Wednesday, January 31, 2018

• தோழர் லெனின் அவர்களின் 94வது நினைவு தினம்(21.01.2018)

• தோழர் லெனின் அவர்களின் 94வது நினைவு தினம்(21.01.2018)
1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதரின் உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர்.
லண்டன் மாநகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிரான்சிலும், ஜெர்மனியிலும் கூடி இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். 
இந்தியாவிலும் சீனாவிலும் கூட சில இடங்களில் இந்தக் காட்சிகள் நடக்கின்றன.
அந்த 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ம் நாள், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் கண்ணீர் சிந்திய நாள். அவர்கள் அனைவரின் கவனமும் சோவியத் ரசியாவை நோக்கி இருந்தது.
சோவியத் ரசியா அன்றைய தினம் மயான அமைதியில் கழிந்தது. ஒவ்வொரு வீடும் இழவு வீடு போல காட்சியளித்தது. பெரியவர்களும், குழந்தைகளும் அழுது தீர்த்தனர். பெண்கள் ஒப்பாரி வைத்தனர்.
சரியாக மாலை 4.00 மணி வானொலியில் ஒரு அறிவிப்பு வந்தது. “எழுந்து நில்லுங்கள் தோழர்களே! தோழர் லெனின் அடக்கம் செய்யப்படுகிறார்.” சோவியத் ரசிய மக்கள் அனைவரும் எழுந்து நின்றனர்.
அமெரிக்க ஐரோப்பிய தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஐந்து நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
உலக மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர் லெனினுடைய சவ அடக்கம் இப்படித்தான் நடைபெற்றது. உலகமே எழுந்து நின்று அவருக்கு இறுதி விடைகொடுத்து அனுப்பியது.
லெனினுக்கு முன்னரும் சரி, அவருக்குப் பின்னரும் சரி, எந்தத் தலைவருக்கும் இந்த மரியாதை கிடைக்கவில்லை. எந்த நாட்டுத் தலைவராக இருந்தாலும் அவருடைய மரணம் அந்த நாட்டு மக்களை மட்டுமே பாதிக்கும். ஆனால் லெனினுடைய மரணம் உலகையே குலுக்கியது.
•நூலகங்களில் உறங்கிக் கிடந்த மாக்சியத்தை நடைமுறைப்படுத்திக் காட்டிய மாபெரும் ஆசான் தோழர் லெனின் அவர்களின் 94வது நினைவு தினம் இன்று ஆகும்.
•ரஸ்சிய பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமையேற்று மாபெரும் ரஸ்சிய புரட்சியை வெற்றிபெற வைத்தவர். உலக பாட்டாளி வர்க்கத்திற்கு நம்பிக்கை ஒளி தந்தவர் தோழர் லெனின்
•முதலாளி வர்க்க கொடுமைகள் ஒழிய, பாட்டாளி வர்க்கம் ஆட்சியைப் பிடிக்க, ஆயுதப் போராட்டம் மூலமே சாத்தியம் என்பதை நிரூபித்தவர் தோழர் லெனின்
•தனி ஒரு நாட்டில் புரட்சி சாத்தியம் இல்லை என்று கூறிய டிரொக்சியின் அகில உலகப் புரட்சியை தத்துவார்த்த ரீதியாகவும, நடைமுறைரீதியாகவும் தோற்கடித்தவர் தோழர் லெனின்.
•தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வாக சுயநிர்ணய உரிமையை முன்வைத்தவர் தோழர் லெனின். இதன் மூலம் சிறுபான்மை இனங்களின் நம்பிக்கையைப் பெற்றவர் தோழர் லெனின்.
•திரிபுவாதிகளை அம்பலப்படுத்தினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஜக்கியத்தை ஏற்படுத்தியவர் தோழர் லெனின்.

No comments:

Post a Comment