Thursday, February 29, 2024

இந்த தாய் சிந்தும் கண்ணீருக்கு

இந்த தாய் சிந்தும் கண்ணீருக்கு யார்தான் பதில் சொல்வது? இந்த தாய் அப்படி என்ன பெரிதாக கேட்டுவிட்டார்? சாவதற்கு முன் தன் மகனை ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்பதுதானே அவரது 33 வருட ஆசையாக இருந்தது. சிறையில் தூக்குத் தண்டனை கைதியிடம்கூட கடைசி ஆசை என்ன என்று கேட்டு நிறைவேற்றுவார்களே சாந்தனின் கடைசி ஆசை தாயின் கையால் ஒரு குவளை கஞ்சி குடிக்க வேண்டும் என்பதுதானே. அதைக்கூட நிறைவேற்ற முடியாத அளவிற்கு சிறையைவிடக் கொடியதா சிறப்புமுகாம்? ஆட்சியாளரின் அரக்க இதயத்தில் ஒரு துளி இரக்கம்கூட இல்லையா. இதுதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்

உயர்நீதிமன்றத்தின் இக் கேள்வி மூலம்,

உயர்நீதிமன்றத்தின் இக் கேள்வி மூலம், சிறப்புமுகாம் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதும், சாந்தனை உயிருடன் ஊருக்கு அனுப்ப தவறியமைக்கு தமிழக அரசே பொறுப்பு என்பதும் உறுதியாகிறது. தமிழக திராவிட முதல்வர் பதில் சொல்லியாகவே வேண்டும்.

சாந்தனைக் காப்பாற்ற தவறிவிட்டோம்

சாந்தனைக் காப்பாற்ற தவறிவிட்டோம் முருகன், பயஸ் .ஜெயக்குமார் மூவரையுமாவது காப்பாற்ற முனைவோம். அவர்களது விடுதலைக்காக குரல் கொடுப்போம். குறிப்பு – பயஸ் உலகத் தமிழருக்கு எழுதிய கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.

32 வருடம் சிறைவாழ்வின் பின்னரும்

32 வருடம் சிறைவாழ்வின் பின்னரும் கம்பீரமாக வந்தவரை 15 மாத சிறப்புமுகாம் வாழ்க்கை எப்படி சிதைத்துவிட்டது என்பதை பாருங்கள் சிறப்புமுகாமில் நோய்வாய்ப்பட்டதும் பலமுறை தனக்கு மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு சாந்தன் கோரியிருக்கிறார். ஆனால் சிறப்புமுகாமுக்கு பொறுப்பான தமிழக அரசு அவரை மருத்துவமனை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கவில்லை. இறுதியாக அவர் எழுந்து நிற்க முடியாமல் விழுந்து தவழ்ந்த வீடீயோ சமூக ஊடகங்களில் வெளிவந்து மக்களிடமிருந்து எதிர்ப்பு வந்தபின்பே அவர் திருச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். திருச்சி மருத்துவமனையில் அவர் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் மேலதிக சிகிச்சைக்காக என்றுகூறி சென்னை அழைத்துச் சென்றனர். திருச்சியில் இருந்து அரை மணி நேர விமான பயணத்தில் அவரை அழைத்து வந்து தாயாரிடம் ஒப்படைத்திருக்க முடியும். ஆனால் சிகிச்சைக்காக என்று 8 மணி நேரம் பயணம் செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர். சென்னையில்கூட அவர் தன் தம்பியுடன் உற்சாகமாக உரையாடும் வீடியோ வந்தது. அவர் தாயிடம் செல்கிறார். அவர் தாயின் 33 வருடம் நிறைவேறப்போகிறது என்று எல்லோரும் மகிழ்வுடன் இருக்க திடீரென்று அவர் இறந்தவிட்டதாக செய்தி வருகிறது. மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்தவருக்கு நள்ளிரவு ஒரு மணிக்கு மாரடைப்பு வந்ததாகவும் 4 மணிக்கு இறந்துவிட்டார் என்றும் தமிழக அரசு கூறுகின்றனது. தமிழக அரசின் இந்த மாரடைப்பு மரண செய்தியை நம்ப மனம் மறுக்கிறது. 22ம் திகதி மத்திய அரசின் அனுமதி கிடைத்தும் ஏன் சாந்தனை அனுப்பவில்லை என உயர்நீதிமன்றம் கேட்டபோது அவர் உடந்நிலையைக் காரணம் காட்டியுள்ளது தமிழக அரசு தற்போது சாந்தனின் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இங்கு கொடுமை என்னவென்றால் சாந்தன் தனக்கு சிகிச்சை அளிக்குமாறு பலமுறை கோரியும் சிகிச்சைஅளிக்காத தமிழக அரசு, சிகிச்சை அளிக்க சாந்தன் சம்மதிக்க மறுத்தபடியால்தான் அவரை காப்பாற்ற முடியாமற்போனது என்று தற்போது கூறுகின்றது. இதேவேளை சாந்தனுடன் உடன் இருந்த வழக்கறிஞர் சாந்தன் மரணத்தில் சந்தேகம் தெரிவித்துள்ளார். இது ஒரு கொலை என அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். சாந்தன் 32 வருடமாக சிறையில் வாடியதற்கு இந்திய மத்திய அரசே பொறுப்பு. ஆனால் கடைசி 15 மாதங்களும் அவர் சிறப்புமுகாமில் வாடியதற்கு தமிழக அரசே பொறுப்பு. எனவே சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்த சாந்தனின் மரணத்திற்கு தமிழக அரசே பதில் சொல்ல வேண்டும்.

ஒரு தாயின் 33 வருட விருப்பம்

ஒரு தாயின் 33 வருட விருப்பம் நிஜத்தில் நிறைவேற்ற நாம் தவறிவிட்டோம் நிழற்படம் வரைந்து ஆறுதல் அடைய முயல்வோம் அழுது தீர்த்து ஓய்ந்துவிட முடியாத பெருங்கோபத்தை அணையா நெருப்பாக நெஞ்சில் சேமித்து வைத்திருப்போம்

Wednesday, February 28, 2024

இலாபம் எங்கிருந்து வருகிறது?

இலாபம் எங்கிருந்து வருகிறது? இலாபம் எங்கிருந்து வருகிறது என்று கேட்டால் வரவு – செலவு = இலாபம் ( Income – Expenses = Profit ) என்று ஒரு அக்கவுண்டன் கூறுவார். இதையே லாபம் எங்கிருந்து வருகிறது என்று ஒரு பொருளாதார அறிஞரிடம் கேட்டால் அவர் “ முதலாளி முதலீடு செய்யும் மூலதனம் அவருக்கு இலாபத்தை பெற்றுக் கொடுக்கிறது” என்பார். இதையே ஒரு ஆன்மீகவாதியிடம் கேட்டால் “இது எல்லாம் போன பிறப்பில் செய்த பாவ புண்ணிய விதிப்படி இந்தப் பிறப்பில் கடவுள் தருவது” என்பார். ஆனால் மார்க்சியவாதிகள் மட்டுமே தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டியே லாபம் பெறப்படுகிறது என்ற உண்மையை கூறுவார்கள். இந்த உண்மையை விஞ்ஞான முறைப்படி நிரூபித்து இந்த சுரண்டலை ஒழிக்க புரட்சி மட்டுமே தீர்வு என்பதையும் கூறியவர் காரல் மார்க்ஸ். எனவேதான் இந்த உண்மையை தொழிலாள வர்க்கம் உணர்ந்துவிடக்கூடாது என்பதில் முதலாளித்துவ அரசுகள் கவனமாக இருக்கின்றன. ஏனெனில் உலக ஜனத்தொகையில் 97% மானவர்கள் உழைக்கும் மக்களாவர். அவர்களை வெறும் 3%மான முதலாளிகள் அடக்கி ஆள்வதுடன் ஏமாற்றி சுரண்டிக் கொழுக்கின்றனர். இங்கு வேடிக்கை என்னவெனில் மத அடக்குமுறையை எதிர்த்தே வளர்ந்தது முதலாளித்துவ வர்க்கம். ஆனால் அதே முதலாளித்துவ வர்க்கம் தற்போது மதத்தை பேணிக் காத்து வருகின்றது. ஏனெனில் உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்களை மேலெழும்பவிடாமல் அழுத்தி வைக்கும் ஆபத்தான ஆயுதங்களாக மதமும் கடவுளும் இருக்கின்றன.

கையால் சாப்பிடும்போது

கையால் சாப்பிடும்போது உணவின் சுவை அதிகமாக உணர முடியும் என்கின்றனர். அப்படியென்றால் உலகின் சில பகுதிகளில் முள்ளுக்கரண்டியால் சாப்பிடும் முறை ஏன் ஏற்பட்டது? எந்த முறையில் சாப்பிடுவது சிறந்தது என நீங்கள் நினைக்கிறீர்கள்?

தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்!

தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்! தமிழக மக்கள் தமக்கே உரிய பாணியில் அளித்து வரும் இந்த பதிலை இனியாவது இந்திய அரசு புரிந்து கொள்ளுமா?

பாலியல் வழக்கிற்காக

பாலியல் வழக்கிற்காக இந்திய அரசு நித்தியானந்தா சுவாமிகளை தேடி வருவதாக கூறுகின்றது. ஆனால் அவரோ நடிகை கஸ்தூரிக்கு “கைலாசா ஐக்கியநாடுகள்- தொன்மை வாய்ந்த இந்து ஞான நாகரீக தேசம்” என்னும் நூலை வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மையில் அவர் எங்கு இருக்கிறார் என்று இந்திய அரசுக்கு இன்னமும் தெரியவில்லையா? அல்லது, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய இந்திய அரசு விரும்பவில்லையா? என்னமோ நடிகை ரஞ்சிதா வீடியோ வந்த மாதிரி நடிகை கஸ்தூரி வீடியோ வராமல் இருந்தால் சரி.😂

என் முயற்சிகள் என்னைப் பலமுறை

"என் முயற்சிகள் என்னைப் பலமுறை கைவிட்டதுண்டு. ஆனால் நான் ஒருபோதும் என் முயற்சியைக் கைவிட்டதில்லை" – தாமஸ் அல்வா எடிசன் சம்மட்டியின் கடைசி அடியில் கல் உடைகிறது என்பதால் முதல் அடிகள் வீணாணவை அல்ல. வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே.

தமிழ் நாட்டில் விவசாயிகள்

தமிழ் நாட்டில் விவசாயிகள் போராடியபோது குண்டர் சட்டத்தில் அடைத்தவர்கள் , டில்லியில் விவசாயிகள் அடக்கப்படுவதை "ஜனநாயக படுகொலை" என்கின்றனர். இதைக் கேட்டால் “நீ ஒரு சங்கி” என்கின்றனர். என்னடா இது தமிழனுக்கு வந்த சோதனை?

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் இந்தி இல்லை.

நினைவஞ்சலிகள்!

நினைவஞ்சலிகள்! 18.02.2009ல் போரை நிறுத்தக் கோரியும் ஈழத் தமிழரை காப்பாற்றக்கோரியும் கடலூர் சோதி என்கிற தமிழ் வேந்தன் தீக்குளித்து உயிர் துறந்தார். அப்போது தமிழ்வேந்தனுக்கு ஆறு மாத கைக்குழந்தை இருந்தது. ஆனால் அவர் தன் குழந்தையைக்கூட நினைக்காமல் ஈழத் தமிழருக்காய் உயிர் துறந்தார்.

Bhakshak ( இந்தி சினிமா)

•Bhakshak ( இந்தி சினிமா) உண்மை கதையை படமாக்கியுள்ளார்கள். படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும்வரை விறு விறுப்பாக செல்கிறது. பீகாரில் அரசியல் பின்புலம் உள்ள ஒருவர் காப்பகத்தில் உள்ள பல பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொல்கிறார். இதனை ஒரு பெண் ஊடகவியலாளர் துணிச்சலாக செயற்பட்டு அந்த நபரை கைது செய்ய வைத்து காப்பகத்தில் உள்ள பெண்களை காப்பாற்றுகிறார். இதுவே கதை. இந்த படத்தை தயாரித்து வெளியிட்டிருப்பவர் இந்திப்பட சுப்பர் ஸ்டார் சாருக்கான். தமிழ்த் திரையுலக சுப்பர் ஸ்டார்கள் இதேபோன்று தமிழ் நாட்டில் நடந்த உண்மைக் கதைகளை படமாக்கி வெளியிடலாமே?

இருவரும் போலிச்சாமியார்கள்

இருவரும் போலிச்சாமியார்கள். இருவரும் கிரிமினல்கள். ஆனால் ஜக்கி தமிழ்நாட்டில் பாதுகாப்போடு வாழ்கிறார். நித்தியானந்தா தமிழ்நாட்டை விட்டு தப்பி ஓடி தலைமறைவாக வாழ்கிறார். இதற்கு ஜக்கி ஒரு கன்னடர், நித்தி ஒரு தமிழர் என்பதைவிட வேறு காரணம் உண்டா?

எங்கும் இந்திக்காரன்

“எங்கும் இந்திக்காரன் எதிலும் இந்திக்காரன்” என்று கேரளாவில் டிவியில் பாடுகிறார்கள். அவர்களை இனவெறியர் என்று எந்த கம்யுனிஸ்டுகளும் கூறுவதில்லை ஆனால் தமிழ்நாட்டில் இதையே “நாம் தமிழர்” கூறினால் உடனே ஓடி வந்து இனவெறியர் என கம்யுனிஸ்டுகள் முத்திரை குத்துகின்றனர் #போலிக்கம்யுனிஸ்டுகள்

ஈழத் தமிழனுக்கு யாராவது

ஈழத் தமிழனுக்கு யாராவது அடித்தால் தனக்கு வலிக்கிறது என்கிறார். அதனால் திருப்பி அடிப்பேன் என்கிறார். அவர் திருப்பி அடிக்கிறாரோ இல்லையோ ஆனால் நிச்சயம் தமிழனை அழித்தவன் கைகளை குலுக்கி பரிசில்கள் பெற மாட்டார் தான் ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர் விடுதலை பெற உதவுவேன் என்கிறார். உதவுகிறாரோ இல்லையோ ஆனால் நிச்சயம் அகதிகளை சிறப்புமுகாமில் அடைத்து சித்திரவதை செய்யமாட்டார். முக்கியமாக அகதிச்சிறுவனை தத்தெடுத்து பின் அவனைக் கொல்ல மாட்டார்

ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு

“ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும்” எனக்கூறி தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து அதன் மூலம் ஈழப் போராட்டத்திற்கு உதவியவர் தோழர் தமிழரசன்.

மனிதனே கடவுளை படைக்கிறான்

மனிதனே கடவுளை படைக்கிறான் அப்புறம் அக் கடவுளே மனிதனை படைத்ததாக கூறுகின்றான் “கடவுள் எல்லாம் வல்லவர். கடவுள் எங்கும் இருக்கிறார்” என்கிறான் அந்த மனிதன் எல்லாம் கடவுள் விதிப்படியே நடக்கிறது. அந்த விதியை யாராலும் மாற்ற முடியாது என்கிறான் அப்புறம் அவனே வீதியைக் கடக்கும் போதுகூட கடவுள் விதியை நம்பாமல் வீதி சிக்னல் லைட் விதியை நம்பியே கடக்கிறான். இப்ப, “கடவுள் களைத்து விட்டார். எனவே தினமும் மதியம் ஒரு மணி நேரம் ஓய்வெடுக்கிறார்” என்கிறான். இன்னும் என்னென்ன சொல்லப் போகின்றார்கள் என்று தெரியவில்லை. ஆனால் மதம் ஒரு அபின் போதை. பக்தி ஒரு மன நோய் என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

பொலிஸ் கமிஷனர் அவர்களே!

பொலிஸ் கமிஷனர் அவர்களே! 1984ல் கலைஞர் தத்தெடுத்து வளர்த்த ஈழ அகதிச்சிறுவன் மணி எங்கே என்று கண்டுபிடித்து கூற முடியுமா? அந்த அகதிச் சிறுவனை கொன்று விட்டார்கள் என முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி கூறுகின்றார். இது உண்மையா?

புலத்தில் உள்ள ஈழத் தமிழர்கள்

புலத்தில் உள்ள ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு நீதி கோரி சர்வதேச நீதிமன்றத்தின் முன் சென்று குரல் கொடுக்கின்றனர். ஆனால் தாயகத்தில் உள்ள தமிழரசுக்கட்சி தலைவர்கள் பதவிச் சண்டைக்காக நீதிமன்றத்திற்கு செல்கின்றனர். என்னே கொடுமை இது? இந்த நிலை மாறாதா? தலைவர்கள் தம் தவறை உணர மாட்டார்களா?

போராடுவதால் பயன் உண்டா?

போராடுவதால் பயன் உண்டா? நடந்தது நடந்து விட்டது. இனி நடந்ததை நினைத்து போராடுவதில் பயன் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். நாலுவகை படைகள் கட்டி போராடிய புலிகளாலேயே வெற்றி பெற முடியவில்லை. இனி எப்படி போராடி வெற்றிபெற முடியும் என்று வேறு சிலர் கேட்கிறார்கள். இதெல்லாம் கடவுள் வகுத்த விதி. எனவே கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு பேசாமல் இருப்பதே சிறந்தது என்று மேலும் சிலர் கூறுகிறார்கள். இவர்கள் எல்லாம் கூறுவது சாரம்சத்தில் போராடுவதால் பயன் இல்லை எனவே போராடாமல் இருக்க வேண்டும் என்பதையே. ஆனால் ஓடாத மான் எப்படி வாழ முடியாமல் இறந்துவிடுமோ அதேபோல் போராடாத இனம் இந்த உலகில் வாழ முடியாது அழிந்துவிடும் என்பதே உண்மை. எனவே தமிழ் இனம் இப்போது வரை அழியாமல் வாழ்கிறது எனில் அது கடந்த காலங்களில் போராடி வந்திருக்கிறது என்பது மட்டுமன்றி இனியும் அழிந்துவிடாமல் வாழ வேண்டும் எனில் அது தொடர்ந்து போராட வேண்டும் என்பதே உண்மை. ஒரு குழந்தை இந்த உலகில் பிறந்ததும் செய்யும் முதல் போராட்டம் அழுகை. இவ்வாறு போராட்டம் என்பது பிறப்பு முதல் இறப்புவரை ஒரு மனிதன் வாழ்வில் அத்தியாவசியமாகிவிட்ட பின்பு போராட்டத்தால் பயன் உண்டா என்ற கேள்வி அர்த்தமற்றதாகவே இருக்கும். தமிழர் உயிரை விடுவார்களேயொழிய போராட்டத்தை ஒருபோதும் விட்டுவிட மாட்டார்கள். போராட்ட உணர்வு என்பது தமிழரின் உயிருடனும் உடலுடனும் இரண்டறக் கலந்து இருப்பதால்தான் எத்தனை முறை வீழ்ந்த போதும் அத்தனை முறையும் மீண்டும் எழுந்திருக்க முடிகிறது.

நினைவு அஞ்சலிகள்!

• நினைவு அஞ்சலிகள்! தமிழ் இன அழிப்பை நிறுத்தக் கோரி கடலூர் இந்தியாவில் தீக்குளித்து உயிர்நீத்த தமிழ் வேந்தனின் நினைவேந்தல் நிகழ்வு நாள் இன்று ஈழத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமைக்காரியாலயத்தில் இடம் பெற்றது இதன் மூலம் 2009ல் 17 தாய்த் தமிழ் உறவுகள் ஈழத் தமிழருக்காய் உயிர்த் தியாகம் செய்த செய்தி அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுகிறது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருக்கு பாராட்டுகள்.

ஒரு டவுட்!

ஒரு டவுட்! அக்பர் சிங்கத்தையும் சீதா சிங்கத்தையும் ஒன்றாக அடைத்ததற்கே வழக்கு போடுபவர்கள், சீதா சிங்கம் உணவாக மாட்டிறைச்சிதான் சாப்பிடுகிறது என்பதை அறிந்தால் என்னாகும்? இறைச்சி போடுபவரை அடித்துக் கொன்றுவிடப் போகிறார்களே? 😂😂

பிரபாகரன் பயங்கரவாதி.

பிரபாகரன் பயங்கரவாதி. எனவே பிரபாகரனைப் பெற்ற தாயும் பயங்கரவாதி என்றுகூறி சிறையில் அடைத்தார் மகிந்த ராஜபக்சா ஆனாலும் கொஞ்சம் இரக்கம்காட்டி இவர் இந்தியா சென்று சிகிச்சை பெற அனுமதித்தார். ராஜபக்சாவுக்கு இருந்த இரக்கம்கூட உலகத்தமிழினத் தலைவர் என்று கூறப்பட்ட கலைஞர் கருணாநிதிக்கு இருக்கவில்லை. அதனால் கொஞ்சம்கூட மனிதாபிமானம் அற்று இவரை உள்ளே விட மறுத்தார். விமானநிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பினார். ஒரு தமிழ் பெண்ணை அதுவும் வயதான நோய்வாய்ப்பட்டவரை இப்படி திருப்பி அனுப்புவது நியாயமா என பலரும் கேட்டார்கள். அதற்கு , வைகோ மூலம் வந்ததால்தான் கலைஞர் அனுமதிக்கவில்லை என சிலர் கூறினார்கள். கலைஞர் என்ன செய்ய முடியும். மத்திய அரசுதான் திருப்பி அனுப்பியது என்று வேறு சிலர் கூறினார்கள். அந்த வைகோ, மத்திய அரசாக இருந்த காங்கிரஸ், யாவும் இப்போது திமுக வுடன் கூட்டணியாக இருக்கின்றன. அவர்கள் பார்வதியம்மாளை மறந்திருக்கலாம். ஆனால் தமிழ் மக்களால் அந்த கொடுமையை மறக்க முடியவில்லையே. பாவம். இந்த தாயார். இவர் தமிழ் இனத்தில் பிறந்ததைத்தவிர வேறு என்ன தவறு செய்தார்?

மதவெறியர்களால் கொல்லப்பட்ட

•மதவெறியர்களால் கொல்லப்பட்ட தத்துவவியலாளர் புரூணோ புரூணோவின் அண்டவியல் பார்வைகள் தமது மதக் கருத்துகளுக்கு எதிராக இருக்கிறது எனக்கூறி கிருத்தவ மதவாதிகளால் புரூணோ எரித்துக் கொல்லப்பட்டநாள் 17.02.1600 ஆகும். அவரை எரித்துக் கொன்றவர்களின் பெயர் வரலாற்றின் குப்பைத் தொட்டியில்கூட இல்லை. ஆனால் தத்துவவியலாளர் புரூணோ சுதந்திரமான சிந்தனை மற்றும் வளர்ந்து வரும் அறிவியலின் வரலாற்றில் ஒரு அடையாளமாக கருதப்படுகிறார்.

நல்லது நடந்தால் கடவுள் செயல்.

நல்லது நடந்தால் கடவுள் செயல். கெட்டது நடந்தால் விதி எனில் மனிதனுக்கு மூளை எதற்கு? மனித மூளையில் உள்ள மயலின் நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 176000 கிலோ மீற்றர் என்கிறார்கள். மனித மூளையில் உள்ள 60 பில்லியன் நரம்பணுக்களில் சுமார் 10 பில்லியன் புறணிக் கோபுர உயிரணுக்கள். இவை தமக்குள் சமிக்கைகளை அனுப்பிக்கொள்ள ஏறத்தாழ 100 டிரிலியன் நரம்பிணைப்புகளை பயன்படுத்துகின்றன. நல்லது நடந்தால் கடவுள் செயல் , கெட்டது நடந்தால் அது விதி எனில் இத்தகைய சிறப்பான மூளை மனிதனுக்கு எதற்கு? பூசை செய்யவா? சிவன் என் முப்பாட்டன் என்று முகநூலில் படம் போடுற பயலுகள் எல்லாம் ரோட்டைக் கடக்கும்போது சிவனை நம்புவதில்லை. மாறாக எதிரில் இருக்கும் சிக்னல் லைட்டையே நம்பி கடக்கின்றனர். உலகம் உருண்டை என்று கூறிய விஞ்ஞானியை கொன்ற பாப்பரசர்கள் எல்லாம் இப்போது அப்பிள் போனில் கூகிளில்தான் இயேசுவை தேடுகின்ற நிலைமை. ஆம். கடவுள் இருக்கிறார் என்று கூறும் கருத்துமுதல்வாதிகள் எல்லாம் நடைமுறையில் கடவுள் இல்லை என்னும் பொருள்முதல்வாதிகளாகவே வாழுகின்றனர். எல்லோரும் பாப்பரசரை வணங்குவார்கள். ஆனால் அந்த பாப்பரசரே தலை வணங்கிய விஞ்ஞானி ஸ்டீபன் கேவாக்கிங் உலப் புகழ்பெற்ற அந்த அறிஞர் ஸ்டீபன் கேவாக்கிங் கேட்கிறார் “கடவுள் தன்னால் தூக்க முடியாத ஒரு கல்லைப் படைக்க முடியுமா?” பக்தர்களே உங்கள் பதில் என்ன?

திருச்சி மாவட்ட ஆட்சியர்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறப்புஅகதிகள்முகாமை மூடுமாறு குரல் கொடுத்த உணர்வாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலைபெற வழி பிறக்கட்டும்.

சர்வதேச தாய் மொழி தினம்! (21.02.2024

•சர்வதேச தாய் மொழி தினம்! (21.02.2024) எல்லோருக்கும் அவர்களது தாய்மொழி பெருமை மிக்கதுதான். ஆனால் மொழிகளின் தாய் மொழி என்ற பெருமை எமது தமிழ் மொழிக்கு உண்டு. தமிழ் மொழியாலேதான் நாம் தமிழ் இனம் ஆனோம். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின் முதலில் அதன் மொழியை அழிக்க வேண்டும் என்பார்கள். அதனால்தான் தமிழர்கள் தம் உயிரைக் கொடுத்தேனும் தமிழ் மொழியை காத்து வருகிறார்கள். மொழி என்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் வெறும் ஊடகம்தானே, அதற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என சிலர் கேட்கலாம். உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து விட்டன. தமிழும் இனி மெல்ல சாகும் என சிலர் கூறலாம். ஆனால் வரலாற்றில் எத்தனை படையெடுப்புகள். அத்தனையும் தாண்டி தமிழ் மொழி எப்படி நிமிர்ந்து நிற்கிறது? போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர்கள் 350 வருடங்களுக்கு மேலாக ஆண்டபோதும் அவர்களின் சில சொற்களை தமிழ் உள்வாங்கியதேயொழிய தமிழ் அழிந்து விடவில்லை. இனியும்கூட எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் தமிழ் அழிந்துவிடப் போவதில்லை. அது நிமிர்ந்து நிற்கும். ஏனெனில் தமிழர்கள் தம் தாய்க்காக மட்டுமன்றி தாய்மொழி ,தாய்நிலத்திற்காகவும் உயிர் துறக்கக்கூடியவர்கள். இப்படிப்பட்ட அர்ப்பணிப்புகள் இருக்கும்வரை தமிழ் மொழியையும் தமிழர்களையும் யாராலும் அழித்துவிட முடியாது.

முதலில் அவர்களுக்கு காடு வசப்பட்டது

முதலில் அவர்களுக்கு காடு வசப்பட்டது அடுத்து அவர்களுக்கு கடல் வசப்பட்டது இறுதியாக அவர்களுக்கு வானமும் வசப்பட்டது. ஆம். மனது வைத்தால் வானமும் வசப்படும் என்பதை எம் கண் முன்னே நிரூபித்துக்காட்டியவர்கள் அவர்கள்.

கூவத்தூருக்கு தான் போகவில்லை

கூவத்தூருக்கு தான் போகவில்லை என்று மறுக்க நடிகை திரிஷாவுக்கு முழு உரிமை உண்டு. ஆனால் அதை வைத்து கூவத்தூருக்கு எந்த நடிகையுமே போகவில்லை என்று யாரும் வாதிடக்கூடாது. ஏனெனில் அப்போது கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ களின் மனம் குளிர வைக்க பணம், மது, மாது எல்லாம் சப்பளை செய்யப்பட்டது. இது ஒன்றும் ரகசியம் அல்ல. அப்போது அனைத்து ஊடகங்களிலும் வந்த செய்திதான். முன்பு நடிகை பானுமதிக்கும் அறிஞர் அண்ணாவுக்கும் இருந்த தொடர்பு பற்றி கேட்டபோது “ அவள் படிதாண்டா பத்தினியும் இல்லை. நான் முற்றும் துறந்த முனிவனும் இல்லை” என்று அண்ணா கூறினார். அறிஞர் அண்ணா காலம் முதல் இன்றுவரை பல அரசியல்வாதிகள் நடிகைகளுடன் உறவு செய்தி வந்துகொண்டே இருக்கின்றன. அமைச்சர் உதயநிதி நடிகை நயன்தாராவுக்காக பால்டாயில் குடித்தார் என்று குமுதம் இதழில் செய்தி வந்தது. இப்போதுகூட அமைச்சர் உதயநிதி நடிகை நிவேதா பெத்து ராஜ்க்கு மதுரையில் ஒரு மால் கட்டிக் கொடுத்திருப்பதாகவும் அவருக்காக சென்னையில் ரேஸ் பந்தயம் நடத்த இருப்பதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இதெல்லாம் நடிகைகளுக்காக குரல் கொடு:க்கும் இயக்குனர் சேரனுக்கும் நன்கு தெரியும். தெரிந்திருந்தும் அவர் ஏன் குரல் கொடுக்கின்றார் என்று புரியவில்லை.

ஒரு குரங்கின் புலம்பல்

• ஒரு குரங்கின் புலம்பல் அடேய்! எவன்டா குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்று கூறியது? நாங்க கட்சியை உடைப்பதில்லை. கட்சியை உடைக்க பணம், மது, மாது சப்பளை செய்வதில்லை ஏழு வருடமாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராடுகிறார்கள். தமிழரசுக்கட்சியை உடைக்க நீதிமன்றம் சென்றவன் எவனாவது இவர்களுக்காக நீதிமன்றம் சென்றிருக்கிறானா? இனி இன்னொரு மனிதனை குரங்குப்புத்தியை காட்டுகிறாய் என்று திட்டாதீங்கடா. உங்க மனிதப்புத்தி எங்க புத்தியைவிடக் கேவலமடா

இரயில்விபத்தில் கால்கள்

இரயில்விபத்தில் கால்கள் பாதிக்கப்பட்ட போதும் பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்த விமலேஸ் அக்கா ஒருநாள் அவரது கைப்பையில் இருந்த பணத்தை பறிப்பதற்காக இந்திய அமைதிப்படையால் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார் அவர் திரும்பி வரவில்லை. அவரது செயற்கைகால் கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது. விமலாஅக்காவுக்கான நீதி எப்போது வழங்கப்படும்?

சோனியா காந்தி லண்டன் வந்தபோது

சோனியா காந்தி லண்டன் வந்தபோது புலம்பெயர் ஈழத் தமிழ் தலைவர் ஒருவர் அவரை சந்தித்தார். சந்தித்துவிட்டு “அன்னை சோனியாவின் கண்களில் இரக்கத்தைக் கண்டேன்” என அறிக்கைவிட்டார். எனக்கு சோனியாவின் கண்களில் முள்ளிவாய்க்கால் படுகொலை தெரிகிறது. உங்களுக்கு? குறிப்பு - இந்த நபர்தான் அண்மையில் இலங்கை சென்று இமாலய பிரகடனம் செய்தவர்.

அடிப்பது வன்முறை.

அடிப்பது வன்முறை. திருப்பி அடிப்பது வன்முறை அல்ல. அது தற்காப்பு. திருப்பியடிக்க வலு அற்றவை யாவும் வாழத் தகுதியற்று அழிந்துவிடும். மக்கள் இதுவரை பெற்ற உரிமைகள் யாவும் அடித்துப் பெற்றவையே. தானாக கிடைத்தவை அல்ல.

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் சமாதானத்திற்கான யுத்தம் என்று கூறி சொந்த மக்கள் மீதே குண்டு போட்டவர் செம்மணி கொலைகாரி லண்டனில் அப்பாவியாக திரிகிறார். காலம் எவ்வளவு அற்புதமானது!

மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்

•“மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” - புலவர் கலியபெருமாள். தமிழ்நாட்டு “சே” என்று அழைக்கப்பட்ட தோழர் கலியபெருமாள் அவர்களின் பிறந்ததினம் 04.03.2024 ஆகும். புலவர் அவர்கள் “தமிழ்நாடு விடுதலைப் படை”யினை முன்னெடுத்த தோழர் தமிழரசன் அவர்களின் தலைவர் என அறியப்பட்டவர். தன் வாழ்வின் இறுதிவரை புரட்சியை நேசித்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்கு தனது உறுதியான ஆதரவை எப்போதும் வழங்கியவர். தமிழின விடுதலைக்காக உழைத்த புலவர் கலியபெருமாள் அவர்களை தமிழ் மக்கள் என்றும் நினைவில் கொள்வர். இது உறுதி. புலவர் கலியபெருமாள் பற்றி நான் எழுதிய சில குறிப்பகளை கீழ் வரும் இணைப்பில் படிக்கலாம். https://tholarbalan.blogspot.com/2018/05/blog-post_40.html

ஒரு அறிவிப்பு

• ஒரு அறிவிப்பு ஏன் பதிவை நீக்கிவிட்டீர்கள் என பலரும் கேட்கின்றனர். நான் பதிவை நீக்கவில்லை. நான் நீக்கியிருந்தால் காரணத்தை ஒரு பதிவாக போட்டிருப்பேன். முகநூல் நிர்வாகத்தால் அப் பதிவு நீக்கப்பட்டுள்ளது. பதிவு நீக்கப்பட்டதுடன் சில தடைகளும் விதிக்கப்பட்டிருக்கிறது.

என்றும் நினைவில் கொள்வோம்!

•என்றும் நினைவில் கொள்வோம்! ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி, சிவகாசி ஆணையூர் பஞ்சாயத்து அய்யம்பட்டியைச் சேர்ந்த கோகுலகிருட்ணன் என்பவர் தீக்குளித்து உயிர் நீத்த நாள் 25.02.2009

முட்டாள்தனமான தீர்ப்பு

• முட்டாள்தனமான தீர்ப்பு நல்லவேளை. அக்பர் சிங்கத்தை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என தீர்ப்பு கூறவில்லை என ஆறுதல் அடையலாம். மற்றும்படி, இந்த இந்துமத வெறியர்களை நீதிபதி கண்டித்து அனுப்பியிருக்க வேண்டும். மாறாக, அவர்களின் மிரட்டலுக்கு பணிந்து சிங்கங்களின் பெயரை மாற்றும்படி உத்தரவிட்டது தவறு. ஏனெனில் நாளை சீதாப் பழத்தை முஸ்லிம் கடையில் விற்பதால் தமது மன உணர்வுகள் புண்படுகின்றன என்று இந்த மத வெறியர்கள் வழக்கு தாக்கல் செய்தால் அப்போது சீதாப் பழத்தின் பெயரை மாற்றும்படி நீதிபதி உத்தரவிடுவாரா? நம்புங்கள் இந்தியா வல்லரசாம்!

தான் கூவத்தூர் சென்றதாக

"தான் கூவத்தூர் சென்றதாக திரிஷா கூறவில்லை. திரிஷாவுடன் தான் படுத்தேன் என அந்த அரசியல்வாதியும் சொல்லவில்லை" எனவே இந்த விடயத்தை பேச முடியாது என சிலர் கூறுகின்றனர். சரி. அப்படியென்றால் சான்ஸ் தருவதாக கூறி அமைச்சர் உதயநிதி தன்னுடன் படுத்துவிட்டு ஏமாற்றிவிட்டார் என்று நடிகை சிறீரெட்டி கூறினாரே. அதற்கு உதயநிதி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? பாடகி சின்மயி கவிஞர் வயிரமுத்து மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறாரே. வயிரமுத்து மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? மாறாக , சின்மயி தமிழ் படங்களில் டப்பிங் பேசக்கூடாது என்றல்லவா தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

நடிகர் விஜய் அவர்களின்

நடிகர் விஜய் அவர்களின் மனைவி சங்கீதா ஒரு ஈழத் தமிழர் என்பது அனைவருக்கும் தெரியும். சங்கீதா அவர்களின் தந்தை சொர்ணலிங்கம் அவர்கள் லண்டன் வாழ் ஈழத் தமிழர் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் சொர்ணலிங்கம் மிகப் பெரிய பணக்காரர் என்றும் மகிந்த ராஜபக்சாவின் பணத்தை வைத்திருக்கிறார் என்றும் திமுக வினர் இப்போது செய்யும் பிரச்சாரம் ஆதாரம் அற்ற அவதூறு ஆகும். நடிகர் விஜய் அவர்களின் அரசியலை தாராளமாக யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் அதற்காக அவர் மனைவி குடும்பம் மீது அபாண்டமாக பழி சுமத்தக்கூடாது. நடிகர் விஜய் அவர்களின் அரசியல் பிரவேசம் தமது உதயநிதியின் முதலமைச்சர் கனவுக்கு வேட்டு வைத்துவிடும் என்று பயந்து உடன்பிறப்புகள் இப்படி பொய் பிரச்சாரம் செய்கின்றனர். அதுவும் மகிந்த ராஜபக்சாவின் இரத்தம் தோய்ந்த கைகளை குலுக்கி பரிசுகள் பெற்றுவந்த திமுக வினருக்கு மகிந்த ராஜபக்சா பணம் பற்றி கூறுவதற்கு அருகதை உண்டா?

கொடுப்பதற்கு

கொடுப்பதற்கு குக்கர் இல்லை சாராயம் இல்லை பணம் இல்லை ஆனாலும் என்றாவது ஒருநாள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை மட்டுமே உண்டு இது தமிழ் மக்களின் தன்னம்பிக்கை நீரில் மூழ்கியவன் மேலே வரும்வரை அவன் மேலே வர முயல்வது தெரிவதில்லை. மேலே வந்த பின்பே அவன் இதுவரை மேலே வர முயற்சி செய்திருக்கிறான் என்பது தெரியவரும். அதுபோல் இவர்கள் வென்ற பின்பே அதற்காக இவர்கள் செய்த உழைப்பு தெரியவரும்.

போராட்டம் இனிமையானது

•போராட்டம் இனிமையானது – காரல் மார்க்ஸ் விரும்பியிருந்தால் மற்றவர்கள் போல் வீட்டில் இருந்து பிறந்தநாள் கொண்டாடியிருக்கலாம். ஆனால் இவர் தையிட்டி போராட்ட களத்தில் நின்றுகொண்டு “ நாலு நானூறாக மாறியிருக்கிறது. விரைவில் நாலு லட்சமாகும்” என்கிறார் வாழ்த்து கூறியவர்களுக்குகூட “ உயிர் உள்ளவரை தடம் மாறாமல் தமிழ்த்தேசியத்திற்காய் பயணிப்பேன்” என்றே நன்றி கூறுகின்றார். காலம் நல்ல தலைவர்களுக்காக காத்திருப்பதில்லை. அது இருப்பவரில் ஒருவரை தெரிவு செய்துகொண்டு பயணிக்கிறது. வாழ்த்துக்கள் சுகாஸ் கனகரத்தினம்

அழகிய தேம்ஸ் நதி ஓரத்தில் நடக்கிறேன்

அழகிய தேம்ஸ் நதி ஓரத்தில் நடக்கிறேன் ஆனால் சோனப்பு உப்புக்காற்றே என் மனதில் தவழுகிறது உயர்ந்த கோபுரங்கள் கொண்ட தேவாலயங்களுக்குள் செல்கிறேன் அங்கு கடவுள் இயேசுவை என்னால் காண முடியவில்லை ஆனால் கரவெட்டி தேவாலயத்தில் Sisterரிடம் வாங்கி தின்ற கேக் துண்டில் இயேசுவின் அன்பை உணர்ந்திருக்கிறேன். நாகரீகமான ஹோட்டல்களில் விலையுயர்ந்த உணவுகளை உண்கிறேன் ஆனாலும் சிறு வயதில் அள்ளி தின்ற என் வீட்டு முற்றத்து மண் வாசனை இன்னும் மறக்கவில்லை லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்து பல பட்டங்களை பெற்றுவிட்டேன் ஆனாலும் மாணிக்கவாசகர் வித்தியாலயத்தில் படித்த அரிவரி இன்னும் நினைவில் இருக்கிறதே. குந்தியிருந்த மதவடியும் ஓடி விளையாடிய அத்துளு வயல் வெளிகளும் மனதில் இருக்கும்வரை ஒவ்வொரு பொழுதும் புலரும்போது நான் என்னை உயிர்பித்துக்கொண்டிருப்பதாக உணர்கிறேன். நாளை என் ஊரும் என் சனமும் அழியுமென்றால் இன்றே நான் செத்துவிட வேண்டுமென்று விரும்புகிறேன். - லண்டனில் ஒரு கரவெட்டியானின் ஏக்கம்

இந்தியாவில் பெரியாரியம் இருக்கிறது

இந்தியாவில் பெரியாரியம் இருக்கிறது இந்தியாவில் அம்பேத்காரியம் இருக்கிறது ஆனாலும் ஆணவக்கொலை பற்றிய செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. ஈழத்தில் ஆணவக்கொலை செய்திகள் இல்லை ஆனாலும் அம்பேத்காரியத்தையும் பெரியாரியத்தையும் ஈழத்திற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என சிலர் ஏன் கூறுகின்றனர்?

கடந்த வருடம் குஜராத்தில்

கடந்த வருடம் குஜராத்தில் அதானியின் துறைமுகத்தில் பல கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. அப்போது, போதைப் பொருள் கடத்தலில் குஜராத்திகள் சிக்கியது எப்படி என்று செய்தி போடப்படவில்லை. ஆனால் இப்போது யாரோ ஒரு தமிழ் தயாரிப்பாளர் கடத்தினார் என்றதும் “தமிழர்கள் சிக்கியது எப்படி?” என்று செய்தி போடுகின்றனர். குஜராத் மீனவனை பாக்கிஸ்தான் சுட்டால் “இந்திய மீனவன் சுடப்பட்டார்” என்று செய்தி போடுபவர்கள் தமிழ் மீனவன் சுடப்பட்டால் இந்திய மீனவன் சுடப்பட்டார் என செய்தி போடுவதில்லை. சரி. இப்போது இங்கு நான் கூற வரும் விடயம் என்னவெனில் கடந்தவருடம் சில கொழும்பு தாதாக்களை கைது செய்து சிறப்புமுகாமில் அடைத்துவிட்டு “புலிகள் இயக்கத்தை மீளவும் கட்டுவதற்காக போதைப் பொருள் கடத்தினார்கள்” என்று இந்திய அரசு குற்றம்சாட்டியது. அப்போது, “சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ்அகதிகள் யாவரும் கிரிமினல்கள், போதைப் பொருள் கடத்துபவர்கள். அவர்களை நாடு கடத்த வேண்டும்” என்று திமுக உடன்பிறப்புகள் எழுதினார்கள். அப்போது, “இந்தியாவில் இருந்துதான் ஈழத்திற்கு போதைப் பொருள் கடத்தப்படுகிறது. ஈழத்தில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்படுவதில்லை” என்று நான் கூறியிருந்தேன். அவ்வாறே கடந்த வருடம் ஈழத்திற்கு போதைப் பொருள் கடத்தியதாக கீழக்கரை திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். இப்போது டில்லியில் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவரும் திமுகவைச் சேர்ந்தவரே. அவர் பிடிபட்டதும் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக திமுக அறிவித்துள்ளது. ஈழத் தமிழ் அகதிகள் மீது பழி சுமத்திய அந்த திமுக உடன் பிறப்புகள் இனி என்ன கூறப்போகிறார்கள்?

தமிழ்நாட்டில் அகதிமுகாமில்

தமிழ்நாட்டில் அகதிமுகாமில் இருந்துகொண்டு தமிழின விடுதலைக்காக செயற்படுவது சிரமம். அதுவும் கியூ பிராஞ் நெருக்கடிகளுக்கு மத்தியில் மார்க்சிச லெனிச மாசேதுங் சிந்தனையில் செயற்படுவது மிகவும் சிரமம். அந்த மிகவும் சிரமத்தை இறுதிவரை அனுபவித்தவர் தோழர் கௌரிகாந்தன் கடந்த ஆண்டு 26.02.2023யன்று தர்மபுரி அகதிமுகாமில் அவர் மரணமடைந்தார். அவருக்கு நினைவு அஞ்சலிகள்.

பிரபாகரன் ஆயுதம் ஏந்திப் போராடியதால்

பிரபாகரன் ஆயுதம் ஏந்திப் போராடியதால் அவர் ஒரு பயங்கரவாதி என்று திமுக உபி ஒருவர் எழுதியிருந்தார். சரி அப்படியென்றால் ஆயுதம் ஏந்தாத காந்தீய அமைப்பு செயற்பாட்டாளரான டேவிட் ஐயா தமிழக அரசின் கியூ பிராஞ்சின் பயங்கரவாதி லிஸ்டில் வைக்கப்பட்டிருந்தது ஏன்? தள்ளாத வயதில்கூட அவரை ஒரு கொடிய பயங்கரவாதியாக கியூ பிராஞ் கண்காணித்தது ஏன்? இதுகூடப் பரவாயில்லை, அமெரிக்காவின் பயங்கரவாதி லிஸ்ட்டில் இப்பவும் நெல்சன் மண்டலேவின் பெயர் இருக்கிறது. எனவே யார் பயங்கரவாதி என்பதைவிட யாருக்கு பயங்கரவாதி என்பதையே பார்க்க வேண்டும். எதிரி எம்மை பயங்கரவாதி என்று கூறினால்; நாம் கவலைப்பட தேவையில்லை. மாறாக எதிரி எம்மை பயங்கரவாதி என்று கூறாவிட்டால்தான் நாம் கவலை கொள்ள வேண்டும். எதிரி எம்மை பாராட்டினால் நாம் அவனுக்கு சோரம் போய்விட்டோம் என்று அர்த்தம் - மாவோ

நினைவஞ்சலிகள்

• நினைவஞ்சலிகள் கீழவெண்மணியில், கூலி உயர்வு கேட்ட 44 அப்பாவி ஏழைத் தமிழர்களைத் தீயிட்டு எரித்துக் கொன்றவர் கோபால கிருஷ்ணன் நாயுடு அவர் தனது அரசியல் செல்வாக்கு மூலம் நீதிமன்றத்தில் இருந்து விடுதலை பெற்றார். ஆனால் தோழர் அமல்ராஜ் அக் கொடியவனை கொன்று பழி தீர்த்தார். அமல்ராஜ் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் (27-2-2019) நாள் இன்று ஆகும் “அடிக்கு அடி” என்னும் தத்துவமே ஆதிக்க சக்திகளுக்கு தகுந்த பாடத்தை புகட்டும். கல்வி கற்றால் போதும் விடுதலை பெறலாம் என்று திரைப்படம் எடுப்பவர்கள் படிக்க வேண்டிய வரலாறு அமல்ராஜ்

வீட்டில் தெலுங்கு பேசும் ஒருவருக்கு

வீட்டில் தெலுங்கு பேசும் ஒருவருக்கு தமிழ்நாட்டில் பல கோடியில் நினைவிடம் அமைக்கப்படுகிறது. அதேவேளையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வரும் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவோம் என ஆந்திர தெலுங்கு முதல்வர் அறிவிக்கிறார். தமிழ்நாட்டில் தமிழர் நலன் குறித்து யாருமே அக்கறை காட்ட மாட்டார்களா?

ஆழ்ந்த இரங்கல்கள்!

• ஆழ்ந்த இரங்கல்கள்! எது நடக்கக்கூடாது என்று நினைத்தோமோ அது நடந்துவிட்டது. அந்த தாயின் 33 வருட விருப்பம் நிறைவேறாமலே போய்விட்டது.

தொடரும் சிறப்புமுகாம் மரணங்கள்

தொடரும் சிறப்புமுகாம் மரணங்கள் இதற்கு ஒரு முடிவு வராதா? இன்னும் எத்தனை பேர் இறந்த பின்பு சிறப்புமுகாமை மூடப்போகிறார் திராவிட முதல்வர்?

தன் மகனை உயிரோடு பார்க்க வேண்டும்

தன் மகனை உயிரோடு பார்க்க வேண்டும் என்ற அந்த தாயின் விருப்பம் நிறைவேறவில்லை. குறைந்த பட்சம் தன் மகனின் உடலையாவது ஒரு முறை அந்த தாய் பார்க்கட்டும். தயவு செய்து சாந்தன் உடலை ஊருக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்குங்கள்.

உச்சநீதிமன்றம் விடுதலை செய்தபோதே

உச்சநீதிமன்றம் விடுதலை செய்தபோதே சாந்தனை ஊர் திரும்ப அனுமதித்திருந்தால் பதினைந்து மாதமாவது அவர் தாயுடன் வாழ்ந்திருப்பார். தன் மகனை ஒரு முறையாவது நேரில் காண வேண்டும் என 33 வருடமாக காத்திருக்கும் அந்த தாய்க்கு இனி என்ன பதிலை கூறப்போகிறோம்? மன்னித்துவிடு தாயே! நாங்கள் தோற்றுப்போய்விட்டோம். அழுது ஓய்வதைத் தவிர வேறு வழியில்லை.

இருவரும் தமிழ்மக்களை நம்பினார்கள்

இருவரும் தமிழ்மக்களை நம்பினார்கள் தமிழ்மக்கள் இவர்களை கைவிடவில்லை. ஆனால் பேரறிவாளனை உயிரோடு அற்புதம்அம்மாளிடம் ஒப்படைத்த மக்களால் , சாந்தனை உயிரோடு தாயாரிடம் ஒப்படைக்க முடியாமற் போய்விட்டது.

29ம் திகதி முன்னர் சாந்தனுக்கு

29ம் திகதி முன்னர் சாந்தனுக்கு விடுதலை அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்கள். ஆனால் இப்படி உயிரற்ற உடலாக விடுதலை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லையே. மாரடைப்பு மரணம் என்பதை நம்ப மறுக்கிறது மனம்

இறுதி நிமிடத்தில் சாந்தனின் கண்கள்

இறுதி நிமிடத்தில் சாந்தனின் கண்கள் சொல்லும் சேதி என்ன? நீதிமன்றம் விடுதலை செய்தாலும்கூட அரசு நினைத்தால் ஈழத் தமிழ் அகதிக்கு தண்டனை வழங்கும் என்பதையா சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

Thursday, February 15, 2024

ஒரு இனத்தை அடக்கி ஆள முற்படும்

ஒரு இனத்தை அடக்கி ஆள முற்படும் எந்தவொரு இனமும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது. எனவே சிங்கள மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் தமிழ் மக்களின் சுதந்திரத்தை முதலில் அங்கீகரிக்க வேண்டும்.

முத்துக்குமாரை அடுத்து ஈழத் தமிழருக்காய்

முத்துக்குமாரை அடுத்து ஈழத் தமிழருக்காய் தீக்குளித்து இறந்த பள்ளப்பட்டி ரவி அவர்களின் 15வது நினைவு நாள் . (02.02.2009) தமிழ் இனத்திற்காக தீக்குளித்தவன் ஈகத்தை அப்போதைய கருணாநிதி (திமுக) அரசு சமையல் அடுப்பு (ஸ்டவ்) வெடித்து இறந்ததாக மனச்சான்று இன்றி பொய்க்கதை கட்டியது

04.02.1957 யன்று திருமலையில்

04.02.1957 யன்று திருமலையில் கறுப்புகொடி ஏற்றியவேளை சிங்களபடையால் கொல்லப்பட்ட நடராசனை நினைவு கூர்வோம் இவர் ஆயுதம் தூக்கி போராடவில்லை. ஆனாலும் சுட்டுக்கொல்லப்பட்டார் அகிம்சை போராட்டம் வன்முறை மூலம் அடக்கப்பட்டதாலேயே தமிழர்கள் வேறு வழியின்றி ஆயுதம்ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்

இருவரும் தமிழர்கள்.

இருவரும் தமிழர்கள். அது மட்டுமல்ல இருவரும் திருமலையைச் சேர்ந்தவர்கள் ஒருவர் எல்லோரும் அறிந்த திருமலை பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தர் ஐயா. மற்றவர் தியாகி நடராஜா. 1957ல் சுதந்திரநாளை கரிநாளாக தமிழரசுக்கட்சி அறிவித்தது. அப்போது திருமலையில் சிங்கக்கொடியை அகற்றிவிட்டு கறுப்புகொடியை ஏற்றிய நடராஜனை சிஙகள பொலிஸ் சுட்டுக்கொன்றது. எந்த சிங்கக்கொடியை இறக்க திருமலை நடராஜன் உயிர் துறந்தாரோ அதே சிங்கக்கொடியை அதே திருமலை எம்பி சம்பந்தர் ஐயா தூக்கிப் பிடிக்கிறார். பாவம் நடராஜன். குறிப்பு – 04.02.2024 யன்று நடராஜனின் 67 வது நினைவு தினம்.

நடிகர் ரஜனி மத்திய அரசில் மட்டுமல்ல

நடிகர் ரஜனி மத்திய அரசில் மட்டுமல்ல மாநில அரசிலும் செல்வாக்கு உள்ளவர். அவர் குரல் கொடுத்தால் பிரதமர் மோடி மட்டுமல்ல தமிழக முதல்வர் ஸ்டாலினும் கேட்பார். நடிகர் ரஜனி ஈழத் தமிழ தலைவர்களில் ஒருவரான விக்கினேஸ்வரன் அவர்கள் மீது மதிப்பு கொண்டவர் என்கிறார்கள். எனவே விக்கினேஸ்வரன் அவர்கள் நடிகர் ரஜனி மூலம் சாந்தன் உட்பட சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் விடுதலைக்கு வழி காண வேண்டும். பிரேமானந்த சுவாமி பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக் குற்றத்திற்காக இரட்டை ஆயள் தண்டனை வழங்கப்பட்டவர். அவரை விடுதலை செய்யுமாறு விக்கினேஸ்வரன் அவர்கள் கோரியிருந்தார். பிரோமானந்தா சுவாமி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும்போதே விக்கினேஸ்வரன் இவ்வாறு கோரியிருந்தார். ஆனால் சாந்தன் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். இது எந்தளவு சட்டவிரோதமானதும் மனிதாபிமானம் அற்றதும் என்பது நீதிபதியாக இருந்த விக்கினேஸ்வரன் அவர்களுக்கு நன்கு தெரியும். எனவே பிரேமானந்த சுவாமிக்காக கரல் கொடுத்த விக்கினேஸ்வரன் அவர்கள் சாந்தனுக்காக குரல் கொடுக்கக்கூடாதா?

1991ல் ராஜிவ் காந்தி மரணத்தையடுத்து

1991ல் ராஜிவ் காந்தி மரணத்தையடுத்து தமிழ்நாடு மீட்சிப்படையினைச் சேர்ந்த சுமார் முப்பது பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் புலிகள் இயக்கதில் பயிற்சி மற்றும் ஆயுதங்கள் பெற்றவர்கள் என தடா சட்டத்தின் கீழ் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் தேடப்பட்ட ஆறுமுகம் மற்றும் சுமி என்ற இருவர் தமிழ்நாட்டில் இருந்து தப்பி வன்னிக்கு செல்ல முயன்றனர். அவர்களை தமிழ்நாட்டில் இருந்து ஏற்றிவந்த படகினர் வன்னிப்பிரதேசம் எனக்கூறி நெடுந்தீவில் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். இவர்கள் இருவரும் அங்கிருந்த ஈபிடிபி யினரை புலிகள் என நினைத்து சென்றுள்ளனர். அப்புறம்தான் இரு தரப்பினருக்கும் ஒருவரை ஒருவர் யார் என்று தெரிந்திருக்கிறது. இதற்கிடையில் அருகில் இருந்த இலங்கை கடற்படை இவ் இருவரையும் பொறுப்பெடுத்துவிட்டது. அப்போது ஜனாதிபதியாக பிரேமாதாசா இருந்தார். அவர் இந்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தார். இதனால் இலங்கை ராணுவப் புலனாய்வினர் இந்த இருவரையும் துன்புறுத்தவில்லை. இவர்கள் இந்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு விடுதலைக்காக போராடுவதை அறிந்து மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர். ஆனால் இதை எப்படியோ அறிந்த இந்திய அரசு இந்த இருவரையும் உடனடியாக ஒப்படைக்கும்படி இலங்கை அரசை மிரட்டியது. அதன்படி இலங்கை ராணுவத்தினர் வேறு வழியின்றி இந்த இருவரையும் இந்திய அரசிடம் ஒப்படைத்தனர். இந்த இருவரையும் விசேட விமானத்தில் சென்று அழைத்து வந்தவர் தமிழக காவல்துறையை சேர்ந்த ஒரு அதிகாரியே. இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளை பலவந்தமாக இலங்கைகக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளது. இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் மூலம் பெற்றவர் பாமக கட்சி தலைவர் ராமாதாஸ் அவர்கள். ஆனால் இந்த உத்தரவுக்கு மாறாக கடந்த வருடம் சிறப்புமுகாமில் இருந்து ஒரு ஈழத் தமிழர் பலவந்தமாக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து பொலிசாரை வரவழைத்து திருச்சி விமானநிலையத்தில் வைத்து இந்த சிறப்புமுகாமில் இருந்த ஈழத் தமிழரை ஒப்படைத்துள்ளது தமிழக அரசு. அவர் இப்போது இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இங்கு இந்த இரு சம்பவங்களை சுட்டிக்காட்டுவது ஏனென்றால் இலங்கை இந்திய அரசுகள் தமக்கு தேவை என்றால் உடனடியாக தமிழரை பரிமாறிக் கொள்வார்கள் என்பதைக் காட்டுவதற்கே. ஆனால் சாந்தனுக்கு இலங்கை அரசின் அனுமதி 15 மாதமாகியும் இன்னும் கிடைக்க வில்லை என்கிறது இந்திய அரசு. இந்திய அரசின் இந்த பொய்யை உண்மை என்று அப்பாவி தமிழர்களும் நம்புகின்றனர். என்ன செய்வது?

நாம் தமிழர்” கட்சியினர் 3ம் திகதி

“நாம் தமிழர்” கட்சியினர் 3ம் திகதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் தமிழத்தேச குடியரசு இயக்கம் 11ம் திகதி சேலத்தில் ஆர்ப்பாட்டம் கட்சிகள், அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்கள் தொடரட்டும் தமிழக மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் சாந்தன் உட்பட சிறப்புமுகாம் அகதிகளுக்கு விடுதலை கிடைக்கட்டும்

தமிழர்களை கேவலமாக பேசியதற்கு

தமிழர்களை கேவலமாக பேசியதற்கு மன்னிப்பு கோரியுள்ளார் கன்னட நடிகை. கடந்த 12 வருடமாக மன்னிப்பு கோராமல் இருந்தவர் இப்போது ஏன் கோருகிறார்? ஏனெனில் நடிகர் ரஜனியின் “லால்சலாம்”படத்திற்காகவே மன்னிப்பு கோருகிறார். அதுவும் நடிகர் ரஜனி குடும்பம் கேட்டுக்கொண்டதற்காகவே இந்த மன்னிப்பை கோருகிறார். மற்றும்படி தவறை உணர்ந்து உண்மையாகவே வருந்தி இந்த மன்னிப்பை இவர் கேட்கவில்லை. எனினும் தமிழ மக்களின் எதிர்ப்பு இவருக்கும் ரஜனி குடும்பத்திற்கும் அச்சத்தைக் கொடுத்துள்ளது. இது இனி மற்ற இன நடிகர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.

புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்ட முயன்றனர்

புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்ட முயன்றனர் எனக்கூறி திருச்சி சிறப்புமுகாமில் இருந்த சிலர் மீது இந்த NIA யினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் அந்த சிலர் தாம் கொழும்பு நகரைச் சேர்ந்தவர்கள் என்றும் தாம் ஜனாதிபதி ரணில் ஆதரவாளர்கள் என்றும் தமக்கும் புலிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இப்போது சாந்தன் உட்பட சிறப்புமுகாமில் இருப்பவர்களை விடுதலை செய்யுமாறு கோரி நாளை திருச்சியில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளனர். எனவே அதை தடுப்பதற்காக நாம் தமிழர் கட்சியினருக்கு அச்சத்தையும் நெருக்கடியையும் கொடுப்பதற்காகவே இந்த NIA சோதனை நடைபெற்றதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவர் மகள் துவாரகா இந்திய அரசின் ஆதரவோடு தமிழீழத்திற்காக போராட வருகிறாள் என்று கவிஞர் காசி அனந்தன் கவிதை பாடுகிறார். ஆனால் அவர் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று அவர் வீட்டில் இந்த NIA யினர் சோதனை செய்வதில்லை. ஏனெனில் காசி அனந்தன் இந்த சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யுமாறு கோருவதில்லை. சிறப்புமுகாமை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்ய காவல்துறை அனுமதி அளிப்பதில்லை. மீறி ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது. அதையும் மீறி ஆர்ப்பாட்டம் செய்தால் NIA சோதனை மிரட்டல்.

வெற்றியைவிட பெரிதாக ஒன்று

வெற்றியைவிட பெரிதாக ஒன்று இருக்கிறது என்றால் அது எதிரிக்கு நீ கொடுக்கும் அச்சம்.

அவருக்கு தமிழ்நாட்டிற்கு வெளியே

அவருக்கு தமிழ்நாட்டிற்கு வெளியே கேரளா, ஆந்திரா என இந்தியா எங்கும் ரசிகர்கள் உண்டு. ஆனாலும் கட்சி பெயரில் "அனைத்திந்தியா" என இல்லை. தமிழகம் மட்டுமே உண்டு. அதைவிட கட்சி பெயரில் "திராவிடம்" இல்லை. இது தமிழ்நாட்டில் பெருகி வரும் தமிழ்த்தேசிய உணர்வின் தாக்கம் இன்றி வேறு என்னவாக இருக்கும்?

நாம் தமிழர் கட்சி பாஜக வின் B டீம்

நாம் தமிழர் கட்சி பாஜக வின் B டீம் என கூறிய (200ரூபா) உடன்பிறப்புகள் இனி என்ன கூறுவார்கள்?

உயர்நீதிமன்ற நீதிபதிகள் அருணாச்சலம்

உயர்நீதிமன்ற நீதிபதிகள் அருணாச்சலம் மற்றும் பிரதாப்சிங் ஆகியோர் வழக்கு எண் WP 15044/91 இல் வழங்கிய தீர்ப்பு (1)சிறப்புமுகாமில் வைக்கப்பட்டவர்கள் விரும்பினால் தம் குடும்பத்தவர்களை வரவழைத்து தம்முடன் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இவர்களின் செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும் (2) சிறப்புமுகாமில் உள்ளவர்களை சிறையில் உள்ளது போன்று அடைத்து வைக்கக்கூடாது. அவர்கள் முகாம் எல்லைக்குள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும் (3) பார்வையாளர்கள் அனைவரும் அனுமதிக்கப்படுவர். நேரக்கட்டுபாடு எதுவும் இல்லை. விரும்பிய நேரம் பேசுவதற்கும் பொருட்களை கொடுக்கவும் அனுமதிக்கப்படுவர். (4) நாடு திரும்பிச் செல்ல விரும்பினால் தம் சொந்த செலவிலோ அல்லது அரசு செலவிலோ அனுப்பி வைக்கப்படுவர். தமிழக அரசு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலே உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கினர். மேற்கண்ட உரிமைகள் யாவும் வழங்கப்பட்டு சட்டப்படியே சிறப்புமுகாம் நடத்தப்படுவதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் உறுதியளித்தது. ஆனால் தமிழக அரசின் நடைமுறை என்ன? மனட்சாட்சி உள்ளவர்களே பதில் தாருங்கள்.

புலியால் ஆட்டுக்குட்டிகளுக்கு

புலியால் ஆட்டுக்குட்டிகளுக்கு ஆபத்து எனக்கூறி புலிகளை முற்றாக அழித்துவிட்டதாக ஓநாய்கள் அறிக்கை விட்டன. இருப்பினும் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை புலி மீதான தடையை ஓநாய்கள் அறிவித்துக்கொண்டே இருக்கின்றன. இல்லாத புலிக்கு தடை எதற்கு என்று அப்பாவி ஆட்டுக்குட்டிகளால் கேட்க முடியவில்லை. ஏனெனில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புலிக்கதைகளை சொல்லியே தடையை நீடிக்கின்றன ஓநாய்கள். இம்முறை தன் சொந்தக் காட்டுக்குள்ளேயே புலியை பிடித்துவிட்டதாக ஓநாய்கள் அறிவிக்கின்றன. என்னடா என்று எட்டிப் பார்த்தால், சில ஆட்டுக்குட்டிகளை பிடித்து வைத்து புலி என்று ஒத்துக்கொள்ளும்படி சித்திரவதை செய்கின்றன ஓநாய்கள். இந்தமுறை புலி மீதான தடைக்கு ஓநாய் சொல்லும் கதை இது என்று தெரிந்தும் அதை தட்டிக் கேட்க முடியாமல் இருக்கின்றன ஆட்டுக் குட்டிகள். குறிப்பு - இது ஒரு அனிமல் கதை. இதை படித்ததும் உங்களுக்கு NIA சோதனை நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.

6 வருடங்களுக்கு மேலாக

6 வருடங்களுக்கு மேலாக அகிம்சை வழியில் போராடுகிறார்கள் இவர்கள் கோருவதெல்லாம் தாம் இறப்பதற்குள் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பற்றி அறிந்துவிட வேண்டும் என்பதே தமக்கு சொகுசு பங்களா, சொகுசு வாகனம் கேட்டு வாங்கிய எமது தலைவர்களால் இவர்களுக்கு ஒரு தீர்வை கேட்டு வாங்க முடியவில்லை

ஆறாவது நாளாக தொடரும்

•ஆறாவது நாளாக தொடரும் முருகன் உண்ணாவிரதம் கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழக திராவிட அரசு ! முருகன் மற்றும் நளினியை பார்வையிட அவர்களின் மகளுக்கு விசா வழங்க மறுக்கிறது இந்திய அரசு லண்டனில் இருக்கும் அந்த மகளுடன் சேர்ந்து வாழ விரும்பும் முருகனை அனுமதிக்க மறுக்கிறது தமிழக அரசு மத்திய . மாநில அரசுகள் ஒன்று சேர்ந்து முருகன் குடும்பத்தை வஞ்சிக்கின்றன. இந்த கொடுமைகளுக்கு எப்போது முடிவு வரும்?

இவர் சாந்தனின் தாயார் என்பது

இவர் சாந்தனின் தாயார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் எங்கே சென்றுவிட்டு வருகின்றார் என்று யாருக்காவது நினைவு இருக்கிறதா? கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன் மகனை வருவித்து தருமாறு கோரி ஜனாதிபதி மற்றும் உரியவர்களுக்கு மனு கொடுத்து விட்டு வருகின்றார். ஆனால் ஆச்சரியம் என்னவெனில், ஜனாதிபதி சாந்தனை அழைத்துவர உறுதி தெரிவித்ததாகவும் ஆனால் இதற்கு சாந்தன் தாயாரிடமிருந்து ஒரு மனுவும் தமிழரசுக்கட்சி சார்பாக ஒரு மனுவும் தரும்படி கேட்டதாக சிறீதரன் கூறியுள்ளார். சாந்தன் இலங்கை பிரஜை. அவர் இலங்கை வருவதற்கு தயாரிடம் மனு எதற்கு? அதைவிட, அவர் ஏற்கனவே மனு கொடுத்துள்ள நிலையில் மீண்டும் மனு எதற்கு? அதையும்விட, இதற்கு எதற்கு தமிழரசுக்கட்சியின் மனு வேண்டும்? ஜனாதிபதி காலம் கடத்துவதற்காக இதை கேட்கிறாரா? அல்லது சிறீதரன் அறிக்கைவிட்டு தமிழ் மக்களை ஏமாற்றுகிறாரா?

சம்பந்தர் ஐயா நாளை மறுநாள்

சம்பந்தர் ஐயா நாளை மறுநாள் தனது 91வது பிறந்தநாளை தன் பிள்ளைகளுடன் கொண்டாட இருக்கின்றார். மகிழ்ச்சி. அவருக்கு எமது வாழ்த்துக்கள். ஆனால் இந்த தாயின் மகன் முருகன் கடந்த ஆறு நாட்களாக உண்ணாவிரதம் தொடர்கின்றார். அவர் உயிரை காப்பாற்றி லண்டனில் இருக்கும் தன் மகளுடன் சேர்ந்து வாழ சம்பந்தர் ஐயா குரல் கொடுக்க வேண்டும். இப்பவாவது குரல் கொடுப்பாரா?

இலங்கை அரசின் அனுமதி கிடைத்ததும்

இலங்கை அரசின் அனுமதி கிடைத்ததும் சாந்தன் அனுப்பி வைக்கப்படுவார் என இந்திய அரசு கூறுகின்றது. சாந்தன் அழைத்து வரப்படுவார் என இலங்கை ஜனாதிபதி கூறுகின்றார். 15 மாதமாகியும் இலங்கை அரசின் அனுமதி இன்னும் வந்து சேரவில்லை என்று இந்திய அரசு கூறுகின்றது. தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்தில் இலங்கை அரசின் அனுமதி இந்திய அரசை சென்றடைய இன்னும் எத்தனை மாதம் எடுக்கும்? யாராவது அறிந்தவர்கள் கூறுவீர்களா?

கடும் புயல்களுக்கு மத்தியிலும்

கடும் புயல்களுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது. எத்தனையோ நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்த மனிதர் சிரித்துக் கொண்டுதானே இருக்கிறார். அதெப்படி? சரி. இவர் ஏன் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சி தொடங்கக்கூடாது? இவர் தொடங்கினாலும் ஆதரிக்க நாலு பேர் இருக்கத்தானே செய்வார்கள்? குறிப்பு - இது நடிகர் விஜய் கட்சி தொடங்கியதால் ஏற்பட்ட கடுப்பு பதிவு இல்லை.😂

NIA சோதனை மிரட்டல்களுக்கு மத்தியிலும்

NIA சோதனை மிரட்டல்களுக்கு மத்தியிலும் சிறப்புமுகாம் அகதிகளின் விடுதலைக்காக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர் நாம் தமிழர் கட்சியினர். இனியாவது அகதிகளின் விடுதலைக்கு வழி பிறக்கட்டும்

அகிம்சை வழி போராட்டம் அடக்கப்படும்போது

அகிம்சை வழி போராட்டம் அடக்கப்படும்போது தவிர்க்க முடியாமல் ஆயுதப் போராட்டம் வெடிக்கும். வெடித்த அந்த ஆயுத போராட்டத்தை “பயங்கரவாதம்” என்று கூறி அழித்த சர்வதேசம் இப்போது என்ன கூறப்போகிறது? தமிழ் மக்கள் சர்வதேசத்திற்கு இன்று தெரிவித்துள்ள செய்தி (1) இலங்கையின் சுதந்திர தினம் தமிழரின் கரிநாள். (2) அடக்குமுறைக்கு அடிமையாக வீழ்ந்து கிடக்கமாட்டோம். தீர்வு கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவோம். இதற்கு சர்வதேசம் என்ன பதிலை அளிக்கப் போகிறது?

ஒருபுறம் நாம் தமிழர் செயற்பாட்டாளரை

ஒருபுறம் நாம் தமிழர் செயற்பாட்டாளரை திமுக ஒன்றிய செயலர் கொலை செய்கிறார். எம்எல்ஏ மேடை ஏறி தாக்கிறார். திமுக அரசின் காவல்துறை நாம் தமிழர் மீது பொய் வழக்கு போட்டு மிரட்டுகிறது. மறுபுறம் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மத்திய அரசு NIAயை வைத்து சோதனை செய்து மிரட்டுகிறது. இதிலிருந்து ஆரியமும் திராவிடமும் தமிழ்தேசியத்தை நசுக்கும் என்பது மட்டுமல்ல நாம் தமிழர் சரியாக பயணிக்கின்றனர் என்பதும் புலனாகிறது.

இரந்து பெறுவதற்கு

இரந்து பெறுவதற்கு உரிமை ஒன்றும் பிச்சை இல்லை அது போராடி பெறுவது. மரம் அமைதியை விரும்பினாலும் காற்று விடுவதில்லை மக்கள் அமைதியை விரும்பினாலும் அரசின் அடக்குமுறை மக்களை போராட வைக்கிறது போராடுவது என்று முடிவெடுத்துவிட்டால் இலக்கு ஒன்றே நோக்கமாக இருக்க வேண்டும் சீனா வந்தால் இந்தியா வரும் இந்து தமிழீழம் கேட்டால் இந்தியா வரும் என்று காரணங்களை தேடிக்கொண்டிருக்க கூடாது. வீழாமல் வாழ்ந்தோம் என்பது பெருமை இல்லை வீழும்போதெல்லாம் மீண்டும் எழுந்தோம் என்பதே பெருமை. தாம் மீண்டும் எழுவதை தமிழ் மக்கள் காட்டியுள்ளனர்.

சம்பந்தர் ஐயாவின் 91 வது பிறந்தநாள்

•சம்பந்தர் ஐயாவின் 91 வது பிறந்தநாள்!;. காது கேட்கவில்லை. கண் தெரியவில்லை. மற்றவர் உதவி இன்றி எழுந்து நடமாடக்கூட முடியவில்லை. ஆனாலும் பதவியை விட்டு ஒதுங்க இன்னும் மனம் வரவில்லை. அவர் அழைத்து வந்த சுமந்திரனே கேட்ட பின்பும்கூட கொஞ்சம்கூட வெட்கமின்றி பதவியை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இந்த சொகுசு மாளிகையில் தங்குவதற்காக இவர் தொகுதியில் 25 ஆயிரம் மக்கள் வீடு இழக்கின்றனர் பொதுவாக யார் இறந்தாலும் இன்னும் கொஞ்சநாள் இருந்திருக்கலாம் என்று இரங்கும் மக்கள் இன்னும் இவர் இறக்கவில்லையா என வெறுப்புடன் கேட்கும் நிலை.. மன்னித்துவிடுங்கள் ஐயா வாழ்த்த மனம் வருகுதில்லை.

செய்தி – ஜேவிபி தலைவருடன் இந்திய அரசு பேச்சு

செய்தி – ஜேவிபி தலைவருடன் இந்திய அரசு பேச்சு கடந்த வருடம் தமிழ்த் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார்கள். அந்த கடிதம் கிடைத்தது என்றுகூட இதுவரை இந்திய அரசு பதில் அளிக்கவில்லை. ஆனால் ஜேவிபி எந்தவித கடிதமும் எழுதாத நிலையில் அதன் தலைவரை அழைத்து இந்திய அரசு பேசியுள்ளது. இதற்கு என்ன காரணம்? கடந்த வாரம் திருகோணமலையில் இந்திய அரசுக்கு எதிராக மூவின மக்கள் ஒன்று சேர்ந்து செய்த போராட்டத்தின் பின்னணியில் ஜேவிபி இருப்பதாக இந்திய அரசு நினைப்பதே காரணம் அதுமட்டுமல்ல இலங்கையில் இந்திய அரசின் முதலீடுகளுக்கு எதிராக ஜேவிபி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனவேதான் ஜேவிபி யை வாங்குவதற்காக இந்திய அரசு அழைத்துள்ளது. ஜேவிபி விலை போகுமா?

இவர் புலி உறுப்பினர் இல்லை.

இவர் புலி உறுப்பினர் இல்லை. இவர் ஆயுதம் ஏந்தி போராடவில்லை இவர் மக்களால் வாக்கு அளித்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இவர் சிங்கள அரசால் போர் நிறுத்த காலகட்டத்தில் 07.02.2005 யன்று கொல்லப்பட்டார் 19 வருடங்கள் கழிந்துவிட்டன. இன்னும் இவர் கொலைக்கு நீதி வழங்கப்படவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலைக்கு எப்படி இன்னும் நீதி வழங்கப்படவில்லையோ, பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராயசிங்கம் கொலைக்கு எப்படி இன்னும் நீதி வழங்கப்படவில்லையோ, அதுபோன்று பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அவர்கள் கொலைக்கும் இன்னும் நீதி வழங்கப்படவில்லை. தமது பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைக்கே நீதி பெற்றுக்கொடுக்க முடியாத தமிழரசுக்கட்சியினர், தமிழ் மக்களின் கொலைக்கு நீதி பெற்றுக்கொடுப்பார்கள் என எப்படி நம்புவது? ஜோசப் பரராயசிங்கம் மரணத்தையடுத்து சந்திரநேருவின் மகன் சந்திரகாந்தன் தமிழரசுக்கட்சியால் பாராளுமன்ற உறுப்பினராக்கப்பட்டார். 2009ல் நடைபெற்ற வெள்ளைக்கொடி சம்பவத்தின் முக்கிய சாட்சியாக வாக்கு மூலம் அளித்துள்ளார் சந்திரகாந்தன் சந்திரகாந்தன் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக நான்கு வருடம் இருந்துள்ளார். ஆனாலும் அவர் உறுப்பினர் இல்லை எனக்கூறி அண்மையில் நடந்த தமிழரசுக்கட்சி தலைவர் தேர்வுக் கூட்டத்திற்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என கூறுகின்றனர். எல்லையில் தமிழரசுக்கட்சியை கட்டிக்காத்த சந்திரநேரு அரியநாயகம் குடும்பத்திற்கே இந்த கதியா?

அடேய்!

அடேய்! யாரு பார்த்த வேலைடா இது?😂😂 என்ன இருந்தாலும் 100 கோடி சம்பளத்தை விட்டிட்டு அரசியலுக்கு வருகிறேன் என்கிறார். ஸ்டாலின், உதயநிதி. இன்பநிதி போன்று அப்பன், தாத்தா வாரிசாக அரசியலுக்கு வரவில்லை.

இரண்டு வாரத்திற்குள் கடவுச்சீட்டு

இரண்டு வாரத்திற்குள் கடவுச்சீட்டு பெற வழி செய்வதாக தமிழக அரசு வாக்குறுதி அளித்ததையடுத்து பயஸ் அவர்கள் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாக அறிய வருகிறது. இம்முறையாவது தமிழக அரசு தான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் என நம்புவோம். அவர்களின் 33 வருட சிறைவாழ்வு முடிவுக்கு வரட்டும்.

இலங்கை அரசின் அனுமதி கிடைத்தவுடன்

இலங்கை அரசின் அனுமதி கிடைத்தவுடன் சாந்தன் அனுப்பி வைக்கப்படுவார் என இந்திய அரசு கூறுகின்றது. சாந்தன் நாடு திரும்ப எந்த தடையும் இல்லை என்று இலங்கை அரசு கூறுகின்றது. ஆனாலும் இன்னும் சாந்தன் நாடு வந்து சேரவில்லை. இதற்கு என்ன காரணம்? குறிப்பு – மானாட மயிலாட புகழ் கலா மாஸ்டரும் நடிகை ரம்பாவும் இன்று காலை யாழ் வந்துள்ளார்கள். அவர்களால் உடன் வர முடிகிறது.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் மூலமே தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் ஜக்கியம் ஏற்பட வேண்டும் என்று தோழர் சண் கூறினார். அதுமட்டுமன்றி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் ஜேவிபி கட்சியை இனவாதக்கட்சி என பகிரங்கமாக விமர்சித்தார். இந்தியாவில் நக்சல்பாரி இயக்கம் (நக்சலைட்டுகள்)அழித்தொழிப்பு நடவடிக்கையை முன்வைத்து செயற்பட்டபோது அதன் தவறுகளை அப்பவே சுட்டிக்காட்டிய ஒரே தலைவர் தோழர் சண். அதுமட்டுமல்ல அத்தகைய அழித்தொழிப்பு நடவடிக்கைகள் இலங்கையில் சிலர் முன்னெடுக்க முனைந்தபோது அதனை விமர்சித்து நிறுத்தியவர் அவர். இந்தியாவைப் போன்று இலங்கையிலும் பெரியாரியம், அம்பேத்காரியம் போன்ற சீர்திருத்தக் கருத்துகள் காலூன்றி வளர முடியாமைக்கு முக்கிய காரணம் தோழர் சண் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சியினர் அவர்கள் சாதீய தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியதுடன் அதை “அடிக்கு அடி” என்னும் தத்துவத்தினூடாக ஆயுதப் போராட்டமாகவும் முன்னெடுத்தனர். வடக்கு கிழக்கில் மட்டுமன்றி மலையக தோட்ட தொழிலாளர்களின் பல வழக்குகளிலும் தோழர் சண் நேரிடையாக ஆஜராகி வெற்றிபெற்று கொடுத்துள்ளார். சண் கேட்டுக்கொண்டமைக்காக செனட்டர் நடேசன் ஆஜராகியிருக்கிறார். சண் வேண்டுகோள்படி தோட்ட தொழிலாளர் வழக்கில் நடேசன் மகன் சத்தியேந்திரா இங்கிலாந்து சென்று வாதாடி வெற்றி பெற்றுக்கொடுத்துள்ளார். தோழர் சண் சிங்களவராக இருந்திருந்தால் இலங்கை வரலாறு வேறு விதமாக இருந்திருக்கும்.

சாந்தனிடம் கடவுச்சீட்டு இருக்கிறது.

சாந்தனிடம் கடவுச்சீட்டு இருக்கிறது. அதனை சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தால் புதுப்பிக்க முடியும். அப்படியிருக்க எதற்காக இலங்கையில் இருந்து கடவுசீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்? அப்படி அனுப்புவதாக இருந்தாலும் சென்னை இலங்கை தூதரகத்திற்கு அனுப்பி அங்கு வைத்து சாந்தனிடம் ஒப்படைக்க வேண்டும். இதுதானே நடைமுறை. அதைவிடுத்து எதற்காக இந்திய வெளியுறவு அமைச்சுக்கு சாந்தன் கடவுச்சீட்டு அனுப்ப வேண்டும்? சாந்தன் 15 மாதங்களாக இலங்கை திரும்ப முடியாமைக்கு உண்மையான காரணம் (1) சிறப்புமுகாமில் இருந்து சாந்தன் நாடு திரும்புவதற்குரிய அனுமதியை தமிழக அரசு வழங்க வேண்டும். ஆனால் தமிழக அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை. (2) சாந்தன் தன் கடவுச்சீட்டை புதுப்பிக்க சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் செல்வதற்குரிய பயண ஏற்பாட்டை தமிழக அரசு செய்ய வேண்டும். ஆனால் தமிழக அரசு செய்யவில்லை. அறிக்கைவிடும் இலங்கைத் தலைவர்கள் உண்மையில் சிறப்புமுகாம் நடைமுறைகளை அறிந்து அறிக்கை விடுகின்றனரா? அல்லது, தாமதத்திற்கு காரணமான இந்திய மத்திய மாநில அரசுகளை காப்பாற்றுவதற்காக அறிக்கை விடுகின்றனரா?

சாந்தனுக்கு காங்கிரஸ் கட்சியினரால்

சாந்தனுக்கு காங்கிரஸ் கட்சியினரால் உயிராபத்து ஏற்படலாம் என்பதாலே சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருப்பதாக முன்னாள் மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் கூறுகின்றார். உச்சநீதிமன்றதால் விடுதலை செய்யப்பட்ட ஏழு தமிழரில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் கடந்த 15 மாதங்களாக சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். அவர்களில் யாருக்கும் யாராலும் எந்த ஆபத்தும் இதுவரை ஏற்பட்டதில்லை. இனியும் ஏற்படப் போவதில்லை. உண்மைநிலை இப்படியிருக்க சாந்தனுக்கு மட்டும் காங்கிரஸ் கட்சியால் உயிராபத்து ஏற்படும் என்று தமிழக அரசு அடைத்து வைத்திருப்பதாக எப்படி இவர் கூறுகின்றார்? அதுமட்டுமல்ல, சாந்தன் தன்னை தமிநாட்டில் நடமாட அனுமதிக்கும்படி கேட்கவில்லை. தன்னை இலங்கை அனுப்பி வைக்குமாறே கேட்கிறார். இலங்கை திரும்ப விரும்புபவரை எதற்கு சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்க வேண்டும்? இவர் உண்மையில் சாந்தன் நிலை அறிந்து பேசுகின்றாரா? அல்லது யாழ் இந்திய தூதரை மகிழ்விப்பதற்காக இப்படி கூறுகின்றாரா?

நினைவு அஞ்சலிகள்!

நினைவு அஞ்சலிகள்!

தோழர் சண் அவர்களை நினைவில் கொள்வோம்!

•தோழர் சண் அவர்களை நினைவில் கொள்வோம்! 08.02.2024யன்று தோழர் சண் அவர்களின் 31 வது நினைவு தினம் ஆகும். இலங்கையில் மாவோயிசத்தை அறிமுகப்படுத்தி வளர்த்தமைக்காக அவரை நினைவுகூர வேண்டும். இலங்கையில் பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதம் ஏந்திய மக்கள்யுத்தப்பாதையை முன்வைத்தமைக்காக நினைவு கூர வேண்டும். “அடிக்கு அடியே” சாதீய கொடுமையில் இருந்து விடுபட வழி வகுக்கும் என கூறி தீண்டாமைக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை அளித்தமைக்காக நினைவு கூர வேண்டும். இலங்கையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த ஒரு கம்யுனிஸ்ட் தலைவர் என்பது மட்டுமன்றி இனப்பிரச்சனைக்கு தீர்வாக பிரதேச சுயாட்சியை முன்வைத்தவர் என்பதால் நினைவு கூர வேண்டும். அவர் பற்றிய சில குறிப்புகள். •வறிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் நன்கு படித்து பட்டதாரியானவர். தமிழ் சிங்களம் ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் சிறந்த புலமை மிக்கவர். •அவர் விரும்பியிருந்தால் ஒரு நல்ல உத்தியோகம் பெற்று வசதியான வாழ்வு வாழ்ந்திருக்கலாம் •அல்லது பின்னரும்கூட பல கம்யுனிஸ் தலைவர்கள் தேர்தல் பாதையில் சென்று அமைச்சு பதவிகள் பெற்றதுபோல் இவரும் பெற்றிருக்கலாம். •ஆனால் அவர் இறுதிவரை உறுதியான புரட்சியாளராக வாழ்ந்து மறைந்தார். •சீனாவின் உதவி கிடைக்காமல் போய்விடும் என்று தெரிந்தும் சீனாவின் தவறுகளை விமர்சித்தவர். •மாசேதுங் உயிருடன் இருக்கும்போதே சீனா இலங்கை அரசுக்கு செய்த ஆயுத உதவிகளை கண்டித்தவர். சீனா முதலாளித்தவ பாதைக்கு திரும்புகிறது என்று கூறி அதனுடனான உறவுகளை கைவிட்டவர். •தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியபோது இலங்கை அரசு அவர்களை “பயங்கரவாதிகள்” என்று அழைத்தது. அமிர்தலிங்கம் உட்பட தமிழர்விடுதலைக்கூட்டணியினர் “பொடியன்கள்” என்று அழைத்தனர். ஆனால் தோழர் சண்தான் முதன் முதலில் அவர்களை “போராளிகள்” என்று அழைத்தார். (அதுவும் சிறிமாவோ பண்டாரநாயக்கா, கொல்வின் ஆர்டி சில்வா, என்எம் பெரராரோ பீட்டர் கெனமன் அமிர்தலிங்கம் இருந்த மேடையில் கொழும்பில் சிங்கள மக்கள் மத்தியில் தைரியமாக கூறினார்.) •தமிழ் சிங்கள மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்காக பல தொழிற்சங்கங்களை நிறுவி அவர்களுக்காக இலவசமாக வழக்குகள் பேசி வென்று கொடுத்தவர். (1)ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கள் இந்திய ஆதரவுடன் அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் மலரும் என்று கூறியபோது “இந்தியாவை நம்ப வேண்டாம். இந்தியா ஒரு போதும் தமிழீழம் பெற்று தராது. மாறாக போராளிகளை அழிக்கும்” என்று கூறியவர். (2)இலங்கையில் சமசமாஜக்கட்சி டிராட்சியவாதிகளுக்கும் , தேர்தல் பாதையில் பயணிக்கும் திரிபுவாத கம்யுனிஸ்டுகளுக்கும் தோழர் சண் கொடுத்த தத்துவார்த்த அடி இன்னும் அவர்களால் எழும்ப முடியாத அடியாக இருக்கிறது. (3)இலங்கையில் இனி யார் புரட்சியை செய்தாலும் அவர் முன்னெடுத்த புதிய ஜனநாயகப்புரட்சியில் இருந்தே தொடர வேண்டும்.. தோழர் சண் அவர்களை மறுத்து விட்டு யாராலும் புரட்சி செய்ய முடியாது. தோழர் சண் இலங்கையில் ஒரு மாபெரும் தலைவர் மட்டுமல்ல மகத்தான தலைவரும்கூட. அவரை நினைவு கூர்வது எமது கடமையாகும். குறிப்பு - இத்தகைய மகத்தான ஒரு தலைவரின் இறுதி நாட்களில் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தமை என்னால் மறக்க முடியாதது. அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரது “ ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள்” நூலை 1990ல் சென்னையில் அச்சடித்து வெளியிட்டிருந்தேன்

பெண்கள் ஆதரவின்றி

பெண்கள் ஆதரவின்றி பெண்கள் பங்களிப்பு இன்றி எந்தவொரு சமூக மாற்றத்தையும் நிகழ்த்திவிட முடியாது. அதுவும் தமிழத் தேசிய பரப்பினுள் பெண்கள் அதிக அளவில் வருவதும் அவர்களுக்கு போட்டியிட சம வாய்ப்பு அளிப்பதும் நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கின்றன. அவர்கள் தேர்தலில் வெற்றி பெறவில்லையே என வருந்த வேண்டியதில்லை ஏனெனில் அவர்கள் தனித்து போட்டியிடுவதே வெற்றிதான். அவர்கள் ஏதோ சிறு கல்லை உடைத்துக்கொண்டிருப்பதாக எல்லோரும் நினைக்கின்றனர். ஆனால் அவர்கள் ஆரியம் திராவிடம் என்னும் இரு மலைகளை உடைத்துக்கொண்டிருந்தனர் என்றே வரலாறு பதிவு செய்யப்போகிறது.

NIA சோதனையும் எனது சங்கீதமும்

•NIA சோதனையும் எனது சங்கீதமும் நான் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தவேளை ஏர். ஆர் ரகுமானின் சின்ன சின்ன ஆசை பாடல் வெளிவந்து பட்டி தொட்டி எங்கும் பிரபல்யம் அடைந்திருந்தது. அப்போது அந்த பாடலை ஒருமுறை கேட்டுவிட வேண்டும் என நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். சிறையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பகலில் மட்டும் பாடல்கள் போடுவார்கள். ஆனால் அவை பழைய பாடல்களாக இருந்தன. அப்போது என்னை 14 நாட்களுக்கு ஒருமுறை பஸ்ஸில் அழைத்துச்சென்று கொடைக்கானல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வார்கள். அதனால் பாட்டுப்பெட்டி உள்ள பஸ்ஸில் சென்றால் இந்த பாட்டை கேட்க முடியும் என நான் நினைத்தேன். இதனை என்னை அழைத்துச் செல்ல வந்த பொலிசாரிடம் கூறினேன். எனது ஆர்வத்தைப் பார்த்த பொலிசாரும் சிரித்துவிட்டு பாட்டு பெட்டி உள்ள பஸ்ஸில் ஏற்றியதும் மட்டுமன்றி டிரைவரிடம் அநத பாட்டைப் போடும்படி கூறினார்கள். பாடல் மட்டுமல்ல அந்த பாடலைக் கேட்ட எனது ஆசையும் சின்ன சின்ன ஆசைதான். எனது ஒரு சின்ன ஆசை இப்படித்தான் நிறைவேறியது. இப்போது நான் விரும்பிப் பார்க்கும் நிகழ்சிகளில் சுப்பர் சிங்கர் மற்றும் சரிகம பாட்டு நிகழ்ச்சிகள் முக்கியமானவை. அந்த நிகழ்வில் சிலர் பாடும்போது அது நன்றாக இருப்பதாக நான் நினைப்பேன். ஆனால் நடுவர்கள் சுருதி சேரவில்லை. சரணம் நன்றாக வரவில்லை என்றெல்லாம் கருத்து கூறுவார்கள். எனவே இதெல்லாம் என்ன என்பதை அறிய விரும்பி சென்னையில் உள்ள பாடகி ஒருவரை தொடர்பு கொண்டு எனக்கு சங்கீதம் கற்று தர முடியுமா எனக் கேட்டேன். அவர் உடனே “சிறந்த பாடகராக வர விரும்புகிறீர்களா?” என கேட்டார். அதற்கு நான் “இல்லை. சிறந்த பாடல் எது என்பதை தெரிந்துகொள்வதற்காக படிக்க விரும்புகிறேன்” என்றேன். என் விருப்பம் அவருக்கு வித்தியாசமாக தோன்றியிருந்தாலும் அவர் எனக்கு சொல்லி தர சம்மதித்தார். எனக்கு சங்கீதம் சொல்லிதர சம்மதித்தவர் NIA சோதனை பற்றிய செய்திகளை அறிந்ததும் இதனால் தனக்கும் ஏதும் பிரச்சனை வருமா என அச்சத்துடன் கேட்டார். அவருடைய அச்சம் நியாயமானது. ஏனெனில் நான்கு வருடங்களுக்கு முன்னர் புலிகள் இயக்க தடை நீடிப்பின்போது எனது முகநூல் பதிவுகளையும் காரணமாக காட்டியிருந்தனர். எனது முகநூல் பதிவுகளையும் காரணமாக காட்டியிருக்கின்றனர் என்பதையே நான் கடந்த வருடம்தான் அறிந்திருந்தேன். எனவே மீண்டும் புலிகள் இயக்க தடையை நீடிப்பதற்காக இந்த பாடகி வீட்டில் NIA சோதனை செய்து என்னுடன் தொடர்பு என்று காட்டினாலும் காட்டுவார்கள். NIA சோதனையால் எனது சங்கீத படிக்கும் முயற்சி தடைப்பட்டுவிட்டது. பரவாயில்லை. NIA சோதனைக்கு அஞ்சாத ஒரு பாடகர் கிடைக்காமலா போய்விடுவார்?

இரண்டு நிகழ்வுகள்

இரண்டு நிகழ்வுகள் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஹரிகரன் இசை நிகழ்வு இன்னொன்று சென்னையில் இடம்பெற்ற A.R.ரகுமான் இசை நிகழ்வு இரண்டு இசை நிகழ்வுகளிலும் குழப்பம் ஏற்பட்டது சென்னையில் ஏற்பட்ட குழப்பத்திற்கு ரகுமான் மீது குற்றம் சாட்டப்பட்டது ஆனால் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு மக்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது. யாழ்பாண மக்கள் தான் காரணம் என்றால் இதற்கு முன்னர் நடைபெற்ற சந்தோஷ் நாராயணன் இசை நிகழ்வு எந்த குழப்பமும் இன்றி நடைபெற்றதுதானே? எனவே சென்னை நிகழ்வுக்கு ARரகுமான் மன்னிப்பு கோரியதுபோல் யாழ்ப்பாண நிகழ்வக்கு ஏற்பாட்டாளர்களே மன்னிப்பு கோர வேண்டும்.

தோழர் சிங்காரவேலர் நினைவுநாள்

•தோழர் சிங்காரவேலர் நினைவுநாள் வசதியான குடும்பத்திலிருந்து வந்து அவர் வழக்கறிஞர் தொழில் செய்தபோதும் ஏழைகள் பற்றியே அவரது மனம் சிந்தித்துக்கொண்டிருந்தது. ஆனால் இன்றைய ஓட்டுப்பொறுக்கி கம்யுனிஸ்டுகள் 5 சீட்டுக்கும் 25 கோடி ரூபாவுக்கும் அறிவாலயம் வாசலில் காத்து கிடக்கின்றனர்.

போரை நிறுத்துமாறு கோரி

போரை நிறுத்துமாறு கோரி 12.02.2009 யன்று ஜ.நா மன்ற வாசலில் முருகதாசன் தனக்கு தானே தீயிட்டு மரணமடைந்தார். முருகதாசின் தியாகம் மகத்தானது. அவருக்கு எமது நினைவு அஞ்சலிகள். ஆனால் முருகதாசின் மரணம் நமக்கு கற்றுக்கொடுப்பது என்ன? அகிம்சை வழியில் போராடினால் சிங்கள, இந்திய அரசுகள் மட்டுமல்ல சர்வதேச ஐ.நா மன்றமும் கண்டு கொள்ளாது என்பதே.

போராட்டம் இன்பமயமானது

•"போராட்டம் இன்பமயமானது" – காரல் மார்க்ஸ் அன்று , சிரித்துக்கொண்டு செருக்களம் புகுந்தனர் என்று புறநானூற்றில் படித்தபோது அப்படி நடக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. இன்று, அதை உண்மைதான் என்று எம்முன்னே நிரூபித்த புறநானூற்று வீரர்கள் இவர்கள்.

இருவரும் இனப்படுகொலையை

இருவரும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துமாறு கோரி தற்கொலை செய்தவர்கள். ஒருவர் யூத இனத்தவர். பெயர் - ஸ்டீபன் லக்ஸ் இன்னொருவர் ஈழத் தமிழர். பெயர் - முருகதாசன் யூத இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி ஸ்டீபன் லக்ஸ் 03.07.1936யன்று ஜ.நா மன்றத்தில் தற்கொலை செய்தார். தமிழின படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி முருகதாசன் 12.02.2009 யன்று ஜ.நா மன்றத்தில் தற்கொலை செய்தார். யூதர்களுக்கு இஸ்ரவேல் என்ற நாடு கிடைத்துவிட்டது. ஆனால் தமிழர்களுக்கு இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. எமக்காக இறந்தவர்களின் தியாகங்கள் வீண் போகக்கூடாது. தொடர்ந்து போராடுவோம்!

தமிழ்நாட்டில் தோழர் ஜீவாவை

தமிழ்நாட்டில் தோழர் ஜீவாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் ஒருமுறை கூட்டம் ஒன்றில் பேசிவிட்டு மிகவும் பசியுடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். இவர் மிகவும் களைப்புடன் வருவதைக் கண்ட தொண்டன் ஒருவன் “ஏன் தோழரே சாப்பிடவில்லையா ?” எனக் கேட்டான். அதற்குஜீவா “ கையில காசு இல்லை. அதனால் சாப்பிடவில்லை” என்றார். உடனே அந்த தொண்டன் அவருக்கு உணவு வாங்கி கொடுத்து சாப்பிட வைத்தான். ஜீவா சாப்பிட்டுவிட்டு எழும்போது அவர் மடியில் ஒரு துணியில் கட்டப்பட்ட பணம் இருப்பதை கண்டான் அத் தொண்டன். உடனே அத் தொண்டன் “இப் பணத்தில் சாப்பிட்டிருக்கலாமே தோழர்?” எனக் கேட்டான். அதற்கு ஜீவா “ இது மக்கள் தந்த பணம். இதை நான் கட்சியில் ஒப்படைக்கனும். இது கட்சிப் பணம்” என்று கூறினார். இது தமிழ்நாட்டில் நடந்த கதை. இப்போது அப்படியே ஈழத்திற்கு வாருங்கள். உங்களுக்கு ஒரு ஈழத்தில் நடந்த கதை ஒன்று கூறுகின்றேன். ஒரு கரும்புலி போராளி, இரு தினங்களில் தற்கொலை தாக்குதல் செய்ய முடிவாகிறது. இயக்க வழக்கப்படி அப் போராளி இறுதியாக தன் குடும்பத்தை காண செல்கிறான். ஒரு சிறய குடிசையில் தாயும் தங்கையும் இருக்கின்றனர். மிகவும் ஏழ்மையான நிலையில் அவர்கள் இருந்தனர். இருப்பினும் நீண்ட நாட்களின் பின் தன் மகனைக் கண்ட அத் தாய் பக்கத்தில் வீட்டில் கடன் வாங்கி மகனுக்கு உணவு சமைத்து போடுகிறார். உணவு உண்ட மகன் விடைபெறும்போது அவன் சட்டை பாக்கட்டில் பணம் இருப்பதை அத் தாய் காண்கிறார். “மிகவும் கஸ்டமாக இருக்கிறது ஒரு ஐந்நூறு ரூபா தா” என்று தாய் கேட்கிறார். “இது இயக்க பணம் அம்மா. இதை நான் இயக்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். நான் தர முடியாது” என்று அந்த மகன் கூறுகின்றார். தான் இரு தினங்களில் இறக்கப் போகின்றேன் என்பது அந்த போராளிக்கு தெரியும். ஆனாலும் அப் போராளி அந்த இறுதி சந்திப்பில் தன் தாயின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றவில்லை. இங்கு எனது கவலை என்னவெனில் தோழர் ஜீவாவின் தியாகம் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டுள்ளது. ஆனால் எம்மவர்களின் மகத்தான தியாக வரலாறுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாமல் உள்ளது. இனியாவது கடத்துவோம்

கலா மாஸ்டர் ஒரு நடன இயக்குனர்

கலா மாஸ்டர் ஒரு நடன இயக்குனர் கலைஞர் பணம் கொடுத்தால் அவர் “மானாட மயிலாட”வில் ஆடுவார் ரம்பா புருசன் பணம் கொடுத்தால் யாழ்ப்பாணத்தில்; வந்து ஆடுவார். எனவே எய்தவன் இருக்க அம்பை நோவதுபோல் பணம் கொடுத்த கலைஞரை விட்டிட்டு ஆடிய கலா மாஸ்டரை விமர்சிப்பதால் என்ன பயன்? எதிரி மீதான விமர்சனம் அவனை அம்பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். அதாவது புலி பாய்ந்து இரையைக் கவ்வுவது போல் இருக்க வேண்டும். நண்பன் மீதான விமர்சனம் அவனை வென்றெடுப்பதாக இருக்க வேண்டும். அதாவது பூனை தன் குட்டிகளை கவ்வுவது போல் இருக்க வேண்டும். கலா மாஸ்டர் மீதான இத்தகைய அஞ்சலி போஸ்டர் விமர்சனங்களால் நாம் அடையப் போவது என்ன?

நானும் நண்பர் சபாவும்

நானும் நண்பர் சபாவும் கம்போடியாவில் இருந்தபோது(1998ல்) ஒரு நாள் வீதியோரத்தில் முருங்கை மரம் ஒன்றைக் கண்டோம். அதில் நிறைய முருங்கைக்காய்கள் காய்த்து தொங்கிக்கொண்டிருந்தன. இதைக் கண்டதும் எங்களுக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. அதை பறித்துச் சென்று சமைத்து உண்ண விரும்பினோம். ஏனெனில் நாம் இருவரும் பல வருடங்கள் தமிழ்நாட்டில் சிறையில் இருந்தவர்கள். சிறையில் முருங்கைக்காய் கறி சமைப்பதில்லை. அதனால் பல வருடங்கள் இதனை உண்ணும் வாய்ப்பு எமக்கு கிடைக்கவில்லை. அதனால்தான் பல வருடம் கழித்து கம்போடியாவில் முருங்கை மரத்தைக் கண்டதும் அதில் காய்களைக் கண்டதும் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் நாம் முருங்கைக்காயை பறிக்கும்போது பார்த்த கம்போடியர்களும் அதை கொண்டு வந்து சமைக்கும்போது வீட்டுக்கார கம்போடியரும் எங்களை ஆச்சரியமாக பார்த்தனர். அது ஏன் முதலில் எங்களுக்கு விளங்கவில்லை. அப்புறம் கேடட்போது “முருங்கை மரம் பேய் மரம் என்றும் அதனால் தாம் முருங்கைக்காய் சாப்பிடுவதில்லை” என்றும் அவர்கள் கூறினார்கள். கண்ட புழு பூச்சி எல்லாவற்றையும் வறுத்து சாப்பிடும் கம்போடியர்கள் முருங்கை மரத்தை ஏன் பேய் மரமாக நினைத்து சாப்பிடுவதில்லை என்பதற்கு இன்று வரை என்னால் விடை காண முடியவில்லை. குறிப்பு - இலங்கையில் இன்று முருங்கைக்காய் கிலோ 2000ரூபாய் என்றதும் இந்த கம்போடிய சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்தது.

இறுதி முத்தம்!

இறுதி முத்தம்! ஆண்டவர் இயேசு ஒரு முத்தத்தினால் காட்டிக்கொடுக்கப்பட்டார் என கூறுகின்றார்கள். அது உண்மையா பொய்யா தெரியாது. ஆனால் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் குழந்தை தன் தந்தையின் உடலுக்கு வழங்கிய இந்த இறுதி முத்தம் சிங்கள அரசின் கோர முகத்தை நன்கு இனங்காட்டுகிறது குறிப்பு - ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி சிங்கள அரசின் எறிகணைத் தாக்குதலால் 12.02.2009 யன்று மரணமடைந்தார்.

லால் சலாம்

• லால் சலாம் நடிப்பு – ரஜனி இயக்கம் - ரஜனி மகள் ஜஸ்வர்யா தயாரிப்பு – லைக்கா வெளியீடு உதயநிதியின் ரெட்ஜயன்ட் இத்தனை இருந்தும் நல்ல கதை இல்லை மொத்தத்தில் படம் ஒரு குப்பை ரஜனி பெயரைப் போட்டால் பணம் ஈட்டலாம் என்ற எண்ணத்தை இனியாவது இவர்கள் கைவிட வேண்டும்.

இலங்கையில் இன்று ஒரு பெட்டி சிகரெட்டின்

இலங்கையில் இன்று ஒரு பெட்டி சிகரெட்டின் விலை 1800 ரூபா என்கிறார்கள். ஆனால் இந்த சிகரெட் ஆங்கிலேயர்களால் முதலில் இலவசமாகவே வழங்கப்பட்டது என்பதை அறிவீர்களா? மக்கள் இதனை பழக வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு சந்தியிலும் இலவசமாக கொட்டி வைத்தார்கள். மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இதனைப்பழகி இதற்கு அடிமையானதும் விலைக்கு விற்க ஆரம்பித்தனர். இன்று எந்த அரசும் ஒவ்வொரு வருடமும் விலை அதிகரிப்பு செய்யும் பொருள் சிகரெட்தான். விலை அதிகரிக்கிறதே என்று சிகரெட்டிற்கு அடிமையானவர்கள் நிறுத்த மாட்டார்கள் என்று அரசுக்கு நன்கு தெரியும். இதைப் படித்தவுடன் இந்தியாவில் இருந்து இலவசமாக இறக்குமதியாகும் நடிகர் நடிகையர் உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை. சரி , நான் கூற வந்த விடயம் என்னவெனில் ஹரிகரன் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து பலரும் பலவித கருத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இவர்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய விடயம் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்வில் குழப்பம் ஏற்படுவது இது முதல் முறை இல்லை. 1981ல் பாடகர் மலேசியா வாசுதேவன் யாழ் வந்திருந்தார். அவருடைய ஒரு இசை நிகழ்ச்சி கரவெட்டி நெல்லியடி பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நபர் போதிய பணம் சேராததால் கூறியபடி மீதி பணத்தை மலேசியா வாசுதேவனிடம் கொடுக்காமல் தலைமறைவாகிவிட்டார். இதனால் நிகழ்சியை பாதியில் இடை நிறுத்தினார் மலேசியா வாசுதேவன். ஆனால் பணம் கொடுத்து நிகழ்ச்சியை பார்க்க வந்த பார்வையாளர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து பாட வேண்டும் என்று வற்புறுத்தியதுடன் மேடையை நோக்கி கல் எறிந்தனர். இதில் ஒரு கல் மலேசியா வாசுதேவன் மீது விழுந்தது. அவர் மிகுந்த கவலையுடன் “எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன். நான் வாழ யார் பாடுவார்” என்ற பாடலை பாடினார். அதுமட்டுமல்ல தன் வாழ்நாளில் கரவெட்டியை மறக்க மாட்டேன் என்று கூறிவிட்டுச் சென்றார். அடுத்து இன்னொரு நிகழ்வு. வல்வெட்டித்துறை கோவில் திருவிழாவில் எல்ஆர்ஈஸ்வரியின் பாட்டுக் கச்சேரி நடைபெற்றது. கட்டுக்கடங்காத கூட்டம். வல்வெட்டித்துறை இளைஞர்களே கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர். பைலட் பிரேம்நாத் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை ஈஸ்வரி பாடினார். அப் பாடலில் சிங்கள என்று ஒரு வரி வரும். அதனை அவர் பாடும்போது பெருங் கூட்டம் கூச்சலிட்டுக்கொண்டு மேடையை நோக்கியை ஓடியது. ஒருகணம் திகைத்து பாடுவதை நிறுத்திய ஈஸ்வரி அவர்கள் காரணத்தை புரிந்துகொண்டு இலங்கை என்று மாற்றி பாடினார். உடனே பலத்த கைதட்டல் அவருக்கு கிடைத்தது. அதே காலகட்டத்தில் சுட்டிபுரம் கோவிலில் சீர்காழி கோவிந்தராசன் கச்சேரி இடம்பெற்றது. சிறீமாவோ ஆட்சியில் இந்திய கலைஞர் இலங்கை வர தடை இருந்தது. பின்னர் ஜே.ஆர் காலத்தில் தான் அனுமதி கிடைத்தது. அதன்படி யாழ்ப்பாணம் வந்த முதல் பாடகர் சீர்காழி கோவிந்தராசனே எனவே அவரைப் பார்க்க பெருந்திரளான கூட்டம் கூடியது. ஆனால் எந்த குழப்பமும் இன்றி அவர் கச்சேரி நடைபெற்றது. அதுவும் இறுதியில் மழைக்காக ஒரு பாடல் பாடினார். அப் பாடல் பாடி முடித்ததும் அதிசயமாக மழைத் தூறல் நிகழந்தது.

கருத்துகளை புரிந்துகொள்வது எப்படி?

• கருத்துகளை புரிந்துகொள்வது எப்படி? பொருள் இருக்கிறது. அது இயங்கிக்கொண்டிருக்கிறது. அதில் இருந்து கருத்து பிறக்கின்றது. உதாரணமாக ஒருவர் ஒரு அடி முன்னோக்கி வைத்தால் உடனே ஒருவர் நல்லதொரு அசைவு என்று பாராட்டுவார் இன்னொருவர் இது உகந்த நேரம் இல்லை. எனவே அசையாமல் இருக்க வேண்டும் என்பார். வேறொருவர் இது ஆபத்து. பின்னோக்கி ஒரு அடி வைக்க வேண்டும் என்பார். ஒரு அடி அசைந்ததற்கே இப்படி பல கருத்துகள் இருக்கும்போது பாரிய சமூக அசைவில் எத்தனைவிதமான கருத்துகள் வந்து விழும்? சரி. இப்படி பல கருத்துகள் வருவது தவிர்க்க முடியாதவை என்பதை காண்கிறோம். அப்படியென்றால் இதில் எதனை எமக்கான கருத்தாக எடுத்துக்கொள்வது? உச்சரிக்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கு பின்னரும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிந்திருக்கிறது என்று லெனின் கூறுகின்றார். எனவே ஒருவர் கூறும் கருத்து யாரின் நலனுக்கானது என்பதை பார்க்கும் அறிவு எமக்கு இருக்க வேண்டும். இங்கு தெரிவிக்கப்படும் கருத்துகள் ஒன்றில் ஆளும் அரசுகளின் நலனை பாதுகாப்பதாக இருக்கின்றது. அல்லது ஆளப்படும் மக்களின் நலனுக்கானவையாக இருக்கின்றன. உழைத்து உழைத்து உருக்குலைந்த மக்களை மேலே எழும்பவிடாதவாறு அழுத்திப் பிடிக்கும் கருவிகளாக மதமும் கடவுளும் இருக்கின்றன. அதாவது மதமும் கடவுளும் ஆளும் அரசுகளின் நலனை பாதுகாப்பதாக இருக்கின்றன. ஆனால் அது புரியாமல் மக்கள் அதனை பின்பற்றுகின்றன. சரி இப்போது கோழிக்கு இரண்டு கால் என்று சுமந்திரன் கூறினால் அதனை எப்படி பார்ப்பது? உடனே நாம் கோழியின் மூன்றாவது காலை தேட வேண்டும். ஏனெனில் சுமந்திரன் ஒருபோதும் தமிழ் மக்களின் நலன் சார்ந்து கூறமாட்டார்.

சாந்தனை உடன் அனுப்பி வைக்குமாறு

சாந்தனை உடன் அனுப்பி வைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைப்பதாக மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சாந்தன் ஒரு வாரத்திற்குள் நாடு திரும்புவார் என்ற செய்தி ஆறுதல் தருகிறது. சாந்தன் தாயாரின் நீண்டநாள் விரும்பம் நிறைவேறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

காதலர்தின வாழ்த்துக்கள்!

•காதலர்தின வாழ்த்துக்கள்! உலகில் சிறந்த தத்துவத்திற்காக மட்டுமன்றி உலகில் சிறந்த காதலர்களுக்காகவும் மார்க்ஸ் ஜென்னி இன்றளவும் நினைவு கூரப்படுகின்றனர். மாபெரும் மாக்சிய ஆசான் எங்கெல்ஸ் கூறுகிறார் “ஒரு புதிய தலைமுறை அதாவது தம் வாழ்நாள் முழுவதற்கும் தன்னிடம் ஒரு பெண்ணின் சரணாகதியைப் பணமோ வேறு எவ்விதமான சமூக அதிகாரமோ கொண்டு விலைக்கு வாங்காத ஆண்களினதும் உண்மையான காதலன்றி வேறு எந்தக் காரணத்ததுக்கும் தம்மை சரணளிக்காதவர்களும் பொருளாதார பின்விளைவுகளுக்கு அஞ்சி தம்மைத் தமது நேயத்திற்குரியோருக்கு அளிக்காதவர்களுமான பெண்களின் தலைமுறை வளர்ந்து வந்தபின்பு இப் பிரச்சனை தீர்வு பெறும். இத்தகைய மக்கள் உருவாகிய பின்னர் அவர்கள் என்ன செய்யலாம் என்று நாம் இன்று நினைப்பது பற்றி அவர்கள் துளியளவும் அக்கறைப்படமாட்டார்கள். அவர்கள் தமது சொந்த நடைமுறைகளையும் தங்கள் சொந்த பொது அபிப்பிராயங்களையும் உருவாக்கி ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட நடைமுறையுடன் நிறைவு காண்பர். அத்தகைய ஒரு சமூகத்தில் பெண்கள் ஆண்களுடன் பூரண சமத்துவம் அனுபவிப்பர் என்பதில் ஜயமில்லை.”

6 ஆண்டுகள் விடுதலைப் புலிகளுக்கு

•6 ஆண்டுகள் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தமைக்காக தலைமறைவு வாழ்க்கை •10 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வாழ்க்கை •4 ஆண்டுகளுக்கு மேலாக நாம்தமிழர் இயக்க அரசியல் வாழ்க்கை. இவ்வாறு போராட்டமே வாழ்கையாக கொண்ட சுபா. முத்துக்குமாரின் 13 வது நினைவு தினம் 15.02.2024 ஆகும்

4ம் ஆண்டு நினைவஞ்சலிகள்!

4ம் ஆண்டு நினைவஞ்சலிகள்! தமிழ்நாடு விடுதலையை முன்னெடுத்த தோழர் தமிழரசன் வரலாற்றை “ தமிழ்தேசிய தலைவர் தமிழரசனின் வாழ்வும் அறமும்” என்னும் நூலாக எழுதியவர் தோழர் இளங்கோவன் இறுதிவரை ஈழத் தமிழருக்கு தன் உறுதியான ஆதரவை வழங்கியவர் தோழர் இளங்கோவன்

இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ கலிலி

இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ கலிலி இவர் 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி பிறந்தார் தன் உயிரைப் பணயம்வைத்து பூமியே சூரியனை சுற்றி வருகிறது என்ற உண்மையை உலகிற்கு கூறினார் ஆனால் நம்மவர்கள் இப்பவும் காலையில் சூரியன் உதிக்கிறது. மாலையில் மறைகிறது என்று எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்

இவர் சிங்கள இனத்தை சேர்ந்தவர் .

இவர் சிங்கள இனத்தை சேர்ந்தவர் . அத்துடன் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவரும்கூட. ஆனாலும் சிங்களவர்தான் வந்தேறிகள் என்று தன்னால் நிரூபிக்க முடியுமென சவால் விட்டவர். தமிழரை வந்தேறிகள் என்று கூறிய பௌத்த பிக்குவிற்கே இந்த சவாலை இவர் விட்டார்.