Thursday, November 29, 2018

2013 முதல் இதுவரை 2346 பதிவுகளை முகநூலில் எழுதியுள்ளேன்

2013 முதல் இதுவரை 2346 பதிவுகளை முகநூலில் எழுதியுள்ளேன். எந்தவொரு பதிவும் அனைவராலும் முழுமையாக எற்றுக் கொள்ளப்பட்டதில்லை.
யாராவது ஒரு சிலர் எனது பதிவுகளை எதிர்த்து விமர்சிப்பது குறித்து நான் ஆச்சரியப்பட்டதில்லை. மாறாக யாரும் விமர்சிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட்டிருப்பேன்.
எந்தவொரு திறமையான ஆசிரியர் படிப்பித்தாலும் அந்த வகுப்பறையில் உள்ள 30 வீதமான மாணவர்கள் மட்டுமே முழுமையாக விளங்கிக் கொள்வர் என ஆய்வுகள் கூறுகின்றன.
அப்படியிருக்க எனது பதிவுகள் அனைவராலும் விளங்கி எற்றுக்கொள்ளப்படுவதாக நான் நம்பியிருந்தால் இந்நேரம் குறைந்தது நான்கு புரட்சிகளாவது நடந்து முடிந்திருக்க வேண்டும்.
ஆனால் உண்மை யதார்த்தம் அவ்வாறு இல்லை என்பது எனக்கு நன்கு தெரியும்.
இங்கு கவனிக்கத்தக்க விடயம் என்னவெனில் எனது கருத்துகளை விமர்சிப்பவர்கள் தமது அறிவின் உயரத்தை மட்டும் காட்டவில்லை, தாம் எந்த வர்க்கத்தின் நலன் குறித்து பேசுகிறோம் என்பதையும் காட்டுகிறார்கள்.
ஏனெனில் எந்தவொரு சொல்லின் பின்னும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிந்திருக்கும் என லெனின் கூறியிருக்கிறார்.
தமிழ் மக்கள் விடுதலை பெற வேண்டும் என்ற நோக்கில் நான் கருத்துகளை தெரிவித்து வருகிறேன். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.
எனவே எனது கருத்துக்கள் தமிழ் மக்களை அடக்கி ஆளும் இலங்கை இந்திய அரசுகளுக்கு எரிச்சலைக் கொடுக்கும் என்பதை அறிவேன்.
ஆனால் தாங்களும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதாக கூறிக்கொள்ளும் சிலர் எரிச்சல் அடைவதன் மூலம் தங்களை அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள்.
இவர்களை மக்களுக்கு இனங்காட்டவாவது நான் தொடர்ந்து எழுத வேண்டும் என்று எனக்கு ஆர்வம் பிறக்கிறது.
குறிப்பு- கீழ்வரும் இணைப்பில் நான் முகநூலில் இதுவரை எழுதிய 2346 பதிவுகளை வாசிக்கலாம்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்கள் தம் உறவுகளுக்காக குரல் கொடுப்பது தவறா?

•புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்கள்
தம் உறவுகளுக்காக குரல் கொடுப்பது தவறா?
ஈழத் தமிழர்கள் போன்று யூத இன மக்களும் அகதிகளாக பல நாடுகளில் வாழ்ந்தார்கள்.
பல நாடுகளில் அகதிகளாக அவர்கள் வாழ்ந்து வந்தபோதும் தமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற பொதுவான எண்ணம் அவர்களுக்கு இருந்தது.
தமக்கு ஒரு நாடு வேண்டும் என்று அவர்கள் அனைவரும் போராடி வந்ததால்தான் அவர்களால் இஸ்ரவேல் என்று ஒரு நாட்டை அடைய முடிந்தது.
அன்று அகதிகளாக வாழ்ந்த யூதர்களால் ஒரு நாட்டை அடைய முடிந்தது என்றால் இன்று அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களால் ஏன் விடுதலையை பெற முடியவில்லை?
இதற்கு பல காரணங்களும் சூழ்நிலைகளும் இருந்தாலும் மிக முக்கிய காரணம் எந்தவொரு யூதனும் போராடும் யூதனைப் பார்த்து “இஸ்ரேலில் வந்து போராடு” என்று கூறவில்லை.
ஆனால் ஈழத் தமிழர்களில்தான் “ தைரியமான ஆள் என்றால் இலங்கையில் வந்து போராடு” என்று முகநூலில் சவால் விட்டு எழுதும் புத்திசாலிகள்(?); இருக்கிறார்கள்
புலம்பெயர் தமிழன் ஈழத்தில் பாடசாலை கட்ட பணம் கொடுக்கிறான்
புலம்பெயர் தமிழன் ஈழத்தில் கோயில் கட்ட பணம் கொடுக்கிறான்
புலம்பெயர் தமிழன் ஈழத்தில் மருத்துவமனை கட்ட பணம் கொடுக்கிறான்
புலம்பெயர் தமிழன் வறிய மக்களுக்கு பொருளாதார உதவி செய்கிறான்
புலம்பெயர் தமிழன் முன்னாள் போராளிகளுக்கும் உதவி செய்கிறான்
இவ்வாறு புலம்பெயர் தமிழன் பல உதவிகளை செய்யும்போது இலங்கையில் வந்து செய் என்று கூறாதவர்கள், புலம்பெயர் தமிழன் அரசியல் கருத்தை தெரிவித்தவுடன் “இலங்கையில் வந்து போராடு” என்கிறார்கள்.
முள்ளிவாய்க்காலில் வீழ்த்தப்பட்ட எமது தமிழ் இனம் இந்தளவு விரைவாக மீண்டும் எழுந்து நிற்கிறது என்றால் அது புலம்பெயர் தமிழர்களின் அளவில்லா உதவியும் மகத்தான அர்ப்பணிப்பும் இன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
அடுத்த கட்ட போராட்டத்தை புலம்பெயர் தமிழர்களே முன்னெடுக்க வேண்டும் என முதன் முதலில் கூறியவர்கள் புலிகளே. ஆம். இது ஒரு சரியான கணிப்புதான்.
அதேபோன்று போராடும் புலம்பெயர் தமிழர்களை இலங்கையில் வந்து போராடும்படி முதன் முதலில் அழைப்பு விடுத்தவர் கோத்தபாய ராஜபக்சதான்.
கோத்தபாயாவின் அழைப்பை எம்மால் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் அவர் வெள்ளை வானில் எற்றி கொல்வதற்காகவே அவ்வாறு அழைப்பு விடுத்தார்.
ஆனால் அதன்பின்பு அதே அழைப்பை சுமந்திரன் நக்கலாக விடுத்தார். பாவம். இப்போது அவரே சிங்கள பொலிஸ் பாதுகாப்பு இன்றி தமிழர் பிரதேசங்களுக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்.
இன்று புலம்பெயர் நாடுகளில் சுமார் 7 லட்சம் ஈழத் தமிழர்கள் இருக்கிறார்கள். இந்த 7 லட்சம் தமிழர்களும் ஈழத்தில் வந்துதான் அரசியல் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று கோருவது,
முதலாவதாக, அந்த 7 லட்சம் தமிழர்களின் ஜனநாயக உரிமையை மறுப்பதற்கு ஒப்பாகும்.
இரண்டாவதாக, இது கோத்தபாயாவின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு உதவியாக இருக்கிறது
மூன்றாவதாக, இது போhராட்டம் என்றால் ஈழ மண்ணில் மட்டும்தான் நடத்த வேண்டும் என்ற முட்டாள்தனத்தை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.
நான்காவதாக, மொத்தத்தில் இது தமிழ் மக்களின் நலனில் இருந்து கூறப்படவில்லை. மாறாக இலங்கை இந்திய அரசுகளிpன் நலனுக்காக கூறப்படுகின்றது என்று அர்த்தமாகும்.
அண்மையில் சீக்கிய மக்கள் லண்டனில் ஒரு ஒன்றுகூடலை நடத்தியிருந்தார்கள். 2020ல் காலிஸ்தானுக்காக வாக்கெடுப்பு நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
இது நடக்குமா நடக்காதா என்பதற்கு அப்பால் மிக முக்கியமான ஒரு விடயத்தை ஈழத் தமிழர்கள் கவனிக்க வேண்டும்.
அதாவது ஒரு சீக்கியன்கூட இதுவரை இவர்களைப் பார்த்து “தைரியம் இருந்தால் இந்தியா வந்து போராடு” என்று எழுதவில்லை.
இவ்வாறு இவர்கள் ஒற்றுமையாக இருப்பதால்தான் நடந்த சீக்கிய படுகொலைகளுக்காக பிரதமர் மோடி அவர்களிடம் தவிர்க்க முடியாமல் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
சீக்கிய மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி ஈழத் தமிழரிடம் இதுவரை மன்னிப்பு கேட்காமைக்கு காரணம் “இந்திய ராணுவம் அப்பாவி மக்களை கொல்லவில்லை. புலிகளைத்தான் கொன்றது” என்று எழுதும் சிலர் நம்மிடையே இருப்பதுதான்.
புலம்பெயர் தமிழர்கள் போராடுவது இலங்கை அரசுக்குத்தானே எரிச்சல் கொடுக்க வேண்டும். ஏன் இந்திய உளவுப்படைகளுக்கு கொடுக்கிறது என அப்பாவியாய் சிலர் கேட்கிறார்கள்.
புலம்பெயர் தமிழர்களும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழக தமிழர்களும் இப்போது ஒன்று சேர்ந்து போராட ஆரம்பித்துள்ளார்கள். இதுவே இந்திய உளவுப்படைகளுக்கு எரிச்சலைக் கொடுக்கிறது.
ஈழத் தமிழர்களும் தமிழ்நாட்டு தமிழர்களும் ஒன்று சேர்ந்து போராடினால் தமிழ் இனம் விடுதலை பெற்றுவிடும் என்பது மட்டுமல்ல இந்தியாவே சுக்கு நூறாக உடைந்துவிடும் என்று இந்திய உளவுப்படை அச்சப்படுகிறது.
எனவேதான் பல்வேறு வழிகளில் இலங்கை இந்திய உளவுப்படையினர் புலம்பெயர் தமிழர்களின் போராட்டத்தை நசுக்க முனைகின்றனர்.
“இலங்கையில் வந்து போராடு” என்று எழுதுவோரின் வேர்களை ஆராய்ந்தால் அவை இவ் உளவுப்படைகளில் இருந்தே வருவதை நாம் நன்கு கண்டு கொள்ளலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் உலகத்தில் யாரும் எங்கிருந்தும் போராடலாம். இதைக்கூட உணர்ந்து கொள்ளாமல் முட்டாள்தனமாக “இலங்கையில் வந்து போராடு” என்று எழுதுபவர்களை என்னவென்று அழைப்பது?
குறிப்பு- கணவான்களே கூறுங்கள்!
ஒவ்வொரு வருடமும் ஜெனிவா வந்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்த வெள்ள இனப் பெண்மணியும் இலங்கையில் வந்துதான் குரல் கொடுக்க வேண்டுமா?

இந்திராகாந்தி இருந்திருந்தால் தமிழீழம் கிடைத்திருக்குமா?

•இந்திராகாந்தி இருந்திருந்தால்
தமிழீழம் கிடைத்திருக்குமா?
இந்திராகாந்தி அம்மையாரின் நினைவு தினமான நேற்று அவர் இருந்திருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் என வழக்கம்போல் நம்மவர்கள் சிலர் எழுதியுள்ளனர்.
ஆனால் இந்திராகாந்தி அம்மையார் உயிரோடு இருந்திருந்தாலும் ராஜீவ் காந்தி செய்ததையே செய்திருப்பார் என்பதே உண்மையாகும்.
(1)பாலஸ்தீன விடுதலையை அங்கீகரித்த இந்திராகாந்தி அம்மையார் தமிழீழ விடுதலையை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை
(2)பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் அரபாத்திற்கு செங்கள வரவேற்பளித்த இந்திராகாந்தி அம்மையார் ஈழவிடுதலை இயக்கங்களை ஒருபோதும் சந்தித்ததில்லை.
(3) பாலஸ்தீன விடுதலை இயக்கம் வெளிப்படையாக இந்தியாவில் அலுவலகம் அமைத்து இயங்க அனுமதித்த இந்திராகாந்தி அம்மையார் ஈழ விடுதலை இயக்கங்கள் தமிழ்நாட்டில் வெளிப்படையாக இயங்க அனுமதிக்கவில்லை.
(4) இலங்கையில் அலன் தம்பதிகள் என்ற வெள்ளை இனத்தவர் இருவரைக் கடத்தி சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று ஈபிஆர்எல்எவ் இயக்கம் கோரியபோது ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் அதற்கு சம்மதித்தார். ஆனால் இந்திராகாந்தி அம்மையார் ஈபிஆர்எல்எவ்; தலைவர்களை பிடித்து அடித்து உதைத்து அலன் தம்பதிகளை விடுதலை செய்வித்தார்.
(5)இந்திராகாந்தி அம்மையார் நினைத்திருந்தால் ஈழ விடுதலை இயக்கங்களை ஒன்றினைத்து பயிற்சி மற்றும் ஆயுதங்களை வழங்கியிருக்க முடியும்.
(6) ஆனால் அவரோ மொத்தம் 36 இயக்கங்களில் 5 இயக்கங்களுக்கு மட்டுமே அதுவும் தனித் தனியாகவே பயிற்சி கொடுத்தார்.
(7) இந்தியாவிடம் பயிற்சி பெற்ற மொத்த போராளிகளின் எண்ணிக்கை ஜந்நூறை தாண்டாது. அதுபோல் பயிற்சி பெற்ற 10 போராளிகளுக்கு தலா ஒரு ஆயுதம் என்ற அளவிலேயே ஆயுதமும் வழங்கப்பட்டது.
(8) ஆயுதம் போதாது என்று இயக்கங்கள் கூறியபோது “ தரப்படும் ஆயுதம் தற்பாதுகாப்பிற்கேயொழிய தாக்குதலுக்கு அல்ல” என்று இந்தியா பதில் கூறியது.
(9)அதேவேளை இயக்கங்கள் தாங்களாக உலக சந்தைகளில் ஆயுதம் வாங்குவதையும் இந்தியா தடுத்தது. புளட் இயக்கம் இறக்குமதி செய்த 150 ரைபிள் துப்பாக்கிகளை இந்திய அரசு பறிமுதல் செய்தது.
(10) முழு இலங்கையையும் இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காகவே இந்திராகாந்தி அம்மையார் இயக்கங்களுக்கு சிறிதளவு பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கினார்.
(11) பாகிஸ்தானை பிரித்து பலவீனப்படுத்தவே வங்க தேச விடுதலையை இந்திராகாந்தி அம்மையார் ஆதரித்தார். ஆனால் முழு இலங்கையையும் ஆக்கிரமிக்கும் நோக்கம் இருந்தமையினால் தமிழீழ விடுதலையை அவர் ஆதரிக்கவில்லை.
(12) எல்லாவற்றுக்கும் மேலாக தமிழீழம் விடுதலை அடைந்தால் அது தமிழ்நாடு விடுதலைக்கு உத்வேகம் கொடுக்கும் என்ற அச்சம் இந்திராகாந்தி அம்மையார் உட்பட அனைத்து இந்திய தலைவர்களுக்கும் உண்டு.
(13) ஏனெனில் தமிழ்நாடு தனி நாடானால் இந்தியா சுக்கு நூறாக உடையும். எனவே இந்தியா உடைவதற்கு வழி வகுக்கும் தமிழீழ விடுதலைக்கு இந்தியா ஒருபோதும் ஆதரவளிக்காது.
எனவே இந்திராகாந்தி அம்மையார் இருந்திருந்தாலும் தமிழீழம் கிடைத்திருக்காது என்பதே உண்மையாகும்.

தமிழ்செல்வன், லக்ஸ்மன் கதிர்காமர் இரண்டு கொலைகள், இரண்டு நியாயங்கள்!

தமிழ்செல்வன், லக்ஸ்மன் கதிர்காமர்
இரண்டு கொலைகள், இரண்டு நியாயங்கள்!
• இரண்டு பேர்கள்
லக்ஸ்மன் கதிர்காமர் - இவர் ஒரு தமிழர். இவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. ஆனால் இவரை நியமன எம்.பி யாக்கி இவருக்கு வெளிநாட்டு அமைச்சு பதவியை சந்திரிக்கா அரசு வழங்கியிருந்தது.
இவர் பல நாடுகள் புலிகள் இயக்கத்தை தடை செய்வதற்கு முன் நின்று உழைத்தவர். அதுமட்டுமல்ல சிங்கள அரசின் தமிழ் இனப்படுகொலைகளை நியாயப்படுத்தியவர். சிங்கள ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்து செம்மணியில் புதைக்கப்பட்ட மாணவி கிரிசாந்தியை பயங்கரவாதி என்று கூசாமல் பொய் சொன்னவர்.
தமிழ்செல்வன்- இவர் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். இவரே புலிகள் தரப்பிற்கு தலைமை தாங்கி பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டவர். புலிகள் இயக்கத்தை தடை செய்த நாடுகள்கூட அரசியல்துறை பொறுப்பாளர் என்ற ரீதியில் இவருடன் தொடர்பு கொண்டிருக்கின்றனர்.
• இரண்டு கொலைகள்
லக்ஸ்மன் கதிர்காமர் தனது வீட்டில் உள்ள நீச்சல்குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலை தொர்பாக கைது செய்யப்பட்ட நபர் 19 வருட சிறைவாசத்தின் பின் நீதிமன்றத்தால் குற்றமற்றவர் எனக்கூறி நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்செல்வன் தனது அலுவலகத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது இலங்கை அரசால் விமானம் மூலம் குண்டு வீசிக் கொல்லப்பட்டார். தவறுதலாக தமிழ்செல்வன் மீது குண்டு போட்டுவிட்டோம் என இலங்கை அரசு வருத்தம் தெரிவிக்கும் என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தவேளை “எமது இலக்கு தமிழ்செல்வனே. தெரிந்தே அவர் மீது குண்டு வீசிக் கொன்றோம்” என்று இலங்கை அரசு கூறியது.
• இரண்டு நியாயங்கள்.
இங்கு எமது நோக்கம் இவர்களின் கொலை சரியா? பிழையா? என்று ஆராய்வதல்ல. மாறாக, கதிர்காமருக்கு ஒரு நியாயம். தமிழ் செல்வனுக்கு இன்னொரு நியாயம். இது என்ன நியாயம் ? என்று கேட்பதே.
ஏனெனில் லக்ஸ்மன் கதிர்காமல் கொல்லப்ட்டபோது ஒரு வெளிநாட்டு அமைச்சரைக் கொன்றது தவறு என்று கண்டனம் தெரிவித்த எவரும் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது ஒரு அரசியல்துறை பொறுப்பாளரைக் கொன்றது தவறு என்று கூறவில்லை.
இதை நான் கேட்டால் உடனே ஒரு கூட்டம் “பாலன்தோழர் நன்றாய் புலி வால் பிடிக்கிறார்” என்று பதில் எழுதுவார்கள். நான் கேட்கும் கேள்விக்கு இது உரிய பதில் இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும். அவர்களிடம் பதில் இல்லாததால்தான் இப்படி எனக்கு புலி முத்திரை குத்துகிறார்கள் என்பது எனக்கும் தெரியும்.
இன்னும் சிலர் “தமிழ்செல்வன் அரசியல்துறை பொறுப்பாளராய் இருந்தாலும் அவரும் புலிதானே. எனவே அவரும் பயங்கரவாதிதான். அதனால் அவரை குண்டு வீசிக் கொன்றது சரிதான்” என்பார்கள்.
இப்படி கூறுபவர்களிடம் உரையாடுவதற்கு எதுவும் இல்லை. ஏனெனில் இவர்கள்தான் “பிரபாகரன் பயங்கரவாதி. எனவே அவரின் பத்து வயது மகன் பாலச்சந்திரனும் பயங்கரவாதிதான். எனவே அந்த சிறுவனைக் கொன்றதும் சரிதான்” என கூறிக் கொண்டிருப்பவர்கள்.

தமிழ் பன்றி ஒன்று மகிந்த பன்றி கும்பலுடன் சேர்ந்துவிட்டது.

தமிழ் பன்றி ஒன்று மகிந்த பன்றி கும்பலுடன் சேர்ந்துவிட்டது.
20 கோடி ரூபாவுக்கு இந்த பன்றி விலை போய்விட்டதாக கூறுகிறார்கள்.
கூடவே பிரதி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
5ம் திகதிக்கிடையில் இன்னும் எந்தெந்த பன்றிகள் ஏலம் எடுக்கப்படும் என்று தெரியவில்லை.
தன்னுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு 3 பன்றிகள் தொடர்பில் இருப்பதாக கருணா கூறுகிறார்.
ஆனால் இந்த பன்றிகள் எல்லாம் “பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்” என்று லெனின் கூறியது இன்றும் சரியென்று நிரூபித்து காட்டுகிறார்கள்.
இந்த பாராளுமன்றத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று இன்னும் யாராவது நம்புகிறார்களா தெரியவில்லை.
ஆனால் தீர்வு பெறவில்லை என்றால் அரசியலை விட்டு ஒதுங்குவேன் என்று கூறிய சுமந்திரனைக் காணவில்லை.
யாராவது அவரைக் கண்டால் ராஜினாமா கடிதம் எழுதி முடிந்துவிட்டதா என்று கேட்டு சொல்லுங்கள்.

கோடிகள் குவிந்தாலே

கோடிகள் குவிந்தாலே
கோவணத்தையும் நான் மறப்பேன் -முருகா
துரோகிகள் புடை சூழ
அமைச்சராய் நான் வருவேன்
அஞ்சுதல் நிலைமாறி கெஞ்சுதல் உருவாக
ஏழ் பிறப்பிலும் இனத்தை காட்டிக் கொடுப்பேன்
மகிந்த திருமகனே அழகிய பெருமகனே
காண்பதெல்லாம் உனது முகம்
காலமெல்லாம் எனது மனம் உருகும்
பனி எது மழை எது கடல் எது
சகலதும் உன் கருணையில் கிடைப்பது
வருவாய் மகிந்தா தருவாய் மேலும் கோடி ரூபா!

இவர்களும் மாவீரர்கள்தான்

•இவர்களும் மாவீரர்கள்தான்
இவர்களுடைய தியாகங்களும் மதிக்கப்படல் வேண்டும்!
தமிழர்களின் விடுதலைக்காகப் போராடி மரணித்தவர்களை மாவீரர்களாக போற்றி ஒவ்வொரு வருடமும் நினைவு கூர்ந்து வருகிறோம்.
இதில் தமிழ்நாட்டில் இருந்து ஈழத் தமிழர்களுக்காக உயிர் துறந்தவர்களையும் நாம் நினைவு கூரக் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஈழத் தமிழர்களுக்காக 18 தமிழக தமிழர்கள் தமிழ்நாட்டில் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள். இது பலரும் அறிந்த செய்திதான்.
ஆனால் தமிழ்நாட்டில் இருந்துவந்து பல இளைஞர்கள் ஈழத்தில் போராடி வீர மரணம் அடைந்திருக்கிறார்கள். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஈழத்திலேகூட பலர் அறிந்திராத செய்தி.
சாத்தூர் சிவகாசியைச் சேர்ந்த செங்கண்ணன் என்பவர் கரும்புலியாக பலாலி இராணுதளத்தை தாக்கி 11.11.93 யன்று வீர மரணம் அடைந்திருக்கிறார்.
தமிழகத்தில் இருந்து வந்து ஈழத்தில் போராடி வீரமரணம் அடைந்த மேலும் சில மாவீரர்கள் விபரம் வருமாறு,
பிரிவு: கரும்புலி
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்:செங்கண்ணன்
இயற்பெயர்: தனுஸ்கோடி செந்தூர்
ஊர்: சாத்தூர், சிவகாசி(தமிழகம்)
வீரப்பிறப்பு: 25.01.1975
வீரச்சாவு: 11.11.1993
நிகழ்வு: யாழ்ப்பாணம் பலாலி படைத்தளத்தினுள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.
நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: உமா
இயற்பெயர்: வேலுச்சாமி இந்துமதி
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 27.05.1972
வீரச்சாவு: 11.12.1999
நிகழ்வு: கிளிநொச்சி பரந்தன் பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: மணியரசி
இயற்பெயர்: செல்லத்துரை கமலாதேவி
ஊர்: தமிழகம்.
வீரப்பிறப்பு: 02.02.1977
வீரச்சாவு: 19.04.1996
நிகழ்வு: யாழ்ப்பாணம் தென்மராட்சி கோட்டத்தை கைப்பற்ற
மேற்கொள்ளப்பட்ட சூரியகதிர்-2
நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: பத்மநாபன்
இயற்பெயர்: பி.பத்மநாபன்
ஊர்: திருச்சி, தமிழகம்.
வீரப்பிறப்பு: 27.07.1963
வீரச்சாவு: 16.03.1988
நிகழ்வு: தமிழகத்தின் திருச்சியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின்போது வீரச்சாவு
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சுனில்
இயற்பெயர்: கதிரவன்
ஊர்: தமிழகம்.
வீரச்சாவு: 11.04.1988
நிகழ்வு: முல்லைத்தீவு ஒட்டங்குளத்தில்
இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: இனியன்(றஸ்கின்)
இயற்பெயர்: முத்தையா இராமசாமி
ஊர்: தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 23.07.1962
வீரச்சாவு: 11.12.1991
நிகழ்வு: மன்னார் மருதமடு வேப்பங்குளம் பகுதியில்
சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
நிலை: 2ம் லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: உதயசந்திரன்
இயற்பெயர்: சேதுபாணடித்தேவர்
ராமமணி சேகரன்மகாதேவர்
ஊர்: திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 05.05.1969
வீரச்சாவு: 09.06.1992
நிகழ்வு: மன்னார் சிறுநாவற்குளத்தில் சிறிலங்கா படையினர் மீதான அதிரடி தாக்குதலின் போது வீரச்சாவு
பிரிவு: கடற்புலி
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: ஈழவேந்தன்
இயற்பெயர்: துரைராசன் குமரேசன்
ஊர்: தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 25.05.1969
வீரச்சாவு: 20.11.1992
நிகழ்வு: தமிழீழக் கடற்பரப்பில் வீரச்சாவு
துயிலுமில்லம்: எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: சச்சு
இயற்பெயர்: அன்ரனி சிறிகாந்த்
ஊர்: பியர், இந்தியா.
வீரப்பிறப்பு: 04.09.1975
வீரச்சாவு: 20.12.1992
நிகழ்வு: மன்னார் நானாட்டன் மாதிரிக்கிராமம்
படை முகாம்களுக்கிடையில் அமைந்துள்ள காவலரண்கள்
மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: குணதேவன்(லக்ஸ்மணன்)
இயற்பெயர்: அம்மனாரி தென்னரசு
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 01.01.1966
வீரச்சாவு: 13.05.1996
நிகழ்வு: அம்பாறை 11ம்கொலனியில் அமைந்திருந்த
காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: பெரியதம்பி(விஸ்ணு)
இயற்பெயர்: சிவானந்தம் முகேஸ்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 31.05.1975
வீரச்சாவு: 19.05.1996
நிகழ்வு: திருகோணமலை கீலக்கடவெல படைமுகாம் மீதான
தாக்குதலில் வீரச்சாவு
துயிலுமில்லம்: மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது
.
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: குற்றாளன்
இயற்பெயர்: கந்தையா கலைச்செல்வன்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 08.08.1969
வீரச்சாவு: 16.07.1996
நிகழ்வு: மன்னார் பள்ளிமுனைப்பகுதியில்
படையினரின் சுற்றிவளைப்பின் போது சயனைட்
உட்கொண்டு வீரச்சாவு
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சுதா
இயற்பெயர்: வீரப்பன் இலட்சுமணன்
ஊர்: தஞ்சாவூர், தமிழ்நாடு
வீரப்பிறப்பு: 28.10.1980
வீரச்சாவு: 05.07.1999
நிகழ்வு: மன்னார் பள்ளமடு பகுதியில்
சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடிமோதலில்
வீரச்சாவு
துயிலுமில்லம்: கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: குருசங்கர்
இயற்பெயர்: பழனியாண்டி மகேந்திரன்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 18.04.1973
வீரச்சாவு: 25.07.1996
நிகழ்வு: முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள்
நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம்
பெறும்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது..
.
எத்தனை பேர் தமிழ்நாட்டில் இருந்து வந்து போராடினார்கள்? அதில் எத்தனை பேர் வீர மரணம் அடைந்தார்கள்? என்ற முழு விபரம் எனக்கு கிடைக்கவில்லை.
வேண்டுகோள்-
தமிழ்நாட்டில் இருந்துவந்து ஈழத்தில் போராடி மரணித்தவர்களின் முழு விபரம் தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தல் வேண்டும்.
எமக்காக போராடி வீரமரணம் அடைந்த தமிழக இளைஞர்களை ஈழத் தமிழர்கள் வருடந்தோறும் சிறப்பாக நினைவு கூரவேண்டும்.
தமிழ்நாட்டில் மாவீரர் நினைவு நிகழ்வுகளை நடத்துவோர் தமிழ்நாட்டு மாவீரர்களையும் இனி குறிப்பிட்டு மதிப்பளிக்க வேண்டும்.

முக்கிய அறிவித்தல்

•முக்கிய அறிவித்தல்
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 39321 வாக்குகள் பெற்றார்.
இதை அவர் தற்போது 25 கோடி ரூபாவுக்கு மகிந்த ராஜபக்சவுக்கு விற்றிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எனவே அவருக்கு வாக்களித்த மக்கள் ஒவ்வொருவருக்கும் சேரவேண்டிய தொகை 6357 ரூபா 92 சதம்.
எனவே அவருக்கு வாக்களித்த மக்கள் வெட்கப்படாமல் அவரை அழைத்து தங்களுக்கு சேர வேண்டிய தொகையை பெற்றுக் கொள்ளவும்.
கிழக்கு மாகாண மக்களின் நலனுக்காகவே தான் மகிந்த கும்பலுடன் சேர்ந்திருப்பதாக வியாழேந்திரன் கூறுகிறார். எனவே அந்த மக்களுக்குரிய பணத்தை நிச்சயம் தருவார் என நம்புகிறோம்.
அடுத்து இதேபோல் வடிவேல் எம்.பி அவர்கள் பதுளை மாவட்டத்தில் 52318 வாக்குகள் பெற்றுள்ளார்.
அவரும் இதனை 20 கோடி ரூபாவுக்கு மகிந்த ராஜபக்சவுக்கு விற்றிருப்பதாக அறிய வருகிறது.
எனவே அவருக்கு வாக்களித்த மக்கள் ஒவ்வொருவருக்கும் சேரவேண்டிய தொகை 3822 ரூபா 77 சதம் ஆகும்.
அவருடைய தொலை பேசி இலக்கம்- 0774004994
எனவே அவருக்கு வாக்களித்த மக்கள் சங்கடப்படாமல் அவரை அழைத்து தங்களுக்குரிய பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
மக்களே!
இது உங்கள் பணம். எனவே தயங்காமல் பெற்றுக் கொள்ளுங்கள்.

பூனை கறுப்பா வெள்ளையா என்பதல்ல

•பூனை கறுப்பா வெள்ளையா என்பதல்ல
அது எலியைப் பிடிக்கிறதா என்தே முக்கியம்!
ரணிலா அல்லது மகிந்தவா என்பது தமிழருக்கு முக்கியம் இல்லை. மாறாக யார் தமிழருக்கு தீர்வு தருவார் என்பதே முக்கியம்.
மகிந்த தனது ஆட்சிக் காலத்தில் தமிழர்களை இனப் படுகொலை செய்தது மட்டுமல்ல தமிழருக்கு எந்த தீர்வையும் தரவில்லை.
அதனால்தான் மகிந்தவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு மைத்திரியையும் ரணிலையும் ஆட்சியில் அமர்த்த தமிழ் மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
அதேபோன்று மைத்திரியும் ரணிலும் சேர்ந்து புதிய அரசியல் அமைப்பு சட்டத்தை தயாரித்தனர். தமிழ் மக்களுக்கான தீர்வும் அதில் உள்ளடக்கப்படுவதாக தெரிவித்தனர்.
ஆனால் தீர்வை முன்வைக்கும் நேரத்தில் வழக்கம்போல் அதை குழப்பிவிட்டனர். தற்போது மீண்டும் மகிந்தவை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்.
அதுமட்டுமல்ல மகிந்த தீர்வு தருவார் என்று மீண்டும் நம்பும்படி தமிழ் மக்களிடம் அவர்கள் கோருகின்றனர்.
சரி, அப்படியென்றால் தீர்வு தருவதாக எழுத்தில் உறுதியளிக்கும்படி கோரினால் அதற்கு சம்மதிக்க மறுக்கின்றனர்.
இப்படியே மாறி மாறி தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனேரே யொழிய யாரும் இதுவரை தீர்வை தரவில்லை.
ஒரு பத்திசாலி பூனை கறுப்பா அல்லது வெள்ளையா என பார்க்கமாட்டான். அது எலி பிடிக்குமா என்றே பார்ப்பான்.
அதேபோன்று கொஞ்சமாவது சுயமாக சிந்திக்கும் ஆற்றல் உள்ள எந்தவொரு தமிழனும் மகிந்தவும் ரணிலும் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் தீர்வு தரமாட்டார்கள் என்பதை புரிந்துகொள்வான்.
மகிந்த, ரணில், மைத்திரி யாருமே தீர்வு தர மாட்டார்கள் என்றால் அப்ப யார்தான் தமிழ் மக்களுக்கு தீர்வு தருவார்கள்?
பாராளுமன்றம் என்பது லெனின் கூறியது போல் பன்றி தொழுவமே. இதில் உழலும் எந்தப் பன்றிகளும் தமிழ் மக்களுக்கு தீர்வு தரப் போவதில்லை.
1948 முதல் இதையே நாம் கண்டு வருகிறோம். பாராளுமன்றத்தை நம்பினால் இனியும் இதுவே வரலாறாக இருக்கப் போகிறது.
கெஞ்சிப் பெறுவதற்கு உரிமை ஒன்றும் பிச்சை அல்ல. மாறாக இது போராடிப் பெறுவது. போராடுவோம்!

வாத்தி மகன் மட்டும் மக்கு அல்ல

வாத்தி மகன் மட்டும் மக்கு அல்ல
சிலவேளைகளில் வாத்தியும் மக்குதான்!
வாத்தி மகன் மட்டுமல்ல சில வாத்தியும் மக்குதான் என்பதை வாத்தி வியாழேந்திரன் நிரூபித்துள்ளார்.
கடந்த வருடம் கிளிநொச்சி எம்பி சிறீ வாத்தி மழை வேண்டி யாகம் செய்தார். அவர் மழைக்காக யாகம் செய்ததுகூட பரவாயில்லை மழை வரும் என நம்பி குடை பிடித்துக்கொண்டு கும்பக் குடத்தை சுமந்து வந்தார்.
இப்போது வியாழேந்திரன் எம்பி கிழக்கு மாகாண மக்களின் நலனுக்காக 11 அம்ச கோரிக்கைகளை வைத்து கட்சி மாறியதாக கூறுகிறார்.
அவர் கட்சி மாறியதோ அல்லது 25 கோடி ரூபா பணம் வாங்கியதோ அல்லது பிரதி அமைச்சர் பதவி பெற்றதோ கூட பரவாயில்லை. ஆனால் தமிழ் மக்களின் நலனுக்காகவே இவற்றை செய்தேன் என்று கூறியிருப்பதைத்தான் தாங்க முடியவில்லை.
மகிந்த மட்டுமல்ல சிங்கள ஆட்சியாளர்கள் ஒருவர்கூட தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை இதுவரை காப்பாற்றவில்லை. அப்படியிருக்க தனக்கு கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படும் என வியாழேந்திரன் எந்த அடிப்படையில் நம்புகிறார்?
அதுமட்டுமல்ல, சிங்கள ஆட்சியாளர்கள் தமது சிங்கள பிரதேசங்களையே அபிவிருத்தி செய்யவில்லை. மாறாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தமது பிரதேசங்களை விற்றுக் கொண்டிருக்கின்றனர். அப்படியிருக்க தமிழ் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய பணம் தருவார்கள் என்று எந்த அடிப்படையில் வியாழேந்திரன் நம்புகிறார்?
சிறுவர் பாலியல் விபச்சாரத்தில் உலகில் இலங்கை முதலிடம் வகிக்கிறது. தமது சிங்கள சிறுவர்கள் பாலியல் விபச்சாரம் செய்வது பற்றி கவலை அற்ற மகிந்த ராஜபக்ச கிழக்குமாகாண தமிழ் சிறுவர் மீது அக்கறை கொள்வார் என்று வியாழேந்திரன் எப்படி நம்புகிறார்?
தனது 11வயது மகளை விபச்சாரம் செய்யும்படி சிஙகள தாயொருவர் வற்புறுத்தியதாக அண்மையில் செய்திகள் வந்தன. இப்படி சிங்கள பெண்களே விபச்சாரம் செய்யும் நிலையில் இருப்பது குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கும் மகிந்த ராஜபக்ச கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் விதவைகள் மறுவாழ்வுக்கு உதவுவார் என்று வியாழேந்திரன் எப்படி நம்புகிறார்?
ஏற்கனவே இராஜதுரை, தேவநாயகம் போன்ற பல தமிழர் கட்சி மாறி அமைச்சர்களாக இருந்து கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியவில்லை. அப்படியிருக்க தன்னால் மட்டும் பிரதி அமைச்சராக இருந்து செய்ய முடியும் என வியாழேந்திரன் எப்படி நம்புகிறார்?
கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு பல பிரச்சனைகள் இருப்பது உண்மைதான். அது குறித்து தமிழ்தேசியகூட்டமைப்பு அக்கறையற்று இருப்பதும் உண்மைதான். ஆனால் அதற்கு கட்சி மாறி அரசில் சேருவது தீர்வு இல்ல.
வியாழேந்திரன் கிழக்கு மாகாண தமிழ் மக்களை 25 கோடி ரூபாவுக்கு விற்றுவிட்டார். அவர் இன் இனத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என்றே வரலாறு பதிவு செய்யும்.

என்ன பாப்பா பார்த்துக் கொண்டு நிற்கிறாய்?

என்ன பாப்பா பார்த்துக் கொண்டு நிற்கிறாய்?
அடுத்த தீபாவளிக்குள் தீர்வு வந்துவிடும் என்று சம்பந்தர் தாத்தா சொன்னவர். அதுதான் தீபாவளி வந்திடுச்சு. அவர் சொன்ன தீர்வு வருதா என்று பார்க்கிறன்.
குறிப்பு- அடுத்த தீபாவளிக்குள் தீர்வு வந்துவிடும் என்று இந்த தீபாவளியின் போதும் கூறி தமிழ் மக்களை ஏமாற்றாத சம்பந்தர் அய்யாவுக்கு பாராட்டுகள்.

போர் இன்னும் ஓயவில்லை!

•போர் இன்னும் ஓயவில்லை!
ஒருவர் படம் சரியில்லை என்றால் எமது முதல் கேள்வி அந்த படத்தை பார்த்தாயா என்பதே.
அதேபோல் ஒருவர் தோசை ருசியில்லை என்றால் எமது முதல் கேள்வி நீ தோசை சாப்பிட்டாயா? என்பதே.
ஆனால் ஒருவர் மார்க்சியம் சரியில்லை என்றால் யாருமே அவரிடம் “நீ மார்க்சியத்தை படித்திருக்கிறாயா?” என்று கேட்பதில்லை.
ஒரு விடயத்தை பற்றி எதுவுமே தெரியாமல் அந்த விடயம் பற்றி யாரும் எதுவும் கூற முடியுமென்றால் அது இன்று மார்க்கியம் மட்டுமே.
பொதுவாக, ஒரு விபத்து நடந்தால் யாரும் வாகனம் மீது குற்றம் கூறுவதில்லை. மாறாக அதை ஓட்டிய டிறைவர் மீதே குறை கூறுவார்கள்.
ஆனால் மார்க்சியவாதிகள் தவறு செய்தால் மட்டும் மார்சியவாதிகள் மீது கூறாமல் மார்க்சிசயத்தின் மீது குறை கூறுகிறார்கள்.
மார்க்ஸ் உட்பட அனைவரும் மேற்கு ஜரோப்பாவிலேதான் புரட்சியை எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக முதல் புரட்சி ரஸ்சியாவிலே வெடித்தது.
அடுத்து சீனாவிலே அது தேசிய முதலாளிகளை உள்ளடக்கி புதிய ஜனநாக புரட்சியாக தொடர்ந்தது.
ரஸ்சியாவிலே தோழர் லெனின் ஆரம்பித்து வைத்த போர் இன்னும் ஓயவில்லை. அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
நெருக்கடிகள் அதிகரிக்கின்றன. எனவே அடுத்த புரட்சி எங்கே வெடிக்கும் என சர்வதேசம் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறது.
யாருமே எதிர்பார்க்காத விதத்தில் அது ஈழத்தில்தான் நிகழப் போகிறது. ஈழத் தமிழர்களின் போராட்டம் இந்தியாவை சுக்கு நூறாக உடைத்து தேசிய இனங்களின் விடுதலையை அது நிகழ்த்தப் போகிறது.
தமிழ் தேசியத்தை மறுப்பவர்கள் உண்மையான மார்க்சியவாதிகளாக இருக்க முடியாது என்ற உண்மையை காலம் காட்டி நிற்கிறது.
ரஸ்சிய புரட்சியை நினைவு கூர்வோம்.
போரை தொடர்ந்து முன்னெடுத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்போம்!

சம்பந்தர் அய்யா- தம்பி சுமந்திரன்! யாரப்பா அந்த தேவநேசன் நேசய்யா?

சம்பந்தர் அய்யா- தம்பி சுமந்திரன்! யாரப்பா அந்த தேவநேசன் நேசய்யா?
சுமந்திரன்- ஏன் ஜயா? அவர் முன்னர் யாழ்ப்பாணம் அரசாங்க அதிபராக இருந்தவர்.
சம்பந்தர் அய்யா- அவர் தனக்கு கிடைத்த “தேசமான்ய” பட்டத்தை திருப்பிக் கொடுத்திட்டாராமே! அவர் ஏன் தம்பி இப்படி கருமங்களை யெல்லாம் பண்ணுறார்?
சுமந்திரன் - ஏன் ஜயா அது நல்லதுதானே? நான்கூட ஜனாதிபதியை "எங்கடை உப்பை தின்ற நாய்" என்றெல்லாம் பேசியதை படித்திருப்பீர்களே?
சம்பந்தர் அய்யா- புரியாமல் பேசாதையும் தம்பி. இனி இந்த பட்டம் வாங்கின நம்மட ஆட்களை யெல்லாம் இப்படி திருப்பி கொடுங்க என்று எழுதப் போறாங்கள். அதுமட்டுமல்ல ஜனாதிபதி சட்டத்தரணி பதவியை சுமந்திரன் துறப்பாரா? சம்பந்தர் எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டு விலகுவாரா என்றெல்லாம் பேஸ்புக்கில் கிழிக்கப் போறாங்கள்.
சுமந்திரன்- என்னய்யா சொல்லுறீங்க? ஜனாதிபதி சட்டத்தரணியை பெறுவதற்கு எவ்வளவு கஸ்டப்பட்டேன். இப்ப அதை ராஜினாமா பண்ணச் சொன்னால் எப்படி செய்யிறது. அதைவிட உங்களாலும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டிட்டு இருக்க முடியாது .
சம்பந்தர் அய்யா- சரி சரி நான் பார்த்துக்கொள்கிறேன். இனியாவுது வாயை திறக்குமுன் கொஞ்சம் யோசியுங்கோ தம்பி.