Thursday, February 15, 2024

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் மூலமே தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் ஜக்கியம் ஏற்பட வேண்டும் என்று தோழர் சண் கூறினார். அதுமட்டுமன்றி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் ஜேவிபி கட்சியை இனவாதக்கட்சி என பகிரங்கமாக விமர்சித்தார். இந்தியாவில் நக்சல்பாரி இயக்கம் (நக்சலைட்டுகள்)அழித்தொழிப்பு நடவடிக்கையை முன்வைத்து செயற்பட்டபோது அதன் தவறுகளை அப்பவே சுட்டிக்காட்டிய ஒரே தலைவர் தோழர் சண். அதுமட்டுமல்ல அத்தகைய அழித்தொழிப்பு நடவடிக்கைகள் இலங்கையில் சிலர் முன்னெடுக்க முனைந்தபோது அதனை விமர்சித்து நிறுத்தியவர் அவர். இந்தியாவைப் போன்று இலங்கையிலும் பெரியாரியம், அம்பேத்காரியம் போன்ற சீர்திருத்தக் கருத்துகள் காலூன்றி வளர முடியாமைக்கு முக்கிய காரணம் தோழர் சண் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சியினர் அவர்கள் சாதீய தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியதுடன் அதை “அடிக்கு அடி” என்னும் தத்துவத்தினூடாக ஆயுதப் போராட்டமாகவும் முன்னெடுத்தனர். வடக்கு கிழக்கில் மட்டுமன்றி மலையக தோட்ட தொழிலாளர்களின் பல வழக்குகளிலும் தோழர் சண் நேரிடையாக ஆஜராகி வெற்றிபெற்று கொடுத்துள்ளார். சண் கேட்டுக்கொண்டமைக்காக செனட்டர் நடேசன் ஆஜராகியிருக்கிறார். சண் வேண்டுகோள்படி தோட்ட தொழிலாளர் வழக்கில் நடேசன் மகன் சத்தியேந்திரா இங்கிலாந்து சென்று வாதாடி வெற்றி பெற்றுக்கொடுத்துள்ளார். தோழர் சண் சிங்களவராக இருந்திருந்தால் இலங்கை வரலாறு வேறு விதமாக இருந்திருக்கும்.

No comments:

Post a Comment