைக்கல் என்ற வெள்ளைக்காரர் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது கஞ்சா கேஸ் போடப்பட்டு அதற்கு பத்து வருடம் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து ஆச்சரியம் அடைந்தேன். ஏனெனில் பொதுவாக கஞ்சா கேஸ்க்கு குறைவான தண்டனை வழங்கப்படும். ஹெரோயின் போன்ற போதைப் பொருள் கேஸ்களுக்கு மட்டுமே பத்து வருட தண்டனை வழங்கப்படுவது வழக்கம். இதைப் பற்றி அவரிடம் கேட்டபோது தான் கஞ்சாவில் ஆயில் தயாரித்ததாக கூறினார். அதாவது ஒரு பத்து கிலோ கஞ்சாவை காய்ச்சி அதில் ஒரு கிலோ ஆயில் வடித்து எடுக்கப்படும் என்றார். இவ் கஞ்சா ஆயில் ஹெரோயின் போதைப் பொருள் போன்று ஆபத்தான அதிக போதை தருவது. அதனால்தான் இவருக்கு பத்து வருடம் தண்டனை வழங்கப்பட்டதாம். லண்டனில் இருந்து வந்து கொடைக்கானலில் தங்கியிருந்து இவர் கஞ்சா ஆயில் காய்ச்சியது ஆச்சரியம் எனில் அதைவிட ஆச்சரியம் சிறையிலும் இவருக்கு தினமும் புகைப்பதற்கு கஞ்சா கிடைத்தது. சிலர் கஞ்சாவுக்கு அடிமையாகி விடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கஞ்சா கிடைக்கவில்லை என்றால் வன்முறையில் இறங்கி விடுவார்கள். அதனால் சிறை நிர்வாகமே சிறிதளவு கஞ்சாவை எப்போதும் சிறைக்குள் புளக்கத்தில் விடுவார்கள். அவ்வாறே இந்த மைக்கலுக்கும் கஞ்சா கிடைத்து வந்தது. 1986ல் நான் மட்டக்கிளப்பு படுவான்கரை பிரதேசத்தில் இருந்தேன். அப்போது சில வீடுகளின் முன்பு முற்றத்தில் ஓரிரு கஞ்சா செடிகள் வளர்ப்பதை கண்டிருக்கிறேன். அவர்கள் வருடப்பிறப்பு , தீபாவளி போன்ற விசேட தினங்களில் அந்த கஞ்சாவை பயன்படுத்தி பலகாரம் செய்வார்கள். அதனை கஞ்சா பலகாரம் என்பார்கள். இப்போது சில நாடுகளில் கடைகளில் கஞ்சா விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எமது ஊர் கரவெட்டியில் பல வருடமாக நடனமுருகன் மருந்து கடையில் ஆயள்வேத மருந்து தயாரிப்பதற்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்போது இலங்கையில் கஞ்சா பயிர் செய்கைக்கு அரசு அனுமதியளிக்கப்போவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையில் தயாராகும் கஞ்சா இந்திய கஞ்சாவைவிட தரமானதாகவும் மலிவானதாகவும் இருந்தால் மட்டுமே இந்தியாவில் இருந்து கஞ்சா கடத்தப்படுவது நிறுத்தப்படும். ஆனால் அதற்கான சாத்தியம் குறைவு என்றே தெரியவருகிறது. ஏனெனில் கேரள கஞ்சா தரமானதும் மலிவானதும் என்கிறார்கள். அது சரி, இராமாயன போரில் காயப்பட்டவர்களை குணப்படுத்த அனுமான் கொண்டுவந்த மூலிகைதான் கஞ்சா என்கிறார்களே. அது உண்மையா?

புலிகளிடம் இருந்து தமிழ் மக்களை

புலிகளிடம் இருந்து தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காகவே யுத்தம் செய்தோம் என்றார்கள். தமிழ் மக்களுக்காகவே பல்லாயிரக்கணக்கான சிங்கள ராணுவ வீரர்கள் தம் உயிரை அர்ப்பணித்தார்கள் என்றார்கள். அப்படியென்றால் தமிழ் மக்கள் சிங்கள ராணுவ வீரர்களை அல்லவா நினைவு கூர வேண்டும். ஏன் திலீபனை நினைவு கூர்கிறார்கள்

தமிழ் மக்களால் மட்டுமன்றி

தமிழ் மக்களால் மட்டுமன்றி பிற இனத்தவராலும் நினைவு கூரப்படும் திலீபன்

முழு இலங்கையின் மின்சார தேவை

முழு இலங்கையின் மின்சார தேவை 2000 மெகா வாட்ஸ். ஆனால் இதன் இரட்டி மடங்கு (4000மெகா வாட்ஸ்) உற்பத்தி செய்யக்கூடிய மன்னார் பிரதேசம் இந்திய முதலாளி அதானிக்கு வழங்கப்படுகிறது காற்றலை மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கென தமிழர் பிரதேசம் இந்திய பிரதமர் மோடியால் தன் நண்பன் அதானிக்கு பெற்றுக்கொடுக்கப்படுகிறது. தமிழர் வளங்களை ஒவ்வொன்றாக பெற்றுக்கொள்ளும் இந்திய பிரதமர் இதுவரை தமிழருக்கு பெற்றுக்கொடுத்த தீர்வு என்ன? இதனை தட்டிக் கேட்க வேண்டிய நம் தலைவர்களோ இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சண்டை வந்தால் தமிழீழம் மலரும் என்று இலவு காத்த கிளியாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவனுக்கு முட்டாளாக இருக்க உரிமை உண்டு

ஒருவனுக்கு முட்டாளாக இருக்க உரிமை உண்டு. ஆனால் முட்டாள்தனத்தை பரப்ப உரிமை இல்லை. மதங்களின் அறியாமையை எதிர்த்தே அறிவியல் வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் அந்த அறிவியலின் வளர்ச்சியை அனுபவித்துக்கொண்டே அதில் மத அறியாமையை பரப்புவது என்ன நியாயம்? உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்களை மேலெழும்ப விடாமல் மதங்களும் அவற்றின் கடவுள்களும் அழுத்திப் பிடிக்கின்றன.

போஸ்ட் ஆபிசுக்கு போக வழி தெரியாத

போஸ்ட் ஆபிசுக்கு போக வழி தெரியாத பாதிரியாருக்கு சிறுவன் ஒருவன் வழி காட்டினான். நன்றி கூறிய பாதிரியார் சிறுவனிடம் “ உனக்கு சொர்க்கம் போகும் வழி சொல்லி தருகிறேன். எனது திருச்சபைக்கு வா” என்றார். அதற்கு அந்த சிறுவன் “ பக்கத்தில் இருக்கும் போஸ்ட் ஆபிசுக்கு வழி தெரியாத நீங்களா சொர்க்கத்திற்கு வழி காட்டப் போகிறீர்கள்?” என்று கேட்டானாம். இந்த சிறுவனுக்கு இருக்கும் புத்திகூட நம் தமிழ்த் தலைவர்கள் சிலருக்கு இல்லை என்பதே உண்மை. சிறப்புமுகாமில் உள்ள சாந்தனைக்கூட விடுதலை செய்யாத திராவிட முதல்வர் ஸ்டாலின் , எப்படி ஈழத் தமிழருக்கு உதவுவார் என்ற கேள்வியை இவர்கள் கேட்க மறுக்கிறார்கள். அதனால்தான் ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் தமிழீழம் அமைய திமுக உதவும் என்று ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு ஏமாற்றி வருகிறார். சிலரை பல காலம் ஏமாற்றலாம். பலரை சில காலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்கிறார்கள். ஆனால் தன்னால் பல காலம் ஈழத் தமிழர் அனைவரையும் ஏமாற்ற முடியும் என்பதை திராவிட முதல்வர் ஸ்டாலின் நிரூபித்து வருகிறார்.

அனா அம்மையாரும்

•அனா அம்மையாரும் ஜனநாயக மாதர் சங்க அம்மையார்களும் !! அனா அம்மையார். இவர் வெள்ளை இனத்தை சேர்ந்தவர். மனிதவுரிமை செயற்பாட்டாளர். தமிழ் மக்களுக்கு நீதி கோரி ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஜெனிவா வந்தவர் வருடத்தில் ஒரு நாள் நீதி கோரிவிட்டு கலைந்து செல்வதை விட நீதி கிடைக்கும்வரை ஒவ்வொரு நாளும் தமிழ் மக்கள் போராட வேண்டும் என அவர் கேட்டிருக்கிறார். நடிகை விஜயலட்சுமி தான் பலருடன் உறவில் இருந்ததாகவும் ஆறுமுறை கருக்கலைப்பு செய்ததாகவும் இதற்காக சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி 13 வருடம் கழித்து வந்து முறையிட்டிருக்கிறார். காவல்துறையும் விசாரணை செய்து நீதிபதி முன் அவர் வாக்குமூலம் பெற்றதுடன் விசாரணைக்கு வரும்படி சீமானுக்கு அழைப்பும் விட்டிருக்கின்றது. ஆனாலும் சீமானைக் கைது செய்ய வேண்டும் என்று விஜயலட்சுமிக்காக காவல்நிலையம் சென்று குரல் கொடுத்துள்ளனர் ஜனநாயக மாதர் சங்க அம்மையார்கள். நல்லது. பெண்களுக்காக அவர்கள் குரல் கொடுப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது. ஆனால் இங்கு எழும் கேள்வி என்னவெனில் , நடிகை விஜயலட்சுமிக்காக குரல் கொடுக்கும் இந்த ஜனநாயக மாதர் சங்க அம்மையார்கள் ஏன் ஈழத்தில் முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுப்பதில்லை?

நல்லூர் திருவிழாவில் சுமார்

நல்லூர் திருவிழாவில் சுமார் 5000 பேர் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து சென்றதாக கூறப்படுகிறது. ஒருவருக்கு ஆயிரம் டாலர் என்று வைத்தாலும் ஐயாயிரம் பேருக்கும் 5000000 டாலர் செலவழிக்கப்பட்டிருக்கிறது. அதாவது சுமார் 1625000000ரூபா செலவழிக்கப்பட்டிருக்கிறது. இங்கு கேள்வி என்னவெனில் தாயகத்தில் முன்னாள் போராளிகள் வறுமையில் வாடும்போது புலத்தில் மாவீரர் நினைவு கொண்டாட்டம் ஏன் என்று கேட்பவர்கள், நல்லூரில் திருவிழாக்கு இத்தனை செலவு ஏன் என்று ஏன் கேட்பதில்லை? முன்னாள் போராளிகளை படம் பிடித்து காட்டும் ஐபிசி முதலாளி ஏன் இதனை படம் பிடித்து கேட்பதில்லை?

இரண்டு உண்ணாவிரதம்

இரண்டு உண்ணாவிரதம் ஒருவர் தமிழ் மக்களுக்காக 5 கோரிக்கை வைத்து அதற்காக உயிர் துறக்கிறார் இன்னொருவர் யுத்தம் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக பொய்கூறி 3 மணி நேரத்தில் உண்ணாவிரதத்தை முடித்துவிட்டார். இதில் யார் தமிழ் மக்கள் மீது உண்மையான விசுவாசமானவர்?

பாலைவன சிங்கம் ஒமர் முக்தார்

பாலைவன சிங்கம் ஒமர் முக்தார் தூக்கில் இடப்பட்ட நாள் 16.09.1931 “இரண்டு உயர்ந்த நிலைகளில் ஏதாவது ஒன்றை அடையாமல் நான் இங்கிருந்து போக மாட்டேன். ஒன்று வெற்றி. மற்றது வீரமரணம்” - லிபிய நாட்டு விடுதலை வீரர் ஒமர் முக்தார்

7ம் ஆண்டு நினைவு நாள் ( 16.09.2023)

• 7ம் ஆண்டு நினைவு நாள் ( 16.09.2023) காவிரி நதிநீர் உரிமைக்காக தன்னுயிர் ஈந்த பா.விக்னேசு அவர்களின் நினைவைப் போற்றுவோம்!

ஆழ்ந்த இரங்கல்!

ஆழ்ந்த இரங்கல்! 25 வருட ஆயள் சிறைவாசம். விடுதலை செய்யாதது மட்டுமன்றி மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு பரோல் விடுதலையைக்கூட அளிக்கவில்லை. மாட்டுக்குகூட இரங்க புளுகிராஸ் உண்டு இந்த முஸ்லிம் சிறைவாசிகளுக்கு இரங்க யாரும் இல்லையா?

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

• நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? இவர் சிஙகள தீவுக்கு பாலம் அமைப்போம் என்ற சுப்பரமணிய பாரதியார் இல்லை. இவர் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ்வதை பெருமையாக நினைக்கும் ஈழத்து சுமந்திர பாரதியார். 😂😂

திலீபனை அழைத்துச் சென்று

திலீபனை அழைத்துச் சென்று உண்ணாவிரத மேடையில் உட்கார வைத்தவர் காசி அனந்தன் அவர்கள். திலீபன் அருகில் இருந்து அவர் எழுதியதே “திலீபன் அழைப்பது சாவையா? இந்த சின்ன வயதில் இது தேவையா?” என்ற பாட்டு. திலீபனைக் கொன்ற இந்தியாவில் இருந்துகொண்டு இந்து தமிழீழம் கேட்டது மட்டுமன்றி “துவாராகா வருகிறாள்” என்று இப்போது பாட்டு எழுதுகிறார். காலம் எவ்வளவு கொடுமையானது? அது ஒரு உணர்ச்சிக் கவிஞரை இப்படி புரட்டிப் போட்டுவிட்டதே.

திராவிட உருட்டு!

• திராவிட உருட்டு! முதலில் சனாதன ஒழிப்பு என்றார்கள் அப்புறம் சனாதன எதிர்ப்பு என்றார்கள். இப்போது சனாதனத்தில் சில கொள்கைகளை எதிர்ப்பதாக கூறுகின்றார்கள். சரி. பரவாயில்லை. அந்த எதிர்ப்பதாக கூறும் சில கொள்கைள் எவை? அதையாவது கூறுவார்களா?

தமிழ்நாட்டு தமிழர்கள் அண்ணாவை

தமிழ்நாட்டு தமிழர்கள் அண்ணாவை புகழவும் இகழவும் ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனால் ஈழத் தமிழர் நாம் அவரை நினைவுகூர ஒரு காரணம் உண்டு. இலங்கையில் தமிழருக்கு எதிராக முதல் இனக்கலவரம் 1956ல் நடந்தது. அப்போது தமிழ்நாட்டில் இருந்து ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்த முதல் தலைவர் அண்ணா. இலங்கை பெண் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கா இந்திய பிரதமர் பண்டிதர் நேருவை சந்தித்தபோது “ பண்டிதரோ மனைவியை இழந்தவர். பண்டாரநாயக்காவோ கணவனை இழந்தவர். இருவரும் தனிமையில் சந்தித்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நீ அறியமாட்டாயோ தம்பி” என்று கிண்டலாக பேசினார். அண்ணாவுக்கும் நடிகை பாணுமதிக்கும் உறவு இருந்தது. இது பற்றி கேட்டபோது “ நான் முற்றும் துறந்த முனிவனும் இல்லை. அவள் படி தாண்டா பத்தினியும் இல்லை” என்றாராம். ஒருவேளை சீமானும் நடிகை விஜயலட்சுமி பற்றி கேட்டபோது இப்படி அண்ணா மாதிரி கூறியிருக்க வேண்டுமோ?😂

அண்ணா பிறந்தநாள் அன்று

அண்ணா பிறந்தநாள் அன்று நீண்டநாள் இஸ்லாமிய சிறைவாசிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றார்களே, அவர்கள் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்களா? ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வோம் என வாக்குறுதி கொடுப்பது. ஆட்சிக்கு வந்தவுடன் இவர்களை விடுதலை செய்தால் இந்து தலைவர்களுக்கு ஆபத்து என்று நீதிமன்றில் கூறி விடுதலையை மறுப்பது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சீமானுக்கு எதிராக எகிறி குதித்தவன் எல்லாம் இப்போது மௌனமாக இருப்பது ஏன்?

இந்தியாவில் ஒருவர் இரண்டு மனைவிகளை

இந்தியாவில் ஒருவர் இரண்டு மனைவிகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்கிறார்கள். ஆனால் கலைஞர் மனைவி , துணைவி என்று இரண்டு பேரை வைத்திருந்தார். அவர் மீது அவர் இறக்கும்வரை யாரும் இதற்காக வழக்கு பதிவு செய்யவில்லை. அது ஏன் என்றும் புரியவில்லை? ஒருமுறை ராஜாத்தியம்மாள் யார் என்று கேட்டபோது “ அவர் என் மகள் கனிமொழியின் தாயார்” என்று கலைஞர் பதில் கொடுத்தார். ஆனால் இந்த ராஜாத்தியம்மாள் இன்னொருவரின் மனைவி என்கிறார்கள். அப்படியென்றால் இன்னொருவரின் மனைவிக்கு கலைஞரின் மகள் எப்படி வந்தது என்றும் புரியவில்லை. இங்கு எனது கேள்வி என்னவெனில் மனைவி துணைவி என்று இரண்டு பெண்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு கொஞ்சம்கூட கூச்சமின்றி “ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழர் பண்பாடு” என்று கலைஞரால் எப்படி பேச முடிந்தது? அப்படிப்பட்ட கலைஞரை “உலக தமிழின தலைவர்”என்று எப்படி திமுக வினரால் கூற முடிகிறது? நான் ஒரு தமிழன். எனக்கு எப்படி இந்த கலைஞர் தலைவராக முடியும்?

பயங்கரவாதி திலீபனை நினைவு கூர தடை

பயங்கரவாதி திலீபனை நினைவு கூர தடை செய்ய வேண்டும் எனக்கோரும் சரத்வீரசேகர, பயங்கரவாதி எனக் கொல்லப்பட்ட ரோகணவை நினைவு கூர்வதை தடை செய்யும்படி கோருவதில்லை. ஏனெனில் திலீபன் தமிழன். ரோகண சிங்களவர். இறந்தவர்களை நினைவு கூர்வதில்கூட இனவாதம் பார்ப்பவர்களிடமிருந்து தீர்வு எப்படி கிடைக்கும்?

இலங்கை தீவில் ஈழத் தமிழர் பூர்வ குடிகளாக

இலங்கை தீவில் ஈழத் தமிழர் பூர்வ குடிகளாக வாழ்கிறார்கள் என்பதை நன்கு தெரிந்தும் பாரதி ஏன் சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று பாடினார் எனக் கேட்டு கடந்த வாரம் பதிவு ஒன்று செய்திருந்தேன். அதில் கருத்து பகிர்ந்த சிலர் "பாரதிக்கு நன்கு தெரிந்தும் " என்று எப்படி கூறுகின்றீர்கள் என என்னைக் கேட்டிருந்தனர். அதுமட்டுமன்றி பாரதி அன்றைய நிலையில் இலங்கைப பற்றி போதிய அறிவு இன்றி பாடியிருக்க கூடும் என குறிப்பிட்டனர். பாரதியின் ஞானக்குரு ஒரு ஈழத் தமிழர். அவரை பாரதி புதுவையில் சந்தித்து உரையாடியும் இருக்கிறார். அவர் பற்றி பாரதி எழுதிய கவிதை இதோ, யாழ்ப்பாணத் தையனை யென் னிடங்கொ ணர்ந்தான் இணையடியை நந்திபிரான் முதுகில் வைத்துக் காழ்ப்பான கயிலைமிசை வாழ்வான், பார்மேல் கனத்தபுகழ்க் குவளையூர்க் கண்ணன் என்பான்;

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுத்தால்

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுத்தால் கர்நாடகத்திற்கு மின்சாரம் தர முடியாது என்று கூறும் தைரியம் தமிழக அரசுக்கு உண்டா?

காவிரி செல்வன் தம்பி பா.விக்னேசு

•காவிரி செல்வன் தம்பி பா.விக்னேசு நினைவு நாள் இன்று இன்னும் எத்தனை விக்னேசு இறந்தால் காவிரி பிரச்சனை தீரும்? பாக்கிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தண்ணீர் பிரச்சனை இல்லை பங்களாதேசுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தண்ணீர் பிரச்சனை இல்லை இதில் இருந்து என்ன தெரிகிறது? தமிழ்நாடும் தனி நாடாக இருந்தால் இந்தியாவுடன் தண்ணீர் பிரச்சனை இருக்காது.

ஏன் திலீபனை சிலர் இழிவு படுத்துகின்றனர்?

ஏன் திலீபனை சிலர் இழிவு படுத்துகின்றனர்? ஏனெனில் பூனைகளைவிட புலிகள் பலமானவை என்பதை எலிகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. குறிப்பு – திலீபனை பயங்கரவாதி என்னும் இலங்கை இந்திய அரசுகளுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அளித்துள்ள பதில் கீழே உள்ள படம்.

திலீபனை எந்த இந்திய அரசு கொன்றதோ

திலீபனை எந்த இந்திய அரசு கொன்றதோ அந்த இந்திய அரசின் நாட்டில் , திலீபன் நிழற்குடை திலீபன் ஆட்டோ நிலையம் திலீபன் தெரு திலீபன் அங்காடி என பல வடிவங்களில் அற்புதங்கள் நிகழ்த்தும் திலீபன் திலீபனை பயங்கரவாதி என்ற இந்திய அரசுக்கு தமிழக மக்கள் அளித்துள்ள பதில் இது. இனியாவது இந்திய அரசு புரிந்து கொள்ளுமா?

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

•போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஓடாத மானும் போராடாத இனமும் வாழ முடியாது

பெரியார் !

பெரியார் ! “பெரியாரியம்” புரட்சிகர கருத்து இல்லை. ஆனாலும் தமிழ்நாட்டில் புரட்சிவாதிகள் சாதித்ததைவிட அதிகமாக அவர் சாதித்தார். அதனால்தான் புரட்சிவாதிகளைவிட பெரியாரே அதிகமான மக்கள் மனங்களில் இருக்கிறார். ஒருவேளை புரட்சிவாதிகள் புரட்சியை மேற்கொண்டிருந்தால் பெரியாரியம் தோன்றியிருக்காது. ஏன் பெரியார்கூட ஒரு புரட்சிவாதியாக இருந்திருக்க கூடும். தமிழக மக்களைப் பொறுத்தவரையில் பெரியாரை பாராட்ட பல விடயங்கள் இருப்பதுபோல் அவரை திட்டி தீர்ப்பதற்கும் சில விடயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் பெரியாரை நினைவு கூர ஒரு முக்கியமான விடயம் உண்டு. தந்தை செல்வநாயகமும் அமிர்தலிங்கமும் பெரியாரை சந்தித்து ஈழத் தமிழர் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டபோது “ நாமே இங்கு அடிமையாக இருக்கிறோம். உங்களுக்கு எப்படி ஆதரவு தருவது?” என்று அவர் கேட்டார். கலைஞர் எதிர்க்கட்சியில் இருக்கும்போது தமிழீழத்தை ஆதரிப்பார். ஆனால் ஆட்சியில் இருக்கும்போது மத்திய அரசின் நிலைப்பாடே தனது நிலைப்பாடு என்று ஏமாற்றுவார். ஆனால் பெரியார் அவ்வாறு ஈழத் தமிழர்களை ஏமாற்றவில்லை. அவர் உண்மையைக் கூறினார். பெரியார் தந்தை செல்வா அமிர்தலிங்கம் ஆகியோரிடம் மட்டும் இதைக் கூறவில்லை. தான் சந்தித்தபோதும் தன்னிடமும் இதையே கூறினார் என்று மாணவர் பேரவைத் தலைவர் சத்தியசீலன் என்னிடம் கூறினார். நாம் அறிந்தவரையில் பெரியாருக்கு பிறகு இந்த உண்மையை கூறிய இன்னொரு தலைவர் தோழர் தமிழரசன்தான். ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும் என்று அவர் தெளிவாக கூறினார்.

வரலாற்றில் திலீபன்

வரலாற்றில் திலீபன் பெயர் உச்சரிக்கப்படுகின்ற ஒவ்வொருமுறையும் அகிம்சை வழியில் தீர்வு பெற முடியாது என்பது மட்டுமல்ல சாதாரண 5 அம்சக் கோரிக்கைகளைகூட நிறைவேற்றாத இந்திய அரசின் துரோக முகம் நினைவில் வந்து நிற்கும். இத்தனை அழிவுக்கு பின்னரும், இத்தனை அழிவுக்கு காரணமான இந்திய அரசு, ஈழத் தமிழருக்கு தீர்வு பெற்று தரும் என நம்புகிறவர்களுக்கும், இந்துத் தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என கூறுபவர்களுக்கும், 36 ஆண்டுகளுக்கு முன்னரே திலீபன் தன் மரணத்தின் மூலம் தெளிவான பதில் அளித்துள்ளான்.

நடிகை விஜயலட்சுமிக்கு விரைந்து நீதி வழங்க வேண்டும்

நடிகை விஜயலட்சுமிக்கு விரைந்து நீதி வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்த இந்த ஜனநாயக மாதர் சங்கம் இப்போது என்ன செய்கிறது?

நடிப்பது தமிழ் படத்தில்

நடிப்பது தமிழ் படத்தில் வாழ்வது தமிழ்நாட்டில் தின்பது தமிழன் போட்ட சோற்றை அப்புறம் எப்படி தமிழின படுகொலை செய்த சிங்கள பிரதமரின் கரங்களை பிரபுதேவாவால் மகிழ்ச்சியுடன் பற்றிக் கொள்ள முடிகிறது? ஒருவேளை இவரும் வீட்டில் தெலுங்கு பேசுபவரா?

புலம்பெயர்ந்த நாடுகளில் திலீபனை

புலம்பெயர்ந்த நாடுகளில் திலீபனை நினைவுகூர அனுமதிக்கப்படுகிறது. அதில் வேற்று இனத்தவரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துகின்றனர். ஆனால் இலங்கையில் திலீபனை நினைவு கூர்ந்தால் ஊர்தி அடித்து நொருக்கப்படுகிறது. கூட வந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினரே தாக்கப்படுகிறார். இலங்கையில் ஒருவர் தன் இறந்தபோன உறவை நினைவுகூர சட்டப்படி அனுமதி உண்டு என்கிறார்கள். இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் தமிழர் நிலத்தில் தமிழர் தம் இறந்துபோன உறவை நினைவு கூர அனுமதிக்க மறுக்கிறார்கள். திலீபன் பயங்கரவாதி எனவே அவரை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்கிறார்கள். ஆனால் பயங்கரவாதி என்று கூறி கொல்லப்பட்ட ரோகணவிஜேயவீராவை நினைவு கூர அனுமதிக்கின்றனர். இதற்கு திலீபன் தமிழர், ரோகணா விஜயவீரா சிங்களவர் என்பதைவிட வேறு என்ன காரணம் இருக்க முடியும்? அருகில் தமிழ்நாட்டில் எட்டுக்கோடி தமிழர் இருந்தும் எப்படி இவர்களால் தைரியமாக ஈழத்தில் தமிழர்களை தாக்க முடிகிறது? எட்டுக்கோடி தமிழர்களையும் கோமாளிகளாக நினைக்கின்றதா சிங்கள அரசு?

அவர்கள் முதலில் கம்யுனிஸ்டுகளை

அவர்கள் முதலில் கம்யுனிஸ்டுகளை தாக்கினார்கள். நான் மௌனமாக இருந்தேன். ஏனெனில் நான் கம்யுனிஸ்ட் இல்லை அவர்கள் பின்னர் யூதர்களை தாக்கினார்கள். நான் மௌனமாக இருந்தேன. ஏனெனில் நான் யூதன் இல்லை. அவர்கள் இறுதியாக என்னை தாக்கினார்கள். அப்போது எனக்காக குரல் கொடுக்க யாரும் இல்லை. சர்வாதிகாரி ஹிட்லரின் கொடுமைகளுக்கு எதிராக ஒரு சாதாரண மனிதன் கூறிய இந்த வரிகளை ஒவ்வொரு தமிழரும் உள்வாங்கிக் கொள்ள வேண்டிய தருணம் இது. கஜேந்திரன் வேறு கட்சியாக இருக்கலாம். அவர் எம்.பி யாக இருக்கலாம். ஆனால் அவர் ஒரு தமிழர். நாளை இதே நிலைதான் ஒவ்வொரு தமிழனுக்கும்.

வெற்றியை விட பெருசா ஒன்னு இருக்குதுன்னா

வெற்றியை விட பெருசா ஒன்னு இருக்குதுன்னா அது எதிரிகளுக்கு நாம குடுக்கிற நடுக்கம்தான்.

உன் வீட்டு நாய் உன்னைப் பார்த்து குரைக்கிறது

உன் வீட்டு நாய் உன்னைப் பார்த்து குரைக்கிறது என்றால் அதுக்கு பக்கத்து வீட்டுக்காரன் சோறு வைக்கிறான் என்று அர்த்தம்

ஒரு டவுட் !

ஒரு டவுட் ! தமிழ் நீச மொழி என்று கூறிய காஞ்சிப் பெரியவரை எதிர்ப்பவர்கள், தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று கூறிய பெரியாரை ஏன் எதிர்ப்பதில்லை?

ஒரு ஈழத் தமிழரை தன் தலைவர் என்கிறார்

ஒரு ஈழத் தமிழரை தன் தலைவர் என்கிறார் ஈழத் தமிழருக்கு எங்கு இன்னல் நேர்ந்தாலும் அங்கு ஈழத் தமிழருக்கு ஆதரவாக ஒலிக்கிறார் ஒருபுறம் திராவிட அரசின் வழக்கு விசாரணை நெருக்கடிகள் மறுபுறம் இதற்கு நடுவிலும் திருமலையில் திலீபன் ஊர்தியும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும் தாக்கப்பட்டதை அறிந்ததும் தமிழகத்தில் இருந்து முதல் கண்டனக்குரல் இவருடையதாக இருக்கிறது. தமக்காக ஒரு குரல் ஒலிக்காதா என ஏங்கும் ஈழத் தமிழருக்கு சீமான் குரல் ஆறுதலாக இருக்கிறது. ஈழத் தமிழர் ஏன் சீமானை ஆதரிக்கிறார்கள் என கேட்பவர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் மலர்களை நசுக்கலாம்.

நீங்கள் மலர்களை நசுக்கலாம். ஆனால் வசந்தம் வருவதை தடுக்க முடியாது. நீங்கள் ஊர்தியை அடித்து நொறுக்கலாம். ஆனால் மக்கள் மனங்களில் இருந்து திலீபனை அகற்ற முடியாது.

வீசும் காற்றே தூது செல்லு

வீசும் காற்றே தூது செல்லு தமிழ் நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு ஈழத்தில் நாம் படும் வேதனைகள் - அதை எங்களின் சோதரர் காதில் சொல்லு கத்திடக் கேட்டிடும் தூரமல்லோ - கடல் கை வந்து தாங்கிடும் நீளமல்லோ எத்தனை எத்தனை இங்கு நடந்திட எங்களின் சோதரர் தூக்கமல்லோ இங்கு குயிலினம் பாட மறந்தது எங்கள் வயல் வெளி ஆடை இழந்தது. இங்குள்ள பேய்களும் செய்ய மறந்ததை உங்களின் ராணுவம் செய்து முடித்தது

ஆழ்ந்த இரங்கல்!

• ஆழ்ந்த இரங்கல்! கடந்த பத்தாம் திகதிதான் (10.09.2023) தற்கொலை செய்வதினை தடுப்பது தொடர்பிலான சர்வதேச தினம் அனுட்டிக்கப்பட்டது. “தற்கொலை செய்வது கோழைத்தனம். கடைசிவரை எதிர்த்து நின்று முயற்சி செய்ய வேண்டும்” என சிறுவயது முதல் எமக்கு போதிக்கப்படுகிறது. இருப்பினும் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. புலிகள் இயக்கம் தற்கொலை தாக்குதல் செய்தபோது அதனை இலங்கை அரசு முதல் ஜ.நா வரை அனைவரும் கண்டித்தனர். ஆனால் இன்று வருடத்திற்கு சுமார் 3000 பேர் இலங்கையில் தற்கொலை செய்கின்றனர். இது குறித்து இலங்கை அரசும் கவலைப்படவில்லை. ஜ.நா வும் அக்கறை கொள்ளவில்லை. கடந்த ஆண்டு இலங்கையில் 2586 ஆண்களும் 677 பெண்களும் தற்கொலை செய்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. யுத்த காலத்தில்கூட இந்தளவு தற்கொலைகள் நடக்கவில்லை. இன்று இது அதிகரித்துள்ளது. யுத்தம் முடிந்தால் பாலும் தேனாறும் ஓடும் என்றார்கள். ஆனால் மாறாக மக்கள் தற்கொலை செய்வதுதான் அதிகரித்துள்ளது. ஒருகாலத்தில் கல்வியில் முதன்மை மாவட்டமாக இருந்த யாழ் மாவட்டம் இன்று அதிகளவு சாராயம் விற்ற மாவட்டமாக விளங்குகின்றது. கேரளாவில் இருந்து கஞ்சா போதைவஸ்து மூட்டை மூட்டையாக தினமும் வந்து யாழ்ப்பாணத்தில் இறங்குகிறது. புலிகளுக்கு வந்த ஆயுதக் கப்பல்களை மடக்கி பிடித்த இலங்கை இந்திய அரசுகளால் போதைவஸ்து கடத்தும் வள்ளங்களை பிடிக்க முடியவில்லையாம். அரசியல்வாதிகள் தங்களது சலுகைகள்மீது அக்கறை கொள்கினறனரேயொழிய மக்கள் நலன் மீது அக்கறை கொள்வதில்லை

சிஙகள அரசுடன் இணக்கமாக செல்லும் சம்பந்தர் ஐயாவே

சிஙகள அரசுடன் இணக்கமாக செல்லும் சம்பந்தர் ஐயாவே திருமலையில் திலீபன் ஊர்தியும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் சிங்கள அரசின் கீழ் வாழ முடியாது என்று கூறி புலம்பெயர்நாட்டில் அகதி அந்தஸ்து பெற்ற நம்மவர் சிலர், சிங்கள அரசு நல்லதாம். கஜேந்திரன்தான் கலவரம் செய்கிறாராம் என்னத்தைச் சொல்ல?

இதுவரை முழு இலங்கையும் சிங்களவர்களுக்குரியது

இதுவரை முழு இலங்கையும் சிங்களவர்களுக்குரியது என்று கூறி வந்தவர் முதன் முறையாக சிஙகள பகுதிக்குள் திலீபனை எப்படி கொண்டு வர முடியும் என்று கேட்கிறார். இவ்வாறு கேட்பதன் மூலம் இலங்கையில் தமிழர் பகுதி என்று ஒன்று இருப்பதை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்று அர்த்தம். திலீபனை தூக்கிப் பிடிப்பதன் மூலம் தமிழர் நிலம் ஏற்றுக்கொள்ளப்படுமாயின் என்ன விலை கொடுத்தேனும் தூக்கிப் பிடிப்போம். திலீபன் பயங்கரவாதி. அவரை எப்படி நினைவு கூர முடியும் எனக் கேட்கிறார். அப்படியென்றால் பயங்கரவாதி என்று கொல்லப்பட்ட ரோகண விஜயவீரா நினைவுகூர எப்படி அனுமதி அளிக்கப்படுகிறது? சிஙகளவர் என்றால் நினைவு கூரலாம். தமிழர் என்றால் நினைவு கூர முடியாது. அப்படித்தானே?

நாய்களில் பல வகை உண்டு.

நாய்களில் பல வகை உண்டு. ஆனால் எல்லா வகை நாய்களும் தம் எஜமானுக்கு வாலாட்டும் வீசி எறியப்படும் இறைச்சித் துண்டிற்காக காலம் எல்லாம் விசுவாசமாக இருக்கும் நன்றியுடன் எஜமான் கால்களை நக்கும் குறிப்பு - நீதிமன்றம் திலீபன் ஊர்திக்கு அனுமதி கொடுத்துள்ளது. அதுமட்டுமன்றி உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று உத்தரவும் இட்டுள்ளது. இதை யாராவது இந்த ஆளுநருக்கு தெரியப்படுத்துங்கள்.

இறப்பும் அதனால் ஏற்படும் இழப்பும்

இறப்பும் அதனால் ஏற்படும் இழப்பும் இயற்கையானதுதான். விரும்பியோ விரும்பாமலோ அதை நாம் எதிர் கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் எமக்காக இறந்தவர்களை நினைவு கூர்வதற்கு அஞ்சும் நிலை இருக்கே அது மிகவும் கொடியது இறந்தவர்கள் எமது உறவுகள். அவர்கள் எமக்காக மரணித்தவர்கள். அவர்களை நினைவு கூர்வது எமது கடமை. இறந்தவர்களை நினைவு கூர மனிதாபிமானமாக அனுமதிக்க வேண்டும் என்று சர்வதேசம் கூறுகின்றது. இலங்கையில் கூட உறவுகளை நினைவுகூர சட்டம் அனுமதிக்கின்றது. ஆனாலும் நினைவு கூரப்படும்போதெல்லாம் இன நல்லிணக்கத்தை கெடுப்பதாக கூறுகின்றனர். நினைவு கூர்பவர்களை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும் என மிரட்டுகின்றனர். இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி அஞ்சி அஞ்சியே நாம் எம் உறவுகளை நினைவு கூர்வது? காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகிறது. தமிழன் மட்டும் ஏன் அஞ்சியே கிடக்க வேண்டும்? நாம் வளர்க்கும் நாயாக இருந்தாலும் எட்டி உதைத்தால் இரண்டுமுறைதான் பொறுக்கும் . மூன்றாம் முறை முறைக்கும். ஆனால் எத்தனை முறை உதைத்தாலும் தமிழன் மட்டும் திருப்பி முறைக்கக்கூடாது என்கிறார்களே, இது என்ன நியாயம்?

செய்தி – தமது நாட்டில் சீக்கிய தலைவர்

செய்தி – தமது நாட்டில் சீக்கிய தலைவர் ஒருவரை இந்திய அரசு கொன்றுள்ளதாக கனடா குற்றம்சாட்டியுள்ளது. இந்திய அரசு கொன்றதா இல்லையா என்பதை ஆராய்வது எமது நோக்கம் இல்லை. இங்கு எமது கேள்வி என்னவெனில், தனது நாட்டில் வந்து தனது குடியுரிமை பெற்ற ஒருவரை கொன்றமைக்காக இந்தியர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று கனடா அரசு கூறினால் அதை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளுமா? அல்லது, ஈழ அகதிகளை பயங்கரவாதிகள் என சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருப்பது போன்று கனடாவில் உள்ள இந்தியர்களை சிறப்புமுகாமில் அடைத்தால் அதை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளுமா? அல்லது, ஈழ அகதிகளை 40 வருடமாக குடியுரிமை வழங்காமல் வைத்திருப்பதுபோல் கனடாவில் இருக்கும் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்காவிடில் அதை இந்திய அரசு எற்றுக்கொள்ளுமா? அல்லது, ஈழ அகதிகளுக்கு இந்தியாவில் உயர் கல்வி மறுக்கப்பட்டதுபோன்று கனடாவில் கல்வி கற்கும் இந்திய மாணவர்கள் மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டால் அதை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளுமா? ஆனால் கனடா அரசு ஒருபோதும் அவ்வாறு செய்யாது. ஏனெனில் அதுதான் இந்திய அரசுக்கும் கனடா அரசுக்கும் உள்ள வித்தியாசம். யார் தவறு செய்கிறாரோ அவரையே கனடா அரசு தண்டிக்கும். மாறாக இந்திய அரசு போன்று ஒருவர் தவறு செய்தால் அதை வைத்து ஒரு இனமே குற்றவாளிகள் என்று முத்திரை குத்தாது. குறிப்பு- கனடா மற்றும் இந்திய அரசு மோதல் எப்படி நகரப் போகின்றது என்று தெரியவில்லை. ஆனால் கனடா, லண்டன், அவுஸ்ரேலியா.அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியுரிமை எடுத்துக்கொண்டு இந்திய உளவு நிறுவனத்துடன் சேர்ந்து செயற்படுவதை பெருமையாக கூறித்திரியும் தமிழர் சிலர் இனி நிச்சயம் கவனத்திற்குள்ளாவார்கள்.

சீனாக் கப்பல் ஒவ்வொரு வருடமும்

சீனாக் கப்பல் ஒவ்வொரு வருடமும் இலங்கைக்கு வருகிறது. இவ்வாறு வரும் ஒவ்வொரு முறையும் தென் இந்தியாவுக்கு ஆபத்து என்று தமிழ் நாட்டு தலைவர் யாராவது ஒருவர் குரல் எழுப்புவர். ஆனால் இது குறித்து அனுமதி வழங்கும் இலங்கை அரசும் அக்கறை கொள்வதில்லை. ஏன் இந்திய அரசேகூட அலட்டிக் கொள்வதில்லை. ஆனாலும் நம்மவர் சிலர் “இலங்கைக்கு சீனா வருகிறது. எனவே இந்திய அரசு தமிழீழம் பெற்று தரப் போகிறது” என்று கூறிக் கொண்டிருக்கின்றனர்.

ஒருவன் அயோக்கியன் என தெரிந்தும்

ஒருவன் அயோக்கியன் என தெரிந்தும் அவனை நியாயப்படுத்த முயல்பவன் அவனைவிட அயோக்கியன்

வைகோ கலைஞரின் சாதியை

வைகோ கலைஞரின் சாதியை குறிப்பிட்டபோது கோபம் அடைந்து செருப்பு வீசிய திமுகவினர், கமல் கலைஞரின் சாதியை குறிப்பிடும்போது மௌனமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.