Thursday, February 15, 2024

இவர் புலி உறுப்பினர் இல்லை.

இவர் புலி உறுப்பினர் இல்லை. இவர் ஆயுதம் ஏந்தி போராடவில்லை இவர் மக்களால் வாக்கு அளித்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இவர் சிங்கள அரசால் போர் நிறுத்த காலகட்டத்தில் 07.02.2005 யன்று கொல்லப்பட்டார் 19 வருடங்கள் கழிந்துவிட்டன. இன்னும் இவர் கொலைக்கு நீதி வழங்கப்படவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலைக்கு எப்படி இன்னும் நீதி வழங்கப்படவில்லையோ, பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராயசிங்கம் கொலைக்கு எப்படி இன்னும் நீதி வழங்கப்படவில்லையோ, அதுபோன்று பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அவர்கள் கொலைக்கும் இன்னும் நீதி வழங்கப்படவில்லை. தமது பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைக்கே நீதி பெற்றுக்கொடுக்க முடியாத தமிழரசுக்கட்சியினர், தமிழ் மக்களின் கொலைக்கு நீதி பெற்றுக்கொடுப்பார்கள் என எப்படி நம்புவது? ஜோசப் பரராயசிங்கம் மரணத்தையடுத்து சந்திரநேருவின் மகன் சந்திரகாந்தன் தமிழரசுக்கட்சியால் பாராளுமன்ற உறுப்பினராக்கப்பட்டார். 2009ல் நடைபெற்ற வெள்ளைக்கொடி சம்பவத்தின் முக்கிய சாட்சியாக வாக்கு மூலம் அளித்துள்ளார் சந்திரகாந்தன் சந்திரகாந்தன் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக நான்கு வருடம் இருந்துள்ளார். ஆனாலும் அவர் உறுப்பினர் இல்லை எனக்கூறி அண்மையில் நடந்த தமிழரசுக்கட்சி தலைவர் தேர்வுக் கூட்டத்திற்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என கூறுகின்றனர். எல்லையில் தமிழரசுக்கட்சியை கட்டிக்காத்த சந்திரநேரு அரியநாயகம் குடும்பத்திற்கே இந்த கதியா?

No comments:

Post a Comment