Thursday, November 29, 2018

வாத்தி மகன் மட்டும் மக்கு அல்ல

வாத்தி மகன் மட்டும் மக்கு அல்ல
சிலவேளைகளில் வாத்தியும் மக்குதான்!
வாத்தி மகன் மட்டுமல்ல சில வாத்தியும் மக்குதான் என்பதை வாத்தி வியாழேந்திரன் நிரூபித்துள்ளார்.
கடந்த வருடம் கிளிநொச்சி எம்பி சிறீ வாத்தி மழை வேண்டி யாகம் செய்தார். அவர் மழைக்காக யாகம் செய்ததுகூட பரவாயில்லை மழை வரும் என நம்பி குடை பிடித்துக்கொண்டு கும்பக் குடத்தை சுமந்து வந்தார்.
இப்போது வியாழேந்திரன் எம்பி கிழக்கு மாகாண மக்களின் நலனுக்காக 11 அம்ச கோரிக்கைகளை வைத்து கட்சி மாறியதாக கூறுகிறார்.
அவர் கட்சி மாறியதோ அல்லது 25 கோடி ரூபா பணம் வாங்கியதோ அல்லது பிரதி அமைச்சர் பதவி பெற்றதோ கூட பரவாயில்லை. ஆனால் தமிழ் மக்களின் நலனுக்காகவே இவற்றை செய்தேன் என்று கூறியிருப்பதைத்தான் தாங்க முடியவில்லை.
மகிந்த மட்டுமல்ல சிங்கள ஆட்சியாளர்கள் ஒருவர்கூட தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை இதுவரை காப்பாற்றவில்லை. அப்படியிருக்க தனக்கு கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படும் என வியாழேந்திரன் எந்த அடிப்படையில் நம்புகிறார்?
அதுமட்டுமல்ல, சிங்கள ஆட்சியாளர்கள் தமது சிங்கள பிரதேசங்களையே அபிவிருத்தி செய்யவில்லை. மாறாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தமது பிரதேசங்களை விற்றுக் கொண்டிருக்கின்றனர். அப்படியிருக்க தமிழ் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய பணம் தருவார்கள் என்று எந்த அடிப்படையில் வியாழேந்திரன் நம்புகிறார்?
சிறுவர் பாலியல் விபச்சாரத்தில் உலகில் இலங்கை முதலிடம் வகிக்கிறது. தமது சிங்கள சிறுவர்கள் பாலியல் விபச்சாரம் செய்வது பற்றி கவலை அற்ற மகிந்த ராஜபக்ச கிழக்குமாகாண தமிழ் சிறுவர் மீது அக்கறை கொள்வார் என்று வியாழேந்திரன் எப்படி நம்புகிறார்?
தனது 11வயது மகளை விபச்சாரம் செய்யும்படி சிஙகள தாயொருவர் வற்புறுத்தியதாக அண்மையில் செய்திகள் வந்தன. இப்படி சிங்கள பெண்களே விபச்சாரம் செய்யும் நிலையில் இருப்பது குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கும் மகிந்த ராஜபக்ச கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் விதவைகள் மறுவாழ்வுக்கு உதவுவார் என்று வியாழேந்திரன் எப்படி நம்புகிறார்?
ஏற்கனவே இராஜதுரை, தேவநாயகம் போன்ற பல தமிழர் கட்சி மாறி அமைச்சர்களாக இருந்து கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியவில்லை. அப்படியிருக்க தன்னால் மட்டும் பிரதி அமைச்சராக இருந்து செய்ய முடியும் என வியாழேந்திரன் எப்படி நம்புகிறார்?
கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு பல பிரச்சனைகள் இருப்பது உண்மைதான். அது குறித்து தமிழ்தேசியகூட்டமைப்பு அக்கறையற்று இருப்பதும் உண்மைதான். ஆனால் அதற்கு கட்சி மாறி அரசில் சேருவது தீர்வு இல்ல.
வியாழேந்திரன் கிழக்கு மாகாண தமிழ் மக்களை 25 கோடி ரூபாவுக்கு விற்றுவிட்டார். அவர் இன் இனத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என்றே வரலாறு பதிவு செய்யும்.

No comments:

Post a Comment