Sunday, September 28, 2014

இவர்கள் அனைவரும் ஈழத் தமிழர்கள்-ஆனால் இவர்களுக்கு ஏன் ஒரே உணர்வு இல்லை?

இவர்கள் அனைவரும் ஈழத் தமிழர்கள்-ஆனால்
இவர்களுக்கு ஏன் ஒரே உணர்வு இல்லை?
நோர்வே ஒஸ்லோவிலிருந்து இரு ஈழத் தமிழர்கள் ஜ.நா நோக்கி முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதி கேட்டு சயிக்கிளில் செல்கிறார்கள். 10 நாட்களுக்கு மேலாக சென்று கொண்டிருக்கிறார்கள். தமது வசதியான வாழ்வு மற்றும் உழைப்பு எல்லாம் துறந்து தமது உறவுகளின் படுகொலைக்கு நீதி வழங்குமாறு கோரி இந்த கஸ்டமான பிரச்சார பணியை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அதேவேளை மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அய்யா அவர்கள் இலங்கை அரசிடமிருந்து ஒரு கோடி ரூபாவுக்கு சொகுசு வாகனம் பெற்றுள்ளார். அவர் மட்டுமல்ல மாகாண சுகாதார அமைச்சரும் 50 லட்சம் ரூபாவுக்கு வாகனம் பெற்றுள்ளார்.
குடாநாட்டில் என்றுமில்லாதவாறு தண்ணீப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் எடுக்க சென்ற பள்ளி மாணவி ராணுவத்தால் கற்பழிக்கப்படும் அவல நிலை காணப்படுகிறது. ஆனால் மாகாணசபை உறுப்பினர்களுக்கு அது குறித்து கொஞ்சம் கூட கவலை இல்லை. அவர்களது அக்கறை எல்லாம் இலங்கை அரசமிருந்து சொகுசு வாகனம் பெறுவதிலேயே இருக்கிறது!
தமிழ்நாட்டில் இருக்கும் ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் கூட ஜ.நா வக்கு கோரிக்கை வைத்து போராட்டம் நடத்துகின்றனர். மாணவர்கள் தமிழ்நாட்டில் வந்து விசாரணை நடத்த வேண்டும் என ஜ.நா வுக்கு கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் எமது தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இது குறித்து எல்லாம் அக்கறை இன்றி தமிழரசுக்கட்சிக்கு மாநாடு நடத்துவதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.
சயிக்கிள் பவனி செல்லும் இளைஞர்களும் தமிழ்நாட்டில் போராடும் மாணவர்களுக்கும் இருக்கும் இன உணர்வு எமது மாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்களுக்கோ அல்லது தமிழரசுக்கட்சி தலைவராகி இருக்கும் மாவை சேனாதிராசாவுக்கோ அல்லது அடிக்கடி டில்லிக்கு காவடி தூக்கும் சம்பந்தர் அய்யாவுக்கோ ஏன் இல்லை?
இவர்கள் எல்லாம் தமிழர்கள்தானே?

தமிழர்கள் சிங்களம் கற்க வேண்டும் எனக் கூறுவதற்கு ஒரு இந்திய தூதுவர் யாழ்ப்பாணத்தில் வேண்டுமா?

தமிழர்கள் சிங்களம் கற்க வேண்டும் எனக் கூறுவதற்கு
ஒரு இந்திய தூதுவர் யாழ்ப்பாணத்தில் வேண்டுமா?
யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய தூதுவர் ஒரு தமிழர். அவர் இந்தியாவில் உள்ள தமிழர்கள் இந்தி மொழியை கற்பது போல் இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்கள மொழியை கற்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்த சிங்கள மொழி திணிப்புக்கு எதிராக நடந்த போராட்ட வரலாறுகள் எல்லாம் நன்கு தெரிந்தும் வேண்டுமென்றே இந்த இந்திய தூதர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ்மக்களை ஆயிரக் கணக்கில் அழித்த மகிந்த ராஜபக்ச கூட தமிழ்மக்கள் சிங்கள மொழியை கற்க வேண்டும் என இதுவரை கூறியதில்லை.
தீவிர சிங்கள இனவாத கட்சியான சிங்கள உறுமய கூட தமிழ் மக்கள சிங்கள மொழியை கற்க வேண்டும் என்று இதுவரை கூறியதில்லை.
ஆனால் தமிழ் மக்களின் மொழி பண்பாடு கலாச்சாரம் என்பனவற்றை பாதுகாக்கும் என நம்பி யாழ்ப்பாணத்தில் தூதுரகம் அமைக்க அனுமதித்தமைக்கு இந்திய தூதர் சிறந்த பரிசை தமிழ் மக்களுக்கு அளித்துள்ளார்.
தமிழனாக இருந்தாலும் இந்திய தூதுவர் தானும் இந்திய அரசு போல் தமிழ் இனத்திற்கு எதிரானவன் என்பதை நன்கு காட்டியுள்ளார்.
• யாழ்ப்பாணத்தில் ராணுவம் பெண்களை கற்பழிப்பது இந்த தூதுவரின் கண்களுக்கு தெரிவதில்லை.
• யாழ்ப்பாணத்தில் தங்கள் பிள்ளைகளின் விடுதலை கேட்டு தாய்மார் அழுவது இவரது செவிகளுக்கு கேட்பதில்லை.
• ஆனால் தமிழ் மக்கள் சிங்களம் கற்க வேண்டும் எனக் கூறுவதற்கு மட்டும் இவரால் எப்படி முடிகிறது?
யாழ் நகர பஸ் நிலையத்தில் கழிப்பறை விடயம் முதல் சென்ஜேன்ஸ் பள்ளியில் அனுமதி வரை அனைத்து விடயங்களிலும் இந்த இந்திய தூதுவர் தலையிடுகிறார்.
யாழ் குடாநாட்டில் ராணுவ ஆட்சி , மாகாணசபை ஆட்சி மட்டுமல்ல இந்த இந்திய தூதுவரின் ஆட்சியும் இருக்கிறது.
காலனிய ஆட்சியில் வெள்ளைக்கார துரைமார்கள் நடந்து கொண்டது போல் இலங்கை சிறிய தீவில் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் என மூன்று இடங்களில் தூதரகம் அமைத்து “பெரியண்ணன்” ஆட்சி நடத்த முனைகிறது இந்திய அரசு.
சுதந்திர எண்ணம் கொண்ட மக்களின் முதல் வேலையாக இந்திய தூதரங்களை அகற்றும் கோசம் எழுப்ப வேண்டும்.
இந்த இந்திய துரைமார்களுக்கு சேவகம் செய்யும் எமது தமிழ் கங்காணிமார்கள் இனியாவது இந்த துரோகத்தை நிறுத்த வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகம் அவசியம்தானா? மக்களே சிந்தியுங்கள்!

தொடரும் ஏமாற்று அரசியல்!

தொடரும் ஏமாற்று அரசியல்!
செய்தி- ஜ.நா வில் மகிந்த ராஜபக்ச உரையாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன உணர்வுள்ள தமிழர்கள் கறுப்பு கொடி ஏற்ற வேண்டும்- கலைஞர் கருணாநிதி.
கலைஞர் அவர்களே!
நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது ராஜபக்சவை
உங்கள் மகள் கனிமொழி சந்திக்க வைத்தீர்கள்.
உங்கள் கட்சி எம்.பி பாலு பரிசில்கள் பெற்றார்.
இந்தியாவுக்கு மகிந்த வந்தபோது நீங்கள்
கறுப்பு கொடி காட்டவில்லை- மாறாக உங்கள்
காங்கிரஸ் அரசு செங்கம்பள வரவேற்பு கொடுத்தது.
நீங்கள் இப்போது எதிர்க்கட்சியில் இருக்கும்போது
ஜ.நா வில் மகிந்த உரையாற்ற கூடாது என்றால்
அதை கேட்க ஜ.நா காரன் என்ன இளிச்சவாயனா?
இதை எல்லாம் மறக்கவும்
நடந்ததை நடந்ததாகவும்
நடப்பவை நல்லவையாகவும் நினைக்க
நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால்
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது
(1) நீங்கள் ஆரம்பித்த சிறப்பு முகாமை மூடும்படி குரல் கொடுங்கள்.
(2) அடைத்துவைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்ய வலியுறுத்துங்கள்.
(3) அகதி மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு வழி செய்யுங்கள்.
(4) அகதிகளுக்கு கியூ பிராஞ் பொலிஸ் செய்யும் தொல்லைகளை நிறுத்துங்கள்
(5) அகதிகளுக்கு மருத்துவ வசதி கிடைக்க வழி செய்யுங்கள்.
(6) ஈழ அகதிகள் தீபெத் அகதிகள் போல் நடத்த குரல் கொடுங்கள்
மேலே கேட்டுக்கொண்டவை யாவும் உங்களால் செய்யக்கூடியவையே.
இவற்றை முதலில் செய்ய நீங்கள் தயாரா? அல்லது
தொடர்ந்தும் ஏமாற்று அரசியல் செய்யப் போகிறீர்களா?

வரிசையில் கிடக்குது மக்களின் தண்ணீர் குடங்கள். ஆனால் வட மாகாணசபையில் வரிசையாக நிக்குது உறுப்பினர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனங்கள்.

• வரிசையில் கிடக்குது மக்களின் தண்ணீர் குடங்கள்.
ஆனால் வட மாகாணசபையில் வரிசையாக நிக்குது
உறுப்பினர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனங்கள்.
யாழ் குடா எங்கும் வரலாறு காணாத வரட்சி
மாகாணசபைக்கு அது குறித்து கவலை இல்லை
அவர்களது அக்கறை எல்லாம் தமக்கு சொகுசு வாகனம் பெறுவதே!
தமிழ் மக்கள் தண்ணீருக்காய் அலைகிறார்கள்.
தமிழ்த் தலைவர்கள் அது குறித்து கவலை இல்லை.
அவர்களது அக்கறை எல்லாம் தமிழரசுக்கட்சிக்கு
மாநாடு நடத்துவதும் , புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதுவுமே!
மாகாணசபையை தந்தால் தமிழ் மக்களுக்காக போராடுவோம் என்றவர்கள் வடக்கில் ராணுவம் மாணவிகளை பாலியல் வல்லுறவு செய்வது குறித்து வாய் திறக்க மறுக்கிறார்கள்.
காரைநகர் ஊரியில் மாணவிகளை பாலியல் வல்லுறவு செய்தவர்களை நீதிமன்றில் ஆஜர் செய்ய கடற்படை மறுக்கிறது.
அதேவேளை கிளிநொச்சியில் கைது செய்த தாய் மற்றும் மகள் மீது
நீதிமன்றம் வலியுறுத்தியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த அரச சட்ட விரோத செயற்பாடுகள் குறித்து
இந்நாள் மாகாண முதல்வரும், முன்னாள் நீதியரசரும் வாய் திறப்பதில்லை.
ஒருபுறம் தமிழ் மக்களை ராணுவம் துன்புறுத்துகிறது.
தமிழ் மாணவிகளை பாலியல் வல்லுறவு செய்கிறது.
இது குறித்து கிறிஸ்தவ ஆயர்மார் கூட கண்டனம் செய்கிறார்கள்.
ஆனால் எமது தமிழ் தலைவர்கள் ஏன் வாய் திறப்பதில்லை?
ஏனென்றால் இந்த தமிழ் தலைவர்கள் அதே சிங்கள பொலிஸ் காவலில்தானே தமிழ் மக்கள் மத்தியில் வலம் வருகிறார்கள்!
தமிழ் தலைவர்களுக்கு தமிழ் மக்கள் குறித்து கவலை இல்லை.
அவர்களது அக்கறை எல்லாம் தமிழரசுக்கட்சிக்கு மாநாடு நடத்துவதே!
தமிழசுக்கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராசா
அன்று போட்டது “சேகுவாரா” வேடம்
இன்று போடுவதோ “காந்தி தாத்தா” வேடம்
தொடருது மாவை சேனாதிராசாவின் போலி வேடம்!
பாவம் தமிழ் மக்கள்!

ராணுவத்திற்கான நில அபகரிப்பு நிறுத்தப்படுமா?

ராணுவத்திற்கான நில அபகரிப்பு நிறுத்தப்படுமா?
அன்று பயங்கரவாதிகளிடமிருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்காகவே யுத்தம் செய்வதாக மகிந்த ராஜபக்ச கூறினார்.
இன்று யுத்தம் முடிந்து ஜந்து வருடங்களின் பின்னரும் ராணுவம் தமிழ் பகுதிகளில் இருந்து வாபஸ் பெறப்படவில்லை.
ராணுவம் நிலைகொண்டிருப்பது மட்டுமன்றி தமிழ் மக்களின் நிலங்கள் ராணுவத்திற்காக தொடர்ந்து அபகரிக்கப்படுகிறது.
வலிகாமத்தில் மக்கள் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை. எப்போது குடியேற்றப்படும் ? என்ற அந்த மக்களின் குரலுக்கு எந்த அரசு அதிகாரிகளும் பதில் அளிப்பதில்லை.
சம்பூரில் இந்திய அனல் மின்நிலையத்திற்காக வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள் பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை. இது குறித்து பேசினாலே இந்திய அரசுக்கு பிடிக்காது என்று தமிழ் தலைவர்கள் மௌனம் காக்கின்றனர்.
இந்திய புதிய பிரதமர் மோடி இந்த பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைப்பார் என தமிழ் தலைவர்கள் கூறினார்கள். ஆனால் அவரோ மகிந்தவுக்கு விருந்து வைத்து மகிழ்கிறார்.
ஜ.நா வில் பேசி தீர்வு காண்போம் என்றார்கள். ஆனால் ஜ.நா வோ மகிந்தவை பேச அழைத்து வாய்ப்பு கொடுக்கிறது.
ஈழத்தாய் ஜெயா அம்மையார் ராணுவத்தை அனுப்பி தமிழர்களுக்கு விடிவு ஏற்படுத்துவார் என்றார்கள். அவரோ (இல்லாத) புலிகளால் தனக்கு ஆபத்து என்கிறார்.
தமிழின தலைவர் கலைஞர் உதவுவார் என எதிர்பார்த்தால் அவரும் “டெசோ” மாநாடு நடத்துவதுடன் முடித்துக்கொண்டார்.
பாவம் தமிழ் மக்கள். எல்லோரையும் நம்பி நம்பி ஏமாறுவதே அவர்கள் தலைவிதியாக இருக்கிறது!

தமிழ் மக்களை தொடர்ந்தும் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏமாற்றுகிறதா?

• தமிழ் மக்களை தொடர்ந்தும் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏமாற்றுகிறதா?
• தமிழகத்தில் லட்சக் கணக்கானவர்கள் பேரணி. தாயகத்தில் சொகுசு வாகனத்திற்கு தலைவர்கள் அணிவகுப்பு!
• இந்திய தூதுவரிடம் பெற்ற 10 கோடி ருபா தேர்தல் நிதிக்கு கணக்கு காட்டுவார்களா?
தமிழீழத்தை கைவிட்டுவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்தேசியகூட்டமைப்பு சத்தியக் கடதாசி கொடுத்துள்ளது.
தாம் தமிழீழத்தைக் கைவிட்டுவிட்டதாக தலைவர் சம்பந்தன் சென்னையில் வைத்து பகிரங்கமாக கூறியுள்ளார்.
ஆனால் கூட்டமைப்பு தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராசா எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அகிம்சைப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
அகிம்சை போராட்டத்தை இலங்கை அரசு மதிக்கவில்லை என்பதால்தானே அன்று ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த மாவை சேனாதிராசா கூட முன்னர் ஆயுதப் போராட்டத்தை வலியுறுத்தியவர்தானே!
இன்று அவர் மீண்டும் அகிம்சை போராட்டம் என அறிவிப்பதன் நோக்கம் என்ன? இலங்கை அரசு அகிம்சை போராட்டத்தை மதிக்கும் என கருதுகிறாரா? அல்லது மக்களை ஏமாற்றி தொடர்ந்தும் பதவிகளை பெற துடிக்கிறாரா?
மாவை சேனாதிராசா எதற்காக அகிம்சைப் போராட்டம் நடத்தப் போகிறார்? தமிழீழத்திற்காகவா? அல்லது வேறு தீர்விற்காகவா? வேறு தீர்வு எனில் அது என்ன தீர்வு என்பதை அறிய தருவாரா?
தமிழ்தேசிய கூட்டமைப்பின் இன்னொரு தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் ஸ்கொட்லாந்து மாதிரி இலங்கையிலும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோருகிறார்.
இவருடைய கட்சியும் தலைவர் சம்பந்தனும் தமிழீழத்தை கைவிட்டு விட்டார்கள். இவருடைய (விசுவாச) இந்திய அரசும் தமிழீழத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந் நிலையில் இவர் வாக்கெடுப்பு கோருவது யாரை ஏமாற்றுவதற்கு?
யாழ் இந்திய தூதுவர் மகாலிங்கம் தேர்தல் நிதியாக 10 கோடி ருபாய் கொடுத்திருப்தாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அது குறித்து தமிழ் தலைவர்கள் எனப்படுவோர் கணக்கு காட்டவோ அல்லது கருத்து கூறவோ மறுப்பதன் மர்மம் என்ன? அப்படியாயின் தலைவர்கள் அதனை தமது சொந்த நிதியாக்கிவிட்டனர் என்பது உண்மையா?
இந்திய தூதுவரிடம் கை நீட்டி காசு வாங்கியாதால்தானே அவர் தமிழ் மக்கள் சிங்களம் படிக்க வேண்டும் எனக் கூறிய போது இந்த தலைவர்களால் எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை?
தமிழகத்தில் உள்ள மக்கள் ஈழத் தமிழர்களுக்காக லட்சக் கணக்கில் பேரணி செல்கிறார்கள். மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றார்கள். ஆனால் எமது தமிழ் தலைவர்கள் தங்களுக்கு சொகுசு வாகனம் பெறுவதிலும் தூதுவரிடம் கோடிக் கணக்கில் பணம் பெறுவதிலுமே குறியாக இருக்கின்றனர்.
தங்களுக்கு ஓட்டுப் போட்ட தமிழ் மக்களுக்காக என்றுதான் இவர்கள் போராடப் போகின்றார்கள்?

நம்பிக்கையளிக்கும் பேரணி

நம்பிக்கையளிக்கும் பேரணி
வெற்றி பெற வாழ்த்துகள்!
செப்-24- ஈழத் தமிழர்களுக்காக தமிழக தமிழர்கள் செல்லும் பேரணி.
வழக்கமான பேரணிகளை விட இந்த பேரணி வித்தியாசமானது.
தி.மு.க மற்றும் அதிமுக போன்றவை இதுவரை முன்வைக்க மறுத்த
“சிறப்பு முகாம்களை இழுத்து மூடு” என்னும் கோரிக்கையை இப் பேரணி எழுப்புகிறது.
இந்த தமிழ்தேசிய எழுச்சியானது விரைவில் ஆயுதப் போராட்டமாக மாறும்.
ஈழ மற்றும் தமிழக மக்கள் இணைந்த போராட்டமாக நிச்சயம் வடிவம் பெறும்.
தமிழக மக்கள் ஏழுச்சி பெறுவார்கள் என்பதற்காக
இந்திய அரசு இதுவரை ஈழப்போராட்டத்தை நசுக்கியது.
ஆனால் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை நசுக்கினாலும்
தமிழக மக்கள் எழுச்சி பெறுவார்கள் என்பதை இந்த பேரணி எடுத்து காட்டுகிறது.
இந்த பேரணியால் இலங்கை அரசு நடுக்கம் கொள்ளாவிடினும்
இந்திய அரசு நிச்சயம் அச்சம் கொள்ளும் என்பது உறுதி.
“உங்கள் அருகில் 7 கோடி தமிழர் நாம் இருக்கிறோம். எமது தலைவர்கள் உங்களை கைவிட்டாலும் நாம் கைவிடமாட்டோம்” என காட்டும் வகையில் தமிழக தமிழர்கள் பேரணி செல்கிறார்கள்.
ஈழத் தமிழர்களுக்கு பெரும் நம்பிக்கையை தரும் தமிழக மக்களின் பேரணி வெற்றி பெற வாழ்த்தகள்.

ஜெயா அம்மையார் தண்டிக்கப்படவாரா? அல்லது காஞ்சி சங்கராச்சாரி போல் விடுதலை செய்யப்படுவாரா?

ஜெயா அம்மையார் தண்டிக்கப்படவாரா? அல்லது
காஞ்சி சங்கராச்சாரி போல் விடுதலை செய்யப்படுவாரா?
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்தின் மன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் நிரபராதியான பேரறிவாளன் தண்டிக்கப்பட்டிருக்கிறார். குற்றவாளியான காஞ்சி ஜெயந்திரர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இதுதான் இந்திய நீதியா?
நிரபராதியான பேரறிவாளனை விடுதலை செய்ய இந்திய அரசு மறுத்து மேன் முறையீடு செய்தள்ளது. ஆனால் காஞ்சி சங்கராச்சாரிகள் மீது மேன்முறையீடு செய்ய புதுவை அரசு மறுத்துள்ளது. இதுதான் இந்திய நீதியா?
ஜெயா அம்மையாரும் அவரது சகோதரி(!) சசிகலாவும் முறைகேடான வழிகளில் கோடிக்கணக்ணக்கான சொத்துக்கள் சேர்த்திருப்பது அனைவரும் அறிந்த உண்மை. அவ்வாறு சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிப்பதுடன் அவரும் அவரது சகோதரி சசிகலாவும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே மக்கள் விருப்பம்.
தற்போதைய மோடி அரசின் சட்ட அமைச்சர் ஜெயா அம்மையாரை தனிமையில் சந்தித்திருக்கிறார். எனவே நீதியான தீர்ப்பு வழங்கப்படாது என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
பல வருடங்களாக விசாரணையை இழுத்தடித்த ஜெயா கும்பல் தற்போது இறுதி நேரத்தில் தீர்ப்பு கூறுவதையும் இயன்றளவு தள்ளிப்போட முயற்சி செய்துள்ளது.
புலிகளால் தனக்கு ஆபத்து என்று தனது சுய நலத்திற்காக புலிகள் மேல் பழி போட்ட ஜெயா அம்மையார் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.
ஒருபுறம் பிரபாகரனும் பொட்டு அம்மானும் இறந்துவிட்டதாக கூறி அவர்களை ராஜீவ்காந்தி வழக்கில் இருந்து இந்திய அரசு நீக்கியுள்ளது. மறுபுறம் பலிகளால் தனக்கு ஆபத்து என்று ஜெயா அம்மையார் இப்பவும் கறுப்பு பூனை பாதுகாப்பு வைத்திருப்பதுடன் மைசூர் நீதிமன்ற தீர்ப்புக்கு வர தனக்கு புலிகளால் ஆபத்து என்றும் கதை கூறுகிறார். அதையும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது.
சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்ய மறுக்கும் ஜெயா அம்மையார் சிறையில் அடைக்கப்பட வேண்டும். சிறையின் கொடுமைகளை அவர் உணர வேண்டும்.
ஜெயா அம்மையாருக்கு வழங்கப்படும் தண்டனை மற்ற அரசியல்வாதிகளுக்கு ஒரு படிப்பனையாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
இந்தியாவில் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பது உண்மையானால் ஜெயா அம்மையார் தண்டிக்கப்படுவதுடன் அவரிடமுள்ள சொத்துக்கள் பறிக்கப்பட வேண்டும்.
ஜெயா அம்மையார் தண்டிக்கப்படுவது தமிழக மக்களுக்கு மட்டுமன்றி ஈழத் தமிழர்களுக்கும் ஒரு நல்ல விடமாயகவே இருக்கும்.

ஜெயா அம்மையார் மீதான சொத்து குவிப்பு வழக்கில்

ஜெயா அம்மையார் மீதான சொத்து குவிப்பு வழக்கில்
• 4 ஆண்டுகள் சிறை தண்டனை
• 100 கோடி அபராதம் விதிப்பு
• தமிழக முதல்வர் பதவி பறிப்பு
• 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை
• சகோதரி சசி கும்பலுக்கும் தண்டனை விதிப்பு.
18 வருடங்கள் தாமதமான தீர்ப்பு!
ஆனாலும் தவிர்க்க முடியாத தீர்ப்பு!
பூசை மற்றும் யாகங்களாலும் மாற்ற முடியாத தீர்ப்பு!
கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டும் தீர்ப்பு!
60 கோடி சொத்து குவிப்பிற்கு 18 வருடம் கழித்து 4 வருட தண்டனை
பல்லாயிரம் கோடி 2ஜி ஊழலுக்கு எப்போது, எத்தனை வருட தண்டனை?
ஜெயா அம்மையார் ஆட்சியில் இருந்து மட்டுமல்ல
அரசியலில் இருந்தும் தூக்கியெறியப்பட வேண்டும்.
ஜெயா அம்மையார் போன்று மற்ற ஊழல் அரசியல்வாதிகளும்
விரைந்து தண்டிக்கப்பட வேண்டும். இது ஒரு பாடமாக அமைய வேண்டும்.

தோழர் பகத் சிங் அவர்களுக்கு வீர வணக்கம்!

தோழர் பகத் சிங் அவர்களுக்கு வீர வணக்கம்!
ஓ! மரணித்த வீரனே!
வெள்ளையரை விரட்ட நீ குண்டெறிந்தபோது
உன்னை தியாகி என்றழைத்தவர்கள்
கொள்ளையரை விரட்ட தமிழரசன் எறிந்தபோது
பயங்கரவாதி என்கிறார்கள்.
நீ விரும்பிய சுதந்திர இந்தியா மலர்ந்தது
வெள்ளையர் ஆட்சி போயிற்று – ஆனால்
கொள்ளையர் ஆட்சி வந்துவிட்டது.
இந்த கொள்ளையர் ஆட்சியில்
கல்லெறியும் காஸ்மீர் சிறுவன் ஜிகாத் பயங்கரவாதி
சதீஸ்கரில் ஆதிவாசி மாவோயிஸ்ட் பயங்கரவாதி
தமிழகத்தில் ஈழ அகதிகள் புலிப் பயங்கரவாதிகள்
மணிப்பூரில் 12 வருடம் உண்ணாவிரதம் இருக்கும் பெண்
கொடிய பயங்கரவாதியாக சிறையில் அடைப்பு!
தலைநகர் டில்லியில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால்
ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு கறுப்பு பூனை பாதுகாப்பு
அன்று முஸ்லிம்களும் சேர்ந்து சுதந்திர இந்தியாவுக்கு போராடினார்கள்.
இன்று முஸ்லிம்களை கொன்று குவித்தவர் மாண்புமிகு பிரதமர்.
வெள்ளையர் உன்னை பயங்கரவாதி என்றனர்.
ஆனால் சுதந்திர இந்தியா உன்னை தியாகி என்றது.
இன்று கொள்ளையர் எம்மை பயங்கரவாதி என்கின்றனர்.
நாளைய விடுதலை எம்மை போராளிகள் என்றழைக்கும்.
தோழனே!
நீ எறிந்த குண்டை கொடு
கொள்ளையரை விரட்ட.

Thursday, September 11, 2014

தோழர் தமிழரசனுக்கு வீர வணக்கங்கள்!

தோழர் தமிழரசனுக்கு வீர வணக்கங்கள்!

சோசலிச அமைப்பு இறுதியில் முதலாளித்துவ அமைப்பை பலியாக்கும். இது மனித சித்தாந்தத்திற்கு அப்பாற்பட்ட ஒரு புறநிலை விதி. பிற்போக்குவாதிகள் வரலாற்றுச் சக்கரத்தை தடுத்து நிறுத்த எவ்வளவுதான் முயன்றாலும் இன்றோ,நாளையோ புரட்சி தோன்றுவது நிச்சயம். அது வெற்றிவாகை சூடுவதும் தவிர்க்க முடியாது- தோழர் மாஓ சேதுங்

தோழர் தமிழரசனைக் கொல்வதன் மூலம் தமிழ்நாடு விடுதலைப் படையை நசுக்கலாம். அதன் மூலம் தமிழ்நாடு விடுதலையை தடுக்கலாம் என இந்திய அரசும் அதன் உளவுப்படைகளும் திட்டம்போட்டு சதி மூலம் தோழர் தமிழரசனையும் அவரது தோழர்கள் 4 பேரையும் 1987ம் ஆண்டு பொன்பரப்பியில் கொன்றனர். ஆனால் அவர்கள் கனவு பலிக்கவில்லை.

படுகொலை செய்யப்பட்ட தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. மாறாக விதைக்கப்பட்டுள்ளார். அவரில் இருந்து பல தமிழரசன்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர். வெகுவிரைவில் தமிழ்நாடு விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழும். அது தோழர் மாஓசேதுங் கூறியதுபோல் வெற்றிவாகை சூடுவது தவிர்க்க முடியாதது.

தோழர் தமிழரசன் அவர்கள் பாதையில் தொடர்ந்து செல்வதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.

அவரை என்றும் நினைவில் கொள்வோம்.

செங்கொடி பதிகிறது!
செவ்வணக்கம் செலுத்துகிறது!

Photo: • தோழர் தமிழரசனுக்கு வீர வணக்கங்கள்!

சோசலிச அமைப்பு இறுதியில் முதலாளித்துவ அமைப்பை பலியாக்கும். இது மனித சித்தாந்தத்திற்கு அப்பாற்பட்ட ஒரு புறநிலை விதி. பிற்போக்குவாதிகள் வரலாற்றுச் சக்கரத்தை தடுத்து நிறுத்த எவ்வளவுதான் முயன்றாலும் இன்றோ, நாளையோ புரட்சி தோன்றுவது நிச்சயம். அது வெற்றிவாகை சூடுவதும் தவிர்க்க முடியாது- தோழர் மாஓ சேதுங்

தோழர் தமிழரசனைக் கொல்வதன் மூலம் தமிழ்நாடு விடுதலைப் படையை நசுக்கலாம். அதன் மூலம் தமிழ்நாடு விடுதலையை தடுக்கலாம் என இந்திய அரசும் அதன் உளவுப்படைகளும் திட்டம்போட்டு சதி மூலம் தோழர் தமிழரசனையும் அவரது தோழர்கள் 4 பேரையும் 1987ம் ஆண்டு பொன்பரப்பியில் கொன்றனர். ஆனால் அவர்கள் கனவு பலிக்கவில்லை.

படுகொலை செய்யப்பட்ட தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. மாறாக விதைக்கப்பட்டுள்ளார். அவரில் இருந்து பல தமிழரசன்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர். வெகுவிரைவில் தமிழ்நாடு விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழும். அது தோழர் மாஓசேதுங் கூறியதுபோல் வெற்றிவாகை சூடுவது தவிர்க்க முடியாதது.

தோழர் தமிழரசன் அவர்கள் பாதையில் தொடர்ந்து செல்வதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும். 

அவரை என்றும் நினைவில் கொள்வோம்.

செங்கொடி பதிகிறது!
செவ்வணக்கம் செலுத்துகிறது!

இரணைமடுக் குளத்து நீர்ப் பிரச்சனையை தீர்க்க முடியாதவர்கள் தமிழீழம் கேட்பது நியாயமா?

• இரணைமடுக் குளத்து நீர்ப் பிரச்சனையை தீர்க்க முடியாதவர்கள்
தமிழீழம் கேட்பது நியாயமா?

யாழ் குடா நாட்டில் என்றுமில்லாதவாறு வரட்சி காணப்படுகிறது.
பல இடங்களில் மக்கள் குடிநீருக்கு அலைகிறார்கள்.
உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் இல்லையேல் யாழ் குடாநாடே பாலைவனமாகும் ஆபத்து உள்ளது என நிபுனர்கள் எச்சரிக்கின்றனர்;.

மக்களின் குடிநீர்ப்பிரச்சனையை தீர்க்க வேண்டிய மாகாணசபை அங்கத்தவர்கள் தங்களுக்கு வாகனம் தருமாறு அரசுக்கு கோரிக்கை வைப்பதிலேயே காலத்தைக் கழிக்கிறார்கள்.

மாகாணசபைக்கு அமோக வெற்றி தாருங்கள் அனைத்து பிரச்சனையும் தீர்ப்போம் என்று மக்களிடம் கூறி மாகாண சபையைப் பெற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பினர் தற்போது கிளிநொச்சி மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.

கிளிநெச்சி மக்கள் தடுக்கிறார்கள் எனவே யாழ் மக்களுக்கு குடி நீர் கொடுக்க முடியவில்லை என சாட்டு கூறுகிறார்கள்.

கிளிநொச்சி மக்களுடன் பேசி குடாநாட்டு மக்களுக்கு குடி நீர் பெற்றுக்கொடுக்க முடியாத இவர்களுக்கு தமிழீழம் கேட்க என்ன தகுதி இருக்கிறது?

யாழ் குடா நாட்டிற்கு தண்டவாளம் போட்டு ரயில் விட முடியும் என்றால்
யாழ் குடாநாட்டிற்று காப்பெற் ரோட்டு போட முடியும் என்றால்
யாழ் குடாநாட்டிற்கு லச்சபானாவில் இருந்து மின்சாரம் கொண்டு செல்ல முடியும் என்றால்
யாழ் குடாநாட்டிற்கு ஏன் குழாய் அமைத்து குடிதண்ணீர் கொண்டு செல்ல முடியாது?

ஆனால் மகிந்த ராஜபக்ச அரசுவோ பொறுப்பற்று இருக்கிறது
அது இரணமடு இராணுவமுகாமை விஸ்தரிக்கிறது.
இரணைமடுவில் விமான தளம் அமைக்கிறது. ஆனால்
இரணைமடுக் குளத்தை சீரமைத்து மக்களுக்கு நீர் வழங்க அக்கறையற்று இருக்கிறது.

சம்பந்தர் குடும்பம் கேரளாவில் இருக்கிறது
மாவை குடும்பம் சென்னையில் இருக்கிறது
சுரேஸ் குடும்பம் கனடாவில் இருக்கிறது
செல்வம் குடும்பம் இந்தியாவில் இருக்கிறது.
மக்களுக்கு குடி நீர் இல்லையே என்ற அக்கறை
இவர்களுக்கு எப்படி வரும்?

Photo: • இரணைமடுக் குளத்து நீர்ப் பிரச்சனையை தீர்க்க முடியாதவர்கள் 

5000மில்லியன் ரூபா செலவில் ஆடம்பர உணவகம். மக்கள் வரிப்பணத்தை மகிந்த அரசு வீண் செய்யலாமா?

• 5000மில்லியன் ரூபா செலவில் ஆடம்பர உணவகம்.
மக்கள் வரிப்பணத்தை மகிந்த அரசு வீண் செய்யலாமா?

கொழும்பில் அண்மையில் பழைய கணக்காய்வாள திணைக்களத்தின் கட்டிடத்தொகுதி மறுசீரமைக்கப்பட்டு “ஆகேட் இண்டர்நேசனல” என்னும் வர்த்தக தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பிற்கு 5000மில்லியன் ரூபா செலவு!

திறப்பு விழா நிகழ்விற்கு 300 மில்லியன் ரூபா செலவு!

மகிந்தவின் மகன் நாமல் க்கு நெருக்கமான நடனக் குழுவினரின் அரங்கேற்றத்திகு மட்டும் 80 லட்சம் ரூபா செலவு !

இத்தனை செலவு தற்போது தேவைதானா?

இது ஏழை மக்களின் வரிப்பணம் அல்லவா?

இத்தனைக்கும் இங்கு சாதாரண ஏழை மக்கள் எந்த பொருளையும் வாங்க முடியாத அளவிற்கு எட்டாத உயரத்தில் விலைப்பட்டியல் உள்ளது.

அப்படியாயின் இது யாருக்காக திறக்கப்ட்டுள்ளது?

அரசு எதற்காக இவ்வளவு பணத்தை செலவு செய்கிறது?

இதே அரசு இன்னொரு புறத்தில் பணம் இல்லை என்று கூறி

• உயர் கல்வியை தனியார் மயமாக்க முயற்சி செய்கிறது

• இலவசக் கல்வியை படிப்படியாக நிறுத்த முனைகிறது.

• அபிவிருத்திக்கு போதிய பணம் இல்லை என்கிறது.

படித்தவர்களுக்கு வேலை இல்லை.

வேலை இருந்தாலும் போதிய சம்பளம் இல்லை.

பெண்கள் வேறு வழியின்றி மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கிறார்கள்.

ஆனால் அரசு வெட்கமின்றி பணத்தை விரயம் செய்கிறது.

இதற்கு ஒரு முடிவு இல்லையா?

Photo: • 5000மில்லியன் ரூபா செலவில் ஆடம்பர உணவகம்.

பல மாதங்களுக்கு முன்னர் மதுரையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தேசியபாதுகாப்பு சட்டம் போடப்பட்டுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது!

• பல மாதங்களுக்கு முன்னர் மதுரையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தேசியபாதுகாப்பு சட்டம் போடப்பட்டுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது!

தமிழ்நாடு விடுதலையை முன்னெடுத்த தோழர் தமிழரசனை நினைவு கூரும் வண்ணம் செங்கல்பட்டில் ஏழுச்சி மாநாடு நடத்தியமைக்கு பழிவாங்கும் முகமாக பல மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட தோழர்களுக்கு தேசியபாதுகாப்பு சட்டம் போடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இவ் அராஜக செயலானது மிகவும் வன்மையான கண்டனத்திற்குரியது.

ஏற்கனவே தர்மபுரியில் 6 இளைஞர்கள் மெரினா கடற்கரையில் ஆயுதப் பயிற்சி எடுத்தார்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அது தவறு என்று பல மனிதவுரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகைகள் சுட்டிக்காட்டியும் தமிழ்நாடு அரசு அதனை இன்னும் வாபஸ் பெறவில்லை.

இந் நிலையில் பல மாங்களுக்கு முன்னர் மதுரையில் கைது செய்யப்பட்ட தோழர்களுக்கு தற்போது தேசியபாதுகாப்பு சட்டம் போடப்பட்டுள்ளது என்ற செய்தியானது தமிழக அரசு தன்னை ஒருபோதும் திருத்திக் கொள்ள போவதில்லை என்பதை நன்கு வெளிப்படுத்துகிறது.

தோழர் தமிழரசனை அடித்து கொன்றதன் மூலம் அவரது தமிழ்நாடு விடுதலைப் பாதையை நசுக்கிவிட முடியும் என தமிழ்நாடு அரசு கனவு கண்டது. ஆனால் அதன்பின் பல இளைஞர்கள் அவர் பாதையில் திரண்டு வருகின்றனர்.

தோழர் தமிழரசன் பாதையில் திரண்டு வரும் இளைஞர்களை அச்சுறுத்தி பணிய வைப்பதற்காக தமிழ்நாடு அரசு கறுப்பு சட்டங்களை போட்டு மிரட்டுகிறது.

எந்தளவு ஒடுக்குமுறை நடக்கிறதோ அதற்கு எதிராக அதிகளவு போராட்டம் வெடிக்கும்.

எனவே தமிழ்நாடு அரசு புரட்சியாளர்களை நசுக்க நசுக்க அதற்கு எதிராக மக்கள் மேலும் மேலும் புரட்சியாளர்களாக மாறுவர்.

இதுவே உலக வரலாறு.

Photo: • பல மாதங்களுக்கு முன்னர் மதுரையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தேசியபாதுகாப்பு சட்டம் போடப்பட்டுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது!

தமிழ்நாடு விடுதலையை முன்னெடுத்த தோழர் தமிழரசனை நினைவு கூரும் வண்ணம் செங்கல்பட்டில் ஏழுச்சி மாநாடு நடத்தியமைக்கு பழிவாங்கும் முகமாக பல மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட தோழர்களுக்கு தேசியபாதுகாப்பு சட்டம் போடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இவ் அராஜக செயலானது மிகவும் வன்மையான கண்டனத்திற்குரியது.

ஏற்கனவே தர்மபுரியில் 6 இளைஞர்கள் மெரினா கடற்கரையில்  ஆயுதப் பயிற்சி எடுத்தார்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அது தவறு என்று பல மனிதவுரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகைகள் சுட்டிக்காட்டியும் தமிழ்நாடு அரசு அதனை இன்னும் வாபஸ் பெறவில்லை.

இந் நிலையில் பல மாங்களுக்கு முன்னர் மதுரையில் கைது செய்யப்பட்ட தோழர்களுக்கு தற்போது  தேசியபாதுகாப்பு சட்டம் போடப்பட்டுள்ளது என்ற செய்தியானது தமிழக அரசு தன்னை ஒருபோதும் திருத்திக் கொள்ள போவதில்லை என்பதை நன்கு வெளிப்படுத்துகிறது.

தோழர் தமிழரசனை  அடித்து கொன்றதன் மூலம் அவரது தமிழ்நாடு விடுதலைப் பாதையை நசுக்கிவிட முடியும் என  தமிழ்நாடு அரசு கனவு கண்டது. ஆனால் அதன்பின் பல இளைஞர்கள் அவர் பாதையில் திரண்டு வருகின்றனர்.

தோழர் தமிழரசன் பாதையில் திரண்டு வரும் இளைஞர்களை அச்சுறுத்தி பணிய வைப்பதற்காக தமிழ்நாடு அரசு கறுப்பு சட்டங்களை போட்டு மிரட்டுகிறது.

எந்தளவு ஒடுக்குமுறை நடக்கிறதோ அதற்கு எதிராக அதிகளவு போராட்டம் வெடிக்கும். 

எனவே தமிழ்நாடு அரசு புரட்சியாளர்களை நசுக்க நசுக்க அதற்கு எதிராக மக்கள் மேலும் மேலும் புரட்சியாளர்களாக மாறுவர். 

இதுவே உலக வரலாறு.

கலைஞர் அவர்களே! தமிழர்களை இலகுவில் ஏமாற்றலாம்தான் ஆனால் தொடர்ந்து ஏமாற்ற முடியாது!!

• கலைஞர் அவர்களே!
தமிழர்களை இலகுவில் ஏமாற்றலாம்தான்
ஆனால் தொடர்ந்து ஏமாற்ற முடியாது!!

எதிர்க்ட்சியாக இருக்கும்போது இனிக்க இனிக்க பேசுவீர்கள்.
ஆனால் ஆளும்கட்சியானவுடன் அதற்கு மாறாக நடப்பீர்கள்
உங்களின் இந்த கபட வேடத்தை பல முறை பார்த்துவிட்டோம்.
தொடர்ந்தும் எம்மை ஏமாற்ற முடியாது கலைஞர் அவர்களே!

ஆட்சியில் இருக்கும்போது கொடிய சிறப்புமுகாமை திறந்து
அப்பாவி அகதிகளை அதில் அடைத்து வதைத்தீர்கள்- பின்பு
எதிர்க்கட்சியாக இருக்கும்போது “அதனை மூட நினைத்தேன், ஆனால்
அதற்குள் ஆட்சி பறிபோய்விட்டது” என்று அறிக்கை விட்டீர்கள்.
மீண்டும் இரண்டு முறை ஆட்சியில் அமர்ந்தீர்கள். ஆனால்
கொடிய சிறப்புமுகாமை மூடவேயில்லை. அதுமட்டுமன்றி
இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும்போது கூட அது பற்றி
ஒருவார்த்தை பேச மறுக்கிறீர்கள். இப்படிப்பட்ட உங்களை
நாம் எப்படி நம்ப முடியும் கலைஞரே?

உங்கள் தமிழ் உணர்வைக் காட்டவென்று
அகதி சிறுவனை தத்தெடுத்து வளர்த்தீர்கள். ஆனால்
சொத்துக்கு வாரிசாக அந்த சிறுவன் வந்தவிடுவான் என்று
உங்கள் ஸடாலின் அநியாயமாக கொன்றுவிட்டதாக
உங்களுடன் இருந்த பரிதி இளம்வரிதியே கூறுகிறார்.
நாம் தொடர்ந்து கேட்கிறொம்
அந்த அப்பாவி அகதி சிறுவன் எங்கே?
ஏன் வாய் திறக்க மறுக்கிறீர்கள் கலைஞரே?

தமிழக முகாம்களில் இருக்கும் அகதிகள்
உயர் கல்வி கற்ற அனுமதி இல்லை.
வாகன லைசன்ஸ் கூட எடுக்க முடியவில்லை.
உங்கள் நாட்டில் உங்கள் ஆட்சியில் கீழ் இருக்கும்
அகதிகளையே உங்களால் வாழ வைக்க முடியவில்லை.
ஆனால் நீங்களோ தமிழீழம் எடுக்க “டெசோ” படம் காட்டுவதை
எங்களால் எப்படி நம்ப முடியும் கலைஞரே!

Photo: • கலைஞர் அவர்களே!

லண்டனில் “பிறகு” ( with you without you) சினிமா

லண்டனில் “பிறகு” ( with you without you) சினிமா

அகோரா கலாச்சார வட்டம் சார்பில் லண்டன் ஹரோவில் அமைந்தள்ள சபாறி சினிமாவில் “பிறகு” சிங்கள திரைப்படம் இன்று (07.09.2014) காண்பிக்கப்பட்டது.

2 மணி என குறிப்பிட்டு 2.15க்கு தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது.
திரையினுள் படம் முழுமையாய அடங்காமல் வெளியிலும் ஓடியது.
திரைக்கு வெளியே இருந்ததால் சப் டைட்டில் படிக்க முடியவில்லை.
குழந்தைகள் குறுக்கே ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
படம் ஆரம்பித்து நீண்ட நேரத்திற்கு பின்பும் கூட
பார்வையாளர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.
இடம் இன்மையால் சிலர் நின்று கொண்டு பார்த்தார்கள்.
இப்படி பல சின்ன சின்ன குறைகள் இருந்தாலும்
தமிழ் சிங்கள முஸ்லிம் மூவின மக்களையும்
படம் முடியும்வரை அமைதியாக இருந்து ரசிக்க வைத்ததில்
இயக்குநர் என்ற ரீதியில் பிரசன் விதானகே
வெற்றி பெற்றுள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அரங்கு நிறைந்த கூட்டம்.
மூவின மக்களும் ஒருங்கே இருந்து ரசித்த படம்.
ஆம். உண்மையான ஜக்கியத்திற்கு மூவின மக்களும் ஆதரவு அளிக்க தயாராகவே இருக்கிறார்கள் என்பதை காட்டியிருக்கும் ஓர் நிகழ்வு.

சமவுரிமை மறுக்கப்பட்டதாலேயே தமிழ் மக்கள் போராடுகிறார்கள் என்ற
நியாயத்தை எடுத்துச் சொல்வதில் இப் படம் தவறியிருந்தாலும்
போரின் கொடுமையை வலியுறுத்துவது பாராட்டத்தக்கதாகும்.

தமிழ் சிங்கள முஸ்லிம் மூவின மக்களின் ஆதரவை இப் படம் பெற்றிருப்பது
எதிர்காலத்தில் இன்னும் யதாhத்தமான படங்கள் வருவதற்கு
நிச்சயமாக வழி சமைக்கும் என நம்புகிறோம்.

சென்னையில் இப் படம் திரையிடப்பட்டபோது எதிர்ப்பு காணப்பட்டது.
ஆனால் லண்டனில் எவ்வித எதிர்ப்பும் இன்றி
மூவின மக்களாலும் வரவேற்கப்ட்டிருப்பது
ஒரு நம்பிக்கiயான சூழலை உருவாக்கியுள்ளது.

நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு பாராட்டுகள்!.

Photo: • லண்டனில் “பிறகு” ( with you without you) சினிமா

வரதராஜப் பெருமாள் மட்டுமல்ல திருப்பதி பெருமாளே வந்து சொன்னாலும் இனி இந்திய அரசை நம்புவதற்கு ஈழத் தமிழர்கள் தயாரில்லை.

• வரதராஜப் பெருமாள் மட்டுமல்ல 
திருப்பதி பெருமாளே வந்து சொன்னாலும் 
இனி இந்திய அரசை நம்புவதற்கு
ஈழத் தமிழர்கள் தயாரில்லை.

இந்திய அரசு தீர்வுக்கு உதவ முன்வந்ததாகவும் ஆனால் புலிகள் எந்த தீர்வையும் ஏற்க மறுத்துவிட்டதாக முன்னாள் மாகாணசபை முதல்வர் வரதராஜபெருமாள் கூறியிருக்கிறார்.

பெருமாள் அவர்களே!

(1)சமாதான தீர்வுக்கு புலிகள்தான் தடையாக இருந்தார்கள் எனில் புலிகள் அழிந்து 5 வருடம் ஆகிவிட்டதே. ஏன் இன்னும் எந்த தீர்வையும் இந்தியா பெற்று தரவில்லை?

(2)தமிழீழத்தை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நீங்கள் எதற்காக மாகாணசபை முதல்வராக இருந்தபோது தமிழீழ பிரகடனம் செய்தீர்கள்?

(3) இந்தியா தமிழீழத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் எதற்காக தமிழீழ பிரகடனம் செய்த உங்களை இத்தனை ஆண்டுகள் பாதுகாத்தது?

(4)யுத்த வெற்றிக்கு இந்தியாவின் உதவியே பிரதான் காரணம் என்றும் இந்தியாவுக்காகவே யுத்தம் செய்தோம் என்றும் இலங்கை ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலர் அகியோர் கூறியிருக்கிறார்கள். அதனை இந்தியா இதுவரை மறுக்கவில்லை. அப்படி உண்மை இருக்கும்போது இந்தியா யுத்தத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று எதற்காக இந்திய அரசுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்?

இறுதியாக பெருமாள் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

உங்களின் வசதியான வாழ்வுக்கும் பாதுகாப்பிற்கும் இந்திய அரசுக்கு பெரிதும் கடமைப்பட்டிருக்கிறீர்கள். எனவே அதற்காக இந்திய அரசுக்கு வக்காலத்து வாங்குவது உங்களுக்கு அவசியமாக இருக்கலாம். ஆனால் எந்த ஒரு ஈழத் தமிழனும் இந்திய அரசு செய்த துரோகத்தை மறக்கப்போவதும் இல்லை. அதனை இனி நம்பப் போவதும் இல்லை.

மாபெரும் ஆசான் தோழர் மாஓ சேதுங் நினைவு தினம்!

• மாபெரும் ஆசான் தோழர் மாஓ சேதுங் நினைவு தினம்!

மக்கள் சக்தியே மகத்தான சக்தி என்றார்.
மக்கள் சக்தி அணுகுண்டை விட வலிமையானது என்றார்.

மக்களை அணிதிரட்ட
ஆயிரம் பொதுக் கூட்டங்களை விட
கொரில்லா தாக்குதல் மேன்மையானது என்றார்.

ஆயுதப் போராட்டத்தின் மூலம்
புதிய ஜனநாயகப் புரட்சியை வென்று காட்டினார்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகார தலைமையில்
கலாச்சாரப் புரட்சியை வழி நடத்தினார்.

நூறு மலர்கள் மலரட்டும்
ஆயிரம் கருத்துகள் முட்டி மோதட்டும் என்றார்.

மரம் ஓய்வை விரும்பினாலும்
காற்று விடுவதில்லை என்றார்.

மாக்சிச லெனிச மாவோசிச சிந்தனையின் வழிகாட்டலில்
புதிய ஜனநாயகப் புரட்சியை வென்றெடுப்போம்!

Photo: • மாபெரும் ஆசான் தோழர் மாஓ சேதுங் நினைவு தினம்!