Wednesday, January 31, 2024

1996ல் கலைஞர் மீண்டும் முதல்வரானதும்

1996ல் கலைஞர் மீண்டும் முதல்வரானதும் அவரைச் சந்திப்பதற்கு சில ஈழத் தமிழ் அகதிகள் சென்னை சென்றனர். கலைஞர் வீட்டு வாசலில் அவ் அகதிகள் நிற்பதைக் கண்ட ஸ்டாலின் “ உங்களால்தானே ஆட்சியை இழந்தோம். மீண்டும் வந்துவிட்டீர்களா?” என திட்டி அனுப்பிவிட்டார். இதைக் கேள்விப்பட்ட கலைஞர் பின்னர் அந்த அகதிகளை அழைத்து ஸ்டாலின் பேச்சுக்காக வருத்தம் தெரிவித்ததுடன் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். கலைஞார் தன் உறவு வட்டத்தில் எப்போதும் சில ஈழத் தமிழர்களை வைத்திருப்பார். தன்னை ஈழத் தமிழ் ஆதரவாளராக காட்டிக் கொள்வார். அதனால்தான் அவர் ஊழல் வழக்கில் மாட்டியபோது அவருக்காக ஈழத் தமிழர் ஜி.ஜி.பொன்னம்பலம் பணம் எதுவும் வாங்காமல் இலவசமாக வாதாடினார். கலைஞர் சென்னைக்கு வந்தபோது யாரும் வீடு கொடுக்காத நிலையில் ஒரு ஈழத் தமிழரே வீடு கொடுத்தார் என கூறுகின்றனர். அது எந்தளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியாது. ஆனால் பின்னர் தன் மகள் கனிமொழி தனக்கு ஒரு தம்பி வேண்டும் என்று கேட்டபோது அவர் ஒரு ஈழ அகதிச் சிறுவனையே தத்தெடுத்தார். ஸ்டாலின் அப்பவும் சரி, இப்பவும் சரி ஈழத் தமிழர்களுடன் முகம் கொடுத்தே பேச மாட்டார். அவருடைய உறவு வட்டத்தில் ஒரு ஈழத் தமிழர்கூட இல்லை. அவருக்கு ஈழத் தமிழர் பிரச்சனை பற்றி எதுவுமே தெரியாது. எனவே ஸ்டாலினுடன் நெருங்கி ஈழத் தமிழர்கள் பேச முடியாத நிலையில் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி மகன் உதயநிதியுடன் பேசுவது மட்டுமே. உதயநிதி நடிகை நயன்தாராவுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடிப்போய் உதவுகிறார். நடிகை நயன்தாரா கேட்டுக்கொண்டால் உதயநிதி நிச்யம் ஈழத் தமிழர் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க முயல்வார். எனவே அண்ணாமலையை அழைத்து லண்டனில் உறவுப்பாலம் கட்டியவர்கள் நயன்தாராவை அழைத்து ஏன் ஒரு பாலம் கட்டக்கூடாது? 😂

சாந்தன் உயிருக்கு அபத்தான

சாந்தன் உயிருக்கு அபத்தான நிலையில் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார். அவர் தன்னை இலங்கைக்கு அனுப்புமாறு கடந்த 15 மாதங்களாக கோரி வருகிறார். ஆனால் தமிழக அரசு அவரை நாட்டுக்கு அனுப்பாமல் அடைத்து வைத்திருப்பதால் அவரது சிறை வாழ்வு 33 வருடங்களாக தொடர்கிறது. முருகன் லண்டனில் இருக்கும் தன் மகளுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகின்றார். இதுதொடர்பாக சென்னையில் உள்ள லண்டன் தூதரகத்தில் கடந்த 20ம் திகதி முருகன் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் தமிழக அரசு முருகன் தூதரகம் செல்வதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்கவில்லை. இதனால் முருகன் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். இந்நிலையில் ராபர்ட் பயஸ் தம்மை விடுதலை செய்யுங்கள். அல்லது சிறப்புமுகாமில் சிறிது நடைப்பயிற்சி செய்யவாவது அனுமதியுங்கள் என்று கேட்டு உண்ணாவிரதம் இருக்கின்றார். இந்த சிறப்புமுகாம் கொடுமைகளுக்கு எப்போது முடிவு வரும்?

கோயில்களை தோண்டினால்

கோயில்களை தோண்டினால் புத்தர் சிலைகள் தெரியும் என்பது உண்மைதான். ஆனால் அதற்கும் மேலே தோண்டினால் தமிழன் தெரிவான் என்பதை ஏன் இந்த கன்னட நடிகர் சொல்லவில்லை?

ஒரு தமிழ் நடிகர் கன்னடர்களை

ஒரு தமிழ் நடிகர் கன்னடர்களை பிச்சை எடுப்பவர்கள் என கேவலமாக பேசிவிட்டு கன்னடப் படத்தில் நடித்துவிட முடியாது. ஆனால் ஒரு கன்னட நடிகர் தமிழர்களை பிச்சை எடுப்பவர்கள் என கேவலமாக பேசிவிட்டு தமிழ் படத்தில் தாராளமாக நடித்துவிட முடியும். என்ன செய்வது? ஒரு கன்னடரை சுப்பர் ஸ்டார் என தூக்கி கொண்டாடினால் அவர் குடும்பம் இப்படித்தான் தன் நன்றியைக் காட்டும்.

நான் வேலூர் சிறப்புமுகாமில்

நான் வேலூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்தவேளை அங்கு வவுனியாவை சேர்ந்த கந்தையா என்பவரும் அடைக்கப்பட்டிருந்தார். அவர் ஒரு புலவர். அவரை ஈழத்து பாரதி என்று அழைப்பார்கள். அவர் கரூர் சாதாரண அகதி முகாமில் தங்கியிருந்திருந்தார். அவரை புலி என்றும் அவரால் தமிழ்நாட்டின் அமைதிக்கு ஆபத்து என்றும்கூறி கியூ பிராஞ் பொலிஸ் அவரை சிறப்புமுகாமில் அடைத்துள்ளனர். சரி அவர் செய்த பயங்கரவாதம் என்ன? கரூர் தாசில்தார் அகதிமுகாமில் உள்ள பெண் ஒருவரை அழைத்துக்கொண்டு லாட்ஜ் க்கு சென்றுள்ளார். இதைப் பார்த்த இந்த கந்தையா தாசில்தாரிடம் “ஹனி மூன் (தேனிலவு) எப்படி இருந்தது?” என்று கிண்டலாக கேட்டிருக்கிறார். உடனே கோபம் அடைந்த தாசில்தார் கியூ பிராஞ்சிடம் கூறியுள்ளார். கியூ பிராஞ் பொலிஸ் இவரை புலி என்றுகூறி சிறப்புமுகாமில் கொண்டு வந்து அடைத்து விட்டனர். சரி , இந்த பயங்கரவாதி கந்தையாவுக்கு எத்தனை வயது? சொன்னால் நம்பமாட்டீர்கள் அவருக்கு 80 வயது. ஒரு என்பது வயது கிழவரை கொடிய பயங்கரவாதி என்று சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டார். குறிப்பு – கீழே உள்ள படத்தில் உள்ளவர் கியூ பிராஞ் பொலிசாரால் கொடிய பயங்கரவாதி என்று சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட ஒரு அப்பாவி அகதி. மற்றவர் துணையின்றி எழுந்த நடமாட முடியாத இவரை வெளியே விட்டால் தமிழகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பார் என கியூ பிராஞ் பொலிசார் கூறினார்கள்.

ஜெயா அம்மையார் ஆட்சியில்

ஜெயா அம்மையார் ஆட்சியில் பூந்தமல்லி சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருந்த தன் கணவரை பார்க்க அனுமதிக்குமாறு கோரி ஒரு தாய் தன் இரண்டு பிள்ளைகளுடன் சிறப்புமுகாம் வாசலில் உண்ணாவிரதம் இருந்தார். சிறப்புமுகாமில் உள்ளவர்கள் தம் உறவினர்களை பார்க்க அனுமதிக்க வேண்டும். விரும்பினால் தங்களுடன் தம் குடும்பத்தை வைத்திருக்கவும் அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளது. ஆனால் ஜெயா அம்மையார் அரசு கொஞ்சம்கூட இரக்கமின்றி உண்ணாவிரதம் இருந்த தாயையும் இரு பிள்ளைகளையும் கைது செய்து சிறையில் அடைத்தது. பின்னர் ஜெயா அம்மையார் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பெங்களுர் சிறையில் அடைக்கப்பட்டபோது கொஞ்சம்கூட கூச்சமின்றி தன்னுடன் தன் தோழி சசிகலா தங்க அனுமதிக்க வேண்டும் என மனுக் கொடுத்தார்.

Tuesday, January 30, 2024

அரசியல்வாதிகள் வாங்கிய கடன்

அரசியல்வாதிகள் வாங்கிய கடன் அப்பாவி மக்களின் தலைமேல் சுமத்தப்பட்டுள்ளது. கடன் சுமை தாங்க முடியாமல் அந்த மக்கள் தினமும் செத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலை என்று மாறும்?

அவர்கள் ராமரை முன்னிறுத்தும்போது

அவர்கள் ராமரை முன்னிறுத்தும்போது நம்மவர் சிலர் ராவணனை முன்னிறுத்துவது தவறு அப்படி முன்னிறுத்தும்போது ராமாயணம் உண்மை என்று ஏற்றுக்கொள்ள வேண்டி வரும். ராமன் கடவுள் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டி வரும். எப்படி ராவணன் அரக்கன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதோ அதேபோல ராமன் கடவுள் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதேவேளை ராவணன் என்பது கட்டுக்கதை என்றும் அவன் சிவ பக்தன் என்பதும் ஆதாரமற்ற கதை என சிங்கள அமைச்சர் கூறுகின்றார். அதுமட்டுமல்ல, ராவணன் வழிபட்ட திருமலை சிவன் ஆலயத்தை இடித்துவிட்டு அதில் புத்த விகாரை கட்ட வேண்டும் என்றும் அந்த அமைச்சர் கூறுகின்றார். வேடிக்கை என்னவெனில் ஒருபுறம் ராமனுக்கு கோயில் கட்டிய இந்திய பிரதமர் மறுபுறம் ராவணன் வழிபட்ட சிவன்கோவிலை இடிக்க வேண்டும் என்றுகூறும் சிங்கள அரசுக்கு உதவுகிறார். இப்போது புரிகிறதா, இந்த அரசியல்வாதிகள் செய்வதெல்லாம் உண்மையான பக்திக்காக அல்ல பதவிக்காக என்பதை..

தமிழர்களின் மனித உரிமைகளுக்கு

தமிழர்களின் மனித உரிமைகளுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு கனடா தடை விதித்துள்ளது. இந்த செயற்பாடுகள் தொடரும். தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும்" என பிரதமர் ட்ரூடோ உறுதியளித்துள்ளார். கனடாவில் மூன்று லட்சம் தமிழர்களே உள்ளனர். ஆனாலும் கனடா தொடர்ந்தும் தமிழ் சமூகத்துடன் பயணிக்கும் என்று பிரதமர் கூறுகின்றார். இந்தியாவில் எட்டுகோடி தமிழர்கள் இருக்கின்றனர். ஆனால் இனப்படுகொலை புரிந்த ராணுவ தளபதிகளை அழைத்து செங்கம்பள வரவேற்பு கொடுக்கிறது இந்திய அரசு. அதுமட்டுமல்ல இதுவரை தீர்வு பெற்று தருவதாக உறுதியளித்து வந்த இந்திய அரசு இப்போது தன்னால் வலியுறுத்த மட்டுமே முடியும் என்று கைவிரித்துள்ளது. இந்திய அரசு ஈழத் தமிழர்களை மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள எட்டுக்கோடித் தமிழர்களைக்கூட ஒருபொருட்டாக மதிக்கவில்லை.

இவர்களை மறைப்பதற்காக

இவர்களை மறைப்பதற்காக அல்லது இவர்களை மறப்பதற்காக அவர்கள் அழைத்து வரப்படுகிறார்களா? இந்த உளவியல் தாக்கம் இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலா?

இந்த வருடம் சுமந்திரன் சேரின்

இந்த வருடம் சுமந்திரன் சேரின் (காந்தி) குல்லா போராட்டம் இருக்குமா? குறிப்பு – நான் உண்மையில் மறந்துவிட்டேன். இந்த முகநூல் நினைவூட்டி தொலைக்குது.

ஒரு வார்த்தையின் மதிப்பு என்பது

ஒரு வார்த்தையின் மதிப்பு என்பது அதை சொல்பவரை பொறுத்து உள்ளது. உதாரணமாக ஒரு புல்லிடம் கேட்டால் சிங்கத்தைவிட மாடும் ஆடும் பொல்லாதவை என்றே அது சொல்லும். எனவே நாம் கேட்கும் ஒவ்வொரு சொல்லும் யாரால் யாருக்கு சொல்லப்படுகின்றது என்பதை காண வேண்டும். ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னாலும் ஒரு வர்க்கத்தின் குணாம்சம் ஒளிந்திருக்கும் என்று லெனின் கூறினார் நாம் படிக்கும் வரிகள் நாம் கேட்கும் பாடல்கள் நாம் காணும் படங்கள் இவற்றின் பின்னால் ஒளிந்திருக்கும் வர்க்கத்தின் குணாம்சம் என்ன என்பதை நாம் அறிய வேண்டும். வெடிகுண்டு ஒருமுறைதான் வெடிக்கும். ஆனால் புத்தகம் படிக்கும்போதெல்லாம் வெடிக்கும் எனவே மக்களுக்காக பயன் உள்ள வார்த்தைகளை எழுதினால் அவை நிச்சயம் விளைவுகளை ஏற்படுத்தும். முகநூலில் எழுதுவதால் என்ன பயன் கிடைக்கும் என சிலர் நக்கலாக கேட்கின்றனர். ஆனால் முகநூலில் எழுதும் எழுத்துக்கள் மாற்றத்தை எற்படுத்தும் என்பதை அரசுகள் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றன. அதனால்தான் அவ் எழுத்துகளை தடை செய்ய அரசுகள் முற்படுகின்றன. ஏனெனில் கருத்துகள் மக்களை பற்றிக் கொண்டால் அவை பௌதிக சக்தி பெற்றுவிடும். அந்த மக்கள் சக்தியானது அணுகுண்டைவிட வலிமையானது.

நான் மதுரை சிறையில்

நான் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தவேளை ஒருமுறை கொடைக்கானல் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டு வரும்போது படிப்பதற்காக எனது தோழர் முகிலன் தந்த ஜிPனியர் விகடன் சஞ்சிகையை கொண்டு வந்தேன். ஆனால் சிறை வாசலில் சோதனை செய்த அதிகாரி இச் சஞ்சிகை சிறையினுள் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று பறித்துவிட்டார். இதனால் அடுத்தநாள் இது குறித்து உதவி காவல் கண்காணிப்பாளர் பாலன் அழகிரி அவர்களிடம் முறையிட சென்றேன். அப்போது அங்கு கே.கே.எஸ்..எஸ்.ஆர் உதவி கண்காணிப்பாளருடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் என்னைக் கண்டதும் தன்னை தாக்க வந்துவிட்டதாக நினைத்து பதட்டமடைந்தார். உடனே உதவி காவல் கண்காணிப்பாளர் நான் யார் என்பதை கூறி பயப்பட தேவையில்லை என்று அவரை அசுவாசப்படுத்தினார். நான் ஜீனியர் விகடன் சஞ்சிகையை அனுமதிக்க மறுப்பது பற்றி உதவி காவல் கண்காளிப்பாளரிடம் கேட்டேன். அதற்கு அவர் ஜெயில் மனுவலில் இச் சஞ்சிகை பெயர் இல்லை என்றார். நான் நம்ப மறுத்து ஜெயில் மனுவலைக் காட்டுங்கள் என்று கேட்டேன். முதலில் மறுத்தவர் பின் ஏதோ யோசித்துவிட்டு ஜெயில் மனுவலை என்னிடம் தந்தார். அதில் சிறையில் அனுமதிக்கும் சஞ்சிகைளில் ஆனந்தவிகடன் குமுதம் இரண்டு பெயர் மட்டுமே இருந்தது. இதனைப் படித்த நான் ஆனந்த விகடன் இதழை வெளியிடும் நிறுவனம்தானே ஜீனியர் விகடனையும் வெளியிடுகிறது. அதை ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு அவர் இந்த ஜெயில் மனுவல் அச்சிட்ட காலத்தில் ஜீனியர் விகடன் வெளி வரவில்லை. அது காரணமாக இருக்கலாம். எதற்கும் நீ ஐ.ஜிக்கு ஒரு மனு அனுப்பு. உன் மூலம் ஒரு வழி பிறக்கட்டும் என்றார். அவர் கூறியபடி நானும் சிறைத்துறை ஐஜிக்கு மனு அனுப்பினேன். ஆனால் நான் சிiறையை விட்டு வெளியேறும்வரை பதில் வரவில்லை. இப்போது சிறையில் ஜீனியர் விகடன் அனுமதிக்கப்படுகிறதா என்பதை யாராவது அறிந்தவர்கள் கூறவும். அப்போது நான் ஜெயில் மனுவலை பார்த்த விடயத்தை அறிந்த புரட்சி மணி என்ற ஆயுள்சிறைவாசி “நான் அறிந்தவரையில் அதனைப் பார்த்த இரண்டாவது சிறைவாசி நீதான்”என்றார். எனக்கு ஆச்சரியம். முதலாவது ஆள் யார் என்று கேட்டேன். அதற்கு அவர் “பழனிபாபா” என்றார். பழனிபாபா சிறையில் இருந்தவேளை சிறை நிர்வாகத்துடன் சண்டை பிடித்து ஜெயில் மனுவலை வாங்கி படித்து அதில் உள்ள சிறைவாசிகளுக்கான சலுகைகள் உரிமைகள் பெற்று தந்தவர் என்றார். பழனிபாபாவுக்கு சிறைக்குள் இப்படி ஒரு கதை இருப்பதை அப்போதுதான் நான் அறிந்துகொண்டேன். பழனிபாபா தோழர் தமிழரசன் குறித்து பேசியதை சில வருடங்களுக்கு முன்னர் முகநூல் மூலமே அறிந்துகொண்டேன். நண்பர் உமர் அவர்கள் பழனிபாபா குறித்து நூல் ஒன்றை எழுதியவர். அவர் மூலம் பல விடயங்கள் அறிந்துகொண்டேன். இமாம் அலி, ஹைதர் அலி, பாட்சா எல்லோரையும் சந்தித்து பேசியிருக்கிறேன். ஆனால் பழனிபாபாவை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஒருமுறை என் நண்பர் ஒருவர் “தன் இடுப்பில் கட்டியிருந்த பெல்ட் குண்டினாலே ராஜீவ் காந்தி இறந்தார்.” என பழனிபாபா பேசியது பற்றி கூறி என் கருத்தை கேட்டார். நான் சிரித்துவிட்டு அவர் வேண்டுமென்றே காங்கிரஸ்காரரை கடுப்பேத்த அப்படி பேசியிருப்பார் என்றேன்.

திராவிட முதல்வர் இரக்கம் காட்டுவாரா?

திராவிட முதல்வர் இரக்கம் காட்டுவாரா? சாந்தன் உயிரைக் காப்பாற்றுவாரா? பாஜக வந்தவிடும் சொல்லி திமுக கூட்டணிக்கு ஆதரவு கொடுப்போர், இப்பவாவது சாந்தனுக்காக குரல் கொடுப்பார்களா?

ஓடுவதாக இருந்தால்

ஓடுவதாக இருந்தால் துரத்திக்கொண்டு ஓடுங்கள் நிற்பதாக இருந்தால் எதிர்த்து நில்லுங்கள் பதுங்குவதாக இருந்தால் பாய்வதற்காக பதுங்குங்கள் ஆனால் ஒருபோதும் அடிமையாகவே வீழ்ந்து கிடந்துவிடாதீர்கள்

கண்டால் வரச் சொல்லுங்கள்!

•கண்டால் வரச் சொல்லுங்கள்! இந்த மாதர் சங்கத்தினரை யாராவது கண்டால் வரச் சொல்லுங்கள் சீமானைக் கைது செய்ய வேண்டும் என்று விஜயலட்சுமிக்காக குரல் கொடுத்தவர்கள் திமுக எம்எல.ஏ மகன் வீட்டில் கொடுமைப்படுத்தப்பட்ட பெண்ணிற்காக குரல் கொடுக்கச் சொல்லுங்கள்.

சனவரி:25 மொழிப்போர் ஈகியர் நாளில்

சனவரி:25 மொழிப்போர் ஈகியர் நாளில், உயிர் நீத்த ஈகியரை நெஞ்சிலேந்துவோம்!

தேசிய இனங்களின் சிறைக்கூடமே

தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா – தோழர் தமிழரசன்

கேள்வி – சிறப்புமுகாம் மூடப்படுமா?

கேள்வி – சிறப்புமுகாம் மூடப்படுமா? திராவிட முதல்வர் - அகதிகளுக்கு 308 கோடி ரூபா வழங்கப்படும் கேள்வி – சிறப்புமுகாம் மூடப்படுமா? திராவிட முதல்வர் - அகதிமுகாம் மறுவாழ்வு மையம் என பெயர் மாற்றம் கேள்வி – சிறப்புமுகாம் மூடப்படுமா? திராவிட முதல்வர் - ஈழத் தமிழர் நலன் காக்கப்படும். கேள்வி – சிறப்புமுகாமில் உயிர் ஆபத்தில் உள்ள சாந்தனையாவது விடுதலை செய்வீர்களா? திராவிட முதல்வர் - ஈழத் தமிழர் விடியலுக்காக திமுக ஆற்றிய தியாகத்தை யாராலும் மறுக்க முடியாது. கேள்வி –யோவ் நீ என்ன லூசா?

ஒருபுறம் சிறுவன் பாலச்சந்திரனுக்கு

ஒருபுறம் சிறுவன் பாலச்சந்திரனுக்கு அஞ்சலி செலுத்துகிறார். மறுபுறம் அச் சிறுவன் இறந்தது அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன் என்று கூறிய இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். தமிழர்கள் வீரத்தால் அழிக்கப்பட்டதைவிட துரோகத்தால் அழிக்கப்பட்டதே அதிகம்.

சிலர் முருகன் ஒரு இந்துக்கடவுள்

சிலர் முருகன் ஒரு இந்துக்கடவுள் எனக்கூறி தைப்பூசம் கொண்டாடுகின்றனர். இன்னும் சிலர் முருகன் ஒரு தமிழன். அவன் எம் முப்பாட்டன் என்றுகூறி தைப்பூசம் கொண்டாடுகின்றனர். முருகன் ஒரு இந்து கடவுள் என்றால் வட இந்தியாவில் ஏன் இந்துக்களால் முருகன் கொண்டாடப்படுவதில்லை? வள்ளி இலங்கையில் கதிர்காமத்தில் வாழ்ந்தவள் என்றும் அங்குதான் முருகன் வள்ளியை திருமணம் செய்தார் என்றும் ஈழத்தில் கூறப்படுகிறது. ராமாயணத்தில் சீதையை மீட்க ராமர் பாலம் கட்டினார் என்று கூறப்படுகிறது. அப்படியென்றால் வள்ளியை மணம் புரிய முருகன் எப்படி இலங்கைக்கு வந்தார் என்று ஏதாவது கதை இருக்கிறதா? ஒரு சந்தேகத்தில்தான் கேட்கிறேன். முருக பக்தர்களின் மனதை புண்படுத்துவதாக நினைக்க வேண்டாம். முருகன் முப்பாட்டன் எனக் கூறுவோர் அந்த முப்பாட்டனிடம் கற்றுக்கொள்ள ஒரு விடயம் இருக்கிறது. ஆம், முருகன் ஆயுதம் ஏந்தியே எதிரியை அழித்தார். வன்முறை மூலமே தீர்வு கண்டார். தேர்தல் பாதையில் சென்று அல்ல.

ஆழ்ந்த இரங்கல்கள்

• ஆழ்ந்த இரங்கல்கள் ஈழத் தமிழர் பலர் தம் இசைக்கு ரசிகர்களாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று நேற்று கூறியிருந்தார் இளையராசா .அவர்கள். இன்று அதே ஈழத்தில் அவர் தன் மகளை இழந்திருப்பது கவலையளிக்கிறது. அவருடைய கவலையில் நாமும் பங்கெடுப்போம்.

மகிந்த ராஜபக்சாவின் வலது கரமாக

மகிந்த ராஜபக்சாவின் வலது கரமாக விளங்கிய ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். பொதுவாக யாரும் இறந்தால் மக்கள் கவலைப்படுவார்கள். கவலைப்படவில்லை என்றாலும் ஒருபோதும் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். ஆனால் இந்த அமைச்சரின் மரணத்திற்கு சிங்கள மக்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் எந்த வீதியில் எந்த வாகனத்தில் ஒரு ஏழை வயோதிபரை மோதி கொன்றுவிட்டு தன் அதிகார செல்வாக்கால் தப்பினாரோ அதே வீதியில் அந்த வாகனத்தில் மோதி இறந்துள்ளார். இப்போது அரசு வேறு வழியின்றி சமூக வலைத்தளங்களில் இப்படி மகிழ்ச்சி தெரிவிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டுகிறது. என்னே கேவலம் இது?

நேரு

நேரு ஒரு கண் பார்வையற்ற பெண்ணை பணக்கார வீட்டு பையன் ஒருவன் சாட்சியங்கள் ஏதும் இன்றி பாலியல் வல்லுறவு செய்கிறான். அவனுக்கு வழக்கறிஞர் மோகன்லால் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுக் கொடுப்பதே கதை குத்து பாட்டு இல்லை. டுயும் டுயும் சண்டைக் காட்சிகள் இல்லை. ஆபாசக் காட்சிகள் இல்லை. ஆனாலும் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்லும் படம். மலையாள திரைஉலகில் மட்டுமே சுப்பர் ஸ்டார்கள் இப்படியான படங்களில் நடிப்பார்கள். எற்கனவே மம்முட்டி காதல் என்னும் படத்தில் ஓரின சேர்க்கையாளராக நடித்திருப்பார். தமிழ் திரையுலகில் 100 கோடி சம்பளம் பெறும் நம்ம சுப்பர் ஸ்டார்கள் எப்போது இப்படியான படங்களில் நடிப்பார்கள்?

மனைவி துணைவி இருவரையும் பக்கத்தில்

மனைவி துணைவி இருவரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு “ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழர் பண்பாடு” என்று பேசும் “தில்” கலைஞருக்கு மட்டுமே உண்டு. அது அவரது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விடயம். அதை பற்றிக் பேசக்கூடாது என்று உடன்பிறப்புகள் கூறுகின்றனர். உண்மைதான். ஆனால் ஒரு தலைவருடைய தனிப்பட்ட வாழ்க்கை சட்டவிரோதமாக இருந்தால் அது பொதுவெளியில் பேசப்படும்தானே? இந்தியாவில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றம். அதனால்தான் ராசாத்தி அம்மாள் யார் என்று கேட்கப்பட்டபோது தன் மகள் கனிமொழியின் தாயார் என்று தந்திரமாக கலைஞர் பதில் அளித்தார். இதில் வேதனை என்னவென்றால் கனிமொழி பிறந்தபோது அது கலைஞர் மகள் என எழுதியதற்காக ஒரு பத்திரிகை ஆசிரியர் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அதே கனிமொழி திகார் சிறையில் அடைக்கப்பட்டபோது தன் மகளை விடுதலை செய்யுமாறு சோனியாவிடம் சென்று கெஞ்சினார் கலைஞர். ஒருமுறை எம்.ஜி.ஆர் ஆட்சியில் தன்மீது உளி வீசப்பட்டது என்றும் தன் உயிருக்கு ஆபத்து என்றும் கலைஞர் பேசினார். எங்கே எப்போது உளி வீசப்பட்டது என்று கேட்டபோது கலைஞர் அதற்கு பதில் அளிக்கவில்லை. நடிகை சிறீதேவி வீட்டுக்கு சென்றுவிட்டு வரும்போதே இந்த உளி வீச்சு நடைபெற்றது என அப்போது பரவலாக பேசப்பட்டது. கவிஞர் கண்ணதாசனும் தன் வனவாசம் நூலில் விபச்சாரியுடன் உறவு கொண்டுவிட்டு நன்றாக திருப்திபடுத்தவில்லை என்றுகூறி கொடுத்த பணத்தை திருப்பி வாங்கிவிட்டார் கலைஞர் என்று எழுதியுள்ளார். கண்ணதாசன் எழுதியது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. ஆனால் கண்ணதாசன் மீது இதுகுறித்து வழக்கு எதுவும் கலைஞர் போடவில்லை. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் கலைஞர் கைது செய்யப்பட்டபோது அவருக்காக மதுரை போஸ்ட் ஆபீசில் ஒரு குண்டு வெடித்தது. அக் குண்டை வைத்தவர்களில் ஒருவர் மதுரை திமுக இளைஞர் அணியைச் சேர்ந்த ஜெயப்பெருமாள். அந்த ஜெயப்பெருமாள் தண்டனை பெற்று மதுரை சிறையில் இருந்தவேளை அவருடன் நான் பேசியபோது “ உங்கள் தலைவர் கலைஞர் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது சரியா?” எனக் கேட்டேன். அதற்கு அவர் “பல் இருக்கிறவன் பக்கோடா தின்கிறான். அவருக்கு கெத்து இருக்கிறது. அவர் அனுபவிக்கிறார். உங்களுக்கு ஏன் எரிகிறது” எனக் கூறினார். அதற்கு நான் “ உங்களைப் போன்ற தொண்டர்கள் இருக்கும்வரை கலைஞர் போன்ற தலைவர்கள் ஒருபோதும் திருந்தப் போவதில்லை” என்றேன். குறிப்பு - இந்த பதிவை படித்துவிட்டு உடன்பிறப்புகள் திராவிட மொழியில் என்னை திட்ட வேண்டாம். ஏனெனில் நான் தமிழன். எனக்கு திராவிடமொழி புரியாது.😂

நான் லண்டனில் இருந்துகொண்டு

நான் லண்டனில் இருந்துகொண்டு தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டுவதாக எழுதும் உடன்பிறப்பே கீழே உள்ள படத்தில் இருக்கும் இளைஞன் யார் என்று தெரியுமா ? இந்த இளைஞன் மதுரை திமுக இளைஞர் அணியைச் சேர்ந்த செயப்பெருமாள் என்பதை அறிவாயா? எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் கலைஞர் கைது செய்யப்பட்டபோது மதுரை போஸ்ட் ஆபிசில் குண்டு வெடிக்க வைத்தவர் இந்த ஜெயப்பெருமாள் என்பதை அறிவாயா? அந்த வழக்கில் ஜெயப்பெருமாளுக்காக ஆஜராகி வாதாடியவர் இன்றைய அமைச்சர் பிடிஆர் அவர்களின் தந்தை பழனிவேல் ராஜன் என்பதை அறிவாயா? இந்த வழக்கில் அந்த ஜெயப்பெருமாளுக்கு நீதிமன்றத்தில் ஆயள் தண்டனை வழங்கப்பட்டது அறிவாயா? மிக முக்கிய விடயம், இந்த திமுக ஜெயப்பெருமாளுக்கு உதவியதாக காhத்திக் என்ற ஈழத் தமிழன் ஆயுள் தண்டனை அனுபவித்தான் என்பதை அறிவாயா? இதைவிட, கலைஞர் என்னை "விலைபோகாத ஈழத் தமிழன்" என்று ஏன் பாராட்டினார் என்பதையாவது அறிவாயா?

இவர்கள் இருவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்

இவர்கள் இருவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஒருவர் கலைஞர். அவர் வீட்டில் தெலுங்கு மொழி பேசுபவர்கள் என்று கூறுகின்றனர். இன்னொருவர் தோழர் தமிழரசன். அவர் வீட்டிலும் தமிழ் பேசுபவர்கள் என்கின்றனர். கலைஞர் ரயில் வராத தண்டவாளத்தில் படுத்து போராட்டம் என்று தமிழ் மக்களை ஏமாற்றியவர் தமிழரசன் தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு கோரி ரயில் பாலத்திற்கு குண்டு வைத்து போராடியவர். ஈழத்தில் இருந்து இந்திய ராணுவத்தை வெளியேறுமாறு கோரி டிவி பெட்டியை உடைத்தவர் கலைஞர் இந்திய ராணுவத்தை வெளியேறுமாறு கோரி டிவி டவருக்கு வெடி குண்டு வைத்தவர் தோழர் மாறன். ஆனால் கலைஞர் “உலக தமிழின தலைவர்” என போற்றுபவர்கள் தோழர் தமிழரசன், மாறன் போன்றவர்களை “பயங்கரவாதிகள்” என தூற்றுகின்றனர். இந்த நிலை என்று மாறும். தமிழினம் எப்போது உண்மையை உணரும்?

திக 1944 ல் , திமுக 1949 ல் தொடங்கப்படுகிறது.

திக 1944 ல் , திமுக 1949 ல் தொடங்கப்படுகிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1938 ல் ஈழத்து சிவானந்த அடிகளால் தொடங்கப்படுகிறது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வைத்து பதவியை அனுபவிக்கும் திமுகஉபிஸ் கூறுகிறார்கள் “ ஈழத்து அகதிநாயே வெளியேறு “ என்று. என்னே கொடுமை இது தமிழனுக்கு?

அன்று பார்வதி அம்மாள் சிகிச்சை

அன்று பார்வதி அம்மாள் சிகிச்சை பெற வந்தபோது வயதானவர் என்றுகூட பார்க்காமல் இரக்கமின்றி திருப்பி அனுப்பியது கலைஞர் அரசு. இன்று கலைஞர் மகன் ஸ்டாலின் அரசு சாந்தனின் தாயாருக்கு இரங்க மறுக்கிறது. இறப்பதற்கு முன் தன் மகன் சாந்தனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று 33 வருடங்களாக காத்து இருக்கிறார் அத் தாய். சாந்தன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாந்தன் மரணமடைந்தால் அவர் உடலையாவது தாயாரிடம் அனுப்பி வைக்குமா தமிழக அரசு? திமுக அரசு இரங்க மறுப்பது ஆச்சரியம் இல்லை. ஆனால் கூட்டணியில் இருக்கும் வைகோ, திருமாவளவன், வேல்முருகன் போன்றவர்கள்கூடவா இரங்க மறுக்கின்றனர்?

விக்கட் அவுட்?

விக்கட் அவுட்? குறிப்பு – நன்றாக கவனியுங்கள். நான் முற்றுபுள்ளி போடவில்லை. கேள்விக்குறிதான் போட்டுள்ளேன். எனவே ஆர்வ மிகுதியில் அவசரப்பட்டு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துவிடாதீர்கள்.😂 இவர் யார் என்று தெரியாதவர்களுக்கு ஒரு சிறு டிப்ஸ் இவர்தான் தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் என்று சொல்லிக் கொண்டு திரிந்தவர். புத்தர் அன்பை போதித்தவர் இவர் வன்மத்தை கக்கியவர் இனியாவது புத்தர் போதனைகளை பின்பற்றட்டும்.

கலைஞர் தத்தெடுத்து வளர்த்த அகதிச்சிறுவன்

கலைஞர் தத்தெடுத்து வளர்த்த அகதிச்சிறுவன் மணி எங்கே என்ற என் பதிவில் “அண்ணன் கௌத்தூர் மணி பற்றி நாக்பூர் தம்ளர் கட்சிக்காரர் தெரிய வாய்ப்பில்லை” என்று எழுதியுள்ளார் ஒரு உடன்பிறப்பு. அகதிச் சிறுவன் மணிக்கும் கௌத்தூர் மணிக்கும்கூட வித்தியாசம் தெரியாத நிலையில் இருக்கும் உடன்பிறப்பு. சிறுவன் மணி ஒரு ஈழத் தமிழன். நானும் ஒரு ஈழத் தமிழன். ஒரு ஈழத் தமிழன் காணவில்லை என்றால் இன்னொரு ஈழத் தமிழன்தானே கேட்க வேண்டும். அவ்வாறு கலைஞர் தத்தெடுத்த அந்த சிறுவண் மணி எங்கே என்று கேட்டால் கௌத்தூர் மணி பற்றி எனக்கு தெரியாது என்கிறார். நான் கௌத்தூர் மணியுடன் சென்னை சிறையில் ஒன்றாக இருந்ததை இந்த உடன்பிறப்பு அறியவில்லை போலும். அதுகூடப் பரவாயில்லை, ஈழத் தமிழனான என்னை நாக்பூர் தம்ளர் கட்சிக்காரன் என்று முத்திரை குத்தல் வேற. பெரியார்தான் தமிழ்நாட்டிற்கு கல்வியறிவு தந்தார் என்கிறார்கள். இதுதானா பெரியார் தந்த திராவிட அறிவு? விளங்கிடும்!

முத்துக்குமாரா , எங்களை மன்னித்துவிடு!

• முத்துக்குமாரா , எங்களை மன்னித்துவிடு! “உன் மூச்சுக்காற்று சோனியாவை எரிக்கும்” என்று பாட்டு பாடியவர்கள் , மதவாத மோடியை ஒழிக்க வேண்டும் எனக் கூறிக்கொண்டு “அன்னை சோனியாவே வருக” என்று இப்போது பாடுகின்றனர். என் பிணம்கூட காங்கிரசுடன் கூட்டணி வைக்காது என்று கூறியவர் இப்போது ராகுல் காந்தியின் தலைமையில் தேசம் காக்க மாநாடு நடத்துகிறார். காங்கிரசையும் திமுகவையும் எதிர்த்து நீ உன் உயிரை விட்டாய். உன் உடலை தூக்கி சுமந்தவர்கள் இப்போது அதே காங்கிரசையும் திமுகவையும் தூக்கி சுமக்க ஆரம்பித்து விட்டார்கள். சோனியாவின் கோர முகத்தை அம்பலப்படுத்த நீ உன் முகத்தை தீயினில் எரித்தாய். ஆனால் லண்டனில் ஈழத் தலைவர் ஒருவர் அன்னை சோனியாவின் முகத்தில் இரக்கத்தை கண்டேன் என்று அறிக்கை விடுகிறார். மன்னித்துவிடு முத்துக்குமாரா, உன்னை நினைவு கூரக்கூட எமக்கு நேரம் இல்லை. அஜித்தின் விடாமுயற்சி எப்போது வரும்? அது விஜய்யின் லியோ பட வசூலை உடைக்குமா என்பதே எமக்கு இப்போ முக்கிய பிரச்சனை. குறிப்பு – 29.01.2024 யன்று முத்துக்குமாரின் நினைவு தினம் ஆகும்.

வயதான தாயின் இந்த அழுகுரலை

வயதான தாயின் இந்த அழுகுரலை ஒருமுறை கேளுங்கள் முடியுமாயின் அவருக்காக உங்கள் குரல் ஒருமுறை ஒலிக்கட்டும்

ஒரே கம்பனி

ஒரே கம்பனி கர்நாடகாவில் உள்ள தன் கடை பெயர் பலகை கன்னடத்தில் வைக்கின்றது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தன் கடை பெயர் பலகை தமிழ் வைக்க மறுக்கிறது இதற்கு என்ன காரணம்? கர்நாடகாவில் இருப்பது கன்னட முதலமைச்சர் . தமிழ்நாட்டில் இருப்பது தமிழ் முதலமைச்சர் இல்லை என்கிறார்கள். இதுதான் காரணமா? இனி இதற்கும் போராடினால்தான் தீர்வு வருமா? இதற்காக ஒரு 30 தமிழ் உணர்வாளர்கள் போராடி வழக்கு வாங்கணுமா?

தமிழக முதல்வர் அவர்களே!

தமிழக முதல்வர் அவர்களே! சாந்தனுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர் உயிரைக் காப்பாற்றுங்கள் சாந்தன் உட்பட சிறப்புமுகாமில் உள்ள அகதிகளை விடுதலை செய்யுங்கள்.

இணைவோம் ஒன்றாய்

இணைவோம் ஒன்றாய் எழுவோம் பலமாய் பெப்-4 கரிநாளாக அனுட்டிப்போம் - யாழ் பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு

அடேல் பாலசிங்கம்

அடேல் பாலசிங்கம் - பிறந்தநாள் வாழ்த்துக்கள்(30.01.24) இந்திய ராணுவம் பிடித்துவிடவெறிகொண்டு அலைந்தபோது வெள்ளைஇனத்தவர் என்பதால் மறைந்து வாழ்வதுகூட பிரச்சனையாக இருந்தது. இவரால் ஈழப்போராட்டம் பற்றி நிறைய பேச முடியும். ஆனால் ஏன் மௌனமாக இருக்கின்றார் என்று தெரியவில்லை. இவர் பேச வேண்டும்

தனியாக போராடுவதால்

தனியாக போராடுவதால் வெற்றி கிடைக்குமா என்று வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் தனியாக போராடுவதே வெற்றிதான்

ஆழ்ந்த இரங்கல்கள்!

• ஆழ்ந்த இரங்கல்கள்! சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழ் அகதி கிருஷ்ணமூர்த்தி இன்று மரணமடைந்துள்ளார். சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறப்புமுகாம் 1990ல் கலைஞர் கருணாநிதி அரசால் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது தம்மை விடுதலை செய்யுமாறு கேட்டு போராடிய அகதிகளை பிரியாணி கேட்டு போராடினார்கள் எனக்கூறி கலைஞர் உத்தரவில் பொலிஸ் தேவாரம் இரு அகதிகளை சுட்டுக்கொன்றார். அதன்பின் ஜெயா அம்மையார் ஆட்சியில் பல அகதிகள் இச் சிறப்புமுகாமில் இறந்துள்ளனர். ஆனால் இதுவரை இச் சிறப்புமுகாம் என்னும் மரணவதை முகாமை மூட தமிழக அரசு முன்வரவில்லை. வந்தாரை வாழ வைக்கும் என நம்பி தமிழ்நாட்டிற்கு வந்த ஈழ தமிழ் அகதிகளை இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழக அரசு சிறப்புமுகாமில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்போகிறது?

இதற்கு யார் பொறுப்பு?

•இதற்கு யார் பொறுப்பு? 74 வயதுடைய ஒரு அகதி தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டு சிறப்பு முகாமில் அடைககப்படுகிறார். அந்த வயதானவர் செய்த பயங்கரவாதம் என்ன? வெளிநாடு செல்வதற்காக இந்திய கடவுச்சீட்டை பெற முயன்றார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு; நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுதலை செய்துவிட்டது. ஆனாலும் தமிழக அரசு அவரை தீவிரவாதியாக சிறப்புமுகாமில் அடைத்தது. அவர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டிற்கு அதிக பட்சம் 6 மாதம் தண்டனை கிடைக்கும். ஆனால் அவர் நான்கு வருடங்களாக சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். அவர் தனக்கு வழங்கப்படக்கூடிய தண்டனை காலத்தைவிட அதிக காலத்தை கழித்துவிட்டபோதும் அவருக்கான நீதி வழங்கப்படவில்லை. அதாவது அவருக்கு நீதி மறுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் மாட்டுக்குகூட நீதி கிடைக்கும். ஆனால் ஈழ அகதிக்கு கிடைக்காது. அடைத்து வைக்கப்படுவர்களுக்குரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் இதய நோயாளியான இவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை. தன்னை மருத்துவமனைக்கு அனுப்புமாறு அவர் பல தடவை கேட்டிருக்கிறார். ஆனால் அவர் அனுப்பப்படவில்லை. இறுதியாக தனது மாத்திரைகள் முடிந்துவிட்டன. அதையாவது வாங்கித்தரும்படி கெஞ்சியிருக்கிறார். அப்பவும் அரசு இரங்கவில்லை. அவர் இறந்துவிட்டார். நடந்த விடயங்களை குறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளுமாறு அங்குள்ள அகதிகள் மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்துள்ளனர். இந்த அகதியின் மரணத்திற்கு தமிழக அரசே பொறுப்பு. தமிழக முதல்வர் ஸ்டாலினே பொறுப்பு. இது குறித்து உச்சநீதிமன்றம் தானே முன்வந்து விசாரணை செய்ய வேண்டும். செய்யுமா?

முதல் வரியை மட்டும் எழுத முடிந்துவிட்டால்

முதல் வரியை மட்டும் எழுத முடிந்துவிட்டால் மற்றவை தாமாகவே வந்து பக்கத்தை நிரப்பிவிடும். போராட்டத்தில் ஒருபொறியை மூட்டிவிட்டால் அது பெரு நெருப்பாக மாறிவிடும். அந்த ஒரு பொறியை சீமான் மூட்டிவிடுவாரா? படம்- “புரட்சித் தீ” என்ற தலைப்பில் கோவில்பட்டியில் நடைபெறும் கூட்டம்

சிறப்புமுகாம் என்பது

சிறப்புமுகாம் என்பது 3(2)E சட்டப்படி ஒரு வெளிநாட்டவரின் நடமாட்டத்தை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்படுத்தும் முகாம் ஆகும். நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதேயொழிய மற்றும்படி சாதாரண மக்களுக்குரிய அனைத்து உரிமைகளும் சலுகைகளும் அவர்களுக்கு உண்டு. ஆனால் நடைமுறையில் இச் சிறப்புமுகாம் என்பது சிறையிலும் விடக் கொடிய சித்திரவதை முகாமாகவே இயக்கப்படுகிறது. அதாவது சிறையில் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு வழங்கும் சலுகைகள் , உரிமைகள்கூட இச் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கு வழங்கப்படுவதில்லை. 1990ல் தனது பதவியைக் காப்பாற்றுவதற்காக இத்தகையை சிறப்புமுகாமை உருவாக்கி அதில் அகதிகளை அடைத்தவர் கலைஞர் கருணாநிதி. இன்று அவரது மகன் ஸ்டாலின் ஆட்சியிலும் இந்த சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம் கொடுமைகள் தொடர்கின்றன. இதற்கு ஒரு முடிவு எப்போது ஏற்படும்? குறிப்பு- இச் சிறப்புமுகாம் பற்றி அறிய விரும்புவோர் கீழ் உள்ள இணைப்பில் நான் எழுதிய நூலை வாசிக்கலாம்.

சாந்தனுக்காக பாராளுமன்ற

சாந்தனுக்காக பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குரல் கொடுத்துள்ளார் சாந்தனுக்காக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குரல் கொடுத்துள்ளார் சாந்தனுக்காக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் குரல் கொடுத்துள்ளார் சாந்தனுக்காக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குரல் கொடுத்துள்ளார். சாந்தனுக்காக ஈழத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். தமிழக முதல்வர், இந்த ஈழத் தமிழ் தலைவர்களின் குரலுக்கு மதிப்பு அளிப்பாரா? சாந்தனின் உயிரை காப்பாற்றுவாரா? சாந்தனை விடுதலை செய்து ஈழத்திற்கு அனுப்பி வைப்பாரா?

வடவர் நம்மவரும் இல்லை

"வடவர் நம்மவரும் இல்லை நல்லவரும் இல்லை" என்று கூறிய அறிஞர் அண்ணா ஒரு இனவெறியரா? அவர் ஒரு பாசிச வாதியா? திராவிட உடன்பிறப்புகளே பதில் தர முடியுமா?

நன்றாக ஓட்டுவோம் என

நன்றாக ஓட்டுவோம் என வாக்குறுதியளித்து குரங்குகள் காரைக் கைப்பற்றின. ஆனால் வாக்குறுதி அளித்தபடி குரங்குகளால் காரை ஓட்ட முடியவில்லை. இப்போது குரங்குகளால் ஏன் காரை ஓட்ட முடியவில்லை என்று நொந்துகொள்வதா? அல்லது குரங்குகளின் வாக்குறுதியை நம்பி குரங்குகளின் கையில் காரை ஒப்படைத்தவர்களை நொந்துகொள்வதா? குறிப்பு -இதைப் படித்ததும் உங்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.😂

இருவரும் தமிழ்நாட்டில்

இருவரும் தமிழ்நாட்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் ஒருவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இன்னொருவர் ஈழத் தமிழ் அகதி சாந்தன். அகதி என்பதால் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கிறார். உச்சநீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை மறுத்து அவரை தொடர்ந்தும் சிறையில் வைத்திருக்கிறது. உச்சநீதிமன்றம் சாந்தனை விடுதலை செய்தும்கூட அவர் ஈழத் தமிழர் என்பதால் அவரை சிறப்புமகாமில் அடைத்து வைத்திருக்கிறது தமிழக அரசு. சிறையில் இருக்கும் ஊழல் அமைச்சருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் சாந்தனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது. இங்கு ஆச்சரியம் என்னவெனில் ஊழல் அமைச்சர் செந்தில் பாலாஜிக்காக குரல் கொடுக்கும் மனிதவுரிமை அமைப்புகள், கட்சிகள், பிரமுகர்கள், பெண்ணிய அமைப்புகள் சாந்தனுக்காக குரல் கொடுக்கவில்லை. அதைவிட ஆச்சரியம் , சிறப்புமுகாமில் மருத்துவசிகிச்சை மறுக்கப்பட்டு இரு தினங்களுக்கு முன்னர் ஒரு அகதி இறந்துள்ளார். அதற்குகூட ஒரு இரங்கல் இவர்களால் தெரிவிக்க முடியவில்லை. அது ஏன்?

இனியாவது இந்திய மத்திய மாநில அரசுகள்

•இனியாவது இந்திய மத்திய மாநில அரசுகள் இரங்குமா? சாந்தன் இலங்கை பிரஜை என்பதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டியிருப்பதால் சாந்தனை அனுப்ப முடியவில்லை என இந்திய அரசு கூறிவருகின்றது. சாந்தன் ஒரு இலங்கை பிரஜை என்று இந்திய அரசு குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டது. அதை ஏற்று நீதிமன்றமும் அவருக்கு தண்டனை வழங்கியது. அவர் 33 வருடம் தண்டனை அனுபவித்து வெளிவந்த பின்பு இப்போது அவர் இலங்கை பிரஜை என்று இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய அரசு கூறுகின்றது. அவரிடம் இலங்கை கடவுச்சீட்டு உள்ளது. அவர் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு இது போதுமானது. இப்போது இலங்கை வெளிவிகார அமைச்சர் சாந்தன் நாடு திரும்ப தேவையான நடவடிக்கைகளை தூதரகம் எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கை அரசுகூட இரங்கியுள்ளது. இனியாவது இந்திய அரசு இரங்குமா? அல்லது ஏதும் சாக்குகள்கூறி தொடர்ந்தும் அடைத்து வைத்திருக்கப் போகின்றார்களா?

வெறும் அறிக்கை மட்டும்

வெறும் அறிக்கை மட்டும் விட்டிட்டு மௌனமாக கடந்து போயிருக்கலாம். ஆனால் அறிக்கை விட்டது மட்டுமன்றி இப்போது சிறப்புமுகாமை மூடுமாறு கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறார். ஏற்கனவே சிறப்புமுகாமுக்காக போராடி பல நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குகள், நெருக்கடிகள். இருந்தும் மீண்டும் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்காக போராட முன்வந்துள்ளார். இவர்களுடைய ஆர்ப்பாட்டம் சிறப்புமுகாம் மூடி அங்குள்ள அகதிகள் விடுதலை பெற வழி வகுக்கட்டும்.

Monday, January 22, 2024

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023ம் ஆண்டு முடிந்து 2024 ம் ஆண்டு பிறக்கிறது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொரு வருடமும் பிறக்கும்போது இந்த வருடமாவது ஒரு வழி பிறக்கும் என நம்புகிறோம். ஆனால் மேலும் மேலும் நெருக்கடிகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவை நாம் தொடர்ந்தும் போராட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை எமக்கு எற்படுத்துகின்றன. வீழ்வது கேவலம் அல்ல மாறாக வீழ்ந்து கிடப்பதே கேவலம். மீண்டும் எழுந்து நிற்பதையே வரலாறு பதிவு செய்யும். மீண்டும் எழுந்து நிற்போம்! இதுவே இந்த வருடத்தின் வரலாற்று கடமையாக இருக்க வேண்டும்.

மலரும் இந்த புத்தாண்டிலாவது

மலரும் இந்த புத்தாண்டிலாவது இறப்பதற்கு முன் தன் மகனை பார்க்க வேண்டும் என்ற இந்த தாயின் விருப்பம் நிறைவேறுமா? இவர் மகன் சாந்தனின் 34 வருட சிறை வாழ்வு இந்த வருடமாவது முடிவுக்கு வருமா? திராவிட முதல்வர் இரக்கம் காட்ட மாட்டாரா? சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்யமாட்டாரா?

ஆழ்ந்த இரங்கல்கள்

• ஆழ்ந்த இரங்கல்கள் இவர் நடிகர்தான். ஆனால் ஈழத் தமிழர் மீதான இவரது அனுதாபம் நடிப்பு இல்லை. ஈழத் தமிழருக்கு ஆதரவாக இவர் உண்ணாவிரதம் இருந்தபோது அதனை நேரில் பார்த்திருக்கிறேன். இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர்கூட ஈழத் தமிழ் நடிகர் போண்டா மணி குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கினார் எனக் கூறுகின்றனர். இவர் ஒரு நல்ல மனிதர்தான். ஆனால் சிறந்த அரசியல் தலைவர் இல்லை. இவரை பல மக்கள் விரும்பினார்கள் என்பதற்கு இவரது இறுதி ஊர்வலம் சாட்சி. ஆனால் இவரது அரசியலை அந்த மக்கள் விரும்பவில்லை என்பதற்கு இவரது தேர்தல் தோல்வி சாட்சி. இவரது தோல்வி இனி அரசியலுக்கு வர விரும்பும் நடிகர்களுக்கு ஒரு நல்ல படிப்பினை. தோழர் தமிழரசன் இறந்தபோது அவரைப் பற்றி ஒரு படம் எடுக்க இவர் விரும்புவதாகவும் தோழர் தமிழரசன் பற்றிய சம்பவங்களை கூறு முடியுமா என ஒருவர் என்னிடம் கேட்டார். தோழர் தமிழரசன் இந்திய அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி தமிழ்நாடு விடுதலைக்காக போராடியவர். அவருடைய கதையை இவரால் எடுக்க முடியாது. எடுத்தாலும் தணிக்கை குழு அனுமதிக்காது. சிதைத்து விடுவார்கள் என்று கூறி நான் மறுத்துவிட்டேன்.

கேப்பாபுலவில் தன் சொந்த நிலம் கேட்டு

கேப்பாபுலவில் தன் சொந்த நிலம் கேட்டு வீதியில் படுத்து போராடிய குழந்தைக்கு இந்த புத்தாண்டிலாவது அதன் சொந்த நிலம் கிடைக்குமா? இந்துத் தமிழீழம் கேட்டால் இந்தியா உதவும் என்பவர்கள், அண்ணாமலையை அழைத்து லண்டனில் உறவுப் பாலம் கட்டுபவர்கள், சிங்கள புத்த பிக்குகளுடன் சேர்ந்து இமயமலைப் பிரகடனம் செய்பவர்கள், • இடம்பெயர்ந்தவர்கள் மீள் குடியேற்றம் செய்ய • தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்ய • காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டு பிடிக்க இந்த புத்தாண்டிலாவது குரல் கொடுப்பார்களா? குறிப்பு – குரல் கொடுப்பார்கள் என்று நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை.

எதிரி எவ்வளவு பெரியவர் என்பது முக்கியமல்ல,

எதிரி எவ்வளவு பெரியவர் என்பது முக்கியமல்ல, எதிர்த்து நிற்கும் திறன் எவ்வளவு பெரியது என்பதே முக்கியமானது. கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய 44 பேரை எரித்துகொலை செய்த நாயுடுவை கொன்ற அமல்ராஜ்பாண்டியன்.

02.01.2006 திருகோணமலையில்

02.01.2006 திருகோணமலையில் சிங்கள படையால் 5 தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்டனர் மாணவரின் தந்தை மருத்துவர் மனோகரன் ஜ.நா மனித உரிமை சபையில் 15.02.2013 வாக்குமூலம் அளித்துள்ளார் ஆனாலும் இதுவரை அந்த மாணவர்களுக்குரிய நீதி வழங்கப்படவில்லை. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும்.

வெற்றியைவிட பெரிசாக ஒன்று இருக்கிறது என்றால்

வெற்றியைவிட பெரிசாக ஒன்று இருக்கிறது என்றால் அது எதிரிகளுக்கு நாம் கொடுக்கிற நடுக்கம்தான்! அவ்வாறு நடுக்கம் கொடுத்தவர்களில் ஒருவர், வசந்தன் (மில்லர்) அவர்களின் பிறந்த தினம் இன்று.

செய்தி – அரசு தீர்வு வழங்கவில்லை என்றால்

செய்தி – அரசு தீர்வு வழங்கவில்லை என்றால் நாம் இந்த ஆண்டில் தீர்க்கமான முடிவு எடுப்போம் - சம்பந்தர் ஐயா

மறப்பது தலைவர்கள் வழமை

•மறப்பது தலைவர்கள் வழமை நினைவூட்ட வேண்டியது எமது கடமை தமிழரசுக்கட்சியின் தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பேன் என சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முருகனின் விடுதலைக்கு சிறீதரன் குரல் கொடுப்பாரா? ஏனெனில் தன் மகன் முருகன் விடுதலைக்கு குரல் கொடுக்கும்படி இதே சிறீதரன் அவர்களிடமும் சம்பந்தர் ஐயாவிடமும் முருகனின் தாயார் நேரில் சென்று கேட்டிருந்தார். ஆனால் சிறீதரனோ அல்லது சம்பந்தர் ஐயாவோ இதுவரை முருகன் விடுதலைக்காக குரல் கொடுக்கவில்லை. சிறீதரன் இரக்கம் காட்டுவாரா? முருகன் 34 வருட சிறைவாழ்வில் இருந்து விடுதலை பெற குரல் கொடுப்பாரா?

உழைப்பு தனிமனிதனுடைய சுய அந்நியமாதலாக

உழைப்பு தனிமனிதனுடைய சுய அந்நியமாதலாக இல்லாமல், சுய உறுதிப்படுத்தலாக இருக்க வேண்டும். வெளியிலிருந்து வருகின்ற நிர்ப்பந்தம் உழைப்புக்குத் தூண்டுதலாக இருக்கக் கூடாது. படைக்க வேண்டும் என்ற ஆழமான உள்முனைப்பு உழைப்புக்குத் தூண்டுதலாக இருக்க வேண்டும். முதலாளித்துவம் நிறைய போர்வைகளைப் போர்த்திக் கொண்டு வருகிறது. ஜனநாயகப் போர்வை, பாராளுமன்றப் போர்வை இப்படி என்னென்ன வழிகள் இருக்கின்றதோ, அத்தனைக்குள்ளும் தன்னை ஒளித்துக் கொண்டு வருகிறது. இந்தப் போர்வைகளையெல்லாம் நீக்கி, முதலாளித்துவத்தை அம்மணமாக்கிக் காட்டுகிற வேலைதான் புரட்சியாளர்களின் கடமையாக இருக்கிறது.

இவர்கள் ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்திற்கு

இவர்கள் ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்திற்கு மேலாக வாரத்தில் ஏழு நாட்களும் உழைக்கிறார்கள். ஆனாலும் இவர்கள் தலைமீது எப்படி 58 பில்லியன் டாலர் கடன் வந்தது? பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 3 லட்சம் ரூபா கடனுடன் பிறக்கிறது என்கிறீர்களே, அப்படியென்றால் அந்த பணம் எல்லாம் எங்கேயடா போயிற்று?

நான் தோற்று போகலாம்.

நான் தோற்று போகலாம். அதன் பொருள் வெற்றி சாத்தியமற்றது என்பதல்ல” - சே தமிழ்த்தேசியத்திற்கு ராஜபாட்டை எதுவும் இல்லை. கடினமான பாதையில் பயணிக்க அஞ்சாதவர்களே அதன் ஒளிமயமான விடுதலையை அடைய முடியும்

வரிகள் அற்ற அரசு சாத்தியமா?

வரிகள் அற்ற அரசு சாத்தியமா? அரசு இருக்கும்வரை வரியும் இருக்கும். எனவே வரிகள் அற்ற அரசு சாத்தியம் இல்லை என்று கூறுகின்றனர். சரி. அப்படியென்றால் அரசு அற்ற ஒரு சமூகம் குறித்து சிந்தித்தால் என்ன என்று கேட்டால் அதை ஏதோ பையித்தியக்கார சிந்தனைபோல் பார்க்கின்றனர். ஆனால் காரல் மாக்ஸ் கம்யுனிச சமூகத்தில் அரசு வாடி உதிர்ந்துவிடும் என்று கூறியிருக்கிறார். எனவே அரசு அற்ற ஒரு சமூகத்தை நாம் இப்போது சிந்திக்க முடியாது என்றாலும் குறைந்த பட்சம் வரிகள் குறைவான ஒரு அரசையாவது சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இன்று உலகில் அதிகளவு வரி அறவிடும் நாடுகளாக பெரும்பாலும் ஜரோப்பிய நாடுகள் இருக்கின்றன. உதாரணமாக பிரிட்டனில் அறவிடப்படும் வரிகளாக இவைகள் இருக்கின்றன. List of UK Taxes • INCOME TAX • CORPORATION TAX • VALUE ADDED TAX • NATIONAL INSURANCE CONTRIBUTIONS • CAPITAL GAINS TAX • INHERITANCE TAX • BUSINESS RATES • COUNCIL TAX • STAMP DUTY • ALCOHOL DUTY • HYDROCARBON OILS DUTY • TOBACCO DUTY • CUSTOMS DUTY • PETROLEUM REVENUE TAX • MOTOR VEHICLE DUTY • AIR PASSENGER DUTY • INSURANCE PREMIUM TAX • LANDFILL TAX • OIL ROYALTY • AGRICULTURAL LEVY • CLIMATE CHANGE LEVY • AGGREGATES LEVY இவ்வாறு பல்வேறு வடிவங்களில் சுமார் 32% வரியாக மக்களிடமிருந்து அறவிடப்படுகிறது . அதாவது ஒருவர் 100 ரூபா உழைத்தால் அவரிடமிருந்து அண்ணளவாக 32ரூபாவை வரியாக அரசு பறித்துக் கொள்கிறது என்கிறார்கள். இந்தளவு வரியை அறவிடும் அரசானது இதில் எந்தளனவு பணத்தை மக்களுக்கு செலவு செய்கிறது என்பது பற்றிய விபரங்கள் மக்களுக்கு தெரியப்படுத்துவதில்லை. உதாரணமாக அரசானது 100 ரூபாவை மக்களுக்கு ஒதுக்கினால் இது மக்களை சென்றடைய அரசுக்கு 65 ரூபா செலவாகிறது என்கிறார்கள். எனவேதான் இந்த மலை விழுங்கி மகாதேவனாகிய அரசை இல்லாமற் செய்ய வேண்டியது பற்றி சிந்திக்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். மக்களுக்கு அபிவிருத்தி செய்ய பணம் இல்லை என்று அரசு கூறுகிறது. மக்களுக்கு வழங்கி வந்த உதவிகளை படிப்படியாக குறைத்து வருகின்றது. ஆனால் அதேவேளை மக்களின் வரிப் பணத்தில் மகாராணியின் குடும்பத்தை அரசு பேணி வருகின்றது. எனவேதான் இனி தான் மக்களின் வரிப் பணத்தில் வாழப்போவதில்லை என்று இளவரசர் ஹரி அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இலங்கையிலும் மக்களின் வரிப்பணத்தில்தான் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட கோத்தபாயா பேணப்படுகிறார். கோத்தபாயாவுக்கு செலவிடப்படும் மக்களின் வரிப் பணம் நிறுத்தப்படுமா?

அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக

அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக ஜான்சி ராணிக்கு முன்னரே போராடியவர் வேலுநாச்சியார். ஆனால் இந்திய ஆட்சியாளர் ஜான்சிராணிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் வேலு நாச்சியாருக்கு கொடுப்பதில்லை. வேலுநாச்சியார் தமிழர் என்பதாலா?

உங்கள் மகள் எப்படி மருத்துவ கல்வி பெற்றார்

உங்கள் மகள் எப்படி மருத்துவ கல்வி பெற்றார் என்ற கேள்விக்கு, பிரபாகரன் மகள் மருத்துவ கல்வி பெற்றதுபோல் தன் மகள் பெற்றாள் என்று காசி ஆனந்தன் கூறியுள்ளார். இந்தியாவில் ஈழ அகதிகளுக்கு மருத்துவ கல்வி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், உங்கள் இரு மகள்களுக்கும் அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதே கேள்வி. அக் கேள்விக்குரிய பதிலை அளிக்காமல் தேவையில்லாமல் பிரபாகரன் மகளை இழுத்துள்ளார். இப்போது புரிகிறதா ஏன் இவர் போலி துவாரகாவை அழைத்து வருகிறார் என்று?

மன்னராட்சியை விட மக்களாட்சி சிறந்தது.

மன்னராட்சியை விட மக்களாட்சி சிறந்தது. மக்களாட்சியில் இருந்துகொண்டு மன்னராட்சியை புகழ்வது தவறுதான். ஆனால் அடிமைப்பட்டு கிடக்கும் ஒரு இனத்தை எழுச்சி பெற வைப்பதற்கு ஒரு காலத்தில் நாம் நம்மை ஆண்டோம் எனக் காட்டுவதற்கு மன்னராட்சியை உதாரணம் கூறுவது தவிர்க்க முடியாதது. ஜப்பான் ஆதிக்கத்தின் கீழ் அடிமையாக கிடந்த சீன மக்களை எழுச்சி பெற வைப்பதற்கு மாவோ சீன மன்னர்களின் ஆட்சிக்காலங்களை எடுத்துக் கூறியுள்ளார். அதுவும் மாவோ சரித்திர ஆசிரியர் என்பதால் புகழ் பெற்ற மன்னர் ஆட்சிகளை எடுத்துக்கூறி சீன மக்களை புரட்சிக்கு திரட்டினார். ஆனால் இந்தியாவில் மாவோயிசத்தை பின்பற்றுவதாக கூறும் கம்யுனிஸ்டுகள் இமயமலை மண் திட்டு என்றும் அதில் கல் எடுத்து சிலை வடித்தான் தமிழ் மன்னன் என்பது பொய் என்று கூறுகின்றனர். அதுவும் இன்னொருவர் இந்தோனிசியாவில் “சோழர்” என்பது கொள்ளையர் என்று அர்த்தம் என்று கூறுகின்றார். இவர்கள் மன்னராட்சியை இகழ்வதற்காக இதனை கூறவில்லை. மாறாக தமிழ் மக்கள் எழுச்சி பெறாமல் தொடர்ந்தும் அடிமையாகவே கிடக்க வேண்டும் என்பதற்காகவே கூறுகின்றனர். அதனால்தான் ஆண்ட இனம் மீண்டும் ஆள நினைப்பதில் தவறு என்ன என்று கேட்டால் பேண்ட இனம் மீண்டும் பேள நினைக்கிறது என திமிராக கிண்டல் செய்கின்றனர்.

இவருக்கு தான் பெரிய இலக்கியவாதி என்று நினைப்பு

இவருக்கு தான் பெரிய இலக்கியவாதி என்று நினைப்பு தமிழ் கடைகாரர் இவருக்கு இலவசமாக தோசை மாவு அரைத்துக் கொடுக்கவில்லை என்ற கோபம் முதலில் ஈழத் தமிழருக்கு வரலாறு இல்லை என்றார் இப்ப தமிழக தமிழருக்கே வரலாறு இல்லை என்கிறார். எங்கிருந்து வாராறாங்க இவங்கள் எல்லாம்?

பிரபாகரன் மீது கை வைத்தால்

பிரபாகரன் மீது கை வைத்தால் தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடும் என்றார். ரத்த ஆறு ஓடாதது மட்டுமல்ல முள்ளிவாய்க்காலில் இருந்து தொடர்பு கொள்ள முயன்றபோது போனை ஆவ் செய்துவிட்டு உறங்கியவர். இப்போது பெரியார் சிலையை அவமதித்தால் கை இருக்காது என்கிறார். பசி கொடுமையானதுதான். ஆனால் அது இந்தளவு கொடுமையானதா?

05.01.2000யன்று கொழும்பு வெள்ளவத்தையில்

05.01.2000யன்று கொழும்பு வெள்ளவத்தையில் இராமகிருஸ்ணா வீதியில் உள்ள லாட்ஜில் நான் தங்கியிருந்தவேளை வீதியில் யாரையோ சுட்டிக் கொன்றுள்ளார்கள் என்று கூறினார்கள். ஓடிப்போய் பார்த்தபோது குமார் பொன்னம்பலம் அவர்கள் சுடப்பட்டிருந்தார். காருக்குள் டிறைவர் சீட்டில் சிறிது சாய்ந்து உறங்குவதுபோல் இருந்த அவரது உருவம் இன்றும் என் நினைவில் உள்ளது. நீலன் திருச்செல்வம் கொல்லப்பட்டதால் ஆத்திரமுற்ற ஜனாதிபதி சந்திரிக்கா உத்தரவில் குமார் பொன்னம்பலம் கொல்லப்பட்டதாக அப்போது பேசப்பட்டது. அது எந்தளவுக்கு உண்மை எனறு தெரியாது. ஆனால் இக் கொலையில் மொரட்டுவ தாதா ஒருவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரும் கொல்லப்பட்டுவிட்டார். குமார் பொன்னம்பலம் அவர்களின் கொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. இனியும் கிடைக்குமா என்று தெரியவில்லை. குமார் பொன்னம்பலம் அவர்கள் அந்த நேரம் அந்த இடத்திற்கு ஏன் வந்தார் என்ற என் கேள்விக்கும் இதுவரை விடை கிடைக்கவில்லை. தலைநகரில் இருந்துகொண்டு தமிழினத்திற்காக குரல் கொடுத்தவர். ஆழ்ந்த இரங்கல்கள்.

இருவரும் பெண்கள்

இருவரும் பெண்கள் இருவரும் ஈழத் தமிழர்கள் ஒருவர் இந்திய தொலைக்காட்சி நடத்திய பாட்டுப்போட்டியில் பங்குபற்றி பரிசு பெற்றவர். இன்னொருவர் இந்தோனிசியாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி பதக்கம் பெற்றவர். இருவரும் சாதனையாளர்கள்தான். ஆனால் பாட்டுப் போட்டியில் பெற்ற பரிசைவிட வயதானவர்களுக்கான ஓட்டப்போட்டியில் நாட்டுக்காக பெற்ற பதக்கம் மதிப்பு மிக்கது. ஆனால் ஜனாதிபதியோ பாட்டுப்போட்டியில் பரிசு பெற்றவரை பாராட்டியதுபோன்று நாட்டுக்காக ஓட்டப்போட்டியில் பதக்கம் பெற்றவரை பாராட்டவில்லை. ஏனெனில் இதுதான் மீடியா பவர். ஒருவேளை ஓட்டப்போட்டியில் பதக்கம் பெற்றவர் மீடியாக்களால் புகழப்பட்டிருந்தால் ஜனாதிபதி அவருடன் சேர்ந்து போட்டோ பிடித்திருப்பாரோ?

ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கலைஞர் பெயர் வைப்பது தவறுதான்.

ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கலைஞர் பெயர் வைப்பது தவறுதான். ஆனால் அதற்காக அவர் வந்த ரயில் கழிப்பறைக்கு பெயர் வையுங்கள் என்று எழுதுவது ரொம்ப ஓவரடா. என்ன இருந்தாலும் தமிழ்நாட்டை ஐந்துமுறை ஆண்ட தலைவரடா அவர். 😂😂

சிங்கள ஜனாதிபதியின் இரட்டை முகம்?

•சிங்கள ஜனாதிபதியின் இரட்டை முகம்? ஒருபுறம் ஜனாதிபதி ரணில் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தன் மாமாவை நினைத்து கண்டால் வரச்சொல்லுங்கள் என்று பாட்டு பாடிய சிறுமியை வாழ்த்தி பாராட்டுகிறார் மறுபுறம் ஜனாதிபதி ரணில் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இருவரை தாக்கி கைது செய்கிறார். இதுதானா சிங்கள ஜனாதிபதி ரணிலின் உண்மை முகம்?

லியோ படத்திற்கு உதயநிதி கொடுத்த நெருக்கடிக்கு

லியோ படத்திற்கு உதயநிதி கொடுத்த நெருக்கடிக்கு இப்படி பழி வாங்கிறாரா நடிகர் விஜய்? அடுத்த முதல்வர் கனவில் இருக்கும் உதயநிதி இதை தாங்குவாரா? குடும்பத்திற்குள் குழப்பம் உண்டாக்குவது நியாயமா விஜய் சார்? பத்த வச்சிட்டியே பரட்டை ! 😂

தமிழன் - 40 வருடமாக அகதியாக இருக்கும்

தமிழன் - 40 வருடமாக அகதியாக இருக்கும் ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை வழங்க வழி காண்பீர்களா? தமிழக திராவிட முதல்வர் ஸ்டாலின் - பொங்கலுக்கு அகதிகளுக்கு ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் தமிழன் - ஈழத் தமிழ் அகதிகள் மருத்துவ கல்வி பெற வழி செய்வீர்களா? தமிழக திராவிட முதல்வர் ஸ்டாலின் - பொங்கலுக்கு அகதிகளுக்கும் ஒரு கிலோ பச்சரிசி வழங்கப்படும். தமிழன் - உங்கள் அப்பா கலைஞர் ஆரம்பித்த சிறப்புமுகாமை மூடி அதில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்வீர்களா? தமிழக திராவிட முதல்வர் ஸ்டாலின் - பொங்கலுக்கு அகதிகளுக்கு ஒரு கரும்பு இலவசமாக வழங்கப்படும். தமிழன் - ?????

வருடம் முழுவதும் திட்டிவிட்டு

வருடம் முழுவதும் திட்டிவிட்டு பிறந்தநாள் அன்று வாழ்த்துவது, வாழ்நாள் பூராவும் இனத்திற்கு தீங்கிழைத்தவர் இறந்தவுடன் அவருக்காக இரங்கல் தெரிவிப்பது, இவையாவும் அரசியல் நாகரீகம் என்று கற்பிக்கப்படுகின்றது. இதுதான் அரசியல் நாகரீகம் என்றால், முள்ளிவாய்க்காலில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களின் படுகொலையில் இவரின் பங்கையும் கூறி வாழ்த்துங்கள் கூடவே, மகிந்த ராஜபக்சாவின் ரத்தம் தோய்ந்த கரங்களை குலுக்கி பரிசில் பெற்றதையும் கூறி வாழ்த்திவிடுங்கள்.

மராட்டிய நடிகர் ரஜனிக்கு தமிழ்

மராட்டிய நடிகர் ரஜனிக்கு தமிழ் படிக்கத் தெரியாது என்கிறார்கள் கலைஞர் தமிழைத் தவிர வேறு மொழியில் எழுதியதில்லை என்கிறார்கள். அப்படியிருக்க , கலைஞரின் எந்த எழுத்து ரஜனியின் கண்களில் இருந்து நெருப்பையும் தண்ணீரையும் வரவழைத்திருக்கும்? இப்பெல்லாம் நடிகர்கள் சினிமாவைவிட வெளியில்தான் அதிகம் நடிக்கிறார்கள்.

சாதனை பெண் அகிலத்திருநாயகியை பாராட்டினார் ஜனாதிபதி!

சாதனை பெண் அகிலத்திருநாயகியை பாராட்டினார் ஜனாதிபதி! பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு பல பதக்கங்களைப் பெற்ற சாதனைப் பெண் அகிலத்திருநாயகியை ஜனாதிபதி ரணில் பாராட்டியுள்ளார். பாடகி கில்மிஷாவைப் பாராட்டிய ஜனாதிபதி அகிலத்திருநாயகியை ஏன் பாராட்டவில்லை ?என்று மீடியாக்களில் குரல் எழுப்பிய அனைவருக்கும் நன்றி.

காதல்

காதல் ஓரின சேர்க்கையாளர் ஒருவர் (மம்முட்டி) தந்தையின் நிர்ப்பந்தத்தில் பெண் (ஜோதிகா) ஒருவரை திருமணம் செய்கிறார். 20 வருடங்களின் பின்னர் அப் பெண் விவாகரத்து மூலம் தன் கணவருக்கு விடுதலை பெற்று தருகிறார். சட்டம், நீதிமன்றம், அரசியல், குடும்பம், சமூகம் எப்படி இப் பிரச்சனையை அணுகுகின்றது என்பதை சிறப்பாக காட்டியிருக்கும் படம். அனைவரும் ஒருமுறை பார்க்க வேண்டிய படம்.

ஒருபுறம் தமிழரின் பாரம்பரிய மாடு

ஒருபுறம் தமிழரின் பாரம்பரிய மாடு மேய்ப்பு நிலம் பறிபோகிறது. மறுபுறம் ஈழ மண்ணில் முதன் முதலாக ஜல்லிக்கட்டு என்று விழா நடக்கிறது. மாட்டுக்காக ஜல்லிக்கட்டு விழா நடத்தும் ஆளுநர் மாடு மேயும் நிலம் பறிபோவதை தடுப்பாரா?

திருகோணமலை ராஜவந்தான் மலையில்

திருகோணமலை ராஜவந்தான் மலையில் 200 வருட பழமை வாய்ந்த பிள்ளையார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டு அதில் புத்த விகாரை கட்டப்பட்டுள்ளது. அவ் புத்த விகாரைக்காக 300 ஏக்கர் தமிழர் நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அண்ணாமலை கூறினார். ஆனால் பிரதமர் மோடியோ இந்து ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டு புத்த விகாரை கட்டும் சிங்கள அரசுக்கே கடன் கொடுத்து உதவுகிறார். இந்து தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று கூறுபவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகின்றார்கள்?

எத்தனை படங்கள்

எத்தனை படங்கள் எத்தனை கோடிகள் சம்பாத்தியம் எத்தனை பெண்களுடன் உறவுகள் அத்தனையும் அடைவதற்கு இந்தளவு தரம் தாழ்ந்து போனதில்லையே வெறும் ஒற்றை சீட்டுக்காக இப்போது இந்தளவு தாழ்ந்து போகணுமா கமல் சார்? ஊழலை ஒழிப்பேன் என்று நீங்கள் கூறியதை நம்பி உங்களுக்காக டார்ச்லைட் அடித்ததை நினைக்க அருவருப்பாக இருக்கிறது. த்தூ ….

கலைஞர் அரசியலுக்கு செல்லாமல் சினிமாவில்

கலைஞர் அரசியலுக்கு செல்லாமல் சினிமாவில் இருந்திருந்தால் எத்தனையோ சிவாஜி , எம்ஜிஆரை உருவாக்கியிருப்பார் - கலைஞர் 100 விழாவில் நடிகர் ரஜனி பேச்சு தன் மகன் முத்துவையே எம்.ஜிஆர் சிவாஜி போல் கலைஞரால் உருவாக்க முடியவில்லை. இதில எத்தனையோ எம்ஜிஆர் சிவாஜியை எப்படி உருவாக்கியிருப்பார்? பரட்டை! தண்ணியடிச்சிருக்கியா. பேசாம ஓடிப் போயிடு.

வழக்கறிஞர் நடேசன் பற்றி தோழர் சண்முகதாசன்

•வழக்கறிஞர் நடேசன் பற்றி தோழர் சண்முகதாசன் இன்றைய சந்ததியினருக்கு வழக்கறிஞர் நடசேனை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவரது மகன் வழக்கறிஞர் சத்தியேந்திரா பற்றி பலரும் அறிந்திருப்பார்கள். வழக்கறிஞர் சத்தியேந்திரா குட்டிமணி போன்றவர்களின் வழக்கில் ஆஜராகி வாதாடியவர். திம்பு பேச்சுவார்த்தையில் பங்கெடுத்தவர். இந்திய அரசு அன்டன் பாலசிங்கம், சந்திரகாசன் போன்றவர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றியபோது இவரையும் வெளியேற்றியது. இவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். தமிழ் நேஷன் (https://tamilnation.org ) இணையதளத்தை நடத்தி வருகிறார். இவரது தந்தையான வழக்கறிஞர் நடேசன் அவர்கள் 21.12.1986 யன்று மரணமடைந்தார். அப்போது தோழர் சண்முகதாசன் அவர்கள் இவர் பற்றிய இரங்கல் உரை ஒன்றை டெய்லி நியூஸ் பத்திரிகையில் எழுதியுள்ளார். தோழர் சண்முகதாசன் அவர்கள் வழக்கறிஞர் நடேசன் குறித்து எழுதிய இரங்கல் உரையை கீழ்வரும் இணைப்பில் படிக்கலாம். ( தமிழாக்கம் - டாக்டர் தம்பிராசா) http://tholarbalan.blogspot.com/2021/01/blog-post_73.html இந்த இரங்கல் உரை மூலம் நடேசன் குறித்தும் அவர் தொடர்ந்து பத்து ஆண்டுகள் தோழர் சண்முகதாசனுக்கு செய்த பொருளாதார உதவிகள் குறித்தும் அறிய முடிகிறது.

தமிழாராய்ச்சி மாநாடும்

• தமிழாராய்ச்சி மாநாடும் துரோகி துரையப்பாவும்! யாழ்ப்பாணத்தில் 1974ம் ஆண்டு ஜனவரி 10ம் திகதி நடைபெற்ற இறுதி நிகழ்வில் 11 அப்பாவி தமிழர்கள் பொலிசாரினால் கொல்லப்பட்டனர். இந்த 11 பேரின் கொலைக்கும் காரணமாக இருந்தவர் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் கைக்கூலியாக செயற்பட்ட மேயர் துரையப்பாவே. இச் சம்பவம் பல தமிழ் இளைஞர்கள் துரையப்பா மீது ஆத்திரம் கொள்ள வைத்தது. அவரை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று விரும்பினார்கள். இந்நிலையில் துரையப்பாவை “துரோகி” என்று முத்திரை குத்தி அவரை இளைஞர்கள் மூலம் கொல்ல வைத்தவர்கள் தமிழர்விடுதலைக் கூட்டணியினரே. ஆனால் இன்று அவர்களே துரையப்பாவை கொன்றது தவறு என்கிறார்கள். அதுமட்டுமல்ல துரையப்பாவை துரோகி என்றும் கூறக்கூடாது என்கிறார்கள். சரி பரவாயில்லை, என்னவாவது சொல்லிவிட்டு போங்கள். ஏனென்றால் இது துரோகிகள் தியாகிகளாகவும் தியாகிகள் துரோகிகளாகவும் மாறும் காலம். ஆனால் தயவு செய்து 11 பேரையும் துரையப்பா கொன்றது சரி என்றுமட்டும் சொல்லிவிடாதீர்கள். அதை தாங்கும் சக்தி தமிழனுக்கு இல்லை.

டந்த 33 வருடங்களாக காவலில் வைக்கப்பட்டிருக்கும்

கடந்த 33 வருடங்களாக காவலில் வைக்கப்பட்டிருக்கும் பயஸ் அவர்களை 2021ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் சாட்சியாக இணைக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் பயஸ் மட்டுமன்றி சாந்தன் முருகன், ஜெயக்குமார் போன்றவர்களின் விடுதலையையும் தடுப்பதற்கு இந்திய அரசு சதி செய்கிறதோ என்ற சந்தேகம் பிறக்கிறது. ஒருபுறம் சில போதைப்பொருள் கடத்தல் தாதாக்களை கைது செய்துவிட்டு அவர்கள் மீண்டும் புலிகள் இயக்கத்தை கட்ட முயன்றதாக இந்திய அரசு வழக்கு போட்டு பிரச்சாரம் செய்கிறது. மறுபுறம் பிரபாகரன் மகள் துவாரகா இந்திய அரசின் உதவியுடன் மீண்டும் ஈழப் போராட்டத்தை தொடரப்போவதாக காசி ஆனந்தன் கூறுகின்றார். ஆனால் இந்த காசி ஆனந்தன் இதுவரை கைது செய்யப்படவும் இல்லை. சிறப்புமுகாமில் அடைக்கப்படவும் இல்லை. அது எப்படி?

கரவெட்டியில் இருந்து ஒருவர் தமிழரசுக்கட்சி தலைவர்

கரவெட்டியில் இருந்து ஒருவர் தமிழரசுக்கட்சி தலைவர் பதவிக்கு சுமந்திரனை ஆதரிக்கும்படி கேட்கிறார். திருகோணமலையில் இருந்து ஒருவர் தமிழரசுக்கட்சி தலைவர் பதவிக்கு சிறீதரனை ஆதரிக்கும்படி கேட்கிறார். இவ்வாறு கேட்கும் அனைவருக்குமான எனது பதில் இதுதான். (1) நான் தமிழரசுக்கட்சி அங்கத்தவன் இல்லை. (2) லண்டனில் நான் எந்த அமைப்பிலோ அல்லது பதவியிலோ இல்லை. நான் ஒரு சாதாரணமானவன். (3) தேர்தல் பாதையில் செல்லும் எந்தக் கட்சியையும் நான் ஆதரிப்பதில்லை. ஏனெனில் தேர்தல் பாதையில் தமிழின விடுதலை அடைய முடியாது என்ற கருத்தை கொண்டிருப்பவன் நான். ( இரண்டு முறை எம்.பி பதவி என்னை நாடி வந்தபோதும் தேர்தல் பாதையில் நம்பிக்கையற்றபடியால்தான் அதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை)

தேசியத்தை மறுத்துவிட்டு சர்வதேசியத்தை அடைய முடியாது.

தேசியத்தை மறுத்துவிட்டு சர்வதேசியத்தை அடைய முடியாது. எனவே ஒருவர் கம்யுனிஸ்டாக இருந்தால் தமிழ்த்தேசியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். மாறாக, தமிழத்தேசியத்தை மறுத்தால் அவர் ஒரு கம்யுனிஸ்டாக இருக்க முடியாது. தேசிய இனம் மற்றும் சுயநிர்ணய உரிமை குறித்து தெளிவான வரையறைகளை வகுத்து முன்வைத்தவர்கள் மாபெரும் ஆசான் லெனின் மற்றும் ஸ்டாலின். இது தெரியாமல் தமிழத்தேசியம் பேசும் சிலர் கம்யுனிசத்தை விமர்சிக்கின்றனர். சாரதியின் தவறுக்கு வாகனத்தை குறை கூறுவது எந்தளவு முட்டாள்தனமோ அதைவிட முட்டாள்தனமானது சில (போலி) கம்யுனிஸ்டுகளின் தவறுக்கு கம்யுனிசத்தை குறை கூறுவது.

சிவத் துரோகிகள் தமிழின துரோகிகள்

சிவத் துரோகிகள் தமிழின துரோகிகள் என்கிறார் ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் . இந்து ஆலயங்களை ஆக்கிரமித்து அதில் புத்த விகாரை கட்டுவோர் சிவத் துரோகிகள் இல்லையா? அவர்களுக்கு எதிராக இந்த ஈழத்து சிவசேனைத் தலைவர் ஏன் போராடுவதில்லை?

இவர் சிங்கள இனத்தவர்.

இவர் சிங்கள இனத்தவர். தன் கணவர் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடந்த 14ஆண்டுகளாக தேடிவருகிறார் அவருக்கு நீதி கிடைக்காமையால் கோவிலில் தன்முடியை காணிக்கை கொடுத்து வேண்டியுள்ளார் ஒரு சிங்களவருக்கே இன்னும் நீதி கிடைக்கவில்லை என்றால் தமிழ்மக்களுக்கு எப்படிகிடைக்கும் ?

ஒருவேளை “சங்கி”அதானி

ஒருவேளை “சங்கி”அதானி “திராவிட” அதானியாக மாறிவிட்டாரா?

தமிழர் விழாவை

தமிழர் விழாவை தமிழர் மண்ணில் தமிழர் கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியதே! வாழ்த்துகளும் பாராட்டுகளும்

நான் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தவேளை

நான் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தவேளை பசுபதி பாண்டியன் அவர்களும் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது ஜெயா அம்மையாரின் ஆட்சிக்காலம். பசுபதிபாண்டியனை விடுதலை செய்யக்கோரி டாக்டர் ராமதாஸ் அவர்கள் போராட்டம் செய்தார். ஜெயா அம்மையார் பசுபதி பாண்டியனை விடுதலை செய்யவில்லை. மாறாக டாக்டர் ராமதாஸ் அவர்களையும் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தார். சிறையில் ராமதாஸ் அவர்களுடனும் பசுபதி பாண்டியன் அவர்களுடனும் பேசும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. அப்போது அவரது கட்சியில் இருந்த வடிவேல் ராவணன் குறித்து அவருடன் நான் பேசிய விபரம் ஏற்கனவே முகநூலில் பதிவு செய்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, வைகோ அவர்களுக்கு ஆதரவளிக்கலாமே என நான் கேட்டதற்கு எதற்கு இன்னொரு கலைஞரை வளர்த்துவிட வேண்டும் என ராமதாஸ் அவர்கள் கூறியதையும் நான் முகநூலில் பதிவு செய்திருக்கிறேன். அப்போது ஈழத் தமிழ் அகதி இளைஞன் ஒருவன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அவனை வந்து பார்ப்பதற்கோ உதவி செய்வதற்கோ யாரும் இல்லை. இதனால் அவன் சிறையில் இருந்த சில தாதாக்களுக்கு பணிவிடை செய்து அவர்களிடமிருந்து தனக்கு தேவையான பீடீ, சோப்பு, போன்றவற்றை பெற்றுக்கொண்டான். இதைப் பார்த்த பசுபதி பாண்டியன் அவ் இளைஞனை அழைத்து “நீ போராடும் இனத்தை சேர்ந்தவன். இப்படி தாதாக்களுக்கு பணிவிடை செய்வது கேவலம்” என திட்டிவிட்டு அவனுக்கு தேவையானவற்றை தன் செலவில் வாங்கிக் கொடுத்தார். அது மட்டுமல்ல அவனது வழக்கையும் தன் செலவில் நடத்தி அவனுக்கு விடுதலை வாங்கி கொடுத்து ஊர் செல்வதற்குரிய பணமும் கொடுத்து அனுப்பினார். பசுபதி பாண்டியன் ஈழத் தமிழர் மீது அனுதாபமும் ஆதரவும் கொண்டிருந்தார். அதை நான் நேரில் கண்டிருக்கிறேன். இன்று அவரை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய போராளி என போற்றுகிறார்கள். ஆனால் அன்று அவரை ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த சண்டியர் என்றே எனக்கு கூறியிருந்தார்கள்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாட்டில் இன்று மலையக தியாகிகள் நினைவு தினம் அனுட்டிக்கப்பட்டுள்ளது. மலையக மக்களின் விடுதலைக்காக இதுவரை பலர் போராடி உயிர் நீத்துள்ளனர். இதில் கரவெட்டியில் பிறந்து மலையகத்தில் சென்று போராடியவேளை இந்திய உளவுப்படையால் கொல்லப்பட்ட தோழர் நெப்போலியன் தியாகம் குறிப்பிடத்தக்கது. 1983ற்கு பின்னர் பல மலையக இளைஞர்கள் வடக்கு கிழக்கிற்கு வந்து போராளி இயக்கங்களில் இணைந்து போராடினார்கள். ஆனால் நெப்போலியன் மலையகம் சென்று “மலையக மக்கள் விடுதலை முன்னணி” என்ற அமைப்பை உருவாக்கி அதில் மலையக இளைஞர்களை இணைத்து போராட வைத்தார். அப்போது மலையகத்தில் தொண்டமான் குடும்ப அரசியலுக்கு அஞ்சி பலரும் போராட்டத்தில் பங்கெடுக்க தயங்கினர். அவ்வேளையில் ( முன்னாள் அமைச்சர்) சந்திரசேகரன் போன்றவர்களை இணைத்து அவர்களுக்கு தைரியம் கொடுத்தவர் நெப்போலியன். இவ்வேளையில் இந்தியாவில் தமிழ்நாடு விடுதலையை முன்னெடுத்த தோழர் தமிழரசன் குழுவினருக்கு பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்து உதவியதற்காக இந்திய உளவுப்படையால் தோழர் நெப்போலியன் கொல்லப்பட்டார். ஈழத்து தமிழ்த்தேசிய விடுதலைக்கு மட்டுன்றி தமிழக தமிழ்த்தேசிய விடுதலைக்கும் பங்காற்றிய தோழர் நெப்போலியன் தியாகம் மகத்தானது. என்றும் நினைவு கூரப்பட வேண்டியது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில்,

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னையில் 11,12 ஆம் திகதிகளில் அயலக தமிழர் விழா நடைபெறுகிறது. இவ் விழாவில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து ஆளுநர் செந்தில் தொண்டமான், மனோகணேசன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் சென்னை நோக்கி பயணமாகியுள்ளனர். இதேவேளை, கனடாவின் ஒன்றாரியோ மாகாண உறுப்பினருமான லோகன் கணபதியும் குறித்த நிகழ்வில் பங்பேற்பதற்காக வருகை தந்துள்ளதாக அறிய வருகிறது. இவர்கள் தமிழகத்தில் 40 வருடமாக அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழருக்கு குடியுரிமை கிடைக்க குரல் கொடுக்காவிட்டாலும் குறைந்த பட்சம் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறு குரல் கொடுக்க வேண்டும். செல்வம் அடைக்கலநாதன் புதுக்கோட்டை சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர். எனவே சிறப்புமுகாம் கொடுமைகள் அவர் நன்கு அறிவார். 33 வருடமாக சிறை வாழ்க்கையை தொடரும் சாந்தன், முருகன், பயஸ், ஜெயக்குமார் போன்றவர்கள் சிறப்புமுகாமில் இருந்து விடுதலைபெற தமிழக முதல்வரிடம் வலியுறுத்த வேண்டும். செய்வார்களா?

யார் கட்டினாலும் வேட்டி அழகுதான்.

யார் கட்டினாலும் வேட்டி அழகுதான். தமிழருக்கு அது நிச்சயம் பெருமைதான்

இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள்

இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் செல்லத்துரை கிருபாகரன் மற்றும் நாகலிங்கம் மதனசேகரம் ஆகிய இருவரும் சிங்கள அரசால் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், பயஸ்,ஜெயக்குமார் ஆகியோர் தமிழக அரசால் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். சிங்கள அரசுக்கு இருக்கும் இரக்கம் கூட தமிழக அரசுக்கு இல்லையா? தமிழக அரசு நடத்தும் அயலக தமிழர் தின விழாவில் பங்கு பற்றும் ஈழத் தமிழ் தலைவர்கள் இந்த சிறப்புமுகாம் அகதிகளின் விடுதலைக்கு தமிழக முதல்வரிடம் வலியுறுத்த வேண்டும். இறப்பதற்கு முன் தன் மகன் சாந்தனை ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்று காத்திருக்கும் தாயாரின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.

விழாமலே வாழ்ந்தோம் என்பதல்ல

“விழாமலே வாழ்ந்தோம் என்பதல்ல விழும் ஒவ்வொரு முறையும் மீண்டும் எழுந்தோம் என்பதே வாழ்வின் பெருமை” -நெல்சன் மண்டேலா

சிறப்புமுகாம் அகதிகளை தமிழக முதல்வர்

• சிறப்புமுகாம் அகதிகளை தமிழக முதல்வர் விடுதலை செய்ய வேண்டும் - செல்வம் MP கோரிக்கை. தமிழக அரசு நடாத்தும் அயலக தமிழர் மாநாட்டில் உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரியுள்ளார். ஈழத் தமிழ் தலைவர் ஒருவர் தமிழ்நாட்டில் வைத்து தமிழக முதல்வர் முன்னிலையில் சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யுமாறு கோரியிருப்பது இதுவே முதல்முறை. செல்வம் அவர்கள் இவ்வாறு கோரியிருப்பது இனி மற்ற ஈழத் தமிழ்த் தலைவர்களும் கோரிக்கை வைப்பதற்கு வழி வகுத்துள்ளது. இது சிறப்புமுகாம் அகதிகளுக்கு விடுதலை பெற வழி வகுக்கும் என்ற நம்பிக்கையை தருகிறது.

•தமிழக மீனவர்களுக்கு ஒரு ஈழத் தமிழ் மீனவனின் கண்ணீர் வேண்டுகோள்.

•தமிழக மீனவர்களுக்கு ஒரு ஈழத் தமிழ் மீனவனின் கண்ணீர் வேண்டுகோள். ஒருபுறம் இந்திய தமிழ் மீனவர்கள் சிங்கள கடற்படை தம்மை தாக்குவதாக கூறுகின்றனர். மறுபுறம் எல்லை தாண்டிவரும் இந்திய ரோலர் படகுகள் தம் வலைகளை அறுத்து நாசம் செய்வதாக ஈழத் தமிழ் மீனவர்கள் கூறுகின்றனர். இலங்கை இந்திய அரசுகள் இப் பிரச்சனையை தீர்க்காமல் வேண்டுமென்றே ஈழ , தமிழக மீனவர்களிடையே மோதலை உருவாக்கி வருகின்றன. இப் பிரச்சனை தீர ஓரே வழி ஈழத் தமிழ் மீனவர்களும் தமிழக மீனவர்களும் நேரடியாக பேச வேண்டும். இதற்கு இலங்கை அரசும் இந்திய அரசும் வழி வகுக்க வேண்டும். மீனவர் பிரச்சனை தீர கச்சதீவை மீட்க வேண்டும் என பேசும் தமிழக தலைவர்கள் முதலில் இப் பிரச்சனையை புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் என்னவாக இருக்கும்? 😂😂

கேப்டன் மில்லர்

• கேப்டன் மில்லர் படத்தின் பெயர் ஒரு ஈழப் போராளியின் பெயர் படத்தின் கதை ஈழப் போராட்டத்தை பற்றியது என்றார்கள் போய் பார்த்தால் அப்படி எதையும் காணவில்லை என்னடா என்று கேட்டால் “ஈழப் போராட்டத்தை நேரடியாக எடுக்க முடியாது தணிக்கை செய்துவிடுவார்கள்” என்கிறார் படத்தின் இயக்குனர். அப்ப அதை முதலே சொல்லியிருக்கலாமே என்று கேட்டால் “குறியீடாக காட்டப்பட்டுள்ளது. புரிந்து கொள்ளுங்கள்” என்கிறார். யாருக்காவது எதாவது குறியீடு புரிகிறதா?

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

•இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். உழவர் மக்களின் உன்னத நாளாம் உழைக்கும் மக்களின் உரிமை நாளாம் தமிழ் மக்களின் புத்தாண்டு நாளில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்! தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிறார்கள் சிறை மற்றும் சிறப்புமுகாமில் உள்ளவர்கள் விடுதலை பெற வழி பிறக்கும் என நம்புவோம்!

செய்தி – அரசு எம்மை ஏமாற்றினால்

செய்தி – அரசு எம்மை ஏமாற்றினால் விளைவுகள் வேறு விதமாக அமையும் - சம்பந்தன் எச்சரிக்கை இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தன.😂

கிணற்று தவளைகளின் அதி உச்ச கனவு

கிணற்று தவளைகளின் அதி உச்ச கனவு எப்போதும் பாம்பு அற்ற கிணறு மட்டுமே.

தமிழழகத்தில் இந்தி திணிப்பு எதிராக

தமிழழகத்தில் இந்தி திணிப்பு எதிராக போராடி உயிர் நீத்தவர்களை நாம் நன்றியுடன் நினைவு கூர வேண்டும். ஏனெனில் இந்தி திணிப்பு என்பது இன்று தமிழகத்தை தாண்டி ஈழத்திற்கும் வந்துவிட்டது

எல்லா ஆசைகளையும் துறந்தவர் புத்தர்.

எல்லா ஆசைகளையும் துறந்தவர் புத்தர். ஆனால் இந்த சிங்கள புத்த பிக்குகளால் லாட்டரி ரிக்கட்டைக்கூட துறக்க முடியவில்லை. பாவம் புத்தர்! தை பிறந்தால் வழி பிறக்கும் தமக்கும் ஒரு வழி பிறக்காதோ என எண்ணுகின்றனர் போலும் 😂😂

கடவுள் தூணிலும் இருப்பார்

கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் வைன்ஷொப்பில் இருக்கமாட்டாரா என்ன? மதுப் பிரியர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள் 😂😂

செய்தி – தமிழக அரசின் தந்தை பெரியார்

செய்தி – தமிழக அரசின் தந்தை பெரியார் விருது சுப வீரபாண்டியன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பைப் பார்த்து தமிழ்நாட்டில் விடுதலைக் குயில் என்னும் அமைப்பை உருவாக்கியவர் அந்த விடுதலைக் குயில் அமைப்பின் தேவைக்காக சேட்டு கடை ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்டனர். கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர்கள் பொலிசாரிடம் பிடிபட்டபோது சுப வீரபாண்டியனை கூறிவிட்டார்கள். அந்த வழக்கில் தான் பிடிபடுவதை தடுப்பதற்காக ஓடிச் சென்று கலைஞர் கருணாநிதி காலில் விழுந்தவர். அன்று முதல் இன்றுவரை அதனால் கலைஞரையும் திமுகவையும் ஆதரித்து வருகின்றவர். இதைத் தவிர வேறு எதையும் இவர் செய்ததாக அறிய முடியவில்லை. எதற்காக இவருக்கு தந்தை பெரியார் விருது வழங்கப்படுகிறது. பிளீஸ், யாராவது கூற முடியுமா?

தமிழரை திராவிடர் என்று மாற்றியவர்களால்,

தமிழரை திராவிடர் என்று மாற்றியவர்களால், தமிழர் பொங்கலை திராவிட பொங்கல் என மாற்ற முடியவில்லை. அதனால்தான் ஆணாதிக்க சாதி பொங்கல் என்று உருட்ட ஆரம்பித்துள்ளனர்.

பிரித்தானிய மன்னரும்

பிரித்தானிய மன்னரும் ஈழத்து மாமன்னர்களும் 😂😂

தோழர் ஜீவாவை நினைவுகூரும்

தோழர் ஜீவாவை நினைவுகூரும் இன்றைய கம்யுனிஸ்டுகள் ஜீவா முன்வைத்த தமிழத்தேசிய இனத்திற்கான சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை இன்று முன்வைக்க தயாரா? அல்லது , குறைந்தபட்சம் அதை முன்வைத்து போராடும் தமிழத்தேசியவாதிகளை “பாசிட்டுக்கள்” என்று அழைப்பதையாவது நிறுத்துவார்களா?

அம்பேத்கார் இறுதிவரை கம்யுனிசத்தை எதிர்த்தவர்.

அம்பேத்கார் இறுதிவரை கம்யுனிசத்தை எதிர்த்தவர். அம்பேத்காரியம் ஒரு சீர்திருத்த கருத்து. புரட்சிகர கருத்து இல்லை. இந்நிலையில் அம்பேத்கார் விருதை ஒரு கம்யுனிஸ்ட் கட்சிக்காரர் எப்படி பெறுகிறார்? இவர்களுக்கு மக்களின் வரிப்பணம் 5 லட்சம் ரூபா ஏன் வழங்கப்படுகிறது?

யாரு பார்த்த வேலைடா இது?

யாரு பார்த்த வேலைடா இது? இது ரொம்ப ஓவரடா இதுவரை கேட்காதவர்கள் ஒருமுறை கேட்டுப்பாருங்ளேன் நல்லாத்தான் இருக்கு 😂😂

மிகவும் சிறிய நாடான மாலைதீவு

மிகவும் சிறிய நாடான மாலைதீவு தன் நாட்டில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கடந்த 35 வருடங்களாக சுமார் 77 இந்திய ராணுவத்தினர் மாலைதீவில் உள்ளனர். ஆனால் இதே காலப்பகுதியில் ஈழத்திற்கு வந்த ஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தினர் சுமார் இரண்டு வருடத்தில் வெளியேற்றப்பட்டனர். எந்தவொரு தேசிய இனத்தையும் அதன் சொந்த மண்ணில் எந்த வல்லரசாலும் தோற்கடிக்க முடியாது. எனவே இந்திய ராணுவமும் தோல்வியுற்று ஈழத்தில் இருந்து வெளியேறும் என்பது எதிர்பார்க்கப்பட்ட முடிவுதான். ஆனால் சுமார் 600 போராளிகள் ஒரு லடசத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்துடன் மோதுவது என்று எடுத்த அந்த முடிவுதான் வரலாற்று அதிசயம். அந்த அற்புத முடிவை எடுத்தவர்கள் உலகிற்கு தெரிவித்தது இதுதான், எதிரி எவ்வளவு பெரியது என்பது முக்கியம் இல்லை. எதிர்க்கும் திறன் எவ்வளவு பெரிது என்பதே முக்கியம்.

கரடியே காரித்துப்பிய மூவ்மென்ட்

• கரடியே காரித்துப்பிய மூவ்மென்ட் உலகநாயகனுக்கு ஏன் “தந்தை பெரியார் விருது” தமிழக அரசு வழங்கக்கூடாது? 😂😂

கண்டியில் இந்திய தூதரகம் ஆரம்பிக்கப்பட்டு

கண்டியில் இந்திய தூதரகம் ஆரம்பிக்கப்பட்டு 100 வருடம் நிறைவையொட்டி தூதர் ஆதிரா பொங்கல் வைத்து கொண்டாடியுள்ளார். இலங்கையில் கொழும்பு, கண்டி யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை என நாலு இடங்களில் இந்திய தூதரகங்கள் இருக்கின்றன. சிறிய தீவான இலங்கையில் எதற்கு நாலு தூதரகம் என கேட்க வேண்டியவர்கள் நாலு தூதரகம் வைத்து தமிழ் மக்களுக்கு இதுவரை செய்தது என்ன என்று கேட்க வேண்டியவர்கள் பொங்கல் போட்டவுடன் எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஓடிப்போய் உட்காந்ந்து சாப்பிடுகின்றனர். இதுகூட பரவாயில்லை , யாழ் இந்திய தூதர் வடையும் பிளேன் டீயடன் எமது தலைவர்களை கைக்குள் வைத்திருக்கிறார். என்று இந்த நிலை மாறும்?

செய்தி - தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவானது

செய்தி - தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவானது உட்கட்சி ஜனநாயகத்தை வெளிப்படுத்தும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார். சேர் ! நீங்கள் தோல்வியடைந்தால் அப்புறம் என்ன கூறுவீர்கள்?

சங்கி – கடவுள் நந்தி பூமியில் பிறந்து மாடு

சங்கி – கடவுள் நந்தி பூமியில் பிறந்து மாடு மாதிரி உழைத்தபடியால் அவருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தமிழன் - என்னது? அப்புறம்? உதை வாங்க முன்னாடி மரியாதையா ஓடிப்போயிடு.

செந்தில்வேல் அவர்களின் குரலுக்கு

செந்தில்வேல் அவர்களின் குரலுக்கு மதிப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிக்கு நன்றிகள். அப்படியே உச்சநீதிமன்றம் விடுதலை செய்தும் தொடர்ந்து சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நாலு தமிழருக்கும் செந்தில்வேல் குரல் கொடுக்க வேண்டும். கொடுப்பாரா? கொடுத்தால் அவர் குரலுக்கு தமிழக முதல்வர் மதிப்பளிப்பாரா? #ஊடக விபச்சாரிகள்

அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்க தொடர்ந்து போராடுவேன்

1) அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்க தொடர்ந்து போராடுவேன் என முன்பு கூறியிருந்தீர்கள். இப்போது ஆட்சிக்கு வந்த பின்பு அவ் அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்க எடுத்த முயற்சிகள் என்ன? (2) உச்சநீதிமன்றம் விடுதலை செய்தும் நான்கு தமிழர்கள் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். கலைஞர் ஆரம்பித்த சிறப்புமுகாமை மூடி அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்வீர்களா? (3) கலைஞர் தத்தெடுத்து வளர்த்த அகதிச் சிறுவன் மணி எங்கே? அவனை ஸ்டாலின் கொன்றுவிட்டதாக பரிதிஇளவம்வழுதி கூறியது உண்மையா? யாராவது ஒரு ஊடகவியலாளர் இந்த கேள்விகளை அமைச்சர் உதயநிதியிடம் கேட்பார்களா?

கொழும்பில் இருக்கும் இந்த சொகுசு மாளிகையில் வசிப்பவர் யார்?

கொழும்பில் இருக்கும் இந்த சொகுசு மாளிகையில் வசிப்பவர் யார்? பாராளுமன்றத்தில் அவசர பிரோரணை மூலம் நான்கு கோடி ரூபா பெற்று இந்த சொகுசு மாளிகைக்கு பெயிண்ட் அடித்தவர் யார்? பதவி பறிபோன பின்பும் கொஞ்சம்கூட கூச்சமின்றி இந்த சொகுசு மாளிகையில் இருப்பவர் யார்? குறிப்பு - இதற்கு சரியான விடையைக்கூறினால் நீயும் என்னைப்போல் ஒரு அப்பாவி தமிழனே!

இவர் மட்டுமல்ல இவர் வீட்டு மதில்களும் உயரமானவை

இவர் மட்டுமல்ல இவர் வீட்டு மதில்களும் உயரமானவை ஈழத்து சேகுவாரா என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்டவர் போராட்டம் வெடிக்கும் என்று அடிக்கடி அறிக்கை விடுபவர். பாவம். ஒரு பட்டாசு கூட வெடிக்க வைக்காதவர். ஊரான் வீட்டு பிள்ளைகளை அமிர்தலிங்கத்தின் மகன் இயக்கத்திற்கு பிடித்து அனுப்பிவிட்டு தன் பிள்ளைகளை இந்தியா அனுப்பி படிக்க வைத்தவர். பாதுகாப்பு வலயத்தில் இருந்த தன் வீட்டை மீட்டு அதற்கு உயரமான மதில்களையும் கட்டிய இவரால், கேப்பாப்புலவில் தன் சொந்த நிலத்தை கேட்டு வீதியில் படுத்து போராடும் குழந்தைக்கு அதன் நிலத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை யார் இவர் என்று தெரிகிறதா?

நேற்றைய தினம் கிளிநொச்சியில்

நேற்றைய தினம் கிளிநொச்சியில் இருந்து ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டார். இந்தியாவில் இருக்கும் தன் நண்பர் வடக்கு கிழக்கில் சீன முதலீடுகள் பற்றிய விபரம் கேட்கிறார் என்றார். அந்த நண்பர் ஏன் இந்த விபரங்களை கேட்கிறார் என்று நான் கேட்டேன். அதற்கு “பெரிய துரை கேட்கிறார். தேவையான பணம் தருவதாக கூறுகின்றார்” என்று தன் நண்பன் கூறியதாக சொன்னார். ஒரு உளவுதுறை அதிகாரியையே "பெரிய துரை" என்று அந்த நண்பர் குறிப்பிட்டிருக்கின்றார். இதைக் கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்தது. இலங்கையில் இருக்கும் நாலு இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் இந்த விபரங்கள் தெரியாதா என கேட்டேன். சிங்கள அரசு இந்திய அரசுக்கு தெரியப்படுத்தி இந்திய அரசின் சம்மதம் பெற்ற பின்பே சீன அரசுடன் ஒப்பந்தங்கள் செய்கின்றன. இந்திய அரசுக்கு தெரியாமல் ஒரு ரூபாய்கூட சீனா இலங்கையில் முதலீடு செய்ய முடியாது. இது தெரியாமல் நம்மவர்கள் சிலர் “சீனா வந்து விட்டது. இந்தியாவுக்கு ஆபத்து” என்று இந்தியாவுக்கு சொல்லுகின்றனர். யாழ்ப்பாணம் வந்த சீன தூதர் “பைனாகுலர் மூலம் இந்தியாவை பார்த்துவிட்டார். எனவே இந்தியாவுக்கு ஆபத்து” என்கின்றனர். பைனாகுலர் மூலம் என்ன தெரியும்? அப்படி பார்க்க விரும்பினால் செய்மதி மூலம் சீனாவால் பார்க்க முடியும். அல்லது எல்லையில் அருணாச்சல பிரதேசத்தில் இருந்து பார்க்க முடியும் என்பதுகூட இந்த அரசியல் அறிஞர்களுக்கு தெரியவில்லை. இந்திய உளவுப்படையினரின் நோக்கம் சீனா பற்றி அறிவது அல்ல. மாறாக இத்தகையவர்களை பயன்படுத்தி தமிழ்த் தேசிய அரசியலைக் குழப்புவதே உண்மையான நோக்கம்.

ஒரு கன்னட நடிகர் தமிழ் இளைஞர்களை

ஒரு கன்னட நடிகர் தமிழ் இளைஞர்களை தன் காலில் விழ வைப்பதை பார்க்கும்போது, ஒரு கன்னட நடிகரை தன் அருகில் கைகட்டி அமர வைத்த தமிழன் வீரப்பன் நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. வீரப்பன் ஏன் கொல்லப்பட்டார் என்று இப்போது புரிகிறது.

சிறு பொறி பெரு நெருப்பாக பற்றி எரியுமா?

சிறு பொறி பெரு நெருப்பாக பற்றி எரியுமா? திருமலையில் இருந்து இந்தியா விரட்டியடிக்கப்படுமா? திருகோண மலையில் மக்களின் நிலம் இந்தியாவிற்கு வழங்கப்பட்டமைக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. தமிழ் சிங்கள முஸ்லிம் மூவின மக்களும் இணைந்து போராடியுள்ளனர். போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். மகிந்த ராஜபக்சாவின் காலத்தில் சம்பூர் பிரதேசத்தில் தமிழர் நிலம் 500 ஏக்கர் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. அப்போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் திருமலை எம்பி சம்பந்தர் ஐயாவிடம் சென்று முறையிட்டனர். அதற்கு “நிலத்தை கேட்டால் அப்புறம் இந்தியா தீர்வு பெற்று தராது. எனவே நான் ஒன்றும் செய்ய முடியாது” என்று கூறிவிட்டார். இதனால் அந்த மக்கள் மகிந்த அரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொழும்பு சென்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தமக்குரிய நீதியைப் பெற்றனர். இப்போது மீண்டும் திருமலை துறைமுகம் உட்பட மக்களின் நிலங்கள் மற்றும் வளங்கள் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளன. திருமலையில் மட்டுமல்ல மன்னாரிலும் இந்திய முதலாளி அதானியின் கம்பனிக்காக தமிழர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. மக்களின் நிலம் பலவந்தமாக இந்தியாவிற்கு வழங்கப்படுவதற்கு எதிராக பாரிய மக்கள் போராட்டங்கள் உருவாகும் நிலை தோன்றியுள்ளது. ஆனால் இந்திய அரசு இதை மௌனமாக பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்iலை. எனவே மக்கள் போராட்டங்களை குழப்புவதற்காக மீண்டும் குண்டுகள் வெடிக்க வைக்கும். தேவையானால் ஒரு பாரிய இனக் கலவரத்தையும் உருவாக்க இந்தியா தயங்காது.

Mission: Chapter 1 (2024)

•Mission: Chapter 1 (2024) லண்டனில் எடுக்கப்பட்ட தனுஷ் படத்தில் ஈழத் தமிழரை போதைப் பொருள் கடத்தல்காரராக காட்டியிருப்பார்கள். அதேபோல் லண்டனில் எடுக்கப்பட்ட இந்த படத்திலும் காட்டுவார்களோ என்ற அச்சத்துடன் பார்த்தேன். நல்லவேளை. அப்படி எதுவும் காட்டவில்லை. ஆறுதல். வழக்கம்போல் பாகிஸ்தான் இஸ்லாமிய தீவிரவாதிகள் கதைதான். படம்தான். ஆனாலும் அருண் விஜய் தனி ஆளாக நூற்றுக்கு மேற்பட்ட கிரிமினல்களை அடித்து நொருக்குவது சகிக்க முடியவில்லை. அது சரி இந்த கதை லண்டனில் நடப்பதாக ஏன் அமைத்தார்கள் என்று நினைத்து பார்த்தேன். அப்புறம்தான் புரிந்தது படத்தின் தயாரிப்பாளர் லண்டன் லைக்கா என்பது.

தோழர் தென்தமிழன்- 7ம் ஆண்டு நினைவு அஞ்சலி

தோழர் தென்தமிழன்- 7ம் ஆண்டு நினைவு அஞ்சலி 25 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடும் நோய்வாய்ப்பட்ட நிலையில் சிறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. வெளியில் சிகிச்சை பெறவும் பரோல் விடுதலை அளிக்கப்படவில்லை. ஏனெனில் அவர் தோழர் தமிழரசன் அரசியலை ஏற்று தமிழ்நாடு விடுதலைக்கு பயணித்ததே காரணம்.

செய்தி – உதயநிதி அழைப்பை ஏற்று

செய்தி – உதயநிதி அழைப்பை ஏற்று கேலோ இன்டியா போட்டியை துவக்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வருகை எடப்பாடி ஆட்சி காலத்தில் மோடி ஒரு சங்கி கழக ஆட்சியில் அவரு இந்திய பிரதமர் இப்ப கறுப்பு பலூன் பறக்க விட முடியாது சொன்னா நம்பு பாய் இல்லைன்னா சீமான் வந்திடுவார்

செய்தி - தமிழகத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு

செய்தி - தமிழகத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவரும் தமிழ் அகதிகளுக்கு இலங்கை அரசு சர்வதேச கடவுச்சீட்டு வழங்குகிறது. இதன் மூலம் தமிழ் நாட்டில் இருக்கும் அகதிகள் இலங்கை திரும்பி வராமல் விரும்பிய வெளிநாட்டிற்கு சட்டரீதியாக செல்லும் வாய்ப்பு எற்பட்டுள்ளது. அதேவேளை இந்தியாவில் தொடர்ந்து வாழ விரும்புவர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டும். குறிப்பாக சுமார் முப்பதாயிரம் மலையக தமிழர் அகதிகளாக தமிழ் நாட்டில் இருக்கின்றனர். அவர்களிடம் இலங்கை குடியுரிமை இல்லை. எனவே அவர்கள் இலங்கை திரும்பி வர முடியாது. இலங்கையோ அல்லது வேறு வெளிநாட்டிற்கோ செல்ல விரும்பும் அகதிகளுக்கான அனுமதியை உடன் வழங்க வேண்டும். எக்ஸிட் பெர்மிட்டிற்கு அறவிடும் லட்சக்கணக்காகன பணத்தை நிறுத்த வேண்டும்.

சிலர், இவர்கள் இந்தியாவில் இருப்பதால்

சிலர், இவர்கள் இந்தியாவில் இருப்பதால் வேறு வழியின்றி இந்திய அரசு விசுவாசிகளாக இருப்பதாக கூறுகின்றனர். இன்னும் சிலர், இவர்கள் எப்போதும் இந்திய அரசு விசுவாசிகள். அதனால்தான் இந்தியாவில் இருக்கின்றனர் என்கிறார்கள். இதில் எது உண்மை என்பது இனி தெரிந்துவிடும். ஏனெனில் தமிழ் நாட்டில் இருக்கும் ஈழத் தமிழர் இலங்கை வராமலே சர்வதேச கடவுச்சீட்டு இப்போது பெறமுடியும். அதனால் இந்தியாவில் இருந்து விரும்பிய வெளிநாட்டிற்கு சட்டரீதியாக செல்ல முடியும். குறிப்பாக இந்தியாவில் தான் மிகவும் கஸ்ட நிலையில் இருப்பதாக கூறும் காசி அனந்தன் அவர்கள் இனி லண்டனில் மருத்துவராக இருக்கும் தன் மகளுடனோ அல்லது அவுஸ்ரேலியாவில் மருத்துவராக இருக்கும் இன்னொரு மகளுடனோ சேர்ந்து வாழ முடியும்.

தனது காணாமல் ஆக்கப்பட்ட மாமாவுக்காக

தனது காணாமல் ஆக்கப்பட்ட மாமாவுக்காக கண்டால் வரச் சொல்லுங்கள் பாடலை பாடியவர் சிறுமி கில்மிஷா. அந்த சிறுமி கில்மிஷாவை வீடு தேடிச் சென்று பாராட்டியுள்ளார் சிஙகள அரசின் நீதி அமைச்சர். அப்போது கில்மிஷாவின் காணாமல் ஆக்கப்பட்ட மாமா எங்கே என்பதையும் நீதி அமைச்சர் கூறியிருப்பாரா?

மாபெரும் ஆசான் தோழர் லெனின் நினைவுதினம்

மாபெரும் ஆசான் தோழர் லெனின் நினைவுதினம் 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதரின் உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர். லண்டன் மாநகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிரான்சிலும், ஜெர்மனியிலும் கூடி இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் கூட சில இடங்களில் இந்தக் காட்சிகள் நடக்கின்றன. அந்த 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ம் நாள், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் கண்ணீர் சிந்திய நாள். அவர்கள் அனைவரின் கவனமும் சோவியத் ரசியாவை நோக்கி இருந்தது. சோவியத் ரசியா அன்றைய தினம் மயான அமைதியில் கழிந்தது. ஒவ்வொரு வீடும் இழவு வீடு போல காட்சியளித்தது. பெரியவர்களும், குழந்தைகளும் அழுது தீர்த்தனர். பெண்கள் ஒப்பாரி வைத்தனர். ஆண்கள் கனத்த இதயத்துடன் ஏக்கப் பெருமூச்சு விட்டனர். கடுமையான குளிர் வாட்டியது. வீதிகள் பனிப் பாளங்களால் மூடப்பட்டிருந்தன. சரியாக மாலை 4.00 மணி வானொலியில் ஒரு அறிவிப்பு வந்தது. “எழுந்து நில்லுங்கள் தோழர்களே! தோழர் லெனின் அடக்கம் செய்யப்படுகிறார்.” சோவியத் ரசிய மக்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அமெரிக்க ஐரோப்பிய தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஐந்து நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. உலக மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர் லெனினுடைய சவ அடக்கம் இப்படித்தான் நடைபெற்றது. உலகமே எழுந்து நின்று அவருக்கு இறுதி விடைகொடுத்து அனுப்பியது. லெனினுக்கு முன்னரும் சரி, அவருக்குப் பின்னரும் சரி, எந்தத் தலைவருக்கும் இந்த மரியாதை கிடைக்கவில்லை. எந்த நாட்டுத் தலைவராக இருந்தாலும் அவருடைய மரணம் அந்த நாட்டு மக்களை மட்டுமே பாதிக்கும். ஆனால் லெனினுடைய மரணம் உலகையே குலுக்கியது

அகிம்சை வழியில் இந்தியா சுதந்திரம்

அகிம்சை வழியில் இந்தியா சுதந்திரம் அடைந்ததாக கூறிவருபவர்கள் இன்று தவிர்க்க முடியாமல் ஆயுத வழியில் போராடிய சுபாஷ் சந்திரபோசை நினைவு கூறுகின்றனர். ஒருபுறம் ஆயுதம் ஏந்தி போராடுபவர்களை வன்முறையாளர்கள் என்று அழைத்துக்கொண்டு மறுபுறம் ஆயுதம் ஏந்திப் போராடியவரை நினைவு கூறுகின்றனர். இதேபோல் ஈழத்தில் ஆயுதம் ஏந்திப் போராடியவர்களை பயங்கரவாதிகள் என்று கூறுவோர் விரைவில் அவர்களை தியாகிகள் என்று அழைக்கும் காலம் வரும். ஏனெனில் காலம் அற்புதமானது. அது மகத்தான மாற்றங்களை நிகழ்த்தவல்லது.

நாம் உயிர்களுடன் உறவு கொள்வதில்லை.

நாம் உயிர்களுடன் உறவு கொள்வதில்லை. கருத்துகளுடனே உறவு கொள்கிறோம் - நித்தியானந்தா சுவாமிகள் அதாவது அவர் ரஞ்சிதாவுடன் உறவு கொள்ளவில்லையாம். ரஞ்சிதா என்ற கருத்துடன் உறவு கொண்டாராம். மை லாட்! என்ன கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லுறார். பிடிச்சு உள்ளே போடுங்க. அப்புறம் “நித்தியானந்தாவை பிடித்து சிறையில் போடவில்லை. நித்தியானந்தா என்ற கருத்தை பிடித்து அடைத்திருப்பதாக நாம கதை சொல்லுவோம்” அப்பதான் இவர் திருந்துவார்.

கலைஞர் மகன் ஸ்டாலின்

கலைஞர் மகன் ஸ்டாலின் ஸ்டாலின் மகன் உதயநிதி உதயநிதி மகன் இன்பநிதி கூடவே துர்க்கா ஸ்டாலின் அது சரி, கலைஞர் தத்தெடுத்து வளர்த்த அந்த ஈழ அகதிச்சிறுவன் மணி எங்கேயடா?

சில தருணங்களில் துப்பாக்கியைவிட

சில தருணங்களில் துப்பாக்கியைவிட செருப்பை சிறந்த ஆயுதமாக மக்கள் பயன்படுத்துகின்றனர். சுமந்திரனுக்கு தேவை ஜனநாயக தோல்வி என்றால் அதை மிகத் தெளிவாக அவரது கட்சிக்குள்ளேயே கொடுக்கப்பட்டுள்ளது. இனியாவது மக்களின் உணர்வுகளை சுமந்திரன் புரிந்துகொண்டு திருந்த வேண்டும் இல்லையேல் அரசியலை விட்டு ஒதுங்க வேண்டும். செய்வாரா?

ஆழ்ந்த இரங்கல்களும்

ஆழ்ந்த இரங்கல்களும் வன்மையான கண்டனங்களும்

அமைச்சரின் “சிறை தலைப் பொங்கல்”

அமைச்சரின் “சிறை தலைப் பொங்கல்”😂 பணத்தை வசூலித்து தலைமைக்கு கொடுத்தது உண்மை என்றால் , பேசாமல் அப்புரூவராக மாறி தலைமையக் காட்டிக் கொடுக்கலாமே? காப்பாற்றாத தலைமைக்காக எதற்கு சிறையில் வாட வேண்டும்?

ஒருமுறை சென்னையில் ஒரு லாட்ஜில்

ஒருமுறை சென்னையில் ஒரு லாட்ஜில் பொலிசார் ரெய்டு செய்து விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களையும் ஆண்களையும் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்காக காவல் நிலையத்தில் அவர்களின் பெயர் விபரங்களை கேட்டபோது அதில் ஒருவர் தான் இலங்கை அமைச்சர் என்று கூறியிருக்கிறார். உடனே அதிர்ச்சியடைந்த பொலிசார் சென்னையில் இலங்கை தூதுவருடன் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்கள். தூதுவர் “ஆம். அவர் எங்கள் அமைச்சர் தான்” என்று உறுதிப்படுத்தியதும் பொலிசார் “ஏன் சார் முதலே அமைச்சர் என்று கூறியிருக்கலாமே. இப்படி அசிங்கப்பட்டிருக்க தேவையில்லையே” என்று கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் பத்திரமாக அனுப்பிவிட்டார்கள். ஆனாலும் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துவிட்டது. அந்த மலையக அமைச்சரின் நிலை கண்டு சந்தி சிரித்தது இப்போது இன்னொரு தலைவர் தமிழ்நாட்டில் இருந்து நாலு நடிகைகளை அழைத்து வந்து தேசிய தைப் பொங்கல் என்கிறார். பாவம் மலையக மக்கள். வருடா வருடம் மண் சரிவில் பாதிக்கப்படுகின்றனர். குளவி கடியில் இறக்கின்றனர். சம்பள உயர்வு கேட்டு போராடுகின்றனர். இதுதான் மலையகம் 200?

இரண்டு வருடங்களுக்கு முன்னர்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் “கம்பவாணர் அருணகிரிநாதர்” என்னும் பட்டம் சுமந்திரனுக்கு வழங்கப்பட்டது அதென்ன “கம்பவாணர் அருணகிரிநாதர்” ? அப்படியென்றால் “தரம் மிக்க போராளி” என்று பொருளாம் அது சரி, சுமந்திரன் சேர் செய்த போராட்டம் என்ன? யாராவது கூறுவீர்களா? பட்டம் கொடுப்பவருக்கும் வெட்கம் இல்லை பட்டம் பெறுபவருக்கும் வெட்கம் இல்லை மறப்பது மக்கள் வழமை. நினைவூட்ட வேண்டியது நமது கடமை குறிப்பு - இந்த பதிவிற்கும் கீழே உள்ள படத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று நான் சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்?😂

செய்தி – அமைச்சர் ஜீவன் தொண்டைமான்

செய்தி – அமைச்சர் ஜீவன் தொண்டைமான் இளமையாகவும் அழகாகவும் இருக்கிறார். எங்கள் நாட்டில் இப்படி ஒரு அமைச்சர் இல்லையே என்று வேதனையாக இருக்கு – நடிகை ஜஸ்வராய் ராஜேஸ் தெரிவிப்பு அமைச்சர் தொண்டைமான் நாலு நடிகைகளை அழைத்து வந்து தேசிய தைப்பொங்கல் கொண்டாடியபோது மலையகத்தில் காய்கறிகளின் விலை விபரம் காரட் 1 கிலோகிராம் 1,450 ரூபாய் ப்ரோக்கோலி 1 கிலோகிராம் 3,600 ரூபாய் முட்டைக்கோஸ் 1 கிலோகிராம் 570 ரூபாய் முள்ளங்கி 1 கிலோகிராம் 160 ரூபாய் கிழங்கு 1 கிலோகிராம் 370 ரூபாய் நோகோல் 1 கிலோகிராம் 270 ரூபாய் குடைமிளகாய் சிவப்பு 1 கிலோகிராம் 800 ரூபாய் குடைமிளகாய் மஞ்சள் 1 கிலோகிராம் 700 ரூபாய் துளசி 1 கிலோகிராம் 2600 ரூபாய் சீன முட்டைக்கோஸ் 1 கிலோகிராம் 1,300ரூபாய் சிவப்பு முட்டைக்கோஸ் 1 கிலோகிராம் 3,200ரூபாய் செலரி 1 கிலோகிராம் 700 ரூபாய் கொத்தமல்லி தழை 1 கிலோகிராம் 450ரூபாய் பனிப்பாறை 1 கிலோகிராம் 2300 ரூபாய் சாலட் 1 கிலோகிராம் 1600ரூபாய் சிவப்பு சாலட் 1 கிலோகிராம் 1800ரூபாய் மிஞ்சி 1 கிலோகிராம் 900ரூபாய் இனி மரக்கறிகளின் விலைகள் குறைந்துவிடும் அல்லவா அமைச்சர் அவர்களே?

இந்திய தூதரும் பத்து வெங்காயங்களும்

• இந்திய தூதரும் பத்து வெங்காயங்களும் இதுவரை தீர்வு பெற்று தருவதாக கூறி வந்த இந்திய தூதர் இப்போது தம்மால் வலியுறுத்த மட்டுமே முடியும் என்கிறார். இன்னும் சில வருடம் கழித்து தம்மால் வலியுறுத்தவும் முடியாது என்று கூறப் போகின்றார். ஆனால் அப்பவும் நம் தலைவர்கள் இந்தியா தீர்வு பெற்று தரும் என கூறிக்கொண்டிருப்பார்கள். புலிகளை அழிக்க இந்திய அரசு ஏன் சிங்கள அரசுக்கு உதவி செய்தது என்பதை இப்பவாவது தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். வடக்கு கிழக்கில் தமிழர் நிலங்களையும வளங்களையும் சுரண்டும் இந்தியாவை விரட்டி அடிக்க வேண்டும்.