Wednesday, February 27, 2013

தொடரும் பாலியல் கொடுமைகள்

இலங்கை அரச படைகளின் தொடரும் பாலியல் கொடுமைகள்
மனித உரிமை காப்பகம்(Human Rights Watch) தெரிவிப்பு

2009 யுத்தம் முடிவற்ற பின்னரும் தமிழர்கள் மீது இலங்கை அரச படைகளால் பாலியல் சித்திரவதைகள் நடத்தப்படுவதாக Human Rights watch தெரிவித்துள்ளது. தனது 141 பக்க அறிக்கையில் அது இது தொடர்பாக பல விபரங்களை வெளியிட்டுள்ளது.

நாட்டில் தற்போது அமைதி நிலவுவதாகவும் சட்ட ரீதியான ஆட்சி நடைபெறுவதாகவும் ஜனாதிபதி மகிந்த தெரிவிக்கிறார். அனால் தற்போதும் தமிழ் மக்கள் மீது அரச படைகளின் பாலியல் கொடுமைகள் இடம்பெறுவதாக சர்வதே மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

“இலங்கையில் அமைதி நிலவுகிறது. எனவே தமிழ் அகதிகள் இலங்கைக்கு திரும்பி செல்ல வேண்டும்” எனக் கோரும் இந்திய மற்றும் ஜரோப்பிய அமெரிக்க அரசுகள் இதற்கு என்ன பதில் கூறப்போகின்றன? 

Human Rights Watch இன் அறிக்கையை படிக்க விரும்புவோர் கீழ்வரும் இணைப்பை பார்வையிடவும்.
http://www.hrw.org/news/2013/02/26/sri-lanka-rape-tamil-detainees

Tuesday, February 26, 2013

கலைஞர் முற்றும் துறந்த மனிதனும் அல்ல. குஸ்பு படிதாண்டா பத்தினியும் அல்ல

•7 தமிழர்களின் உயிர் தூக்கு கயிற்றில் ஊசலாடுவது பற்றியோ

•கூடங்குளத்தில் அணுக்கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறுவது பற்றியோ

•காவிரி நீர் இன்றி விவசாயிகள் தற்கொலை செயவது பற்றியோ

•கெலிகொப்டர் வாங்கியதில் ஜனாதிபதி ஊழல் பங்கு பற்றியோ

சிந்திக்கும் மக்கள் கவனத்தை திருப்ப ஆளும் வர்க்கம் உருவாக்கிய செய்தியே கலைஞர் குஸ்பு சமாச்சாரம் ஆகும்.

கலைஞர் முற்றும் துறந்த மனிதனும் அல்ல. குஸ்பு படிதாண்டா பத்தினியும் அல்ல.

“ஒருவனுக்கு ஒருத்தி இதுவே தமிழ் பண்பாடு” என்று மேடையில் முழங்கும் கலைஞர் சொந்த வாழ்வில் மனைவி, துணைவி, முன்னாள் மனைவி என பல மனைவிகளை வைத்திருப்பார். அதுபோல் குஸ்புவும் பல பேருடன் வாழ்வார். இது அவர்களுக்கு சகஜம். எனவே இது பற்றி நாம் அக்கறைப்படுவதற்கு எதுவும் இல்லை.

எமது அக்கறை எல்லாம் பரந்துபட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்தே.

கடவுள் தன்னால் தூக்க முடியாத ஒரு கல்லைப் படைக்க முடியுமா?”

நல்லது நடந்தால் கடவுள் செயல். கெட்டது நடந்தால் விதி எனில் மனிதனுக்கு மூளை எதற்கு?

மனித மூளையில் உள்ள மயலின் நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 176000 கிலோ மீற்றர். மனித மூளையில் உள்ள 60 பில்லியன் நரம்பணுக்களில் சுமார் 10 பில்லியன் புறணிக் கோபுர உயிரணுக்கள். இவை தமக்குள் சமிக்கைகளை அனுப்பிக்கொள்ள ஏறத்தாழ 100 டிரிலியன் நரம்பிணைப்புகளை பயன்படுத்துகின்றன.

நல்லது நடந்தால் கடவுள் செயல் , கெட்டது நடந்தால் அது விதி எனில் இத்தகைய சிறப்பான மூளை மனிதனுக்கு எதற்கு? பூசை செய்யவா?

உலப் புகழ்பெற்ற அறிஞர் ஸ்டீபன் கேவாக்கிங் கேட்கிறார் “கடவுள் தன்னால் தூக்க முடியாத ஒரு கல்லைப் படைக்க முடியுமா?”

பக்தர்களே உங்கள் பதில் என்ன?

ஜனாதிபதி பிராணாப் முகர்ஜி அவர்களே!

ஜனாதிபதி பிராணாப் முகர்ஜி அவர்களே!

வீரப்பனை தேடச் சென்று வாசாத்தியில் பெண்களை கற்பழித்த பொலிசாருக்கு என்ன தண்டனை வழங்கியுள்ளீர்கள்?

சிதம்பரத்தில் காவல் நிலையத்தில் பத்மினியை கற்பழித்து கொலை செய்த பொலிசாருக்கு என்ன தண்டனை வழங்கியுள்ளீர்கள்?

திண்டிவனத்தில் இருளர் இனப் பெண்ணை கற்பழித்த பொலிசாருக்கு என்ன தண்டனை வழங்கியுள்ளீர்கள்?

130 நாடுகள் மரணதண்டனையை ரத்து செய்துள்ளன. ஆனால் உங்களுக்கு மட்டும் ஏன் இந்த கொலை வெறி?

அமைச்சர் முதல் ராணுவ தளபதிவரை கோடிக்கணக்காக ஊழல் செய்து விட்டு சுதந்திரமாக திரிகின்றனர். அவர்களை தண்டிக்க வக்கற்ற நீங்கள் அப்பாவிகளை கொல்ல துடிப்பதேன்?

சின்ன திருடனை தண்டிக்கும்படி பெரிய திருடன்களிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறோம்.

•ஈராக், ஆப்கானில் அமெரிக்கா செய்ததையே
•தீபெத்தில் சீனா என்ன செய்து வருகிறதோ
•காஸ்மீரில், சதீஸ்கரில் இந்தியா என்ன செய்கிறதோ

அதையே மகிந்தா இலங்கையில் தமிழருக்கு செய்தார்.

ஆனால் நாங்களோ சின்ன திருடனை தண்டிக்கும்படி பெரிய திருடன்களிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறோம். 

எங்கள் அறியாமையை என்னவென்று அழைப்பது?

•60 ஆயிரம் சிங்கள மக்கள் கொல்லப்பட்ட போது நாம் அக்கறை கொள்ளவில்லை.

•50 ஆயிரம் போஸ்னியர்கள் கொல்லப்பட்டபோது நாம் அக்கறை கொள்ளவில்லை. 

•இன்று காஸ்மீரில், சிரியாவில் மக்கள் கொல்லப்படுவதை நாம் கண்டு கொள்வதில்லை. 

ஆனால் 40 அயிரம் தமிழர் கொல்லப்பட்ட போது உலகம் கண்டு கொள்வில்லையே என்று கேட்க எமக்கு என்ன தகுதி இருக்கு?

இனியாவது உணர்ச்சி பூர்வமாக சிந்திப்பதை விடுத்து உணர்வுபூர்வமாக சிந்தியுங்கள்.

அமெரிக்கா, இந்தியா, ஜ.நா என்று நம்பி ஏமாறுவதை விடுத்து சொந்த மக்களை நம்புங்கள்.

தமிழ்நாட்டு தலைவர்கள் “கோமாளிகளா” அல்லது அவர்களை நம்பும் மக்கள் “ஏமாளிகளா”?

தமிழ்நாட்டு தலைவர்கள் “கோமாளிகளா” அல்லது அவர்களை நம்பும் மக்கள் “ஏமாளிகளா”?

தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் “கோமாளிகள்” என்று முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா கூறியிருந்தார். ஒரு ராணுவ தளபதி அரசியல் தலைவர்களை அதுவும் எமது தலைவர்களை எப்படி கோமாளிகள் என்று கூறலாம் என நானும் அப்போது ஆத்திரப்பட்டேன். அனால் இன்று எமது தலைவர்கள் நடந்து கொள்வதைப் பார்க்கும்போது அவர் சரியாகத்தான் கூறியிருக்கிறார் என நினைக்கத் தோன்றுகிறது.

காங்கிரஸ் தலைவர் சல்மான் குருஸ்டி படுகொலை செய்யப்பட்ட பாலச்சந்திரன் படங்கள் உண்மையானவை அல்ல என சந்தேகம் தெரிவிக்கிறார். அத்துடன் இலங்கை அரசு தமது நல்ல உற்ற நண்பன் என்கிறார். ஆனால் அந்த காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகிக்கும் கலைஞர் தனது நெஞ்சு வெடிக்கிறது என்றும் மகிந்தவை போர்க் குற்றவாளி என்றும் அறிக்கை விடுகிறார்.

படுகொலைகளுக்கு ஆயுதம் வழங்கி முழு உதவி செய்தது இந்திய அரசு. இன்றும் மகிந்தவை பாதுகாத்து வருவது இந்திய அரசே. ஆனால் அதே அரசிடம் மகிந்தவை தண்டிக்கும்படி கோரும் தலைவர்களை “கோமாளிகள்” என்பதா அல்லது அத் தலைவர்களை இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் மக்களை “ஏமாளிகள்” என்பதா?

Saturday, February 23, 2013


"பிரபாகரன் ஒரு தீவிரவாதி. எனவே அவர் மகனும் தீவிரவாதியே"- சுப்பிரமணியசுவாமி

சுவாமி அவர்களே!

கீழே தலை துண்டிக்கப்பட்ட குழந்தையை பாருங்கள். இந்த குழந்தையும் தீவிரவாதியா? இந்த குழந்தையின் கொலை போர்க் குற்றம் இல்லையா? ஒரு இனப் படுகொலை இல்லையா?

“பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விடு. பார்ப்பானை அடி” என்று தந்தை பெரியார் சொன்னார். அதை நான் இதவரை ஏற்றுக்கொண்டதில்லை. ஆனால் இப்பொழுது பாம்பை விட பார்ப்பான் விசம்தானோ என நினைக்க தோன்றுகிறது.