Monday, April 23, 2018

பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட "லண்டன் தமிழர் சந்தை

பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட "லண்டன் தமிழர் சந்தை"
லண்டனில் கறோ என்னும் இடத்தில் கடந்த சனி ஞாயிறு தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 8 மணிவரை "லண்டன் தமிழர் சந்தை" இடம்பெற்றது.
நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் வர்த்தக நிறுவனங்கள் கலந்துகொண்ட இவ் நிகழ்வு பிரித்தானிய வர்த்தக சம்மேளத்தினால் நடாத்தப்பட்டுள்ளது.
பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளனம் ஒரு இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனம்.
இது தமிழ் வர்த்தகர்களை பிரித்தானிய மற்றும் சர்வதேச அரங்கில் ஒரு பலம் பொருந்திய சக்தியாக உருவாக்குவதையே நோக்கமாக கொண்டிருக்கிறது
ஒருபுறம் வர்த்தக நிறுவனங்களின் பிரச்சாரம். இன்னொருபுறம் கலை நிகழ்வுகள். இடையில் சிற்றுண்டிகள் என ஒரு திருவிழா போல் இருந்தது.
பல தமிழ் நிறுவனங்களையும் பல்லாயிரம் தமிழர்களையும் இரு நாட்கள் ஓரிடத்தில் கூட வைத்ததில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது உண்மைதான்.
இம்முறை மிகப்பெரிய தமிழ் வர்த்தக நிறுவனமான “லைக்கா” நிறுவனத்தையும் இணைத்துள்ளனர்.
அடுத்த வருடம் இன்னும் பல நிறுவனங்களை இணைக்க முயல்வதோடு அவற்றின் மூலம் தமிழ் மக்கள் பயன் பெறும் வகையில் செய்ய வேண்டும்.
தற்போதைய மண்டபம் அதிக மக்களையும் அதிக வர்த்தக நிறுவனங்களையும் கொள்ளும் வசதி குறைவாக இருக்கிறது. அடுத்த வருடம் இதைவிட பெரிய மண்டபத்தை ஒழுங்கு செய்வது நல்லது.

No comments:

Post a Comment