Tuesday, July 30, 2019

தன் கையால் தனக்கு குடை பிடிக்க முடியவில்லை

தன் கையால் தனக்கு குடை பிடிக்க முடியவில்லை
மற்றவர் உதவியின்றி தன்னால் நடக்கவும் முடியவில்லை
வேட்டியுடன் மூத்திரம் போவதும்கூட தெரியவில்லை
இத்தனைக்கு பிறகும் பதவியையும் துறக்க மனம் வரவில்லை
பதவி பறிபோன பின்பும்கூட பங்களாவையும் விடவில்லை.
பாராளுமன்றத்திலும் பலமணி நேரம் தூங்கியே தொலைப்பவர்
தீபாவளிக்கு மட்டும் எழுந்து நின்று அறிக்கை விட்டு தொலைப்பார்.
புலிகள் ஆயுதம் தூக்கியதால் “பயங்கரவாதிகள்” என்றவர்
தமிழர் மீண்டும் ஆயுதம் தூக்க வேண்டி வரும் என்கிறார்.
அவருக்கென்ன ? அவர் லூசு ஐயாதானே!
எப்படி வேண்டுமானாலும் பேசி பொழுதைக் கழிப்பார்.
ஆனால் அவர் என்ன கூறினாலும் அதை “சாணக்கியம்” என்று
பேஸ்புக்கில் எழுதி மகிழும் “செம்பு”க்கூட்டம் ஒருபுறம்
அவரை “வாழும் வீரர்” என்று பட்டம் கொடுத்து மகிழும் கூட்டம் மறுபுறம்
இத்தனைக்கும் நடுவே இந்த கிழம்
எப்போது செத்து தொலைக்கும் என்று
தலையில் கைவைத்து காத்திருக்கும் தமிழ் மக்கள்
ஆனால்,
இவர் ஈழத்து கருணாநிதி. அதாவது எமனும் மறந்த கிழம்.

தமிழ் இன விடுதலைக்கான பாதை எது?

தமிழ் இன விடுதலைக்கான பாதை எது?
இதுவரை தேர்தல் பாதைமூலம் தீர்வு பெற முடியும் என்று கூறிவந்த சம்பந்தர் ஐயா இனி ஆயுதம் தூக்க வேண்டி வரும் என்கிறார்.
புலிகள் ஆயுதம் தூக்கி போராடியதால் “பயங்கரவாதிகள்” என்று கூறிய சம்பந்தர் ஐயா இப்போது அவர்கள் ஆயுதம் தூக்கியது நியாயம் என்கிறார்.
அகிம்சை பாதை மூலம் தமிழ் மக்கள் தீர்வு பெற முடியும் என கூறிவந்த சம்பந்தர் ஐயா அதன் மூலம் எதையும் பெற முடியவில்லை என்பதை பகிரங்கமாக ஒத்துக் கொண்டுள்ளார்.
இதுவரை இந்தியா மூலம் தீர்வு பெற முடியும் என கூறிவந்த சம்பந்தர் ஐயா இந்தியாவும் தம்மை ஏமாற்றிவிட்டது என்பதை ஒத்துக் கொண்டுள்ளார்.
புலிளை அழித்த பின்பு தீர்வு தருவதாக கூறிய அனைவரும் இதுவரை தீர்வு தரவில்லை என்பதையும் அவர்களுக்கு தாம் காட்டியும் கூட்டியும் கொடுத்ததையும் ஒத்துக் கொண்டுள்ளார்.
என்ன இப்படி மாறி மாறி கூறுகிறீர்களே? என்று நாம் சம்பந்தர் ஐயாவிடம் கேட்கப் போவதில்லை.
ஏனெனில் தனது பதவிக்காகவும் பங்களா நலன்களுக்காகவும் அவர் இப்படி மாறி மாறி கதைப்பார்.
அவர் இப்போது இப்படி பேசியது எமக்கு ஆச்சரியம் இல்லை. மாறாக அவர் இப்படி பேசவில்லை என்றால்தான் எமக்கு ஆச்சரியம்.
ஆனால் நாம், தமிழ் இன விடுதலைக்கான பாதை ஆயுதப் போராட்டமே என்று கூறியபோது “தமிழ் மக்களை அழிக்க வேண்டாம் நீங்கள் வந்து தூக்குங்கள்” என்று கூறியவர்கள் எப்போது ஆயுதம் தூக்கப் போகிறீர்கள் என்று சம்பந்தர் ஐயாவிடம் கேட்பார்களா?
போராட்டம் வெடிக்கும் என்று கூறிய மாவை சேனாதிராசாவிடம் “எப்போது குண்டைக் கட்டிக் கொண்டுபோய் குதிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்பார்களா?
தேர்தல் பாதை மூலமோ அல்லது அகிம்சை போராட்டத்தின் மூலமோ அல்லது இந்தியா மூலமோ தமிழ் மக்கள் விடுதலை அடைய முடியாது என்பதை நாம் நன்கு அறிவோம்.
தமிழ் இன விதலைக்கான பாதை ஆயுதப் போராட்டமே என்பதையும் நாம் நன்கு அறிவோம். ஆனால் அதை இந்தளவு விரைவில் சம்பந்தர் ஐயா தன் வாயால் கூறுவார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை.

கரவெட்டியில் உதித்திட்ட சூரியன்

கரவெட்டியில் உதித்திட்ட சூரியன்
மலையகத்தில் மறைந்திட்ட சூரியன்
எத்தனை தடவை இன்னல் வந்தபோதும்
அத்தனை தடவையும் தப்பி நின்ற சூரியன்
ஏதோ ஒரு கெட்ட இரவு
எல்லோரும் உறங்கிய இரவு
நேரில் உன்னை எதிர்கொள்ள முடியாதவர்
துரோகத்தால் உன்னை முடித்த இரவு
துவக்கால் சுட்டால் சத்தம் கேட்கும் என்று
பாவிகள் உன்னை அடித்தே கொன்றனரே
புதைத்தால் நீ முளைப்பாய் என்றஞ்சி
ஓடும் ஆற்றில் தூக்கி வீசினரே உன்னை
உடல் கிடைத்தாலும் அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்று
உன் சிரித்த முகத்தை கல்லால் குத்தி சிதைத்தனரே
நீ பிறந்த தேதி தெரியவில்லை வாழ்த்து கூற
நீ இறந்த தேதியும் தெரியவில்லை நினைவு கூர
ஆம். சூரியனின் பிறப்பும் இறப்பும் யார் அறிவார்?
குறிப்பு- தோழர் நெப்பொலியன் (மனோகரன்) கரவெட்டியில் பிறந்தவர். அவர் முதலில் பலிகள் இயக்கதில் சேர்ந்தார். பின்னர் புலிகள் இயக்கம் உடைந்தபோது புதியபாதை பிரிவில் இயங்கினார். அப்பிரிவு புளட் ஆக மாறிய போது அவர் பேரவை இயக்கத்தை உருவாக்pனார். அவர் தோழர் தமிழரசன் தலைமையில் இயங்கிய தமிழ்நாடு விடுதலைப் படைக்கு பயிற்சி மற்றும் ஆயதம் வழங்கியதால் இந்திய உளவுப்படையானது ஈரோஸ் இயக்கத்தின் மூலம் அவரை மலையகத்தில் வைத்து கொலை செய்தது.

உம்மைக்; காணா எந்த நாளும்

உம்மைக்; காணா எந்த நாளும்
இந்த பேதை செத்து தொலைகிறேனே
காதிலே தோடும் இல்லை
கையிலே காப்பும் இல்லே
காலிலே கொலுசுகூட இல்லே
கழுத்திலே சங்கிலியும் இல்லே
அத்தனையும் விற்று தேடியும்
இன்னும் நீவிர் வந்து சேரலையே
நீவிர் வருவீர் என்று தெரிந்தால்
உமக்காக கழுத்தில் இருக்கும் தாலியையும்
விற்கத் தயங்க மாட்டேனே
எனக்கு பொன்னும் வேணாம்
பொருளும் வேணாம்
பணமும் வேணாம்.
நீர் வந்து சேர்ந்தால் போதும்
வந்தால் அண்ணையுடன் வருவேன்
என்று சொல்லி சென்ற என்னவரே
அண்;ணையும் வரலே நீரும் திரும்பி வரலே
என்வென்று நான் உணர்வது என் துணைவரே
இறந்து விட்டீர் என்று தெரிந்தால்
புதைகுழியில் பூ போட்டு அழுது ஆறுதல் பெறுவேனே
இருக்கிறீர் என்று தெரிந்தால் உறுதியுடன் உயிரை
பிடித்து வைத்து உமக்காக காத்திருப்பேனே –ஆனால்
கழுத்தில் தாலி இருந்தும நெற்றியில் பொட்டு இருந்தும்
விதைவையாக நான் வாழ்வதை நீர் அறிய மாட்டீரோ?
செத்து தொலையலாம் என்றால்
சேலைத் தலைப்பில் மகன் தொங்கிக் கொண்டு நிற்கிறான்
அப்பா எங்கே என்று தினமும் கேட்டு அழுகிறான்
அப்பா சாமி கிட்டே போயிட்டார் என்றும்
என்னால் அவனிடம் சொல்ல முடியவில்லை
அப்பா எப்படி இருப்பார் என்று கேட்கிறான்
காட்டுவதற்கு ஒரு போட்டோ கூட என்னிடம் இல்லை
அப்பா சாமிமாதிரி இருப்பார் என்றால்
பிள்ளையார் சாமிமாதிரியா முருகன் சாமிமாதிரியா என்று கேட்டுவிட்டு
உம்மைப்போலவே கைதட்டி சிரிக்கிறான் சொக்கில் குழிவிழ.
எனக்கு ஒரு ஆசை இருக்கிறது
உமது தோளில் சுமந்த துப்பாக்கி
எமது மகன் தோளில் தொங்க வேண்டும்.
அவன் உமது கனவை நிறைவேற்ற வேண்டும்.

ஈழத்து கருணாநிதியும் தமிழகத்து சம்பந்தர் ஐயாவும்!

•ஈழத்து கருணாநிதியும் தமிழகத்து சம்பந்தர் ஐயாவும்!
துரோகத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும் எனக் கோருவது
பெருந்தன்மையானது அல்ல மாறாக இளிச்சவாய்த்தனமானது!
சம்பந்தர் ஐயாவின் வயதிற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என சிலர் கோருகின்றனர். அவருடைய முதுமையை கேலி பண்ணக் கூடாது என்றும் கூறுகின்றனர்.
இதுவரை செய்த சாதனைகளைக் கூறி மரியாதை தரும்படி கேட்க முடியாதவர்கள் வயதிற்காக செய்த துரோகத்தை மறக்கும்படி கோருகின்றனர்.
சம்பந்தர் ஐயாவின் வயதிற்கு மரியாதை கொடுக்கும்படி சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர்கூட கூறவில்லையே. அது ஏன்?
அல்லது, சம்பந்தர் ஐயாவின் முதுமையை கேலி பண்ண வேண்டாம் என்று கடந்த இரண்டு வருடங்களாக போராட்டம் நடத்தும் காணாமல் போனவர்களின் உறவுகளில் ஒருவர் கூறவில்லையே? அது ஏன்?
அல்லது, தனக்கு இரண்டு பங்களா வாங்கிய சம்பந்தர் ஐயா வேலை கேட்டு வந்த பட்டதாரிகளுக்கு வேலை கேட்டால் உரிமை கேட்க முடியாது என்றாரே. அந்த பட்டதாரிகளில் ஒருவர் கூட சம்பந்தர் ஐயாவுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று கூறவில்லையே. அது ஏன்?
அல்லது, தனது சொந்த நிலத்தை கேட்டு வீதியில் உறங்கி போராடும் கேப்பாப்புலவு மக்களில் ஒருவர்கூட சம்பந்தர் ஐயாவின் வயதிற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று கூறவில்லையே. அது ஏன்?
மாறாக சம்பந்தர் ஐயாவின் வயதிற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் எனக் கோருபவர்களே,
யாழ்ப்பாணத்தில் சொகுசு வாகனத்தில் வந்த சம்பந்தர் ஐயா மீது மண் அள்ளி வீசி செத்து போ என தூற்றினார்களே தாய்மார்கள். அவர்களுக்கு ஏன் உங்களால் சொல்ல முடியவில்லை?
சில மாதங்களின் முன்னர் வவுனியாவில் சம்பந்தர் ஐயாவின் உருவப் பொம்மையை கொளுத்தி செத்த வீடு நடத்தினார்களே காணமல் போனவர்களின் உறவுகள். அந்த பெண்களிடம் போய் சம்பந்தர் ஐயாவின் வயதிற்கு மரியாதை கொடுக்கும்படி ஏன் உங்களால் கூற முடியவில்லை?
மரியாதை என்பது கொடுத்து வாங்குவது. மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு மக்கள் மரியாதை தர வேண்டும் என எதிர் பார்க்கக் கூடாது.
மக்கள் எதிரியைக் கூட மன்னிப்பார்கள். ஆனால் துரோகிகளை ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்.
எனவே சம்பந்தர் ஐயாவுக்கு மரியாதை வேண்டுமென்றால் நீங்கள் கோர வேண்டியது மக்களிடம் அல்ல. மாறாக இனியாவது துரோகம் செய்ய வேண்டாம் என்று சம்பந்தர் ஐயாவிடம் கோருங்கள்.
மாறாக சம்பந்தர் ஐயா தொடர்ந்தும் துரோகம் செய்வார். ஆனால் மக்கள் அதை மறந்து மரியாதை தர வேண்டும் என நீங்கள் கோருவது மக்களை இளிச்வாயர்களாக இருக்கும்படி கோருவதற்கு ஒப்பாகும்.
மக்கள் ஒருபோதும் அப்படி இருக்க மாட்டார்கள்.

இவர்கள் தமிழ் மாணவிகள் இவர்கள் இந்து மாணவிகளும்கூட

இவர்கள் தமிழ் மாணவிகள்
இவர்கள் இந்து மாணவிகளும்கூட
இவர்கள் தினமும் 18 கி.மீ நடந்து சென்று படிக்கிறார்கள்.
தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்களும்
இந்து மதத்திற்காக குரல் கொடுப்பவர்களும்
இவர்களுக்காக ஏன் இன்னும் இரங்கவில்லை என்று நாம் கேட்கலாம்.
இவர்களுக்காக இரங்குவதா அவர்களின் வேலை? ஏன் லண்டனில் இருக்கும் நீங்கள் இரங்கி ஒரு பஸ் ஏற்பாடு செய்திருக்கலாமே என்று அவர்களது செம்புகள் பதில் எழுதுவார்கள்.
என்ன செய்வது? தமிழன் தலைவிதி இப்படியாக இருக்கிறதே!
சரி. இது பற்றி சம்பந்தர் ஐயாவிடம் கேட்டால்,
"ஆம். செய்யலாம்தான். நான் கேட்டால் ரணில் உடனே நூறு பஸ் தருவார்தான். ஆனால் அப்பறம் உரிமை கேட்க முடியாதே” என்று பதில் தருவார்.
பாவம் இந்த மாணவிகள். “அப்ப நீங்க மட்டும் எப்படி ஐயா இரண்டு சொகுசு பங்களா, 6 சொகுசு வாகனம், எல்லாம் கேட்டு வாங்கினீர்கள்? என்று திருப்பி கேட்க முடியாதே.
ஆனால் ஒன்று மட்டும் நடக்கும்.
அடுத்த தேர்தலுக்கு வோட்டு கேட்டு போகும்போது நடந்து நடந்து தேய்ந்த தமது பிஞ்ச செருப்பால் இந்த மாணவிகள் சம்பந்தர் ஐயாவுக்கு பதில் தருவார்கள்.

அடி ஆத்தீ.

அடி ஆத்தீ.
இன்னும் 3 மாசத்தில போராட்டம் வெடிக்கும் என்கிறாரே இந்த சம்பந்தர் தாத்தா
அப்ப இனி வெளியில போய் விளையாட முடியாதா தாத்தா? மீண்டும் எமக்கு பங்கர் வாழ்க்கைதானா தாத்தா?
இந்த லூசு தாத்தா தண்ணியைப் போட்டிட்டு உளறுதா ?அல்லது
உண்மையில் குண்டைக் கட்டிக்கொண்டுபோய் வெடிக்கப் போகுதோ தெரியவில்லையே.
சொர்க்கத்தில் 72 மனைவி கிடைக்கும் என்று சொல்லி சஹ்ரானை யாரோ ஏமாற்றியது போல எங்கட தாத்தாட்டையும் யாரோ 72 பங்களா கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறாங்கள் போல
அதுதான் மனுசன் இப்படி வெறி பிடிச்சு நிக்குது.
ஐயோ பயமாய் இருக்குதே!

நாகலாந்து மக்களால் முடியுமென்றால் தமிழ் மக்களால் ஏன் முடியாது?

•நாகலாந்து மக்களால் முடியுமென்றால்
தமிழ் மக்களால் ஏன் முடியாது?
இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம்தான் நாகலாந்து. இந்திய அரசு அம் மாநில மக்களுக்கு தனி கொடி, தனி பாஸ்போட்,தனி அரசியல் சாசனம் வழங்க முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே பல உரிமைகளை பெற்றுள்ள நாகலாந்து மக்களால் தற்போது இந்த உரிமைகளையும் எப்படி பெற முடிகிறது? அல்லது இந்திய அரசு எப்படி நாகலாந்திற்கு மட்டும் இப்படி வழங்க முடிவு செய்துள்ளது?
இப்போது எழும் கேள்வி என்னவெனில் நாகலாந்து மக்களால் இப்படி பெற முடியுமென்றால் ஏன் தமிழ் மக்களால் பெற முடியாது?
முதலாவது,
நாகலாந்து மக்கள் தனித்துவமானவர்கள். அதனால் அவர்களால் பெற முடிகிறது என்கிறார்கள்.
தமிழ் மக்களும் தனித்துவமானவர்கள்தானே. அவர்களுக்கும் நீண்ட தனித்துவமான வரலாறு உள்ளதே.
இரண்டாவது,
நாகலாந்து மக்கள் தமது உரிமைக்காக போராடினார்கள். அதனால் பெற்று வரகிறார்கள் என்கிறார்கள்.
தமிழ் மக்களும் நீண்ட காலமாக போராடித்தானே வருகிறார்கள். இந்தி எதிர்ப்புக்கு எதிராக எல்லாம் பல மாணவர்கள் போராடி இறந்தார்களே.
மூன்றாவதாக,
நாகலாந்து மக்கள் படை கட்டி ஆயுதம் ஏந்தி போராடினார்கள். அதனால் உரிமைகளை பெற்று வருகிறார்கள் என்கிறார்கள்.
ஆம். அது உண்மைதான். தமிழர்களும் கட்டினார்கள். ஆனால் அது படை அல்ல, ரசம் விடுவதற்காக சோற்றுக்குள்ள கட்டிய பாத்தி.
முக்கியமானது என்னவென்றால்,
•தமிழ்நாட்டில் எச்ச.ராசா, குருமூர்த்தி, என்.ராம் போன்று நாகலாந்தில் இருந்துகொண்டு நாகலாந்திற்கு எதிராக பேச யாரையும் அவர்கள் அனுமதிப்பதில்லை.
•தமிழ்நாட்டில் ஆயுதம் ஏந்திப் போராடுபவர்களை பயங்கரவாதிகள் என்கிறோம். ஆனால் அவர்கள் தமது தியாகிகள் என்று போற்றுகிறார்கள்.
•அறிவாயுதம் ஏந்துவோம் என்று சொல்லி தேர்தல் பாதையில் செல்பவர்களை அவர்கள் நம்பவில்லை. ஏற்கவில்லை.

•மலடி பிள்ளை பெற முடியுமா? தமிழ் ஊடகவியலாளர் இந்தியாவை எதிர்த்து எழுத முடியுமா?

•மலடி பிள்ளை பெற முடியுமா?
தமிழ் ஊடகவியலாளர் இந்தியாவை எதிர்த்து எழுத முடியுமா?
மலடி பிள்ளை பெற்றால் எப்படி அதிசயமாக இருக்குமோ அதைவிட அதிசயம் தரக்கூடியது எமது தமிழ் ஊடகங்கள் இந்திய அரசை எதிர்த்து எழுதுவது.
தமிழர் நலனுக்கு எதிராக எப்போதும் செயற்பட்டுவருபவரான இந்து ராம்கூட தமிழகத்தில் சிறப்புமுகாமில் நடக்கும் கொடுமைகள் குறித்து “தமிழ் இந்து” வில் செய்தி வெளியிட்டுள்ளார்.
ஆனால் ஈழத் தமிழ் ஊடகங்கள் மறந்தும்கூட தமிழகத்தில் அகதிகளுக்கு இடம்பெறும் கொடுமைகள் குறித்து மூச்சுகூட விட மாட்டார்கள்.
இதற்கு காரணம் இந்திய அரசு குறித்த அச்சமா அல்லது இந்தியா வழங்கும் அற்ப சலுகைகளுக்கான விசுவாசமா என்று தெரியவில்லை.
யாழ் மருத்தவமனையில் இந்திய ராணுவம் செய்த கொலை குறித்து உதயன் பத்திரிகையில் கட்டுரை ஒன்று வெளியிட்டமைக்காக அதன் நிறுவனர் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் யாழ் இந்திய தூதரால் மிரட்டப்பட்டதாக அவரே பாராளுமன்றத்தில் கூறினார்.
அதுமட்டமல்ல அக் கட்டுரையை எழுதிய யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் உயர் படிப்பிற்காக இந்தியா செல்ல வேண்டி எற்பட்டபொது யாழ் இந்திய தூதர் அவருக்கு விசா வழங்காமல் பழி வாங்கினார்.
இப்படி ஒரு பாராளுமன்ற உறுப்பினர், யாழ் விரிவுரையாளர் எல்லாம் யாழ் இந்திய தூதரால் பகிரங்கமாக மிரட்டப்படும்போது சாதாரண ஊடகவியலாளர்கள் எப்படி துணிந்து எழுதுவார்கள்?
அதுமட்டுமல்ல இந்திய தூதரால் பல சுலகைகள் அன்பளிப்புகள் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்ட்டு வருகிறது. இதற்கு ஆசைப்பட்டும் ஊடகவியலாளர்கள் இந்திய விசவாசம் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலைதான் பலம்பெயர் தமிழ் ஊடகவியலாளர் மத்தியிலும் இதுவரை இருந்து வந்தது. ஆனால் இப்போது அதில் மாற்றம் எற்படத் தொடங்கியுள்ளது.
ஆம். மலடி பிள்ளை பெறும் அதிசயம் நிகழத் தொடங்கியுள்ளது. ஆதவன் வானொலி தமிழக அகதிகளின் வலிகளை அண்மையில் ஒலிபரப்பியுள்ளது.
அதே ஆதவன் வானொலி கடந்த மாதம் எழு தமிழர் விடுதலை குறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாவின் குரலை பதிவு செய்தது.
லைக்கா முதலாளியும் லிபரா முதலாளியும் ஈழத் தமிழர்கள்தான். அவர்களது ஆதவன் வானொலியும் ஐபிசி வானொலியும் தமிழ் ஊடகங்கள்தான்.
ஆனால் “ஆதவன்” வானொலி ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா ஈழத் தமிழ் அகதிகளின் வலிகளை பதிவு செய்கிறார். ஐபிசி ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் கனடாவில் 1200 கலைஞர்கள் மேடை ஏற்றியதை பெருமையாக பதிவு செய்கிறார்.

தோழர் சண் அவர்களின் நினைவுகளை போற்றுவோம்!

•தோழர் சண் அவர்களின் நினைவுகளை போற்றுவோம்!
இன்று தோழர் சண்முகதாசன் அவர்களின் 99 பிறந்த தினம் ஆகும் (03.07.1920)
தோழர் சண் அவர்கள் தமிழ் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்.
இலங்கையில் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மூவின மக்களின் மதிப்பை பெற்றிருந்த தமிழ் தலைவர் அவர் ஆவார்.
அதுமட்டுமல்ல சர்வதேசத்திலும் மதிப்பு பெற்றிருந்த இலங்கைத் தமிழ்த் தலைவர் அவர்.
மாசேதுங் சிந்தனைகளை இலங்கையில் அறிமுகப்படுத்தியதுடன் இறுதிவரை கொள்கை மாறாது செயற்பட்ட புரட்சியாளர் அவர்.
அவர் ஆயுதப் போராட்டத்தை நடத்தவில்லை என்றாலும் இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடியதற்குரிய அரசியலை வழங்கியவர் அவரே.
அதனாலேயே அனைத்து ஆயுத பிரிவு போராளிகளின் தலைமைகளும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர்.
1988ல் கொழும்பில் இருந்துகொண்டு ஜேவிபி யை பகிரங்கமாக விமர்சித்த ஒரே தலைவர் இவர்தான்.
சில சிங்கள தலைவர்கள் ஜே.வி பி க்கு பயந்து இவரது வீட்டில் அடைக்கலம் பெற்றிருந்ததை நானே நேரில் பார்த்திருக்கிறேன்.
அவர் தமிழீழ கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை அவர் பகிரங்கமாக ஆதரித்தார்.
அதுமட்டுமல்ல அவர்தான் முதன் முதலில் ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழ் இளைஞர்களை “போராளிகள்” என்று அழைத்தார்.
அதுவும் சிறிமாவோ பண்டாரநாயக்கா, அமிர்தலிங்கம், எனஎம் பெரோரா, கொல்வின்ஆர்டி சில்வா போன்ற தலைவர்கள் இருந்த மேடையில் அழைத்தார்.
அதனால்தான் தமிழ் போராளிகளின் தலைவர்களும் அவரை அடிக்கடி சந்தித்து ஆலோசனை பெற்று வந்தார்கள்.
அவர் ஓயாது அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்ததால் அவர் உடல்நிலை மோசமடைந்தது. கடும் சுகயீனங்களால் அவதிப்பட்டார்.
அவர் தனியாக இருந்தார். அவரை அருகில் இருந்து பராமரிக்கக்கூட யாரும் இருக்கவில்லை.
தான் இறந்தால் அச் செய்தியை இந்த நம்பருக்கு தெரிவிக்கவும் என தனது கட்டில் தலைமாட்டில் மகளின் நம்பரை அவர் எழுதி ஒட்டியிருந்தார்.
இங்கிலாந்தில் இருந்து சென்ற மகள் தந்தையின் இந்த அவல நிலையைப் பார்த்தவிட்டு அவரை வற்புறுத்தி தன்னுடன் இங்கிலாந்திற்கு அழைத்துச் சென்றார்.
இங்கிலாந்திலும் அவர் சும்மா இருக்கவில்லை. பல சர்வதேச புரட்கர சக்திகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி சர்வதேச அகிலம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
எனினும் இங்கிலாந்தில் அவர் ஓரிரு வருடங்களே உயிர் வாழ்ந்தார். இறுதியாக 08.02.1993 யன்று தனது 73வது வயதில் அவர் உயிர் பிரிந்தது.
அவரை நினைவு கூர்வது என்பது அவர் காட்டிய பாதையில் சென்று புரட்சியை மேற்கொள்வதே ஆகும்.
குறிப்பு- தோழர் சண் அவர்கள் நிறைய எழுதியுள்ளார். அவற்றை சேகரித்து தொகுப்புகளாக வெளியிட வேண்டும். எதிர்கால சந்ததியினர் படிப்பதற்கும் பயணிப்பதற்கும் அவை நன்கு பயன்படும். வழி காட்டும்.