Friday, January 19, 2018

•ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் யாழ் இந்திய தூதுவர்!

•ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் யாழ் இந்திய தூதுவர்!
ஒரு தமிழனை வைத்து ஈழத் தமிழ் இனத்தை கூறுபோட முடியும் என நினைத்தது இந்திய அரசு.
நடராஜன் என்ற தமிழ் இன “கருங்காலி”யை இந்திய அரசானது யாழ் இந்திய தூதராக நியமித்தது.
கடந்த 3 வருடங்களாக அவரும் தமிழ் இனத்திற்கு எதிராக அனைத்து வேலைகளையும் செய்தார்.
ஆனாலும் தமிழ் மக்கள் அவருக்கு ஏமாற்றத்தையும் தோல்வியினையுமே கொடுத்துள்ளனர்.
தங்கள் நோக்கம் நிறைவேறாதது கண்ட இந்திய அரசு, நடராஜனுக்கு பணி மாற்றம் செய்துள்ளது.
பணி மாற்றம் பெற்றுச் செல்லும் நடராஜனுக்கு தமிழ் மக்கள் யாரும் பிரியாவிடை விழா நடத்தவில்லை.
இது கண்டு அதிர்ச்சி அடைந்த இலங்கை அரசு தனது ஆளுனர் மூலம் நடராஜனுக்கு ஒரு பிரியாவிடை விழாவினை நடத்தியுள்ளது.
பிரியாவிடை பெற்றுச் செல்லும் நடராஜனுக்கு வாழ்த்து பாடுவதற்குகூட ஒருவர் கிடைக்கவில்லை.
இறுதியாக, சிங்கள ஆளுனரே தமிழ் சினிமா பாட்டு பாடியுள்ளார். அந்த பாட்டைக் கேட்ட நடராஜன் நிச்சயம் நொந்திருப்பார். (பாட்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது)
அற்ப சலுகைகளைக் காட்டி ஈழத் தமிழ் இனத்தை அடிமைப்படுத்த முடியாது என்ற உண்மையை நடராஜன் டில்லி அரசுக்கு எடுத்துக் கூறுவார் என நம்புகிறோம்.
இனிவரும் தூதுவர்களும் நடராஜன் போல் நடக்க நினைத்தால் அவர்களும் நடராஜன் பெற்ற பாடத்தையே பெறுவார்கள்.

No comments:

Post a Comment