Sunday, April 29, 2018

அந்த நெடிய உருவம் பேசும்போது எல்லாம்

அந்த நெடிய உருவம் பேசும்போது எல்லாம்
அடிக்கடி தன் மீசையை தடவிக் கொள்ளும்
.
அப்போதெல்லாம் இவருக்கு எதற்கு இந்த மீசை
என்று நான் நினைத்ததுண்டு. ஆனால் இன்று
அந்த மீசை தனக்கான பெருமை பெற்றுக்கொண்டது.
ஆம். வெறி பிடித்த ஆறு நாய்களுக்கு
மண்டை உடைக்கப்பட்டிருக்கிறது.
நல்ல பாடம் புகட்டப்பட்டிருக்கிறது.
கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து என்று
அடி வாங்கிய நாய்கள் ஊளையிடுகின்றன.
கடிக்க வரும் நாய்களை முதலில்
எட்டி உதைப்போம். அவைகள்
படிப்பினைகள் பெற்ற பிறகு ஆறுதலாக
கருத்து சுதந்திரம் பற்றி பேசுவோம்.
செய்தி- வைகோவின் ஊர்வலத்தில் கல்லெறிந்த 6 பாஜ.க வினருக்கு மண்டை உடைப்பு.

போர் வந்தால் சொல்லுங்கள் வருவேன் என்றார்

போர் வந்தால் சொல்லுங்கள் வருவேன் என்றார்
மக்கள் போராடுகின்றனர். அவரோ அமெரிக்கா போகிறார்.
சரி பரவாயில்லை. நிர்மலாதேவியை தண்டிக்க வேண்டும் என்றவர்
ஆளுநரை தண்டிக்க வேண்டும் என்று ஏன் கூறவில்லை?
நிர்மலாதேவிக்கு உதவியதாக இரு பேராசிரியர்கள் கைது என்கிறார்கள்
ஆனால் நிர்மலாதேவி யாருக்காக செட் பண்ணினாரோ
அவரை இன்னும் ஏன் கைது செய்யவில்லை பொலிசார்?
எய்தவன் இருக்க அம்புகளை மட்டும் இன்னும்
எத்தனை நாளைக்கு தண்டித்துக்கொண்டிருக்க போகிறோம்?
குருமூர்த்தி அய்யருடன் பேசிவிட்டு பத்திரிகைக்கு பேட்டி கொடுப்பவர்
ஆளுநரை கைது செய்ய சொல்வார் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்தான்!

• நாய்க்கு வளைகாப்பு விழா (இது ஒரு ரிலாக்ஸ் பதிவு)

• நாய்க்கு வளைகாப்பு விழா (இது ஒரு ரிலாக்ஸ் பதிவு)
நான் எப்போதும் சீரியஸ்சான அரசியல் பதிவுகளை போட்டு வருவதாக சில முகநூல் நண்பர்கள் குறைபட்டுக்கொள்கிறார்கள்.
அவர்களுக்கான ஒரு ரிலாக்கஸ் பதிவு இது.
கீழே உள்ள படத்தை அனுப்பி இது பற்றி என் கருத்து என்ன என்று ஒரு நண்பர் இன்பாக்சில் கேட்கிறார்.
இது நாய்க்கு வளைகாப்பாம். என்னத்தை சொல்ல?
இது ஏங்கே? எப்போது? நடந்தது என்ற விபரம் அறிய முடியவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.
ஏற்கனவே கனடாவில் ஒரு தமிழர் நாய்க்கு செத்தவீடு நடத்தினார். இப்போது வளைகாப்பு என்கிறார்கள்.
போகிற போக்கைப் பார்த்தால் இனி நாய்க்கு பிறந்தநாள் விழா படங்களையும் பேஸ்புக்கில் காணலாம்.
ஒருபுறத்தில் வன்னியில் மக்கள் பட்டினியால் சாகும்போது மறுபுறத்தில் நாய்க்கு இப்படி ஒரு விழா தேவையா என்று கேட்க தோன்றுகிறது.
ஆனாலும் அவ்வாறு கேட்க முடியவில்லை. ஏனென்றால் “மை கார், மை பெற்றோல், மை றோட்” என்பதுபோல் “எனது காசு நான் செலவு செய்கிறேன் கேட்பதற்கு நீ யார்?” என்று பதில் கூறுவார்கள்.
இது குறித்து எனது மருத்துவ நண்பரிடம் கேட்டேன். அதற்கு அவர் கூறினார் “ ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பையித்தியக்காரக் குணம் உண்டு. அது அதிகமாகும்போது பையித்தியம் என்கிறோம்”.
அந்த மருத்துவர் கூறியது எனக்கு முழுமையாக புரியவில்லை. ஆனால் இது பற்றி நாம் உரையாட வேண்டும் என்று தெரிகிறது.
மனிதன் ஒரு சமூகப் பிராணி. ஒரு மனிதனின் தவறுகள் சமூகத்தை பாதிக்குமானால் அது குறித்து கருத்துச் சொல்ல இன்னொரு மனிதனுக்கு உரிமை உண்டு.
இதனடிப்படையில் எமது விமர்சனங்களை முன்வைப்போம். என்றாவது ஒருநாள் அது சமூகத்திற்கு பயன் கொடுக்கும் என்று நம்புவோம்.

அய்யா! நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்

•அய்யா!
நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்
முடிந்தால் பதவியை ராஜினாமா செய்யுங்க- அல்லது
முடிந்தால் 2 சொகுசு பங்களாவையும் காலி பண்ணுங்க- அல்லது
முடிந்தால் 6 சொகுசு வாகனங்களையும் திருப்பி ஒப்படையுங்க
முடிந்தால் 32 சிங்கள காவலர்களை வாபஸ் பெறுங்க
அதைவிடுதத்து திரும்ப திரும்ப அறிக்கை விட்டு
தமிழ் மக்களை ஏமாற்ற முயல வேண்டாம்!

போராட்ட அறிக்கைகள் வரும் முன்னே தேர்தல் வரும் பின்னே !!

போராட்ட
அறிக்கைகள் வரும் முன்னே
தேர்தல் வரும் பின்னே !!
தீர்வுக்காக எதையும் செய்ய தயார் என்று சம்பந்தர் அய்யா அறிக்கை விடுகிறார்.
தீர்வு தராவிடில் தமிழர் தாயகம் எங்கும் அரச நிர்வாகத்தை முடக்குவோம் என்று சுமந்திரன் மிரட்டுகிறார்
இந்த ஆண்டு இறுத்திக்குள் சுயநிர்ணய உரிமை வழங்காவிடில் போராட்டம் வெடிக்கும் என்று மாவை சோனாதிராசா கூறுகிறார்.
இத்தனை நாளும் எதுவும் பேசாமல் இருந்தவர்கள் இப்போது திடீரென்று என் இவர்கள்; இப்படி அறிக்கை விடுகின்றனர்?
மாகாணசபைத் தேர்தல் விரைவில் வர இருப்பதால்தான் இவர்கள் மக்களை ஏமாற்றுவதற்காக இப்படி அறிக்கை விடுகின்றனர் என சிலர் கூறுகின்றனர்.
தற்போதைய முதல்வர் விக்கி பிரிந்து தனி அணி அமைக்கப்போவதால் அதனைச் சமாளிப்பதற்காக போராட்ட அறிக்கைகளை விடுகின்றனர் என வேறு சிலர் கூறுகின்றனர்.
எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோகப்போகிறது. எனவேதான் இப்படி அறிக்கைவிட்டு தென்னிலங்கை அரசியல்வாதிகளை மிரட்ட முயலுகின்றனர் என இன்னும் சிலர் கூறுகின்றனர்.
ஆனால் யாருமே இவர்கள் தமிழ் மக்களின் நலனுக்காகவே இவ் அறிக்கைகளை விடுவதாக கூறவும் இல்லை. நம்பவும் இல்லை.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இனி இவர்களின் அறிக்கைகளை நம்பி ஏமாற தயாரில்லை.

மாவோயிஸ்டுகள் என்னும் பேரில் 34 பேர் சுட்டுக்கொலை!

மாவோயிஸ்டுகள் என்னும் பேரில் 34 பேர் சுட்டுக்கொலை!
மராட்டிய மாநிலத்தில் கட்ச்ரோலி மாவட்டத்தில் இந்திய பாதுகாப்பு படையினரால் போலி மோதலில் 34 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
காஸ்மீரில் இந்திய பாதுகாப்புடையினரால் சுட்டுக்கொல்லப்படுவொருக்காக குரல் கொடுக்கும் மனிதவுரிமை அமைப்புகள்கூட மாவோயிஸ்டுகள் கொல்லப்படும்போது குரல் கொடுப்பதில்லை.
மாவோயிஸ்டுகள் பயங்கரவாதிகள் என்றும் அதனால் சுட்டுக்கொல்வதாக இந்திய பாதுகாப்பு படைகள் கூறுகின்றன.
ஆனால் மாவோயிஸ்டுகள் என்பதற்காக கைது செய்யக்கூடாது. அவர்கள் மீது வழக்கு போடக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கூறுகின்றது.
ஒருவர் தவறு செய்தால் அவரை கைது செய்து நீதிமன்றத்தின் மூலமே தண்டிக்க வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கூறுகின்றது.
ஆனால் இந்திய பாதுகாப்புடையோ அதன் உயர்நீதிமன்ற உத்தரவையும் கண்டு கொள்வதில்லை. அரசியல் அமைப்பு சட்டத்தையும் மதிப்பதில்லை. தொடர்ந்து சுட்டுக் கொன்ற வண்ணம் உள்ளது.
இந்திய பாதுகாப்பு படையின் இந்த அநியாயத்தை மனிதவுரிமை அமைப்புகளும் கண்டிப்பதில்லை. பத்திரிகைகளும் வெளிப்படுத்துவதில்லை.
காட்டில் இருக்கும் பல்லாயிரம் கோடி ரூபா பெறுமதியான கனிம வளங்களை அந்நிய ஏகாதிபத்திய கம்பனிகளுக்கு தாரை வார்க்க இந்திய அரசு முயல்கிறது.
அதற்கு இடங்கொடாமல் மாவோயிஸ்டுகளும் பழங்குடி மக்களும் போராடுகிறார்கள்.
அதனால்தான் இந்திய பாதுகாப்பு படைகள் மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தி அப்பாவி பழங்குடி மக்களை போலி மோதலில் சுட்டுக் கொல்கின்றன.
இன்று மாவோயிஸ்டுகள் 6 மாநிலங்களில் 120 மாவட்டகளுக்கு மேல் செல்வாக்கு செலுத்துகின்றனர்.
பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களை கொண்ட, இந்திய அரசுக்கு போட்டியாக ஒரு அரசை நடத்துகின்ற, மாவோயிஸ்டுகளை ஒருபோதும் கொன்று அழிக்க முடியாது.
மக்கள் அதரவு கொண்ட அவர்கள் விரைவில் வெற்றி பெறுவார்கள்!

சிறுமிகளுடன் பாலியல் வல்லுறவு

•சிறுமிகளுடன் பாலியல் வல்லுறவு
சாமி ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை!
சாமி நித்தியானந்தாவுக்கு எப்போது தண்டனை?
பெயர்- ஆசாராம் பாபு
படிப்பு- 4ம் வகுப்பை தாண்டவில்லை
தொழில் - 70 வருடமாக சாமியார்.
சொத்து – 100000000000 ரூபா ( பத்தாயிரம் கோடி )
செய்த குற்றம்- சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்தது.
தண்டனை- ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சாமி ஆசாராம் பாபுவுக்கு ஆயள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சாமி நித்தியானந்தாவுக்கு எப்போது தண்டனை வழங்கப்படும்?
ஆனாலும் இவர்கள் யாருமே தண்டனை அனுபவிக்கப் போவதில்லை.
ஏனெனில் நூற்றுக் கணக்கான முஸ்லிம் மக்களைக் கொன்ற மோடியின் நண்பர்களான மாயா கோட்டானி, அசிமானந்தா போன்றவர்கள் அப்பீலில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எனவே பிரதமர் மோடியின் நண்பரான சாமி ஆசாராம் பாவும் அப்பீலில் விடுதலை பெற்று விடுவார்.
தமிழ் இன உணர்வாளர்கள் என்றால் ஜாமீன்கூட வழங்காமல் சிறையில் அடைத்து வைக்கப்படுவார்கள்.
மாவோயிஸ்டுகள் என்றால் போலி மோதலில் சுட்டுக் கொல்லப்படுவார்கள்.
சாமியார்கள் என்றால் உடனெ விடுதலை செய்யப்படுவார்கள்.
இதுதானே இந்திய நீதி?

•“ஓர் இனப் பிரச்சனையும் ஓர் ஒப்பந்தமும்” நூல் அறிமுக விழா

•“ஓர் இனப் பிரச்சனையும் ஓர் ஒப்பந்தமும்” நூல் அறிமுக விழா
(1) நூலை எழுதிய தி.ராமகிருஸ்ணன் இந்திய பத்தரிகையாளர் என்று குறிப்பிடுவது தவறு. அவர் “இந்து”ப் பத்திரிகையாளர்.
(2) இந்து பத்திரிகையும் அதன் எடிட்டர் ராமும் எப்போதும் தமிழ் இன விடுதலைக்கு எதிரானவர்கள். இலங்கை அரசுக்கு விசுவாசமானவர்கள்.
(3) தமிழ் இனப் பிரச்சனைக்காக இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்யப்படவில்லை. இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பே ஒப்பந்தம்.
(4) ஒப்பந்தம் மூலம் இந்தியா பெற்றுக்கொள்ளும் அரசியல், ராணுவ, பொருளாதார நலன்கள் வருமாறு,
A. அரசியல், ராணுவ நலன்கள்
(அ) இலங்கையின் வெளி உறவுகளில் கட்டுப்பாடு செலுத்தும் உரிமை
(ஆ) ஒலி, ஒளிபரப்புகளை கட்டுப்படுத்தும் உரிமை
(இ) திரிகோணமலை தளத்தின்மீது கட்டுப்பாடு. இந்தியாவின் நலனுக்கு எதிரான அந்நிய படைகள் எதனையும் அனுமதிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு
(ஈ) இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் உரிமை
(உ) இலங்கை ராணுவம் மீதும் இதர நாடுகளுடனான ராணுவ உறவுகள் மீதும் கட்டுப்பாடு
B. பொருளாதார நலன்கள்
(அ)இந்திய பொருட்களின் ஏற்றுமதிக்கான தடைகள் நீக்கப்படும்
(ஆ) திரிகோணமலை எண்ணெய்க் குதப்பணி ஒப்பந்தம் புத்துயிர்ப்பு செய்யப்படும். இதன் செயல்பாடுகளிலும் இலாபத்திலும் இந்தியாவிற்கு கட்டுப்பாடு.
(இ) சுமார் 400 கோடி ரூபா அளவிலான நிர்மாணப் பணிகள் இந்தியாவிற்கு வழங்கப்படும்.
(ஈ)மீன்பிடி, எண்ணெய் ஆய்வு, ஆற்றல்துறை ஆகியவற்றில் இந்தியாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்
(உ) இலங்கை திட்டக்குழு மற்றும் உயர் வங்கி அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் உரிமை மூலம் இலங்கை பொருளாதாரத் திட்ட வகுப்பில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு
(ஊ) உதவி என்கிற அடிப்படையில் இந்திய ரயில் பெட்டிகள் மற்றும் அசோக் லேலண்டு பேருந்துகள் ஏற்றுமதி செய்தல்.
(5) ஒப்பந்தம் தமிழ் மக்களின் நலனைவிட இந்திய நலனையே அதிகம் கொண்டிருந்தமையினால் புலிகள் இயக்கம் ஒப்பந்தம் ஒரு அடிமை சாசனம் என்றும் அதன்மூலம் வந்த இந்திய அமைதிப்படையை ஒரு ஆக்கிரமிப்பு படை என்றும் அறிவித்தார்கள்
(6) 1965ல் பாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த போர் 22 நாட்கள் நடைபெற்றது. பின்னர் 1971ல் வங்கதேசத்தை உருவாக்க நடத்திய போர் 14 நாட்கள் நடைபெற்றது. ஆனால் 1987ல் 1லட்சத்து 20ஆயிரம் வீரர்களுடன் இலங்கை வந்த இந்திய ராணுவம் இரண்டரை வருடங்களுக்கு மேலாக போர் நடத்தியது.
(7) இந்தியாவில் விலைவாசி 14 சதவிகிதம் அதிகரித்திருந்தது. பண வீக்கம் பத்து சதவிகிதத்தை தாண்டியிருந்தது. இந்த சூழலில்தான் அமைதிப்படைக்கு தினந்தோறும் ஆறு கோடி ரூபாய்கள் வீதம் இரண்டரை வருடங்களாக மொத்தம் 5400 கோடி ரூபாவை இந்திய அரசு செலவு செய்தது.
(8) இந்திய ராணுவத்தால் 8000 க்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். 700 க்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார்கள். மக்களின் கோடிக் கணக்கான சொத்துகள் சேதமாக்கப்பட்டன.
(9) ஒப்பந்தம் மூலம் ஏற்படுத்தப்பட்ட வடக்கு கிழக்கு இணைப்பு கைவிடப்பட்டுள்ளது. அது பற்றிக்கூட இந்திய அரசு அக்கறை கொள்ளவில்லை.
(10) ஏனெனில் இந்திய அரசின் அக்கறை என்பது எப்போதும் இலங்கை மீதான ஆக்கிரமிப்பேயொழிய தமிழருக்கான தீர்வு அல்ல.
(11) இன்று,
பலாலி விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
காங்கேசன் துறைமுகம், சீமெந்து இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது
மன்னார் பெற்றோல் வளம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
புல்மோட்டை இல்மனைற் கனிமவளம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது
திருகோணமலை துறைமுகம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலை எண்ணெய்குதம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது
சம்பூரில் 500 ஏக்கர் நிலம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சம்பூர் அனல்மின்சார நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
(12) இப்படி தமிழ் மக்களின் அனைத்து வளங்களும் இந்தியாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
(13) ஆனால் இவற்றை எல்லாம் மறைத்து ஒப்பந்தம் பற்றி புத்தகம் எழுதி அதை எம் மத்தியில் விற்பதற்கு வந்துள்ளார் “இந்து” பத்திரிகையாளர் ராமகிருஸ்ணன்.
(14) அதற்கு உடந்தையாக இந்திய விசுவாசிகளான சம்பந்தர் அய்யா, வரதராஜபெருமாள் போன்றவர்களும் இருக்கின்றனர்.
(15) ஆனால் இவர்கள் எல்லோரும் ஒன்றை மறந்து விட்டனர். தங்கள் காலடியில் பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் சாம்பல் மேடு உள்ளது என்பதையே.

•சுமந்திரன் அவர்களே! நாங்க நம்பிட்டோம்?

•சுமந்திரன் அவர்களே!
நாங்க நம்பிட்டோம்?
ஜனாதிபதி சட்டத்தரணி பதவி கேட்டுப் பெற்ற உங்களால்
அதிரடிப்படை பாதுகாப்பு கேட்டுப் பெற்ற உங்களால்
6 கோடி ரூபா சொகுசு வாகனம் கேட்டுப் பெற்ற உங்களால்
சம்பந்தருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கேட்டுப் பெற்ற உங்களால்
சம்பந்தருக்கு இரண்டாவது சொகுசு பங்களா மட்டுமன்றி அதற்கு பெயிண்ட் அடிக்க விசேட பிரேரணை மூலம் 5 கோடி கேட்டுப் பெற்ற உங்களால்
ஆனந்த சுதாகரனின் விடுதலையை கேட்டுப் பெற முடியவில்லை.
அதுவும் நீங்கள் கேட்டும் ஜனாதிபதி உங்களை ஏமாற்றி விட்டார் என்று நீங்கள் கூறுவதை நாங்க நம்பித்தான் ஆக வேண்டும்?
சரி, உங்களிடம் ஒரேயொரு கேள்விதான் கேட்க விரும்புகிறோம்
ஒரு சாதாரண அரசியல் கைதி விடயத்திலேயே ஏமாற்றும் ஜனாதிபதி தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தருவார் என்று எப்படி எங்களை நம்பச் சொல்லுகிறீர்கள்?

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சுமந்திரா?

•இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சுமந்திரா?
நடந்தது இனப்படுகொலை அல்ல. போர்க்குற்றம் என்றாய்.
ஏதோ சாதுரியத்துடன்தான் கூறுகிறாய் என நம்பினோம்.
சர்வதேச விசாரணை தேவையில்லை. உள்ளக விசாரணை போதும் என்றாய்.
கெட்டித்தனமாய் நீ காய் நகர்த்துவதாக சொன்னார்கள். அதையும் நம்பினோம்.
சமஸ்டியை விட்டுக் கொடுப்போம் என்றாய். ஏனெனில் வார்த்தைகளில் தொங்க வேண்டியதில்லை என்று விளக்கம் சொன்னாய். அப்படியே நம்பினோம்.
ஆனால் இத்தனையும் நீ கூறியது ஜனாதிபதி சட்டத்தரணி பதவி எடுப்பதற்காகத்தான் என்பது இப்போதுதானே எமக்கு புரிகிறது.
உனது நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்ற தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டாயே சுமந்திரா!
எல்லா இளைஞர்களும் போராட சென்றபோது நீமட்டும் இந்தியா சென்று படித்தாய்.
எந்தவித தியாகத்தையும் செய்யாது பாராளுமன்ற பதவியை பெற்றாய்.
ஆயுதம் தாங்கிய இளைஞர்களால் என்ன சாதிக்க முடிந்தது என்று கொஞ்சம்கூட வெட்கப்படாமல் கேட்டாய்.
உனக்கு அதிரடிப்படையின் பாதுகாப்பு வேண்டு மென்பதற்காக தமிழ் இளைஞர்களை காட்டிக் கொடுத்தாய்.
சம்பந்தர் அய்யா சொகுசு மாளிகையில் தங்கியிருக்க அவர் ஒரு சின்ன அறையில் வசிப்பதாக பொய் சொன்னாய்.
சம்பந்தர் அய்யாவுக்கு வீடு திருத்தவும் சொகுசு வாகனம் வாங்கவும் 5 கோடி ரூபா பாராளுமன்றத்தில் பிரோரணை வந்ததை சுட்டிக் காட்டியபோது வழக்கம் போல் கள்ள மௌனம் காத்தாய்.
பூனை இல்லாத வீட்டில் சுண்டெலிகள் துள்ளி விளையாடுமாம். ஆதுபோல் கேட்பதற்கு யாரும் இல்லை என்ற தைரியத்தில் ரொம்பவும் ஆட்டம் போடுகிறாய்.
இப்போது, அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் ஜனாதிபதி ஏமாற்றிவிட்டார் என்று சிம்பிளாக சொல்கிறாய்.
நாளை இதேபோல், தீர்வையும் அரசு தராமல் ஏமாற்றிவிட்டது என்று கூறிவிட்டு நீ கடந்து சென்று விடுவாய்.
ஆடு ராசா ஆடு. நல்லாய் ஆடு. இதற்காத்தானே ஆசைப்பட்டாய்.

இம்சை அரசன் 23ம் புலிகேசி part-2 கனடாவில் ரிலீஸ்?

இதுவும் ஒரு ரிலாக்ஸ் பதிவு
இம்சை அரசன் 23ம் புலிகேசி part-2 கனடாவில் ரிலீஸ்?
மூன்று நாட்களுக்கு முன்னர் ரிலாக்ஸ் பதிவு என்று கூறி நாய்க்கு வளைகாப்பு பதிவு போட்டிருந்தேன்.
அதைப் படித்த நண்பர் ஒருவர் பிறந்தநாள் விழா என்று ஒரு வீடியோவை என் பதிவின் கீழ் பகிர்ந்திருந்தார்.
சரி யாரோ நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார்களோ என நினைத்துக்கொண்டு அதை பார்வையிட்டேன்.
மன்னிக்கவும். நாய்க்கு அல்ல ஒரு ஈழத் தமிழருக்கு 50 வது பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ அது.
இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இங்கு மக்கள் அனைவரும் இந் நாட்டு மன்னர்கள் என்று சிறு வயதில் நாம் படித்திருப்போம்.
அதை இந்த மனிதர் சீரியஸ்சாக எடுத்து விட்டாரோ அல்லது வடிவேல் படங்கள் பார்த்த விளைவோ தெரியவில்லை.
அவர் தன்னை மன்னராக அலங்கரித்து பிறந்தநாளை ஒரு மன்னர் விழாவாக நடத்தியுள்ளார்.
இதற்காக அவரும் வெட்கப்படவில்லை. அவர் விழாவில் கலந்து கொண்டவர்களும் வெட்கப்படவில்லை.
சந்தணம் மெத்தினால் கு- - யில் தடவுவார்கள் என்பதுபோல் இருக்கிறது இதனைப் பார்க்கும்பொது.
ஆனால் ஒரு விடயம் மட்டும் புரியவில்லை. அவருடைய மனைவி மட்டும் ராணி உடுப்போ ஆடம்பர ஆபரணங்களோ அணியாமல் யாரோ ஒரு மூன்றாவது மனிதர் போல் இருக்கிறார்.
குறிப்பு- வடிவேலுவின் இம்சைஅரசன் 23ம் புலிகேசி -2 தற்போது சென்னையில் படமாக்கப்ட்டு வருகிறது. அது அதற்குள் கனடாவில் ரிலீஸ் ஆகிவிட்டதோ என்று நினைக்க வேண்டாம்.
வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.

•ரஜனி தாத்தாவுக்கு!

•ரஜனி தாத்தாவுக்கு!
ஒரு அப்பாவி தமிழ் சிறுவனின் கடிதம்
தாத்தா! தாத்தா!
பொலிசை தாக்;குவது வன்முறை என்றீர்கள்
மன்னிக்க முடியாத குற்றம் என்றீர்கள்
சரி தாத்தா , ஆனால் ஒரு கேள்வி
அம்மாவுடன் சேர்ந்து தண்ணி கேட்ட என்னை
பொலிசார் ஈவு இரக்கமின்றி தாக்கியுள்ளனர்.
கதற கதற அம்மாவிடமிருந்து என்னை பிரித்து
தூக்கிச் சென்ற அவர்களை என்ன செய்வது?
அவர்களின் வன்முறையை நீங்கள் கண்டிக்க மாட்டீர்களா?
பாட்ஷா படத்தில் உங்களை தாக்கிய பொலிசை விரட்டி விரட்டி
அடித்தீர்களே, அது மாதிரி நானும் அடிக்கட்டுமா?
உங்கள் பதிலை ஆவலுடன் ; எதிர்பார்த்து இருக்கும்
அப்பாவி தமிழ் சிறுவன்.

•இது ஒரு 18 பதிவு

•இது ஒரு 18 பதிவு
சேலை சிறந்ததா?
அபயா சிறந்ததா?
பட்டிமன்றம் நடக்கிறது.
ஒரு நண்பர் இந்த வீடியோவைக் காட்டி
இதேபோல் உடுப்பில்லாமல் திரிந்தால்
பிரச்சனை இல்லைபோல் தெரிகிறது
என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்.
நான் என்னத்தைச் சொல்ல?
“உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்களை மேலெழும்ப விடாமல் அழுத்தி வைக்கும் ஆபத்தான ஆயுதங்களே மதமும் கடவுளும்” - தோழர் லெனின்.
குறிப்பு- நண்பர் அனுப்பிய வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.

•மே தின வாழ்த்துகள்.

•மே தின வாழ்த்துகள்.
உழைக்கும் மக்கள் இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் வெல்வதற்கு ஒரு உலகம் காத்திருக்கிறது - கால் மார்க்ஸ்
எட்டு மணி நேர வேலை
எட்டு மணி நேர ஓய்வு
எட்டு மணி நேர உறக்கம்
இதற்காகப் போராடி
சிக்காக்கோ வீதிகளில்
இரத்தம் சிந்தியவர்களின் நினைவே "மே தினம்"
எமக்காகப் போராடிய அவர்கள் சிந்திய இரத்தம் தோய்ந்ததே
எம் கரங்களில் தவளும் "செங்கொடி".
வாழ்வதற்காக உழைக்க ஆரம்பித்த மனிதன்
இன்று உழைப்பதற்காக வாழ்கிறான்.
மாற்றுவோம் இந்த அவல நிலையை.
உலகின் பாதி சொத்து வெறும் 62 முதலாளிகளிடம் குவிந்து கிடக்கிறது.
இந்த 62 முதலாளிகளின் சொத்து மதிப்பு 119 லட்சம் கோடி ரூபா
இது 350 கோடி ஏழை மக்களின் சொத்துக்கு சமமானது.
பணக்காரர்களின் சொத்து மதிப்பு 44 சத விகிதம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ஒன்பது பேரில் ஒருவர் இரவு உணவு இன்றி பட்டினியாக உறங்க செல்கிறார்.
இந்தியாவில் ஒவ்வொரு அரை மணி நேரமும் ஒரு விவசாயி தற்கொலை செய்கிறார்.
ஏன் இந்த நிலை?
உலகில் செல்வம் சமமாக பங்கிடாமல் இருப்பதே காரணம்.
ஆறு மனி நேர வேலை கேட்போம்
எட்டு மணி நேர உறக்கம் கேட்போம்
பத்து மணி நேர ஓய்வு கேட்போம்.
போராடுவோம் எமக்காக மட்டுமல்ல
எமது அடுத்த சந்ததிக்காகவும்!
•முதலாளி, தொழிலாளி சுரண்டலை ஒழிப்போம்
•உடல் உழைப்பிற்கும் மூளை உழைப்பிற்கும் இடைவெளியை நீக்குவோம்.
•நகரத்திற்கும் கிராமத்திற்கும் வேறுபாட்டை இல்லாது செய்வோம்
வாருங்கள் தோழர்களே! ஒன்றாய் அணிதிரள்வோம்!

Monday, April 23, 2018

கடந்த வருடம் திலீபன் என்பவர்

கடந்த வருடம் திலீபன் என்பவர் தேசியக் கொடியைக் கொளுத்தி தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
உடனே அவரைக் கைது செய்;து அவர் கையை முறித்து சிறையில் அடைத்தார்கள்.
இப்போது இன்னொருவர் தேசியக் கொடியை கொளுத்தி தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இவரும் கைது செய்யப்பட்டு கை உடைக்கப்படலாம் அல்லது குண்டர் சட்டத்தில் அடைக்கப்படலாம்.
ஆனால் அண்மையில் நாகலாந்தில் ஒரு பெண் தேசியக் கொடியை எரித்து அதனை தைரியமாக ஊடகங்களில் வெளிப்படுத்தினார்.
அரசு அவரைக் கைது செய்யவும் இல்லை. கையை உடைக்கவும் இல்லை.
காஷ்மீர், நாகலாந்து போல் தமிழகத்திலும் தேசியக் கொடி எரிக்கப்படும் நிலை ஏற்பட்டமைக்கு அரசே காரணம்.
காவிரி ஆணையம் அமைக்காதது மட்டுமன்றி அதற்காக போராடுவதையும் அரசு தடுக்கிறது.
சென்னை மெரினாவில் காவிரி உரிமை கோரி போராடியவர்களை பொலிஸ் தடுத்து கைது செய்துள்ளது.
தமிழ்நாட்டில் தமிழ் மண்ணில் தமிழனுக்கு போராடுவதற்குகூட உரிமை இல்லை எனில் அவன் தேசியக்கொடியை கொளுத்தாமல் கோமணத்தையா கொளுத்துவான்?

•தேர்தல் பாதை திருடர் பாதை

•தேர்தல் பாதை திருடர் பாதை
ஒருநாள் யாழ்ப்பாணம் தமிழரசுக்கட்சி காரியாலயத்திற்கு முன் ஒரு மாணவன் தன் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றான்.
அப்போது அங்கு நின்ற மாவை சேனாதிராசாவின் காவல் பொலிசார் ஒருவர் “ ஏய் தம்பி, இது எந்த இடம் என்று தெரியாதா? நீ பாட்டுக்கு சைக்கிளை நிறுத்திவிட்டுச் செல்கிறாய்? இங்கே மாவை சேனாதிராசா இருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் சுமந்திரன் வர இருக்கிறார். அதன்பின்பு சம்பந்தர் அய்யா வர இருக்கிறார்” என்றார்.
இதைக் கேட்ட அந்த மாணவன் இயல்பாக கூறினான் “ பயப்பட வேண்டாம். நான் சைக்கிளை பூட்டிவிட்டுத்தான் செல்கிறேன்”
தயவு செய்து இதைப் படித்ததும் சம்பந்தர் அய்யா கும்பலை சைக்கிள் திருடன் என்று நான் கூறிவிட்டதாக அவருடைய விசுவாசிகள் அவசரப்பட்டு கோபம் கொள்ள வேண்டாம்.
உண்மைதான். சயிக்கிள் திருடும் அளவிற்கு சீப்பான திருடர்கள் இல்லை இவர்கள்.
இவர்கள் பதவிக்காக இனத்தையே காட்டிக்கொடுக்கும் மோசமான திருடர்கள்.
தேர்தலின்போது ஒருவரை ஒருவர் மோசமாக திட்டிவிட்டு இப்போது பதவிக்காக ஒருவரை ஒருவர் கட்டி அணைக்கின்றனர்.
தமிழ் மக்களின் நலனுக்காக இதுவரை ஒன்று சேராதவர்கள் இப்போது தமது பதவி நலனுக்காக ஒன்று சேருகிறார்கள்.
சிலர் இது சம்பந்தர் அய்யாவின் தவறு என்கிறார்கள். வேறுசிலர் இது கஜேந்திரகுமாரின் தவறு என்கிறார்கள். இன்னும்சிலர் இது டக்ளசின் தவறு என்கிறார்கள்.
ஆனால் இவர்கள் எல்லோரும் ஒரு முக்கியமான தவறை சொல்லாமல் தவிர்க்கிறார்கள்.
அது இந்த தேர்தல் பாதையே காரணம் என்பதையே.
தேர்தலில் போட்டியிடுபவர்கள் பதவி பெறுவதையே நோக்கமாக கொண்டுள்ளனரேயொழிய தமிழ் மக்களின் நலன் குறித்து அக்கறை கொள்வதில்லை.
தமிழின விடுதலைக்கான பாதை தேர்தல் பாதை இல்லை என்பதை உணர்ந்துகொண்டவிட்டால் அப்புறம் அப்பாதையில் வரும் இந்த திருடர்களை விரட்டிவிடலாம்.