Wednesday, January 31, 2018

•“மாமன்னர்” ஆர்னோல்ட் உம் “அமைச்சா”; எடுபிடி யும்.

•“மாமன்னர்” ஆர்னோல்ட் உம் “அமைச்சா”; எடுபிடி யும்.
மன்னர் ஆர்னோல்ட்- அமைச்சரே! மாதம் மும்மாரி பொழிகிறதா? இன்று நாம் நகர்வலம் செல்ல வேண்டும் அல்லவா?
அமைச்சர் எடுபிடி – அரசே! மாதம் மும்மாரி பொழிகிறதோ இல்லையோ ஆனால் கசிப்பு ஆறு நன்கு ஓடுகிறது. கேரள கஞ்சாவும் நிறைய வருகிறது.
மன்னர் ஆர்னோல்ட்- அமைச்சரே! மக்கள் எல்லோரும் நடக்கும் “நல்லாட்சி”யில் மகிழ்வாக இருக்கிறார்கள்தானே?
அமைசர் எடுபிடி- கடன் கொடுமை தாங்க முடியாமல் மக்கள் தற்கொலை செய்கின்றனர். இதுவா நல்லாட்சி? என சயிக்கிள்கார தம்பியவை கேட்கிறார்கள் மன்னா?
மன்னர் ஆர்னோல்ட்- தலைவர் மாவை சேனாதிராசாவின் பிள்ளைகள் மகிழ்வாக இருக்கிறார்கள். சம்பந்தர் அய்யாவின் பிள்ளைகள் மகிழ்வாக இருக்கிறார்கள். அப்படியென்றால் தமிழ் மக்கள் மகிழ்வாக இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.
அமைச்சர் எடுபிடி- மக்களுக்கு குடியிருக்க வீடு இல்லை. உங்களுக்கு எதற்கு வீட்டிற்கு புள்ளடி போட வேண்டும் என கேட்கிறார்கள் மன்னா?
மன்னர் ஆர்னோல்ட்- என்ன விசர்க்கதை கதைக்கினம்? உவைக்கு வீடு கிடைக்கவா நாம் எலெக்சன் கேட்கிறம்? மாவை அண்ணைக்கு 3 வீடு. சம்பந்தர் அய்யாவுக்கு 3 பங்களா. அதுமாதிரி நானும் ஒரு 3 வீடு கட்ட வேண்டாமா?
அமைச்ர் எடுபிடி- மன்னரே! நாம் அடுத்த வீதியால் நகர்வலம் செல்வோம்.
மன்னர் ஆர்னோல்ட்- ஏன் அமைச்சரே இந்த வீதிக்கு என்ன பிரச்சனை?
அமைச்சர் எடுபிடி- இந்த வீதியில் காணாமல்போனவர்களின் உறவுகள் ஒரு வருடமாக போராட்டம் நடத்துகிறார்கள். உங்களைக் கண்டால் நாக்கைப் பிடுங்கிறமாதரி கேள்வி கேட்பினம். பரவாயில்லையா?
மன்னர் ஆர்னோல்ட்- ஆமாம் ஆமாம். கேள்வி கேட்டால் பரவாயில்லை. செருப்பால அடித்தால் அப்புறம் மரியாதை போய்விடும் அமைச்சரே. நாம் அடுத்த வீதியால் போவம்.
அமைச்சர்; எடுபிடி- இந்த கேப்பாப்பிலவு பிரச்சனை, இரணைதீவு பிரச்சனை பற்றி யாரும் கேட்டால் என்ன சொல்வது மன்னரே?
மன்னர் ஆர்னோல்ட்- எது கேட்டாலும் 24 மணி நேரத்திற்குள்ள தீர்வு கிடைக்கும் என்று சொல்லிவிடும் அமைச்சரே.
அமைச்சர் எடுபிடி- அதெப்படி மன்னா? 24 மணி நேரத்திற்குள் தீர்வு கிடைக்காவிட்டால் அப்புறம் எப்படி மக்களை சமாளிப்பது. பெரிய பிரச்சனையாய் விடுமே?
மன்னர் ஆர்னோல்ட் - சம்பந்தர் அய்யா ஒரு வருடத்தில் தீர்வு வரும் என்றார். அப்புறம் 2 வாரத்தில் நல்ல செய்தி வரும் என்றார். இப்ப பொங்கல் தீபாவளிக்கு வரும் என்கிறார். யாராவது அவரை பிரச்சனை பண்ணுகிறார்களா. இல்லைத்தானே?
அமைச்சர் எடுபிடி- சரி மன்னா! மக்களை ஏமாத்திறது என்று முடிவு செய்திட்டம். இனி யோசிக்க என்ன இருக்கு? சுன்னாகம் பவர் திட்டத்தில் மாவை அண்ணர் லஞ்சம் வாங்கி அந்த காசில் வீடு கட்டி வருவதாக சிவசக்தி ஆனந்தன் எம்.பி கூறியிருக்கிறார் மன்னா!
ஆர்னோல்ட் மன்னர்- ஓ! அதுவா? அது பெரிய இடத்து சமாச்சாரம். நாங்கள் எங்கட லெவலில் மண் அள்ளுறது மாதிரி ஏதும் டீலிங் வந்தால் சொல்லும் அமைச்சரே!
அமைசர் எடுபிடி- எதிர்கால யாழ் மேயர் ஆர்னோல்ட் வருகிறார் பராக்! பராக்!

No comments:

Post a Comment