Thursday, December 27, 2018

எப்படி ஈழத் தமிழினம் இப்படி ஒரு அதியசயத்தை நிகழ்த்துகிறது?

•எப்படி ஈழத் தமிழினம்
இப்படி ஒரு அதியசயத்தை நிகழ்த்துகிறது?
சிங்கள அரசு உதவவில்லை ஏனெனில் பாதிக்கப்பட்டிருப்பது தமிழ் இனம்.
நம்பிய தலைவர்கள் வந்து ஆறுதல் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் பதவியை காப்பாற்றுவதிலே அக்கறையாக இருக்கிறார்கள்.
ஆனாலும் தமிழ் மக்கள் துவண்டுவிட வில்லை. வெள்ள பாதிப்பு என்றவுடன் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரணடு வந்து உதவி செய்கின்றனர்.
கிளிநொச்சியில் எங்கு பார்த்தாலும் இளைஞர் கூட்டம். ஏதோ நல்லூர் திருவிழா போல் கூட்டம் கூட்டமாக வந்து உதவி செய்கிறார்கள்.
புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களும் நிதி சேகரித்து தம்மால் இயன்ற உதவிகளை அனுப்பிக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எந்தவித தலைவரோ அல்லது அமைப்போ அல்லது வழிகாட்டலோ இல்லாமல் தமிழ் இனம் எப்படி ஒருவருக்குகொருவர் இப்படி உதவுகின்றனர் என்பது ஆச்சரியமாக இருக்கலாம்.
அதைவிட அதிசயம் போரினால் பாதிகப்பட்ட ஒரு இனம் எப்படி தைரியமாக இப்படி பாதிப்பை எதிர் கொள்கிறது என்பதே. இத்தகைய மனோதிடம் எப்படி வந்தது?
ஆம். இது போர்த்துக்கேயருக்கு எதிராக நூறு வருடம் போராடிய இனம். இது ஒல்லாந்தருக்கு எதிராக 100 வருடம் போராடிய இனம். ஆங்கிலேயருக்கு எதிராக 150 வருடம் போராடிய இனம். ஒரு லட்சம் இந்திய ராணுவத்திற்கு எதிராக 2 வருடம் போராடிய இனம். 1948ல் இருந்து சிங்கள அரசுக்கு எதிராக போராடி வரும் இனம்.
இத்தகைய வீரம்செறிந்த போராட்ட வரலாறு கொண்ட ஈழத் தமிழினம் மீண்டும் எழுந்து நிற்பது அதிசயம் இல்லை. அது எழுந்து நிற்காவிட்டால்தான் அதிசயம்.

No comments:

Post a Comment