Thursday, December 27, 2018

போர் முடிந்து 9 வருடங்கள் ஆகிவிட்டன.

போர் முடிந்து 9 வருடங்கள் ஆகிவிட்டன.
போர் முடிந்த பின் சரணடைந்த இவர்களுக்கு என்ன நடந்தது என்றே இன்று வரை தெரியவில்லை.
இறந்தவர்கள் பட்டியலில் சேர்ப்பதா அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்ப்பதா என்றும் தெரியவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் 658 நாட்களாக வீதியில் உட்கார்ந்து போராட்டம் நடத்துகின்றனர்.
தமிழ் மக்களுக்கு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மாகாணசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் ஏன் பிரதேசசபை உறுப்பினர்கள்கூட இருக்கிறார்கள்.
ஆனால் இவர்களால்கூட இந்த காணாமல் போனவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை.
ஆயுதம் எந்திப் போராடியதாலே எந்த தீர்வையும் தமிழ் மக்களால் பெற முடியவில்லை என்று கூறும் சம்பந்தர் அய்யா கூட 658 நாட்காக அறவழியில் போராடும் இந்த மக்களுக்கு ஒரு தீர்வை பெற்று தர முடியவில்லை.
இன்று சர்வதேச மனிதவுரிமை தினமாம். “ தமிழ் மக்கள் குழம்ப தேவையில்லை. இலக்கை அடையலாம்” என்று சம்பந்தர் அய்யா அறிக்கை விட்டுள்ளார்.
எல்லாம் சரிதான். ஆனால் இங்கு இலக்கு என்று சம்பந்தர் அய்யா எதைக் கூறுகிறார்?
தனக்கு பதவி மற்றும் சொகுசு பங்களாக்கள் பெறுவதுதான் இலக்கு என்று சம்பந்தர் அய்யா நினைக்கிறாரா?
போங்கடா நீங்களும் உங்கட மனிதவுரிமை தினமும்!

No comments:

Post a Comment