Sunday, September 28, 2014

வரிசையில் கிடக்குது மக்களின் தண்ணீர் குடங்கள். ஆனால் வட மாகாணசபையில் வரிசையாக நிக்குது உறுப்பினர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனங்கள்.

• வரிசையில் கிடக்குது மக்களின் தண்ணீர் குடங்கள்.
ஆனால் வட மாகாணசபையில் வரிசையாக நிக்குது
உறுப்பினர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனங்கள்.
யாழ் குடா எங்கும் வரலாறு காணாத வரட்சி
மாகாணசபைக்கு அது குறித்து கவலை இல்லை
அவர்களது அக்கறை எல்லாம் தமக்கு சொகுசு வாகனம் பெறுவதே!
தமிழ் மக்கள் தண்ணீருக்காய் அலைகிறார்கள்.
தமிழ்த் தலைவர்கள் அது குறித்து கவலை இல்லை.
அவர்களது அக்கறை எல்லாம் தமிழரசுக்கட்சிக்கு
மாநாடு நடத்துவதும் , புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதுவுமே!
மாகாணசபையை தந்தால் தமிழ் மக்களுக்காக போராடுவோம் என்றவர்கள் வடக்கில் ராணுவம் மாணவிகளை பாலியல் வல்லுறவு செய்வது குறித்து வாய் திறக்க மறுக்கிறார்கள்.
காரைநகர் ஊரியில் மாணவிகளை பாலியல் வல்லுறவு செய்தவர்களை நீதிமன்றில் ஆஜர் செய்ய கடற்படை மறுக்கிறது.
அதேவேளை கிளிநொச்சியில் கைது செய்த தாய் மற்றும் மகள் மீது
நீதிமன்றம் வலியுறுத்தியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த அரச சட்ட விரோத செயற்பாடுகள் குறித்து
இந்நாள் மாகாண முதல்வரும், முன்னாள் நீதியரசரும் வாய் திறப்பதில்லை.
ஒருபுறம் தமிழ் மக்களை ராணுவம் துன்புறுத்துகிறது.
தமிழ் மாணவிகளை பாலியல் வல்லுறவு செய்கிறது.
இது குறித்து கிறிஸ்தவ ஆயர்மார் கூட கண்டனம் செய்கிறார்கள்.
ஆனால் எமது தமிழ் தலைவர்கள் ஏன் வாய் திறப்பதில்லை?
ஏனென்றால் இந்த தமிழ் தலைவர்கள் அதே சிங்கள பொலிஸ் காவலில்தானே தமிழ் மக்கள் மத்தியில் வலம் வருகிறார்கள்!
தமிழ் தலைவர்களுக்கு தமிழ் மக்கள் குறித்து கவலை இல்லை.
அவர்களது அக்கறை எல்லாம் தமிழரசுக்கட்சிக்கு மாநாடு நடத்துவதே!
தமிழசுக்கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராசா
அன்று போட்டது “சேகுவாரா” வேடம்
இன்று போடுவதோ “காந்தி தாத்தா” வேடம்
தொடருது மாவை சேனாதிராசாவின் போலி வேடம்!
பாவம் தமிழ் மக்கள்!

No comments:

Post a Comment