Sunday, February 26, 2023

தமிழர் மரணித்தபோது

தமிழர் மரணித்தபோது மௌனித்த பேனாவுக்கு தமிழர் கடலில் நினைவு சின்னம் வைப்பதை மானமுள்ள தமிழர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.

மக்கள் விரோத சிலைகள்

மக்கள் விரோத சிலைகள் மக்களால் விரைவில் அகற்றப்படும் நேற்று இலங்கையில் நடந்தது நாளை தமிழ்நாட்டிலும் நிகழும்

சுமந்திரன் - உனக்கு என்ன வேணும் பாப்பா?

சுமந்திரன் - உனக்கு என்ன வேணும் பாப்பா? பாப்பா – எனக்கு ஒன்னும் வேணாம் அங்கிள். தீர்வு வரலைன்னா அரசியலில் இருந்து ஒதுங்கிடுவேன் என்று கடிதம் எழுதி வைத்திருந்தீங்களே, அந்தக் கடிதம் இப்பவும் உங்க சட்டைப்பாக்கற்றில் இருக்கா? சுமந்திரன் - ??? 😂😂

இருவரும் தமிழர்கள்.

இருவரும் தமிழர்கள். அது மட்டுமல்ல இருவரும் திருமலையைச் சேர்ந்தவர்கள் ஒருவர் எல்லோரும் அறிந்த திருமலை பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தர் ஐயா. மற்றவர் தியாகி நடராஜா. 1957ல் சுதந்திரநாளை கரிநாளாக தமிழரசுக்கட்சி அறிவித்தது. அப்போது திருமலையில் சிங்கக்கொடியை அகற்றிவிட்டு கறுப்புகொடியை ஏற்றிய நடராஜனை சிஙகள பொலிஸ் சுட்டுக்கொன்றது. எந்த சிங்கக்கொடியை இறக்க திருமலை நடராஜன் உயிர் துறந்தாரோ அதே சிங்கக்கொடியை அதே திருமலை எம்பி சம்பந்தர் ஐயா தூக்கிப் பிடிக்கிறார். பாவம் நடராஜன். குறிப்பு – 04.02.2023 யன்று நடராஜனின் 66 வது நினைவு தினம்.

04.02.1957 யன்று திருமலையில்

04.02.1957 யன்று திருமலையில் கறுப்புகொடி ஏற்றியவேளை சிங்களபடையால் கொல்லப்பட்ட நடராசனை நினைவு கூர்வோம் இவர் ஆயுதம் தூக்கி போராடவில்லை. ஆனாலும் சுட்டுக்கொல்லப்பட்டார் அகிம்சை போராட்டம் வன்முறை மூலம் அடக்கப்பட்டதாலேயே தமிழர்கள் வேறு வழியின்றி ஆயுதம்ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்

ஓடாத மானும் போராடாத இனமும்

ஓடாத மானும் போராடாத இனமும் வாழ முடியாது பல்கலைக்கழக மாணவர்கள் அழைக்கிறார்கள். மக்கள் ஒருமித்து பேராதரவு வழங்க வேண்டும்.

முத்துக்குமாரை அடுத்து

முத்துக்குமாரை அடுத்து ஈழத் தமிழருக்காய் தீக்குளித்து இறந்த பள்ளப்பட்டி ரவி அவர்களின் 14வது நினைவு நாள் . தமிழ் இனத்திற்காக தீக்குளித்தவன் ஈகத்தை அப்போதைய கருணாநிதி திமுக அரசும், அதன் ஏவல்துறையும் சமையல் அடுப்பு (ஸ்டவ்) வெடித்து இறந்ததாக மனச்சான்று இன்றி பொய்க்கதை கட்டியது

ஒரு இனத்தை அடக்கி

ஒரு இனத்தை அடக்கி ஆள முற்படும் எந்தவொரு இனமும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது. எனவே சிங்கள மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் தமிழ் மக்களின் சுதந்திரத்தை முதலில் அங்கீகரிக்க வேண்டும்.

நாம் ஊமையாக இருக்கும்வரை

நாம் ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும் புலம்பெயர் தமிழர்கள் உரத்து பேசுகிறார்கள். இனி உலகம் கேட்டே தீர வேண்டும். #பெப்-4 தமிழர் கரிநாள்

திருவள்ளுவருக்கு 133 அடியில்

திருவள்ளுவருக்கு 133 அடியில் சிலை கலைஞருக்கு 134 அடியில் சிலை. வள்ளுவரைவிட கலைஞர் உயர்ந்தவரா? இதைவிட தமிழரை வேறு எவரால் கேவலப்படுத்திவிட முடியும்?

தமிழனை விரட்டி விரட்டி அடிக்கும்

தமிழனை விரட்டி விரட்டி அடிக்கும் வட இந்தியனுக்கு எதிராக ஒருமுறை வேட்டியை மடித்து கட்டுங்களேன் பிளீஸ்

அப்புறம் எதற்கு கடலில் பேனா?

அப்புறம் எதற்கு கடலில் பேனா?

விழாமலே வாழ்ந்தோம்

விழாமலே வாழ்ந்தோம் என்பதல்ல பெருமை விழும்போதெல்லாம் மீண்டும் எழுந்தோம் என்பதே பெருமை - நெல்சன் மண்டேலே

மழை விட்டும் தூவானம் விடவில்லை

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்று எழுதிய பேனா சங்க இலக்கியத்தில் ஒரு வீட்டில் மரணம் நிகழும்போது இன்னொரு வீட்டில் திருமணம் நிகழ்ந்தது என்று எழுதி தன் பிள்ளைகளின் பதவியேற்பு விழாவை நியாயப்படுத்திய பேனா இந்தப் பேனா மானமுள்ள தமிழருக்கு தேவைதானா?

மருதையாற்றுபால குண்டு

மருதையாற்றுபால குண்டு வெடிப்பையடுத்து காவல்துறை விசாரணைக்கு அஞ்சி தோழர் தமிழரசனை பயங்கரவாதி என்று போஸ்டர் அடித்து ஒட்டி காட்டிக் கொடுத்தவர் அல்லவா நீங்கள். உங்களின் புரட்சிப் புலுடாவை 1987லேயே பார்த்துவிட்டோம்.

விடுதலைப் புலிகளைப் பார்த்து

விடுதலைப் புலிகளைப் பார்த்து விடுதலைக் குயில்கள் என்னும் இயக்கத்தை ஆரம்பித்தவர். நகைக்கடையை கொள்ளையடித்து பொலிசாருக்கு தெரிந்தவுடன் ஓடிப்போய் கலைஞரிடம் சரணடைந்தவர். தன்னைப்போல் சீமானும் திமுக காலடியில் கிடக்க வேண்டும் என விரும்புகிறாரா இந்த பேராசிரியர்.

திலீபனை பயங்கரவாதி என்று

திலீபனை பயங்கரவாதி என்று கூறிவரும் இந்திய மற்றும் சிங்கள அரசுகளுக்கு பதில் அளித்துள்ள புதுமணத் தம்பதிகளுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.

அரசியல் கைதிகள்

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை காணாமல் ஆக்கப்பட்டோர் கண்டு பிடிக்கப்படவில்லை இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை பெ-4 தமிழர் கரிநாளே! #N2E

5 வருடங்களுக்கு மேலாக

5 வருடங்களுக்கு மேலாக அகிம்சை வழியில் போராடுகிறார்கள் இவர்கள் கோருவதெல்லாம் தாம் இறப்பதற்குள் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பற்றி அறிந்துவிட வேண்டும் என்பதே தமக்கு சொகுசு பங்களா, சொகுசு வாகனம் கேட்டு வாங்கிய எமது தலைவர்களால் இவர்களுக்கு ஒரு தீர்வை கேட்டு வாங்க முடியவில்லை?

இத்தனை காலமும் ஒன்றாக இருந்துவிட்டு,

இத்தனை காலமும் ஒன்றாக இருந்துவிட்டு, இப்போது அவர்கள் பிரிந்து சென்றுவிட்டார்கள் என்றவுடன், தூள் கடத்தியவர்கள், காட்டிக் கொடுத்தவர்கள், தலையாட்டியாக செயற்பட்டவர்கள் என விமர்சிப்பது என்ன நியாயம்? சுமந்திரன் சேர் ஏன் இந்தளவு தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார்? ஒருவேளை தோல்வி பயம் வந்துவிட்டதோ?

இதைப் படித்ததும் யாருக்கு சிரிப்பு

இதைப் படித்ததும் யாருக்கு சிரிப்பு வரவில்லையோ அவர்கள் உடனடியாக ஒரு நல்ல மருத்துவரை சந்தித்து உடலை சோதிக்கவும். 😂😂

ஆழ்ந்த இரங்கல்கள் !

• ஆழ்ந்த இரங்கல்கள் ! அவர் உயிர் பிரிந்திருக்கலாம். ஆனால் அவர் பாடல்கள் மூலம் என்றும் எம்முடன் வாழ்வார். குறிப்பாக மாவீரர் குறித்து அவர் பாடிய பாடல் ஒலிக்கும்போதெல்லாம் ஈழத் தமிழர்களால் நினைவு கூரப்படுவார். #வாணி ஜெயராம்

இதுவரை உலகில் பற்றியெரிந்த

இதுவரை உலகில் பற்றியெரிந்த பெரு நெருப்பெல்லாம் ஒரு தீப்பொறியில் இருந்தே ஆரம்பமானது

பூவும் நடக்குது

பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது தமது சொந்த நிலத்திற்காக ஆனால் தலைவர்களோ சொகுசு பங்களாவில் ஆழ்ந்த உறக்கத்தில் !!

சர்க்கஸ் குரங்கை

சர்க்கஸ் குரங்கை அரச சிம்மாசனத்தில் உட்கார வைத்தால் அது அரச சபையை சர்க்கஸ் கூடாரமாக மாற்றுமேயொழிய ஒருபோதும் தான் அரசன் ஆகாது. #சுமந்திரனும் காந்திக் குல்லாவும்

தமிழக பாஜக தலைவர்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஏன் திடீரென்று ஈழத்தமிழர் நினைவு வந்தது? இதற்கு ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் காரணமா? அல்லது சிங்கள அரசுக்கு மறைமுக நெருக்கடி கொடுத்து திருமலை எண்ணெய்குதம் பெற முயற்சியா?

சம்பந்தர் ஐயாவின் 90 வது

சம்பந்தர் ஐயாவின் 90 வது பிறந்தநாள் இன்று ஆகும். காது கேட்கவில்லை. கண் தெரியவில்லை. மற்றவர் உதவி இன்றி எழுந்து நடமாடக்கூட முடியவில்லை. ஆனாலும் பதவியை விட்டு ஒதுங்க இன்னும் அவருக்கு மனம் வரவில்லை. கொஞ்சம்கூட வெட்கமின்றி பதவியை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் புலி உறுப்பினர் இல்லை.

இவர் புலி உறுப்பினர் இல்லை. இவர் ஆயுதம் ஏந்தி போராடவில்லை இவர் மக்களால் வாக்கு அளித்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இவர் சிங்கள அரசால் போர் நிறுத்த காலகட்டத்தில் 07.02.2005 யன்று கொல்லப்பட்டார் 18 வருடங்கள் கழிந்துவிட்டன. இன்னும் இவர் கொலைக்கு நீதி வழங்கப்படவில்லை.

தீபாவளிக்கு தீர்வு வரும்

தீபாவளிக்கு தீர்வு வரும் என்ற வெறும் மூன்று சொல்லை வைத்து தொடர்ந்து பதவி பெற்று வரும் ஈழத்து கருணாநிதி சம்பந்தர் ஐயா.

தமிழ்நாட்டில் இலவச சேல

தமிழ்நாட்டில் இலவச சேலை பெற முயன்ற நாலு பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் இழந்துள்ளனர். ஆனால் அந்த தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் 500 பஸ் வண்டிகளை இலவசமாக சிங்கள அரசுக்கு இந்திய அரசு வழங்கியுள்ளது. ஈழத் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்க மறுத்து வரும் சிங்கள அரசுக்கு தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தை இலவசமாக வழங்கி உதவி வருகிறது இந்திய அரசு.

அநீதியைக் கண்டு ஆத்திரத்தில்

"அநீதியைக் கண்டு ஆத்திரத்தில் நீ அதிர்ந்து போவாயேயானால் நீயும் என் தோழனே" – சே லண்டனில் சிங்கள அரசுக்கு எதிராக ஈழத் தமிழர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் குர்திஸ் மற்றும் பப்புவகினிய அமைப்புகளும் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கியுள்ளன.

இரயில்விபத்தில் கால்கள்

இரயில்விபத்தில் கால்கள் பாதிக்கப்பட்ட போதும் பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்த விமலேஸ் அக்கா ஒருநாள் அவரது கைப்பையில் இருந்த பணத்தை பறிப்பதற்காக இந்திய அமைதிப்படையால் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார் அவர் திரும்பி வரவில்லை. அவரது செயற்கைகால் கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது.

புலம்பெயர் தமிழர்கள்

புலம்பெயர் தமிழர்கள் போராடியபோதெல்லாம் போராட்டம் தேவையில்லை என்றுகூறிய சுமந்திரன், இன்று காந்திக்குல்லாய் அணிந்து வீதியில் நின்று போராட வேண்டிய நிலைக்கு வந்துள்ளார். அற்புதங்கள் நிகழ்த்தும் தமிழ் மக்கள் உண்மையில் மகத்தானவர்களே.

தோழர் சண் அவர்களை

•தோழர் சண் அவர்களை நினைவில் கொள்வோம்! 08.02.2023யன்று தோழர் சண் அவர்களின் 30 வது நினைவு தினம் ஆகும். இலங்கையில் மாவோயிசத்தை அறிமுகப்படுத்தி வளர்த்தமைக்காக அவரை நினைவுகூர வேண்டும். இலங்கையில் பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதம் ஏந்திய மக்கள்யுத்தப்பாதையை முன்வைத்தமைக்காக நினைவு கூர வேண்டும். “அடிக்கு அடியே” சாதீய கொடுமையில் இருந்து விடுபட வழி வகுக்கும் என கூறி தீண்டாமைக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை அளித்தமைக்காக நினைவு கூர வேண்டும். இலங்கையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த ஒரு கம்யுனிஸ்ட் தலைவர் என்பது மட்டுமன்றி இனப்பிரச்சனைக்கு தீர்வாக பிரதேச சுயாட்சியை முன்வைத்தவர் என்பதால் நினைவு கூர வேண்டும். அவர் பற்றிய சில குறிப்புகள். •வறிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் நன்கு படித்து பட்டதாரியானவர். தமிழ் சிங்களம் ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் சிறந்த புலமை மிக்கவர். •அவர் விரும்பியிருந்தால் ஒரு நல்ல உத்தியோகம் பெற்று வசதியான வாழ்வு வாழ்ந்திருக்கலாம் •அல்லது பின்னரும்கூட பல கம்யுனிஸ் தலைவர்கள் தேர்தல் பாதையில் சென்று அமைச்சு பதவிகள் பெற்றதுபோல் இவரும் பெற்றிருக்கலாம். •ஆனால் அவர் இறுதிவரை உறுதியான புரட்சியாளராக வாழ்ந்து மறைந்தார். •சீனாவின் உதவி கிடைக்காமல் போய்விடும் என்று தெரிந்தும் சீனாவின் தவறுகளை விமர்சித்தவர். •மாசேதுங் உயிருடன் இருக்கும்போதே சீனா இலங்கை அரசுக்கு செய்த ஆயுத உதவிகளை கண்டித்தவர். சீனா முதலாளித்தவ பாதைக்கு திரும்புகிறது என்று கூறி அதனுடனான உறவுகளை கைவிட்டவர். •தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியபோது இலங்கை அரசு அவர்களை “பயங்கரவாதிகள்” என்று அழைத்தது. அமிர்தலிங்கம் உட்பட தமிழர்விடுதலைக்கூட்டணியினர் “பொடியன்கள்” என்று அழைத்தனர். ஆனால் தோழர் சண்தான் முதன் முதலில் அவர்களை “போராளிகள்” என்று அழைத்தார். (அதுவும் சிறிமாவோ பண்டாரநாயக்கா, கொல்வின் ஆர்டி சில்வா, என்எம் பெரராரோ பீட்டர் கெனமன் அமிர்தலிங்கம் இருந்த மேடையில் கொழும்பில் சிங்கள மக்கள் மத்தியில் தைரியமாக கூறினார்.) •தமிழ் சிங்கள மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்காக பல தொழிற்சங்கங்களை நிறுவி அவர்களுக்காக இலவசமாக வழக்குகள் பேசி வென்று கொடுத்தவர். (1)ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கள் இந்திய ஆதரவுடன் அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் மலரும் என்று கூறியபோது “இந்தியாவை நம்ப வேண்டாம். இந்தியா ஒரு போதும் தமிழீழம் பெற்று தராது. மாறாக போராளிகளை அழிக்கும்” என்று கூறியவர். (2)இலங்கையில் சமசமாஜக்கட்சி டிராட்சியவாதிகளுக்கும் , தேர்தல் பாதையில் பயணிக்கும் திரிபுவாத கம்யுனிஸ்டுகளுக்கும் தோழர் சண் கொடுத்த தத்துவார்த்த அடி இன்னும் அவர்களால் எழும்ப முடியாத அடியாக இருக்கிறது. (3)இலங்கையில் இனி யார் புரட்சியை செய்தாலும் அவர் முன்னெடுத்த புதிய ஜனநாயகப்புரட்சியில் இருந்தே தொடர வேண்டும்.. தோழர் சண் அவர்களை மறுத்து விட்டு யாராலும் புரட்சி செய்ய முடியாது. தோழர் சண் இலங்கையில் ஒரு மாபெரும் தலைவர் மட்டுமல்ல மகத்தான தலைவரும்கூட. அவரை நினைவு கூர்வது எமது கடமையாகும். குறிப்பு - இத்தகைய மகத்தான ஒரு தலைவரின் இறுதி நாட்களில் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தமை என்னால் மறக்க முடியாதது. அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரது “ ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள்” நூலை 1990ல் சென்னையில் அச்சடித்து வெளியிட்டிருந்தேன்

இந்தியாவைப் போன்று

இந்தியாவைப் போன்று இலங்கையிலும் பெரியாரியம், அம்பேத்காரியம் போன்ற சீர்திருத்தக் கருத்துகள் காலூன்றி வளர முடியாமைக்கு முக்கிய காரணம் தோழர் சண் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சியினர் சாதீய தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியதுடன் அதை “அடிக்கு அடி” என்னும் தத்துவத்தினூடாக ஆயுதப் போராட்டமாகவும் முன்னெடுத்தமையே. வடக்கு கிழக்கில் மட்டுமன்றி மலையக தோட்ட தொழிலாளர்களின் பல வழக்குகளிலும் தோழர் சண் நேரிடையாக ஆஜராகி வெற்றி பெற்று கொடுத்துள்ளார். சண் கேட்டுக்கொண்டமைக்காக செனட்டர் நடேசன் ஆஜராகியிருக்கிறார். சண் வேண்டுகோள்படி தோட்ட தொழிலாளர் வழக்கில் நடேசன் மகன் சத்தியேந்திரா இங்கிலாந்து சென்று வாதாடி வெற்றி பெற்றுக்கொடுத்துள்ளார்.

தமிழ் மக்களின் சுயநிர்ணய

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் மூலமே தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் ஜக்கியம் ஏற்பட வேண்டும் என்று தோழர் சண் கூறினார். அதுமட்டுமன்றி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் ஜேவிபி கட்சியை இனவாதக்கட்சி என பகிரங்கமாக விமர்சித்தார். இந்தியாவில் நக்சல்பாரி இயக்கம் (நக்சலைட்டுகள்)அழித்தொழிப்பு நடவடிக்கையை முன்வைத்து செயற்பட்டபோது அதன் தவறுகளை அப்பவே சுட்டிக்காட்டிய ஒரே தலைவர் தோழர் சண். அதுமட்டுமல்ல அத்தகைய அழித்தொழிப்பு நடவடிக்கைகள் இலங்கையில் சிலர் முன்னெடுக்க முனைந்தபோது அதனை விமர்சித்து நிறுத்தியவர் அவர்.

பெரியார் - அடேய் !

பெரியார் - அடேய் !நான் தமிழன் இல்லடா. திராவிடன்டா!! (200 ரூபா) உபி - போடா சங்கிப்பயலே!! போய் பெரியாரை முழுசா படி..

உக்ரைன் குழந்தைக்காக

உக்ரைன் குழந்தைக்காக இரங்கும் சர்வதேசம் ஏன் நம்ம ஈழத் தமிழ் குழந்தைக்காக இரங்கவில்லை

இருவரும் பெண்கள்

இருவரும் பெண்கள் இருவரும் தம் தாய் நிலம் காக்க ஆயுதம் ஏந்தியுள்ளார்கள். ஆனால், உக்ரைன் பெண் ஆயுதம் ஏந்துவதை “தேசபக்தி” என்று வரவேற்பவர்கள் ஈழத் தமிழ்பெண் ஆயுதம் ஏந்தியதை “பயங்கரவாதம்” என்று குறிப்பிடுவது ஏன்? உக்ரைனியருக்கு ஒரு நியாயம். தமிழருக்கு இன்னொரு நியாயமா?

பெரியார் உயிரோடு இருந்தபோது

பெரியார் உயிரோடு இருந்தபோது ஈழத் தமிழருக்கு உதவுங்கள் என்று தந்தை செல்வா கேட்டபோது தன்னால் முடியாது என்று பெரியார் கூறினார். இது தெரியாமல் “ஈழத் தமிழருக்கு இன்றைய தேவை பெரியாரிய அரசியல்” என்று 200 ரூபாவுக்கு பதிவு எழுதும் உபிக்கள் கூறுகின்றனர். கொஞ்சம் வரலாறு படியுங்கடா.

தோழர் தமிழரசனுக்கு பயிற்சி

தோழர் தமிழரசனுக்கு பயிற்சி மற்றும் ஆயுதம் வழங்கினார் என்பதற்காக இந்திய உளவுப்படையால் ஈரோஸ் இயக்கம் மூலம் மலையகத்தில் கொல்லப்பட்ட தோழர் நெப்போலியன். யாழ்ப்பாணத்தை சேர்ந்த நெப்போலியன் மலையகம் சென்று மலையக மக்கள் விடுதலை முன்னணி(ULO ) அமைப்பை உருவாக்கி போராடியவேளை கொல்லப்பட்டார். (1986) யாழ்ப்பாண தமிழர்கள் மலையக தமிழர்கள் குறித்து அக்கறை கொள்ளவில்லை என பிரச்சாரம் செய்யும் (200 ரூபா) திமுக உடன்பிறப்புகள் இந்த வரலாற்றை அறிவார்களா?

கலைஞர் உயிரோடு இருந்தபோது

கலைஞர் உயிரோடு இருந்தபோது ஈழத் தமிழர்களுக்கு தமிழீழம்தான் தீர்வு என்று தமிழீழ ஆதரவு மாநாடு (டெசோ) நடத்தினார். ஆனால் இப்போது திராவிட முதல்வர் ஸ்டாலின் ராஜீவ்காந்தி முன்வைத்த தீர்வு 13ஐ மோடி அரசுடன் சேர்ந்து கூறுகின்றார். இதுதான் ஈழத் தமிழர் மீதான திமுக வின் அக்கறையா?

உக்ரைன் மருத்துவமனை

உக்ரைன் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியமைக்காக புதினை போர்க்குற்றவாளி என்று கூறுவோர், முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியமைக்காக மகிந்த ராஜபக்சாவையும், யாழ் மருத்துவமனை மீது நடத்திய தாக்குதலுக்காக ராஜிவ் காந்தியையும் , போர்க்குற்றவாளிகள் என ஏன் கூறுவதில்லை?

கனிமொழி தனக்கு தம்பி

கனிமொழி தனக்கு தம்பி வேண்டுமென்று கேட்டதால் கலைஞர் ஒரு அகதிச் சிறுவனை தத்தெடுத்து வளர்த்தார். இப்போது அந்த சிறுவன் எங்கேயென்று கனிமொழியிடம் ஏன் கேட்க தோன்றவில்லை சுமந்திரனுக்கு ? 5 வயது முதல் சிங்களவருடன் சேர்ந்து வாழ்ந்ததை பெருமையாக நினைக்கும் சுமந்திரனுக்கு தமிழ் சிறுவன் மேல் அக்கறை இருக்குமா?

ரயில் வராத தண்டவாளத்தில்

ரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தமிழ் மக்களை ஏமாற்றியவர் கலைஞர். தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு கோரி ரயில் பாலத்திற்கு குண்டு வைத்தவர் தோழர் தமிழரசன். ஆனால் கலைஞரை தமிழின தலைவர் என்று போற்றும் உ.பிஸ் தமிழரசனை பயங்கரவாதி என்கிறார்கள். என்னே கொடுமை இது?

எம்.ஜி.ஆர் காலத்தில்

எம்.ஜி.ஆர் காலத்தில் கலைஞர் கைது செய்யப்பட்டபோது மதுரையில் குண்டு வைத்தவர் திமுக இளைஞர் அணி செயப்பெருமாள். அவர் மீதான வழக்கில் ஆஜராகி வாதாடியவர் இன்றைய நிதி அமைச்சரின் தந்தை பழனிவேல்ராஜன். அகதிகள் குண்டு வைக்க வருகிறார்கள் என்று எழுதும் 200 ரூபா உ.பி களுக்கு இந்த வரலாறு தெரியுமா?

ஈழத்தில் சக தமிழன்

ஈழத்தில் சக தமிழன் மீது விழுந்த குண்டு உன்னை உலுக்கவில்லை. கலைஞர் டிவி யில் மானாட மயிலாட பார்த்து மகிழ்ந்த உனக்கு கீவ் நகரத்தில் விழுந்த குண்டு கீரைக்காரி கூடையை உடைக்கிறதா? சீ தூ இது ஒரு பிழைப்பு.

கலைஞர் குடும்பத்திற்கு

கலைஞர் குடும்பத்திற்கு 45000கோடி ரூபா சொத்து இருந்தும் கலைஞர் பாயில்தான் படுப்பார். அந்தளவு எளிமையானவரா கலைஞர்? இல்லை. அவருக்கு எழுந்தவுடன் எதையாவது சுருட்டனும். அதுதான். (படித்ததில் பிடித்தது)

போராட்டம் இன்பமயமானது

போராட்டம் இன்பமயமானது என்று கூறியவர் காரல் மார்க்ஸ். ஜெர்மனியரான மார்க்ஸ் இதை லண்டனில் இருந்துதான் கூறினார். அவரிடம் ஏன் தாயகம் சென்று போராடாமல் லண்டனில் இருந்து கூறுகின்றாய் என எந்த ஜேர்மனியனும் கேட்கவில்லை. ஏனெனில் ஜெர்மனியன் திராவிட கொத்தடிமை இல்லை.

தோழர் சிங்காரவேலர் நினைவுநாள்

தோழர் சிங்காரவேலர் நினைவுநாள் வசதியான குடும்பத்திலிருந்து வந்து அவர் வழக்கறிஞர் தொழில் செய்தபோதும் ஏழைகள் பற்றியே அவரது மனம் சிந்தித்துக்கொண்டிருந்தது. ஆனால் இன்றைய ஓட்டுப்பொறுக்கி கம்யுனிஸ்டுகள் 5 சீட்டுக்கும் 25 கோடி ரூபாவுக்கும் அறிவாலயம் வாசலில் காத்து கிடக்கின்றனர்.

முருகதாசன் மரணம்

•முருகதாசன் மரணம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? போரை நிறுத்துமாறு கோரி 12.02.2009 யன்று ஜ.நா முன்றலில் முருகதாசன் தனக்குதானே தீயிட்டு மரணமடைந்தார். ஆனால் போர் நிறுத்தப்படவில்லை.மாறாக 40 அயிரம் அப்பாவி தமிழ் மக்கள் முள்ளிவாயக்காலில் கொல்லப்பட்டார்கள். போரை நிறுத்துமாறு தமிழகத்தில் முத்துக்குமார் உட்பட 16 பேர் தீயிட்டு தற்கொலை செய்தார்கள். ஆனால் இந்திய அரசு அதனை கண்டுகொள்ளவும் இல்லை. போரை நிறுத்தவும் இல்லை. மாறாக தமிழின அழிப்பிற்கு பெரும் உதவி புரிந்தது. தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 3 மணி நேர உண்ணாவிரத நாடகம் அரங்கேற்றினார். ஆனால் போர் நிறுத்தப்படவில்லை. மாறாக அதன்பின்னரே கொடிய கிளாஸ்ரர் குண்டுகள் வீசப்பட்டன. மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர். போரை நிறுத்தூமாறு கோரி உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் , சாலை மறியல் செய்தார்கள். சங்கிலி போராட்ம் நடத்தினார்கள். உண்ணாவிரதம் இருந்தார்கள். வெளிநாட்டு அரசுகளிடம் மன்றாடினார்கள். மனிதவுரிமை அமைப்பகளிடம் கரம் கூப்பி வேண்டினார்கள். அனைத்து சாத்வீக வழிகளிலும் மக்கள் கேட்டார்கள். ஆனால் போர் நிறுத்தப்படவில்லை. தமிழ் மக்களின் அழிவு தடுக்கப்படவில்லை. ஆயுதம் தூக்கினால் அது பயங்கரவாதம் என்றவர்கள், மக்கள் ஜனநாயகவழியில் சாத்வீக முறையில் போராடிய போது கண்டு கொள்ளவில்லையே. இதில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? திலீபன் உண்ணாவிரதம் இருந்தபோது அகிம்சையை போதித்த இந்திய அரசு அதனைக் கண்டு கொள்ளவில்லை. அன்னைபூபதி உண்ணாவிரதம் இருந்தபோது அவர் ஒரு பெண் என்றுகூட இந்திய அரசு இரங்கவில்லை. புலிகள் ஆயுத பலத்தோடு இருந்தபோது தமிழீழம் தவிர அனைத்தையும் தருவதாக கூறிய சந்திரிக்கா பண்டாரநாயக்கா இப்போது புலிகள் இல்லை என்பதை தமிழ் மக்கள் உணர வேண்டும் என்று கூறுகிறார். இதன் அர்த்தம் அதிகாரத்தை பெறுவதில் துப்பாக்கிகள் தீர்மானிக்கிறது என்பதைத் தவிர வேறு என்ன? புலிகள் வெல்லவில்லை என்பதால் ஆயுதப் போராட்டம் வெற்றி பெறாது என்று சிலர் கூற முற்படுகிறார்கள். இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று ஆயுதப் போராட்டம் பயங்கரவாதம் என்றும் கூறுகிறார்கள். அவர்களிடம் நாம் கேட்க விரும்புகிறோம், கோப்பாப்பிலவில் மக்கள் அமைதியாக அகிம்சை வழியில் தானே போராடுகிறார்கள். ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லையே? காணாமல் போனவர்களின் உறவுகள் அமைதியாக அகிம்சை வழியில் தானே 1800 நாளாக போராடுகிறார்கள். அவர்களை அரசு கண்டு கொள்ளவில்லையே? அகிம்சை வழியில் தீர்வு பெற முடியும் என்பவர்கள் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? அகிம்சை வழியில் போராடி தமது சொந்த நிலத்தையே திருப்பி பெற முடியாத தமிழ் மக்களுக்கு அகிம்சை வழியில் போராடினால் சமஸ்டி தீர்வு கிடைத்துவிடுமா? இன்று தமிழ் இனவிடுதலைக்காக சிலர் தேர்தல் பாதையை முன்வைக்கிறார்கள். அவர்கள் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் விடுதலை பெற முடியும் என மக்களை நம்பவைக்க முயல்கிறார்கள். ஆனால் "துப்பாக்கி குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது" என்றும் "ஆயுதம் ஏந்திய மக்கள்யுத்தப்பாதை மூலமே விடுதலை அடைய முடியும்" என்று மாபெரும் ஆசான் மாசேதுங் கூறியுள்ளார். அதுவே இன்றும்கூட பொருத்தமாக உள்ளது என்பதே உண்மையாகும்.

நல்லது நடந்தால் கடவுள் செயல்.

நல்லது நடந்தால் கடவுள் செயல். கெட்டது நடந்தால் விதி எனில் மனிதனுக்கு மூளை எதற்கு? மனித மூளையில் உள்ள மயலின் நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 176000 கிலோ மீற்றர் என்கிறார்கள். மனித மூளையில் உள்ள 60 பில்லியன் நரம்பணுக்களில் சுமார் 10 பில்லியன் புறணிக் கோபுர உயிரணுக்கள். இவை தமக்குள் சமிக்கைகளை அனுப்பிக்கொள்ள ஏறத்தாழ 100 டிரிலியன் நரம்பிணைப்புகளை பயன்படுத்துகின்றன. நல்லது நடந்தால் கடவுள் செயல் , கெட்டது நடந்தால் அது விதி எனில் இத்தகைய சிறப்பான மூளை மனிதனுக்கு எதற்கு? பூசை செய்யவா? சிவன் என் முப்பாட்டன் என்று முகநூலில் படம் போடுற பயலுகள் எல்லாம் ரோட்டைக் கடக்கும்போது சிவனை நம்புவதில்லை. மாறாக எதிரில் இருக்கும் சிக்னல் லைட்டையே நம்பி கடக்கின்றனர். உலகம் உருண்டை என்று கூறிய விஞ்ஞானியை கொன்ற பாப்பரசர்கள் எல்லாம் இப்போது அப்பிள் போனில் கூகிளில்தான் இயேசுவை தேடுகின்ற நிலைமை. ஆம். கடவுள் இருக்கிறார் என்று கூறும் கருத்துமுதல்வாதிகள் எல்லாம் நடைமுறையில் கடவுள் இல்லை என்னும் பொருள்முதல்வாதிகளாகவே வாழுகின்றனர். உலப் புகழ்பெற்ற அறிஞர் ஸ்டீபன் கேவாக்கிங் கேட்கிறார் “கடவுள் தன்னால் தூக்க முடியாத ஒரு கல்லைப் படைக்க முடியுமா?” பக்தர்களே உங்கள் பதில் என்ன?

3ம் ஆண்டு நினைவஞ்சலிகள்!

• 3ம் ஆண்டு நினைவஞ்சலிகள்! தமிழ்நாடு விடுதலையை முன்னெடுத்த தோழர் தமிழரசன் வரலாற்றை “ தமிழ்தேசிய தலைவர் தமிழரசனின் வாழ்வும் அறமும்” என்னும் நூலாக எழுதியவர் தோழர் இளங்கோவன் இறுதிவரை ஈழத் தமிழருக்கு தன் உறுதியான ஆதரவை வழங்கியவர் தோழர் இளங்கோவன்

6 ஆண்டுகள் புலிகளுக்கு உதவி

•6 ஆண்டுகள் புலிகளுக்கு உதவி செய்தமைக்காக தலைமறைவு வாழ்க்கை •10 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வாழ்க்கை •4 ஆண்டுகளுக்கு மேலாக நாம்தமிழர் இயக்கத்தை தோற்றுவித்து அரசியல் வாழ்க்கை. இவ்வாறு போராட்டமே வாழ்கையாக கொண்ட சுபா. முத்துக்குமாரின் 12 வது நினைவு தினம் 15.02.2023 ஆகும்

இறுதி முத்தம்!

இறுதி முத்தம்! ஆண்டவர் இயேசு ஒரு முத்தத்தினால் காட்டிக்கொடுக்கப்பட்டார் என கூறுகின்றார்கள். அது உண்மையா பொய்யா தெரியாது. ஆனால் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் குழந்தை தன் தந்தையின் உடலுக்கு வழங்கிய இந்த இறுதி முத்தம் சிங்கள அரசின் கோர முகத்தை நன்கு இனங்காட்டுகிறது. ( சத்தியமூர்த்தி ( 12.02. 2009) வன்னியைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளரும் ஆவார். இவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்தில் இலங்கைப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகாயமுற்று இறந்தார்.)

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறுவது,

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறுவது, (அ)சிங்கள அரசுக்கு, (1) வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் பல்லாயிரம் சிங்கள ராணுவத்தை வைத்திருக்க உதவும் (2) சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் வைத்திருக்க உதவும் (3) காணமல் ஆக்கப்பட்டடோரை கண்டறியாமல் விடுவதற்கு உதவும் (4) இடம்பெயர்ந்தோரை மீள் குடியேற்றம் செய்யாமல் இருப்பதற்கு உதவும் (5) பல பில்லியன் டொலர் பணத்தை பட்ஜட்டில் ராணுவத்திற்கு ஒதுக்குவதற்கு உதவும் (6) ”புலிகளை அடக்குவேன்” என்று சொல்லி மீண்டும் வருவதற்கு மகிந்தராஜபக்சவுக்கு உதவும் (7) ”புலிகளின் பிரதிநிதிகள்” என்று கூறி தமிழ்தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை செய்வதை தவிர்க்க உதவும் (ஆ) இந்திய அரசுக்கு, (1) தொடர்ந்து புலிகள் இயக்கத்தைத் தடை செய்வதற்கு உதவும் (2)சிறையைவிடக் கொடிய சிறப்புமுகாமை வைத்திருக்க உதவும் (3)அகதிகளுக்கு குடியுரிமை வழங்காமல் இருக்க உதவும் (4)கடலில் தமிழக மீனவர் கொல்லப்படுவதை கண்டுக்காமல் இருக்க உதவும் (5) தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்காமல் இருக்க உதவும் அதைவிட,, • தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு தலைமை உருவாவதை தடுக்கிறது. • தமிழ்மக்கள் மீண்டும் போராடாமல் பிரபாகரன் வருகைக்காக காத்திருக்க வழி செய்கிறது. • பிரபாகரன் மரணம் குறித்து உண்மையை அறியா வண்ணம் மக்களை தடுக்கிறது. • புலிகளின் சொத்தை புலத்து வியாபாரிகள் தொடர்ந்து அனுபவிக்க உதவுகிறது. • சில தமிழக அரசியல்வாதிகளுக்கு ஏமாற்று அரசியல் செய்ய உதவுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, தனது 10வயது மகனைக்கூட காப்பாற்றாமல் தான் மட்டும் தப்பினார் பிரபாகரன் என்ற பழிச்சொல்லுக்கு வழி வகுக்கிறது. இத்தனை வருடமாகியும் வராமல் ஏன் ஒளித்து இருக்கிறார் என்று மக்கள் விசனப்பட வைக்கிறது. மேலும் அவருக்கு ஒரு வீர வணக்கம்கூட செலுத்தமுடியாத நிலையில் தமிழினத்தை வைத்திருக்கிறது.

பிரபாகரன் உயிருரோடு

பிரபாகரன் உயிருரோடு நலமாக இருக்கிறார் என நெடுமாறன் மூன்று தடவைகள் கூறியுள்ளார். ஆனால் இம்முறைதான் இந்திய ஊடகங்கள் சில இதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. ஏனெனில் இம்முறை நெடுமாறன் இதை பாஜக அரசுக்காக கூறியுள்ளார். நெடுமாறனும் காசி அனந்தனும் சங்கியாக மாறி பல வருடங்களாகிவிட்டது.

காதலர்தின வாழ்த்துக்கள்!

•காதலர்தின வாழ்த்துக்கள்! உலகில் சிறந்த தத்துவத்திற்காக மட்டுமன்றி உலகில் சிறந்த காதலர்களுக்காகவும் மார்க்ஸ் ஜென்னி இன்றளவும் நினைவு கூரப்படுகின்றனர். மாபெரும் மாக்சிய ஆசான் எங்கெல்ஸ் கூறுகிறார் “ஒரு புதிய தலைமுறை அதாவது தம் வாழ்நாள் முழுவதற்கும் தன்னிடம் ஒரு பெண்ணின் சரணாகதியைப் பணமோ வேறு எவ்விதமான சமூக அதிகாரமோ கொண்டு விலைக்கு வாங்காத ஆண்களினதும் உண்மையான காதலன்றி வேறு எந்தக் காரணத்ததுக்கும் தம்மை சரணளிக்காதவர்களும் பொருளாதார பின்விளைவுகளுக்கு அஞ்சி தம்மைத் தமது நேயத்திற்குரியோருக்கு அளிக்காதவர்களுமான பெண்களின் தலைமுறை வளர்ந்து வந்தபின்பு இப் பிரச்சனை தீர்வு பெறும். இத்தகைய மக்கள் உருவாகிய பின்னர் அவர்கள் என்ன செய்யலாம் என்று நாம் இன்று நினைப்பது பற்றி அவர்கள் துளியளவும் அக்கறைப்படமாட்டார்கள். அவர்கள் தமது சொந்த நடைமுறைகளையும் தங்கள் சொந்த பொது அபிப்பிராயங்களையும் உருவாக்கி ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட நடைமுறையுடன் நிறைவு காண்பர். அத்தகைய ஒரு சமூகத்தில் பெண்கள் ஆண்களுடன் பூரண சமத்துவம் அனுபவிப்பர் என்பதில் ஜயமில்லை.”

இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ கலிலி

இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ கலிலி இவர் 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி பிறந்தார் தன் உயிரைப் பணயம்வைத்து பூமியே சூரியனை சுற்றி வருகிறது என்ற உண்மையை உலகிற்கு கூறினார் ஆனால் நம்மவர்கள் இப்பவும் காலையில் சூரியன் உதிக்கிறது. மாலையில் மறைகிறது என்று எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்

இவர் சிங்கள இனத்தை சேர்ந்தவர் .

இவர் சிங்கள இனத்தை சேர்ந்தவர் . அத்துடன் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவரும்கூட. ஆனாலும் சிங்களவர்தான் வந்தேறிகள் என்று தன்னால் நிரூபிக்க முடியுமென சவால் விட்டவர். தமிழரை வந்தேறிகள் என்று கூறிய பௌத்த பிக்குவிற்கே இந்த சவாலை இவர் விட்டார்.

இதயம் பலவீனமானவர்கள்

•இதயம் பலவீனமானவர்கள் இந்த பதிவை படிக்க வேண்டாம். 😂😂 பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என நெடுமாறனும் காசி அனந்தனும் கூறிய நிகழ்வுக்கு பின்னணியில் இருப்பது சீனாவும் பாகிஸ்தானும் என்று இந்திய உளவுப்படையின் ஆதரவுடன் டில்லியில் கூட்டம் போட்ட நிலா சொல்கிறார் நெடுமாறனும் காசி அனந்தனும் கூறியது தவறுதான். ஆனால் அதற்காக அவர்களை சீனாவின் கைக்கூலிகளாக சித்தரிப்பது ரொம்பவும் ஓவர். இது கண்டிக்கத்தக்கது.

நெடுமாறன் ஐயா அவர்களே!

நெடுமாறன் ஐயா அவர்களே! பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று இதுவரை மூன்று தடவை கூறிவிட்டீர்கள். மிக்க நன்றி. அதேபோல் கலைஞர் தத்தெடுத்து வளர்த்த அந்த ஈழஅகதிச் சிறுவன் மணி உயிரோடு இருக்கிறாரா என்பதையும் ஒருமுறை சொல்லுங்களேன். பிளீஸ்.

இலாபம் எங்கிருந்து வருகிறது?

இலாபம் எங்கிருந்து வருகிறது? இலாபம் எங்கிருந்து வருகிறது என்று கேட்டால் வரவு – செலவு = இலாபம் ( Income – Expenses = Profit ) என்று ஒரு அக்கவுண்டன் கூறுவார். இதையே லாபம் எங்கிருந்து வருகிறது என்று ஒரு பொருளாதார அறிஞரிடம் கேட்டால் அவர் “ முதலாளி முதலீடு செய்யும் மூலதனம் அவருக்கு இலாபத்தை பெற்றுக் கொடுக்கிறது” என்பார். இதையே ஒரு ஆன்மீகவாதியிடம் கேட்டால் “இது எல்லாம் போன பிறப்பில் செய்த பாவ புண்ணிய விதிப்படி இந்தப் பிறப்பில் கடவுள் தருவது” என்பார். ஆனால் மார்க்சியவாதிகள் மட்டுமே தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டியே லாபம் பெறப்படுகிறது என்ற உண்மையை கூறுவார்கள். இந்த உண்மையை விஞ்ஞான முறைப்படி நிரூபித்து இந்த சுரண்டலை ஒழிக்க புரட்சி மட்டுமே தீர்வு என்பதையும் கூறியவர் காரல் மார்க்ஸ். எனவேதான் இந்த உண்மையை தொழிலாள வர்க்கம் உணர்ந்துவிடக்கூடாது என்பதில் முதலாளித்துவ அரசுகள் கவனமாக இருக்கின்றன. ஏனெனில் உலக ஜனத்தொகையில் 97% மானவர்கள் உழைக்கும் மக்களாவர். அவர்களை வெறும் 3%மான முதலாளிகள் அடக்கி ஆள்வதுடன் ஏமாற்றி சுரண்டிக் கொழுக்கின்றனர். இங்கு வேடிக்கை என்னவெனில் மத அடக்குமுறையை எதிர்த்தே வளர்ந்தது முதலாளித்துவ வர்க்கம். ஆனால் அதே முதலாளித்துவ வர்க்கம் தற்போது மதத்தை பேணிக் காத்து வருகின்றது. ஏனெனில் உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்களை மேலெழும்பவிடாமல் அழுத்தி வைக்கும் ஆபத்தான ஆயுதங்களாக மதமும் கடவுளும் இருக்கின்றன.

மதவெறியர்களால் கொல்லப்பட்ட

•மதவெறியர்களால் கொல்லப்பட்ட தத்துவவியலாளர் புரூணோ புரூணோவின் அண்டவியல் பார்வைகள் தமது மதக் கருத்துகளுக்கு எதிராக இருக்கிறது எனக்கூறி கிருத்தவ மதவாதிகளால் புரூணோ எரித்துக் கொல்லப்பட்டநாள் 17.02.1600 ஆகும். அவரை எரித்துக் கொன்றவர்களின் பெயர் வரலாற்றின் குப்பைத் தொட்டியில்கூட இல்லை. ஆனால் தத்துவவியலாளர் புரூணோ சுதந்திரமான சிந்தனை மற்றும் வளர்ந்து வரும் அறிவியலின் வரலாற்றில் ஒரு அடையாளமாக கருதப்படுகிறார்.

18.02.2009ல் போரை நிறுத்தக் கோரியும்

18.02.2009ல் போரை நிறுத்தக் கோரியும் ஈழத் தமிழரை காப்பாற்றக்கோரியும் கடலூர் சோதி என்கிற தமிழ் வேந்தன் தீக்குளித்து உயிர் துறந்தார். அப்போது தமிழ்வேந்தனுக்கு ஆறு மாத கைக்குழந்தை இருந்தது. ஆனால் அவர் தன் குழந்தையைக்கூட நினைக்காமல் ஈழத் தமிழருக்காய் உயிர் துறந்தார்.

கஞ்சாவை விற்றேன்.

"கஞ்சாவை விற்றேன். பிடித்து சிறையில் போட்டார்கள். கஞ்சாவுடன் சேர்த்து பக்தியை விற்றேன். என்னை மகான் என்கிறார்கள்" -ஜக்கி வாசுதேவ் சிவராத்திரி வந்தால் கஞ்சாவை போட்டிட்டு இவன் ஆடுற ஆட்டம் தாங்க முடியவில்லை. ஸ்டாலின் சார்! பிளீஸ், இவனை பிடிச்சு உள்ளே போடுங்க.

சுட்டுக்கொல்லும் அளவிற்கு

சுட்டுக்கொல்லும் அளவிற்கு மீனவன் என்ன பயங்கரவாதியா? ஒருபுறம் சிங்கள படை தமிழக மீனவனை கொல்கிறது. இன்னொருபுறம் கர்நாடக வனத்துறை கொல்கிறது கேட்பதற்கு நாதியற்ற இனமா தமிழினம்? தமிழனுக்கு என்று ஒரு நாடு, தமிழனுக்கென்று ஒரு அரசு இருந்திருந்தால் தமிழனுக்கு இந்த நிலை வந்திருக்குமா?

ஈழத்தில் தமிழன் தாக்கப்பட்டபோத

ஈழத்தில் தமிழன் தாக்கப்பட்டபோது அது இன்னொரு நாடு என்றாய் கடலில் தமிழக மீனவன் தாக்கப்பட்டபோது அது எல்லை தாண்டி சென்றதால் என்றாய் இப்போது தமிழ்நாட்டிற்குள் வந்து தமிழனை தாக்குகிறார்கள். இனி என்ன செய்யப்போகிறாய் தமிழா?

இங்கிலாந்தில் இந்து கோவில் தாக்கப்பட்டால்

இங்கிலாந்தில் இந்து கோவில் தாக்கப்பட்டால் கண்டனம் தெரிவிக்கும் இந்திய அரசு இலங்கையில் இந்து கோவில் உடைக்கப்பட்டு பௌத்த விகாரையாக மாற்றப்படுவது குறித்து கண்டு கொள்ளாமல் இருப்பதுடன், யாழ் தமிழர் நிலத்தில் கட்டிய மண்டபத்தையும் சிங்கள பௌத்த கலாச்சார அமைச்சுக்கு வழங்கியுள்ளது இந்திய அரசு. இந்துத் தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று கூறும் காசி அனந்தன் ஐயா இது குறித்து என்ன கூறப்போகிறார்?

போராடுவதால் பயன் உண்டா?

போராடுவதால் பயன் உண்டா? நடந்தது நடந்து விட்டது. இனி நடந்ததை நினைத்து போராடுவதில் பயன் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். நாலுவகை படைகள் கட்டி போராடிய புலிகளாலேயே வெற்றி பெற முடியவில்லை. இனி எப்படி போராடி வெற்றிபெற முடியும் என்று வேறு சிலர் கேட்கிறார்கள். இதெல்லாம் கடவுள் வகுத்த விதி. எனவே கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு பேசாமல் இருப்பதே சிறந்தது என்று மேலும் சிலர் கூறுகிறார்கள். இவர்கள் எல்லாம் கூறுவது சாரம்சத்தில் போராடுவதால் பயன் இல்லை எனவே போராடாமல் இருக்க வேண்டும் என்பதையே. ஆனால் ஓடாத மான் எப்படி வாழ முடியாமல் இறந்துவிடுமோ அதேபோல் போராடாத இனம் இந்த உலகில் வாழ முடியாது அழிந்துவிடும் என்பதே உண்மை. எனவே தமிழ் இனம் இப்போது வரை அழியாமல் வாழ்கிறது எனில் அது கடந்த காலங்களில் போராடி வந்திருக்கிறது என்பது மட்டுமன்றி இனியும் அழிந்துவிடாமல் வாழ வேண்டும் எனில் அது தொடர்ந்து போராட வேண்டும் என்பதே உண்மை. ஒரு குழந்தை இந்த உலகில் பிறந்ததும் செய்யும் முதல் போராட்டம் அழுகை. இவ்வாறு போராட்டம் என்பது பிறப்பு முதல் இறப்புவரை ஒரு மனிதன் வாழ்வில் அத்தியாவசியமாகிவிட்ட பின்பு போராட்டத்தால் பயன் உண்டா என்ற கேள்வி அர்த்தமற்றதாகவே இருக்கும். தமிழர் உயிரை விடுவார்களேயொழிய போராட்டத்தை ஒருபோதும் விட்டுவிட மாட்டார்கள். போராட்ட உணர்வு என்பது தமிழரின் உயிருடனும் உடலுடனும் இரண்டறக் கலந்து இருப்பதால்தான் எத்தனை முறை வீழ்ந்த போதும் அத்தனை முறையும் மீண்டும் எழுந்திருக்க முடிகிறது.

பாட்டியுடன் ஒரு (கற்பனை) உரையாடல்

•பாட்டியுடன் ஒரு (கற்பனை) உரையாடல் கேள்வி- பாட்டி! ஆயுதம் தூக்கி போராடுவது பயங்கரவாதம் என்கிறார்களே? பாட்டி- சரி, தூக்குவது தவறு என்றால் தூக்க வைத்தது அதைவிட தவறு அல்லவா? முதல்ல போய் தூக்க வைத்தவனிடம் கேள். அப்புறம் என்னிடம் வா. கேள்வி- என்ன பாட்டி சொல்லுகிறீர்கள்? பாட்டி- கிழவி என்றும் பாராமல் பாலியல் வல்லுறவு செய்யிறாங்கள். சிறு குழந்தைகளைக்கூட சுட்டுக் கொல்கிறாங்கள். விமானத்தில் வந்து குண்டு போடுகிறாங்கள். நான் என்ன செய்ய சொல்லுறாய்? கேள்வி- நீங்க அகிம்சை வழியில் போராடலாம் அல்லவா? பாட்டி- அகிம்சை வழியில்தானே தந்தை செல்வா போராடினார். அவருக்கு என்னத்தைக் கொடுத்தாங்க? கேள்வி – அகிம்சை வழியில்தானே இந்தியா சுதந்திரம் அடைந்தது? பாட்டி- இந்தியா எந்த வழியில் சுதந்திரம் அடைந்தது என்று எனக்கு தெரியாது. ஆனால் அதே இந்திய அரசு அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து இறந்தபோது அந்த அகிம்சைப் போராட்டத்தை மதிக்கவில்லையே? கேள்வி- அப்ப, மகாத்மா காந்தி சொன்னது தவறா? பாட்டி- காந்தி வெள்ளைக்கார ஆட்சிக்கு எதிராக சொன்னது இப்ப உள்ள கொள்ளைக்கார அரசுகளுக்கு பொருந்துதில்லையே? காந்தி இப்போது இருந்தால் அவர் கையில் ஊன்று தடி இருக்காது அவர் கையிலும் துப்பாக்கி இருந்திருக்கும். கேள்வி- என்னது, காந்தியும் ஆயுதம் ஏந்தியிருப்பாரா? பாட்டி- ஆம். முட்ட வரும் மாட்டை கட்டியணைக்க முடியாது. எட்டி உதைக்க வேண்டும். அதுபோல் பாலியல் வல்லுறவு செய்ய வரும் காமுகனை கை நகத்தினாலாவது தாக்குங்கள் என்றுதானே அவர் சொல்லியிருக்கிறார். கேள்வி- ஆயுதம் தூக்கியவர்களை பயங்கரவாதிகள் என்றுதானே நம்மட சம்பந்தர் ஐயாவும் கூறுகிறார். பாட்டி- அவர் மகள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டிருந்தால், அவர் வீட்டின் மீது கொத்துக் குண்டு வீசப்பட்டிருந்தால் ஒருநாளாவது பதுங்கு குழியில் வாழ்ந்திருந்தால் யார் பயங்கரவாதி என்று அவருக்கு தெரிந்திருக்கும். கேள்வி- இருந்தாலும் இந்த போராட்டம் தேவைதானா? பாட்டி- எனது மூதாதையர் போராடியிருந்தால் இன்று நான் போராட வேண்டி வந்திருக்காது. அதேபோல் நான் என் அடிமைத்தனத்தை என் பரம்பரைக்கு விட்டுச்செல்ல விரும்பவில்லை. கேள்வி- அடுத்த பரம்பரையும் இந்த போராட்டத்தை தொடரும் என நம்புகிறீர்களா? பாட்டி- தம்பி நான் எந்த இயக்கத்தையும் நம்பவில்லை. தலைவர்களையும்கூட நம்பவில்லை. நான் நம்புவதெல்லாம் இந்த போராட்டத்தை மட்டுமே. எனவே இயக்கமோ அல்லது தலைவரோ இல்லாவிட்டாலும்கூட இந்த போராட்டம் தொடரும். கேள்வி- எப்படி ? புரியவில்லையே! பாட்டி- என்ன காரணங்களுக்காக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதோ அதில் ஒன்றுகூட இன்னும் தீர்க்கப்படவில்லை. எனவே போராட்டத்திற்கான தேவை இருக்கும்வரை அதற்கான போராட்டமும் இருக்கும். குறிப்பு- தமிழ் இனம் மீண்டும் எழுந்து போராடும் என்ற நம்பிக்கையை இத்தகைய பாட்டிகளின் தியாகங்களே உருவாக்குகின்றன. (மீள் பதிவு)

என்றும் நினைவில் கொள்வோம்!

•என்றும் நினைவில் கொள்வோம்! ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி, சிவகாசி ஆணையூர் பஞ்சாயத்து அய்யம்பட்டியைச் சேர்ந்த கோகுலகிருட்ணன் என்பவர் தீக்குளித்து உயிர் நீத்த நாள் 25.02.2009

இந்த வலி எந்தளவு கொடுமையானது

இந்த வலி எந்தளவு கொடுமையானது என்பதை ஈழத் தமிழராகிய நாம் நன்கு அறிவோம்.

சுமந்திரன் சட்டம் படித்தவராம்

சுமந்திரன் சட்டம் படித்தவராம். அவருக்கு மூன்று மொழிகளும் சரளமாக பேச தெரியுமாம். எனவே பாராளுமன்றத்தில் பேசி தீர்வு பெற்றுவிடுவாராம் என்று சுமந்திரன் தம்பிகள் கூறுகின்றனர். இவர்கள் மூவரும் சட்டம் படித்தவர்கள். அதுவும் கியூசி பட்டம் பெற்றவர்கள். இவர்களுக்கும் மூன்று மொழிகளும் சரளமாக பேச தெரியும். ஆனால் இந்த மூன்று பேராலும் பாராளுமன்றத்தில் பெறமுடியாத தீர்வை சுமந்திரன் பெற்றுவிடுவாராம். இதுதான் கேட்பவன் கேனையன் என்றால் காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்ற கதை.

சர்வதேச தாய் மொழி தினம்!

•சர்வதேச தாய் மொழி தினம்! (21.02.2023) எல்லோருக்கும் அவர்களது தாய்மொழி பெருமை மிக்கதுதான். ஆனால் மொழிகளின் தாய் மொழி என்ற பெருமை எமது தமிழ் மொழிக்கு உண்டு. தமிழ் மொழியாலேதான் நாம் தமிழ் இனம் ஆனோம். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின் முதலில் அதன் மொழியை அழிக்க வேண்டும் என்பார்கள். அதனால்தான் தமிழர்கள் தம் உயிரைக் கொடுத்தேனும் தமிழ் மொழியை காத்து வருகிறார்கள். மொழி என்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் வெறும் ஊடகம்தானே, அதற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என சிலர் கேட்கலாம். உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து விட்டன. தமிழும் இனி மெல்ல சாகும் என சிலர் கூறலாம். ஆனால் வரலாற்றில் எத்தனை படையெடுப்புகள். அத்தனையும் தாண்டி தமிழ் மொழி எப்படி நிமிர்ந்து நிற்கிறது? போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர்கள் 350 வருடங்களுக்கு மேலாக ஆண்டபோதும் அவர்களின் சில சொற்களை தமிழ் உள்வாங்கியதேயொழிய தமிழ் அழிந்து விடவில்லை. இனியும்கூட எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் தமிழ் அழிந்துவிடப் போவதில்லை. அது நிமிர்ந்து நிற்கும். ஏனெனில் தமிழர்கள் தம் தாய்க்காக மட்டுமன்றி தாய்மொழி தாய்நிலத்திற்காகவும் உயிர் துறக்கக்கூடியவர்கள். இப்படிப்பட்ட அர்ப்பணிப்புகள் இருக்கும்வரை தமிழ் மொழியையும் தமிழர்களையும் யாராலும் அழித்துவிட முடியாது. பாஜக தலைவர் அமிர்த்ஷா அவர்கள் சமஸ்கிருத மொழியை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். நாற்பதாயிரம் பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருத மொழியை தமிழ் மொழி பேசும் எட்டுக்கோடிப் பேர் எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும்? ஏனெனில் தமிழனை அழிக்க வேண்டும் என்றால் முதலில் அவனின் தமிழ் மொழியை அழிக்க வேண்டும் என்று எதிரி நன்கு தெரிந்து வைத்திருக்கிறான். கைபர் கணவாய் வழியாக கும்பல்களுக்கு சமஸ்கிருதம் புனித மொழியாக இருக்கலாம். ஆனால் அதற்காக செத்த மொழியான சமஸ்கிருதத்தை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் குறிப்பு – யாழ்ப்பாணத்திலும் சமஸ்கிருத மொழியை திணிக்க யாழ் இந்திய தூதர் முயல்கிறார்.

தனது சொந்த நாட்டில்

தனது சொந்த நாட்டில் சொந்த மக்களையே பாலியல் வல்லுறவு செய்யும் இந்திய ராணுவம், ஈழத்தில் எப்படி நடந்துகொண்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். 800க்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்டதாக அறிய வருகிறது. இதற்காக இதுவரை ஒரு ராணுவவீரனாவது தண்டிக்கப்பட்டானா? இல்லையே. ஆனால் இத்தனைக்கும் காரணமான ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்கு கண்ணீர் வடிப்போர் ராஜீவ் காந்தியால் ஈழத்தில் கொல்லப்பட்ட பன்னிரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்காக கண்ணீர் வடிப்பதில்லை. ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரையில் ராஜிவ் காந்தி உயிர் மட்டுமே உயிர். ஈழத் தமிழர்களின் உயிர் எல்லாம் மயிர். அப்படிதானே?

டில்லியில் தமிழ் மாணவர்கள்

டில்லியில் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் திராவிட முதல்வர், திருப்பதியில் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டபோது ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை. தாக்கியவர்கள் தெலுங்கர்கள் என்பதாலா?

இருவரும் போலிச்சாமியார்கள்.

இருவரும் போலிச்சாமியார்கள். இருவரும் கிரிமினல்கள். ஆனால் ஜக்கி தமிழ்நாட்டில் பாதுகாப்போடு வாழ்கிறார். நித்தியானந்தா தமிழ்நாட்டை விட்டு தப்பி ஓடி தலைமறைவாக வாழ்கிறார். இதற்கு ஜக்கி ஒரு கன்னடர், நித்தி ஒரு தமிழர் என்பதைவிட வேறு காரணம் உண்டா?

எங்கும் இந்திக்காரன் எதிலும் இந்திக்காரன்

“எங்கும் இந்திக்காரன் எதிலும் இந்திக்காரன்” என்று கேரளாவில் டிவியில் பாடுகிறார்கள். அவர்களை இனவெறியர் என்று எந்த கம்யுனிஸ்டுகளும் கூறுவதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் இதையே “நாம் தமிழர்” கூறினால் உடனே ஓடி வந்து இனவெறியர் என கம்யுனிஸ்டுகள் முத்திரை குத்துகின்றனர். #போலிக் கம்யுனிஸ்டுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தனது நிலத்தில் தனது மாடுகளை மேய்க்கச் சென்ற தமிழரை தாக்கிய சிங்கள காடையர். வடக்கு கிழக்கு பகுதிகள் மோடியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று கூறிய அண்ணாமலை இதற்கு என்ன கூறப் போகிறார்?

தமிழ் இனப்படுகொலை செய்தவர்கள்

தமிழ் இனப்படுகொலை செய்தவர்கள் மீது தடை விதிக்க வேண்டும் அத்துடன் இலங்கை மீது பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் என்று கனடா எதிர்க்கட்சி தலைவர் கோரியுள்ளார். இந்திய அரசு தடை விதிக்காவிட்டாலும் பரவாயில்லை, சிங்கள அரசுக்கு உதவுவதையாவது நிறுத்தும்படி தமிழக திராவிட முதல்வர் கோருவாரா?

காஸ்மீர் எல்லையில்

காஸ்மீர் எல்லையில் தமிழக ராணுவ வீரர் இறந்தால் இந்திய வீரர் என கூறும் இந்திய அரசு, கடலில் மீனவர் கைது செய்யப்பட்டால் தமிழக மீனவர் கைது என்கிறார்களே? அப்படியென்றால் தமிழக மீனவர் இந்தியர் இல்லை என்று இந்திய அரசே கருதுகிறதா? இன்னும் எத்தனை நாளைக்கு தமிழனை முட்டாள் என்று கருதப்போகிறீர்கள்?

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் இந்தி இல்லை.

தமிழா!

தமிழா! இந்தியனாய் சிந்தித்து அடிமையாக இருந்தது போதும் தமிழனாக உணர்ந்து விடுதலை பெறுவாயா?

முல்லைத்தீவு மாவட்டத்தில் கட்டப்படும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கட்டப்படும் சிங்கள பௌத்த விகாரைக்கு தமிழர் காணி வழங்குவதை எதிர்த்து தமிழ் மக்கள் போராடுகின்றனர். அதேவேளை யாழ் மண்ணில் கட்டப்பட்ட கலாச்சார மண்டபத்தை சிங்கள பௌத்த கலாச்சார அமைச்சுக்கு இந்திய அரசு வழங்கியுள்ளது. இந்து தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று கூறும் காசி அனந்தன் இது பற்றி என்ன கூறப்போகிறார்?

அடிப்பது வன்முறை.

அடிப்பது வன்முறை. திருப்பி அடிப்பது வன்முறை அல்ல. அது தற்காப்பு. திருப்பியடிக்க வலு அற்றவை யாவும் வாழத் தகுதியற்று அழிந்துவிடும். மக்கள் இதுவரை பெற்ற உரிமைகள் யாவும் அடித்துப் பெற்றவையே. தானாக கிடைத்தவை அல்ல.

போருக்கு கோடி கோடியாக

போருக்கு கோடி கோடியாக பணத்தைக் கொட்டிய அரசு இப்போது வறுமையில் வாடும் மக்களுக்கு கொடுக்க பணம் இல்லை என்கிறது. புலிகளை ஒழித்தால் நாட்டில் பாலும் தேனும் ஆறாக ஓடும் என்றவர்கள் இன்று வறுமையின் கொடுமையில் பெற்ற தாயே பிள்ளைகளை கொல்வதை வேடிக்கை பார்க்கிறார்கள். வறுமைதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்.

புலிகள் அமைப்புக்கு உதவினார்

புலிகள் அமைப்புக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான செல்லையா சதீஸ்குமார் விடுதலை செய்யப்பட்டார்.

வடக்கு கிழக்கு மோடியின் கட்டுப்பாட்டில்

வடக்கு கிழக்கு மோடியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அண்ணாமலை கூறுகின்றார். ஆனால் நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் சிங்கள ராணுவத்தின் பாதுகாப்புடன் இரகசியமாக புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதற்குதானா வடக்கு கிழக்கை மோடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்? கோண்டாவில் பேருந்து பணிமனையில் அன்னை மேரி படம் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஈழத்து சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம், சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு குறித்து எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? தமிழ் மக்களிடையே பிரிவினை செய்வதற்காகவா இவரை இந்திய உளவுப்படை அனுப்பி வைத்திருக்கிறது?

வேல்முருகனுக்கு இருக்கும் இந்த உணர்வு

வேல்முருகனுக்கு இருக்கும் இந்த உணர்வு வைகோ, திருமா, சுபவீ ஆகியோருக்கு ஏன் இல்லை?

ஒரு வண்டி கேரளாவுக்கு போகும் அடி

ஒரு வண்டி கேரளாவுக்கு போகும் அடி மாட்டு வண்டி என்று தெரிகிறது. இன்னொரு வண்டி ???

விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக

விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்க தீர்மானித்தபோது அவர் மகளைப்பற்றி அநாகரீகமாக ஒருவர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். உடனே கலைஞரின் மகள் கனிமொழி அம்மையார் தமிழத்தேசியம் பேசும் எல்லோரும் இப்படித்தான் அநாகரிகமாக எழுதுபவர்கள் எனக் குறிப்பிட்டு காவல்துறையிடம் முறையிட்டார். விசாரணையின்போது அந்த நபர் மலையகத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவழி தமிழர் என்பதும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர் என்பதும் தெரியவந்தது. இவ்வாறு உண்மை தெரியவந்த பின்பும் தமிழத்தேசியர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டிற்கு கனிமொழி அம்மையார் இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. அத்தோடு அவரின் திராவிட தம்பி ஒருவர் எனக்கு எழுதிய இப் பதிவை அவரின் கவனத்திற்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். யார் அநாகரிகமாக எழுதுபவர்கள் என்பதை அவர் இனி முடிவு செய்யட்டும்.

கேள்வி - ஈரோடு இடைத் தேர்தல்

கேள்வி - ஈரோடு இடைத் தேர்தல் பற்றி தமிழக மக்கள் கருத்து என்ன? பதில் - தங்கள் தொகுதியிலும் இடைத் தேர்தல் வரவேண்டும் என பிரார்த்திக்க ஆரம்பித்துவிட்டனர். குறிப்பு - இத்தனை பொருட்களும் கொடுத்துவிட்டு 2ம் தேதி ஜனநாயகம் வென்றது என திராவிட முதல்வர் அறிக்கை விடப்போறதை நினைத்தால்தான் வேர்க்குது.