Sunday, July 30, 2023

சீனாவில் மாவோ செய்தது என்ன?

•சீனாவில் மாவோ செய்தது என்ன? பொதுவாக எல்லோரும் மாவோ அவர்கள் சீனப் புரட்சியை செய்ததாக நினைக்கிறார்கள். சீனப் புரட்சியை சீன மக்களே செய்தார்கள். மாவோ அப் புரட்சிக்கு தலைமை வகித்தார் . அவ்வளவே. அப்படியென்றால் மாவோ செய்த மகத்தான பணி என்ன? அடிமைப்பட்டுக் கிடந்த சீன மக்களுக்கு அவர்களுடைய அடிமைத்தனத்தை அவர் புரிய வைத்தார். அவர் ஒரு வரலாற்று ஆசிரியர். அதனால் சீன மக்களின் பெருமைக்குரிய வரலாற்றை அவர்களுக்கு எடுத்துக் கூறினார். அதனால் தங்களைவிட மிகவும் சிறிய நாடான ஐப்பானிடம் தாம் அடிமைப்பட்டுக் கிடப்பதை சீன மக்கள் உணர்ந்து கொண்டார்கள். தாம் அடிமைப்பட்டுக் கிடப்பதை உணர்ந்து கொண்டமையினால்தான் அவர்களால் மகத்தான சீனப் புரட்சியை நிகழ்த்தி விடுதலை பெற முடிந்தது. தூங்கும் அரக்கன் எனப் பெயர் பெற்றிருந்த சீனா இன்று பொருளாதார வல்லரசு எனப் பெயர் பெற்றமைக்கு முக்கிய காரணம் சீன மக்கள் தாம் அடிமைப்பட்டு கிடக்கிறோம் என்பதை உணர்ந்தமையே. எனவே தமிழ் இன மக்களும் விடுதலை பெற வேண்டும் எனில் முதலில் அவர்கள் தாம் அடிமையாக இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். உணர வைக்கப்பட வேண்டும். ஈழத்திலும் சரி இந்தியாவில் தமிழ்நாட்டிலும் சரி தமிழ் மக்கள் அடிமையாகவே இருக்கிறார்கள். ஆனால் தமிழ் தலைவர்களோ அவர்களின் அடிமைத்தனத்தை உணர விடாமல் தடுக்கும் பணியையே செய்கிறார்கள். இப்போது தமிழ் இனத்திற்கு தேவை, •மாவோ போன்று அடிமைத்தனத்தை உணர வைக்கும் தலைவர்களே. •மாவோ போன்று தமிழ் இனத்தின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை எடுத்துக் கூறும் தலைவர்களே. குறிப்பு- அடிமையாக கிடப்பது கேவலம் இல்லை. மாறாக தமது அடிமைத்தனத்தை உணராமல் வீழ்ந்து கிடப்பதே கேவலம் ஆகும்.

ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம்

•ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயாவுடன் ஒரு உரையாடல் அப்பாவி தமிழன் - ஐயா! குருந்தூர் மலையில் பொங்கல் செய்து வழிபடச் சென்ற எம்மை பிக்குகள் பொலிசாருடன் சேர்ந்து விரட்டி அடித்துள்ளனர். மறவன்புலவு சச்சிதானந்தம் - என்னது மன்னார் ஆயர் இந்துக்களை வழிபட அனுமதிக்காமல் தடுக்கிறாரா? அப்பாவி தமிழன் - மன்னார் ஆயர் தடுக்கவில்லை. புத்த பிக்குகள்தான் தடுக்கிறார்கள் ஐயா. மறவன்புலவு சச்சிதானந்தம் - அப்படியென்றால் சிவத்துரோகி சுமந்திரன் தடுக்கிறாரா? அவரும் மனைவியும் எம் இந்துக்களை மத மாற்றம் செய்ய முயலுகின்றனர். அப்பாவி தமிழன் - ஐயோ ஐயா! சுமந்திரன் இல்லை. புத்த பிக்குகள்தான் தடுக்கிறார்கள். மறவன்புலவு சச்சிதானந்தம் - புத்த பிக்குகள் நல்லவர்கள் ஆயிற்றே. அவர்கள் அப்படி செய்ய மாட்டார்களே. நான் அவர்கள் உட்கார என் வேட்டியையே உரிந்து கொடுத்தேன் அல்லவா? அப்பாவி தமிழன் - ஆமாம் ஐயா. அதனால்தான் அவங்கள் எங்கள் கோமணத்தையே உரியப் பார்க்கிறாங்கள். நீங்கள்தான் வந்து நியாயம் கேட்க வேண்டும் ஐயா. மறவன்புலவு சச்சிதானந்தம் - கிருத்தவர்கள் அல்லது முஸ்லிம்கள் பிரச்சனை பண்ணினால் கூறுங்கள் உடனே வருகிறேன். பிக்கு மற்றும் சிங்கள அரசுக்கு எதிராக நான் வாய்கூட திறக்கமாட்டேன். அப்படித்தான் எனக்கு இந்திய தூதர் கூறியிருக்கிறார். அப்பாவி தமிழன் - என்னய்யா இப்படி கூறுகின்றீர்கள்? நீங்கள் கேட்டபடி உங்களுக்கு “தமிழினத்தின் காவல் தலைவன்” என்று பட்டம் தந்தோமே. இப்ப எம்மை காக்க முடியாது என்றால் மற்றவங்கள் சிரிப்பாங்களே ஐயா? மறவன்புலவு சச்சிதானந்தம் - ஒன்று செய்யலாம். எல்லோரும் சேர்ந்து இந்திய பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் அனுப்புவோம். அப்பாவி தமிழன் - என்னய்யா இப்படி சொல்றீங்க? பாபர் மசூதியை இடித்தது போல் புத்த விகாரையை உடைப்போம் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு முன்னால வீரமாக பேசினீர்களே? மறவன்புலவு சச்சிதானந்தம் - அது ஏதோ உணர்ச்சி வேகத்தில பேசிட்டன். ஆனா அப்புறம் இந்திய தூதர் அழைத்து யாரைக் கேட்டு இப்படி பேசினீங்க என்று டோஸ் விட்டது எனக்கு மட்டும்தானே தெரியும். அப்பாவி தமிழன் - அப்ப என்ன செய்யிறது ஐயா? லண்டனில பாலம் கட்டுற ஆட்களிட்டை கேட்டுப் பார்க்கலாமா? மறவன்புலவு சச்சிதானந்தம் - அவங்க றூட் வேற . என்ர றூட் வேற. நான் ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி ஊடாக பாலம் கட்டுறேன். அவங்க அண்ணாமலை ஊடாக பாலம் கட்டுறாங்க. அப்பாவி தமிழன் - அதுமட்டுமன்றி அம்மையார் ஒருவர் அர்ஜீன் சம்பத் ஊடாக பாலம் கட்டுறார். காசிஆனந்தன் இந்து தமிழீழம் என்று கூறி இன்னொரு பாலம் கட்டுறார். இப்படி பல பாலம் கட்டப்படுகிறது. ஆனால் எம்முடைய கவலை என்னவென்றால் இந்த பாலம் எல்லாம் எப்ப கட்டி முடியும்? அதில் மோடி எப்ப வருவார்? நாம் எப்ப குருந்தூர் மலையில் பொங்கல் செய்து வழிபடுவது? மறவன்புலவு சச்சிதானந்தம் - உனக்கு உரிமை பெற்றுத்தர இந்திய அரசு வரவேண்டும் என்று நீ நம்புகிறவரை எம்மைப் போன்றவர்கள் பாலம் கட்டுவதாக கூறிக்கொண்டே இருப்போம். அதை அப்பாவி நீ நம்பிக்கொண்டிருப்பாய். அப்பாவி தமிழன் - ?????? (யாவும் கற்பனை)

ஒரு நாள் சமையலுக்கு வாங்கும்

ஒரு நாள் சமையலுக்கு வாங்கும் வெண்டிக்காயைக்கூட உடைத்து பார்த்து வாங்குகிறோம். ஆனால் 5 வருடம் எம்மை ஆளும் அரசியல்வாதிகளை ஆராயாமல் தெரிவு செய்கிறோம். ஒரு துண்டு தேங்காயைத் திருடியதற்காக எலிக்கு விஷம் வைத்து கொல்கிறோம். ஆனால் பல்லாயிரம் கோடி ரூபாய்களை திருடும் அரசியல்வாதிகளை கொல்ல நினைப்பதில்லை. மாறாக "உலக தமிழினத் தலைவர்" என்று பட்டம் கொடுத்து கொண்டாடுகிறோம். அவர்களும் அமுலாக்கத்துறை கைது செய்யும்போது இதயத்தில் ஓட்டை என்று கூறி காவேரி மருத்துவமனையில் போய் படுத்துவிடுகின்றனர். இப்போது இன்னொரு அமைச்சர் வீட்டில் ரெய்டு நடக்கிறதாக செய்தி வருகிறது. அவருக்கு இதயத்தில் ஓட்டை இருக்கிறதா இல்லையா என்பது இனி தெரிய வரும்.

அடக்குமுறையினால் அழித்தாலும் அடிமையாகி கிடந்துவிட மாட்டோம்

•அடக்குமுறையினால் அழித்தாலும் அடிமையாகி கிடந்துவிட மாட்டோம் முன்பைவிட வலிமையாக ஆர்ப்பரித்து எழுவோம்! ஒவ்வொரு வருடமும் யூலை மாதம் வரும்போது தமிழருக்கு நினைவில் வருவது 1983ம் ஆண்டு நடைபெற்ற இனப் படுகொலைகளே. அதுவும் வெலிக்கடை சிறையில் நடைபெற்ற குட்டிமணி, தங்கத்துரை உட்பட 52 பேரின் படுகொலைகள் மறக்க முடியாதவை. மனித இனம் உன்னதமான ஒரு வாழ்க்கையை, பரிபூரண விடுதலையை நோக்கி முன்னேறும் இக் காலகட்டத்தில் மிருகத்தனமான மிகக் கேவலமான முறையில் நடைபெற்ற நிகழ்வு அது. இக் கொடூரமான வெறிகொண்ட தாக்குதலில் பலியான கொள்கை மறவர்களில் ஒருவர் தோழர் அழகன் என்று அழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை சந்திரகுமார். தோழர் அழகன் பருத்தித்துறையில் புலோலி என்னும் இடத்தில் பிறந்தவர். காட்லிக்கல்லூரியில் கல்வி கற்றவர். 1979ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் தன்னை முழு நேரமாக இணைத்துக்கொண்டவர். புலிகள் இயக்கம் உடைந்து புதிய பாதை ( புளட்) என்ற அணி உருவாகிய போது தோழர் அழகன் அதனுடன் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் அவ்வணியும் பழைய பாதையில் போவதைக் கண்டு அதிலிருந்து விலகி "தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை" என்னும் புரட்சிகர இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவராக விளங்கினார். தோழர் அழகன் மாக்சிய லெனிய மாவோசிச சிந்தனையை தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவர். அவர் இந்திய புரட்சிகர சக்திகளுடன் ஜக்கியத்திற்கு உழைத்தார். அதன் நிமித்தம் இந்தியா சென்று திரும்பியபோது கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார். 1983ம் ஆண்டு யூலை மாதம்25ம் தேதியன்று வெலிக்கடை சிறையில் குட்டிமணி தங்கத்துரை போன்றவர்கள் கொல்லப்பட்டபோது தோழர் அழகன் அவர்களும் கொல்லப்பட்டார். தோழர் அழகன் கொல்லப்பட்டு இன்றுடன் 40 வருடங்கள் கழிந்துவிட்டன. ஆனால் அவர் விரும்பிய இலட்சியம் இன்னும் வெல்லப்படவில்லை. தமிழ் மக்கள் இன்னும் விடுதலை பெறவில்லை. வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டவர்களுக்கு எமது அஞ்சலிகளை செலுத்துவோம். குறிப்பு- வெலிக்கடை சிறையில் மட்டுமல்ல களுத்துறை மற்றும் பிந்தனுவ சிறைகளிலும் தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இதுவரை ஒருவர்கூட இக் கொலைகளுக்காக தண்டிக்கப்படவில்லை

உச்சநீதிமன்றம் விடுதலை செய்தும்

உச்சநீதிமன்றம் விடுதலை செய்தும் நான்கு தமிழரை சிறப்புமுகாமில் அடைத்தவர்கள், சாந்தன் நாடு திரும்ப விரும்பியும் அவரை சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பவர்கள், மற்றவர் துணையின்றி எழுந்து நடமாட முடியாதவரை புலி என்றும் விடுதலை செய்தால் தமிழ்நாட்டிற்கு ஆபத்து என்று கூறுபவர்கள், மனிதவுரிமை பற்றி பேச என்ன அருகதை இருக்கு? தமக்கு வந்தால் ரத்தம் . ஈழத் தமிழருக்கு வந்தால் தக்காளி சட்னியா?

அதிசயம், ஆனால் உண்மை!

அதிசயம், ஆனால் உண்மை! எப்படி இந்த தலைவர்கள் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாக அமெரிக்க தூதுவரை சந்தித்தார்கள்? ஒருவேளை ஒன்றாக வந்தால்தான் சோறு என்று அமெரிக்க தூதுவர் கூறியிருப்பாரா?😂 சரி. பரவாயில்லை. இனி மக்களுக்கான போராட்டங்களிலும் ஒன்றுபட்டு செயற்படுவார்கள் என நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை.

முள்ளிவாயக்கால் அழிவு மிகப் பெரிய அழிவு

முள்ளிவாயக்கால் அழிவு மிகப் பெரிய அழிவு என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதைவிட மிகப் பெரிய அழிவை தமிழ் இனத்திற்கு இவர்கள் ஏற்படுத்தப் போகிறார்கள். முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச் செடிகள் இவர்கள்.

15 வருடங்கள் சிறையில் அடைத்து

15 வருடங்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இரு தமிழ் அரசியல் கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரியை சேர்ந்த சண்முகராசன் மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த நவரட்ணம் ஆகிய இருவரும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிங்கள ஜனாதிபதிகூட இரக்கம் காட்டி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்கிறார். இந்திய அரசும் தமிழக திராவிட முதல்வரும் 33 வருடமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சாந்தன் மீது இரக்கம் காட்ட மறுப்பது என்? தான் இறப்பதற்கு முன்னர் தன் மகனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என ஏக்கத்துடன் காத்திருக்கும் சாந்தனின் தாயார் மீதாவது தமிழக முதல்வர் இரக்கம் காட்ட மாட்டாரா?

முன்னாள் உதயன் ஆசிரியர் வித்தியாதரன்

முன்னாள் உதயன் ஆசிரியர் வித்தியாதரன் குறித்து நான் எழுதிய விடயங்களுக்கு பயன்படுத்திய போட்டோவின் நம்பக தன்மையை உறுதிப்படுத்த முடியாமையினால் பதிவை நீக்கியுள்ளேன். மன்னித்துக்கொள்ளுங்கள்.

ஊழல் செய்த அமைச்சருக்கு

ஊழல் செய்த அமைச்சருக்கு சிறையில் A கிளாஸ் வசதிகள் தமிழகத்தை நம்பிபோன ஈழ அகதிகளுக்கு சிறப்புமுகாமில் மருத்துவ வசதிகூட மறுப்பு இதுதான் திராவிட நீதியா?

செய்தி – ஜனாதிபதி அழைத்ததும்

செய்தி – ஜனாதிபதி அழைத்ததும் ஓடிச் சென்று கலந்துகொண்ட தமிழ் தலைவர்கள் தீர்வு 13ஐக்கூட முழுமையாக தர முடியாது என்று கூறியபின்பும் ஜனாதிபதியுடன் விருந்துண்டு மகிழ்ந்தனர். ஓடுவதாக இருந்தால் துரத்திக்கொண்டு ஓடுங்கள் நிற்பதாக இருந்தால் எதிர்த்து நில்லுங்கள் பதுங்குவதாக இருந்தால் பாய்வதற்காக பதுங்குங்கள் ஆனால் ஒருபோதும் அடிமையாகவே வீழ்ந்து கிடந்துவிடாதீர்கள்

மறக்கமாட்டோம்

மறக்கமாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் நீதி பெறும்வரை ஓயவும் மாட்டோம்.

ஆஞ்சநேயர் - யோவ் நீலகண்ட சாஸ்திரி!

ஆஞ்சநேயர் - யோவ் நீலகண்ட சாஸ்திரி! நான்தான் சுமந்து சென்றேன் என்று உங்கிட்ட சொன்னேனா? எதுக்கு வீணாய் என்னை கோர்த்து விடுற? குறிப்பு – மதம் அறிவியலுக்கு எதிரானது. அதுவும் சங்கிகள் மனித குலத்திற்கே எதிரானவர்கள்.

இரு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு

இரு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வல்லறவு செய்யப்படுகின்றனர். இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா? ஆம். உடன் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வீடியோவை பகிரக்கூடாது என்று தடை விதித்துள்ளது. ஆகா என்னே நடவடிக்கை. வாழ்க இந்திய அரசு. எம் இசைப்பிரியாக்களின் வலியை இந்திய மக்களும் பாரத மாதாவும் இப்போது உணர்வார்கள் என நம்புவோம். தன் சொந்த மக்கள் மீதே இரக்கம் காட்டாத இந்த இந்திய அரசுதான் ஈழத் தமிழர் மீது இரக்கம் கொண்டு உதவப் போவதாக நம்புபவர்களை என்னவென்பது?

முள்ளிவாய்க்காலில் தமிழ் பெண்கள்

முள்ளிவாய்க்காலில் தமிழ் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டபோது கலைஞர் டிவியில் மானாட மயிலாட பார்த்து ரசித்தவர்கள் மணிப்பூரில் பெண்கள் பாலியல் வல்லுறவு கண்டு பதறுவதை எப்படி நம்புவது? ஈழத்தில் பெண்களை படுகொலை செய்த மகிந்தவின் ரத்தம் தோய்ந்த கரங்களை குலுக்கிப் பரிசில்கள் பெற்றவர்கள் மணிப்பூரில் பெண்களின் கண்ணியத்தைக் காப்பாற்றுமாறு கோருவதை என்னவென்று அழைப்பது? இது பாஜக அரசுக்கு வக்காலத்து வாங்கும் பதிவு இல்லை. திமுக வின் உண்மை முகம் என்ன எனபதை காட்டும்பதிவு.

கடந்தவாரம்தான் ஒரு பிக்கு

கடந்தவாரம்தான் ஒரு பிக்கு இரு பெண்களுடன் பிடிபட்டு நாடே காறித் துப்பியது. அதற்குள் இந்தவாரம் இன்னொரு பிக்கு அதுவும் பதினொரு வயது சிறுமியை வன்புணர்வு செய்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். கொஞ்சம்கூட அச்சமின்றி எப்படி இந்த பிக்ககள் இந்தத் தவறுகளை தொடர்ந்து செய்கின்றனர்? புத்தபிக்குகளின் பாலியல் சேட்டைகளை அம்பலப்படுத்துவதை வெளிநாட்டு சதி என்று கூறும் அமைச்சர் இருக்கும்வரை புத்தபிக்குகளின் பாலியல் சேட்டைகளை பொருளாளாதார நெருக்கடியின் விளைவு என நியாயப்படுத்தும் சக பிக்கு இருக்கும்வரை புத்த பிக்ககளின் இந்த பாலியல் குற்றங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கப் போகின்றன. அந்த புத்தரே வந்தாலும் இந்த மிருகங்களிடமிருந்து பெண்களை காப்பாற்றவே முடியாது.

செத்த மாட்டில் இருந்து கழன்ற உண்ணிகள்

செத்த மாட்டில் இருந்து கழன்ற உண்ணிகள் போன்று புலிகள் இல்லை என்றதும் கழன்ற பிரமுகர் இல்லை இவர். புலிகள் இருக்கும்போதே மகிந்தவுடன் (கள்ள)உறவில் இருந்திருக்கும் முகவர் இவர். முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்தவரின் ரத்தம் தோய்ந்த கரங்களை எப்படி இவரால் பற்றிக் கொள்ள முடிகிறது? அதுவும் தம் சிங்கள மக்களாலேயே விரட்டப்பட்ட ஒருவரை எப்படி இவரால் வரவேற்க முடிகிறது? சிங்களவன்கூட காரி உமிழ்வானே? சீ வெட்கம்!

தானு ஏன் ராஜிவ் காந்திக்கு மாலை அணிவித்தார்

தானு ஏன் ராஜிவ் காந்திக்கு மாலை அணிவித்தார் என்பதை இந்திய மக்கள் இப்போதாவது புரிந்துகொள்வார்களா?

மணிப்பூர் பிரச்சனை மதப்பிரச்சனை அல்ல

மணிப்பூர் பிரச்சனை மதப்பிரச்சனை அல்ல. அது இனப் பிரச்சனை. மணிப்பூரில் நடப்பது மதக் கொலைகள் அல்ல. அவை இனப்படுகொலைகள். நடப்பது இனப்படுகொலை என்றால் ஜநா உட்பட சர்வதேசம் தலையிடும் என்பதால் மதப் பிரச்சனையாக மாற்ற முயல்கிறார்கள். காங்கிரஸ் திமுக எதிர்க்கட்சிகள்கூட இதை மதப் பிரச்சனைகளாகவே காட்டுகின்றன. ஏனெனில் இனப் பிரச்சனை என்றால் அப்புறம் இனப் பிரச்சனைக்கு தீர்வாக தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்க வேண்டி வரும் என இவை அஞ்சுகின்றன. இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் தமிழத் தேசியத்தின் சயநிர்ணய உரிமையை ஆதரிக்க வேண்டி வந்திடும் என்று அவை கருதுகின்றன.

முன்னாள் கடற்படை தளபதி சரத்வீரசேகரா

"முன்னாள் கடற்படை தளபதி சரத்வீரசேகரா ஒரு மனநோயாளி. அவர் கடற்படையில் சமையல் அறையில் பணி புரிந்தாரா?" – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி இனவாதிகளுக்கு அஞ்சக்கூடாது. அவர்கள் புரியும் மொழியில் பதில் அளிக்க வேண்டும் அந்தவகையில் இனவாதி சரத்வீரசேகரவுக்கு பதில் அளித்த செல்வம் எம்.பி அவர்களுக்கு பாராட்டுகள். உண்மையை கூறுவதாக இருந்தால் சுமந்திரன் சம்பந்தர் கூட இப்படி பேச துணிய மாட்டார்கள்.

நாய் தொடர்ந்து குரைத்துக்கொண்டிருந்தால்

நாய் தொடர்ந்து குரைத்துக்கொண்டிருந்தால் அதற்கு இன்னும் சோறு வைக்கவில்லை என்று பொருள். இந்த மனிதர் தமிழருக்கு எதிராக குரைப்பதைப் பார்த்தால் இவருக்கு இன்னும் சிங்கள அரசு சோறு (பதவி) போடவில்லை என்று தெரிகிறது. பசி கொடுமையானதுதான். ஆனால் அது இந்தளவு கொடுமையானதா?

சிங்கக்கொடியை ஏந்தியவர்

சிங்கக்கொடியை ஏந்தியவர் மகிந்தவை "தேசியதலைவர்" என புகழ்ந்தவர் புலிகளை அழித்தபடியால் தன்னால் சுதந்திரமாக திருமலை சென்று வர முடிகிறது என்றவர் அடுத்த தீபாவளிக்கு தீர்வு வரும் என கூறிக்கொண்டிருந்தவர் இப்போது “இந்த நாட்டில் தமிழ் மக்கள் சுதந்திரமாக கௌரவமாக வாழ இடமில்லை” என்கிறார். இதைத்தானே தந்தை செல்வா 46 வருடங்களுக்கு முன்னரே “ தமிழ் மக்களை இனி ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியவர். கண் தெரியவில்லை காது கேட்கவில்லை மற்றவர் உதவியின்றி எழுந்து நடமாட முடியவில்லை இப்பவாவது, சிங்கள அரசு தந்த சொகுசு பங்களாவை துறக்கலாமே? பதவியை யாராவது இளையவர்களுக்கு வழங்கலாமே?

ஜி.யு.போப் எனத் தமிழர்களால் அறியப்பட்ட

ஜி.யு.போப் எனத் தமிழர்களால் அறியப்பட்ட ஜோர்ஜ் உக்லோ போப், 1820ஆம் ஆண்டில் கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள பெடெக் எனும் ஊரில் பிறந்தவர். திருக்குறள், திருவாசகம், நாலடியார் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தமை இவரது சிறப்பான சேவையாகும். இந்தியாவில் 42 ஆண்டுகள் சேவையாற்றியபின் 1881ஆம் ஆண்டில் இங்கிலாந்து திரும்பிய திரு போப், அங்குள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றி பெரும் புகழ் பெற்றார். இந்நிலையில், திரு போப் பிறந்து கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் பிறந்த ஊரான பெடெக்கிலேயே கடந்த வாரம் சனிக்கிழமை 15ஆம் தேதி அவரது சிலை திறந்துவைக்கப்பட்டது. கனடா வாழ் தமிழர்கள் கிருத்தவரான போப் அவர்களை பாராட்டி சிலை திறக்கிறார்கள். ஆனால் வேலணையில் சிலர் கிருத்தவ தமிழர் பாடசாலைக்கு அதிபராக வரக்கூடாது என போராட்டம் செய்கின்றனர். என்னே கொடுமை இது?

40 வருடங்களுக்கு முன்னர் இதே நாட்களில் இலங்கையில்

40 வருடங்களுக்கு முன்னர் இதே நாட்களில் இலங்கையில் , •2000வரையிலான அப்பாவி தமிழர் கொல்லப்பட்டனர் •600 வரையிலான தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர் •5000வரையிலான தமிழர் கடைகள் அழிக்கப்பட்டன •1800 வரையிலான தமிழர் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. •பலத்த காவலில் சிறையில் வைக்கப்பட்டிருந்த 53 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர். இத்தனையும் சிங்கள அரசே திட்டமிட்டு பொலிஸ் மற்றும் ராணுவத்தின் முன்னிலையில் அவற்றின் உதவியோடு செய்தது. நடந்தது இனப்படுகொலை. ஆனாலும் இன்றுவரை சிங்கள அரசும் இந்திய அரசும் இதனை இனக்கலவரம் என்றே கூறிவருகின்றன. இப்போது மணிப்பூரிலும் இதுவே நடக்கிறது. எல்லோரும் ஒரு பெண் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டது பற்றியே பேசுகின்றனர். யாருமே அப் பெண்ணின் தந்தை மற்றும் சகோதரன் கொல்லப்பட்டது பற்றி பேசுவதில்லை. பொலிஸ் முன்னிலையில் பொலிஸ் உதவியுடனே இது நடக்கிறது என்பதையும் பேசுவதில்லை கடந்த பல மாதங்களாக இனப் படுகொலைகளால் மணிப்பூர் பற்றி எரிகிறது என்பதையும் பேசுவதில்லை.

பல வருடங்களாக ஈழத் தமிழரை கண்டுகொள்ளாது

பல வருடங்களாக ஈழத் தமிழரை கண்டுகொள்ளாது புறக்கணித்து வந்த இந்திய தொலைக்காட்சிகள் தற்போது வாய்ப்புகள் வழங்கி வருகின்றன. இதற்கு இரண்டு காரணங்களை கூறலாம். முதலாவது புலம்பெயர்ந்த தமிழர்களின் சந்தை. இரண்டாவது தமிழ்நாட்டில் நாம் தமிழர் பெற்றுவரும் வளர்ச்சி என்றால் அது மிகை அல்ல. ஜீ தமிழ் தொலைக்காட்சி தனது சரிகம பாடல் நிகழ்ச்சிக்கு இந்த வாரம் சிறப்பு விருந்தினராக சீமான் அவர்களை அழைத்துள்ளது. அதில் சீமானின் தாயாரையும் வீட்டையும் காட்டியதோடு அங்கிருந்த பிரபாகரன் படத்தையும் காட்டியுள்ளனர். சீமான் அவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நிகழ்வில் பங்குபற்றிய ஈழத்து தமிழ் சிறுமி கில்மிசா அவர்களை பாராட்டியுள்ளார். “நம்முடைய வலியை மறக்க பாடுங்க, நமக்கு வழி பிறக்க பாடுங்க” என்று வாழ்த்தியுள்ளார். அவருக்கு நன்றிகள். இனி இப்படித்தான்!

இலங்கையில் பள்ளிவாசல் உடைக்கப்பட்டு

இலங்கையில் பள்ளிவாசல் உடைக்கப்பட்டு அங்கிருந்த குர் ஆன் எரிக்கப்பட்டது. அது மட்டுமன்றி அதன்மீது சிறுநீர் கழிக்கப்பட்டது. அப்போது பிரதமர் பதவியில் இருந்த ரணில் விக்கிரமசிங்க அதனை கண்டிக்கவில்லை. அது தொடர்பாக ஒரு சொல் பேசவில்லை. ஆனால் இன்று அதே ரணில் விக்கிரமசிங்க சுவீடனில் குர் ஆன் எரிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறார்.

எம் இசைப்பிரியாக்களை துகில் உரிந்து

எம் இசைப்பிரியாக்களை துகில் உரிந்து கொன்ற மகிந்த ராஜபக்சாவின் ரத்தம் தோய்ந்த கைகளைக் குலுக்கி பரிசுகள் பெற்று வந்த கனிமொழி அம்மையார் மணிப்பூரில் பெண்கள் துகில் உரியப்பட்டதை கண்டிக்கிறார். நல்லது. பாராட்டுகள். ஆனால் மணிப்பூரில் 3 மாதமாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்கும் இந்த அம்மையார் தமிழ் இனப்படுகொலைகள் குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ஒருமுறைகூட கேட்காதது ஏன்?

பௌத்த சிங்கள பேரினவாதமானது,

பௌத்த சிங்கள பேரினவாதமானது, தன் சட்டங்களையும் மதிப்பதில்லை தன் நீதிமன்றங்களையும் மதிப்பதில்லை பிற மதத்தவரின் நம்பிக்கைகளையும் அது மதிப்பதில்லை நீதிமன்ற உத்தரவு பெற்று வழிபடச் சென்ற தமிழர்களை அது விரட்டி அடித்தது. பொங்கல் செய்ய மூட்டிய அடுப்பையும் அது சப்பாத்துக்காலால் எட்டி உதைத்தது. அந்த இடத்திற்கு ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் சென்றார் தமிழர்களும் சைவ மதமும் அவமதிக்கப்பட்டதற்கு நியாயம் கேட்பார் என நினைத்தோம். ஆனால் அவரோ புத்த பிக்குவையும் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்த விகாரையையும் வணங்கிவிட்டு வந்துள்ளார். நல்லவேளை வழக்கம்போல் தன் வேட்டியை உரிந்து அந்த பிக்குவிற்கு கொடுக்கவில்லை. அது சரி இந்த மறவன்புலவு சச்சிதானந்திற்கு “தமிழ் இனக் காவலன்” பட்டம் கொடுத்தவன் எவன்டா?

முதலில் கூறினார்கள்,

முதலில் கூறினார்கள், புலம்பெயர்ந்தவர்கள் தாயகத்தை நினைக்க மாட்டார்கள் என்று அடுத்து கூறினார்கள் , ஒரு சிலர் வயதாகும்வரை நினைப்பார்கள். அப்புறம் யாருமே நினைக்க மாட்டார்கள் என்று இறுதியாக கூறினார்கள், இந்த சந்ததிதான் நினைக்கும் அடுத்த சந்ததி ஒருபோதும் நினைக்காது என்றார்கள். ஆனால் இவ்வாறு கூறியவர்கள் வாயடைத்து ஆச்சரியமாய் பார்க்கும் அளவிற்கு புலம்பெயர் சமூகத்தின் அடுத்த சந்ததி போராட்டத்தை கையில் எடுத்துள்ளது. ஆம். நேற்றைய தினம் 40 வருடங்களுக்கு முன்னர் அதாவது தாம் பிறக்கு முன்னர் தம் இனத்தில் நடந்த 1983 இனப் படுகொலைகளை லண்டனில் அடுத்த சந்ததி இளையவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர். மிகவும் நேர்த்தியாக நிகழ்வை நடத்தியுள்ளனர். உலகிற்கு என்ன மொழியில் பேசினால் புரியுமோ அந்த மொழியில் பேச ஆரம்பித்துள்ளனர். இனி உலகம் செவிடாக இருக்க முடியாது. இந்த இளையவர்களின் குரலைக் கேட்டேதான் ஆக வேண்டும். நம்பிக்கை அளிக்கும் மாற்றம்.

ஒருபுறம் இந்திய அரசு கட்டி தந்த

ஒருபுறம் இந்திய அரசு கட்டி தந்த வீடுகள் இடிந்து விழுகிறது மறுபுறம் இந்திய அரசின் இலங்கை இந்திய ஒப்பந்தம் செயலற்று தொங்குகிறது. இந்திய அரசு ஐம்பதாயிரம் வீடு கட்டி தருகிறது என்று பெருமை பீற்றித் திரிந்தவங்கள் எல்லாம் எங்கேயடா?

சிங்கள அரசு புலிகளை “பயங்கரவாதிகள்” என்று கூறியது

சிங்கள அரசு புலிகளை “பயங்கரவாதிகள்” என்று கூறியது சிங்கள அரசு புலிகளை மட்டுமல்ல ஆயம் ஏந்திப் போராடிய தமிழ் இளைஞர்கள் எல்லோரையும் “பயங்கரவாதிகள்” என்றது சிங்கள அரசு தமிழ் இளைஞர்களை மட்டுமல்ல ஆயுதம் ஏந்திப் போராடிய சிங்கள இளைஞர்களையும் “பயங்கரவாதிகள்” என்று கூறியே சுட்டுக் கொன்றது. சிங்கள அரசு மட்டுமல்ல உலகில் உள்ள எல்லா அரசுகளுமே தமக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுபவர்களை “பயங்கரவாதிகள்” என்றே கூறுகின்றன. இந்தியாவில் ஆயுதம் ஏந்திய பகத்சிங் ஆங்கிலேய அரசுக்கு பயங்கரவாதி. தென்ஆப்பிரிக்காவில் போராடிய நெல்சன் மண்டலோ பெயர் இன்றும் அமெரிக்க பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளது. அரச பயங்கரவாதத்திற்கு பதில் அளிப்பது வன்முறை அல்ல. அது தற்காப்பு. அதை பயங்கரவாதம் என்று குறிப்பிடுவது தவறு. இலங்கையில் தமிழ் இளைஞர்களை பயங்கரவாதிகள் என்று ஜனாதிபதி ஜெயவர்த்தனா குறிப்பிட்டபோது “ நாம் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகள் இல்லை” என்று தங்கத்துரை நீதிமன்றில் தெரிவித்தார். அதுமட்டுமன்றி இன்று ஆனையிறவில் உள்ள ராணுவமுகாம் விரைவில் அம்பாந்தோட்டையில் வரும். அப்போது அது சிங்கள இளைஞர்களை கொல்லும் என்றும் எதிர்வு கூறியிருந்தார். அவர் கூறியபடி 1989ம் ஆண்டு அறுபதாயிரம் சிங்கள இளைஞர்களை பயங்கரவாதிகள் என்று கூறி இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது. இவ்வாறு எமது போராளிகள் தெளிவான சிந்தனையோடு சரியான வழிகாட்டியாக இருந்துள்ளார்கள். எமக்கு பெருமை தேடித்தந்த அவர்களை நினைவுகூர்வது அவசியமானதே.

1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது

1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது மணிப்பூர் தனிநாடாக இருந்தது. 1948ல் மணிப்பூரில் தேர்தல் நடந்து அங்கு ஓர் மக்களாட்சி அரசு அமைந்தது. 1949ல் இந்திய அரசானது மணிப்பூர் அரசரை பேச்சுவார்த்தைக்கு என அழைத்து மிரட்டி இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தை போட்டது. தன்னை ஜனநாயகநாடு என பீற்றிக்கொள்ளும் இந்திய அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மணிப்பூர் அரசைக் கலைத்தது. அன்று முதல் மணிப்பூர் மக்கள் தனிநாடுக்கான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 1958ல் இந்திய அரசால் போடப்பட்ட சிறப்பு ஆயுத தடைச் சட்டத்தால் இதுவரை ஆயிரக்கணக்கான மணிப்பூர் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்திய துணை ராணுவக் குழுக்களால் பல மணிப்பூர் பெண்கள் பாலியல் வல்லறவு செய்யப்பட்டுள்ளனர். இதற்கெதிராக மணிப்பூர் பெண்கள் நிர்வாண போராட்டம்கூட செய்துள்ளனர். ஆனால் இதை எல்லாம் மறைத்து எதோ இரு பெண்களுக்கு கொடுமை நடந்திருப்பதாகவும் அதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறுகின்றார். எதிர்க்கட்சிகளும்கூட இதனை மத மோதலாகவும் அதற்காக மாநில பாஜக அரசைக் கலைக்க வேண்டும் என்றே கோருகின்றன. மாநில அரசைக் கலைப்பதாலே அல்லது இரு பெண்களுக்கு நடந்த கொடுமைக்கு மட்டும் நடவடிக்கை எடுப்பதாலோ மணிப்பூர் பிரச்சனை தீரப் போவதில்லை. தோழர் தமிழரசன் குறிப்பிட்டதுபோன்று தேசிய இனங்களின் சிறைக்கூடமாகவே இந்திய ஒன்றியம் இருக்கிறது. எனவே பலவந்தமாக இணைக்கப்பட்ட மணிப்பூர் மக்களின் இறையாண்மையை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். அனைத்து தேசிய இனங்களின் பிரிந்து போவதற்கான உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையுடன் ஒன்றிணைப்பு ஏற்பட வேண்டும்.

கனடாவில் 3 லட்சம் தமிழர் மட்டுமே உள்ளனர்

கனடாவில் 3 லட்சம் தமிழர் மட்டுமே உள்ளனர். ஆனால் கனடா அரசு கறுப்பு ஜூலையின் 40வது ஆண்டை நினைவுகூர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்பட வேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோருகின்றோம் மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது” என தெரிவித்துள்ளது. இந்தியாவில் எட்டுக்கோடி தமிழர் உள்ளனர். ஆனால் இந்திய (ஆரிய) பிரதமர் இது பற்றி எதுவுமே கூறவில்லை. மாறாக தமிழின படுகொலைகள் செய்யும் சிங்கள அரசுக்கு தொடர்ந்து உதவி வருகிறார். தமிழ்நாட்டின் (திராவிட) முதல்வரும் இது பற்றி எதுவுமே கூறவில்லை. குறிப்பு - ஆரியமும் திராவிடமும் ஒருபோதும் தமிழருக்கு உதவாது என்பதை ஈழத் தமிழர் உணர வேண்டிய தருணம் இது.

தமிழ் தலைவர்கள் மோடிக்கு கடிதம் அனுப்பிவிட்டு

தமிழ் தலைவர்கள் மோடிக்கு கடிதம் அனுப்பிவிட்டு தீர்வு வரும் என காத்து இருக்கின்றனர். யாழ் பல்கலைகழக மாணவர்கள் 1983 யூலை இனப்படுகொலைகளை நினைவு கூருகின்றனர். தலைவர்களை விலைக்கு வாங்கிய இந்திய தூதரால் இந்த மாணவர்களை வாங்க முடியவில்லை.

தோழர் சாருமஜீம்தார் அவர்களுக்கு வீர வணக்கம்.

தோழர் சாருமஜீம்தார் அவர்களுக்கு வீர வணக்கம். கொன்று புதைத்தால் மீண்டும் முளைத்து எழுவர். வெட்டி எறிந்தால் கடல் அலைபோல் மீண்டு வருவர் - செர பண்டாயி மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரி மாவட்டத்தில் நக்சல்பாரி என்ற கிராமத்தில் எழுந்த விவசாயிகளின் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கம் இந்திய துனைகண்டம் முழுவதும் பேரலைகளை எழுப்பியது. ”வசந்தத்தின் இடி முழக்கம்” என்று வர்ணிக்கப்பட்ட அந்த எழுச்சியின் நாயகன் தோழர் சாரு. தோழர் சாருமஜீம்தார் அவர்களின் நினைவுகள் அழிவதில்லை. 1972.07.28 ல் படுகொலை செய்யப்பட்ட தோழர் சாரு அவர்களுக்கு வீர வணக்கம். தோழர் சாருவை கொலை செய்வதன் மூலம் புரட்சியாளர்களான நக்சலைட்டுகளை ஒழித்துவிட முடியும் என இந்திய அரசு நினைத்தது. நக்சலைட்டுகளை ஒழிப்பதற்காக மேலும் 7 பட்டாலியன்களை இந்திய அரசு உருவாக்கியுள்ளது. எத்தனை பட்டாலியன்களை உருவாக்கி எத்தனை பேரை சுட்டுக் கொன்றாலும் நக்சலைட்டுகளை ஒருபோதும் ஒழிக்க முடியாது. சொந்த மக்களை கொல்வதற்காக மேலும் மேலும் படைகளை உருவாக்கும் ஒரே ஜனநாயகநாடு(?) உலகில் இந்தியா மட்டுமே. நக்சலைட்டுகள் தேச விரோதிகள் அல்லர். அவர்கள் தேச பக்தர்கள் என்று இந்திய உச்ச நீதிமன்றமே தெரிவித்திருக்கிறது. ஆனால் இந்திய அரசோ நக்சலைட்டுகளை ஒழிப்பதாக கூறிக்கொண்டு அப்பாவி மக்கள் மீது யுத்தம் நடத்துகிறது. ஏழை மக்களின் அபிவிருத்திக்கு பணம் ஒதுக்க மறுக்கும் இந்திய அரசு, அந்த ஏழை மக்களை ஒழிப்பதற்காக படைகளை உருவாக்க பணம் ஒதுக்கிறது . இந்த அநியாயத்தை இன்னும் எத்தனை நாளைக்கு இந்திய மக்கள் அனுமதிக்கப் போகின்றார்கள்? இந்த அவலத்திற்கு எப்போது இந்திய மக்கள் முடிவு கட்டப் போகிறார்கள்?

1993ல் தன் கட்சிக்காரர் பசுபதி பாண்டியனை

1993ல் தன் கட்சிக்காரர் பசுபதி பாண்டியனை விடுதலை செய்யக்கோரி டாக்டர் ராமதாஸ் அவர்கள் சாலை மறியல் போராட்டம் செய்தார். அதனால் அப்போதைய முதல்வர் ஜெயா அம்மையார் ராமதாஸ் அவர்களை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தார். அப்போது அச் சிறையில் இருந்த எனக்கு ராமதாஸ் அவர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிட்டியது. அந்நேரம் திமுக கட்சியில் இருந்து வைகோ விலகியிருந்தார். அவர் சிறைக்கு வந்து ராமதாஸ் அவர்களிடம் நேரிடையாக ஆதரவு கேட்டார் வைகோ விற்கு ஆதரவு கொடுக்கலாமே என்று நான் கேட்டதற்கு ராமதாஸ் அவர்கள் “எதற்கு இனனொரு கலைஞர்?”என்று கேட்டார். அப்போது அவர் அப்படி கேட்டது எனக்கு புரியவில்லை. ஆனால் இப்போது நன்றாக புரிகிறது. எனது ஆச்சரியம் என்னவெனில் இதை ராமதாஸ் அவர்கள் எப்படி அன்றே கணித்தார்?

ரணில் பதவிக்கு வந்து ஓராண்டு முடிந்துவிட்டது.

ரணில் பதவிக்கு வந்து ஓராண்டு முடிந்துவிட்டது. ரணிலை மாற்றியதாலும் எந்த பயனும் இல்லை என்பதை சிங்கள மக்கள் உணர ஆரம்பித்துவிட்டனர். ஆனால் எமது தமிழ் தலைவர்கள்தான் வழக்கம்போல் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் ஓடிப் போவதும் பின்னர் ஏமாற்றிவிட்டார்கள் என ஒப்பாரி வைப்பதுமாக இருக்கிறார்கள். ஜனாதிபதிகளை மாற்றுவதால் எந்தப் பிரச்சனையும் தீரப்போவதில்லை. தேவை முக மாற்றம் இல்லை. அமைப்பு மாற்றம். தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்காவிடின் சிங்கள மக்கள் ஒருபோதும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது என்பதை சிங்கள மக்களுக்கு உணர வைக்கும் தலைமை தேவை.

காலில் மிதிபடும் புழுகூட

காலில் மிதிபடும் புழுகூட எப்படி துடித்து எழுகிறது? ஏனெனில் அதற்கு யாரும் “நீ புழுதானே. நீ துடித்து எழுக்கூடாது” என்று போதிப்பதில்லை பட்ட அறுகம்புல்கூட சிறு துளி நீர் கண்டதும் எப்படி துளிர்த்து எழுகிறது? ஏனெனில் அதனிடம் யாரும் “நீ பட்டுப் போய்விட்டாய். எனவே இனி உன்னால் துளிர்க்க முடியாது” என்று கூறுவதில்லை. ஆனால் தமிழன் மட்டும் மீண்டும் எழுவேன் என்றதும் ஓடி வந்து சிலர் “ இதுவரை எழுந்து நின்று அழிந்தது போதாதா?” என்று கேட்கின்றனர். இன்னும் சிலர் “இந்தியாவை மீறி தமிழனால் ஒருபோதும் எழ முடியாது” என்கிறார்கள். அப்படியென்றால், 100 வருடம் ஆண்ட போர்த்துக்கேயருக்கு எதிராக எப்படி எழுந்து நிற்க முடிந்தது? 100 வருடம் ஆண்ட ஒல்லாந்தருக்கு எதிராக எப்படி எழுந்து நிற்க முடிந்தது? 150 வருடம் ஆண்ட ஆங்கிலேயருக்கு எதிராக எப்படி எழுந்து நிற்க முடிந்தது? இப்படி காலம் பூராவும் வீழ்ந்த போதெல்லாம் எப்படி தமிழனால் எழுந்து நிற்க முடிந்தது? ஏனெனில், அப்போது சொகுசுமாளிகையில் இருந்துகொண்டு அடுத்த தீபாவளிக்கு தீர்வு வரும் என் கூறும் தலைவர் இருக்கவில்லை அப்போது இந்தியா தீர்வு பெற்று தரும் எனக் கூறி கடிதம் எழுதும் தலைவர்கள் இருக்கவில்லை அப்போது அண்ணாமலையை அழைத்து உறவுப்பாலம் கட்டும் புலம்பெயர் அமைப்புகள் இருக்கவில்லை. அதனால்தான் அப்போது தமிழனால் எழுந்து நிற்க முடிந்தது. எனவே மீண்டும் எழுந்து நிற்க வேண்டும் என்றால், "தமிழா நீ வீரம் செறிந்த போராட்ட வரலாற்றின் சொந்தக்காரன். இப்படி அடிமையாக வீழ்ந்து கிடக்கலாமா?” என கேட்கும் ஒரு தலைவர் தேவை.

மரங்கள் ஓய்வை விரும்பினாலும்

மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை கரைகள் அமைதியை விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை மக்கள் அமைதியை விரும்பினாலும் ஆட்சியாளர்கள் விடுவதில்லை. -மாவோ

அவுஸ்திரேலியாவில் ஈழத் தமிழரான சங்கரி சந்திரன்

அவுஸ்திரேலியாவில் ஈழத் தமிழரான சங்கரி சந்திரன் தனது 'சாய் டைம் அட் சினமன் கார்டன்ஸ்” நாவலுக்காக 60,000 டொலர் மதிப்புள்ள மைல்ஸ் பிராங்க்ளின் இலக்கிய விருதை வென்றுள்ளார். அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்

கனடாவிற்கு அகதியாக சென்ற

கனடாவிற்கு அகதியாக சென்ற ஈழத் தமிழர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் இன்று அமைச்சராகியுள்ளார். அவருக்கு எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும். இந்தியாவுக்கு அகதியாக சென்ற ஈழத் தமிழர் 40 வருடமாகியும் குடியுரிமைகூட பெற முடியவில்லை. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் தன்னை நம்பிவந்த தொப்புள்கொடி உறவுகளை வாழ வைக்குமா? நம்பிக்கையுடன் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

1994ம் ஆண்டு சேலத்தில் கல்வி அமைச்சரை

1994ம் ஆண்டு சேலத்தில் கல்வி அமைச்சரை வரவேற்க வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் வெயில் கொடுமை காரணமாக மயங்கி விழுந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது தினமணி பத்திரிகையின் ஆசிரியராக இருந்த மாலன் “அரசியல்வாதிகளின் நிகழ்வில் மாணவர்களை பயன்படுத்துவது சரியா?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரைப் போட்டி அறிவித்தார். அப்போது துறையூர் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நான் இப் போட்டிக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். எனது கட்டுரை முதலாவது பரிசைப் பெற்றது. அக் கட்டுரை தினமணி இதழிலும் பிரசுரம் செய்யப்பட்டது. பரிசுத்தொகையான 500 ரூபா விரைவில் எனக்கு அனுப்பி வைக்கப்படும் என மாலன் குறிப்பிட்டிருந்தார். இதையறிந்த கியூ பிரிவு டிஎஸ்பி அதிகாரி இனி நான் எழுதக்கூடாது என்று தடைவிதித்தார். அதுமட்டுமல்ல பரிசுத்தொகையும் எனக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் அவுஸ்ரேலியா சென்ற ஈழத் தமிழர் சங்கரி சந்திரன் அங்கு எழுத அனுமதிக்கப்பட்டது மட்டுமன்றி 60000 டொலர் பெறுமதியான பரிசும் பெற்றிருப்பது உண்மையில் மகிழ்ச்சி தருகிறது.

ஓடாத மானும்

ஓடாத மானும் போராடாத இனமும் வாழ முடியாது !

நிருபர் - திருவாளர் நாய் அவர்களே!

நிருபர் - திருவாளர் நாய் அவர்களே! துப்பாக்கி இல்லாத பொலிஸ் என்று விக்கி ஐயா கூறியது பற்றி தங்கள் கருத்து என்ன? நாய் - துப்பாக்கி இல்லாமல் வந்தால் நான்கூட பயப்பட மாட்டேன். மனுசன் எப்படி பயப்படுவான்? அது சரி ஐயாவுக்கு துப்பாக்கி ஏந்திய சிங்கள பொலிஸ் பாதுகாப்பு. தமிழருக்கு வெறும் பொலிஸா? 😂😂

மணிப்பூர் பெண்கள் மீது இரக்கம் காட்டும்

மணிப்பூர் பெண்கள் மீது இரக்கம் காட்டும் திராவிட முதல்வர் இந்த ஈழத் தாயின் மீது ஏன் இரக்கம் காட்ட மறுக்கிறார்? உச்சநீதிமன்றம் விடுதலை செய்தும் தாயகம் திரும்ப விரும்பும் சாந்தனை அனுமதிக்காமல் ஏன் அடைத்து வைத்திருக்கிறார்? அண்ணாமலையை அழைத்து பாலம் கட்டும் புலம்பெயர் அமைப்புகள் சாந்தன் விடுதலைக்கு குரல் கொடுக்க தயங்குவது ஏன்? தான் இறப்பதற்குள் தன் மகனை ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என 33வருடமாக ஏங்கும் இந்த தாயின் விருப்பம் எப்போது நிறைவேறும்?

இராஜசுந்தரம் அவர்கள் ஒரு டாக்டர்.

இராஜசுந்தரம் அவர்கள் ஒரு டாக்டர். அவருடைய மனைவியும் ஒரு டாக்டர். இவரும் விரும்பியிருந்தால் ஏதாவது ஒரு வெளிநாட்டிற்கு சென்று சந்தோசமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் இராஜசுந்தரம் அவர்கள் காந்தியின் அகிம்சை கொள்கைகளில் நம்பிக்கை வைத்து காந்தியம் என்னும் அமைப்பை நிறுவி அதனூடாக மக்களுக்கு சேவை செய்தார். சுமார் 5000ற்கு மேற்பட்ட மலையக தமிழ் மக்களை வடக்கு கிழக்கில் குடியேற்றினார். ஆனால் சிங்கள அரசு அவரை பயங்கரவாதி என முத்திரை குத்தி சிறையில் அடைத்தது 1983ம் ஆண்டு யூலை மாதம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை சிங்கள அரசு ஏவிவிட்ட காடையர் கொல்ல முயன்ற போது ராஜசுந்தரம் அவர்களுடன் அகிம்சை வழியில் பேச முயன்றார். அதற்கு அவர்கள் கொடுத்த பதில் இராஜசுந்தரத்தையே கொலை செய்து விட்டார்கள். காந்தியத்தை போதித்தவரை பயங்கரவாதி என்று கைது செய்து அடைத்தது மட்டுமன்றி அவரை சிறையில் கொலையும் செய்தது சிங்கள அரசு. கடவுள் புத்தரே வந்து தமிழருக்காக நியாயம் பேச முயன்றால் அவரையும் கொலை செய்வார்கள் இந்த வெறியர்கள். இவர்களின் இந்த வெறித்தனம் இன்றும் கொஞ்சம்கூட மாறவில்லை ஆனால் நம்மவர் சிலர் இவர்களிடமிருந்து அகிம்சை வழியில் தீர்வு பெறலாம் என கூறுகின்றனர். என்னே கொடுமை இது?

காந்தியம் என்ற அமைப்பை உருவாக்கி

காந்தியம் என்ற அமைப்பை உருவாக்கி டாக்டர் இராஜசுந்தரம் அவர்களுடன் சேர்ந்து தமிழ் மக்களுக்கு தொண்டாற்றிய இன்னொருவர் டேவிட் ஐயா. டேவிட் ஐயா அவர்களையும் பயங்கரவாதி என்று முத்திரை குத்தி வெலிக்கடை சிறையில் அடைத்தது சிங்கள அரசு. வெலிக்கடை சிறைப்படுகொலையில் உயிர் தப்பிய டேவிட் ஐயா அவர்கள் இந்தியா சென்று தங்கினார். இந்தியாவில் தமிழக காவல்துறையும் அவர் பெயரை பயங்கரவாதி லிஸ்ட்டில் வைத்திருந்தது. 91வது வயதிலும் அவர் கியூ பிரிவு பொலிசாரின் கண்காணிப்பிலேயே இருந்தார். காந்தியவாதியான டேவிட் ஐயா காந்திதேசம் என்று அழைக்கப்படும் இந்தியாவிலும் பயங்கரவாதியாக வைத்திருந்ததை என்னவென்று அழைப்பது? தன்வாழ்நாள் முழுவதும் தமிழ் இனத்திற்காக அயராது இயங்கிய டேவிட் அய்யா அவர்கள் 11.10.2015 யன்று தனது 91வது வயதில் இயக்கத்தை நிறுத்திக்கொண்டார். அவர் தனக்காக எந்த சொத்தும் சேர்க்கவில்லை. மாறாக தனது சொத்தை எல்லாம் தமிழ் இனத்திற்காக செலவு செய்தார். அவர் தனக்கு எந்த பதவியையும் தேடிக்கொள்ளவில்லை. மாறாக தமிழ் இனத்திற்காக தனது உழைப்பையெல்லாம் கொடுத்தார். அவர் தனது இனத்திற்கு ஒருபோதும் துரோகம் இழைத்தவர் அல்லர். மாறாக தமிழ் இனத்திற்காக தன்னையே தியாகம் செய்தவர். அவர் கொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தால் பதவிகளைப் பெற்றிருக்கலாம். சொகுசாக வாழ்ந்திருக்கலாம். எந்த நெருக்கடியிலும் அவர் தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்கவில்லை. அவர் மீது மதிப்பு வைத்திருந்தவர்கள் பலர் புலம்பெயர்ந்த நாடுகளில் வசதியாக இருக்கின்றனர். அவர் விரும்பியிருந்தால் அவர்களிடம் உதவி பெற்று வசதியாக வாழ்ந்திருக்கமுடியும். அவர் இறுதிவரை எளிமையாக வாழ்ந்து மடிந்தார். அவருடைய தியாகம் ஒருபோதும் வீண்போகாது. வரலாறு அவரை நிச்சயம் நினைவில் கொள்ளும்.

நண்பர் தின வாழ்த்துகள்!

நண்பர் தின வாழ்த்துகள்! பொதுவாக பலரும் உடைந்துபோகும் இடம் சிறைச்சாலை. ஆனால் நான் எட்டு வருடம் சிறை வாழ்க்கையை அனுபவித்தபோதும் உறுதி குலையாமல் இருந்தமைக்கு முக்கிய காரணம் நண்பர்களின் உதவியாகும். சிலர் என்னுடன் பேசும்போது “எப்படி உங்களால் இத்தனை காலமும் அர்ப்பணிப்புடன் செயற்பட முடிகிறது?” என ஆச்சரியத்துடன் கேட்பார்கள். நான் அவர்களுக்கு கூறுவது “ இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. எனக்கு கிடைத்ததுபோல் நண்பர்கள் உங்களுக்கு கிடைத்திருந்தால் நீங்கள் என்னைவிட அதிகமாக செயற்பட்டிருப்பீர்கள்”. என்று. இது உண்மைதான். எனது பலமும் நண்பர்கள்தான். அதேவேளை எனது பலவீனமும் நண்பர்கள்தான். என்னுடன் ஒன்றாக பழகிய நண்பர்கள் சிலர் இறந்து விட்டார்கள். ஆனாலும் நான் தொடர்ந்தும் புரட்சிகர அரசியலில் உறுதியாக பயணிப்பதற்கு பெரிதும் துணை புரிவது அவர்களுடனான நினைவுகளே. நாம் எமது வாழ்வில் விரும்பியளவு பணத்தை சம்பாதித்துவிட முடியும். நாம் எம் வாழ்வில் விரும்பியளவு கல்வி கற்றுவிட முடியும். ஆனால் விரும்பியளவு நண்பர்களை இலகுவில் நாம் பெற்றுவிட முடியாது. இன்று பொதுவாக எல்லோரும் என்னை “தோழர்” என்றே அழைப்பார்கள். ஆனால் எனது ஊர் நண்பர்கள் மட்டும் இப்போதும் என்னை “அண்ணை” என்றே உரிமையுடன் அழைப்பார்கள். பொதுவாக இந்த உலகில் சிறந்த நட்புக்கு மார்க்ஸ் எங்கெல்ஸ் நட்பையே உதாரணமாக கூறுவார்கள். அப்படி ஒரு நட்பு தம் வாழ்வில் கிடைக்க வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் ஆசையாக இருக்கும். என் இனிய நண்பர்கள் அனைவருக்கும் “வாழ்த்துகள்”

வெலிக்கடை சிறையில் பலத்த காவலில்

வெலிக்கடை சிறையில் பலத்த காவலில் வைக்கப்பட்டிருந்த குட்டிமணியை சிங்கள அரசு ஏவிவிட்ட காடையர்கள் அடித்துக் கொன்றார்கள். கொன்றது மாத்திரமின்றி அவருடைய கண்களை தோண்டி எடுத்து புத்தர் காலடியில் போட்டார்கள். புத்தர் கண்களில் இருந்து (ரத்தக்)கண்ணீர் சிந்தியது. பாவம் புத்தர். அவரால் அன்பை போதிக்க மட்டும்தானே முடியும்?

மராட்டிய நடிகர் ரஜனி அவர்கள்

மராட்டிய நடிகர் ரஜனி அவர்கள் ஈழத் தமிழருக்காக இதுவரை குரல் கொடுத்ததில்லை. தன்னை வாழ வைக்கும் தமிழ்நாட்டு தமிழர்களுக்குகூட அவர் எதுவும் செய்ததில்லை. இந்நிலையில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கி ஐயா இந்தியா சென்றபோது நடிகர் ரஜனி அவர்களை எதற்காக சந்தித்தார்? யாராவது விபரம் அறிந்தவர்கள் கூறுங்களேன் பிளீஸ் குறிப்பு – விக்கினேஸ்வரன் நமக்கு கிடைத்த தலாய்லாமாக பார்க்க வேண்டும் என அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசு கூறியிருந்தார். எனவேதான் நம்ம ஈழத்து தலாய்லாமா ஏன் ரஜனியை சந்தித்தார் என்பதை அறிய ஆவலாக உள்ளது.

Saturday, July 15, 2023

1960களில் இலங்கையில் தோழர் சண்முகதாசன்

1960களில் இலங்கையில் தோழர் சண்முகதாசன் தலைமையிலான கம்யுனிஸ் கட்சியினர் “அடிக்கு அடி” என்னும் புரட்சிகர தத்துவத்தை முன்வைத்து சாதீய தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தனர். அதனால் இன்றுவரை பெரியாரியம் மற்றும் அம்பேத்காரியம் போன்ற சீர்திருத்த தத்துவங்கள் இலங்கையில் வேரூன்ற முடியவில்லை. தென்னிந்திய சினிமாவில் மாரி செல்வராஜ் அவர்கள் தன் படங்களில் இந்த “அடிக்கு அடி” என்னும் தத்துவத்தை சரியாகவே காட்டி வருகிறார். அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

ஊழல் வழக்கில் பொலிசார்

ஊழல் வழக்கில் பொலிசார் கைது செய்ய சென்றபோது “ஐயோ என்னை கொல்லப் பார்க்கிறாங்க. காப்பாத்துங்க” என்று கலைஞர் அலறிய நாள் இன்று. கதை வசனம் எழுதித்தான் சம்பாதித்த சொத்து என்றால் எதற்கு அலற வேண்டும்? தைரியமாக பொலிசாரை சந்தித்திருக்கலாமே? தன்னை தமிழின தலைவர் என்றவர் ஊழல் வழக்கில் பொலிசார் கைது செய்தபோது தன்னைக் கொல்லப்பார்க்கிறாங்க காப்பாத்துங்க என்று அலறினார். ஆனால் மரணத் தறுவாயில் தியாகி சிவகுமார் கடைசியாக கூறிய வரிகள்” மீண்டும் தமிழனாக பிறந்து போராட விரும்புகிறேன்” இப்போது கூறுங்கள் யார் தமிழின தலைவர்?

1983 யூலை படுகொலைகளுக்கு புலிகள் காரணமா?

• 1983 யூலை படுகொலைகளுக்கு புலிகள் காரணமா? முதலாவது, 1983ல் நடந்தது இனக் கலவரம் என்கிறார்கள். அது தவறு. அது இலங்கை அரசு நடத்திய இனப் படுகொலை இரண்டாவது, 1983ல் நடந்த கொலைகளுக்கு புலிகளே காரணம் என்கிறார்கள். புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 13 ராணுவத்தினர் இறந்தமையினால் இது நிகழ்ந்தது என்கிறார்கள். இதுவும் தவறு. ஏனெனில், (அ)1956, 1966, 1977 ம் ஆணடுகளில்கூட கலவரம் என்னும் பெயரில் தமிழ் இனப்படுகொலைகள் நடந்தன. அப்போது புலிகள் இயக்கம் இருக்கவில்லை. எந்த ராணுவத்தினரும் கொல்லப்படவில்லை. (ஆ)1983 யூலைக்கு முன்னரும் பல பொலிசார் மற்றும் ராணுவத்தினர் புலிகள் இயக்கத்தாலும் வேறு இயக்கங்களாலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். (இ)அதற்கு முன்னர் 13 ராணுவத்தினர் ஒரேயடியாக கொல்லப்படவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார்கள். அப்படியென்றால் பின்னர் ஆயிரக் கணக்கில் ராணுவத்தினர் கொல்லப்ட்டார்களே. அப்போது ஏன் கலவரம் வெடிக்கவில்லை? •1983 யூலை இனக் கலவரம் எமக்கு கற்று தரும் பாடம் என்ன? எமக்கு பல பாடங்களை அது கற்று தந்தாலும் அவற்றில் மிக முக்கியமானது 1983ற்கு பின்னர் இனக் கலவரம் நடக்கவில்லை. ஏனெனில் தமிழ் போராளிகள் கையில் ஆயுதம் இருந்ததே. இனியும் கலவரம் வந்தால் மீண்டும் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற அச்சம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏந்தினால் அது முன்பைவிட பயங்கரமாக இருக்கும் என்பதையும் அது புரிந்துள்ளது

தோழர் சண் அவர்களின் 103வது பிறந்ததினம்!

தோழர் சண் அவர்களின் 103வது பிறந்ததினம்! இன்று தோழர் சண்முகதாசன் அவர்களின் 103 பிறந்த தினம் ஆகும் (03.07.1920 – 03.07.2023) தோழர் சண் அவர்கள் தமிழ் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். இலங்கையில் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மூவின மக்களின் மதிப்பை பெற்றிருந்த தமிழ் தலைவர் அவர் அதுமட்டுமல்ல சர்வதேசத்திலும் மதிப்பு பெற்றிருந்த இலங்கைத் தமிழ்த் தலைவர் அவர். மாசேதுங் சிந்தனைகளை இலங்கையில் அறிமுகப்படுத்தியதுடன் இறுதிவரை கொள்கை மாறாது செயற்பட்ட புரட்சியாளர் அவர். இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடியதற்குரிய அரசியலை வழங்கியவர் அவரே. அதனாலேயே அனைத்து ஆயுத பிரிவு போராளிகளின் தலைமைகளும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். அவர் தமிழீழ கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை அவர் பகிரங்கமாக ஆதரித்தார். ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களை ஜே.ஆர் ஜெயவர்தனா “பயங்கரவாதிகள்” என்றார். அமிர்தலிங்கம் “பொடியன்கள்”என்றார். ஆனால் சண்முகதாசன் மட்டுமே முதன் முதலாக அவர்களை “போராளிகள்”என்று அழைத்தார். அதுவும் சிறிமாவோ பண்டாரநாயக்கா, அமிர்தலிங்கம், என்எம் பெரோரா, கொல்வின் ஆர்டி சில்வா போன்ற தலைவர்கள் இருந்த மேடையில் இவ்வாறு கூறினார். அதனால்தான் தமிழ் போராளிகளின் தலைவர்களும் அவர் மீது மதிப்பு கொண்டதுடன் அவரை அடிக்கடி சந்தித்து ஆலோசனைகள் பெற்று வந்தார்கள். இறுதியாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தபோது அவரது மகள் அவரை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்று தன்னுடன் வைத்திருந்தார். இங்கிலாந்திலும் அவர் சும்மா இருக்கவில்லை. பல சர்வதேச புரட்கர சக்திகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி சர்வதேச அகிலம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். எனினும் இங்கிலாந்தில் அவர் ஓரிரு வருடங்களே உயிர் வாழ்ந்தார். இறுதியாக 08.02.1993 யன்று தனது 73வது வயதில் அவர் உயிர் பிரிந்தது. அவருடன் அவருடைய இறுதிக்காலங்களில் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தமை எனக்கு மதிப்பு மிக்க அனுபவத்தை தந்தது. அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் எழுதிய “ ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள்” என்னும் தமிழ் நூல் பதிப்பை நானே முதலில் வெளியிட்டிருந்தேன். அவரை நினைவு கூர்வது என்பது அவர் காட்டிய பாதையில் சென்று அவர் விரும்பிய புரட்சியை மேற்கொள்வதே ஆகும். குறிப்பு- தோழர் சண் பற்றி அறிய விரும்புவோர் கீழ்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை பார்க்கவும். https://www.youtube.com/watch?v=hJSV6g_qf4k&t=2s

இந்த பொருளாதார நெருக்கடியிலும்

இந்த பொருளாதார நெருக்கடியிலும் ஒருபுறம் நாடு நாடாக ஓடி ஓடி பிச்சை எடுத்துக்கொண்டு மறுபுறம் வடக்கு கிழக்கு தமிழர் நிலங்களில் புத்தவிகாரை கட்டுகின்றது சிங்கள அரசு. மகிந்தா வந்தால் என்ன, ரணில் வந்தால் என்ன, யார் ஜனாதிபதியாக வந்தாலும் சிங்கள பௌத்த மேலாதிக்கம் மட்டும் மாறுவதில்லை. இதற்கு எதிராக மக்களை திரட்டி போராட வேண்டிய எம் தலைவர்களோ இந்திய அரசுக்கு கடிதம் எழுதுவதிலேயே காலத்தைக் கழிக்கின்றனர். அந்த இந்திய அரசின் ஆதரவுடனும் உதவியுடனும்தான் இந்த தமிழின அழிப்பை சிங்கள அரசு மேற்கொள்கின்றது என்பதை நன்கு தெரிந்தும் தொடர்ந்தும் கடிதம் எழுதுவதையே போராட்டமாக நினைக்கின்றனர். ஆனால் இந்திய அரசோ கடிதம் கிடைத்தது என்றுகூடப் பதில் தருவதில்லை. அந்தளவு இறுமாப்புடன் அது நடந்து கொள்கிறது. அதாவது இந்த நாய்களை(தமிழ் தலைவர்களை) எவ்வளவுதான் எட்டி உதைத்தாலும் தொடர்ந்தும் காலடியில் கிடந்து விசுவாசமாக வாலாட்டும் என இந்திய அரசு நன்கு தெரிந்து வைத்துள்ளது. சிலர் கேட்கிறார்கள் “ சிஙகள நிலத்தில் பல இந்துக் கோயில்கள் இருக்கும்போது தமிழர் நிலத்தில் புத்த விகாரை இருந்தால் என்ன தவறு ? என்று. சிங்களவர்கள் பெரும்பான்மையினர். அவர்கள் மத்தியில் எத்தனை இந்துக் கோவில்கள் இருந்தாலும் அவர்களுக்கு பாதிப்பு இல்லை. ஆனால் தமிழர் சிறுபான்மையினர். தமிழர் நிலத்தில் கட்டப்படும் புத்த விகாரைகள் தமிழின அழிப்பை நோக்கமாக கொண்டவை.

1995ம் ஆண்டு நான் துறையூர் சிறப்புமுகாமில்

1995ம் ஆண்டு நான் துறையூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்தவேளை அச் செய்தி அறிய கிடைத்தது. அப்துல் ரவூப் என்ற இளைஞர் தன் 23வயதில் ஈழத் தமிழருக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி. ராஜீவ் காந்தி கொலைக்கு பின்னர் தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவு இல்லை என்று இந்தியஅரசு கட்டமைத்து வைத்திருந்த விம்பத்தை அச் செய்தி சுக்குநூறாக உடைத் தெறிந்தது. அதைவிட ஆச்சரியம் என்னவெனில் “பணம் தரலாம் உங்கள் மகன் காதல் தோல்வியில் தற்கொலை செய்துகொண்டான் என்று கூறுங்கள்” என்று தமிழக அரசு மிரட்டியும் ரவூப் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. அப்துல் ரவூப் உயிருடன் இருந்திருந்தால் இன்று தன் 51வது பிறந்தநாளைக் குடும்பத்துடன் கொண்டாடியிருப்பார். அப்துல் ரவூப்பை தொடர்ந்து இதுவரை 17 தமிழக தமிழர்கள் ஈழத் தமிழருக்காக உயிர் துறந்துள்ளார்கள். ஆனாலும் தமிழின படுகொலையை அவர்களால் நிறுத்த முடியவில்லை. ஏனெனில் அரசுக்கு எவ்வித சேதம் தராத தற்கொலைகள் குறித்து அரசு ஒருபோதும் கவலை கொள்வதில்லை. அதுமட்டுமல்ல முக்கியமாக தமிழக தமிழர்களை ஆள்பவர்கள் தமிழரில்லை அல்லது தமிழின உணர்வு அற்றவர்கள்.

அலறியடித்து ஓடிக்கொண்டிருந்த பசுவை

அலறியடித்து ஓடிக்கொண்டிருந்த பசுவை தடுத்த யானை “ஏன் இத்தனை பயத்துடன் ஓடுகிறாய்?” எனக் கேட்டது. காட்டில் உள்ள எல்லா எருமை மாடுகளையும் பிடிக்க அரசாங்கம் உத்தரவு போட்டிருக்கிறது” என்றது பசு. “நீ பசுதானே. அப்புறம் நீ ஏன் ஓடுகிறாய்?” என்று யானை ஆச்சரியத்துடன் கேட்டது. “நான் பசு என்கிறது எனக்கு தெரியும். ஆனால் என்னை அரசாங்கம் பிடிச்சுதுன்னா நான் எருமையில்லை பசுன்னு நிரூபிக்க முடியாமல் காலம்பூராவும் சிறையில் இருக்க வேண்டுமே” என்றது பசு. இப்போது பசுவுடன் சேர்ந்து யானையும் ஓடியது. மேலே கூறியது காட்டில் நடந்த கதை. இனி நாட்டில் நடக்கும் ஒரு கதையை பார்ப்போம். அலறியடித்து ஓடிக்கொண்டிருந்த அகதி இளைஞன் ஒருவனைத் தடுத்த தாத்தா ஒருவர் “ஏன் இத்தனை பயத்துடன் ஓடுகிறாய்?” எனக் கேட்டார். “புலி பிடிக்க கியூ பிராஞ் பொலிஸ் வருகிறது. அதுதான் பயத்தில் ஓடுகிறேன்” என்றான் அந்த அகதி இளைஞன். “நீ அகதிதானே. நீ எதற்கு ஓடுகிறாய்?”என்று ஆச்சரியத்துடன் அந்த பெரியவர் கேட்டார். அதற்கு அந்த இளைஞன் “ நான் அகதிதான். புலி இல்லை என்று எனக்கு தெரியும். ஆனால் என்னை புலி என்று கியூ பிராஞ் சிறப்புமுகாமில் அடைத்தால் அப்புறம் நான் வெளியில் வரமுடியாதே” என்றான். இப்போது அந்த பெரியவரும் இளைஞனுடன் சேர்ந்து ஓடினார். குறிப்பு – சிறையில் கூட இத்தனை வருடம் தண்டனை என்று குறிப்பிட்டு அடைப்பதால் எப்போது விடுதலை என்பது தெரியும். ஆனால் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டால் எப்போது விடுதலை என்பதும் தெரியாது. சிறையைவிடக் கொடியது சிறப்புமுகாம்.

காற்சட்டை போட்ட 300 பாய்ஸ்

காற்சட்டை போட்ட 300 பாய்ஸ் என்று இந்திய தூதர் டிக்சிற் கிண்டலாக கூறினார். அவர்களோ இந்திய டாங்கியை கவிழ்த்து போட்டுவிட்டு சிரிப்பை பதிலாக கொடுத்தனர்

போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள். சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டவர்கள் விடுதலை பெற வழி பிறக்கட்டும். இனியாவது அண்ணாமலையை அழைத்து லண்டனில் பாலம் கட்டுவோர் இந்த சிறப்புமுகாம் அகதிகளுக்கு குரல் கொடுக்கட்டும். ஓடி ஓடி ஈழத் தமிழர் மத்தியில் கலைஞர் பிறந்தநாள் கொண்டாடுவோரும் தமது தலைவர் ஸ்டாலினிடம் கூறி சிறப்புமுகாம் அகதிகள் விடுதலை பெற வழி செய்யட்டும்.

இந்த "இந்து"தான் இந்தியா என்றால்

இந்த "இந்து"தான் இந்தியா என்றால் அந்த வீசும் காற்றில் விஷம் பரவட்டும்

ஜீ தமிழ் தொலைக்காட்சி

ஜீ தமிழ் தொலைக்காட்சி "சரிகமப" நிகழ்வில் ஈழத் தமிழ் சிறுமி கில்மிஷா தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் பைனலில் இடம்பெறுவார் என நடுவர்களால் பாராட்டப்பட்டுள்ளமை நம்பிக்கையளிக்கிறது. கில்மிஷா வெற்றிபெற வாழ்த்துக்கள்.

தன்னை நம்பிய மலையக தமிழ் மக்களுக்கு

தன்னை நம்பிய மலையக தமிழ் மக்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வாங்கிக்கொடுக்க வக்கில்லை. வடக்கு கிழக்கில் தமிழர் நிலங்களில் கட்டப்படும் புத்த விகாரைகளை தடுக்க தைரியம் இல்லை இந்து ஆலயங்களை இடித்துவிட்டு புத்தர் சிலைகள் நிறுவதைக்கூட இந்தியா மூலம் நிறுத்த முயலவில்லை. இந்த லட்சணத்தில் இந்தியா சென்று ஆந்திர முதல்வரிடம் பெருமாள் கோவில் கேட்கிறாராம் இந்த கிழக்கு ஆளுனர். அதுமட்டுமல்ல கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தால் கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாடப் போகிறாராம். என்ன நோக்கத்திற்காக ஜனாதிபதி ரணில் இவரை ஆளுநராக நியமித்தாரோ அந்த நோக்கத்தை நன்றாக நிறைவேற்றுகிறார். காடுகளில் உள்ள மரங்கள் அழிந்துகொண்டே வந்தன. ஆனால் மரங்களோ தம்மை வெட்டும் கோடரிகளை தொடர்ந்தும் நம்பின. ஏனெனில் மரத்தினால் செய்யப்பட்ட தன் கைப்பிடியைக் காட்டி நானும் உங்களில் ஒருவன்தான் என கோடரி கூறியதை மரங்கள் முழுமையாக நம்பின. ஆளுனர் செந்தில் தொண்டமானும் தங்களில் ஒருவன் (தமிழன்)என மலையக தமிழர் மட்டுமல்ல வடக்கு கிழக்கு தமிழரும் நம்புகின்றனர்.

ஈழத் தமிழர்களும் தமிழ்நாட்டு

ஈழத் தமிழர்களும் தமிழ்நாட்டு தமிழர்களும் சேர்ந்து பயணித்தல் என்ற அடுத்த கட்டத்தை நோக்கி நகருகின்றனர் என்பதே சிங்கள அரசு மற்றும் இந்திய அரசுக்கு மட்டுமல்ல திராவிடத்திற்கும் தற்போது அச்சத்தைக் கொடுக்கின்றது. எனவேதான் உலக தமிழர் ஒற்றுமையை குழப்ப இவை முயலுகின்றன

காலம் எத்தனை அற்புதமானது

காலம் எத்தனை அற்புதமானது அது எத்தனையோ பாடங்களை கற்றுக்கொடுத்துவிட்டே கடந்து செல்கிறது எத்தனையோ பேரை காணாமல் ஆக்கியவர் இன்று அவரே காணாமல் போய்விட்டார்!

நமது செயல்கள் மௌனமாய்

"நமது செயல்கள் மௌனமாய் வாழ்ந்துகொண்டிருந்தாலும் நிரந்தரமாய் என்றென்றும் பயனளித்துக்கொண்டிருக்கும். நமது சாம்பலின் மீது உன்னதமானவர்களின் கண்ணீர்த் துளிகள் சூடாய் வந்து விழும்" - காரல் மாக்ஸ்

நோகாமல் நுங்கு தின்ன ஆசைப்படும்

•நோகாமல் நுங்கு தின்ன ஆசைப்படும் தமிழ் தலைவர்கள் 13ஐ அமுல்படுத்துமாறு முதலில் இந்தியாவுக்கு கடிதம் எழுதினார்கள். இப்போது சர்வதேசம் ஒருமித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கனடாவிடம் கேட்டுள்ளனர். தீர்வுக்காக இவர்கள் ஒன்று சேர மாட்டார்கள். பல பிரிவுகளாக பிரிந்து நிற்கிறார்கள். ஆனால் சர்வதேசம் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என்று எந்த முகத்துடன் கேட்கின்றனர்? சர்வதேசம் இதுவரை எந்தவொரு நாட்டுப் பிரச்சனைக்கும் ஒருமித்து அழுத்தம் கொடுக்கவில்லை என்பதுகூட இவர்கள் அறியவில்லையா? இரந்து கேட்பதற்கு உரிமை ஒன்றும் பிச்சை அல்ல. அது போராடிப் பெறுவது. ஆனால் இவர்கள் போராடாமல் தீர்வு பெற்றுவிட முடியும் என நம்புகிறார்களே?

மன்னாரில் எண்ணெய்வளம்

மன்னாரில் எண்ணெய்வளம் பலாலி விமானநிலையம் காங்கேசன் துறைமுகம் மற்றும் சீமெந்து தொழிற்சாலை திருமலை எண்ணெய் குதங்கள் சம்பூரில் 500 ஏக்கர் நிலம் மற்றும் அனல் மின்சார நிலையம் பூநகரி காற்றாலை புல்மோட்டை இல்மனைற் கனிமவளம் திக்கம் வடிசாராய ஆலை இத்தனையும் இந்தியாவுக்கு வழங்கியபோது வாய் பொத்திக்கொண்டு மௌனமாக இருந்தவர்கள் நயினாமடு சீனித் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த நயினாமடு சீனித் தொழிற்சாலை மூலம் சீனா வருகின்றது. எனவே இந்தியாவுக்காக எதிர்ப்பதாக இவர்கள் கூறுகின்றனர். இலங்கையில் சீன முதலீடுகள் குறித்து இந்தியாவே அக்கறைப்படவில்லை. அப்புறம் இவர்கள் எதற்கு இத்தனை கவலை இந்தியாவுக்காக படுகிறார்கள்? அதைவிட, இலங்கையில் சீனா செய்த முதலீட்டைவிட அதிக முதலீட்டை இந்தியாவில் செய்துள்ளது என்பது இவர்களுக்கு தெரியுமா? இந்தியாவுக்காக எதிர்ப்பு தெரிவித்தால் இந்தியா தீர்வு பெற்றுதரும் என இந்த முட்டாள்கள் நம்புகின்றனர். ஆனால் இந்த சீனித் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கிய சிங்கள அரசுக்குத்தான் இந்திய அரசு உதவி வழங்குகின்றது என்பதை இவர்கள் எப்போது உணரப் போகின்றனர்?

நிருபர் - சேர்! கொக்குதொடுவாய் அகழ்வில்

நிருபர் - சேர்! கொக்குதொடுவாய் அகழ்வில் 15 மனித எச்சங்கள் கிடைத்துள்ளன. இவற்றை இனப்படுகொலைக்கான ஆதாரங்களாக ஏற்றுக் கொள்வீர்களா? சுமந்திரன் - முறைப்படி அகழ்வு நடைபெறவில்லை. மேலும் இது ராணி குவேனி மற்றும் தோழிகளது எச்சங்களாக இருக்கும் என நான் கருதுகிறேன் நிருபர் - என்னது குவேனியினதா? ஆனால் பெண் புலிகளின் சீருடை போன்று காணப்படுகிறதே? சுமந்திரன் - ஆமாம். மன்னார் புதைகுழியில் கூட பிளாஸ்டிக் பைகள் காணப்பட்டன. ஆனாலும் அங்கு காணப்பட்ட எலும்புகள் சங்கிலியன் காலத்தவை என்று அமெரிக்க ஆய்வு நிறுவனம் அறிக்கை தந்ததே. சங்கிலியன் காலத்தில் பொலித்தீன் பைகள் இல்லையே என்று அப்போது யாரும் கேட்கவில்லையே. நிருபர் - அப்படியென்றால் கொக்குதொடுவாய் எச்சங்களையும் அந்த அமெரிக்க நிறுவனம் ஆய்வு செய்யவேண்டும் எனக் கேட்கப் போகிறீர்களா? சுமந்திரன் - ஆம். அமெரிக்க நிறுவனம் இது குவேனி காலத்து உடல் எச்சங்கள் என அறிக்கை தரும். அதன்பின்பு நம்மவர்கள் மன்னார் புதை குழியை மறந்ததுபோல் கொக்குதொடுவாய் புதைகுழியையும் மறந்துவிடுவார்கள். நிருபர் - அப்படியென்றால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழருக்கான நீதி? சுமந்திரன் - குவேனி காலத்தில் இருந்து போர்க்குற்றம் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஜநாவில் கோரப் போகிறேன். நிருபர் - ????? (யாவும் கற்பனை) 😂😂

எல்லா ஆசைகளையும் துறந்தவர் புத்தர்

எல்லா ஆசைகளையும் துறந்தவர் புத்தர் ஆனால் இவரால் எந்தவொரு ஆசையையும் துறக்க முடியவில்லையே? பாவம் புத்தர்! குறிப்பு - இந்த பிக்கு அம்பலப்படுத்த வேண்டியவர்தான். ஆனால் இதில் சம்பந்தப்பட்ட இரு பெண்களையும் காட்டாமல் தவிர்த்திருக்கலாம்.

முன்னாள் பிரதமர் சேர். ஜோன் கொத்தலாவ

முன்னாள் பிரதமர் சேர். ஜோன் கொத்தலாவ அவர்கள் பண்டாரநாயக்காவை ஒரு பிக்கு சுட்டுக்கொன்றபோது கூறியது “ நான் இந்த நாய்களை கட்டி வைத்திருந்தேன். இவர்கள் வந்து அவிழ்த்துவிட்டார்கள். அது இப்போது பிரதமரையே கடித்துவிட்டது” என்றார். ஆம். அவர் கூறியது உண்மைதான். இலங்கை முன்னேற வேண்டுமானால் முதலில் செய்ய வேண்டியது இந்த புத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும். மன்னர் சித்தார்த்தர் ஆட்சியை துறந்து புத்தரானார். ஆனால் இவர்கள் புத்த பிக்குவாகி அரசையே ஆட்டிப் படைக்கின்றனர்.

சிங்கள மக்களே!

சிங்கள மக்களே! பிளீஸ், இந்த ஆளுக்கும் ஒரு வீடியோ விடுங்களேன். தொல்லை தாங்க முடியவில்லை. வரலாற்றில் இனவாதம் கக்கியவர்கள் எல்லாம் இறுதியாக எங்கே தொலைந்து போனார்கள் என்பதை இவருக்கு கொஞ்சம் புரிய வையுங்களேன்.

ஈழத் தமிழ் அகதி தனுஜா

ஈழத் தமிழ் அகதி தனுஜா அவர்கள் சென்னையில் (8-7-2023) நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து பதக்கத்துடன் ரூபாய் 50000 ஆயிரம் பணப்பரிசும் பெற்றுள்ளார். செல்வி தனுஜா அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். அகதியையும் போட்டியில் பங்குபற்ற அனுமதி வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கும் அரசுக்கும் நன்றிகள். அதேவேளை அகதிகள் எவ்வளவு திறமை பெற்றிருந்தாலும் கடவுச்சீட்டு , விசா பிரச்சனைகள் காரணமாக உலகப் போட்டிகளில் பங்குபற்ற முடியாத நிலை உள்ளது. அண்மையில் தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவன் ஒருவன் அகதி என்பதால் அமெரிக்கா செல்ல முடியாமற்போய் உள்ளது.

ஒருவன் அயோக்கியன் என்று தெரிந்தும்

"ஒருவன் அயோக்கியன் என்று தெரிந்தும் அவனை நியாயப்படுத்த முயல்பவன் அவனைவிட அயோக்கியன்" - சே விபச்சார பெண் ஒருவரை ஊர் மக்கள் நிர்வாணப்படுத்தி தண்டித்தபோது அதனைக் கண்ட புத்த பெருமான் அப் பெண்ணிற்கு முதலில் ஆடைகளை வழங்குங்கள் என்றாராம். உண்மைதான். ஒரு பெண்ணின் ஆடைகளை உரிந்து வீடியோ எடுத்து அதனை பரப்புவது தவறுதான். ஆனால் சிங்கள ராணுவம் முள்ளிவாய்க்காலில் தமிழ் பெண்களின் ஆடைகளை உரிந்து நிர்வாணப்படுத்திய போது ஏன் இந்த நியாயத்தைக் கேட்கவில்லை? அந்த போட்டோக்களை பொது வெளியில் பகிர்ந்து பாற்சோறு பொங்கி சாப்பிட்டபோது ஏன் இதனை தவறு என்று சுட்டிக்காட்டவில்லை? இன்று தமது பிக்கு ஒருவருக்கு நிகழும்போதுதான் புத்தர் பெருமான் கூறியதெல்லாம் நினைவுக்கு வருகிறதா?

உன் கோவணம் உரியப்பட்டதா?

உன் கோவணம் உரியப்பட்டதா? உரிந்தவன் கைகளை வெட்டு. ஆனால் ஒருபோதும் கெஞ்சிக் கோவணம் கட்டாதே. அதைவிட அம்மணமாகவே போராடு 1983ல் இனக் கலவரம் என்னும் பெயரில் பல தமிழர்களை கொன்றார்கள். உயிரோடு எரித்தார்கள். சிறைச்சாலையில் அதிக பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களைக்கூட கொன்றார்கள். இது இலங்கை அரசு திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலை. இதுவரை இதற்குரிய நீதி தமிழ் மக்களுக்கு வழங்கப்படவில்லை

அடேய், இது யார் பார்த்த வேலையடா?

அடேய், இது யார் பார்த்த வேலையடா? இதெல்லாம் ரொம்ப ஓவரடா. என்ன இருந்தாலும் முன்னாள் ஜனாதிபதியடா. 😂😂

11வது நினைவுதின அஞ்சலி

11வது நினைவுதின அஞ்சலி தோழர் தமிழரசனுடன் சேர்ந்து பயணித்த ஈழத்து தோழர் தினேஸ் @ ராயு வரலாற்றில் தோழர் தமிழரசன் பெயர் இருக்கும்வரை கூடவே தோழர் ராயுவின் பெயரும் நிலைத்து இருக்கும்.

செய்தி - ஈழத்து சிவசேனைத் தலைவர்

செய்தி - ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா அவர்களுக்கு “தமிழினத்தின் காவல் தலைவன்” என்ற சிறப்புப் பட்டத்தையும் செங்கோலும் 08-07-2023யன்று மன்னார் மக்கள் வழங்கிப் பெருமை சேர்த்துள்ளார்கள். சந்தேகம்! (1) மன்னார் மக்கள் என்ற பெயரில் சச்சிதானந்தம் அவர்களுக்கு பட்டமும் செங்கோலும் வழங்கியவர்கள் யார்? (2) ஆயுதம் ஏந்திப் போராடியவர்களுக்குகூட “தமிழினத்தின் காவல் தலைவன்” என்ற பட்டம் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் சச்சிதானந்தம் அவர்களுக்கு எப்படி இந்த பட்டம் கொடுக்கப்பட்டது? (3) கடந்த வாரம் தமிழக ஆளுநர் பாராட்டியதாக படங்கள் வந்தன. இந்த வாரம் மன்னார் மக்கள் பாராட்டியதாக படங்கள் வந்துள்ளன. இவையாவும் சச்சிதானந்தம் அவர்கள் தனக்கு தானே செய்யும் பாராட்டு விழாக்களா அல்லது உண்மையான விழாக்களா? தாழ்மையான வேண்டுகோள் ! ஐயா! இது மொபைல்போன் காலம். செங்கோல் கவனம். வீடியோ கீடியோ எதிலும் மாட்டுப்பட்டுடாதையுங்கோ.

பன்சலைகளில் நடக்கும்

பன்சலைகளில் நடக்கும் அசம்பாவிதங்களை சிங்கள அரசு கண்டு கொள்ளாது. மாறாக அதனை வெளியிடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் அதாவது பௌத்தம் செய்யும் தவறுகளை சிங்கள அரசு காப்பாற்றும். பதிலுக்கு சிங்கள அரசின் இனவாதத்திற்கு பௌத்தம் துணை நிற்கும். சிங்கள அரசு மட்டுமல்ல உலகில் உள்ள எல்லா நாட்டு அரசுகளும் தமது நாட்டில் உள்ள பெருபான்மை மதத்தை அரவணைத்துக்கொள்கின்றன. நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் உருவான மதத்தையும் அதன் பிறங்போக்கான கருத்துகளையும் மறுத்தே முதலாளித்துவம் உருவானது. ஆனால் இன்று உலகம் பூராவும் முதலாளித்துவ அரசுகள் இந்த பிற்போக்கான மதத்தைக் கட்டிக் காக்கின்றன. ஏனெனில் உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்கள் மேலெழுந்துவிடாமல் அழுத்திப் பிடிக்கும் கருவியாக மதம் இருக்கின்றது. உலகம் உருண்டை என்று கண்டுபிடித்த விஞ்ஞானியை கிருத்தவ மதத்தின்பேரால் கொன்ற பாப்பரசர் கூட்டத்தை முதலாளித்தவ அரசுகள் பேணிப் பாதுகாக்கின்றன. அந்த பாப்பரசர் கூட்டம் விஞ்ஞானிகள் கண்டு பிடித்த அப்பிள் போனை கொஞ்சம்கூட வெட்கம் இன்றி பயன்படுத்துகின்றன. இந்த கூட்டுக்களவாணிகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சிறையைவிடக் கொடிய சித்திரவதைமுகாமாக

சிறையைவிடக் கொடிய சித்திரவதைமுகாமாக சிறப்புமுகாம் இருக்கிறது. அடைத்து வைத்திருப்பவர்களுக்கு மருத்துவ வசதி அளிக்கப்பட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழரான ஜெயக்குமாருக்கு அந்த மருத்துவவசதிகூட மறுக்கப்படுகிறது. என்னே கொடுமை இது? அண்ணாமலையை அழைத்து உறவுப்பாலம் கட்டுவோர் இது குறித்து அக்கறை காட்டமாட்டார்களா? ஈழத் தமிழர் மத்தியில் ஓடி ஓடி கலைஞர் பிறந்தநாள் கொண்டாடுவோராவது இந்த ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி சமைக்க மாட்டார்களா?

செய்தி – "கிழக்கு மாகாண ஆளுநனர்

செய்தி – "கிழக்கு மாகாண ஆளுநனர் செந்தில் தொண்டமான் தமிழினத்திற்கு கிடைத்த பொக்கிஷம்" - ஐபிசி முதலாளி கந்தையா பாஸ்கரன் ஒருவன் அயோக்கியன் என தெரிந்தும் அவனை நியாயப்படுத்த முயல்பவன் அவனைவிட அயோக்கியன் - சே இந்த கிழக்கு மாகாண ஆளுனர் தமிழர் என்றும் அதனால் தமிழினத்தின் வலியை நன்கு உணர்ந்தவர் என்றும் ஐபிசி முதலாளி கூறியுள்ளார். இந்த கிழக்கு மாகாண ஆளுனர்தான் அண்மையில் இந்தியா சென்று இலங்கையிலும் ஒரு திருப்பதி கோயில் வேண்டும் என்று கேட்டவர். அதுமட்டுமல்ல இந்த கிழக்குமாகாண ஆளுனர்தான் கலைஞர் பிறந்தநாள் கொண்டாடப் போவதாக அறிவித்தவர். தன் மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்காத இந்த கிழக்கு மாகாண ஆளுனர், கிழக்கில் நடைபெறும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை தடுக்காத இந்த ஆளுனர், இந்துக் கோவில்களை இடித்துவிட்டு புத்த விகாரைகள் கட்டப்படுவதை தடுக்க முடியாத இந்த ஆளுனர் , தமிழினத்திற்கு கிடைத்த பொக்கிஷம் என இந்த ஐபிசி முதலாளிக்கு எப்படி தெரிகிறது?

சிலைகளை உடைக்க முடியும்

சிலைகளை உடைக்க முடியும் மக்கள் மனங்களில் இருப்பதை நீக்க முடியுமா? பட்டுப்போன அறுகம்புல்கூட மழைத்துளி கண்டதும் துளிர்த்து முளைக்கிறது. உடைத்துப் போட்ட இவர்கள் மீண்டும் எழ மாட்டார்களா என்ன?

நாய்களுடன் கடிபடுவதைவிட வழி விடுவது மேல்

•நாய்களுடன் கடிபடுவதைவிட வழி விடுவது மேல் சின்னஞ்சிறு இலங்கை தீவில் நான்கு இந்திய தூதராலயங்கள் இருக்கின்றன. இலங்கையில் என்ன நடக்கின்றது என்பது இலங்கையர்களைவிட இந்திய அரசுக்கு நன்கு தெரியும். ஆனால் நம்மவர் சிலர் இலங்கையில் சீனா வந்துவிட்டது என்று இந்தியா சென்று கூறுகின்றனர். சீனா வந்துவிட்டது என்று கூறினால் இந்தியா தமிழீழம் பெற்று தரும் என இவர்கள் நம்புகின்றனர். மணிப்பூர் பற்றி எரிகிறது. தன் சொந்த மக்கள் எரிவதையே கண்டுகொள்ளாத இந்திய அரசு ஈழத் தமிழ் மக்கள் மீது இரக்கம் கொண்டு தமிழீழம் பெற்று தரும் என எப்படி இவர்கள் நம்புகின்றனர்? இலங்கை வந்துள்ள அனைத்து சீன முதலீடுகளும் இந்திய அரசின் அனுமதி பெற்றே இலங்கை அரசு அனுமதித்துள்ளது என்பதை இவர்கள் அறியவில்லையா? அதுமட்டுமல்ல, இலங்கையில் உள்ள சீன முதலீடுகளைவிட அதிக சீன முதலீடுகள் இந்தியாவில் உள்ளது என்பதையாவது இவர்கள் அறியவில்லையா? இந்தியாவும் சீனாவும் சேர்ந்து உலகில் மிகப்பெரிய வங்கியை அமைக்க திட்டமிட்டு வருகின்றன. ஆனால் இவர்கள் இலங்கையில் சீன முதலீடுகளுக்காக இந்திய அரசு சீனாவை எதிர்த்து தமிழீழம் பெற்று தரும் என்கிறரார்கள். இன்னொருபுறம் இந்துத் தமிழம் கேட்டால் இந்திய இந்து அரசு உதவும் என இவர்கள் நம்புகிறார்கள். இந்துகோயில்களை இடித்து புத்தவிகாரைகளை சிங்கள அரசு கட்டி வருகின்றது. ஆனால் இந்திய அரசு இதனை கண்டிக்கவில்லை. மாறாக தொடர்ந்தும் சிங்கள அரசுக்கு உதவி வருகின்றது. உண்மை நிலை இப்படி இருக்கையில் இந்திய அரசு உதவும் என்று எப்படி இவர்கள் நம்புகிறார்கள் என்று கேட்டால் (1) இந்தியா இன்றி தீர்வு பெற முடியுமா? (2) உங்களிடம் என்ன தீர்வு இருக்கின்றது? என்ற கேள்விகளைக் கேட்டு தமது இந்திய விசுவாசத்தை நியாயப்படுத்துகின்றனர். இப்படிக்கூறி 1983ல் சென்ற ஈபிஆர்எல்எவ் தலைவர் பத்மநாபா “ நாங்கள் இந்தியாவை பயன்படுத்த நினைத்தோம். ஆனால் இந்தியா எங்களை பயன்படுத்திவிட்டது” என்று கூறிய வார்த்தைகளை இவர்கள் மறந்துவிட்டார்களா? இந்தியாவை நம்பிச் செல்லும் பாதையில் சென்றால் தீர்வை அடைய முடியாது என்பதை அப் பாதையில் சென்ற பத்மநாபா கூறிய பின்பும் அப் பாதையில் செல்ல இவர்கள் துடிப்பது ஏன்?

தன் மகன் பேரறிவாளன்

தன் மகன் பேரறிவாளன் விடுதலைக்காக தாயார் அற்புதம்மாள் நடந்தார். அவர் மீது இரக்கம் கொண்டு ஏழு தமிழர் விடுதலைக்கு தமிழ் சமூகம் வழி சமைத்தது. சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் தன் மகன் சாந்தன் விடுதலைக்காக தள்ளாத முதுமையிலும் அவர் தாயார் நடக்கிறார். அவருக்காக தமிழ் சமூகம் இரங்குமா? சாந்தன் விடுதலைக்கு வழி சமைக்குமா? தான் இறப்பதற்குமுன் தன் மகன் சாந்தனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று 33 வருடமாக அந்த தாய் காத்திருக்கின்றார். அந்த தாயின் விருப்பம் நிறைவேற தமிழக முதல்வர் இரக்கம் காட்டுவாரா?

இந்திய அரசும் 18 வெங்காயங்களும்

•இந்திய அரசும் 18 வெங்காயங்களும் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற கதை சிறுவயதில் படித்திருப்பீர்கள். இப்போது இந்திய அரசும் 18 வெங்காயங்களும் என்ற கதை படிக்கலாம் வாருங்கள் நண்பர்களே

நல்லவேளை இப்போது புலிகள் இல்லை.

நல்லவேளை இப்போது புலிகள் இல்லை. இல்லையென்றால் புலிகள்தான் சதி செய்கிறார்கள் என்று சொல்லியிருப்பார். அது சரி. இந்த பாரிய சதியை செய்யும் அந்த வெளிநாட்டு சக்தி எது? எல்லா தப்பையும் செய்வது. பிடிபட்டதும் வெளிநாட்டு சதி என்பது. இதையெல்லாம் நம்பும் அளவிற்கு சிங்களவர்கள் என்ன மடையர்களா?

அண்மையில் ஒரு பிக்கு

அண்மையில் ஒரு பிக்கு இரண்டு பெண்களுடன் பிடிபட்டார். பிக்குகள் ஒழுக்கம் தவறுவதற்கு பொருளாதார நெருக்கடி காரணம் என்றால் பணத்திற்காக அந்த பிக்கு பெண்களுடன் உறவு கொண்டாரா? அதாவது அந்த இரு பெண்களும் பணம் கொடுத்து அந்த பிக்குவுடன் உடலுறவு கொண்டார்களா? என்ன லாஜிக் இது? புரியவில்லையே. யாருக்காவது ஏதாவது புரிகிறதா?

1988ல் ஒருநாள் தோழர் பொழிலன்

1988ல் ஒருநாள் தோழர் பொழிலன் தமது இதழுக்கு படம் வரையும் கலைஞர் ஒருவரை சந்திக்க என்னையும் கூட அழைத்துச் சென்றார். சென்னையில் ஒரு சிறிய இடத்தில் அவர் இருந்தார். அவர் வீர சந்தானம் . தனது வித்திசாயமான படங்கள் மூலம் அப்போது அவர் பிரபலமாக வந்துகொண்டிருந்தார். குறிப்பாக அக் காலத்தில் முற்போக்கு சிற்றிதழ்களின் விருப்பத்துக்குரிய வரை கலைஞராக அவர் இருந்தார். மிகவும் குறைந்த விலையில் அதுவும் சில வேளைகளில் இலவசமாகவே படங்கள் வரைந்து கொடுத்துக்கொண்டிருந்தார். இதற்கு காரணம் அவர் தமிழ்நாடு விடுதலை மீதும் தமிழீழ விடுதலை மீதும் கொண்டிருந்த பற்றே. முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அமைந்துள்ள கற்சிற்பங்களில் அவர் பங்கு அறிந்தபோது நான் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் இது அவர் குருதியில் கலந்த உணர்வு. அவரை நன்றியுடன் நினைவு கூர்வோம்.

தமிழ் முதலாளிகள் சிங்கள அரசியல் தலைவர்களை

தமிழ் முதலாளிகள் சிங்கள அரசியல் தலைவர்களை சந்திப்பது தமது வியாபார நலன்களுக்காகவா? அல்லது தமிழ் இனத்தின் நலன்களுக்காகவா? அதுவும் தமிழ் மக்களின் வோட்டைப் பெற்று ஜனாதிபதியாகிவிட்டு தமிழ் மக்களை ஏமாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை சந்திப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு என்ன பெற்றுக்கொடுக்க முடியும் என இந்த ஐபிசி முதலாளி நினைக்கிறார்?

தமிழ் உணர்வாளர்களின் போராட்டம்

தமிழ் உணர்வாளர்களின் போராட்டம் வெற்றி பெறட்டும் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர் விடுதலை பெற வழி பிறக்கட்டும்.

விருதுநகர் தபால்நிலைய வெடிகுண்டு

விருதுநகர் தபால்நிலைய வெடிகுண்டு வழக்கில் காமராசர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக கூறுகின்றனர். இது உண்மையா உடன்பிறப்புகளே? அப்படியென்றால் உங்கள் கருத்துப்படி அவர் தீவிரவாதியா? அல்லது சுதந்திரப் போராட்ட தியாகியா? (200 ரூபா) உடன்பிறப்புகள் பதில் பிளீஸ்

பதவி இல்லை. பண பலம்கூட இல்லை.

பதவி இல்லை. பண பலம்கூட இல்லை. ஆனால் மக்கள் பிரச்சனை என்றால் முதல் குரல் இவரிடமிருந்தே வருகிறது. எத்தனையோ பலமான கட்சிகள் இருந்தும் நாம்தமிழர் கட்சி மட்டுமே உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது.

அமிர்தலிங்கம் மரணம்

• அமிர்தலிங்கம் மரணம் தமிழ்மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பா? இன்று அமிர்தலிங்கத்தின் 34வது நினைவு தினம். சில வருடங்களுக்கு முன்னர் பி.பி.சி க்கு பேட்டி கொடுத்த சம்பந்தர் ஐயா “அமிர் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு” எனக் கூறியிருந்தார். (1) தமிழ் மக்களுக்கு இன உணர்வை ஊட்டியதில் அமிர்தலிங்கம் பங்கு மறுக்க முடியாதது. ஆனால் அதை அவர் தமிழ் மக்களின் நலன்களுக்காக செய்யவில்லை. மாறாக தனது பதவி நலன்களுக்காகவே செய்தார். (2) சுயாட்சிக் கழக நவரட்ணம் தமிழீழ தனிநாட்டு தீர்வை முன்வைத்தபோது அது தற்கொலைக்கு ஒப்பான தீர்வு என அமிர்தலிங்கம் சாடினார். ஆனால் அதே அமிர்தலிங்கம் தான் தேர்தலில் தோற்றதும் தனது பதவி நலனுக்காக அதே தமிழீழ தீர்வை முன்வைத்தார். (3) ”அடைந்தால் தமிழீழம் இல்லையேல் சுடுகாடு” என இளைஞர்களை உசுப்பேற்றிவிட்ட அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவர் பதவி வந்தபோது அதனை ஏற்றார். ஜே.ஆர் “மாவட்ட சபை” வழங்க முன்வந்தபோது அதனை ஏற்றார். இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் வழங்கப்பட்ட மாகாண சபையை ஏற்றார். (4) வடபகுதியில் சாதிப் போராட்டம் நடைபெற்றபோது அமிர்தலிங்கம் உயர்சாதியினர் பக்கமே நின்றார். பாராளுமன்றத்தில் “சங்கானை இன்னொரு சங்காயாக (சீனா) மாறுகின்றது” என தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கு எதிராக பேசினார். (5) தமிழரசுக்கட்சியின் சத்தியாக்கிரக போராட்டத்தில் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பெருமளவில் பங்கு பற்றியிருந்தனர். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் கூட அமிர்தலிங்கத்தின் சீடனாக இருந்தவர். இப்படியிருந்த இருந்த முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களிடமிருந்து பிரிவதற்கு அமிர்தலிங்கம் முன்வைத்த தமிழீழ கோரிக்கையே காரணம் ஆகும். (6) தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களில் ஒருவராக (மலையக) தொண்டமான் இருந்தார். ஆனால் அமிர்தலிங்கம் தமிழீழ கோரிக்கையை முன்வைத்தபோது அதனால் தமது மக்களுக்கு பயன் இல்லை எனக் கூறி தொண்டமான் விலகி சென்றார். (7) ராஜதுரைக்கு தலைமைப் பதவியை வழங்கியிருந்தால் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் நன் மதிப்பைப் பெற்றிருக்க முடியும். ஆனால் அமிர்தலிங்கம் தமிழர்விடுதலைக்கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராஜதுரைக்கு எதிராக தமிழரசுக்கட்சி சார்பில் காசி ஆனந்தனை போட்டியிட செய்தார். இதன் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமையை குழப்பினார். (😎 இலங்கை ராணுவம் தமிழ் மக்களை கொலை மற்றும் பாலியல் வல்லுறவு செய்தபோது அதனைக் கண்டித்த அமிர்தலிங்கம் இந்திய ராணுவம் தமிழ் மக்களைக் கொலை செய்தபோது அதனைக் கண்டிக்க மறுத்தார். (9) இலங்கை அரசு தரப்படுத்தலை அமுல்படுத்தியபோது அதற்கு எதிராக தமிழ் மாணவர்களை போராடும்படி தூண்டிய அமிர்தலிங்கம் தனது மகனுக்கு மதுரை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர் மூலம் சீட்டு பெற்றார். (10) இந்திரா காந்தி போராளிகளுக்கு பயிற்சி வழங்க முனைந்தபோது அதனை தடுக்க அமிர்தலிங்கம் முனைந்தார். ஆனால் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டே தனது மகன் ஆயுத இயக்கம் கட்டிய போது அதனை அவர் தடுக்கவில்லை. (11) பல தமிழ் இளைஞர்களை அன்றைய ஜே.ஆர் அரசு கைது செய்தபோது அவர்களை விடுவிக்க அமிர்தலிங்கம் முனையவில்லை. ஆனால் தனது மகனின் கடிதத்தை கொண்டு சென்ற தனது உறவினர் ஒருவர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டதும் உடனே ஜே. ஆர் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடுவித்தார். அந்த உறவினர் எந்த வழக்கும் இன்றி உடனே சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு மலேசியாவுக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். (12) யாழப்பாணத்தில் தேர்தலில் தோல்வியுற்ற அமிர்தலிங்கம் அம்பாறையில் இருந்து தெரிவு செய்யப்பட விரும்பினார். ஆனால் அங்கும் அவர் தோல்வியுற்றார். இவ்வாறு மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே அவர் கொல்லப்பட்டார். அமிர்தலிங்கம் உயிரோடு இருந்திருந்தால், • தமிழீழம் கிடைத்திருக்காது. ஏனெனில் அவர் தமிழீழ கோரிக்கையை எப்போதோ கைவிட்டுவிட்டார். • முள்ளிவாய்க்கால் அவலத்தையும் அவர் தடுத்திருக்க மாட்டார். ஏனெனில் அவர் உயிரோடு இருந்த காலத்திலே இந்திய ராணுவ அழிப்பை தடுக்காதவர் மட்டுமல்ல அதை கண்டிக்க கூட முன்வராதவர். • தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைத்திருக்காது. சம்பந்தர் ஐயாவுக்கும் எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்திருக்காது. எனவே அமிர்தலிங்கம் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு அல்ல.! குறிப்பு- புலிகளுக்கு பின்னால் பைல் கட்டை தூக்கி திரிந்த காலத்தில் அமிர் இழப்பு தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று சம்பந்தர் ஐயா கூறவில்லை.

காயம் இல்லாமல் கனவு காணலாம்.

காயம் இல்லாமல் கனவு காணலாம். ஆனால் வலிகள் இல்லாமல் வெற்றி பெற முடியாது. இந்திய அரசுக்கு கடிதம் எழுதி தீர்வு பெற முடியும் என இப்போது சிலர் நினைக்கிறார்கள். இன்னும் சிலர் அண்ணாமலைக்கு உறவுப்பாலம் கட்டி தீர்வு பெற முடியும் என நம்புகின்றனர். ஆனால் சிங்கள அரசின் பலாத்காரத்திற்கு எதிர் பலாத்காரத்தை பாவிக்காமல் எந்த தீர்வையும் பெற முடியாது என்பதை தமிழ் இளைஞர்கள் இன்பம் செல்வம் கொலை செய்யப்பட்டபோதே உணர்ந்து விட்டார்கள். ஆம். அடக்குமுறையை மேற்கொள்ளும் சிங்கள அரசு இயந்திரத்தை வன்முறைமூலம் உடைத்தெறியாமல் தமிழ் மக்கள் எந்தவொரு தீர்வையும் பெற்றுவிட முடியாது என்பதையே வரலாறு தொடர்ந்து நிரூபித்துக்கொண்டு இருக்கிறது.

மாங்கிளியும் மரங்கொத்தியும்

மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்ப தடையில்லை. சாந்தன் மட்டும் ஏன் நாடு திரும்ப முடியவில்லை? ஈழத் தமிழனாய் பிறந்ததைவிட பறவையாகவாவது பிறந்திருக்கலாம் சுதந்திரமாய் பறந்திருக்கலாம் தான் இறப்பதற்குள் தன் மகனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற அந்த தாயின் விருப்பம் நிறைவேறுமா?

என் கண்களை ஒரு தமிழ் சிறுமிக்கு

என் கண்களை ஒரு தமிழ் சிறுமிக்கு பொருத்துங்கள். அதன்மூலம் மலரப் போகும் தமிழீழத்தை நான் பார்ப்பேன்- குட்டிமணி நீதிமன்றத்தில் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டபோது குட்டி மணி கூறிய வார்த்தைகளே இவை. அதனால்தான் வெலிக்கடை சிறையில் குட்டிமணியைக் கொன்ற சிங்கள காடையர்கள் அவர் கண்ணை தோண்டி எடுத்து புத்தரின் காலடியில் வீசினார்கள். அதையறிந்ததும் குட்டிமணியின் இறுதி ஆசையைக்கூட நிறைவேறாமல் செய்து விட்டார்களே என்ற வேதனை பிறந்தது. ஆனால் இன்று சிங்கள காடையர்கள் செய்த கொடுமை குறித்து சிறிது ஆறுதலாக இருக்கிறது. ஏனெனில் அவர் விரும்பியபடி அவர் கண்கள் ஒரு தமிழ் சிறுமிக்கு பொருத்தியிருந்தால் அக் கண்கள், எந்த இலங்கை அரசுக்கு எதிராக அவர் போராடினாரோ அந்த அரசின் பாராளுமன்ற பிரதி குழுத் தலைவராக அவர் இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இருந்ததை காண நேரிடும். எந்த பொலிஸ் அவரை பிடித்து அடைத்துவைத்து சித்திரவதை செய்ததோ அதே சிங்கள பொலிஸ் பாதுகாப்பில் அவர் இயக்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வதை காண நேரிடும். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் எந்த ஜீப்பை அவர் எரித்தாரோ அதைவிட சொகுசு ஜீப் வாகனத்தில் தன் இயக்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வதை அவர் காண நேரிடும். அன்று தமிழர் தலைவர்கள் இவர்களை போராளிகள் என்று இவர்களுக்காக வழக்கு பேசினார்கள். ஆனால் இன்று தமிழர் தலைவர் சம்பந்தர் ஐயா போராளிகளை பயங்கரவாதிகள் என்று கூறுவதை காண நேரிடும். நல்லவேளை. இந்த கொடுமைகளை எல்லாம் குட்டிமணியின் கண்கள் காண நேரிடாமல் சிங்கள காடையர்களின் செயல் அமைந்துவிட்டது.

மீண்டும் காமராசர் ஆட்சி வேண்டுமா?

•மீண்டும் காமராசர் ஆட்சி வேண்டுமா? காமராசரை விரட்டிய திராவிட கட்சிகள்கூட காமராசர் ஆட்சி தருவோம் என்கின்றனர். திராவிட ஆட்சிகளின் ஊழலைப் பார்த்துவிட்டு சில தமிழத்தேசியர்களும் காமராசரைப் புகழ்கின்றனர். காமராசர் ஆட்சி என்பது காங்கிரஸ் ஆட்சியே. அந்த ஆட்சியில்தான் தமிழினம் அடிமைப்படுத்தப்பட்டது. இந்தி மொழி திணிக்கப்பட்டது. தமிழ் நிலம் தாரை வார்க்கப்பட்டது. தமிழினத்தின் இன்றைய இழி நிலைக்கு காமராசரின் காங்கிரஸ் ஆட்சியே காரணம். மீண்டும் காமராசர் ஆட்சி எனக்கூறுவது மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்பதே. எனவே இனி அமைய வேண்டியது காமராசர் ஆட்சி அல்ல. தமிழத்தேசிய ஆட்சியே.

இந்தம்மா பேசுவது

இந்தம்மா பேசுவது சம்பந்தர் ஐயாவுக்கு கேட்காது சம்பந்தர் ஐயா பேசுவது இந்தம்மாவுக்கு புரியாது அப்புறம் இருவரும் என்னதான் பேசியிருப்பார்கள் என்பதை நீ உணரமாட்டாயா தமிழா? இன்னும் எத்தனை நாளைக்கு இந்த போட்டோ அரசியலை சகித்துக்கொண்டு இருக்க வேண்டும் தமிழா? இந்த கருமத்திற்கு ஒரு முடிவு வந்து தொலைக்காதா தமிழா?

அடிமை என்ற சொல்

அடிமை என்ற சொல் கேவலம் இல்லை. மாறாக அடிமையாகவே வீழ்ந்து கிடப்பதே கேவலமானது. அதுபோலவே அகதி என்ற சொல் தவறானது அல்ல. மாறாக எம்மை அகதியாகவே தொடர்ந்து வைத்திருக்கும் அரசுகளே தவறானவை. “அகதி” என்ற சொல்லுக்கு மாறாக “ஏதிலி” என்ற சொல்லை பயன்படுத்துவதால் அகதி நிலையில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. அகதிகள் முகாமுக்கு “ஏதிலிகள் மறுவாழ்வு முகாம்” என பெயர் மாற்றி தமிழக அரசு ஏமாற்றுகிறது. இதை நம்பி சிலர் “அகதி” என்ற சொல்லை பயன்படுத்தாதீர்கள் என்று என்னிடம் கோருகின்றனர். நான் அகதி. என்னை அகதி என்று அடையாளப்படுத்துவது ஏன் தவறானது என்பதை யாராவது விளக்குவீர்களா?

செந்தில் பாலாஜி பலகோடி ரூபா ஊழல்

செந்தில் பாலாஜி பலகோடி ரூபா ஊழல் செய்துள்ளார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் ஸ்டாலின். இப்போது அந்த ஊழல்பேர்வழி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விரும்பியபடி காவேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதனை ஜனநாயக விரோதம் என கண்டித்துள்ளார். ஆனால் இதே தமிழக முதல்வர் ஸடாலின் அவர்கள் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தும் ஜெயக்குமாரை சிறப்புமுகாமில் அடைத்ததோடு அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சையையும் மறுத்து வருகிறார். உரிய சிகிச்சை அளிக்காமல் தன் கண் பார்வை பழுதடைந்துவிட்டதை ஜெயக்குமார் முதல்வருக்கு அறிவித்தும் முதல்வர் இது குறித்து பதில் அளிக்கவும் இல்லை. அக்கறை கொள்ளவும் இல்லை. செந்தில் பாலாஜிக்கு ஒரு நியாயம். ஜெயக்குமாருக்கு இன்னொரு நியாயம். ஏனெனில் ஜெயக்குமார் ஒரு ஈழத் தமிழ் அகதி என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? தமிழக முதல்வர் ஈழத் தமிழ் அகதிகள் மீது அக்கறை காட்டாதது ஆச்சரியம் தரவில்லை. ஆனால் ஈழத் தமிழர் மத்தியில் ஓடி ஓடி கலைஞர் பிறந்தநாள் கொண்டாடுவோரும் அக்கறை கொள்ளவில்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. குறிப்பு - ஐபிசி முதலாளியால் தமிழருக்கு கிடைத்த பொக்கிஷம் என பாராட்டப்பட்ட கிழக்குமாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாணத்தில் கலைஞர் பிறந்த நாள் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.

புலனாய்வு படிப்பு இல்லை.

புலனாய்வு படிப்பு இல்லை. எங்கும் புலனாய்வு பயிற்சி பெற்றதில்லை. ஆனாலும் ஒரு சிறிய காட்டுக்குள் இருந்துகொண்டு இந்திய புலனாய்வு அமைப்புகளின் அத்தனை சதி முயற்சிகளையும் அவர் முறியடித்தார். வேலூர் சிறப்புமுகாமில் இருந்து ஒரு போராளியை சதித்திட்டத்துடன் இந்திய உளவு அமைப்பு அனுப்பியது. நான் அப்போது அச் சிறப்புமுகாமில் இருந்ததால் அதை நேரில் கண்டேன். ஆனால் எனது ஆச்சரியம் என்னவெனில் இன்றுபோல் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அப்போது இருக்கவில்லை. ஆனாலும் வன்னிக் காட்டுக்குள் இருந்த அவர் எப்படி இதை அறிந்து முறியடித்தார் ? அடுத்து இன்னொருவரை அனுப்பினார்கள். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அவரும் ஒரு பொலிசாரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றார். ஆனாலும் அதையும் அவர் முறியடித்தார். இப்படி அவர் முறியடித்த பல சம்பவங்கள் கூறலாம். வரலாறு அவரை எப்படி நினைவு கூரப் போகின்றது என்று தெரியவில்லை. அவர் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் அவருடைய திறமை எதிரியைக்கூட வியப்படைய வைத்தது.