Saturday, November 30, 2019

•ஏன் அநுராவுக்கு வோட் போடக்கூடாது என்பதற்கு

•ஏன் அநுராவுக்கு வோட் போடக்கூடாது என்பதற்கு
தமிழ் தேசிய கூட்டமைப்பு உரிய பதில் தருமா?
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வோட் போட வேண்டும் என்பதை சம்பந்தர் ஐயா இன்னும் அறிவிக்கவில்லை.
ஆனாலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் மக்கள் வோட் போட வேண்டும் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
அதற்கு “பிசாசு” கோத்தபாயா வருவதை தடுக்க “பேய்” சஜித்திற்கு வோட் போட வேண்டும் என்று காரணத்தையும் கூறி வருகிறார்கள்.
சரி. அப்படியென்றால் ஏன் ஜேவிபி வேட்பாளர் அநுராவுக்கு தமிழ் மக்கள் வோட் போடக்கூடாது? என்று கேட்டால்; “அவர் வெல்லமாட்டார். எனவே அவருக்கு போடுவது வீண்” என்கிறார்கள்.
தமிழ் தரப்பினர் முன்வைத்த நிபந்தனைகளில் ஒன்றைக்கூட ஏற்பதற்கு சஜித் முன்வரவில்லை. ஆனால் அநுரா வடக்கு கிழக்கு இணைப்பு ஒன்றைத்தவிர மற்ற அனைத்து நிபந்தனைகளையும் ஏற்பதாக பகிரங்கமாக கூறுகிறார்.
ஆனாலும் எமது புத்திசாலி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அநுராவுக்கு போடக்கூடாது. சஜித்திற்குதான் போட வேண்டும் என்கிறார்கள்.
அவர்களின் கவனத்திற்கு கீழ்வரும் கேள்விகளை முன்வைக்கிறோம். இதற்கு உரிய பதிலை அவர்கள் தர வேண்டும். இலங்கையில் மூன்றாவது அணிக்கு ஆதரவு அளிப்பது ஏன் மாற்றத்தை தராது என்பதற்கு அவர்கள் பதில் தர வேண்டும்.
2002 பொதுத்தேர்தலில் 1% வாக்குகளை கூட பெறாமல் 10 ஆவது இடத்தை பெற்ற இம்ரான்கானின் கட்சி 2013 தேர்தலில் 16% வாக்குகளை பெற்று 34 ஆசனங்களுடன் மூன்றாவது அணியாக முன்னேறி மாற்றத்திற்கான முதல் அடிக்கல்லை வைக்கிறது. 2018 தேர்தலில் 32% வாக்குகளுடன் 149 ஆசனங்களை சுவீகரித்து இம்ரான்கான் பாகிஸ்தானின் பிரதமராகவில்லையா?
கனடாவின் லிபரல் கட்சி 2011 தேர்தலில் 18% வாக்குகள் மற்றும் 34 ஆசனங்களுடன் மூன்றாவது நிலை கட்சியாக இருக்கிறது. 2015 தேர்தலில் லிபரல் கட்சியின் ஜஸ்டின் ட்ரூடோ 40% வாக்குகளையும் 184 ஆசனங்களையும் வென்று தனிப் பெரும்பான்மை அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்கவில்லையா?
2016 இல் புதிதாக கட்சி அமைத்து 2017 தேர்தலில் பிரதான 3 கட்சிகளை தோற்கடித்து, முதற்சுற்றில் 24% வாக்குகளையும், இரண்டாவது விருப்பு வாக்கின்படி 66% வாக்குக்களையும் பெற்று இமானுவல் மெக்ரன் பிரான்சின் ஜனாதிபதியாகவில்லையா?
ஒவ்வொரு தேர்தலும் மாற்றத்தை கொண்டு வரும் அடிக்கல்லாக அமைவதுடன், மூன்றாவது அணி தனது வாக்கு எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதானது, அதற்கு அடுத்த தேர்தலில் மேலும் மக்களை தம் பக்கம் ஈர்த்துக் கொள்ளும் அடித்தளமாக அமையும். அதனால் வெல்லும் அணிக்கே வாக்களிப்பேன் என்று நாமாகவே வெல்லும் அணியை தீர்மானிக்காமல், மிகவும் பொருத்தமான வேட்பாளருக்கு தயக்கமில்லாமல் வாக்களிக்க வேண்டும் அல்லவா?
இலங்கையில் மூன்றாவது அணி பலமான அரசியல் சக்தியாக மாற்றமடைவதற்கு 50% வாக்குகள் தேவையில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகின்றது. இலங்கையை பொறுத்தமட்டில் மூன்றாவது அணி 30 - 35% வாக்குகளை பெறும்பட்சத்தில் இரண்டாம் விருப்பு வாக்குகளுடன் வெற்றிவாய்ப்பை கூட பெறும் சாத்தியங்கள் உள்ளன. அதனால் மொத்த வாக்குகளில் 25% வீதமான வாக்குரிமையை கொண்டிருக்கும் தமிழ்மற்றும் முஸ்லிம் மக்கள் நினைத்தால், முற்போக்கு சிந்தனை கொண்ட வெறும் 10-15% பெரும்பான்மையினருடன் இணைந்து அரசியல் மாற்றத்தை கொண்டு வரலாம் அல்லவா?

பிளான் ரெடி ! தாக்தலுக்கு சம்பந்தர் ஐயா தயார்?

பிளான் ரெடி !
தாக்தலுக்கு சம்பந்தர் ஐயா தயார்?
பிளான் ஏ பிளான் பி என்ற இரண்டு பிளான்களுடன் ஜனாதிபதி தேர்தலில் சம்பந்தர் ஐயா தாக்குதலுக்கு தயாராகிவிட்டதாக அறிய வருகிறது.
பிளான் ஏ – சஜித் பிரேமதாவை ஆதரிப்பது.
பிளான் பி – சஜித் பிரேமதாசா வெல்லவில்லை என்றால் உடனே கோத்தபாயா காலில் விழுந்துவிடுவது.
இந்த இரண்டு பிளான்களும் சம்பந்தர் ஐயாவுக்கு பூரண திருப்தி அளித்துள்ளன.
ஏனெனில் தனது சொகுசு பங்களாக்கள் மற்றும் சொகுசு வாகனங்களுக்கு எந்த ஆபத்தும் வராது என்பதை அவர் இதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆனால் கோத்தபாயாவின் காலில் எப்படி விழுவது என்று மாவை சேனாதிராசா கொஞ்சம் தயங்கியிருக்கிறார்.
அப்போது சுமந்திரன் “ சோறு முக்கியமா? தன்மானம் முக்கியமா?” என்று கேட்டிருக்கிறார்.
சிறிதுநேரம் யோசித்த மாவை சேனாதிராசா “சோறுதான் முக்கியம்” என்று கூறி பிளான் பி க்கும் சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறுகிறார்கள்.
குறிப்பு - யாவும் கற்பனை அல்ல.

சிறையில் இருக்கும் முருகன்

சிறையில் இருக்கும் முருகன் கடந்த 14 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறார். அவர் மனைவி நளினி கடந்த 7 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறார்.
தனது பரோல் விடுதலையை தடுப்பதற்காக அரசு வேண்டுமென்றே தன்மீது கைத்தொலைபேசி வைத்திருந்ததாக பொய் வழக்கு போட்டிருப்பதாக முருகன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மகளின் திருமணத்திற்காக தாய் நளினிக்கு பரோல் வழங்கிய அரசு தந்தை முருகனுக்கு பரோல் வழங்க மறுக்கிறது.
நீதிமன்றம் மூலமும் முருகன் பரோல் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே முருகன் மீது பொய் வழக்கு போடுகிறது அதே அரசு.
ஆனால் இதே பாஜக அரசு ஹரியானாவில் தன்னுடன் கூட்டணி அமைக்க ஒத்துக்கொண்ட JJP கட்சி தலைவரின் தந்தையை 24 மணி நேரத்தில் பரோல் விடுமுறை அளித்து விடுதலை செய்துள்ளது.
அதேவேளை கடந்த தேர்தலின்போது இதே பாஜக வுடன் பாமக கூட்டணி அமைத்தபோது இந்த ஏழு பேரின் விடுதலையை நிபந்தனையாக விதித்திருந்தது. ஆனால் இன்றுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.
ஹரியானாவில் 24 மணி நேரத்தில் பரோல் வழங்கிய பாஜக அரசு தமிழ்நாட்டில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் தனது ஆளுநர் மூலம் தடுத்து வைத்திருக்கிறது.
இங்கு இன்னும் வேடிக்கை என்னவெனில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் சிதம்பரம் சிறையில் கைத்தொலைபேசி வைத்திருக்கிறார். அவர் அதில் மோடியையே கலாய்த்து டிவீட் செய்கிறார்.
ஆனால் அவர் மீது கைத்தொலைபேசி வைத்திருந்ததாக வழக்கு இல்லை. மாறாக அவருக்கு தினமும் வீட்டில் இருந்து சாப்பாடு வழங்க அனுமதிகப்பட்டுள்ளது. அத்துடன் சுகயீனம் என்றால் உடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த ஏழு தமிழர்களை விடுதலை செய்யாதது மட்டுமன்றி 28 வருடமாக சிறையில் அடைத்துவைத்து சித்திரவதை செய்து வருகிறது இந்த அரசு.
அரசின் இந்த தமிழின விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய எமது தலைவர்கள் மௌனமாக இருக்கின்றனர்.
கடந்த மாதம் ராஜீவ் காந்தி கொலை பற்றி சீமான் பேசியதால் இந்த ஏழுபேரின் விடுதலை பாதிக்கப் போகிறது என்று நீலிக் கண்ணீர் வடித்த தலைவர்களில் ஒருவர்கூட முருகன் கடந்த 14 நாட்களாக உண்ணாவிரதம் இருப்பது குறித்து அக்கறை கொள்ளவில்லை.

கடந்தமுறை “பிசாசு” மகிந்தா வரக்கூடாது.

கடந்தமுறை “பிசாசு” மகிந்தா வரக்கூடாது. எனவே “பேய்” மைத்திரிக்கு வோட் போடுங்கள் என்றார்கள்.
இந்தமுறை “பிசாசு” கோத்தா வரக்கூடாது. “பேய்” சஜித்திற்கு வோட் போடுங்கள் என்கிறார்கள்.
வோட் போட்ட தமிழ் மக்களுக்கு ஒரு மயிரும் கிடைக்கவில்லை. ஆனால் போடச் சொன்னவர்களுக்கு சொகுசு பங்களா, சொகுசு வாகனம் எல்லாம் கிடைத்தது
.
இதோ இந்த குழந்தையிடம்தான் “பேய்” ஜனாதிபதி மைத்திரி “உன் அப்பா வருடப்பிறப்பிற்கு விடுதலையாகி வீட்டுக்கு வருவார்” என்று கூறியது.
எத்தனையோ வருடப்பிறப்பு வந்து போகிறது. ஆனால் அந்த பேய் வாக்குறுதி அளித்தபடி அந்த அப்பாவி தந்தை விடுதலை செய்யப்படவில்லை.
ஆனால் அந்த பேய் மைத்திரிதான் நீதிமன்றத்தை அவமதித்த பொதுபலசேனா புத்த பிக்குவை விடுதலை செய்திருக்கிறது.
ஒரு அரசியல் கைதியைக்கூட விடுதலை செய்விக்க முடியாதவர்கள் எந்த முகத்துடன் வந்து சஜித் பிரேமதாசாவுக்கு வோட் போடச் சொல்கிறார்கள்?
இவர்கள் தமிழ் மக்களை "முட்டாள்கள்" என்று நினைக்கவில்லை. மாறாக "மூளையே இல்லாதவர்கள்" என்று நினைக்கிறார்கள்.

தமிழா! கட்சத்தீவு உன்னுடையது ஆனால் நீ போக முடியாது

தமிழா!
கட்சத்தீவு உன்னுடையது ஆனால் நீ போக முடியாது
வங்கக்கடல் உன்னுடையது ஆனால் நீ மீன் பிடிக்க முடியாது
காவிரி ஆறு உன்னுடையது ஆனால் உனக்கு தண்ணீர் கிடையாது
முல்லைப்பெரியாறு உன்னுடையது ஆனால் உன்னால் நீரை தேக்க முடியாது
நெய்வேலி உன்னுடையது ஆனால் 75% மின்சாரம் வெளி மாநிலத்திற்கு
கோவில்கள் உன்னுடையது ,ஆனால் தமிழில் வழிபட முடியாது
நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது ,ஆனால் தமிழில் வழக்காட முடியாது
அரசுப் பள்ளிகள் உன்னுடையது ,ஆனால் தமிழில் உயர்கல்வி கற்க முடியாது
தமிழ்நாடு உன்னுடையது ,ஆனால் தமிழா! நீ அதை ஆள முடியாது!
இன்னும் எத்தனை நாளைக்கு இதை உணராமல்
அடிமையாகவே கிடக்கப் போகிறாய் தமிழா!

சட்டம், நீதிமன்றம், பொலிஸ், அமைச்சர் எல்லாம் கூட்டுக் களவானிகளே

•சட்டம், நீதிமன்றம், பொலிஸ், அமைச்சர் எல்லாம் கூட்டுக் களவானிகளே!
“பெல்ட் ஆல் அடிக்காதீங்கண்ணா, வலிக்குது அண்ணா, நானே கழட்டுகிறேன் அண்ணா” என்று பெண் கதறி அழுதாரே, அது பொய்யா?
ஆனாலும் அந்த மிருகங்கள் இரங்கவில்லை. பாலியல் வல்லுறவு செய்தது மட்டுமன்றி அதை படம் பிடித்தும் வைத்தனரே. அது பொய்யா?
பிடித்து வைத்திருந்த படத்தை காட்டி பணம் பறித்துள்ளனர். மிரட்டி வேறு பலருக்கும் அந்த பெண்களை இரையாக்கினார்களே. அது பொய்யா?
இது ஏதோ ஒன்றோ இரண்டு பெண்களுக்கு நடக்கவில்லை. 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நடந்துள்ளதே. அது பொய்யா?
அதுவும் ஏதோ ஒரு நாளில் அல்லது ஒரு மாதத்தில் நடந்துவிடவில்லை. மாறாக 2012ல் இருந்து நடந்து வந்ததே. அது பொய்யா?
இந்த கும்பலில் தொகுதி எம்எல்.ஏ வின் மகன் உட்பட 20ற்கு மேற்பட்டவர்கள் உணடு என பாதிக்கப்பட்ட பெண்கள் கூறினார்களே, அது பொய்யா?
எப்படி கொஞ்சம்கூட மனட்சாட்சி இன்றி “தகுந்த ஆதாரம் இல்லை” என்று இவர்கள் மீதான குண்டர் சட்டத்தை நீக்க முடிகிறது?
இனி அடுத்து “ஆதாரம் இல்லை” என்று அவர்களை சிறையில் இருந்தும் விடுதலை செய்யப் போகிறார்கள்.
ஏனெனில் இங்கு பொலிஸ், சட்டம், நீதிமன்றம் எல்லாம் எம்.எல.ஏ யின் கூட்டுக் களவானிகளாகவே செயற்படுகின்றார்கள்.
1980 ல் பருத்தித்துறையில் கமலம் என்ற மாணவி இதே போன்று இருவரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
சம்பந்தப்பட்டவர்களை பொலிஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. ஆனால் அவர்கள் 1983ல் இனக்கலவர நிலையைப் பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பி வந்துவிட்டார்கள்.
ஆனால் இயக்கம் அந்த முக்கியமான நபரை பிடித்து வல்வெட்டித்துறை சந்தியில் இருந்த மரத்தில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு சுட்டுக் கொன்றது.
இதேபோன்று தமிழகத்திலும் மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்து சம்பந்தப்பட்ட பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
இல்லையேல் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கிடைக்காது.

பக்தி ஒரு மனநோய்

பக்தி ஒரு மனநோய் என்று அமெரிக்க ஆராய்ச்சி கூறுகிறதாம்.
இந்த படத்தை பார்க்கும்போது அது உண்மைதான் என்று ஏற்க தோன்றுகிறது.
1200 கோடி ரூபாவில் போர் விமானம் வாங்கி அதற்கு எலுமிச்சைப் பழத்தை கட்டி தொங்கவிடும் அமைச்சர் இருக்கும் நாட்டில் இப்படி நடப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லைத்தான்.
போய் காலடியில் விழுந்து படுப்பது. அப்புறம் சாமியார் புள்ள தந்திட்டார். புளுபிலிம் எடுத்திட்டார் என்று ஒப்பாரி வைப்பது.
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றும் சாமியார்களும் வந்துகொண்டே இருப்பார்கள்.

தமிழ்செல்வன், லக்ஸ்மன் கதிர்காமர்

தமிழ்செல்வன், லக்ஸ்மன் கதிர்காமர்
இரண்டு கொலைகள், இரண்டு நியாயங்கள்!
லக்ஸ்மன் கதிர்காமர் - இவர் ஒரு தமிழர். இவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. ஆனால் இவரை நியமன எம்.பி யாக்கி இவருக்கு வெளிநாட்டு அமைச்சு பதவியை சந்திரிக்கா அரசு வழங்கியிருந்தது.
இவர் பல நாடுகள் புலிகள் இயக்கத்தை தடை செய்வதற்கு முன் நின்று உழைத்தவர். அதுமட்டுமல்ல சிங்கள அரசின் தமிழ் இனப்படுகொலைகளை நியாயப்படுத்தியவர்.
சிங்கள ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்து செம்மணியில் புதைக்கப்பட்ட மாணவி கிரிசாந்தியை பயங்கரவாதி என்று கூசாமல் பொய் சொன்னவர்.
தமிழ்செல்வன்- இவர் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். இவரே புலிகள் தரப்பிற்கு தலைமை தாங்கி பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டவர். புலிகள் இயக்கத்தை தடை செய்த நாடுகள்கூட அரசியல்துறை பொறுப்பாளர் என்ற ரீதியில் இவருடன் தொடர்பு கொண்டிருக்கின்றனர்.
• இரண்டு கொலைகள்
லக்ஸ்மன் கதிர்காமர் தனது வீட்டில் உள்ள நீச்சல்குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலை தொர்பாக கைது செய்யப்பட்ட நபர் 13 வருட சிறைவாசத்தின் பின் நீதிமன்றத்தால் குற்றமற்றவர் எனக்கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்செல்வன் தனது அலுவலகத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது இலங்கை அரசால் விமானம் மூலம் குண்டு வீசிக் கொல்லப்பட்டார். தவறுதலாக தமிழ்செல்வன் மீது குண்டு போட்டுவிட்டோம் என இலங்கை அரசு வருத்தம் தெரிவிக்கும் என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தவேளை “எமது இலக்கு தமிழ்செல்வனே. தெரிந்தே அவர் மீது குண்டு வீசிக் கொன்றோம்” என்று இலங்கை அரசு கூறியது.
• இரண்டு நியாயங்கள்.
இங்கு எமது நோக்கம் இவர்களின் கொலை சரியா? பிழையா? என்று ஆராய்வதல்ல. மாறாக, கதிர்காமருக்கு ஒரு நியாயம். தமிழ் செல்வனுக்கு இன்னொரு நியாயம். இது என்ன நியாயம் ? என்று கேட்பதே.
ஏனெனில் லக்ஸ்மன் கதிர்காமர் கொல்லப்ட்டபோது ஒரு வெளிநாட்டு அமைச்சரைக் கொன்றது தவறு என்று கண்டனம் தெரிவித்த எவரும் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது ஒரு அரசியல்துறை பொறுப்பாளரைக் கொன்றது தவறு என்று கூறவில்லை.
சிலர் “தமிழ்செல்வன் அரசியல்துறை பொறுப்பாளராய் இருந்தாலும் அவரும் புலிதானே. எனவே அவரும் பயங்கரவாதிதான். அதனால் அவரை குண்டு வீசிக் கொன்றது சரிதான்” என்பார்கள்.
இப்படி கூறுபவர்களிடம் உரையாடுவதற்கு எதுவும் இல்லை. ஏனெனில் இவர்கள்தான் “பிரபாகரன் பயங்கரவாதி. எனவே அவரின் பத்து வயது மகன் பாலச்சந்திரனும் பயங்கரவாதிதான். எனவே அந்த சிறுவனைக் கொன்றதும் சரிதான்” என கூறிக் கொண்டிருப்பவர்கள்.

நான் 2013 முதல் இதுவரை 3051 பதிவுகளை முகநூலில் எழுதியுள்ளேன்

நான் 2013 முதல் இதுவரை 3051 பதிவுகளை முகநூலில் எழுதியுள்ளேன். எந்தவொரு பதிவும் அனைவராலும் முழுமையாக எற்றுக் கொள்ளப்பட்டதில்லை.
யாராவது ஒரு சிலர் எனது பதிவுகளை எதிர்த்து விமர்சிப்பது குறித்து நான் ஆச்சரியப்பட்டதில்லை. மாறாக யாரும் விமர்சிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட்டிருப்பேன்.
எல்லோரையும் திருப்திப்படுத்த முடியும் என நான் நம்பியிருந்தால் இந் நேரம் குறைந்தது நான்கு புரட்சிகளாவது நடந்து முடிந்திருக்க வேண்டும்.
ஆனால் உண்மை யதார்த்தம் அவ்வாறு இல்லை என்பது எனக்கு நன்கு தெரியும்.
இங்கு கவனிக்கத்தக்க விடயம் என்னவெனில் எனது கருத்துகளை விமர்சிப்பவர்கள் தமது அறிவின் உயரத்தை மட்டும் காட்டவில்லை, தாம் எந்த வர்க்கத்தின் நலன் குறித்து பேசுகிறோம் என்பதையும் காட்டுகிறார்கள்.
ஏனெனில் எந்தவொரு சொல்லின் பின்னும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிந்திருக்கும் என லெனின் கூறியிருக்கிறார்.
தமிழ் மக்கள் விடுதலை பெற வேண்டும் என்ற நோக்கில் நான் கருத்துகளை தெரிவித்து வருகிறேன். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.
எனவே எனது கருத்துக்கள் தமிழ் மக்களை அடக்கி ஆளும் இலங்கை இந்திய அரசுகளுக்கு எரிச்சலைக் கொடுக்கும் என்பதை அறிவேன்.
ஆனால் தாங்களும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதாக கூறிக்கொள்ளும் சிலர் எரிச்சல் அடைவதன் மூலம் தங்களை அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள்.
இவர்களை மக்களுக்கு இனங்காட்டவாவது நான் தொடர்ந்து எழுத வேண்டும் என்று எனக்கு ஆர்வம் பிறக்கிறது.
குறிப்பு- கீழ்வரும் இணைப்பில் நான் முகநூலில் இதுவரை எழுதிய 3051 பதிவுகளையும் வாசிக்கலாம்.

காலுக்காகத்தான்; செருப்பே யொழிய

•காலுக்காகத்தான்; செருப்பே யொழிய
செருப்புக்காக கால்கள் இல்லை!
நண்பர்களே!
எனது இவ் Tholar Balan முகநூல் ஒரு வாரம் தடை செய்யப்பட்டது. அதனால் எனது பதிவுகளை இதில் பகிர முடியவில்லை.
பரவாயில்லை. எத்தனை தடை போட்டாலும் அத்தனை தடைகளையும் தாண்டி எனது கருத்துகளை தெரிவிப்பேன்.
ஒரு வாரமாக நான் போட்ட அத்தனை பதிவுகளையும் கீழே தருகிறேன்.
அத்துடன் எனது பதிவுகளை பயன்படுத்த விரும்புவோர் தாராளமாக பயன்படுத்தலாம்.
எனது அனுமதி பெறத் தேவையில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இது செருப்பு அல்ல. நெருப்பு

இது செருப்பு அல்ல. நெருப்பு
இதுவரை உலகில் பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் ஒரு சிறு பொறியில் இருந்தே ஆரம்பித்தது.
தமிழரசுக்கட்சியின் தமிழின துரோகத்திற்கு எதிராக இந்த தமிழ் பெண் வீசி எறிவது செருப்பு அல்ல நெருப்பு என்பதை காலம் நிச்சயம் காட்டும்.
7 மணித்தியாலமாக யோசித்து சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்திருப்பதாக சுமந்திரன் கூறியிருப்பது பச்சைப் பொய் ஆகும்.
உண்மை என்னவெனில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே ஜதேக வேட்பாளரையே ஆதரிப்பது என்ற முடிவை சுமந்திரன் எடுத்தவிட்டார்.
அதுமட்டுமல்ல இன்று இந்த முடிவை தமிழரசுக்கட்சியின் முடிவு என்று அறிவிப்பதற்கு முன்னரே கடந்த சில நாட்களாக சுமந்திரன் விசுவாசிகள் சஜித்திற்கு ஆதரவாக எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.
சுமந்திரனும் அவரது விசுவாசிகளும் தாராளமாக சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கட்டும். ஆனால் என்ன காரணத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதை தமிழ் மக்களுக்கு கூறவேண்டியது கடமையாகும்.
சுமந்திரனும் அவரது விசுவாசிகளும் தமிழர்களை முட்டாள்கள் என்று நினைத்தால்கூட பரவாயில்லை. மாறாக தமிழர்களுக்கு மூளையே இல்லை என்று நினைக்கிறார்கள்.

சில தருணங்களில் பேனாவை விட “செருப்பு” வலிமையாக பேசுகின்றது

சில தருணங்களில் பேனாவை விட
“செருப்பு” வலிமையாக பேசுகின்றது
"செருப்பு" காலில்;தான் தொங்குகிறது
ஆனால் அது தோளில் தொங்கும் துப்பாக்கியை விட
எதிரியை அதிகம் அம்பலப்படுத்துகின்றது.
முறத்தால் புலியை விரட்டினாள் ஒரு தமிழ்பெண் என்பது புறநானூறு.
செருப்பால் துரோகிகளை விரட்டினாள் ஒரு தமிழ்பெண் என்பது இனி வரலாறு.