Wednesday, January 31, 2018

•இது சுமந்திரனுக்கு "கேவலம் " இல்லையா?

•இது சுமந்திரனுக்கு "கேவலம் " இல்லையா?
நேற்றைய தினம் லண்டனில் நடைபெற இருந்த சுமந்திரனின் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் நடக்கும் முக்கிய கூட்டத்தில் சுமந்திரன் கலந்துகொள்ள வேண்டியிருப்பதால் லண்டன் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(கூட்டம் ரத்துச் செய்வதாக அறிவித்து ஒட்டப்பட்ட நோட்டீஸ் கீழே தரப்பட்டுள்ளது)
ஆனால் நாம் அறிந்தவரையில் திட்டமிட்டபடி சுமந்திரன் 18ம் திகதி லண்டன் வந்துவிட்டார்.
18ம் திகதி முதல் 20ம் திகதி காலை வரை அவர் லண்டனில்தான் இருந்துள்ளார். 20ம் திகதி காலையில்தான் அவர் கனடா புறப்பட்டுச் சென்றுள்ளார்.
19ம் திகதி முழுநேரமும் அவர் லண்டனில் இருந்ததுடன் கூட்டத்தை நடத்தாமல் ரத்துச் செய்துள்ளார்.
கூட்டம் நடத்துவதும் நடத்தாமல் விடுவதும் அவர் விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது.
ஆனால் கூட்டம் நடத்தாமைக்கு பாராளுமன்ற கூட்டம் காரணம் என்று ஏன் மக்களுக்கு பொய் சொல்ல வேண்டும்?
லண்டனில் இருந்துகொண்டு கொழும்பில் நிற்பதாக பொய் சொல்வது ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு எவ்வளவு பெரிய கேவலம்?
கூட்டம் நடைபெற்றால் சுமந்திரனுக்கு நிச்சயம் செருப்படி விழப்போகிறது என்ற தகவல் கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு கிடைத்துள்ளது.
இந்த நேரத்தில் தனக்கு செருப்படி விழுந்தால் அது தேர்தலில் எதிரொலித்துவிடும் என்ற அச்சத்தினால் சுமந்திரன் கூட்டத்தை ரத்துச் செய்துள்ளார்.
சுமந்திரன் தன் வாழ்நாளில் பயம் காரணமாக கூட்டத்தை ரத்துச்செய்வது மட்டுமன்றி அதற்காக பொய் கூறவேண்டியேற்பட்டதும் இதுவே முதல் முறை.
இந்த கேவலம் ஏன் தனக்கு ஏற்பட்டது என்பதை சுமந்திரன் கொஞ்சமாவது சிந்திப்பாரா?
இனியாவது மக்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளிப்பாரா?

• தோழர் லெனின் அவர்களின் 94வது நினைவு தினம்(21.01.2018)

• தோழர் லெனின் அவர்களின் 94வது நினைவு தினம்(21.01.2018)
1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதரின் உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர்.
லண்டன் மாநகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிரான்சிலும், ஜெர்மனியிலும் கூடி இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். 
இந்தியாவிலும் சீனாவிலும் கூட சில இடங்களில் இந்தக் காட்சிகள் நடக்கின்றன.
அந்த 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ம் நாள், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் கண்ணீர் சிந்திய நாள். அவர்கள் அனைவரின் கவனமும் சோவியத் ரசியாவை நோக்கி இருந்தது.
சோவியத் ரசியா அன்றைய தினம் மயான அமைதியில் கழிந்தது. ஒவ்வொரு வீடும் இழவு வீடு போல காட்சியளித்தது. பெரியவர்களும், குழந்தைகளும் அழுது தீர்த்தனர். பெண்கள் ஒப்பாரி வைத்தனர்.
சரியாக மாலை 4.00 மணி வானொலியில் ஒரு அறிவிப்பு வந்தது. “எழுந்து நில்லுங்கள் தோழர்களே! தோழர் லெனின் அடக்கம் செய்யப்படுகிறார்.” சோவியத் ரசிய மக்கள் அனைவரும் எழுந்து நின்றனர்.
அமெரிக்க ஐரோப்பிய தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஐந்து நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
உலக மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர் லெனினுடைய சவ அடக்கம் இப்படித்தான் நடைபெற்றது. உலகமே எழுந்து நின்று அவருக்கு இறுதி விடைகொடுத்து அனுப்பியது.
லெனினுக்கு முன்னரும் சரி, அவருக்குப் பின்னரும் சரி, எந்தத் தலைவருக்கும் இந்த மரியாதை கிடைக்கவில்லை. எந்த நாட்டுத் தலைவராக இருந்தாலும் அவருடைய மரணம் அந்த நாட்டு மக்களை மட்டுமே பாதிக்கும். ஆனால் லெனினுடைய மரணம் உலகையே குலுக்கியது.
•நூலகங்களில் உறங்கிக் கிடந்த மாக்சியத்தை நடைமுறைப்படுத்திக் காட்டிய மாபெரும் ஆசான் தோழர் லெனின் அவர்களின் 94வது நினைவு தினம் இன்று ஆகும்.
•ரஸ்சிய பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமையேற்று மாபெரும் ரஸ்சிய புரட்சியை வெற்றிபெற வைத்தவர். உலக பாட்டாளி வர்க்கத்திற்கு நம்பிக்கை ஒளி தந்தவர் தோழர் லெனின்
•முதலாளி வர்க்க கொடுமைகள் ஒழிய, பாட்டாளி வர்க்கம் ஆட்சியைப் பிடிக்க, ஆயுதப் போராட்டம் மூலமே சாத்தியம் என்பதை நிரூபித்தவர் தோழர் லெனின்
•தனி ஒரு நாட்டில் புரட்சி சாத்தியம் இல்லை என்று கூறிய டிரொக்சியின் அகில உலகப் புரட்சியை தத்துவார்த்த ரீதியாகவும, நடைமுறைரீதியாகவும் தோற்கடித்தவர் தோழர் லெனின்.
•தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வாக சுயநிர்ணய உரிமையை முன்வைத்தவர் தோழர் லெனின். இதன் மூலம் சிறுபான்மை இனங்களின் நம்பிக்கையைப் பெற்றவர் தோழர் லெனின்.
•திரிபுவாதிகளை அம்பலப்படுத்தினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஜக்கியத்தை ஏற்படுத்தியவர் தோழர் லெனின்.

தமிழன்- சுவாமிஜி! பஸ் கட்டணம் உயர்த்தி விட்டார்கள். அதற்காக உங்கள் சீடர்கள் போராடுவார்களா?

தமிழன்- சுவாமிஜி! பஸ் கட்டணம் உயர்த்தி விட்டார்கள். அதற்காக உங்கள் சீடர்கள் போராடுவார்களா?
நித்தியானந்தா சுவாமி- நாங்கள் ஆண்டாளுக்கு மட்டும்தான் போராடுவோம். தமிழனுக்காக எல்லாம் போராட மாட்டோம்.
தமிழன்- ஆண்டாள் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று ராஜாஜியே கூறியுள்ளார். அவரை எதிர்க்காமல் வைரமுத்துவை மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள்?
நித்தியானந்தா சுவாமி- ராஜாஜி பார்ப்பான். அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் சூத்திரன் வைரமுத்து எம் மதத்தை பழிக்க விடமாட்டோம்.
தமிழன்- சுவாமிஜி! நீங்களும் ரஞ்சிதா மேடமும் ஒன்றாக இருந்த படுக்கை அறைக் காட்சிகள் உண்மைதான் என்று பகுப்பாய்வு அறிக்கை வந்துள்ளதே?
நித்தியானந்தா- நான் கடவுள் கண்ணன் போன்றவன். ரஞ்சிதா இந்தக் காலத்து ஆண்டாள் போன்றவள். எங்கள் திருவிளையாடல்களை நீதிமன்றம் விசாரணை செய்யமுடியாது.
தமிழன்- அந்த வழக்கில் உங்களை பொலிஸ் கைது செய்வதில் இருந்து தப்புவதற்காகவே ஆண்டாள் பிரச்சனையில் நீங்கள் ஓவராக சவுண்டு கொடுப்பதாக கூறுகிறார்களே?
நித்தியானந்தா சுவாமி - இப்போது இருப்பது நம்ம மோடியின் அரசு. கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டேன். எனவே என்மீது இனி தமிழ்நாடு பொலிஸ் கைவைக்க முடியாது.
தமிழன்- ??????
குறிப்பு-
உடனடியாக நித்தியானந்தா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும்.
நித்தியானந்தா மடத்தில் உள்ள சிறுமிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும்.
சமூக அக்கறை உள்ளவர்கள் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.

•தவளையும் தன் வாயால் கெடும்

•தவளையும் தன் வாயால் கெடும்
சுமந்திரனுக்கும் அவர் வாயாலேதான் அழிவு!!
மாரித் தவளை கத்தி கத்தி செத்து விடுவது போன்று சுமந்திரனும் தன் வாயாலே தனக்குரிய அழிவைத் தேடி வருகின்றார்.
சுமந்திரனின் கனடா பேச்சைக் கேட்ட லண்டன் தமிழரசுக்கட்சி பிரமுகர் ஒருவர் கூறினார் “ நல்லவேளை சுமந்திரன் லண்டனில் பேசவில்லை “ என்று.
ஒரு ஆசிரியர் மாணவனைப் பார்த்து 2+ 2 =5 என்று ஏன் எழுதினாய் என்று கேட்டார். அதற்கு அந்த மாணவன் இன்னொரு மாணவனும் அப்படித்தானே எழுதியிருக்கிறான் என்று பதில் கூறினான்.
நீ ஏன் தவறான விடை எழுதினாய் என்பதற்கு பதில் சொல்லு. மற்ற மாணவனும் எழுதினான் என்பது பதில் அல்ல என்று ஆசிரியர் அவனுக்கு கூறினார்.
இந்த சம்பவத்தை பார்க்கின்ற யாரும் அந்த மாணவன் உரிய பதில் கூறவில்லை என்பதை ஒத்துக்கொள்வார்கள்.
ஆனால் கனடாவில் சில பெரிசுகள் அந்த மாணவன் கெட்டிக்காரன் என்றும் அற்புதமான பதிலை சொல்லிவிட்டான் என்றும் கூறுகின்றனர்.
ஆம். கனடாவில் சுமந்திரன் பேசிய பேச்சும் இந்த மாணவன் கூறிய பதில் போன்றே இருக்கிறது.
தமிழீழத்தை ஏன் கைவிட்டீர்கள் என்று கேட்டால் அதற்கு பதில் கூறாமல் பிரபாகரன் கைவிட்டபோது ஏன் கேட்கவில்லை என்று திருப்பி கேட்கிறார்.
சமஸ்டியை ஏன் கைவிட்டீர்கள் என்று கேட்டால் தந்தை செல்வா சமஸ்டியை கேட்டபோது அதை எதிர்த்தவர் ஆனந்தசங்கரி என்கிறார்.
நீங்கள் ஏன் இதைச் செய்கிறீர்கள் என்று கேட்டால் கஜேந்திரகுமாரும் இதைத்தானே செய்கிறார் என்பதாகNவு அவர் பதில் இருக்கிறது.
இவ்வாறு சுமந்திரன் பதில் சொல்வதையே சில பெரிசுகள் ஆகா அற்புதம் என்று புகழ் பாடுகின்றனர்.
இதுகூடப் பரவாயில்லை. இதைவிடக் கேவலம் என்னவென்றால், சுமந்திரன் சம்பந்தர் அய்யாவை சாத்திரியார் என்று நக்கல் அடிப்பதுகூடத் தெரியாமல் இந்த பெரிசுகள் கைதட்டியிருப்பது.
தீர்வு எப்போது வரும் என்று யாராவது தன்னைக் கேட்டால் அதை சாத்திரிமாரிடம் கேளுங்கள் என்று தான் சொல்லி வருவதாக சுமந்திரன் கிண்டலாக கூறினார்.
ஏமக்கு தெரிந்தவரையில் தீர்வு ஒரு வருடத்தில் வரும் , இருவாரத்தில் நல்ல செய்தி வரும், அடுத்த தீபாளிக்குள் வரும் என்று கூறிவருபவர் சம்பந்தர் அய்யா மட்டுமே.
எனவே சுமந்திரன் கூற்றுப்படி சாத்திரி சம்பந்தர் அய்யாவை கைதட்டி கிண்டல் பண்ணியிருப்பவர்கள் அவர் கட்சியைச் சேர்ந்த பெரிசுகளே.
சுமந்திரன் இதுவரை என்ன பேசிவந்தாரோ அதையேதான் கனடாவிலும் பேசியுள்ளார்.
இதுவரை புலிகள் கொலைகாரர் என்றார். புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பும் விசாரிக்க வேண்டும் என்றார். முஸ்லிம் வெளியேற்றம் புலிகளின் இனச் சுத்திகரிப்பு என்றார்.
இப்போது, பிரபாகரன் தமிழீழத்தை கைவிட்டபோது ஏன் யாரும் கேட்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
அதேவேளை, நடந்தது இனப்படுகொலை அல்ல என்கிறார். சர்வதேச விசாரணை தேவையில்லை என்கிறார். இலங்கை அரசுக்கு அவகாசம் பெற்றுக் கொடுக்கிறார்.
பௌத்தத்திற்கு முன்னுரிமைக்கு சம்மதம் தெரிவிக்கின்றார். சிங்கக்கொடி ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார்.
மக்கள் தெருவில் நின்று போராடுகின்றனர். ஆனால் நடப்பது நல்லாட்சி என்று அவர் உலகம் முழுவதும் சென்று கூறுகிறார்.
இவ்வாறு அவருடைய ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு பேச்சும் தமிழ் இனத்திற்கு எதிராகவே இருக்கின்றது.
ஆனால் சில பெரிசுகள் அவரை “ஆகா ஓகோ அற்புதமான தலைவர்” என்று புகழ்கின்றன.

தமிழர்களே!

தமிழர்களே!
•முதலாவது, நான் தமிழன் இல்லை. நான் பார்ப்பான். நான் ஏன் தமிழ் தாய்க்கு மரியாதை செலுத்த வேண்டும்?
•இரண்டாவது, கடவுள் மொழி சமஸ்கிருதம். நீச மொழி தமிழ். எனவே நீச மொழியின் தாய் வாழ்த்திற்கு நான் ஏன் மதிப்பு கொடுக்க வேண்டும்?
•மூன்றாவது, தமிழ் ஆட்சி மொழி இல்லை. தமிழ் நீதிமன்ற மொழி இல்லை. தமிழ் கல்வி மொழி இல்லை. தமிழ் கோயில் பூசை மொழி இல்லை. அப்புறம் என்ன ம-- - க்கடா நான் தமிழ் தாய்க்கு மரியாதை கொடுக்க வேண்டும்?
•கடைசியாக, நடிகை சொர்ணமால்யா வந்தால் எழுந்து நிற்பேன். அது ஏன் என்று மட்டும் கேட்காதீர்கள்?
இப்படிக்கு,
கைபர் கணவாய் ஊடாக பிழைக்க வந்த
விஜேந்திர சங்கராச்சாரியார்.

•சுமந்திரனை எதிர்ப்பது கருத்துச் சுதந்திர மறுப்பா?

•சுமந்திரனை எதிர்ப்பது
கருத்துச் சுதந்திர மறுப்பா?
லண்டனில் இளைஞர்களால் சுமந்திரனுக்கு காட்டப்பட்ட எதிர்ப்பை கருத்துச் சுதந்திரத்திற்கான எதிர்ப்பாக சிலர் சித்தரிக்கின்றனர்.
இன்னும் சிலர், சுமந்திரனை எதிர்ப்பவர்கள் மகிந்த ராஜபக்சவை எதிர்ப்பார்களா என்று கேட்கிறார்கள்.
வேறு சிலர், கூட்டத்தை ரத்து செய்து தமிழ் இனத்திற்கு ஏற்படவிருந்த அவமானத்தை சுமந்திரன் தவிர்த்துவிட்டார் என்று சுமந்திரன் புகழ் பாடுகின்றனர்.
இந்த கருத்துக் கந்தசாமிகளுக்கு சில விடயங்களை சுட்டிக்காட்ட வேண்டும்.
(1)அண்மையில் இந்தியாவில் குஜராத் தேர்தலின்போது வாக்கு கேட்டுச் சென்ற பாஜக வேட்பாளருக்கு விவசாயிகள் செருப்பு மாலை அணிவித்தார்கள்.
(2)புஷ் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது கூட்டமொன்றில் உரையாற்றியவேளை ஊடகவியலாளர் ஒருவர் சப்பாத்தை அவர் மீது எறிந்தார்.
(3)முன்னாள் பாதுகாப்பு செயலர் நாராயணன் சென்னையில் உரையாற்றும்போது பிரபாகரன் என்ற இளைஞன் செருப்பால் அடித்தான்.
இவை உலக அளவில் நடந்த சில சம்பவங்கள். இதே போன்று ஈழ வரலாற்றிலும் அரம்ப காலங்களில் நடந்துள்ளன.
•மாவட்டசபை தீர்வை ஆதரித்து கிராம யாத்திரை சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் இளைஞர்களால் நடத்தப்பட்டிருக்கிறது.
•கரவெட்டிக்கு வந்த அமிர்தலிங்கம் ஜீப்பிற்கு குஞ்சர்கடையடியில் கல்வீச்சு நடத்தப்பட்டது.
•அரசடியில் நடந்த கூட்டத்தில் சிவசிதம்பரம் முன்னிலையில் வண்ணணை ஆனந்தனுக்கு அடி போடப்பட்டது.
•வல்வெட்டித்துறையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஜீப் வண்டி கொளுத்தப்பட்டது.
•யாழ் முற்றவெளியில் உண்ணாவிரதம் இருந்த தமிழர் விடுதலைக்கூட்டணி பிரமுகர்களுக்கு இளைஞர்களால் உணவு பலவந்தமாக தீத்தப்பட்டது.
இப்படி பல உதாரணங்களை கூறமுடியும். அப்போது யாரும் இதனை கருத்துச் சுதந்திரத்திற்கான மறுப்பாக குறிப்பிடவில்லை.
அதுமட்டுமல்ல அப்போது இதனை ஆதரித்த இந்த கருத்துக் கந்தசாமிகளே இப்போது சுமந்திரனுக்கு நிகழும்போது கருத்துக்(நீலி) கண்ணீர் வடிக்கின்றனர்.
நாம் சுற்றி வளைத்து பேச விரும்பவில்லை. எம்மைப் பொறுத்தவரையில் நேரடியாகவே கூறவிரும்புகிறோம்.
எதிரிக்கும் துரோகிக்கும் ஜனநாயகத்தை வழங்குவது என்பது நாம் தொடர்ந்து அடிமையாக இருக்கும்படி கோருவது ஆகும்.
வன்முறை மூலம் புரட்சியை மேற்கொள்வதோடு கைப்பற்றும் ஆட்சி பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சியாக இருக்க வேண்டும் என்ற காரல் மாக்சின் கூற்றை நாம் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
எதிரிகளையும் துரோகிகளையும் எமக்கு தெரிந்த வழிகளில், எமக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எமக்கு வெற்றி கிடைக்கும்வரை தொடர்ந்து தாக்கிக்கொண்டே இருப்போம்.

வைதீக பார்ப்பானைவிட ஆபத்தானவன் பகுத்தறிவு பேசும் பார்ப்பான்!

•வைதீக பார்ப்பானைவிட
ஆபத்தானவன் பகுத்தறிவு பேசும் பார்ப்பான்!
வைரமுத்து பிரச்சனையில் மௌனம் காத்த நடிகர் கமல் விஜேந்திரர் பிரச்சனையில் ஓடிவந்து குரல் கொடுத்துள்ளார்.
தியானம் செய்வது சங்கராச்சாரியாரின் கடமை என்று அவர் கூறியுள்ளார்
கண்ட இடத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாட வேண்டாம் என்று வேற அட்வைஸ் செய்துள்ளார்.
கமல் அவர்களே!
•கண்ட இடத்தில் தியானம் செய்யக்கூடாது என்று ஏன் உங்களால் விஜேந்திரருக்கு கூறமுடியவில்லை?
•கண்ட இடத்தில் தேசியகீதம் பாடலாம். அந்த இடத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடக்கூடாதா?
•ஆளுநர் கலந்துகொள்ளும் கூட்டம் கண்ட இடம் என்றால் தமிழ்தாய் வாழ்த்து பாடுவதற்குரிய உகந்த இடம் எது?
இவர்கள் எல்லாம்
இருப்பது தமிழ்நாட்டில்
பிழைப்பது தமிழனை வைத்து
தின்பது தமிழன் போடும் சோறு
சுவாசிப்பது தமிழ் மண் காத்து
ஆனால்
தமிழ்தாய்க்கு மரியாதை கொடுக்க மாட்டார்களாம்.
தேசியகீதத்திற்கு மரியாதை கொடுக்காவிட்டால்
பாகிஸ்தான் போ என்று கூறும் இவர்களை
தமிழ்தாய்க்கு மரியாதை கொடுக்காவிட்டால்
தமிழ்நாட்டைவிட்டு போ என்று
எங்களாலும் கூறமுடியும் அல்லவா!

•ஆண்டாளுக்காக பொங்கியவர்கள் தமிழ்தாய்க்காக பொங்குவார்களா?

•ஆண்டாளுக்காக பொங்கியவர்கள்
தமிழ்தாய்க்காக பொங்குவார்களா?
ஆண்டாளுக்காக பொங்கியெழுந்த எச்ச.ராசா ஏன் இன்னும் தமிழ்தாய்க்காக பொங்கியெழவில்லை?
வைரமுத்துவை “வேசிமகன்” என்று ஏசிய எச்ச.ராசா விஜேந்திர சங்கராச்சாரியை “வேசிமகன் என்று ஏன் ஏசவில்லை?
விஜேந்திரரின் உண்மையான பெயர் ஜேசப் விஜய் என்று ஏன் இன்னும் அவர் கண்டுபிடிக்கவில்லை?
விஜேந்திரர் மன்னிப்பு கேட்காவிடில் தெருவில் அவர் தலை உருளும் என்றோ அல்லது தான் தீக்குளிப்பேன் என்றோ ஏன் அறிக்கை விடவில்லை?
ஆண்டாளுக்காக குரல் கொடுத்த நித்தியானந்தாவின் சீடர்கள் ஏன் தமிழ்தாய்க்காக இன்னும் குரல் கொடுக்கவில்லை?
வைரமுத்து தன் தாய்க்குத்தான் பிறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்ட இவர்கள், விஜேந்திரர் பிறப்பிற்கு ஏன் இன்னும் ஆதாரம் கேட்கவில்லை?
வைரமுத்து ஆம்பிளைதானா என்பதை வந்து நிரூபிக்கும்படி கேட்டு வீடியோ விட்ட இவர்கள் விஜேந்திரருக்கு ஏன் இன்னும் வீடியோ விடவில்லை?
வைரமுத்துவை கெட்ட வாhத்தைகளால் திட்டி பதிவு போட்ட இவர்களால் ஏன் சங்கராச்சாரியாரை திட்டி பதிவு போட முடியவில்லை?
ஏனெனில் சங்கராச்சாரியார் பார்ப்பனர் என்பதைத்தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
தமிழ்தாய்க்கு மரியாதை கொடுக்க மறுக்கும் இவர்களை தமிழ்நாட்டைவிட்டு விரட்டியடிக்க வேண்டும்!

•வந்தே மாதரம் அல்ல வந்தே ஏமாத்திறம்!

•வந்தே மாதரம் அல்ல
வந்தே ஏமாத்திறம்!
தமிழ்நாடு அளுநர் குஜராத்தில் இருந்து வந்தவர். இம்முறை தமிழக குடியரசுதின விழாவில் குஜராத் ஆதிக்கம் அதிகம்.
ஆனால் யாழ் இந்திய தூதர் நடராஜன் ஒரு தமிழர். இருந்தும் அவர் அசாமில் இருந்து கலைஞர்களை இறக்குமதி செய்துள்ளார்.
இவர்களுக்கு தமிழ் கலைஞர்கள் கிடைக்கவில்லையா அல்லது தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க விருப்பமில்லையா?
சரி , அது கிடக்கட்டும். அவர்கள் தங்கள் விருப்பம் போல் கொண்டாடி தொலைக்கட்டும்.
ஆனால் அங்கு கொடுக்கப்படும் வடைக்கும் ரீ க்கும் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு ஓடும் நம்மவர்களுக்கு புத்தி இல்லையா?
கடந்த வாரம் தமிழ்நாட்டில் கரூர் அருகில் ஈழஅகதி இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்.
விசாரணைக்காக பொலிசாரினால் பிடித்துச்செல்லப்பட்ட அந்த அப்பாவி அகதி அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறான்.
இதற்கு நீதி விசாரணை வேண்டும் என்று அகதிமுகாமில் இருந்த மக்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்திய அகதிகளையும் பொலிசார் அடித்து விரட்டியுள்ளனர். அந்த இளைஞன் தற்கொலை செய்துள்ளதாக மூடி மறைத்துள்ளனர்.
அதுமட்டுமல்ல தமிழக பொலிசார் அகதிகளைப் பார்த்து “ தேவடியா மக்களே, அடித்துப் போட்டால் ஏன் என்று கேட்க ஆள் இல்லாத அகதி நாய்களே” என்று ஏசியுள்ளார்கள்.
அது உண்மைதான். தொடர்ந்து ஈழ அகதிகள் துன்புறுத்தப்படுகின்றார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அதை தட்டிக் கேட்க யாரும் இல்லை.
ஆனால் சக ஈழத் தமிழன் தமிழகத்தில் கொல்லப்படும்போது அது குறித்து கொஞ்சம்கூட அக்கறை இன்றி வடைக்கும் தேநீருக்கும் யாழ் இந்திய தூதுவரின் குடியரசு விழாவிற்கு அலையும் நம்மவர்களை என்னவென்பது?
யாராவது ஒருவர்கூட யாழ் இந்திய தூதரிடம் தமிழகத்தில் ஈழ அகதிகள் துன்புறுத்தப்படுவது குறித்து ஏன் கேட்க தோன்றவில்லை?
யாழ் இந்திய தூதரின் விழாக்களை ஓடிச் சென்று சேகரித்து பிரசுரம் செய்யும் ஊடகவியலாளர்கள்கூட ஏன் கேட்கவில்லை?
கேட்டால் அப்புறம் இந்திய தூதரால் எறியப்படும் பிஸ்கட் துண்டுகள் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சமா?
ஆம். இந்திய தூதுவர் பாடுவது “வந்தே மாதரம்” அல்ல “வந்தே ஏமாத்திறம்”!
குறிப்பு-
சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்படுவது எப்போது?
யாராவது யாழ் இந்திய தூதரிடம் இதைக் கேட்பீர்களா?

Old is Gold ?

Old is Gold ?
கனடாவில் சுமந்திரனை வரவேற்ற இளைஞர்கள்(?) இவர்கள்.
சுமந்திரன் பேசி முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டினார்கள் என்று ஒரு இளைஞர்(?) எழுதியிருந்தார்.
இந்த இளைஞர்கள்(?); எழுந்து நிற்பதற்கு எந்தளவு சிரமப்பட்டிருப்பார்கள் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.
ஆனால் 700 பேர் வந்த அரங்கு நிறைந்த கூட்டம் என்று எப்படியடா உங்களால் எழுத முடிகிறது?
எங்கே தைரியம் இருந்தால் அந்த போட்டோ ஒன்றை போடுங்க பார்க்கலாம்?
இதில ஒரு இளைஞர்(?) அடிக்கடி இந்தியா சென்று வருகிறாராம். ஒருவேளை இந்தியாவில் சேலம் சித்தரின் லேகியம் அதிகமாக சாப்பிட்டுவிட்டார் போல் இருக்கிறது.
அவர் சுமந்திரனைக் கண்டால் மட்டுமல்ல சுமந்திரன் பெயரைச் சொன்னாலே தானாக எழும்பி நிற்கிறாராம்.
தங்களின் சுயநலனுக்காக காரியம் சாதிப்பதற்காகவே இந்த இளைஞர்கள்(?) சுமந்திரனுக்கு காக்கா பிடிக்கிறார்கள்.
இவர்கள் யார் யார் என்ன காரியம் பெற்றார்கள் என்ற விபரத்தை விரைவில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம்.
இப்படி பல பேரைக் கடந்துதர்னே எமது போராட்டம் வந்திருக்கிறது. இனியும் அவ்வாறே கடந்து செல்லும்.
குறிப்பு- இளைஞர் என்ற இடத்தில் கிழவர் என்று உங்களுக்கு தோன்றினால் அதற்கு நாம் பொறுப்பு அல்ல.

ஒழுங்காய் இருங்கடா என்று சொன்னால் கேட்டால்தானே?

ஒழுங்காய் இருங்கடா என்று சொன்னால் கேட்டால்தானே?
இப்ப பார், கண்ட கண்ட நாய் எல்லாம் வந்து நியாயம் பேசுது!
இண்டைக்கு அஞ்கஜன் கேட்கிறான். நாளைக்கு அவன் தலைவன் மகிந்த ராஜபக்ச கேட்பான்.
தெரியாமத்தான் கேட்கிறன். உங்களுக்கு இதெல்லாம் தேவைதானாடா?

•ரவுடி, சாமியார் ஆகலாம் ஆனால் சாமியார் ரவுடி ஆகலாமா?

•ரவுடி, சாமியார் ஆகலாம்
ஆனால் சாமியார் ரவுடி ஆகலாமா?
ஆம். ஆகலாம் என்கிறார் ஜீயர் சுவாமிகள். தங்களாலும் கல் எறிய முடியும். சோடா பாட்டில் வீச முடியும் என்கிறார்.
உண்மைதான். ஆனால் அவர் இன்னும் சில விடயங்களை கூறாமல் விட்டுவிட்டார்.
வேட்டியை மடிச்சு கட்டினால் தானும் ரவுடிதான் என்றார் எச்ச ராசா.
ஆனால் வேட்டியை மடிச்சுக் கட்டாமலே தாங்கள் ரவுடி என்கிறார் ஜீயர் சுவாமிகள்.
காஞ்சிபுரத்தில் ஒரு சாமியார் சங்கரராமனைக் கொலை செய்தார்.
அதே காஞ்சிபுரத்தில் ஒரு சாமியார் கர்ப்பக்கிரகத்தில் மேட்டர் (சல்சா) பண்ணினார்.
வட இந்தியாவில் ஒரு பெண் சாமியாரே வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்தியா முழுவதும் 66 சாமியார்கள் கிரிமினல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சாமி அல்ல, ஆசாமிகள் என்று தொடர்ந்து நாம் கூறி வருகிறோம்.
அது உண்மைதான் என்று இப்ப அவர்களே தமது வாயால் ஒத்துக்கொள்கின்றனர்.
ஆனால் இங்கு எமது சந்தேகம் என்னவெனில், இறைநம்பிக்கை;கு எதிராக யார் பேசினாலும் இனி பொறுமை காக்க மாட்டோம் என இந்த ஜீயா சாமியார் எச்சரிக்கிறார்.
இவர்கள் தமது இறைவன் எல்லாம் வல்லவன் என்கிறார்கள். அப்படியென்றால் தனக்கு எதிராக பேசுபவர்களை அந்த இறைவன் தண்டிப்பார்தானே?
இவர்கள் எதற்கு தண்டனை கொடுக்க முற்படவேண்டும்?
அப்படியென்றால் இவர்களுக்கே தமது இறைவன் மேல் நம்பிக்கை இல்லையா?
உண்மை என்னவெனில,; இறைவன் ஒருவன் இருந்தால் அவனிடம் முதல் தண்டனை பெறுபவர்கள் இவர்களாகவே இருப்பர்.
ஆனால் இவர்களுக்கு ஒரு விடயத்தை கூறவேண்டும், ஒரு வேலையும் செய்யாமல் குந்தியிருந்து ஓசிச் சோறு சாப்பிடும் உங்களுக்கே இந்தளவு தெனாவெட்டு இருக்குமென்றால் உழைத்து சாப்பிடும் தமிழனுக்கு எந்தளவு இருக்கும்?
கவனம். மண்டை பத்திரம்!

•லண்டனில் விரட்டப்பட்ட பார்ப்பணியம்!

•லண்டனில் விரட்டப்பட்ட பார்ப்பணியம்!
இன்று லண்டனில் இந்திய தூதரலாயத்திற்கு முன் ஆண்டாளுக்காக போராடுவதாக கூறிக்கொண்டு சிலர் வந்தனர்.
இதையறிந்த லண்டன் அம்பேத்கார் பெரியார் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்று தமிழ்தாய் வாழ்த்தை அவமதித்த சங்கராச்சாரியாருக்கு எதிராக கோஷம் போட்டார்கள்.
40 பேர் அளவில் வந்த இந்துத்துவா கும்பல் வெறும் நான்கு பேர் கொண்ட தமிழர்களை கண்டு ஓடிவிட்டனர்.
பார்ப்பணியத்தின் சூழ்ச்சியை முறியடித்து அவர்களை விரட்டியடித்த இந்த தமிழர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்.
இவர்களுக்கு எமது வாழத்துக்களை தெரிவிப்போம்.
இனிவரும் காலங்களில் அனைத்து தமிழர்களும் ஒன்றினைந்து போராடுவோம்.
வெற்றி உறுதி!

•அண்ணா மீது எச்ச.ராசாவுக்கு கோபம் ஏன்?

•அண்ணா மீது எச்ச.ராசாவுக்கு கோபம் ஏன்?
நண்பர் ஒருவர் ஒரு வீடியோவை அனுப்பியிருந்தார். அதில் எச்ச ராசா அறிஞர் அண்ணாவை திருடன் என்று ஏசுகிறார்.
முத்துராமலிங்கதேவர் தடுத்திருக்காவிடில் அண்ணா மதுரை மீனாட்சியின் வைர மூக்குத்தியை திருடியிருப்பான் என ஒருமையில் தரக்குறைவாக எச்ச.ராசா பேசுகிறார்.
இதுவரை பெரியாரை, வைரமுத்துவை என தரக்குறைவாக பேசிவந்த எச்ச.ராசா திடீரென அண்ணாவை ஏன் அவ்வாறு பேசுகிறார்?
இன்றும்கூட அதிகளவு மக்கள் கூடிய மரண நிகழ்வாக அண்ணாவின் மரண ஊர்வலம்தானே கிண்ணஸ் புத்தகத்தில் இருக்கிறது.
தமிழக மக்கள் பெரிதும் மதிக்கும் அண்ணாவை தமிழ்நாட்டில் வைத்து திருடன் என்று கூறும் அளவிற்கு எச்ச.ராசா விற்கு எப்படி தைரியம் வந்தது?
ஒரேயொரு காரணம்தான். அண்ணா கூறிய ஒருவரிதான் இன்றும் எச்ச.ராசாக்களுக்கு கோபத்தை வரவழைக்கிறது.
அறிஞர் அண்ணா கூறிய அந்த வரி இதோ,
“காடு கெட ஆடு விடு
ஆறு கெட நாணல் இடு
ஊர் கெட பூணுல் போடு”
பூணூல் போட்டால் ஊர் கெடும் என்று அண்ணா கூறியதாலேயே எச்ச.ராசா அவரை திருடன் என்று இன்றும் ஏசிக்கொண்டிருக்கிறார்.
ஆனால் அண்ணா அன்று கூறியது இன்றும் உண்மைதான் என்பதை எச்ச.ராசா போன்றவர்கள் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதனால்தான் பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் பாம்பை விடு. பார்ப்பானை அடி என்று தமிழக மக்கள் கூறுகிறார்கள்.
ஏனெனில் பாம்பின் விஷத்தை விடக் கொடியவையாக இந்த பார்ப்பணர்களின் செயல்கள் இருக்கின்றன.
பீகாரில் இருந்து பிழைக்க வந்த எச்ச.ராசா குடும்பம் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழனைப் பார்த்து “ வேசி மகன்” என்கிறது. “வைர மூக்குத்தி திருடன்” என்கிறது.
வேட்டியை மடித்துக்கட்டினால் தானும் ரவுடிதான் என்று வேற சவால் விடுகிறார்.
எந்தப் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தமிழன் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை எச்ச.ராசா உணர வேண்டும்.

முத்துக்குமாரின் தியாகம் வீணாகிப் போய்விட்டதா?

முத்துக்குமாரின் தியாகம் வீணாகிப் போய்விட்டதா?
ஈழத்தில் சிவகுமாரன் என்ற போராளி தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் உதவி கேட்டபோது அவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை. இறுதியில் வேறு வழியின்றி வங்கியை கொள்ளையிட அவர் முயன்றபோது பொலிஸ் கைதில் இருந்து தப்பிக்க சயனைட் விழுங்கி தற்கொலை செய்துகொண்டார்.
அதன் பின்னர் உதவி செய்ய மறுத்த அதே தமிழர்விடுதலைக் கூட்டணி சிவகுமாரனை தியாகி என்று குறிப்பிட்டு பிரச்சாரம் செய்து தேர்தலில் வெற்றிவாகை சூடினார்கள்.
தமிழகத்தில் முத்தக்குமார் உட்பட 19 பேர் ஈழத் தமிழர்களுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்தார்கள். ஆனாலும் இந்திய அரசையோ அல்லது தமிழக அரசையோ ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாற்ற முடியவில்லை. ஈழத் தமிழர்களையும் அழிவில் இருந்து காப்பாற்ற முடியவில்லை.
எதிரிக்கு எந்தவித தீங்கையும் இழைக்காத இந்த தற்கொலைகளை அரசு கொஞ்சம்கூட மதிப்பதில்லை. இத் தற்கொலைகளுக்கு அஞ்சுவதில்லை. எனவேதான் இவர்களுக்கு நினைவு சின்னம் அமைப்பதையோ அல்லது வீர வணக்கம் செலுத்துவதையோ அரசு தடுப்பதில்லை.
முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தவும் நினைவு சின்னம் அமைக்கவும் அனுமதிக்கும் அரசு தோழர் தமிழரசனுக்கு அனுமதிப்பதில்லை. ஏனெனில்,
•தோழர் தமிழரசன்தான் முதன் முதலில் தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு கோரி குடமுருட்டியில் ராஜீவிற்கு குண்டு வைத்தவர்.
•தோழர் தமிழரசன்தான் முதன் முதலில் பாலஸ்தீன விடுதலை அமைப்பை அங்கீகரித்ததுபொல் ஈழவிடுதலை அமைப்புகளை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்று என மருதையாற்று பாலத்திற்கு குண்டு வைத்தவர்.
•தோழர் தமிழரசன்தான் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு ஒருபோதும் உதவாது. அது ஈழத் தமிழர்களை அழிக்க இலங்கை அரசுக்கு உதவும் என்பதை கூறியவர்.
•தோழர் தமிழரசன்தான் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழக தமிழர்களும் ஈழத் தமிழர்களும் ஒருமித்து ஆயுதம் ஏந்த வேண்டும் என்று கூறியவர்.
•தோழர் தமிழரசன்தான் ஒரு அடிமை தனது அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும் என்று கூறியவர்.
•தோழர் தமிழரசன்தான் தமிழக விடுதலையை முன்னெடுப்பதே ஈழ விடுதலைக்கு செய்யும் உதவியாகும் என்று கூறியவர்.
ஈழத்தில் இந்திய அமைதிப்படை தமிழ் மக்களை கொன்று குவித்தபோது தமிழ் பெண்களை பாலியல் வல்லறவு செய்தபோது இந்திய தொலைக்காட்சி பொய்ப் பிரச்சாரம் செய்தது. அந்த பொய்ப் பிரச்சாரத்தை எதிர்த்து கலைஞர் கருணாநிதி டிவி பெட்டியை உடைத்தார்.
தோழர் தமிழரசனின் தமிழ்நாடுவிடுதலைப்படையை சேர்ந்த தோழர் மாறன் கொடைக்கானல் டிவி டவருக்கு குண்டு வைத்தார். அப்போது அவர் குண்டு வெடித்து மரணமடைந்தார்.
இங்கு எனது கேள்வி என்னவெனில,
வெள்ளைக்கார்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் குண்டு வீசிய பகத் சிங்கை தியாகி என்கிறார்கள். அனால் கொள்ளைக்கார இந்திய அரசுக்கு எதிராக டிவி டவருக்கு குண்டு வீசிய மாறனை பயங்கரவாதி என்கிறார்களே அது ஏன்?
மாறன் தமிழன் என்பதாலா? அல்லது
மாறன் தமிழர்களுக்காக குண்டு வீசியதாலா?