Monday, December 31, 2018

•புத்தாண்டு வாழ்த்துக்கள்

•புத்தாண்டு வாழ்த்துக்கள்
2018ம் ஆண்டு முடிந்து 2019 ம் ஆண்டு பிறக்கிறது. அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மசென்ஜர் , வாட்ஸ் அப், வைபர் என பல வழிகளிலும் வாழ்த்து தெரிவித்துக்கொண்டிருப்பவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.
ஒவ்வொரு வருடமும் பிறக்கும்போது இந்த வருடமாவது ஒரு வழி பிறக்கும் என நம்புகிறோம். ஆனால் மேலும் மேலும் நெருக்கடிகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
அவை நாம் தொடர்ந்தும் போராட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை எமக்கு எற்படுத்துகின்றன.
நாம் வீழ்வது கேவலம் அல்ல மாறாக வீழ்ந்து கிடப்பதே கேவலம். மீண்டும் எழுந்து நிற்பதையே வரலாறு பதிவு செய்யும்.
மீண்டும் எழுந்து நிற்போம்! இதுவே இந்த வருடத்தின் வரலாற்று கடமையாக இருக்க வேண்டும்.

•சுமந்திரனும் அவரது குஞ்சுகளும் மன்னிக்கவும் செம்புகளும்!

•சுமந்திரனும் அவரது குஞ்சுகளும் மன்னிக்கவும் செம்புகளும்!
முதல்ல ஒரு கதை சொல்கிறேன். அப்புறம் விடயத்திற்கு வருகிறேன். அப்பதான் உங்களால் சுமந்திரன் மற்றும் அவரது செம்புகளின் நயவஞ்சகத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும்.
ஒரு ஊரில் ஒரு அப்பாவி விவசாயி தன் தோட்டத்தில் விளைந்த வாழைப்பழக் குலையை சந்தையில் விற்பதற்காக தோளில் காவிச் சென்றான்.
அவனிடமிருந்து இந்த குலையை எப்படியாவது ஏமாற்றி பறித்துவிட வேண்டும் என்று நான்கு ஐயர்கள் திட்டம் போட்டனர்.
அதன்படி முதலாவது ஐயர் அந்த விவசாயியைப் பார்த்து “என்னடாப்பா தோளில் நாயைக் காவிச் செல்கிறாய்?” என்று கேட்டார்.
அதற்கு அந்த விவசாயி “ என்ன ஐயரே கண் தெரியவில்லையா? நன்கு பாரும் நான் வாழைக்குலை கொண்டு செல்கிறேன்” என்றான்.
கொஞ்ச தூரம் சென்றதும் இரண்டாவது ஐயர் இந்த விவசாயியைப் பார்த்து “ என்னடாப்பா நாயை தூக்கி செல்கிறாய் “ என்று கேட்டார்.
இப்போது விவசாயிக்கே கொஞ்சம் சந்தேகம் வந்துவிட்டது. வாழைக் குலையை தொட்டு பார்த்துவிட்டு “ இல்லையே. நான் வாழைக்குலையைத்தானே கொண்டு செல்கிறேன்” என்றான்.
இப்படியே மூன்றாவது ஐயரும் கேட்கும்போது விவசாயிக்கு பயம் வந்து விட்டது. ஒருவேளை உண்மையில் நாயைத்தான் காவிச் செல்கிறேனோ என அவன் நினைக்க தொடங்கிவிட்டான்.
இறுதியாக நான்காவது ஐயர் கேட்கும்போது அவன் வாழைக்குலையை போட்டுவிட்டு ஓடிவிட்டான்.
இது எல்லோரும் அறிந்த கதைதான். ஆனால் இதையே “ஜயர்” சுமந்திரனும் அவரது குஞ்சுகளும் மன்னிக்கவும் செம்புகளும் செய்வதை உணரமுடியாமல் இருக்கின்றனர்.
முதலில் சயந்தன் தமிழ்தேசியகூட்டமைப்பு என்பது புலிகள் போட்ட “டீல்” என்றார். பின்பு இப்போது சுமந்திரனும் அதையே வேறு வார்த்தைகளில் கூறுகின்றார்.
ஆனால் இங்கு பலரும் “டீல்” என்ற வார்த்தை பற்றியே கவனம் கொள்கின்றனர். ஆனால் “ஜனநாயக அரசியல் செய்ய புலிகள் அனுமதிக்கவில்லை” என்று சுமந்திரன் கூறிய வரியின் சூழ்ச்சியை கவனிக்க தவறிவிட்டனர்.
முதலாவது, பாராளுமன்ற பாதையில் செல்வது மட்டுமே ஜனநாயக அரசியல் என்றும் ஆயுதம் ஏந்தி போராடுவது பயங்கரவாத அரசியல் என்றும் ஒரு கருத்தை திணிக்கிறார்.
ஆயுதம் ஏந்தி போராடிய இளைஞர்களை அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவாத்தனா “பயங்கரவாதிகள்” என்றார். தமிழ் தலைவர்கள் “எங்கட பொடியன்கள”; என்றனர். ஆனால் முதன் முதலில் கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் சண்முகதாசனே “போராளிகள்” என்று அழைத்தார்.
அதையும் அவர் வீரகேசரிக்கு அனுப்பும் அறிக்கையில் தமிழில் கூறவில்லை. மாறாக சிறிமாவோ பண்டாரநாயக்கா, அமிர்தலிங்கம், கொல்வின் ஆர்டி சில்வா, என் எம். பெரரா தலைவர்களுக்கு மத்தியில் சிங்கள மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக கூறினார்.
அதுமட்டுமல்ல அதே சண்முகதாசன்; “ தமிழ் போராளிகளின் ஆயுதப் போராட்டம் சாரம்சத்தில் ஜனநாயத்திற்கான போராட்டம். அதனை நாம் ஆதரிப்பது கடமை “ என்றார்.
எனவே பாராளுமன்ற பாதையில் பயணிப்பதுதான் ஜனநாயக அரசியல். மற்றவை ஜனநாயக அரசியல் இல்லை என்ற சுமந்திரனின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
இரண்டாவதாக, புலிகள் பாராளுமன்ற பாதையில் பயணித்தவர்களை சுட்டது தவறு என்றால் சுடச்சொன்னவர்கள் எப்படி சரியானவர்கள் ஆவார்?
ஏனெனில் துரையப்பாவை துரோகி என்று சுடச் சொன்னது யார்? பொத்துவில் எம்.பி கனகரத்தினம் கட்சி மாறிய போது அவருக்கு இயற்கையான மரணம் வராது என்று பாராளுமன்றத்தில் பேசியவர் யார்? அமிர்தலிங்கம்தானே. அப்படியென்றால் ஜனநாயக அரசியலை செய்ய அமிர்தலிங்கம் விடவில்லை என்று சுமந்திரன் கூறுவாரா?
மேலும் புலிகள் மட்டுமல்ல ரெலோவும் தர்மலிங்கம் ஆலாலசுந்தரம் போன்றவர்களை சுட்டிருக்கிறது. இவர்களை சுடும்படி சொன்னது இந்திய உளவுப்படை றோ. எனவே ஜனநாயக அரசியல் செய்ய ரெலோவும் இந்திய அரசும் அனுமதிக்கவில்லை என்று ஏன் சுமந்திரன் கூறவதில்லை?
மூன்றாவதாக இலங்கை அரசும் ரவிராஜ் குமார் பொன்னம்பலம் போன்றவர்களை சுட்டிருக்கிறது. ஆனால் இலங்கை அரசு ஜனநாயக அரசியல் செய்ய விடவில்லை என்று சுமந்திரன் இதுவரை கூறியதில்லை. அது ஏன்?
இறுதியாக ஒரு சின்ன குறிப்பு. நெல்சன் மண்டலொ 26 வருடங்களாக சிறை வைக்கப்ட்டிருந்தபோது ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதாக ஒரு அறிக்கை விட்டால் உடனடியாக விடுதலை செய்வதாக தென்னாபிரிக்க அரசு கூறியது. ஆனால் அவர் மறுத்துவிட்டார். அவர் மனைவி வின்னி மண்டலோ மீது பல கொலைக் குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனாலும் எந்தவொரு தென்னாபிரிக்கரும் நெல்சன் மண்டலோ செய்த அரசியல் ஜனநாயக அரசியல் இல்லை என்று கூறியது கிடையாது.(இன்றும் அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் நெல்சன் மண்டலோ பெயர் உள்ளது)
நாளைய வரலாறு போராளிகளின் பெயரையே நினைவில் வைத்திருக்கும் சுமந்திரன்களின் பெயரை அல்ல.

நான் எழுதிய “ சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்”

நான் எழுதிய “ சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்” மற்றும் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல்களை பொதுமைப் பதிப்பகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
எதிர்வரும் 4.1.19 யன்று சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் அரங்கு எண் 222ல் அமைந்துள்ள பொதுமைப்புத்தக பதிப்பகத்தில் அவ் நூல்களை பெற்றுக்கொள்ளலாம்

வெள்ள மீட்பில் ராணுவம் பங்காற்றியது

வெள்ள மீட்பில் ராணுவம் பங்காற்றியது
அதை அரசின் கடமை என்று சொல்லாம்.
ஆனால் இந்த மனுசன் வந்ததும் அல்லாமல்
கிணற்றில் தானே இறங்கி தூர் வாரியதை 
பாராட்டாமல் இருக்க முடியாது.
வெள்ளை வேட்டி கசங்காமல் அரசியல் செய்யும்
எம் தலைவர்களுக்கு மத்தியில் இவரின் சேவை
ஒரு அதிசயம்தான்.
ஆனால் இப்படியே நாலுவாட்டி வந்து சென்றார் என்றால்
அடுத்துமுறை கிளிநொச்சி எம்.பி யானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இவரைப் பார்த்தாவது எமது தமிழ் தலைவர்கள் மக்களுக்கு சேவை செய்ய முன்வரட்டும்.
இனி இந்தியாவுடன் பேசுகிறோம், அமெரிக்காவுடன் பேசுகிறோம் என்றெல்லாம் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது.

வெள்ளத்தை பார்வையிட்ட சிங்கள அமைச்சரும் தமிழ் தலைவரும்

•வெள்ளத்தை பார்வையிட்ட
சிங்கள அமைச்சரும் தமிழ் தலைவரும்
என்னத்தை சொல்ல?
நான் கருத்து எதுவும் கூறவிரும்பவில்லை.
நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

நீங்க 300 வருடமாகத்தான் இந்தியா.

நீங்க 300 வருடமாகத்தான் இந்தியா.
ஆனால் நாங்க 3000 வருடமாக தமிழர்கள்!
மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவருமே லண்டனில் அகதியாக வாழ்ந்தவர்கள்தான்
லெனின் கூட புரட்சிக்கு முன்னர் அகதியாக வாழ்ந்தவர்தான்
ஆனால் மார்க்ஸ் லெனின் ஆகியோரை உயர்த்திப்பிடிக்கும் இந்திய கம்யுனிஸ்ட்டுகளுக்கு ஈழ அகதிகள் மட்டும் ஏன் கேவலமாக தெரிகிறார்கள்?
தீபெத் அகதிகளை வெளியேற்றும்படி கோராத கம்யுனிஸ்ட்டுகள்,
வங்கதேச அகதிகளை வெளியேற்றும்படி கோராத கம்யுனிஸ்டுகள்,
பர்மா அகதிகளை வெளியேற்றும்படி கோராத கம்யுனிஸ்டுகள்,
ஈழ தமிழ் அகதிகளை மட்டும் வெளியேற்றும்படி கோருவது ஏன்?
37 வருடமாக அகதிகளாக இருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று குரல் கொடுக்க வேண்டிய கம்யுனிஸ்டுகள் அவர்களை அடைக்க வேண்டும் என்று கோருவது ஏன்?
லட்சக்கணக்கில் வடநாட்டில் இருந்து வருபவர்களால் தமிழ்நாட்டின் வளங்கள் பறிக்கப்படுவது குறித்து அக்கறை கொள்ளாத கம்யுனிஸ்ட்டுகள் ஈழ அகதிகளால் தமிழக வளம் பறிக்கப்படுவதாக கூறுவது ஏன்?
இது ஏதோ ஒரு கம்யுனிஸ்ட் கட்சி தலைவரின் கருத்து என்றால் அக் கருத்திற்கு இதுவரை எந்த கம்யுனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
ஈழ அகதிகளுக்கு ஆதரவாக இதுவரை ஏன் ஒரு கம்யுனிஸ்ட் தலைவரும் அறிக்கைவிட வில்லை?
தமிழ்நாட்டிற்கு மலையாளி வரலாம்,
தமிழ்நாட்டிற்கு தெலுங்கர் வரலாம்
தமிழ்நாட்டுக்கு கன்னடர் வரலாம்
தமிழ்நாட்டிற்கு சேட்டுகள்கூட வரலாம்
ஆனால் தொப்புள்கொடி உறவு ஈழத் தமிழன் வரக்கூடாதா?
கனடாவில் தமிழன் இல்லை. ஆனால் அது 3 லட்சம் ஈழ அகதிகளை சேர்த்து வாழுகின்றது
லண்டனில் தமிழன் இல்லை. அனால் அது ஒரு லட்சம் ஈழ அகதிகளை சேர்த்து வாழுகின்றது.
இந்தியாவில் 7 கோடி தமிழர் வாழுகின்றனர். அதுவும் தமிழ்நாடு தமிழரின் தாயகம். அப்படியிருக்கும்போது ஏன் ஈழ தமிழ் அகதிகளை மட்டும் சேர்க்க முடியாது?
இந்தியாவில் தீபெத் அகதிகள் சுதந்திரமாக திரிகின்றனர்.
இந்தியாவில் பர்மா , வங்கதேச அகதிகளும் சுதந்திரமாக திரிகின்றனர்.
ஆனால் இந்தியாவில் ஈழ அகதிகளை மட்டும் அடைத்து வைக்கும்படி கம்யுனிஸ்ட்டுகள் கோருகின்றனர்.
இந்திய பிரதமர் மாலைதீவுக்கு கொடுத்த பணம் 14000 கோடி ரூபா
இந்திய பிரதமர் பூட்டானுக்கு கொடுத்த பணம் 4500 கோடி ரூபா
ஆனால் தமிழ்நாட்டுக்கு கொடுத்த புயல் நிவாரண நிதி வெறும் 378 கோடி ரூபா மட்டுமே
அதேவேளை ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டில் இருந்து வரியாக 85000கோடி ரூபாவை இந்திய அரசு பெற்றுக்கொள்கிறது.
தமிழ்நாட்டிற்கு ஏன் இந்த வஞ்சனை என்று ஒரு கம்யுனிஸ்ட் தலைவராவது கேட்டிருக்கிறாரா?
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழ் அகதியை வெளியேற்ற வேண்டும் என்று கூறும் தைரியம் எப்படி இவர்களுக்கு வந்தது?
ஏன் இந்த அவலம் தமிழனுக்கு வந்தது?
ஏனென்றால் தமிழன் அடிமையாக இருப்பதே இதற்கு காரணம்.
தோழர் தமிழரசன் கூறியது போல் தமிழ்நாடு விடுதலை பெற்றிருந்தால்; தமிழனுக்கு இந்த நிலை வந்திருக்குமா?
சிந்தியுங்கள் தமிழர்களே!

இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்கள்

இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்கள்
இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள்
ஆனால் தமிழக ஆளுநர் மட்டும் தான் அப்பாற்பட்டவர் என்று நினைக்கிறார்.
எழுவர் விடுதலை குறித்து தமிழக அரசு தீர்மானம் அனுப்பி 100 நாட்களுக்கு மேலாகிவிட்டது
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஏன் தாமதம் என்று கேட்டு 48 நாட்களை தாண்டிவிட்டது.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டால் 48 மணி நேரத்திற்குள் பதில் தரவேண்டும் என்கிறார்கள்.
ஆனால் தமிழக ஆளுநர் எதற்குமே பதில் அளிக்காமல் இருக்கிறார்.
இந்த சட்டம். நியாயம் நீதிமன்றம் எல்லாம் மதிக்க வேண்டும் என்று மக்களுக்கு போதிப்பவர்கள் தாங்கள் அதனை மதிப்பதில்லை.
இதில் கொடுமை என்னவென்றால் தமிழக ஆளுநரிடம் ஏன் தாமதம் என்று கேட்க வேண்டிய தமிழக அரசு ஆளுநரிடம் கேட்க செல்லும் மக்களின் மோட்டார் சயிக்கிள் பேரணியை தடை செய்கிறது.
அப்படியென்றால் தமிழக அரசும் எழுவர் விடுதலையை வேண்டுமென்றே தாமதம் செய்கிறதா?
ஒன்றில் விடுதலை செய்ய வேண்டும். இல்லையேல் விடுதலை செய்ய முடியாது என்று சொல்ல வேண்டும்.
அதைவிடுத்து எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தால் என்ன அர்த்தம்?
ஏற்கனவே 27 வருடம் அவர்கள் கழித்து விட்டார்கள். இன்னும் எத்தனை வருடம் அனுபவிக்க வேண்டும் என இவர்கள் நினைக்கிறார்கள்?
தமிழன் இளிச்சவாயன் என்று இவர்கள் நினைக்கிறார்களா?
வெகுவிரைவில் இந்திய அரசு இதன் விளைவை அனுபவிக்கும்!

•போங்கடா நீங்களும் உங்கட கருப்பு சட்டையும்!

•போங்கடா நீங்களும் உங்கட கருப்பு சட்டையும்!
ஈழத் தமிழருக்காக இறந்தவர்கள் என்று முத்துக்குமாருக்கும் அப்துல் ரவூப்பிற்கும் அஞ்சலி செலுத்துகிறீர்கள்.
ஆனால் கொடைக்கானலில் ஈழத் தமழருக்காக உயிர்விட்ட தமிழ்மாறன் பெயரை ஏன் உச்சரிக்க மறந்தீர்கள்?
சரி. பரவாயில்லை. தமிழகத்தில் இருந்து வந்து ஈழத்தில் போராடி உயிர் விட்டவர்களில் ஒருவர் பெயரைக்கூட ஏன் கூற தயங்குகிறீர்கள்?
அவர்கள் செய்தது தியாகம் இல்லை என்கிறீர்களா? அவர்கள் பெயர் உச்சரிக்க தகுதியில்லை என்று கருதுகிறீர்களா?
சரி. எப்படியாவது போங்கள். ஆனால் தமிழீழத்திறற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் போட்டிருக்கிறீர்கள்.
அதேவேளை தமிழகத்தில் இருக்கும் சிறப்புமுகாமை மூட வேண்டும் என்று ஒரு தீர்மானம் போட ஏன் உங்களுக்கு தோன்றவில்லை?
பாவணிசாகரில் இருந்து அகதிகளை வெளியேற்ற வேண்டும் அல்லது அடைத்து வைக்க வேண்டும் என்று கம்யுனிஸ்ட் தலைவர் கேட்கிறார்.
அதற்கு எதிராக ஒரு கண்டனம்கூட விடமுடியாத நீங்கள் தமிழீழத்திற்கு வாக்கெடுப்பு கோருவதை மகிந்த ராஜபக்ச அறிந்தால் அந்தாள் குண்டியால் சிரிப்பார்.
போங்கடா நீங்களும் உங்கட கருப்பு சட்டையும்.

•போதும். இனியாவது அகதி வாழ்வுக்கு முடிவு கட்டுங்கள்!

•போதும். இனியாவது அகதி வாழ்வுக்கு முடிவு கட்டுங்கள்!
தமிழ்நாட்டில் தற்போது சுமார் ஒரு லட்சம் ஈழ அகதிகள் இருக்கின்றனர். இவர்கள் கடந்த 35 வருடங்களாக அகதிகளாகவே இருக்கின்றனர்.
ஜரோப்பா மற்றும் கனடா அவுஸ்ரேலியா நாடுகளுக்கு சென்ற ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு அவர்கள் கல்வி கற்க வேலை செய்ய என அனைத்து வசதிகளும் உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளுக்கு மட்டும் உயர் கல்வி கற்கும் வாய்ப்புகூட மறுக்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள தீபெத் மற்றும் அகதிகள் எல்லாம் சுதந்திரமாக திரிய அனுமதித்த இந்தியஅரசு ஈழ அகதிகளை மட்டும் கைதிகள் போல் நடத்துகின்றது.
இதுபோதாதென்று பாவானிசாகரில் கம்யுனிஸ் கட்சி தலைவர் ஒருவர் ஈழ அகதிகளை வெளியேற்ற வேண்டும் அல்லது அடைத்து வைக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
கடந்த 35 வருடமாக மௌனமாக இருந்த தலைவர் அதுவும் கம்யுனிஸ்ட் தலைவர் இப்போது அகதிகளுக்கு எதிராக வன்மத்தை கக்கியுள்ளது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது.
அதேவேளை தம்மை தரக்குறைவாக ஏசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி பவாணிசாகர் அகதிமுகாமில் இருக்கும் அகதிகள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர் வடநாட்டில் இருந்து தமிழ்நாட்டக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
ஏற்கனவே லட்சக்கணக்கான மலையாளிகள் , கன்னடர், தெலுங்கர்கள் தமிழகத்தில் வாழுகின்றனர்.
இவர்களுக்கு எதிராக குரல் கொடுக்காத கம்யுனிஸ்ட் தலைவர் ஈழ அகதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பது ஏன்?
இவர்களால் பறிபோகாத தமிழக வளம் ஈழ அகதிகளால் பறிபோவதாக காட்டுவதன் மர்மம் என்ன?
போதும். இந்த நிலை தமிழகம் முழுவதும் பரவுவதற்கு முன்னரே முடிவு காண வேண்டும்.
தமிழகத்தில் தொடர்ந்து வாழ விரும்பும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குங்கள். தாயகம் திரும்ப விரும்புவோரை உடனே அனுப்பி வையுங்கள்.
மாறாக உருவாகிவரும் ஈழத் தமிழர் மற்றும் தமிழக தமிழர்களின் ஒற்றுமையை குழப்புவதற்காக அகதிகள் மீது தமிழக தமிழர்களை தூண்டிவிட வேண்டாம்.

கலா இப்ப என்ர தங்கைச்சி மாதிரி.


சேர்!
கலா இப்ப என்ர தங்கைச்சி மாதிரி.
ஒரு சின்ன மினிஸ்டர் பதவி கொடுக்க முடியுமா?
குடுத்த காசை திருப்பி தரச்சொல்லி சுவிஸ்குமார் கேட்கிறானாம்
பாவம். ஏதாவது பார்த்துச் செய்யுங்க சேர்
- சுமந்திரன்

•பள்ளிக்கு போகும் கலா அக்கா

•பள்ளிக்கு போகும் கலா அக்கா
ஆத்தா! நான் பாஸாயிட்டேன் !
மீண்டும் அமைச்சராயிட்டேன் !!
அதுவும் கல்வி அமைச்சராயிட்டேன் ?
என்னாத்தா சொக் ஆயிட்டியா?
புலி , வழக்கு எல்லாம்
நானும் ரணிலும் போட்ட
நாடகம் ஆத்தா!