Monday, May 29, 2023

1991 ராஜீவ் காந்தி கொலையின் பின்

1991 ராஜீவ் காந்தி கொலையின் பின் ஒருநாள் சிவராசனும் சுபாவும் கடலில் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆனால் பின்னர் விசாரணையின் போது அவர்கள் சிவராசன் சுபா இல்லை என்பதும் சாதாரண அகதிகளான தங்கவேலாயுதம் மற்றும் அவர் மனைவி சுமதி என அறிய வந்தது. ஆனாலும் பத்திரிகைகளில் செய்தி வந்துவிட்டதால் புலிகள் எனக் குறிப்பிட்டு அவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்கள். அப்போது மதுரை சிறையில் தமிழ்செல்வன் என்று ஒரு அதிகாரி இருந்தார். அவர் எல்லா சிறைவாசிகளையும் கடுமையாக அடித்து துன்புறுத்துவார். அவர் ஒருநாள் தங்கவேலாயுதத்தை “அகதி நாயே” என்று திட்டி கடுமையாக அடித்துவிட்டார். இதனால் நான் உட்பட அப்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழர் எல்லாம் அதிகாரி தமிழ்செல்வன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதம் இருந்தோம். எமது உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக சிறையில் இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் அவர் கணவர் ஜெகதீசன் , தடா சிறைவாசிகளான தமிழ்நாடு மீட்பு படையினர் எல்லாம் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது என்னை பார்வையிட தோழர் இளங்கோ வந்திருந்தார். நான் உண்ணாவிரதத்தில் இருந்ததால் அதனை காரணங்காட்டி பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது. நான் உண்ணாவிரதம் இருந்ததும் அதன் காரணத்தையும் தெரிந்துகொண்ட இளங்கோ சிறைவாசலிலே காவல் இருந்து அந்த அதிகாரி தமிழ் செல்வனை பிடித்து மிரட்டிவிட்டார். “கேட்பதற்கு யாரும் இல்லாத அனாதை என்று தோழர் பாலனை நினைத்துவிட்டாயா? எமது தோழருக்கு ஏதும் நடந்தால் மதுரை சிறையே இருக்காது. குண்டு வீசித் தகர்த்துவிடுவோம்” என தோழர் இளங்கோ கோபத்தில் கூறியிருக்கிறார். அதிகாரி தமிழ்செல்வன் பயந்துவிட்டார். அதன்பின்பு அவர் ஈழத் தமிழர் இருக்கும் பக்கமே வருவதில்லை.

ஈழத் தமிழரான மதுஷிகன்

ஈழத் தமிழரான மதுஷிகன் (20வயது) தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையிலான 30 கிலோ மீற்றர் தூரத்தை 12 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நீந்திக் கடந்துள்ளார். அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

1988ல் நான் நாடு திரும்புவதற்கு முன்

1988ல் நான் நாடு திரும்புவதற்கு முன் பெண்ணாடம் சென்று புலவர் கலியபெருமாள் அவர்களை சந்தித்தேன். அப்போது அவர் எனக்கு அறிமுகப்படுத்திய தோழர் கரூர் இளங்கோ. புலவர் கேட்டுக்கொண்டபடி தோழர்கள் இளங்கோ மற்றும் மாறனுக்கு பெண்ணாடம் ஆற்றங்கரையில் குண்டு பயிற்சிகளை நான் வழங்கினேன். அதன்பின் 11.04.1988 யன்று மாறனும் இளங்கோவும் ஈழத்தில் இருந்து இந்திய ராணுவத்தை வெளியேறுமாறு கோரி தமிழ்நாடு விடுதலைப்படை சார்பில் கொடைக்கானல் டிவி டவருக்கு வெடி குண்டு வைக்க முயற்சி செய்தனர். குண்டு தவறுதலாக வெடித்ததால் சம்பவ இடத்திலேயே மாறன் மரணமடைந்தார். இளங்கோ பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். இவ் வழக்கில் இளங்கோ அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. நீண்ட காலத்திற்கு பின் கடந்த வருடம் இளங்கோ அவர்கள் தொலைபேசியினூடாக என்னுடன் பேசினார். ஆனால் அதுதான் அவர் என்னுடன் பேசும் கடைசிப் பேச்சாக இருக்கப்போகிறது என நான் நினைக்கவில்லை. சில மாதங்களுக்கு முன் அவர் சுகயீனம் காரணமாக மரணித்துவிட்டார் என்ற செய்தி வந்தடைந்துள்ளது. இங்கு வேதனை என்னவென்றால் அவர் பிறந்த திகதியும் எனக்கு தெரியவில்லை. அவர் இறந்த திகதியும் எனக்கு தெரியவில்லை. அவருக்கு ஒரு அஞ்சலிப்பதிவு எழுதுவதற்காக பலரிடம் இவ் விபரங்களை கேட்டேன். இன்னும் கிடைக்கவில்லை. வெட்கத்துடன் அவருக்கு என் அஞ்சலிகளை பதிவு செய்கிறேன். தமிழ்நாடு விடுதலைக்காக போராடியவர். ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்தவர். அதனால் பல வருடங்கள் சிறைக் கொடுமையை அனுபவித்தவர் தோழர் இளங்கோ.

கனடாவில் பிரம்டன் நகரபிதா

கனடாவில் பிரம்டன் நகரபிதா பற்றிக் பிரவுன் அவர்கள் தமிழினப்படுகொலை ஆவணக்கையேட்டினை வெளியிட்டதுடன் அதனை தன் இன்ஸ்ரகிராம் பக்கத்தில் பகிர்ந்தும் உள்ளார். சிங்கள அரசு கடும் கண்டனம் தெரிவித்தும் கனடா தொடர்ந்து இனப்படுகொலைக்கு எதிராக ஈழத் தமிழருக்கு தன் ஆதரவை வழங்கி வருகிறது. கனடாவை தொடர்ந்து பல நாடுகள் இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் நிலை தோன்றி வருகிறது. இந்நிலைக்கு புலம் பெயர்ந்த தமிழரின் தொடர்ச்சியான உறுதியான முன்னெடுப்பே முக்கிய காரணமாகும். ஆம், நாம் ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும். நாம் பேச ஆரம்பித்தால் உலகம் நிச்சயம் கேட்டேதான் ஆக வேண்டும்.

தமிழத்தேசிய விடுதலையை முன்னெடுத்தமைக்காக

தமிழத்தேசிய விடுதலையை முன்னெடுத்தமைக்காக 7 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்த தோழர் பொன்னிவளவன் விடுதலையானார். மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்.

ஒருவன் அயோக்கியன் என்று தெரிந்தும்

“ஒருவன் அயோக்கியன் என்று தெரிந்தும் அவனை புனிதப்படுத்த நினைப்பவன் அவனைவிட அயோக்கியன்” – சே பசி கொடுமையானதுதான். ஆனால் அது இந்தளவு கொடுமையானதா?

மே தின வாழ்த்துகள்.

•மே தின வாழ்த்துகள். உழைக்கும் மக்கள் இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் வெல்வதற்கு ஒரு உலகம் காத்திருக்கிறது - கால் மார்க்ஸ்

செய்தி - "இந்த ஆண்டு இறுதிக்குள்

செய்தி - "இந்த ஆண்டு இறுதிக்குள் இனப்பிரச்சனைக்கு தீர்வு" – ஜனாதிபதி ரணில் அறிவிப்பு இதனால எங்கட சம்பந்தர் ஐயா தீபாவளிக்கு கொண்டு வாற தீர்வுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லைத்தானே?🤣

இருவரும் பெண்கள்.

இருவரும் பெண்கள். இருவரையும் சிங்கள ராணுவம் பாலியல் வல்லுறவு செய்து கொன்றது. ஒருவருக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. இன்னொருவருக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை. ஏனெனில் அந்த ஒருவர்( மன்னம்பெரி) சிங்களவர். இன்னொருவர் (இசைப்பிரியா) தமிழர் குறிப்பு - இன்று இசைப்பிரியாவின் 41வது பிறந்த தினம்.

சிக்ஸ்பேக் வைத்திருக்கும்

சிக்ஸ்பேக் வைத்திருக்கும் ஒரே தமிழ் நடிகை ரெஜினா என்பதைக்கூறும் உதயநிதி அவர்கள் நீட் தேர்வு ரத்து ரகசியத்தை எப்போது கூறுவார் உடன்பிறப்புகளே?

இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தே

இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தே ஈழத் தமிழினத்தை அழித்தார்கள் என்பதை இனியாவது தமிழினம் உணர்ந்து கொள்ளட்டும்.

கடவுள் தூணிலும் இருப்பார்

கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்கிறார்கள். அப்படியென்றால் சமந்தாவில் இருக்க மாட்டாரா என்ன? முன்பு நடிகை குஷ்புவுக்கு கோயில் கட்டினார்கள். இப்போது நடிகை சமந்தாவுக்கு கட்டியுள்ளார்கள். குறிப்பு – பக்தி ஒரு மனநோய் என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பு.

நல்லா பேசுறான். பழகிறான்.

“நல்லா பேசுறான். பழகிறான். டீசன்ட்டா டிரெஸ் பண்றான் திடீர்னு இனப்படுகொலைக்கு சுமந்திரன் சேர்தான் நீதி பெற்று தருவாருன்னு சொல்றான்” 😂😂

ஊரும் நடந்தது உறவும் நடந்தது

ஊரும் நடந்தது உறவும் நடந்தது முள்ளிவாய்க்காலில் நடக்கப்போவது அறியாமல் பூவும் நடந்தது பிஞ்சும் நடந்தது யாவும் ஒன்றாக நசுங்கப்போவது தெரியாமல் கூடி மகிழ்ந்திட்ட கோயில்கூரையில் ஷெல் குண்டுகள் வந்து வீழ்ந்தன பாடி குதூகலித்த வீட்டுமுற்றத்தில் பாவியாய் வந்து புகுந்தது சிங்கள ராணுவம்

பாலகுமார் எங்கே?

•பாலகுமார் எங்கே? ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் பாலகுமார். அவர் தன் மகனுடன் முள்ளிவாய்க்காலில் சரணடைந்தார். 14 வருடம் கழிந்துவிட்டது. அவர் எங்கே என்று இதுவரை அரசு அறிவிக்கவில்லை. அவர் உயிருடன் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியென்றால் சரணடைந்த அவரை சுட்டுக் கொன்றவர்கள் யார்?

தெலுங்கு திரிந்து திரவிடியம் ஆகவில்லை

தெலுங்கு திரிந்து திரவிடியம் ஆகவில்லை கன்னடம் திரிந்து திரவிடியம் ஆகவில்லை மலையாளம் திரிந்து திரவிடியம் ஆகவில்லை தமிழ் மட்டும் ஏன் திரிந்து திரவிடியம் ஆக வேண்டும்?

பிரபாகரன் பயங்கரவாதி.

பிரபாகரன் பயங்கரவாதி. எனவே அவர் மகனும் பயங்கரவாதி என்று எந்த சிறுவனை சுட்டுக் கொன்றார்களோ அந்த சிறுவன் இன்று தமிழ்நாட்டில் பெட்டிக் கடைவரை வந்துவிட்டான். இட்லிக்குள் கறி வந்தது எப்படி என்றுகேட்பவர்கள் அச் சிறுவன் எப்படி பெட்டிக்கடைவரை வந்தான் என்பதையும் ஒருமுறை கேட்கவேண்டும்.

பிரபாகரன் பயங்கரவாதி

பிரபாகரன் பயங்கரவாதி எனவே அவரின் மகன் பாலச்சந்திரனும் பயங்கரவாதி என்று சுட்டுக் கொன்றது சிங்கள அரசு. ஆனால் ரோகன விஜேயவீராவை பயங்கரவாதி என்று கொன்ற சிங்கள அரசு அவரின் ஆறு பிள்ளைகளில் ஒருவரைக்கூட பயங்கரவாதி என கொல்லவில்லை. ஏனெனில் பிரபாகரன் தமிழர். ரோகண விஜேயவீரா சிங்களவர்.

மறக்கவும் முடியவில்லை,

மறக்கவும் முடியவில்லை, மன்னிக்கவும் முடியவில்லை எமக்கென்னவென்று கடந்து போகவும் முடியவில்லை இறுதி மூச்சு உள்ளவரை இவர்களுக்குரிய நீதியை பெறாமல் ஓய்ந்து விடப் போவதுமில்லை. ஈழத்தமிழர், தமிழக தமிழர் மட்டுமன்றி உலகத் தமிழர் அனைவரும் ஒன்று சேர்வோம் ஒருமித்துக் குரல் கொடுப்போம்.

ஈழத்தமிழர் விடுதலை பெற்றால்

ஈழத்தமிழர் விடுதலை பெற்றால் அது தமிழ்நாட்டில் இருக்கும் தமிழருக்கும் விடுதலை பெறவேண்டும் என்ற உணர்வைக் கொடுத்துவிடும் என்று அஞ்சியே ஈழத்தமிழர் விடுதலையை இந்திய அரசு நசுக்குகிறது. ஆனால், ஈழதமிழர் விடுதலையை நசுக்கினாலும் தமிழ்நாட்டில் விடுதலை உணர்வு எழும் என்பதை அது விரைவில் உணரும்

தெலுங்கர் தெலுங்கராக இருக்கும்போது

தெலுங்கர் தெலுங்கராக இருக்கும்போது கன்னடர் கன்னடராக இருக்கும்போது மலையாளிகள் மலையாளிகளாக இருக்கும்போது தமிழர் மட்டும் எதற்கு திராவிடராக இருக்க வேண்டும்?

ரயிலில் டிக்கட் இன்றி வந்தவர்

ரயிலில் டிக்கட் இன்றி வந்தவர் எப்படி தன் குடும்பத்திற்கு 45000கோடி ரூபா சொத்து சேர்த்தார் என்ற தொழில் ரகசியத்தை கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ஆட்சியில் இருக்கும்போது

ஆட்சியில் இருக்கும்போது அதிகார மமதையில் எத்தனை மாவீரர்களின் கல்லறைகளை சிதைத்திருப்பார் மகிந்தா. கடந்த வருடம் அவர் கண் முன்னே அவரது தந்தையின் சிலை மக்களால் இழுத்து வீழ்த்தப்பட்டது.

ரணிலுடன் பேசி தீர்வு பெறுவோம்

"ரணிலுடன் பேசி தீர்வு பெறுவோம்" - சம்பந்தர் ஐயா என்ன ஐயா மீண்டும் முதலில் இருந்தா? காலையில் கோழி கொக்கரக்கோ என்று கூவிற்றா? 😂😂

மணிப்பூர் பற்றி எரிகிறது.

மணிப்பூர் பற்றி எரிகிறது. ராணுவம் அழைக்கப்பட்டும் கலவரம் தொடர்கிறது. அரசு செயல் இழந்து நிற்கிறது. இதில் தமிழர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழக முதல்வரும் மற்றும் தமிழ் தலைவர்களும் மௌனம் காப்பது ஆச்சரியம் அளிக்கிறது. மணிப்பூர் பழங்குடிகளுக்கும் வந்து குடியேறியவர்களுக்கும் இடையில் கலவரம் என்கிறார்கள். இந்நிலை நாளை தமிழ்நாட்டிலும் வரலாம். எனவே இப்பவாவது தமிழக தலைவர்கள் முன் எச்சரிக்கை அடைய வேண்டும்.

தத்துவமேதை கார்ல் மார்க்ஸ் 205வது பிறந்த தினம்!

தத்துவமேதை கார்ல் மார்க்ஸ் 205வது பிறந்த தினம்! (5 மே 1818 - 14 மார்ச் 1883)

1984ஆம் ஆண்டு மே 5 மற்று 6

1984ஆம் ஆண்டு மே 5 மற்று 6 ஆகிய நாட்களில் இன்றைய கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் தமிழீழ விடுதலை ஆதரவு மாநாடு, மற்றும் இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலை மாநாடு நடைபெற்றது.

சிவகங்கை பாளையத்தின் பெண்ணரசி

சிவகங்கை பாளையத்தின் பெண்ணரசி வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், அவரிடம் மிக்க விசுவாசம் கொண்டவரும், சிவகங்கையை மீட்க நடத்தப்பட்ட போரில், தன்னைத்தானே முதல் மனித வெடிகுண்டாகப் பயன்படுத்தி ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கை அழுத்தொழித்தவரும் (1780) வீரப்பெண் குயிலி ஆவார்.

Sunday, May 28, 2023

3வது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்

• 3வது நாளாக தொடரும் மக்கள் போராட்டம் ஓடாத மானும் போராடாத இனமும் வாழ முடியாமல் அழிந்துவிடும். தமிழ் மண்ணில் பௌத்த விகாரை கட்டுதல் என்பது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் தமிழ் இன அழிப்பின் ஒரு வடிவமே

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஜனாதிபதியாக இருந்தபோது

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஜனாதிபதியாக இருந்தபோது தாம் (சிங்களவர் )ஆரிய வம்சத்தவர் என்று கூறினார். அப்போதும்கூட ஈழத் தமிழர் சிங்கள அரசை எதிர்ப்பதற்காக தம்மை திராவிடர் என்று அழைத்துக்கொள்ளவில்லை. அதாவது ஈழத் தமிழர் எப்போதும் தம்மை தமிழராகவே அடையாளப்படுத்தி வருகின்றனர். ஈழத் தமிழர் மத்தியில் 1983ல் 36 இயக்கங்கள் உருவாகியது. அதில் ஒரு இயக்கத்தின் பெயரில்கூட “திராவிட” என்ற சொல் இடம்பெறவில்லை. ஈழ விடுதலை இயக்கங்களை ஆதரித்த தமிழக திராவிட அமைப்புகள் தமது திராவிட கருத்துகளை ஈழத் தமிழர் மத்தியில் பரப்ப முயலாதது ஏன்?

அடுத்த சந்ததி வெறுமனே

அடுத்த சந்ததி வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்துவிடும் என்று நினைத்துவிட வேண்டாம். அது தனக்கான நீதியை பெறாமல் ஓய்ந்துவிடாது.

அவுஸ்ரேலியாவில்,

அவுஸ்ரேலியாவில், எமக்கான நீதியைக்கோரும் அடுத்த சந்ததி.

அந்த வயதான மூதாட்டி தமிழ்நாடு

அந்த வயதான மூதாட்டி தமிழ்நாடு சென்று சிகிச்சை பெற எதிரி மகிந்தாகூட அனுமதித்தான். இந்திய அரசும் விசா வழங்கி அனுமதித்தது. ஆனால் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கொஞ்சம்கூட இரக்கமின்றி திருப்பி அனுப்பியதை எந்த தமிழனால் மறக்க முடியும்?

இந்திய அரசு ஏன் சிறீயண்ணாவைக் காப்பாற்றவில்லை?

•இந்திய அரசு ஏன் சிறீயண்ணாவைக் காப்பாற்றவில்லை? ரெலோ தலைவர் சிறீசபாரட்ணம் அவர்களுக்கு நேற்றைய தினம் சிலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். சிறீயண்ணா முன்வைத்த தமிழீழத்தை கைவிட்டவர்கள், அவர் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தை கைவிட்டவர்கள் அவரை நினைவு கூர்வது ஆச்சரியமாக இருக்கிறது. சரி. பரவாயில்லை. ஆனால் நினைவு கூர்வது என்ற போர்வையில் அவர்கள் இந்திய ஆதரவை மீண்டும் விதைக்க முனைவது மோசமானது. கண்டிக்கப்பட வேண்டியது. இந்திய அரசின் உதவியுடன் பொங்கலுக்கு தமிழீழம் பிறக்கும் என்று சிறீயண்ணா கூறியது உண்மைதான். ஆனால் அதன் பின் பல பொங்கல் வந்து போய்விட்டது. அவர் கூறிய தமிழீழம் பிறக்க இந்தியா உதவி செய்யவில்லை. மாறாக, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இந்திய அரசின் உதவியுடனேயே நசுக்கப்பட்டிருக்கின்றது என்பதை எம் கண் முன்னே கண்டோம். சிங்கள அரசு தமிழினப் படுகொலை செய்வதற்கு உதவியதோடு இன்று இக் கணம்வரை அந்த சிங்கள அரசை ஆதரித்து பாதுகாத்து வருவதும் இந்த இந்திய அரசே. அதை உணராமல் இப்பவும் எப்படி இவர்களால் “ ஈழவிடுதலைப் போராட்டம் இந்திய பாதுகாப்புடன் பின்னிப் பிணைந்தது” என்று கூறிக்கொள்ள முடிகிறது? சரி. இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு உதவவில்லை. குறைந்தபட்சம் தன்னை ஆதரித்த தனது விசுவாசியான சிறீயண்ணாவுக்காவது உதவியதா? இல்லையே. இந்திய உளவுப்படை கேட்டுக்கொண்டதற்கு இணங்க தமிழர் விடுதலைக்கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் மற்றும் ஆலாலசுந்தரத்தை சுட்டுக் கொன்றவர் சிறீயண்ணா. பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜலிங்கம் மற்றும் துரைரத்தினம் இருவரையும் கொல்லுமாறு உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவரின் வடமராட்சி தளபதி தாஸ் அவர்களை கொல்லவில்லை. இவ்வாறு இந்திய அரசின் விசுவாசியான சிறீயண்ணா யாழ்ப்பாணத்தில் கொல்லப்படும்போது இந்திய அரசு அவரை காப்பாற்றவில்லை. அவரை எப்படி இந்திய அரசு காப்பாற்ற முடியும் என கேட்க விரும்புவர்களுக்கு ஒரு சம்பவத்தை நினைவூட்ட விரும்புகிறேன். இதே யாழ்ப்பாணத்தில் அலன் தம்பதிகள் என்ற இரு வெள்ளை இனத்தவர்களை ஈபிஆர்எல்எவ் இயக்கம் கடத்தியது. சிறையில் உள்ள போராளிகள் அவைரும் விடுதலை செய்ய வேண்டும். இல்லையேல் இந்த கடத்தப்பட்ட அலன் தம்பதிகளை சுட்டுக் கொல்லப்போவதாக ஈபிஆர்எல்எவ் இயக்கம் அறிவித்தது. உடனே அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சிறையில் உள்ள போராளிகள் அனைவரையும் விடுதலை செய்ய முன்வந்தார். ஆனால் அப்போது இந்திய பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையார் ஜே.அர்.ஜெயவர்த்தனாவை தொடர்பு கொண்டு “போராளிகளை விடுதலை செய்ய வேண்டாம். நான் அலன் தம்பதிகளை விடுதலை செய்விக்கிறேன்” என்று கூறினார். இதையடுத்து சென்னையில் இருந்த ஈபிஆர்எல்எவ் இயக்கதலைவர் பத்மநாபா கைது செய்யப்பட்டு ஒரு ஹோட்டலில் வைத்து உதைத்து அலன் தம்பதிகளை விடுதலை செய்வித்தார் அந்த இந்திரா அம்மையார். இப்போது எனது கேள்வி என்னவெனில் ஜே.அர் ஜெயவர்தனா கேட்காமலே இரண்டு வெள்ளை இனத்தவர்களுக்கு உதவிய இந்திய அரசு ஏன் தனது விசுவாசியான சிறீயண்ணாவை காப்பாற்றவில்லை? உண்மையில் காப்பாற்ற வேண்டும் என்று இந்திய அரசு விரும்பியிருந்தால் நிச்சயம் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் சிறீயண்ணாவை காப்பாற்ற இந்திய அரசு முயலவில்லை. ஏனெனில் இந்திய அரசைப் பொறுத்தவரையில் போராளிகள் தங்களுக்குள் அடிபட்டு சாக வேண்டும் என்பதே விருப்பம். இது இன்று சிறீயண்ணாவின் பெயரால் இந்திய புகழ்பாடுவோருக்கும் நன்கு தெரியும். ஆனாலும் அவர்கள் தமது சொந்த நலன்களுக்காக இந்திய ஆதரவை விதைப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

குழந்தை ஒன்று தன் தாய் நிலம் காக்க

குழந்தை ஒன்று தன் தாய் நிலம் காக்க வீதியில் நின்று போராடுகிறது. ஆனால் போராட வேண்டிய தலைவரோ சொகுசு பங்களாவில் நிம்மதியாக உறங்குகிறார். இந்த நிலை என்றுதான் மாறுமோ? தமிழ் மக்களுக்கு ஒரு விடியல் வராதா?

கண்டால் வரச் சொல்லுங்கோ

கண்டால் வரச் சொல்லுங்கோ யாழ் இந்திய தூதரையும் அவர் பின்னால் திரியும் ஈழத்து சிவசேனைக் கும்பலையும் கந்தரோடைக்கு வரச் சொல்லுங்கோ

மணிப்பூர் பற்றி எரிகிறது.

மணிப்பூர் பற்றி எரிகிறது. தங்களை பாதுகாக்கும்படி அங்குள்ள தமிழர் அவலக்குரல் எழுப்புகின்றனர். தெலுங்கானா முதல்வர் தம் தெலுங்கு மக்களை மீட்க விமானம் அனுப்பியுள்ளார். ஆனால் தமிழக முதல்வரோ தான் ஓய்வின்றிப் பணியாற்றுவதாகவும் தன் சக்திக்கு மீறி செயல்புரிவதாகவும் அறிக்கை விடுகின்றார். அப்படி என்னதான் செயல் புரிகின்றார்?

நாம் ஏன் மரணித்தவர்களை நினைவு கூரவேண்டும்?

•நாம் ஏன் மரணித்தவர்களை நினைவு கூரவேண்டும்? மரணித்தவர்கள் எமது உறவினர்கள் என்பதாலா நினைவு கூர வேண்டும்? இல்லை மரணித்தவர்கள் எமது ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதாலா நினைவு கூர வேண்டும்? இல்லை மரணித்தவர்கள் எமது தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலா நினைவு கூர வேண்டும்? இல்லை அப்படியென்றால் மரணித்தவர்களை நாம் ஏன் நினைவு கூரவேண்டும்? அவர்கள் எதற்காக போராடி மரணித்தார்களோ அதில் ஒரு காரணம்கூட இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை உணர்வதற்கு அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும். அவர்கள் காட்டிய பாதையில் போராடுவதே அவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி என்பதை உணர்வதற்கு அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும். எமக்கான நியாயத்தை உலகம் வழங்கும்வரை எமக்கான தீர்வு கிட்டும்வரை நாம் மரணித்தவர்களை நினைவு கூரவேண்டும். ஆம். மரணித்தவர்களை நினைவு கூர்வது அழுது ஒப்பாரி வைப்பதற்காக அல்ல. நாம் மீண்டும் எழுவதற்காகவே. எழுவோம். முன்பைவிட பலமாக எழுவோம்!

2009 இனப்படுகொலையை

•2009 இனப்படுகொலையை தமிழினம் மறந்துவிட முடியுமா? தமிழ் இனம் மீண்டும் எழுந்திட முடியுமா? 2009ல் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை தமிழ் இனம் மறந்துவிட வேண்டும் என இலங்கை இந்திய அரசுகள் விரும்புகின்றன. “வடக்கின் வசந்தம்” மூலம் கார்பெட் றோட் போட்டுக்கொடுத்தால் இனப்படுகொலையை தமிழ் மக்கள் மறந்துவிடுவார்கள் என மகிந்த ராஜபச்ச நினைத்தார். 50 ஆயிரம் வீடு கட்டித் தருவதாக கூறினால் இனப் படுகொலையை தமிழ் மக்கள் மறந்துவிடுவார்கள் என இந்திய அரசு நினைத்தது. சுமந்திரனை விலைக்கு வாங்குவதன் மூலம் இனப் படுகொலையை வெறும் போர்க்குற்றமாக தமிழ் மக்கள் மனங்களில் மாற்றிவிட முடியும் என நல்லாட்சி அரசு நினைத்தது. ஆனால் ஆண்டு செல்ல செல்ல தமிழ்மக்கள் மறப்பதற்கு பதிலா இன்னும் அதிகம் அதிகமாக அதனை நினைவில் கொள்கிறார்கள் என்பதே உண்மை. ஆரம்பத்தில் ஈழத் தமிழர்கள் மட்டுமே முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவு கூர்ந்தனர். ஆனால் இன்று தமிழக தமிழர்கள், மலேசிய சிங்கப்பூர் தமிழர்கள் எல்லோரும் இதனை நினைவில் கொள்கின்றனர். புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந் நாட்களில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை மற்ற இன மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறார்கள். புலம்பெயர் நாட்டில் பிறந்து வளரும் எமது அடுத்த சந்ததியினர் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான நீதியைக் கோராமல் இருந்துவிட மாட்டார்கள். ஜ.நா வில் ஈழத் தமிழருக்கான நீதி கிடைக்காமல் போகலாம். ஆனால் உலக மக்கள் இந்த அடுத்த சந்ததியினரின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருக்க முடியாது. தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்றது மட்டுமன்றி அவர்களை தமிழ் மக்கள் நினைவு கூருவதையும் அச்சுறுத்தி அடக்க முனைகிறது இலங்கை அரசு. இலங்கையில் அடக்கலாம். ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்களை அடக்க முடியுமா? முடியவே முடியாது. அனைவரும் ஒருமித்து நினைவுகூர்வதன் மூலம் “தமிழ் மக்கள் மீண்டும் எழுந்து விட்டார்கள்” என்ற செய்தியை உலகிற்கு தெரியப்படுத்துவோம்.

ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்காவிடில்

•ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்காவிடில் தமிழீழம் கிடைத்திருக்குமா? மழை பெய்தால் புற்றில் இருந்து பாம்புகள் கிளம்பி வருவதுபோல் மே மாதம் வந்துவிட்டால் சிலர் முகநூலில் வந்து விஷம் கக்குகின்றனர். ராஜீவ்காந்தியை கொன்றிருக்காவிட்டால் தமிழீழம் கிடைத்திருக்கும். பிரபாகரன் தமிழீழத்தின் பிரதமர் ஆகியிருப்பார் என்றெல்லாம் எழுதுகின்றனர். இதே இவர்கள்தான் இந்திராகாந்தி இறந்திருக்காவிட்டால் தமிழீழம் கிடைத்திருக்கும், எம.ஜி.ஆர் இருந்திருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் என்றும் கதை எழுதியவர்கள். ஆனால் இந்திராகாந்தி உயிரோடு இருந்திருந்தாலும் தமிழீழம் கிடைக்க அவர் உதவியிருக்கமாட்டார் என்பதே உண்மை. இந்திராகாந்தி காலத்தில்தான் ஈழப் போராளிகளுக்கு பயிற்சியும் ஆயுதமும் வழங்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் அப்போது பயிற்சி பெற்ற போராளிகளுக்கும் அவர்களின் தலைவர்களுக்கும் தமிழீழம் பெற இந்தியா ஒருபோதும் ஆதரவளிக்காது என்பதை இந்திரா காந்தியும் அவரது இந்திய அரசு உறுதியாக தெரிவித்திருந்தது. தமிழீழத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என்பது மட்டுமல்ல தமிழ் மக்கள் தாங்களாகவே போராடி தமிழீழம் பெறுவதையும் இந்தியா அனுமதிக்காது என்பதை அமிர்தலிங்கம் உட்பட அனைத்து ஈழத்து தமிழ் தலைவர்களும் உணர்ந்தேயிருந்தார்கள். அதனால்தான் அப்போது இலங்கை தேசியபந்தோபஸ்து அமைச்சராக இருந்த அத்துலத்முதலி இலங்கை பாராளுமன்றத்தில் “ ஒருவேளை சிங்களவர்கள் தமிழீழத்தை கொடுக்க முன்வந்தாலும் இந்தியா அனுமதிக்காது என்பதை ஈழப் போராளிகள் உணர வேண்டும்” என்று பேசியிருந்தார். அதேபோன்று ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்திலும் தமிழீழத்தை இந்திய அரசு ஒருபோதும் ஆதரிக்கவில்லை. எனவே ராஜிவ் காந்தியைக் கொன்றிருக்காவிடில் தமிழீழம் கிடைத்திருக்கும் என்று சிலர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டில் உரையாற்றிய முன்னாள் மாகாணசபை முதல்வர் வரதராஜபெருமாள் “ இந்தியா ஒருபோதும் தமிழீழத்தை ஆதரிக்கவும் இல்லை.. தமிழீழம் பெற உதவுவதாகவும் கூறவில்லை” என்று தெரிவித்துள்ளார். அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் அமைப்போம் என்று 1983ல் கூறிய டெலோ இயக்க தலைவர்களும்கூட இந்தியா தமிழீழத்தை ஆதரிக்கவில்லை என்ற உண்மையை ஒத்துக்கொள்கின்றனர். இந்தியா தமிழீழத்தை மட்டுமல்ல ஒரு சமஸ்டி தீர்வைக்கூட ஆதரிக்க முன்வரவில்லை என்பதே உண்மையாகும். இந்தியாவில் இருக்கும் மாநில சுயாட்சி முறையிலான தீர்வைக்கூட ஈழத் தமிழர்கள் பெறுவதை இந்திய அரசு விரும்பவில்லை. அதனால்தான் எந்தவித அதிகாரமும் அற்ற மாகாணசபையை தீர்வாக ஒப்பந்தம் மூலம் ஈழத் தமிழர்களுக்கு இந்தியா திணித்துள்ளது. இந்த ஒப்பந்த மூலம் கிடைத்த வடக்கு கிழக்கு இணைப்பைக்கூட இலங்கை அரசு நீதிமன்றம் மூலம் நீக்கிய போதும்கூட இந்திய அரசு அது குறித்து அக்கறை கொள்ளவில்லை. இதுதான் ஈழத் தமிழர் மீது இந்தியா கொண்டுள்ள அக்கறை. ஆனால் இதை மறைத்து சிலர் ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்காவிடின் தமிழீழம் கிடைத்திருக்கும் என நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். இனி யாராவது இப்படி விஷத்தைக் கக்கினால் அவர்களை மிதிக்க வேண்டும்

இதைவிட அதிகமாக வாய்விட்டு சிரித்திருக்கிறேன்

இதைவிட அதிகமாக வாய்விட்டு சிரித்திருக்கிறேன். அவை எதுவும் தற்போது தேடியபோது சிக்கி தொலைக்கவில்லை. அடுத்த முறை எப்படியும் போட்டு விடுகிறேன். குறிப்பு - 07.05.2023 சிரிப்பு தினத்தை முன்னிட்டு ரிலாக்ஸ் பதிவு இது.

மறக்க முடியாத மகேந்திரன்

• மறக்க முடியாத மகேந்திரன் கரவெட்டியை பிறப்பிடமாகக்கொண்ட தோழர் நெப்போலியன் தமிழ்நாடு விடுதலைப்படையினருக்கு உதவியதற்காக இந்திய உளவுப்படையினரால் மலையகத்தில் கொல்லப்பட்டது யாவரும் அறிந்ததே. அந்த தோழர் நெப்போலியனின் சகோதரரே மகேந்திரன். இவர் ரொம்பவும் சாந்தமானவர். அமைதியானவர். அகிம்சையை போதிப்பார். அதனால் இவரை கிண்டலாக (தந்தை) செல்வநாயகம் என்று நாம் அழைப்பதுண்டு. அமைதிப்படை என்று வந்த இந்திய ராணுவத்தால் நெடுங்கேணி மக்கள் பாதிக்கப்பட்டபோது ஊர் மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தனது உழவு இயந்திரத்தில் உணவு எடுத்துச் சென்றார் மகேந்திரன். அப்போது ஹெலிகப்டரில் வந்த இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மகேந்திரனும் அவருடன் சென்ற ஊர் மக்கள் சிலரும் கொல்லப்பட்டனர். அப்பாவி மக்களை கொன்றது மட்டுமன்றி பயங்கரவாதிகளை கொன்றதாக இந்திய ராணுவம் தனது வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் அறிவித்தது. இங்கு இப்போது இதை சுட்டிக்காட்டுவதன் நோக்கம் மே மாதம் வந்தால் சிலர் ராஜீவ் காந்தி கொலை பற்றி பேசுவார்கள். அவர்களிடம் நான் கேட்க விரும்புவது ராஜீவ் காந்தி உயிர் மட்டும்தான் உயிரா? அவரால் கொல்லப்பட்ட பத்தாயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி தமிழரின் உயிர் என்ன மயிரா?

இத்தனை வருடங்களாக ஓடியும்

இத்தனை வருடங்களாக ஓடியும் இதுவரை வெற்றிபெறவில்லை என்பதற்காக நாம் வருத்தமடையத் தேவையில்லை ஏனெனில், இத்தனைக்கு பிறகும் நாம் நின்றுவிடாமல் ஓடுகிறோம் என்பதே பெருமைதான். எதுவுமே எளிமை இல்லைதான் ஆனால் அனைத்துமே சாத்தியம்தான். ஒரு மரத்தை வெட்ட 6 மணி நேரம் கிடைத்தால் புத்திசாலி தன் கோடரியை கூர்மையாக்க 4 மணி நேரத்தை செலவு செய்வான். அதுபோல நமக்கும் நம்மை கூர்மைப்படுத்த தக்க நேரம் கிடைத்திருக்கிறது எனக் கொள்வோம். மண்ணில் விழுந்த விதைகூட போராடியே முளைக்கிறது. காலில் மிதிபடும் புழு கூட துடித்து எழுகிறது தமிழன் மட்டும் வீழ்ந்து கிடந்துவிடுவானா என்ன? மீண்டும் எழுவோம்.

முள்ளிவாய்க்கால் அவலம்!

•முள்ளிவாய்க்கால் அவலம்! கஞ்சிக்காக வரிசையில் காத்து நின்ற போது வெடித்து சிதறிய எறிகணையில் சிதறி வீழ்ந்தவர் போக, மிஞ்சியவர் எஞ்சிய கஞ்சிக்காக மீண்டும் வரிசையில் நின்ற காலம் அது.

ராஜீவ் காந்தியைக் கொன்றதால்

ராஜீவ் காந்தியைக் கொன்றதால் தீர்வு கிடைக்கவில்லை என்ற கருத்தை, தமிழ்செல்வனுக்கு பின்னால் பைல் கட்டு தூக்கிக்கொண்டு திரிந்த காலத்தில் சம்பந்தர் ஐயா ஏன் கூறவில்லை? சிங்கள அரசிடம் தனக்கு சொகுசு பங்களா கேட்டு வாங்கியவர் தமிழ் மக்களுக்கு கேட்டு வாங்கிய தீர்வு என்ன?

இரண்டு நாளில் நாற்பதாயிரம் மக்களை

இரண்டு நாளில் நாற்பதாயிரம் மக்களை கொன்று குவித்தால் அந்த மக்களின் சுதந்திர உணர்வை அடக்கிவிட முடியுமா என எம்மில் பரிசோதித்தார்கள். நாம் பரிசோதனை எலிகள் இல்லை. நாம் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றின் சொந்தக்காரர்கள். போர்த்துக்கேயர் அடக்கி ஆண்டபோதும் நாம் எழுந்தோம் ஒல்லாந்தர் அடக்கி ஆண்டபோதும் நாம் எழுந்தோம் ஆங்கிலேயர் அடக்கி ஆண்ட போதும் நாம் எழுந்தோம் சிங்கள அரசு அடக்கி ஆளும்போது மட்டும் அடிமையாக வீழ்ந்து கிடந்துவிடுவோமா என்ன? நாம் ஆசியாவின் அதிசயம் மீண்டும் எழுவோம் ஒருமித்து குரல் கொடுப்போம்

இதுதான் அந்த இடம்

இதுதான் அந்த இடம் ,எம் லட்சம் மக்களை கொன்ற இடம் எம் மக்களின் கண்ணீரும் செந்நீரும் கலந்துவிட்ட முள்ளிவாய்க்கால் இடம் எம் ஜனங்களின் அழுகுரல் ஓலம் கலந்த காற்று வீசும் இடம் இது. இங்கு படர்ந்து இருக்கும் வெறுமையில் எம் இனம் பட்டதுயர் நாம் அறிவோம் எமக்காக மாண்டவர்களை நினைவு கூர்வோம்

நாய்கள் தம் வாலைக் கடிப்பதில்லை

• நாய்கள் தம் வாலைக் கடிப்பதில்லை 40 வருடமாக இந்தியாவில் அகதியாக இருக்கும் ஈழத் தமிழ் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்காத இந்திய அரசு, எந்தவித வழக்கும் இன்றி பல வருடங்களாக சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் இந்துக்களை விடுதலை செய்யாத இந்திய அரசு, 2009ல் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்கள் இந்துக்கள் என்று கூறினால் தமிழீழம் பெற்றுத் தரும் என்கிறார்கள். முதலில் இந்துத் தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்றார்கள். இப்போது சிங்கள அரசால் கொல்லப்பட்டவர்கள் இந்துக்கள் என்றால் தமிழீழம் கிடைக்க இந்திய அரசு உதவும் என்கிறார்கள். வெடுக்குநாறி மலையில் பூஜை செய்தமைக்காக பூசகரை கைது செய்யும் சிங்கள அரசு இவர்களை கைது செய்வதில்லை. புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்ட முனைகிறார்கள் என்று அப்பாவி அகதிகளை கைது செய்து சிறப்புமுகாமில் அடைக்கும் இந்திய அரசும் இவர்களை கைது செய்வதில்லை. ஏனெனில் நாய்கள் தம் வால்களை கடிப்பதில்லை.

இவர்கள் இந்தியாவில் இருப்பதால்

இவர்கள் இந்தியாவில் இருப்பதால் இந்துத் தமிழீழம் கேட்கின்றனரா? அல்லது இந்துத் தமிழீழம் கேட்பதற்காக இந்தியாவில் இருக்கின்றனரா? அதாவது இவர்கள் இந்திய அரசை பயன்படுத்துகின்றனரா? அல்லது இந்திய அரசு இவர்களை பயன்படுத்துகின்றதா?

மூக்கணாங்கயிறுகளை மாற்றுவதால்

மூக்கணாங்கயிறுகளை மாற்றுவதால் மாடுகளுக்கு எந்த பயனும் இல்லை அமைச்சர்களை மாற்றுவதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

மக்கள் துயருறும்போதெல்லாம்

மக்கள் துயருறும்போதெல்லாம் அவதாரம் எடுத்த நம் கடவுள்கள் இப்போதெல்லாம் ஏன் அவதாரம் எடுப்பதில்லை? ஏன் அற்புதங்கள் நிகழ்த்துவதில்லை?

வாழ்த்துக்கள்!

வாழ்த்துக்கள்! உரிய புள்ளிகள் எடுத்தாலும் அகதிகள் என்பதால் உயர் கல்வி (மருத்துவ கல்வி) மறுக்கப்படுகிறது. இந்த அகதிகளும் இந்துக்கள்தான். ஆனாலும் இவர்களுக்கு உயர் கல்வியைக்கூட வழங்காத இந்திய அரசு இந்துத் தமிழீழம் எடுக்க உதவும் என்பவர்களை என்னவென்று அழைப்பது?

குழந்தை திருமணம் சட்டப்படி குற்றம்.

குழந்தை திருமணம் சட்டப்படி குற்றம். அந்த குற்றத்தை செய்தது மட்டுமன்றி அச் சட்டவிரோத குழந்தை திருமணத்தை இன்றும் ஆதரித்து வருகிறார். எனவே அவரை கைது செய்து சிறையில் அடைக்காவிட்டாலும் குறைந்த பட்சம் பொறுப்பு வாய்ந்த ஆளுநர் பதவியில் இருந்தாவது நீக்க வேண்டும்.

மக்கள் துணையோடு மரணத்தை வென்ற ப

மக்கள் துணையோடு மரணத்தை வென்ற புலவர் கலியபெருமாளின் 16வது நினைவுதினம் புலவர் கலியபெருமாள் மாக்சிச லெனினிச மாவோயிச தத்துவ வழிகாட்டலில் புரட்சியை முன்னெடுக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். இதனால் அவரை மட்டுமன்றி அவரது மனைவி பிள்ளைகள் உறவினர்கள் பலரையும்கூட கைது செய்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்தது தமிழக காவல்துறை. அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தில் ஒரு முழு குடும்பத்தையே சிறையில் அடைக்கப்பட்டது என்றால் அது புலவர் குடும்பம் ஒன்று மட்டுமே. அதேபோல் நான் அறிந்தவரையில் தமிழகத்தில் பொலிஸ் தடையை மீறி மக்களே ஒன்றுதிரண்டு சென்று வயலில் விதைத்து அறுவடை செய்து கொடுத்ததும் புலவருக்கு மட்டுமே. தமக்காக போராடுபவர்களை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள் என்பதை புலவர் வாழ்க்கையில் நாம் காணலாம். இறுதிவரை ஈழத் தமிழரை உறுதியாக ஆதரித்த ஒரு தோழர். அவரை ஈழத் தமிழர்கள் என்றும் நன்றியுடன் நினைவு கூர்வார்கள். தோழர் புலவர் கலியபெருமாள் பற்றி சில வரிகள் - https://tholarbalan.blogspot.com/.../05/blog-post_40.html...

நாம் சாகடிக்கப்படலாம்.

நாம் சாகடிக்கப்படலாம். ஆனால் ஒரு போதும் தோற்கடிக்கப்பட முடியாது. எமது போராட்டம் வெற்றி பெறவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதன் அர்த்தம் நாம் தோல்வி அடைந்துவிட்டோம் என்று அல்ல நாம், உரிமையை இழந்தோம் உடமையை இழந்தோம் உயிர்களை இழந்தோம்- ஆனால் உணர்வை இழக்கவில்லை. ஒரு சந்ததி வெற்றி பெறுகிறது எனில் அதன் பின்னால் பல சந்ததிகளின் முயற்சி இருந்திருக்கும். எமது அடுத்த சந்ததியின் வெற்றிக்கு தேவையான முயற்சிகளை நாம் மேற்கொள்வோம்

இரண்டுஅரோபிய நாடுகள்

• இரண்டுஅரோபிய நாடுகள் • 10 அரேபியரல்லாத இஸ்லாமியநாடுகள் • கணக்கில் அடங்காத எண்ணெய்வளம் • அதனால் பெருகும் பணம் மற்றும் ஆயுதங்கள் • வரலாற்று நியாயங்கள் • எல்லாம் வல்ல இறைவன் அல்லா இவை அனைத்தும் இருந்தும், அளுத்கமவில் இஸ்லாமியர் வீடுகள் எரிக்கப்பட்டதை தடுக்க முடியவில்லை! அம்பாறையில் இஸ்லாமியரின் நிலம் பறிபோவதை எதிர்க்க முடியவில்லை! 70 க்கு மேற்பட்ட பள்ளிவாசல்களை அகற்றியதை எதுவும் செய்ய முடியவில்லை! “அல்லாவு அக்பர்” கோசம் போடுவதாலோ வெள்ளிகிழமைகளில் கூடிப் பிரார்த்திப்பதாலோ சிங்கள அரசு திருந்தப் போவதில்லை. இனியாவது கொஞ்சம் யோசியுங்கள்!

ஊரும் நடந்தது உறவும் நடந்தது

ஊரும் நடந்தது உறவும் நடந்தது முள்ளிவாய்க்காலில் நடக்கப்போவது அறியாமல் பூவும் நடந்தது பிஞ்சும் நடந்தது யாவும் ஒன்றாக நசுங்கப் போவது தெரியாமல் கூடி மகிழ்ந்திட்ட கோயில் கூரையில் ஷெல் குண்டுகள் வந்து வீழ்ந்தன பாடி குதூகலித்த வீட்டு முற்றத்தில் பாவியாய் வந்து புகுந்தது சிங்கள ராணுவம் “பாதுகாப்பு வலயம்”என்பதை நம்பி முள்ளிவாய்க்கால் நோக்கி நடந்தனரே ஆனால் அதுதான் தாம் புதைக்கப்படும் வலயம் என்பதை அறியாமலே வந்த பேய்கள் கொளுத்திய தீயில் வெந்து செத்தவர் எத்தனையோ?

திருமலை காக்க மக்கள் போராடுகின்றனர்

திருமலை காக்க மக்கள் போராடுகின்றனர் திருமலை (அ)சிங்கம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது. எந்த நீண்ட இரவுக்கும் ஒரு விடிவு உண்டு இந்த மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு ஒரு முடிவு இல்லையா?

ஒருவர் முட்டாளாக இருக்க உரிமை உண்டு.

ஒருவர் முட்டாளாக இருக்க உரிமை உண்டு. ஆனால் முட்டாள்தனத்தை பரப்புவதற்கு உரிமை இல்லை. மாட்டு சாணி வைரத்தை விட பெறுமதி மிக்கது என்றவர் மாட்டு மூத்திரமே எல்லாவற்றையும்விட சிறந்த மருந்து என்றவர் இப்போது தனக்கு நோய் வந்ததும் ஓடி வந்து மருத்துவமனையில் படுத்துக்கொண்டு குளுக்கோஸ் ஏற்றுகிறார்.

ஒரு டவுட்!

ஒரு டவுட்! கர்நாடகாவில் பாஜக தோற்றதால் யாழ் இந்திய தூதருக்கும் அவரை நம்பி இருக்கும் நம்ம ஈழத்து சங்கிகளுக்கும் ஒன்றும் பிரச்சனை இல்லைத்தானே?😂😂

நடந்தவற்றை மாற்ற முடியாது

நடந்தவற்றை மாற்ற முடியாது ஆனால் மறக்க முடியும் மறக்க முடியாதவற்றை மன்னிக்க முடியும் ஆனால் எம்மால் மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை கண்ணில் முட்டும் கண்ணீரைக்கூட சிந்த முடியவில்லை நெஞ்சில் கணன்றுகொண்டிருக்கும் அந்த பெருநெருப்பை அணைத்துவிடுமோ என்று அச்சமாய் உள்ளது.

உலகில் எந்தவொரு இனமும்

உலகில் எந்தவொரு இனமும் இன்னொரு நாட்டில் இருக்கும் தன் இனத்திற்காக தீக்குளித்து இறந்ததில்லை. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் இனம் மட்டுமே ஈழத்தில் இருக்கும் தன் இனத்திற்காக 16 பேர் இறந்தனர். கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் முள்ளிவாய்க்கால் அவலத்தை தடுக்க முடியாமற் போய்விட்டதே என்று இன்றுவரை வருந்திக்கொண்டிருக்கும் தாய்த் தமிழக உறவுகள். அவர்களின் அர்ப்பணிப்பை என்றும் நன்றியுடன் நினைவில் கொள்வோம்.

உனது நிலம் உனக்கு சொந்தம் இல்லை.

உனது நிலம் உனக்கு சொந்தம் இல்லை. ஏனெனில் நீ தமிழன் உனது இனத்திற்கு சமவுரிமை இல்லை. ஏனெனில் நீ தமிழன் உனது இனம் படுகொலைக்கு நீதி இல்லை. ஏனெனில் நீ தமிழன். உனது உறவுகள் சிறையில் இருந்து விடுதலை இல்லை. ஏனெனில் நீ தமிழன் உனது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குறித்து எந்த பதிலும் இல்லை. ஏனெனில் நீ தமிழன். உனக்காக மரணித்த உனது உறவுகளை நினைவுகூரக்கூட உனக்கு அனுமதி இல்லை. ஏனெனில் நீ தமிழன்.

சிரியாவில் குழந்தை இறந்தபோது

சிரியாவில் குழந்தை இறந்தபோது கண்ணீர் விட்ட சர்வதேசம் முள்ளிவாய்க்காலில் பல குழந்தைகள் கொல்லப்பட்டபோது கண்டு கொள்ளவில்லையே. தமிழ் குழந்தைகள் தமிழ் இனத்தில் பிறந்தது குற்றமா? தமிழ் இனத்தில் பிறந்ததைத்தவிர வேறு எந்த தவறும் செய்யவில்லையே இக் குழந்தைகள்.

வழி நடத்த தலைவர் இல்லை.

வழி நடத்த தலைவர் இல்லை. பற்றிப்பிடிக்க ஒரு அமைப்பு இல்லை. ஆனாலும் அதிசயம் நிகழ்ந்திடாதா? பட்டுவிட்ட அறுகம்புல் வேர்கூட ஒரு துளி நீர் கண்டவுடன் துளிர்த்து எழுகிறது. தமிழ் இனம் மீண்டும் எழுந்திடாதா?

மாநிலத்தில் அதிகூடிய புள்ளி

மாநிலத்தில் அதிகூடிய புள்ளி எடுத்த மாணவிக்கு பெரியார் சிலை கள்ளச்சாராயம் குடித்து இறந்தவருக்கு பத்து லட்சம் ரூபா இதுதான் திராவிட மாடல் ஆட்சி?

கரடியே காரித்துப்பிடிச்சு

கரடியே காரித்துப்பிடிச்சு கோவன் எங்கய்யா இருக்கே ஒரு முழம் கயிறு கிடைச்சா தொங்கிடு

மறக்கவும் மாட்டோம்

மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் எமக்குரிய நீதியை பெறும்வரை ஓயவும் மாட்டோம்

முன்பெல்லாம் கட்டாகாலி நாய்களை

முன்பெல்லாம் கட்டாகாலி நாய்களைப் பிடிக்க மாநகரசபை நாய் வண்டி வரும். இப்போது வருவதில்லையா?

நாய்க்கு கல் எறிந்தால் நாய் ஓடும்

நாய்க்கு கல் எறிந்தால் நாய் ஓடும். ஆனால் அதே கல்லை தேன்கூட்டிற்கு எறிந்தால் நாம் ஓட வேண்டி வரும். தேனியை விட நாய் பலமானது. ஆனாலும் தேனி அனைத்தும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து விரட்டுவதால் நாம் ஓட வேண்டியிருக்கிறது. காட்டில் சிங்கம் ராஜாதான். ஆனால் எருமைகள் ஒற்றுமையாக ஒன்று திரண்டால் சிங்கம் ஓட வேண்டி வரும். அதேபோல தமிழ் இனம் ஒற்றுமையாக ஒன்று திரண்டால் தமிழின எதிரிகள் அனைவரும் ஓட்டம் எடுப்பர். ஒன்று சேர்வோம். ஒருமித்து குரல் கொடுப்போம்.

14 வருட சிறைவாசத்தின் பின்னர்

14 வருட சிறைவாசத்தின் பின்னர் பொறியியல் பட்டதாரி சிவ.ஆரூரன் நீதி மன்றத்தால் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டுள்ளார். மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என்பார்கள். மீதி உள்ள தமிழ் அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை பெற வேண்டும்.

கோழிகளால் தன் குஞ்சுகளை

•கோழிகளால் தன் குஞ்சுகளை எப்படி பாதுகாக்க முடிகிறது? தன் குஞ்சுகளுக்கு ஆபத்து என்றால் எதிரி எந்தளவு பெரியது என்றாலும் கோழி போராட தயங்குவதில்லை ஏனென்றால் போராடினால் மட்டுமே உயிர் தப்ப முடியும் என்பதைத் தவிர வேறு எதுவும் அதற்கு தெரியாது. அதுமட்டுமல்ல, •குஞ்சுகளைக் காப்பாற்ற போராடுவது பயங்கரவாதம் என்று யாரும் அதற்கு கூறுவதில்லை. •அகிம்சை வழியில் போராடினால் குஞ்சுகளைக் காப்பாற்றலாம் என யாரும் ஏமாற்றுவதில்லை. •இதெல்லாம் போன ஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவு என்று யாரும் போதிப்பதில்லை . •எல்லாவற்றுக்கும் மேலாக தன்னை அழிப்பது போர்க்குற்றமா? அல்லது இனப்படுகொலையா? என்று ஆராய்ந்து கொண்டிருப்பதில்லை. •இந்துக் கோழி என்று கூறினால் உதவி கிடைக்கும் என்று நம்பி இருப்பதில்லை கோழிகளால் தம் குஞ்சுகளை போராடி பாதுகாக்க முடிகிறது. ஆனால் தமிழனால் தன் இனத்தை பாதுகாக்க முடியவில்லை.

நாம் தோற்றுப் போய்விட்டோமா?

நாம் தோற்றுப் போய்விட்டோமா? குத்துச்சண்டையில் ஒருவர் விழுந்தவுடன் தோல்வி அறிவிக்கப்படுவதில்லை. மாறாக பத்து எண்ணுவதற்குள் மீண்டும் எழுந்திருக்காவிட்டால்தான் தோல்வி அறிவிக்கப்படும். அதேபோல் இனவிடுதலைப் போராட்டத்திலும் ஒரு இனம் விழுந்தவுடன் தோல்வியடைந்துவிட்டது என கருதுவதில்லை. மாறாக மீண்டும் எழுந்திருக்கவில்லை என்றால்தான் அது தோல்வி அடைந்துவிட்டதாக கருதப்படும். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை முள்ளிவாய்க்கால் அழிவு என்பது ஒரு பின்னடைவேயொழிய இனவிடுதலைப் போராட்டத்திற்கான தோல்வி அல்ல. ஏனெனில் போராட்டம் வெற்றியை தராது போகலாம். ஆனால் அது ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை என்பது ஒருபுறம் இருக்க, போராட்டம் என்பது தவிர்க்க முடியாதது என்பது மறுபுறத்து உண்மையாகும். பொதுவாகவே ஒரு மனிதன் பிறக்கும்போதே போராட்டத்துடனே பிறக்கிறான். அவன் பூமியில் பிறந்தவுடன் செய்யும் முதல் போராட்டமே அழுகைதான். அதனால்தான் அழுத பிள்ளை பால் குடிக்கும் என்கிறார்கள். அதுபோலவே பிறக்கும்போதே போராட்டத்துடன் பிறக்கும் மனிதன் இறக்கும்வரை போராட்டத்துடனே வாழ்கிறான். ஒருவன் போராட தயங்கினால் அவன் வாழ்வதற்கு உரிய தகுதியை இழந்துவிடுவான். எப்படி ஓடாத மான் வாழ முடியாமல் அழிந்துவிடுமோ அதுபோலவே போராடாத இனமும் வாழ முடியாமல் அழிந்துவிடும். எனவே தமிழ் இனமும் அழியாமல் இத்தனை காலமும் வாழ்ந்து வருகிறது என்றால் அது இத்தனை காலமும் போராடி வருகின்றது என்றே பொருள். எனவே இனியும் அழிந்துவிடாமல் வாழ வேண்டுமென்றால் அது தொடர்ந்து போராட வேண்டும் என்பதே அடிப்படையாகும். ஏடறிந்த வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தமிழ் இனம் போர்த்துக்கேயருக்கு எதிராக, ஒல்லாந்தருக்கு எதிராக ஆங்கிலேயருக்கு எதிராக எல்லாம் தொடர்ந்து போராடியதை அறிய முடியும். இத்தகைய வீரம் செறிந்த போராட்ட குணாம்சமே தொடர்ந்தும் இலங்கை மற்றும் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் இனத்தை போராட வைக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள முடியும். எனவேதான் தமிழ் மக்கள் தோல்வியை ஒத்துக்கொள்ளாதவரை வெற்றிவிழாக் கொண்டாடியவர்களால் வெற்றியை அனுபவிக்க முடியவில்லை. அதனால்தான் அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தோல்வியை ஒத்துக்கொள்ளும்டி தமிழ் மக்களை நிர்ப்பந்திக்கின்றனர். ஆனால் அவர்கள் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை. ஏனெனில் தமிழ் மக்கள் இதுவரை தோற்கவில்லை. இனியும் தோற்கப்போவதில்லை.

வடையை தினத்தந்தி

வடையை தினத்தந்தி பேப்பரில் வைத்து அழுத்தினால் எண்ணெய் காணாமல் போகும். அதே வடையை இந்துப் பேப்பரில் வைத்து அழுத்தினால் வடையே காணாமல் போகும். சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஆனால் அதுதான் உண்மை. மகிந்த ராஜபக்சாவிடம் பரிசும் பட்டமும் பெற்றவர் "இந்து" ராம். அவருடைய இந்துப் பத்திரிகையில் கடந்த வருடம் வெளியிட்ட செய்திதான் இது. அச் செய்தியில் தெரிவித்தபடி கடந்த ஒரு வருடத்தில் புலிகள் மீள ஒருங்கிணையவும் இல்லை. தாக்குதல் நடத்தவுமில்லை. ஆனாலும் ஏன் பொய் செய்தி வெளியிட்டீர்கள் என்று இந்து ராமிடம் யாரும் கேட்கவில்லை. இந்திய உளவுப்படையிடமும் கேட்கவில்லை. மக்கள் மறந்துவிடுவார்கள் என்ற தைரியத்தில் இவர்கள் இவ்வாறான பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர்.

இலங்கையில் சிங்களவர் ஒன்றரைக்கோடி

இலங்கையில் சிங்களவர் ஒன்றரைக்கோடி. ஆனால் உலகளவில் தமிழர் எட்டரைக் கோடி. இருந்தும் தமிழரைக் கொல்லும் தைரியம் எப்படி சிங்கள அரசுக்கு வந்தது? கைக்கெட்டும் தூரத்தில் எட்டுகோடி தமிழர் இருக்கையில் ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை கொல்லும் தைரியம் மகிந்த ராஜபக்சாவுக்கு எப்படி வந்தது? அதுவும் 1989ல் அறுபதாயிரம் சிங்கள மக்கள் கொல்லப்பட்டமைக்கு ஜ.நா சென்று நீதி கோரியவர் இந்த மகிந்த ராஜபக்சா. அதனால் அப்பாவி மக்களை கொன்றால் ஜ.நா வில் பதில் சொல்ல வேண்டி வரும் என்று தெரிந்தும் எப்படி அவர் தைரியமாக தமிழ் மக்களை கொன்றார்? இந்த கேள்விகளுக்கான பதில் தவிர்க்க முடியாமல் அன்றைய தமிழக முதலமைச்சர் கருணாநிதியையே சென்றடைகிறது. பங்களாதேஷ் பிரச்சனையின் போது மேற்கு வங்க முதல்வராக இருந்தவர், (1)மாநில அரசுக்கு அடுத்த நாட்டு பிரச்சனையில் தலையிட உரிமை இல்லை என்று கூறவில்லை. (2) போர் நிறுத்தம் கோரி கடற்கரையில் 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கவில்லை. (3) தன் பிள்ளைகளுக்காக டில்லி சென்று மந்திரி பதவி கேட்கவில்லை. அவர் காங்கிரஸ் கட்சிக்காரர்தான். இருந்தும் பிரதமர் இந்திராகாந்தியைப் பார்த்து தைரியமாக “ இந்தியா ராணுவத்தை அனுப்ப வேண்டும் இல்லையேல் நான் என் பொலிசை அனுப்புவேன்” என்றார். ஆனால் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியோ தன் பொலிசை அனுப்பி (1) ஈழத் தமிழருக்காக தீக்குளித்து இறந்தவர்களை காதல் தோல்வியில் இறந்தவர்கள் என கூற வைத்தார். (2) போராடிய மாணவர்களை கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டு அடக்கினார். (3) அதையும் மீறி போராடியவர்களை சிறையில் அடைத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக தன் மகளை அனுப்பி ரத்தம் தோய்ந்த மகிந்த ராஜபக்சாவின் கைகளை குலுக்கி பரிசில் பெற வைத்தார். அதனால்தான் கலைஞர் கருணாநிதியின் ஒத்துழைப்பும் ஆதரவும் இல்லாதிருந்திருந்தால் தங்களால் போரை வென்றிருக்க முடியாது என்று கோத்தபாய ராஜபக்சா கூறினார்.

இரந்து கேட்பதற்கு உரிமை

இரந்து கேட்பதற்கு உரிமை ஒன்றும் பிச்சை அல்ல. அது போராடிப் பெறுவது. நாம் மீண்டும் எழுவது அழுது புரள்வதற்காக அல்ல. எமக்குரிய நீதியைப் பெறுவதற்காக. ஓட முடியுமென்றால் ஓடு. ஓட முடியவில்லை என்றால் தவழ்ந்தாவது செல். ஆனால் ஒருபோதும் இயங்குவதை நிறுத்திவிடாதே. ஏனெனில் ஓடாத மானும் போராட இனமும் வாழ முடியாது. அழிந்துவிடும். நாம் மீண்டும் எழுவோம் என்றதும் சிங்கள அரசுக்கும் இந்திய அரசுக்கும் வரும் எரிச்சலைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எம் தமிழர் சிலர் எரிச்சல் அடைவதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்களுக்கு எப்படி எம் நியாயத்தை புரியவைப்பது?

எங்கு மக்கள் கொன்று

எங்கு மக்கள் கொன்று புதைக்கப்பட்டார்களோ அந்த முள்ளிவாய்க்கால் தொடக்கம் உலகெங்கும் எங்கு தமிழ் மக்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். முகநூலில் நினைவு அஞ்சலி ,இணைய தளங்களில் நினைவு அஞ்சலி ,பாடல்கள் கவிதைகள் கட்டுரைகள் குறும் ஒலி ஒளி நாடாக்கள் என எங்கும் எதிலும் நினைவு அஞ்சலிகளே ஆம். கலை கலாச்சாரம் பண்பாட்டு தளங்கள் எல்லாவற்றிலும் நினைவு அஞ்சலி வடிவங்கள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்பட்டு விட்டது அடுத்த சந்ததி வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடும் என எண்ணாதீர்கள். அது தனக்குரிய நீதியைப் பெறாமல் ஒருபோதும் அமைதியாக இருந்துவிடாது 14 வருடமாக என்னத்தைக் கிழித்தீர்கள் என்று கேட்டு எள்ளி நகையாடியவர்களுக்கு தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து ஒருமித்து சொல்லியிருக்கும் செய்தி இதுதான். மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் எமக்குரிய நீதியைப் பெறாமல் ஓய்ந்துவிடவும் மாட்டோம்.

வழி நடத்த தலைவர் இல்லை.

வழி நடத்த தலைவர் இல்லை. பற்றிப்பிடிக்க ஒரு அமைப்பு இல்லை. ஆனாலும் எப்படி இந்த அற்புதங்கள் நிகழ்கிறது? எரிந்த சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை என்பார்கள். அது உண்மையா இல்லையா என்று தெரியாது. ஆனால் ஒன்றரை லட்சம் மக்களை கொன்று குவித்த பின்பும் அதில் இருந்து இவர்களால் எழுந்து நிற்க முடிகிறது. ஆம், தமிழ் இனம் “ஆசியாவின் அதிசயம்” என்பது மிகையல்ல.

நடந்தது இனப்படுகொலை அல்ல

நடந்தது இனப்படுகொலை அல்ல போர்க்குற்றம் என்றவர் இனப்படுகொலை நடந்த அந்த இடத்திற்கு வந்து இனப்படுகொலை நினைவேந்தலில் பங்கு பற்றுகிறார். இனப்படுகொலை செய்தவர்களுடன் ஜந்து வயது முதல் வாழ்வது தனக்கு கிடைத்த பாக்கியம் என்று கூறிய அதே சுமந்திரன்தான் வந்து அஞ்சலி செலுத்துகிறார். இந்த அதிசயங்களை நிகழ்த்துபவர்கள் யார்? ஆம். தமிழ் மக்கள் மகத்தானவர்கள். அவர்கள் இன்னும் பல அதிசயங்களை நிகழ்த்துவார்கள்.

கார்பெட் றோட் போட்டுக்கொடுத்தால்

கார்பெட் றோட் போட்டுக்கொடுத்தால் இனப்படுகொலையை தமிழ் மக்கள் மறந்துவிடுவார்கள் என மகிந்த அரசு நினைத்தது. ஐம்பதாயிரம் வீடு கட்டித் தருவதாக கூறினால் இனப்படுகொலையை தமிழ் மக்கள் மறந்துவிடுவார்கள் என இந்திய அரசு நினைத்தது. நாலு புலமைச்சீட்டு வழங்கினால் இனப்படுகொலையை தமிழ் மாணவர்கள் மறந்துவிடுவர் என யாழ் இந்திய தூதர் நினைத்தார். ஆனால் மக்கள் மட்டுமன்றி யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் தாம் இனப்படுகொலையை மறக்க மாட்டோம். அதற்குரிய நீதியை பெறாமல் ஓயமாட்டோம் என்பதை காட்டியுள்ளார்கள். அரசியல் தலைவர்களை விலைக்கு வாங்கலாம். ஆனால் மக்களை ஒருபோதும் வாங்க முடியாது என்பதை இனியாவது சிங்கள இந்திய அரசுகள் புரிந்து கொள்ளட்டும்.

நாம் ஊமையாக இருக்கும்வரை

நாம் ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாக இருக்கும். புலம் பெயர்ந்த தமிழரின் தொடர்ச்சியான குரலுக்கு லண்டன் மற்றும் கனடிய அரசுகள் செவிசாய்க்க ஆரம்பித்துள்ளன. புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒருபுறம் தாயக உறவுகளை தாங்கிக்கொண்டு மறுபுறம் இனப்படுகொலைக்கு நீதி கோரும் போராட்டத்தை முன்நகர்த்தி வருகின்றனர். புலம்பெயர்ந்த தமிழர்களின் இந்த அர்ப்பணிப்பே உலக தமிழினத்தை ஒருங்கிணைக்க உதவுகிறது என்றால் அது மிகை அல்ல.

ஈழத் தமிழர்கள் "இந்துக்கள்"

ஈழத் தமிழர்கள் "இந்துக்கள்" என்று கூறுவதன் மூலம் இந்திய அரசின் உதவியை பெற முடியாது. மாறாக, எட்டுக்கோடி தமிழக மக்களை ஒன்று திரட்டியே இந்திய அரசை பணிய வைக்க முடியும். ஈழத் தமிழரும் தமிழக தமிழரும் பரஸ்பரம் ஆதரவு என்ற நிலையில் இருந்து சேர்ந்து பயணித்தல் என்ற தமிழ்த் தேசியத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும். "எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே" என்ற வரிகள் மெய்ப்பட வேண்டும்.

கனடாவில் சுமார் 3 லட்சம் தமிழர்களே

கனடாவில் சுமார் 3 லட்சம் தமிழர்களே இருக்கின்றனர். ஆனால் கனடா பிரதமர் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என அறிவித்துள்ளார். பிரித்தானியாவில் சுமார் ஒரு லட்சம் தமிழர்களே இருக்கின்றனர். ஆனால் அடுத்து ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படும் லேபர் கட்சியானது நடந்தது இனப்படுகொலை என்றும் அதற்குரிய நீதிக்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வோம் என உறுதியளித்துள்ளது. இந்தியாவில் எட்டு கோடி தமிழர் இருக்கின்றனர். ஆனால் இந்திய அரசானது இன்னும் இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. இனியாவது தமிழக முதல்வர் இதனை வலியுறுத்துவாரா?

ஹோசிமினை எப்படி நினைவு கூருவது?

ஹோசிமினை எப்படி நினைவு கூருவது? இன்று வியட்நாம் தந்தை என புகழப்படும் ஹோசிமின் அவர்களின் 133 வது பிறந்த தினம் ஆகும்.(19.05.1890) 26 வருடங்கள் அமெரிக்க வல்லரசுக்கு எதிராக போராடி வெற்றியை பெற்றுக் கொடுத்தவர் ஹோசிமின் அவர்கள். உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று ஹோசிமின் அவர்களிடம் கேட்டபோது “ கசப்பான உண்மையாக இருந்தாலும் அதை மறைக்காது மக்களிடம் கூறினேன். அவர்கள் எனக்கு வெற்றியை பெற்றுத் தந்தார்கள்” என்றார். ஆனால் இன்று சில தமிழ் தலைவர்கள் உண்மையை மக்களிடம் கூறுவதற்கு தயங்குகிறார்கள். தமிழ் மக்கள் விடுதலை பெற வேண்டும் என உண்மையாகவே அவர்கள் விரும்புவார்கள் எனில் அவர்கள் ஹோசிமின் கூறியபடி கசப்பான உண்மையாக இருந்தாலும் அதை மக்களுக்கு கூற முன்வரவேண்டும். இந்தியா மிகப்பெரிய வல்லரசு. அதனை எதிர்த்து ஈழத் தமிழர்களால் வெற்றி பெற முடியாது என்று கூறுபவர்களும் ஹோசிமின் வரலாற்றை படிக்க வேண்டும். வியட்நாம் மக்களால் அமெரிக்க வல்லரசின் ஆக்கிரமிப்பை விரட்டியடிக்க முடியுமென்றால் தமிழ் மக்களால் ஏன் இந்திய ஆக்கிரமிப்பை முறியடிக்க முடியாது? நிச்சயமாக முடியும்!

அவர்கள் தம்மை சிங்கங்கள் என்கின்றனர்.

அவர்கள் தம்மை சிங்கங்கள் என்கின்றனர். எம்மை எறும்புகள் போல் நசுக்கிவிட்டதாக கூறி போர் வெற்றிவிழா கொண்டாடுகின்றனர். ஆனால், அவர்கள் ஒரு விடயத்தை உணரவில்லை எத்தனை எறும்புகளை நசுக்கி போட்டாலும் எறும்புகள் வரிசையாக முன்னோக்கி வருமேயொழிய ஒரு எறும்புகூட திரும்பி ஓடுவதில்லை ஆனால் நாலு எருமை ஒன்றாக சேர்ந்தாலே சிஙகம் வாலைச் சுருட்டிக் கொண்டு பயந்து ஓடும். அதுமட்டுமல்ல சிங்கங்களைவிட எண்ணிக்கையில் எறும்புகள் அதிகம். அதில் ஒரு எறும்பு சிங்கத்தின் மூக்கினுள்ளேயோ அல்லது காதின் உள்ளோயோ நுழைந்துவிட்டால் அப்புறம் சிங்கம் செத்து தொலைவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே நாம் எறும்புகளாகவே இருந்து கொள்கிறோம். நீங்கள் சிங்கங்களாகவே இருந்து கொள்ளுங்கள். எறும்புகள் ஒன்று திரள்கின்றன ஒன்று சேர்ந்து ஒருமித்து வருகின்றன இதுவே இன்றைய நாளில் சிங்கங்களுக்கு எறும்புகள் சொல்லும் செய்தி!

கடவுள் முருகனும் தமிழ் பக்தனும்

•கடவுள் முருகனும் தமிழ் பக்தனும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளும் பக்தன்- முருகா! தமிழ் கடவுளே! ஈழத்தில் எம் இனம் அழிகிறது. நீ கண் திறந்து பார்க்கக்கூடாதா? முருகன்- பக்தா! நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்? பக்தன்- எங்களை காப்பாத்து முருகா. எங்களை அழித்தவர்களை பழி வாங்கு முருகா. இந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் நல்ல செய்தி கூறு முருகா! முருகன்- என் கோயில் மீது விமானம் மூலம் குண்டு போட்டவர்கள். இப்போது ஹெலிகொப்டர் மூலம் பூ தூவுகிறார்கள். அவர்களையே என்னால் எதுவும் செய்ய முடியவில்லை அப்புறம் உன்னை எப்படி காப்பாற்றுவேன் என நம்புகிறாய்? பக்தன்- என்ன முருகா இப்படி சொல்லுறாய்? உன்னைவிட்டால் எமக்கு வேறு யார்தான் இருக்கிறார்கள்? “இயேசு சீக்கிரம் வருகிறார்” என்று கொஞ்சப் பேர் சொல்லித் திரியிறாங்க. அப்ப அவங்களிட்ட கேட்டுப் பார்க்கட்டுமா? முருகன்- நவாலியில் அவரது தேவாலயத்தின் மீதே குண்டு போட்ட போது அவர் வந்தாரா? அல்லது அவரது பங்கு தந்தை கருணாகரன் அடிகளார் கிளைமோர் குண்டில் கொல்லப்பட்டபோது வந்தாரா? அல்லது அண்மையில் 3 தேவாலயத்தில் குண்டு வெடித்து பலர் இறந்தார்களே. அப்பவாவது அவர் வந்தாரா? பக்தன்- இல்லை முருகா! அவர் இன்னும் வரவில்லைதான். அப்ப அல்லா விடம் கேட்டுப் பார்க்கட்டுமா? முருகன்- தன் பள்ளிவாசல்கள் எரிக்கப்படுவதையே அவரால் தடுக்க முடியவில்லை. அப்புறம் உங்களை எப்படி அவரால் காப்பாற்ற முடியும்? இந்த ஏடறிந்த 2000 வருடத்தில் யாராவது ஒரு கடவுளாவது வந்திருக்கிறாரா? ஏன் எந்தக் கடவுளும் இப்ப வருவதில்லை என்று எப்பவாவது சிந்தித்திருக்கிறீர்களா? பக்தன்- ஆமாம் ஆமாம் முருகா! அப்ப கடவுள் மதம் எல்லாம் பொய்யா? முருகன்- “உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்களை மேலெழும்பவிடாமல் அழுத்திவைக்கும் ஆபத்தான ஆயுதங்களே மதமும் கடவுளும்” என்று தோழர் லெனின் சொல்லியிருப்பதை நீ அறியவில்லையா? பக்தன்- என்ன முருகா நீயும் கம்யுனிஸ்ட்; ஆகி விட்டாயா? முருகன்- ஹா ஹா ஹா! சரி இதை அப்புறம் பேசுவோம். இப்ப உன் பிரச்சனையைப் பார்ப்பம். பக்தன்- ஆமாம் முருகா! எம் தமிழ்இனம் விடுதலை பெற வழிகாட்டு முருகா. முருகன்- உன் மூதாதையர் 100 வருடம் ஆண்ட போர்த்துக்கேயரை எப்படி விரட்டினார்கள்? 100 வருடம் ஆண்ட ஒல்லாந்தரை எப்படி விரட்டினார்கள்? 150 வருடம் ஆண்ட ஆங்கிலேயரை எப்படி விரட்டினார்கள்? பக்தன்- எப்படி முருகா? முருகன்- அப்போதும் நான் நல்லுர் கோவிலில் இருந்தேன். ஆனால் அவர்கள் உன்னைப்போல் வந்து என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கவில்லை. அவர்கள் நம்பிக்கையுடன் போராடி விரட்டியடித்தார்கள். பக்தன்- 150 வருடம் ஆண்ட ஆங்கிலேயர்களை விரட்டியடித்த எம்மால் 60 வருடம் ஆளும் இலங்கை அரசை விரட்டியடிக்க முடியவில்லையே. அது ஏன் முருகா! முருகன்- அன்று, ஆங்கிலேயர் நல்லாட்சி செய்வதாக கூறுவதற்கு சம்பந்தர் சுமந்திரன்கள் உங்கள் மூதாதையர் மத்தியில் இருக்கவில்லை. பக்தன்- இருந்தாலும், ஆயுதம் ஏந்தியவர்கள் பயங்கரவாதிகள் என்று சம்பந்தர் அய்யா கூறுவது நியாயம்தானே? முருகன்- அப்படியென்றால் உலகின் முதலாவது பயங்கரவாதி நான்தானே? நான் அகிம்சை வழியிலா சூரனை அழித்தேன்? வேலாயுதம் ஏந்தி போர் செய்துதானே சூரனை அழித்தேன் பக்தன்- என்ன இருந்தாலும் போர் அழிவு அதிகமாக இருக்கிறது முருகா. நாங்க மீண்டும் எழும்ப முடியுமா? முருகன்- வீழ்வது கேவலம் இல்லை. வீழ்ந்து கிடப்பதுதான் கேவலம். வீழ்வது மீண்டும் எழுவதற்கே! மிதிபடும் புழுகூட துடித்து எழுகிறது. வீரம் செறிந்த போராட்ட வரலாற்றைக் கொண்ட இனம் நீங்கள் மீண்டும் எழும்ப முடியும். அதுவும் முன்பைவிட பலமாக எழும்ப முடியும். பக்தன்- கேட்க நல்லாத்தான் இருக்கு முருகா! ஆனால் இது சாத்தியமா? முருகன்- ஏன் சாத்தியமில்லை? 1971ல் அழிக்கப்பட்ட ஜே.வி.பி மீண்டும் எழவில்லையா? 1989ல் 60 ஆயிரம் இளைஞர்கள் கொல்லப்பட்ட பின்பும்கூட ஜே.வி.பி மீண்டும் எழுந்துதானே நிற்கிறது. சிங்கள் மக்களால் மீண்டும் எழுந்து நிற்க முடியுமென்றால் தமிழ் மக்களால் ஏன் முடியாது? பக்தன்- ஆம் முருகா! இரந்து கேட்பதற்கு உரிமை ஒன்றும் பிச்சை அல்ல. அது போராடிப் பெற வேண்டியது. ஓடாத மானும் போராடாத இனமும் வாழ முடியாது. முருகன்- போராடாத இனம் உரிமை பெறுவதில்லை. போராடிய இனம் உரிமை பெறாமல் விட்டதில்லை. தமிழ் இனம் நடத்தும் போராட்டமும் நிச்சயம் வெற்றி பெறும். வாழ்த்துகள்.

ராஜிவ்காந்தி கொலை பற்றி

ராஜிவ்காந்தி கொலை பற்றி பேசுவோர் ராஜிவ்காந்தியால் கொல்லப்பட்ட அப்பாவி ஈழத் தமிழருக்கு இதுவரை வழங்கிய நியாயம் என்ன? ராஜிவ்காந்தி உயிர் தான் உயிர். ஈழத் தமிழர் உயிர் எல்லாம் மயிர் என இந்த நியாவான்கள் கருதுகிறார்களா? சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு சீக்கியர்களிடம் மன்னிப்பு கேட்ட இந்திய பிரதமர் மோடி இதுவரை தமிழரிடம் மன்னிப்பு கேட்காதது ஏன்?

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அவர் தலையில் தாக்கிய இந்த சிங்கள சிப்பாய் தண்டனை எதுவுமின்றி சுதந்திரமாக திரிகிறார். ஏழு தமிழர் விடுதலைக்கு எதிராக போராடும் தமிழக காங்கிரசார் இது குறித்து ஏன் போராடுவதில்லை? தமிழருக்கு எதிராக மட்டும்தான் இவர்கள் போராடுவார்களா?

விரல்களில் பல ராசிக்கற்கள்

விரல்களில் பல ராசிக்கற்கள் பதித்த மோதிரங்கள் கைகளில் பல வண்ணங்களில் மந்திரித்த கயிறுகள் நாட்டில் புத்தர் வழபாடு. இந்தியாவில் திருப்பதி பெருமாள் வழிபாடு ஆனாலும் இவை எதுவுமே மகிந்த ராஜபக்சாவைக் காப்பாற்றவில்லை. இரண்டாம் துட்ட கைமுனு என்று அழைக்கப்பட்டவர் எந்த மக்களால் தெரிவு செய்யப்பட்டாரோ அந்த மக்களினால். இதே நாளில் கடந்த வருடம் தூக்கியெறியப்பட்டார். எந்த மே மாதத்தில் தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் கொன்றாரோ அதே மே மாதத்தில் உயிரைப் பாதுகாக்க தமிழர் பகுதியான திருமலையில் வந்து பதுங்கினார்.

நல்லவேளை 200 ரூபா நோட்டை

“நல்லவேளை 200 ரூபா நோட்டை நீக்கவில்லை” - திமுக உபிஸ் மைனட்வொய்ஸ் 😂😂

இதைத்தான் தேவடியாத்தனம் என்பதா?

இதைத்தான் தேவடியாத்தனம் என்பதா?

நீ கவலைகளை சுமந்து கண்ணீர்

“நீ கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதைவிட இலட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்து. உலகம் உன்னை போற்றும்” - லெனின்

நாம் எதை அறுவடை செய்ய

நாம் எதை அறுவடை செய்ய விரும்புகிறோமோ அதை விதைத்துக்கொண்டு இருக்கிறோம்

எம் காடுகள் மட்டுமல்ல

எம் காடுகள் மட்டுமல்ல எம் கடல் மட்டுமல்ல எம் மக்களும் எம்மோடுதான் மீண்டும் எழுந்து வருவோம் எறும்புகளாக நசுக்கி போட்டாலும் திரும்பி ஓடாமல் அணிவகுத்து வருவோம் அரித்து பிய்த்து எறிவோம் சிங்கத்தின் போர் வெறியை எம் நிலத்தை எம் காட்டை எம் கடலை மீண்டும் ஆள்வோம் அவற்றை அழகாக்குவோம் இன்னும் பல மடங்காக.

பாட்டியுடன் ஒரு (கற்பனை) உரையாடல்

•பாட்டியுடன் ஒரு (கற்பனை) உரையாடல் ! கேள்வி- பாட்டி! ஆயுதம் தூக்கி போராடுவது பயங்கரவாதம் என்கிறார்களே? பாட்டி- சரி, தூக்குவது தவறு என்றால் தூக்க வைத்தது அதைவிட தவறு அல்லவா? முதல்ல போய் தூக்க வைத்தவனிடம் கேள். அப்புறம் என்னிடம் வா. கேள்வி- என்ன பாட்டி சொல்லுகிறீர்கள்? பாட்டி- கிழவி என்றும் பாராமல் பாலியல் வல்லுறவு செய்யிறான். சிறு குழந்தைகளைக்கூட சுட்டுக் கொல்கிறான். விமானத்தில் வந்து குண்டு போடுகிறான். நான் என்ன செய்ய சொல்லுறாய்? கேள்வி- நீங்க அகிம்சை வழியில் போராடலாம் அல்லவா? பாட்டி- அகிம்சை வழியில்தானே தந்தை செல்வா போராடினார். அவருக்கு என்னத்தைக் கொடுத்தாங்க? கேள்வி – அகிம்சை வழியில்தானே இந்தியா சுதந்திரம் அடைந்தது? பாட்டி- இந்தியா எந்த வழியில் சுதந்திரம் அடைந்தது என்று எனக்கு தெரியாது. ஆனால் அதே இந்திய அரசு அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து இறந்தபோது அந்த அகிம்சையை மதிக்கவில்லையே? கேள்வி- அப்படியென்றால் மகாத்மா காந்தி சொன்னது தவறா? பாட்டி- காந்தி வெள்ளைக்கார ஆட்சிக்கு எதிராக சொன்னது இப்ப உள்ள கொள்ளைக்கார அரசுகளுக்கு பொருந்துதில்லையே? காந்தி இப்போது இருந்தால் அவர் கையில் ஊன்று தடி இருக்காது அவர் கையிலும் துப்பாக்கி இருந்திருக்கும். கேள்வி- என்னது, காந்தியும் ஆயுதம் ஏந்தியிருப்பாரா? பாட்டி- ஆம். முட்ட வரும் மாட்டை கட்டியணைக்க முடியாது. எட்டி உதைக்க வேண்டும். அதுபோல் கற்றபழிக்க வரும் காமுகனை கை நகத்தினாலாவது தாக்குங்கள் என்றுதானே அவர் சொல்லியிருக்கிறார் . கேள்வி- ஆயுதம் தூக்கியவர்களை பயங்கரவாதிகள் என்றுதானே நம்மட சம்பந்தர் ஐயாவும் கூறுகிறார். பாட்டி- அவர் மகள் சிங்கள ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டிருந்தால், அவர் வீட்டின் மீது கொத்துக் குண்டு வீசப்பட்டிருந்தால், ஒருநாளாவது பதுங்கு குழியில் வாழ்ந்திருந்தால,யார் பயங்கரவாதி என்று அவருக்கு தெரிந்திருக்கும். கேள்வி- இருந்தாலும் இந்த போராட்டம் தேவைதானா? பாட்டி- எனது மூதாதையர் போராடியிருந்தால் இன்று நான் போராட வேண்டி வந்திருக்காது. அதேபோல் நான் என் அடிமைத்தனத்தை என் பரம்பரைக்கு விட்டுச்செல்ல விரும்பவில்லை. கேள்வி- அடுத்த பரம்பரையும் இந்த போராட்டத்தை தொடரும் என நம்புகிறீர்களா? பாட்டி- தம்பி நான் நம்புவதெல்லாம் இந்த போராட்டத்தை மட்டுமே. எனவே இயக்கமோ அல்லது தலைவரோ இல்லாவிட்டாலும்கூட இந்த போராட்டம் தொடரும். கேள்வி- எப்படி ? புரியவில்லையே! பாட்டி- என்ன காரணங்களுக்காக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதோ அதில் ஒன்றுகூட இன்னும் தீர்க்கப்படவில்லை. எனவே போராட்டத்திற்கான தேவை இருக்கும்வரை அதற்கான போராட்டமும் இருக்கும். குறிப்பு- தமிழ் இனம் மீண்டும் எழுந்து போராடும் என்ற நம்பிக்கையை இத்தகைய பாட்டிகளின் தியாகங்களே உருவாக்குகின்றன ( இது ஒரு மீள் பதிவு)

பாலு மகேந்திரா “வீடு” என்று ஒரு படம்

பாலு மகேந்திரா “வீடு” என்று ஒரு படம் இயக்கியிருந்தார். அதற்காக போரூரில் உண்மையாகவே ஒரு வீடு கட்டி படமாக்கினார். இந்தப் படம் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் தலைமையிலான இயக்கத்தின் பணத்தில் தயாரிக்கப்பட்டது. ஒரு இயக்கத்தின் பணத்தில் இந்தப் படம் தயாராகிறது என்ற விபரம் பாலு மகேந்திராவுக்கு தெரிந்திருந்ததா என்று எனக்கு தெரியவில்லை. படம் முடியும்போது அந்த வீட்டை விற்று பணத்தை பாலு மகேந்திரா எடுத்துவிட்டார் என்றும் அந்த இயக்கத்திற்கு கொடுக்கப்படவில்லை என பரவலாக பேச்சு அடிபட்டது. பின்னர் பாலு மகேந்திரா இறந்தபோது நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் சீமான் பேசும்போது ஒரு விடயத்தை கூறினார். மட்டக்களப்பில் காசிஆனந்தன் சயிக்கிள் ஓட்டிச் சென்றதாகவும் பின்னால் இருந்து சென்ற பாலு மகேந்திரா பாடசாலை ஒன்றிற்கு குண்டு எறிந்ததாகவும் கூறியிருந்தார். இந்த செய்தி எனக்கு புதிதாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அதனால் எந்த பாடசாலைக்கு எத்தனையாம் ஆண்டு இந்த குண்டு எறியப்பட்டது என முகநூலில் கேட்டேன். அதற்கு சீமானுடன் கூட இருக்கும் பாக்கியராசன் என்பவர் பதில் தந்தார். அந்த செய்தி காசி ஆனந்தன் கூறியிருந்ததாகவும் அதையே சீமான் கூட்டத்தில் பேசினார் என்றார். பாலு மகேந்திரா சிறந்த ஒளிப்பாதிவாளர்தான். அதில் சந்தேகம் இல்லை. பாலா, வெற்றிமாறன் எல்லாம் அவருடைய பட்டறையில் இருந்து வந்தவர்கள்தான். ஆனால் அவருக்கு இப்படிப்பட்ட அரசியல் சாயம் தேவையற்றது. குறிப்பு - இன்று (20.05.1939) பாலு மகேந்திராவின் பிறந்த தினம் ஆகும்.

21.05.1991 ராஜீவ் மரணத்தின்

21.05.1991 ராஜீவ் மரணத்தின் பின் தமிழ்நாட்டில் ஈழத் தமிழருக்கு ஆதரவானவர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடா சட்டத்தில் அடைக்கப்பட்டார்கள். அப்போது 21.05.1992யன்று தமிழ்நாடு விடுதலைப்படையானது கும்பகோணம் தொலைக்காட்சி மற்றும் அஞ்சல் நிலையங்கள் மீது குண்டு தாக்குதல் நடத்தி தாணுவிற்கு அஞ்சலி செலுத்தியது. இச் செய்தி இந்தியா எங்கும் அதிர்வை ஏற்படுத்தியது. அப்போது ஒட்டப்பட்ட போஸ்டரே கீழே உள்ளது. இந்த தமிழ்நாடு விடுதலைப்படை ஈழத் தமிழருக்கு ஆதரவாக அரியலூரில் பாலத்தில் நடத்திய வெடிகுண்டு சம்பவமே விடுதலை படத்தில் ஆரம்பத்தில் காட்டப்பட்டது. விடுதலை படம் வெளிவந்த பின்பு தமிழக தமிழர் மட்டுமன்றி ஈழத்தமிழர் மத்தியிலும் தமிழ்நாடு விடுதலைப்படை பற்றியும் அதன் தலைவர் தமிழரசன் பற்றியும் அறியும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

தாணுவுடன் ஒரு கற்பனை உரையாடல்

தாணுவுடன் ஒரு கற்பனை உரையாடல் என்னும் தலைப்பில் நான் எழுதிய பதிவை ஒவ்வொரு வருடமும் மே மாதம் 21ம் திகதி மீள் பதிவாக முகநூலில் பல வருடங்களாக பதிவு செய்து வருகிறேன். (அப் பதிவு கீழே பின்னூட்டத்தில் தந்துள்ளேன். இதுவரை படிக்காதவர்கள் படிக்கலாம்.) 2018ம் ஆண்டு மீள்பதிவு செய்யப்பட்ட எனது அந்தப் பதிவையும் புலிகள் அமைப்பை தடை செய்வதற்கு ஒரு காரணியாக இந்திய அரசு காட்டியுள்ளது என்ற விபரம் எனக்கு அண்மையில்தான் தெரிந்தது. அது ஒரு கற்பனை உரையாடல். அது மட்டுமல்ல அதில் தாணுவை புலி என்றோ அல்லது புலிகள்தான் ராஜீவைக் கொன்றனர் என்றோ நான் எதுவும் கூறவில்லை. இருந்தும் ஒரு முகநூல் பதிவை அதுவும் கற்பனை உரையாடல் பதிவை ஒரு காரணியாக இந்திய அரசு சுட்டிக்காட்டியிருப்பது ஆச்சரியமாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது. நான் மிகவும் சாதாரண ஒரு மனிதன். எனது முகநூல் பதிவுகளை கவனத்தில் எடுத்து ஏன் இந்திய அரசு எரிச்சல் அடைகிறது? ஏனெனில் நான் சொல்லும் கருத்துகள் உண்மை என்பது மட்டுமன்றி அது பல்லாயிரம் பேரை சென்றும் அடைகிறது. வெடி குண்டு ஒருமுறைதான் வெடிக்கும். கருத்துகள் பற்றிக்கொள்ளும்போதெல்லாம் வெடிக்கும். அதனால்தான் இந்திய அரசு அச்சமடைகிறது போலும்.

ஒரு சானு வயித்துக்குதான்

“ஒரு சானு வயித்துக்குதான் எல்லாத்தையும் விக்கிறேன் நான் எல்லாத்தையும் விக்கிறேன்” - அமைச்சர் அலி சப்றி 😂😂 நாட்டை துண்டு துண்டாய் வித்தாச்சு இப்ப நாடு நாடாய் பிச்சை எடுப்பு இதில கண்டன அறிக்கை தமாஷ்? குரங்குகளுக்கு பதிலாக இவனுகளை பிடித்து அனுப்ப வேணும்!

5ஆண்டுகள் ஆகிவிட்டது.

5ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் இவர்களுக்குரிய நீதி வழங்கப்படவில்லை. நச்சுக் காற்றை சுவாசிக்க விரும்பவில்லை என்று கூறியதற்காக அந்த மாணவியின் வாயில் சுட்டுக் கொன்ற கொடுமையை எப்படி மறக்க முடியும்? எதிரி ஆயுதம் ஏந்தாதவரை விமர்சனமே ஆயுதம். எதிரி ஆயுதம் ஏந்திவிட்டால் ஆயுதமே விமர்சனம் என்றார் மாவோ சேதுங் . இந்நேரம் தமிழ்நாடு விடுதலைப்படைத் தளபதி தமிழரசனோ அல்லது லெனினோ உயிரோடு இருந்திருந்தால் எதிரிகளின் மொழியில் தக்க பதிலை கொடுத்திருப்பார்கள்

ஈழப் போராளிகள் ஆயுத வழியில்

ஈழப் போராளிகள் ஆயுத வழியில் போராடியது தவறு. அகிம்சை வழியில் போராடியிருந்தால் தீர்வு பெற்றிருக்கலாம் எனக்கூறும் கூமுட்டைகள் கவனத்திற்கு, துருக்கியில் 14.05.2020 யன்று 323 நாட்கள் உண்ணாநோன்பு இருந்த கலைஞர் இப்ராஹிம் கெக்யக் மரணம். 24.04.2020 யன்று 297 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த கலைஞர் முஸ்தபா கோஹக் மரணம். 03.04.20 யன்று 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த ஹெலின் போலக் என்ற பெண் மரணம். சிறையில் சித்திரவதை செய்ய வேண்டாம் என்ற இவர்கள் கோரிக்கையை துருக்கி அரசு மதிக்கவில்லை. இவர்கள் மரணம் அகிம்சை வழியில் போராடினால் தீர்வு கிடைக்காது என்பதை நிரூபித்துள்ளது.

சிறுபொறி எல்லாம் பெரு நெருப்பாக

சிறுபொறி எல்லாம் பெரு நெருப்பாக மாறுவதில்லைதான். ஆனால் உலகில் இதுவரை பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் ஒரு சிறு பொறியில் இருந்தே உருவானது. கடந்த வருடம் இதே மாதத்தில் ஒரு துண்டு பாணில் உருவான தீப்பொறியே பெருங் காட்டு தீயை உருவாக்கி மகிந்த கும்பலை தூக்கியெறிந்து பொசுக்கியது. எனவே இந்த படிப்பனைகள் கற்றுத் தரும் பாடம் என்னவெனில், தமிழராகிய நாம் செய்ய வேண்டியதெல்லாம் பெரு நெருப்பை உருவாக்கும் ஒரு தீப்பொறியை பற்ற வைப்பதே.

உலக மக்கள் தொகை 700 கோடி

உலக மக்கள் தொகை 700 கோடி. ஆனால் 1200 கோடி மக்களுக்கு தேவையான உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. உணவு இன்றி எந்த மனிதனும் பட்டினி இருக்கவில்லை. மாறாக உணவை வாங்க பணம் இன்றியே மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். இலங்கையிலும் தேவையான அளவு உணவு இருந்தும் அதை வாங்க பணம் இன்மையினாலே மக்கள் வறுமையில் வாடுகின்றனர். நாட்டில் வறுமைக்கு புலிகளே காரணம் என்றார்கள். புலிகளை அழித்தால் பாலும் தேனும் ஆறாக ஓடும் என்றார்கள். ஆனால் யுத்தம் முடிந்து 14 வருடமாகி விட்டது. மக்கள் வாழ்வில் எந்த மாற்றமும் நிகழவில்லையே. வறுமை காரணமாக தனது குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்த தாய் பற்றி செய்தி வருகிறது. விபச்சாரம் செய்த பெண்கள் கைது என்று தினமும் செய்திகள் வருகின்றன. ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டில் மக்கள் இருந்தபோது யாரும் பட்டினியால் இறந்தாக செய்திகள் வரவில்லை. யாரும் வறுமையினால் விபச்சாரம் செய்ததாக செய்திகள் வரவில்லை. இன்று சிறுவர் பாலியலில் இலங்கை உலகில் முதலிடம் வகிக்கிறது. யுத்த காலத்தில் கூட இந்த நிலை இருக்கவில்லையே? யுத்தம் முடிந்து 14 ஆண்டுகளுக்கு பின்பும் ஏன் இந்த நிலை? வறுமை காரணமாக பெற்ற தாயே தன் மகளை விபச்சாரத்தில் தள்ளியதாக வழக்கு வந்ததே. இது அரசுக்கு வெட்கம் இல்லையா? யுத்த காலத்தில் ஒதுக்கிய நிதியை விட அதிக நிதியை ராணுவத்திற்கு இந்த அரசு பட்ஜட்டில் ஒதுக்குகிறதே. அது ஏன்? மக்கள் தமக்கு எதிராக கிளர்ந்தெழுந்து விடக்கூடாது என்பதற்காக இன ஒடுக்குறையைக் கையாண்டு இனங்களை பிரிக்கிறது இந்த அரசு. அரசே தீவிரவாதங்களை உருவாக்கிறது. அப்புறம் வறுமைக்கு காரணம் தீவிரவாதம் என்று அரசே கூறுகிறது. மக்கள் இந்த உண்மையை உணர வேண்டும். இதற்கு எதிராக ஒருமித்து போராட வேண்டும். வறுமையில் இருந்து விடுபட இதுவே வழி.

இது சிரிப்பதற்கு அல்ல. சிந்திப்பதற்கு!

•இது சிரிப்பதற்கு அல்ல. சிந்திப்பதற்கு! இடம்- யாழ் தமிழரசுக்கட்சி காரியாலயம் நிருபர்- அரசு தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இந்நிலையில் 120 கோடி ரூபா பெறுமதியான சொகுசு பங்களாவை சம்பந்தர் அய்யா பெற்றுக் கொண்டது சரியா? சுமந்திரன் - அவர் தமிழ் மக்களுக்கு அளப்பரிய தியாகம் செய்திருக்கிறார். அதனால் அரசு அவருக்கு பங்களாவை வழங்கியுள்ளது. நிருபர்- அப்படி என்ன தியாகத்தை அவர் செய்துவிட்டார்? சுமந்திரன்- தந்தை செல்வா தலைமையில் சத்தியாக்கிரக போராட்டம் செய்தபோது சம்பந்தர் அய்யாவை கைது செய்த பொலிஸ் பனாகொடை ராணுவ முகாமில் வைத்து சித்திரவதை செய்தது. நிருபர் - என்னது சித்திரவதையா? இல்லையே. தனக்கும் சத்தியாகிரக போராட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டு விடுதலையானவர் அல்லவா சம்பந்தர் அய்யா. நீங்கள் ஏன் தவறாக கூறுகிறீர்கள்? உடனே சுமந்திரன் ஒரு கவரை நிருபரிடம் கொடுத்தார். கவரைப் பிரித்து பார்த்த நிருபர் முகம் மலர்ந்து “ அப்புறம் என்ன நடந்தது சொல்லுங்கள்” என்றார். சுமந்திரன் - அப்போது ஒரு சிங்கள ராணுவ வீரன் சம்பந்தர் அய்யாவின் வயிற்றில் துப்பாக்கி முனையால் குத்திவிட்டான். இன்றும் அந்த தழும்பு அவர் வயிற்றில் உள்ளது. நிருபர்- என்னது தழும்பா? சுமந்திரன்- ஆம். சாதாரண மக்கள் அதை “தொப்புள்” என்பார்கள். ஆனால் அது வீரத் தழும்பு என்பது எனக்கு மட்டுமே தெரியும். நேற்றுதான் இதை கனடா தமிழரசுக்கட்சி தலைவர் தங்கவேல் அய்யாவுக்கு கூறினேன். அவர் உடனே “வாழும் தழும்பு வீரர்” என்னும் பட்டத்தை அடுத்த மாதம் சம்பந்தர் அய்யாவுக்கு கொடுக்கப் போவதாக கூறினார். இதைக் கேட்டதும் நிருபருக்கு தலை சுற்றியது. இன்றைக்கு இந்த பேட்டி போதும் சேர் என்று கூறிவிட்டு பத்திரிகை அலுவலகம் நோக்கி புறப்பட்டார். (யாவும் கற்பனை )

1991ம் ஆண்டு எப்ரல் மாதம்,

1991ம் ஆண்டு எப்ரல் மாதம், மதுரை சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்தவேளை திடீரென 60 வயதான குருசாமி என்பவரை கொண்டு வந்து எனது அருகில் அடைத்தார்கள் கொலைக் குற்றம் ஒன்றிற்காக 14 வருடங்கள் சிறைவாசத்தை அனுபவித்த குருசாமியின் கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டமையினால் தூக்கில் இடுவதற்காகவே அவரை என் அருகில் உள்ள செல்லில் அடைத்தார்கள். இறுதியாக அவரது குடும்பத்தவர்கள் வந்து பேசினார்கள். தனக்கு வயதாகிவிட்டது என்றும் தான் எல்லாம் அனுபவித்துவிட்டேன். எனவே சாவது பற்றி கவலைப்படவில்லை என சிரித்தக்கொண்டே பிள்ளைகளிடம் அவர் கூறினார். அடுத்த நாள் அதிகாலை 4 மணியளவில் அதிகாரிகள் வந்து குருசாமியை எழுப்பினார்கள். அவரை குளிக்கவாத்து சுடு சோறு சாப்பிட கொடுத்தார்கள். அவர் சாப்பிட்டாரா என்று தெரியவில்லை. ஆனால் பீடீ கேட்டு வாங்கி பற்றியதைக் கண்டேன். இறுதியாக அதிகாரிகள் “வா குருசாமி போகலாம்” என்று அழைத்தது கேட்டது. ஆனால் அதன் பின்னர் இரு காவலர்கள் அவரை தொர தொரவென்று இழுத்து செல்வதே எனக்கு தெரிந்தது. முதல் நாள் சாவது பற்றி தனக்கு கவலை இல்லை என்று கூறியவர் அடுத்த நாள் தானாகவே நடந்து செல்வார் என நினைத்திருந்த எனக்கு அவர் இழுத்து செல்லப்பட்டது ஆச்சரியமாக இருந்தது. இதுபற்றி அவரை இழுத்துச் சென்ற காவலரிடம் அடுத்த நாள் கேட்டேன். அதற்கு அவர் “என்னதான் உறுதியாக இருந்தாலும் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும்போது அவர்களின் கால்கள் சோர்ந்துவிடும். பாதி மயக்க நிலையிலேயே இழுத்து சென்று தூக்கில் இடுவது வழக்கம்” என்றார். 1991ம் அதே ஆண்டு. ஆனால் மே மாதம் 21ம் திகதி. மதுரை சிறையில் நள்ளிரவு. திடீரென்று எனது செல் முன்பு காவல் பலப்படுத்தப்பட்டது. என்ன காரணம் என்று கேட்டபோது ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சேதி சொல்லப்பட்டது. பின்னர் ராஜீவ்காந்தி கொலை பற்றிய விபரங்கள் வெளிவந்தபோது தனு வின் உணர்வுகள் குறித்து சிந்தித்து பார்த்தேன். இன்னும் சிறிது நேரத்தில் குண்டு வெடிக்கப்போகிறது. குண்டு வெடித்தால் தனது இலக்கு மட்டுமல்ல தானும் மரணமடையப்போவது அந்த பெண்ணிற்கு தெரியும். ஆம். தான் இறக்கப்போவது அந்த பெண்ற்கு நன்கு தெரியும். அவரது அந்த இறுதி நிமிடங்களில் நிச்சயம் தன் தாய் தந்தையர் முகம் வந்திருக்கும் தன் கூடப்பிறந்த சகோதர்கள் நினைவுகள் வந்திருக்கும். ஆனால் அவர் முகத்தில் எந்த பட படப்பும் இல்லை. எந்த மரண பயமும் இல்லை. கொஞ்சம் காட்டியிருந்தால்கூட அவரது திட்டம் நிறைவேறாமல் போய்விடும் என்பதையும் அவர் அறிந்திருக்கவேண்டும். வயதான, எல்லாம் அனுபவித்த குருசாமிகூட மரண தருவாயில் கால்கள் சோர்ந்து பாதி மயக்க நிலைக்கு சென்றார். ஆனால் இந்த இளம் வயதில் எதையும் அனுபவிக்காத தனு உறுதியாக நின்றமைக்கு என்ன காரணம்? தனு விரும்பியிருந்தால் பின்வாங்கியிருக்கலாம். மனம் மாறியிருக்கலாம். அதற்கான வாய்ப்பு அவருக்கு இருந்தது. ஆனால் தனு தானாகவே கேட்டு இதனை மேற்கொண்டதாக கூறுகிறார்கள். அப்படியென்றால் தனு வின் இந்த உணர்வுகளுக்கு என்ன காரணம்? ராஜிவின் கொலை பற்றி பேசுபவர்கள் எத்தனை பேர் இந்த தணுவின் உணர்வுகள் குறித்து கேள்வி எழுப்பியிருக்கின்றனர்? அவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தால் அமைதிப்படை என்று வந்து இந்திய ராணவம் செய்த கொலைகள , பாலியல் வல்லுறவுகள், சொத்துக்கள் சேதமாக்கப்பட்ட விபரங்கள் தெரிந்திருக்கும். ஒரு பாதிக்கப்பட்ட இனத்தின் சார்பாக தனு என்ற இளம் பெண் கொடுத்த தண்டனை இது என்று புரிந்திருக்கும். அதனால்தான் தமிழ்நாடு விடுதலைப்படையின் தளபதி தோழர் லெனின் தனுவிற்கு வீர வணக்கம் செலுத்தவதாகவும் தனுவிற்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார்

லண்டன் SOASல் நடைபெற்ற

லண்டன் SOASல் நடைபெற்ற ஒரு கூட்டத்திற்கு சென்ற போது அங்கிருந்த திருவள்ளுவர் சிலையைக் கண்டு ஆச்சரியம் அடைந்தேன். ஏனெனில் லண்டனில் திருவள்ளுவர் சிலை என்பது அதுவரை நான் அறிந்திருக்கவில்லை. இது பற்றிய மேலதிக விபரம் அறிய விரும்புகிறவர்களுக்கு கீழே பின்னூட்டத்தில் இணைப்பு தந்திருக்கிறேன். சரி இப்போது ஏன் திடீரென்று இந்த திருவள்ளுவர் பதிவு என நினைப்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். கடந்த வாரம் ஒருவர் எனக்கு திருவள்ளுவரைப் பிடிக்காது என தன் முகநூலில் எழுதியிருந்தார். அவருக்கான பதில் பதிவே இது.

கேரளாவில் “மலையாள மகிளிருக்கு”

கேரளாவில் “மலையாள மகிளிருக்கு” என கம்யுனிச அரசு அறிவிக்கிறது. கேரளாவில் யாரும் மலையாளி என்றால் யார் என்றோ அல்லது மலையாளிக்கு என்ன வரையறை என்றோ கேட்பதில்லை. கர்நாடகாவில் “கன்னட மகிளிருக்கு” என காங்கிரஸ் அரசு அறிவிக்கிறது. கர்நாடகாவில் கன்னடர் என்றால் யார் என்றோ அல்லது கன்னடர் என்பதற்கு என்ன வரையறை என்றோ யாரும் கேட்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் நாம் தமிழர் என்றால் உடனே தமிழன் என்றால் யார்? தமிழன் என்று எந்த லேப்பில் டெஸ்ட் செய்தீர்கள்? என்றெல்லாம் கேட்கிறார்கள். என்னே கொடுமை இது?

போராட்டம் நடத்திதான்

போராட்டம் நடத்திதான் எம்.பி பதவி பெற வேண்டிய நிலை இல்லை மற்றவர்கள் போல் தேர்தல் நேரத்தில் மட்டும் இரண்டு புலி பாடல்களை போட்டு எம்.பி ஆகலாம். ஆனாலும் எங்கு போராட்டம் நடந்தாலும் அங்கு மக்களுடன் மக்களாக நிற்கிறார். அவருடைய அந்த உணர்வை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை இகழாமல் இருந்தாலே போதும்.

இரண்டு தமிழ் பேசும் எம்.பிக்கள்

இரண்டு தமிழ் பேசும் எம்.பிக்கள் இரண்டு பேர் மீதும் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஒருவர் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வந்து விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னொருவர் தையிட்டியில் தமிழ் மக்களுக்காக போராடியதால் நடவடிக்கைக்குள்ளாகியுள்ளார். தங்கம் கடத்தியவரை விமர்சிக்க வேண்டியவர்கள் தையிட்டியில் போராடியவரை “ஏன் விகாரை கட்டி ஆரம்பித்த போது போராடவில்லை?” என விமர்சிக்கின்றனர். என்னே கொடுமை இது?

ஒரு எலும்பிற்காக

ஒரு எலும்பிற்காக ஒரு நேர்மையான மனிதன் தன்னை ஒருபோதும் நாயாக்கிக் கொள்ளமாட்டான் - வியட்நாம் பழமொழி

யாதும் ஊரே யாவரும் கேளிர்

•யாதும் ஊரே யாவரும் கேளிர் விஜய் சேதுபதி ஈழத் தமிழ் அகதியாக நடித்திருக்கும் படம். தமிழ்நாட்டில் ஈழ அகதிகளுக்கு உள்ள பிரச்சனைகள் பற்றி குறிப்பாக கியூ பிராஞ் பொலிசாரின் நெருக்கடிகள் பற்றி காட்டியிருப்பது பாராட்டுக்குரியது. அழுத்தமான கதையின்றி பிரச்சார நெடி கொஞ்சம் தூக்கலாக உள்ளது.

சுபாஸ் சந்திரபோஸ் பாதை

சுபாஸ் சந்திரபோஸ் பாதை தீவிரவாதம் என்று கூறிய நேரு மாமா, இந்தியாவை அடக்கி ஆண்ட மவுன்பேட்டன் பிரபு மனைவியுடன் நடத்திய அகிம்சை போராட்டம்

மறையாது மடியாது நக்சல்பாரி

மறையாது மடியாது நக்சல்பாரி மரணத்தை வென்றிடும் நக்சல்பாரி! இன்று நக்சல்பாரி எழுச்சியின் 56 வது ஆண்டாகும் (24.05.1967) நக்சல்பாரி கிளர்ச்சி துவங்கி 56 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அது விவசாயிகளின் விடியலுக்காகத் துவங்கியது. அந்த எழுச்சிக்குக் காரணம் ஓர் பழங்குடிப் பெண்மணி. அவரின் பெயர் ஷாந்தி முண்டா. இப்போது ஷாந்தி முண்டாவிற்கு 80 வயதாகிறது. 56 ஆண்டுகளுக்கு முன்பு மே 24 வந்தபோது ஷாந்தி முண்டா தன் 20 வயதுகளில் இருந்தார். குத்தகை விவசாயிகள் தங்களுக்குக் விளைச்சலில் கூடுதல் பங்கு வேண்டும் என்று கோரி, போராடி வந்தனர். அந்தப் போராட்டத்தின் போது சோனம் வாங்டி என்ற போலீஸ்காரர் போராடிய பெண் ஒருவரைத் தாக்கினார். ஷாந்தி முண்டாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஷாந்தி முண்டாவின் முதுகில், பழங்குடிகள் வழக்கப்படி, அவரின் 15 மாதக் குழந்தையைக் கட்டி சுமந்துகொண்டிருந்தார். இருந்தபோதும், அவர் அந்த போலீஸ்காரரை தாக்கினார். மற்றவர்களும் சேர்ந்துகொண்டனர். போலீஸ்காரர் செத்து வீழ்ந்தார். மறுநாள் படையினர் திரும்பி வந்தனர். தாக்குதல் தொடுத்தனர். 11 விவசாயிகளும் பழங்குடியினரும் கொல்லப்பட்டனர். மே 25.. நக்சல்பாரி புரட்சி வெடித்தது.. கிளர்ச்சி நாட்டின் பற்பலப் பகுதிகளுக்குப் பரவியது. இதன்பின்னா ஆயுதம் தாங்கிப் போராடியவர்களை நக்சல்பாரிகள் (நக்சலைட்டுகள்) என்று அழைப்பது வழக்கமானது. ஏனென்றால் வடக்கு வங்கத்தைச் சேர்ந்த நக்சல்பாரி என்ற கிராமத்தில்தான் முதல் பொறி எழுந்தது. ஷாந்தி முண்டாவின் வீட்டுச் சுவர் மண் சுவர்தான். மேலே அஸ்பெஸ்ட்டாஷ் கூரை. அமர்வதற்கு பிளாஸ்டிக் சேர்தான் இருக்கிறது. வேறு சொத்துகள் ஏதும் இல்லை. எந்த முன்னேற்றமும் இல்லை என்கிறார் ஷாந்தி முண்டா. “முன்பு நிலப்பிரபுக்கள் சுரண்டினார்கள். இப்போது அரசு சுரண்டுகிறது“ என்கிறார். நக்சல்பாரியில் ஆரம்பமான இந்த கிளர்ச்சி தமிழ்நாட்டிற்கும் பரவியது. தமிழ்நாட்டில் தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள், அப்பு, பாலன் போன்றவர்கள இந்த எழுச்சியில் உருவாகியவர்கள். இன்று இந்த நக்சல்பாரி இயக்கம் இந்தியா முழுவுதும் பரவி வேரூன்றியுள்ளது. குறிப்பாக 7 மாநிலங்களில் 60 மாவட்டங்களில் இவர்களுடைய ஆட்சி நடைபெறுவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிட்டிருந்தார். பாகிஸ்தான் சீனாவை விட இந்த நக்சல்பாரி இயக்கமே முதன்மையான எதிரி என்று இந்திய அரசு குறிப்பிடும் அளவிற்கு இந்த இயக்கத்தின் வளர்ச்சி இருக்கிறது. இலங்கையைபோல் நான்கு மடங்கு பெரிய பிரதேசம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக இந்திய அரசே ஒத்துக்கொண்டுள்ளது. நக்சலைட்டுகள் பயங்கரவாதிகள் அல்லர். அவர்கள் தேபக்தர்கள் என்று இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒருவர் நக்சலைட்டோ அல்லது மாவோயிஸ்டோ என்பதற்காக அவரை கைது செய்ய முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் தமிழக பெண் வழக்கறிஞர் ஒருவரை மாவோயிஸ்டு என்று முத்திரை குத்தி சுட்டுக்கொன்றுள்ளது கேரள பொலிஸ். சுட்டுக் கொன்றோ அல்லது சிறையில் அடைத்தோ மாவோயிஸ்டுகளின் வளர்ச்சியை இந்திய அரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

எங்கு நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகிறதோ

"எங்கு நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகிறதோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள்" - சே அவர்கள் முதலில் யாழ் நூலகத்தை எரித்தார்கள். பின்னர் ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை எரித்தார்கள். யாழ் நூலகம் சிங்கள அமைச்சர் மற்றும் பொலிசாரால் எரிக்கப்பட்ட தினம் 31.05.1981

பகைவனிடம் பணிவது

பகைவனிடம் பணிவது இராஜதந்திரம் அல்ல. அது சரணாகதி – பெ.மணியரசன்

மார்க்ஸ் என்னும் அற்புதம்!

• மார்க்ஸ் என்னும் அற்புதம்! இவர் மாட்டு தொழுவத்தில் பிறக்கவில்லை இவர் பிறந்தபோது வானில் நட்சத்திரங்கள் தோன்றவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இவர் தலையின் பின்னால் ஒளிவட்டம் இருக்கவில்லை. இவர் இறந்தபோதுகூட இவரின் இறுதி ஊர்வலத்தில் வெறும் முப்பது பேருக்குள்தான் இருந்தனர். ஆனாலும் உலகைக்குலுக்கிய பெரும் புரட்சிப் புயல்களின் மையம் இவரே. இவர் ஒரு அற்புதமே ! ஏனெனில் இன்றும்கூட இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இத்தனை அழிவுகளுக்கு பின்னரும் இதற்கு காரணம் முதலாளித்துவம் என்பதை படித்தவர்களாலேயே புரிந்துகொள்ள முடியாத நிலையில் முதலாளித்தவம் ஆரம்பித்த நிலையிலேயே அதன் நெருக்கடியை ஆய்ந்து கூறியவர் இவர். ஆம். மார்க்சிசம் வெறும் தத்துவம் இல்லை. அது ஒரு நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம். “உலகம் முழுக்க மனித இனத்திற்கு எதிராக, இயற்கைக்கு எதிராக நடக்கும் அத்துனை அழிவு சார்ந்த நிகழ்வுகளுக்கும் அடிப்படை காரணம் முதலாளித்துவம் தான்” -கார்ல் மார்க்ஸ் குழந்தை- அப்பா! மிகவும் குளிராக இருக்கிறது அப்பா- தெரியும். ஆனால் எரிப்பதற்கு நிலக்கரி இல்லையே? குழந்தை- ஏன் நிலக்கரி இல்லை? அப்பா- எனக்கு வேலை போய்விட்டது. அதனால் வாங்க முடியவில்லை குழந்தை- ஏன் வேலை போய்விட்டது? அப்பா- நாங்கள் அதிகம் நிலக்கரியை உற்பத்தி செய்துவிட்டோம். அதனால் வேலையைவிட்டு நிறுத்திவிட்டார்கள். மிகையான உற்பத்திக் கொள்கையின் முழு அபத்தத்தை இந்த உரையாடல் அம்பலப்படுத்துகின்றது. இன்று இந்த உரையாடலை பலரும் தங்கள் சொந்த அனுபவங்களினூடாக உணர்ந்து கொள்கின்றனர். சமுதாயத்தில் உற்பத்தியாகும் பண்டங்கள் யாவற்றினதும் பெறுமதிக்கு சமமான ஒரு பெறுமதி சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் ஊதியமாகவோ அல்லது வருமானமாகவோ சமத்துவமான முறையில் பங்கிடப்படாதவரை உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே முரண்பாடு பெருகவே செய்யும். இதுவே பொருளியல் நெருக்கடியின் காரணம். இது முதலாளித்துவ சமுதாயத்தில் தவிர்க்க முடியாதது. இந்த நெருக்கடிக்கு முதலாளித்துவத்தில் தீர்வு எதுவும் இல்லை. பெரும்பான்மையான மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாத காரணத்தால் ஏற்படும் இந்த நெருக்கடியை மக்களினுடைய வாங்கும் சக்தியை பெருக்குவதன் மூலம் தீர்க்க முடியாது. ஏனெனில் அது முதலாளிகளின் லாபத்தை பாதித்தே அதனை செய்ய முடியும். அதனை அவர்கள் விரும்பமாட்டார்கள். எனெனில் அது அவர்களை தற்கொலை செய்யக் கேட்பதாகும். எனவேதான் எவ்வளவு கடுமையாக முயன்றாலும் இப் பிரச்சனைக்கு முதலாளியத்தால் தீர்வு காணமுடியாது சோசலிசத்தால் மட்டுமே தீர்வு காண முடியும் என மாக்ஸ் கூறினார். உலகில் முதலாளித்துவமா அல்லது சோசலிசமா வெற்றி பெறும் என பலர் வினா எழுப்பிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் மாக்சிசத்தின் பின்னரான இந்த ஒன்றரை நூற்றாண்டு முதலாளித்துவத்திற்கு ஒரே மாற்று சோசலிசமே என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது. கொரோனோ மற்றும் உக்ரைன் போர் நெருக்கடியானது கார்ல் மார்க்ஸ் கருத்துகளை இன்னும் அதிகமாக படிக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது. கடந்த காலங்களில் நெருக்கடிகள் தோன்றியபோது எப்படி புதிய கண்டு பிடிப்புகள் மூலம் முதலாளித்துவம் தன்னை தக்கவைத்துக்கொண்டதோ அதேபோன்று இம் முறையும் அது தன்னை தக்கவைத்துக்கொள்ளும் என சிலர் நம்புகின்றனர்.

கருணாநிதியின் உண்ணாவிரத

"கருணாநிதியின் உண்ணாவிரத நாடகத்தின் மூலம் எங்களுக்கு எதிரான மிகப்பெரிய ஆபத்திலிருந்து தப்பித்துக் கொண்டோம். இது எங்களின் மிகச்சிறந்த ராஜ தந்திரம்" - கோத்தபய ராஜபக்சே நீதி - எதிரி உன்னை பாராட்டுகிறான் என்றால் நீ அவனுக்கு சோரம் போய்விட்டாய் என்று அர்த்தம்.

இந்தியாவின் சனத்தொகையில்

இந்தியாவின் சனத்தொகையில் ஹிந்தி பேசும் மக்கள் வெறும் 35% மட்டுமே. ஆனால் அங்கு அவர்கள் மற்ற சிறுபான்மை இனங்கள் மீது கலவரங்கள் நடத்துவதில்லை. இலங்கையின் சனத்தொகையில் சிங்களவர்கள் 80 % ஆகும். ஆனாலும் அவர்கள் தொடர்ச்சியாக சிறுபான்மை இன மக்கள் மீது தாக்குதல்கள் நடத்துகிறார்கள். இது ஏனெனில் இந்தியாவில் இந்தி பேசும் மக்கள் தங்களை பெரும்பான்மையினமாக உணர்கிறார்கள். ஆனால் இலங்கையில் சிங்களவர்கள் தங்களை பெரும்பான்மையினராக உணர்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் இலங்கைக்கு அருகில் இந்தியாவில் எட்டுக்கோடி தமிழர் இருப்பதும் வரலாற்றில் பல தடவைகள் அங்கிருந்து படை எடுப்புகள் நடந்ததுமே. மகிந்த ராஜபக்சா இனப் படுகொலை செய்வதற்கு இந்திய அரசு பங்களிப்பு வழங்கியதோடு இன்றும் இலங்கை அரசை காப்பாற்றி உதவி வருகிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றதால்தான் இந்திய அரசு இவ்வாறு தமிழ் மக்களை பழி வாங்குகிறது என்று சிலர் கூறுகின்றனர். அது தவறு. ராஜீவ் காந்தியைக் கொல்லாவிட்டாலும் இந்திய அரசு தமிழீழம் அமைய உதவியிருக்கப்போவதில்லை என்பதே உண்மை. ஏனெனில், தமிழீழம் அமைவதை தாம் விரும்பவில்லை என்றும் அதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் 1983 முதலே இந்திய அரசு தெளிவாகவும் உறுதியாகவும் கூறிவருகிறது. தமிழீழம் அமைந்தால் அது தமிழ்நாடு தனிநாடாவதற்கு உந்து சக்தியாக அமைந்துவிடும் என இந்திய அரசு அஞ்சுகிறது. தமிழ்நாடு தனி நாடானால் இந்தியா சுக்கு நூறாக உடைந்துவிடும் என இந்திய அரசு கருதுகிறது. அதைவிட முக்கியமான விடயம் புலிகள் இருக்கும்வரை இந்திய அரசால் தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யவோ தமிழர்களின் வளங்களை சுரண்டவோ முடியவில்லை. 2009ல் புலிகள் அழிக்கப்பட்டவுடன் தமிழர் பகுதிகள் யாவும் இந்தியாவுக்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டது. புலிகளை அழித்தாயிற்று. புலிகளின் பெயரால் ஆயிரக் கணக்கில் தமிழ் மக்களை அழித்தாயிற்று. தமிழர் வளங்களை ஆக்கிரமித்தாயிற்று. ஆனாலும் இந்தியா தன் நாச வேலைகளை நிறுத்தவில்லையே! ஆனால் பிரச்சனை என்னவெனில் சம்பூரில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் மற்றும் வேடுவர் அனைவரும் ஒன்று சேர்ந்து விரட்டியதுபோன்றுவடக்கு கிழக்கு முழுவதும் மக்கள் ஒன்றுபட்டு தம்மை விரட்டிவிடுவார்களோ என்று இந்திய அரசு அஞ்சுகிறது. அதனால்தான் தமிழ் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த சாதி, மத மோதல்களை இந்திய தூதரும் உளவுப்படையும் உருவாக்குகின்றனர். இங்கு வேதனை என்னவென்றால் இந்த உண்மைகளை புரிந்துகொள்ளாமல் எம்மவர் சிலர் இந்திய அரசின் விசுவாசிகளாக செயற்படுகின்றனர். எந்த இந்திய அரசு இனப்படுகொலையின் பங்காளியாக இருக்கிறதோ அதே இந்திய அரசு இனப்படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும் எனக் கோருகின்றனர். எந்த இந்திய அரசு தமிழ் மக்களை நசுக்கிறதோ அதே இந்திய அரசு தமிழ் மக்களுக்க தீர்வு பெற்று தரும் என நம்புகின்றனர்.

செய்தி – பொல்லநறுவையில் பல

செய்தி – பொல்லநறுவையில் பல பழமையான சிவாலயங்கள் புத்த பிக்குகளால் அழிக்கப்பட்டு வருவதாக பொல்லநறுவை மாவட்ட இந்துக்குருமார் ஒன்றிய தலைவர் சிவஸ்ரீ து.சத்தியநாதன் சர்மா குற்றம்சாட்டியுள்ளார். ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள், கிருத்தவ பால் தினகரன் வந்தால் போராட்டம் நடத்தி திருப்பி அனுப்புவார். ஆனால் இந்து கோவில்கள் இடிக்கப்பட்டு புத்த விகாரைகள் கட்டப்பட்டால் கண்டு கொள்ள மாட்டார். அதைவிட புத்த பிக்கு உட்கார தன் வேட்டியை உரிந்து கொடுத்துவிட்டு ஜட்டியுடன் உட்கார்ந்து இருப்பார். இப்போது புரிகிறதா இந்தியாவில் இருந்த இவரை ஏன் இந்திய உளவுப்படை ஈழத்திற்கு அனுப்பி வைத்தது என்று?

பொதுவாக உலகம் எங்கும்

பொதுவாக உலகம் எங்கும் மக்களுக்காக போராடாத பிரதிநிதிகளையே விமர்சனம் செய்வார்கள். ஆனால் ஈழத்தில் மட்டும் மக்களுக்காக போராடும் ஒரு பிரதிநிதி கிண்டல் செய்யப்படுகிறார். போராடுவதால் என்ன பயன் என்று கேட்கிறார்கள் சில அதி மேதாவிகள். போராட்டம் வெற்றியை தராவிட்டாலும் அது ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை என்பதை எப்படி புரிய வைப்பது அந்த அதி மேதாவிகளுக்கு? “போராடத் துணிந்தவனை ஊக்கப்படுத்துவதாகவே ஒரு இலக்கியவாதியின் எழுத்து இருக்க வேண்டும்” - மார்க்சிம் கார்க்கி

கேப்பாபுலவில் தனது நிலம்

கேப்பாபுலவில் தனது நிலம் கேட்டு ஒரு குழந்தை வீதியில் படுத்து போராட்டம் நடத்தியபோது மக்கள் பிரதிநிதிகள் ஏன் போராடவில்லை என்று கேட்டார்கள். இப்போது மக்கள் பிரதிநிதி ஒருவர் மக்களின் நிலத்திற்காக படுத்து போராடும்போது சிலர், ஏன் முன்னரே போராடவில்லை என்று கேட்கின்றனர். இன்னும் சிலர், இந்த போராட்டத்தால் என்ன பயன் என்று கிண்டலாக கேட்கின்றனர். இவர்கள் தாம் போராடாமல் இருப்பதற்காகவே இவ்வாறு கேட்கின்றனரா என சந்தேகிக்கப்பட வேண்டியுள்ளது. “போராடாமல் இருக்க கோழைகளுக்கு காரணம் இருந்துகொண்டே இருக்கும்” - மாவோ

சற்றும் மனம் தளராத மன்னன்

சற்றும் மனம் தளராத மன்னன் விக்கிரமாதித்தன் மீண்டும் முருக்கை மரத்தில் ஏறினான் என்று அம்புலிமாமா புத்தகத்தில் படித்திருப்போம். அது குழந்தைகளுக்கான கதை. எனவே மன்னன் ஏன் மீண்டும் மீண்டும் முருக்கை மரத்தில் ஏறுகின்றான் என்று யாரும் கேட்பதில்லை. அக் குழந்தைகளின் கதையைவிட கேவலமான ஒரு கதை எம் மத்தியில் அடிக்கடி அரங்கேறுகின்றது. ஆம். அது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் டில்லி பயணக் கதை. ஏன் போகிறார்கள்? எத்தனை தரம் போகிறார்கள்? என்று யாரும் கேட்பதில்லை. கடந்த வருடம் தீர்வு 13ஐக் கேட்டு இந்திய தூதர் ஊடாக டில்லிக்கு கடிதம் அனுப்பியிருந்தனர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர். கடிதம் கிடைத்தது என்றுகூட இதுவரை டில்லி பதில் அளிக்கவில்லை. இதுதான் இவர்களுக்கு டில்லி அளிக்கும் மதிப்பு. இந்நிலையில் மீண்டும் இவர்கள் டில்லி செல்லப்போவதாக அறிவித்துள்ளனர். முன்பு சம்பந்தர் ஐயா அடிக்கடி டில்லி செல்வார். ஆனால் அது அவருடைய இருதய சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக என்று பின்னர் தெரியவந்தது. அதுபோல் சுரேஸ் பிரேமசந்திரன் டில்லியில் மருத்துவம் படிக்கும் தன் மகளை பார்வையிட சென்று வந்தார். செல்வம் அடைகலநாதன் திருச்சியில் இருக்கும் தன் குடும்பத்தையும் வியாபாரத்தையும் கவனிக்க சென்று வந்தார். வேடிக்கை என்னவெனில் அடிக்கடி இந்தியா செல்லும் இவர்கள் அகதிமுகாம்களுக்கு சென்று அகதிகளை சந்திப்பதில்லை. சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யும்படி குரலும் கொடுப்பதில்லை.

45000கோடி ரூபா சொத்து

45000கோடி ரூபா சொத்து எப்படி வந்தது என்று கலைஞரிடம் கேட்காதவர்கள், 30000கோடி ரூபா சொத்து எப்படி வந்தது என்று ஜெயா அம்மையாரிடம் கேட்காதவர்கள், இட்லிக்குள் கறி எப்படி வந்தது என்று சீமானிடம் கேட்கிறார்கள்?

எமக்கு தேவை

எமக்கு தேவை "அடுத்த வருடம் தீர்வு வரும்" என்று ஏமாற்றும் தலைவர் அல்ல, எமக்கு தேவை "இந்தியாவின் உதவியுடன் தீர்வு வரும்" என்று கூறும் தலைவர் அல்ல. எமக்கு தேவை "அடிமையாக கிடக்கிறாய். எழுந்து நின்று போராடு" என்று கூறும் ஒரு "சே " எமக்கு என்று ஒரு தொன்மையான மொழி உண்டு, எமக்கு என்று ஒரு கலை கலாச்சாரம் உண்டு, எமக்கு என்று நாம் செறிந்து வாழும் ஒரு நிலப் பரப்பு உண்டு, எமக் கென்று பொருளாதார வளமும் கூட உண்டு, இருந்தும் எம்மை நாமே தீர்மானிக்கும் ஆட்சி எம்மிடம் இல்லை ஏனெனில் நாம் அடிமையாக வீழ்ந்து கிடக்கிறோம். போர்த்துக்கேயரை எதிர்த்து போராடிய நாம், ஒல்லாந்தரை எதிர்த்து போராடிய நாம், ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய நாம், இன்று ஏன் போராடாமல் வீழ்ந்து கிடக்கிறோம்? ஏனெனில் நாம் “அடிமை” என்பதை உணராமல் இருக்கிறோம். ஒன்றரைக்கோடி சிங்களவர்களுக்குகூட ஒரு அரசு இருக்கிறது. ஆனால் எட்டுக்கோடி தமிழருக்கு ஒரு அரசு இல்லையே? தமிழருக்கு என்று ஒரு அரசு இருந்திருந்திருந்தால் ஒன்றரை லட்சம் தமிழரை இனப்படுகொலை செய்திருக்க முடியுமா? ஏன் என்று கேட்க நாதியற்ற இனமாக இருக்கிறோமே? இந்த அவல நிலை நீங்கிடுவது எப்போது?

சைலேந்திரபாபு திண்டுக்கல் காவல்

சைலேந்திரபாபு திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது தமிழ்த்தேசிய போராளி நாகராசனை போலி என்கவுண்டர் மோதலில் சுட்டுக்கொன்றார். அதற்கடுத்த வாரம் சிறையில் இருந்து என்னை கொடைக்கானல் நீதிமன்றத்திற்கு காவலாக அழைத்து சென்றபோது அதைக்கூறி என்னை மிரட்டினார். அவர் மிரட்டியதை நான் அப்போது நீதிமன்றில் நீதிபதியிடம் முறையிட்டு பாதுகாப்பு பெற்றது இன்றும் நினைவில் இருக்கிறது. தோழர் நாகராசன் தமிழ்நாட்டில் தமிழத்தேசிய விடுதலைக்காக போராடியதால் சுட்டுக்கொல்லப்பட்டவர். அவர் ஈழத் தமிழர் போராட்டத்திற்கு உறுதியான ஆதரவை வழங்கியவர். அவர் தமிழ்த்தேசிய போராட்ட வரலாற்றில் என்றும் நினைவு கூரப்படுவார். அவரை நான் நேரில் சந்தித்ததில்லை. அவர் புளட் இயக்கத்திடம் பயிற்சி பெற்றவர் என அறிகிறேன். தமிழ்நாடு விடுதலைப் படையினர் பயன்படுத்தும் பைப் வெடி குண்டுகள் ஆரம்பத்தில் திருச்சி சிறீரங்கத்தில் ஒரு கவுன்சிலரின் லேத் பட்டறையிலேயே தயாரிக்கப்பட்டது. இதற்கு உதவியவர்கள் புளட் இயக்கத்தினரே. தமிழ்நாடு விடுதலைப்படை தலைவர் தோழர் தமிழரசன் பயன்படுத்திய இரண்டு சப் மிசின்கன் துப்பாக்கிகளும் வழங்கியது எனது இயக்கமாக இருந்தாலும் அவை ரெலோ இயக்கத்தின் ஆயுதங்களே. புலிகள் இயக்கமும் பல தமிழக இளைஞர்களுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் மட்டுமல்ல பணம் கூட வழங்கியிருக்கிறது. இவற்றை இங்கு நான் குறிப்பிடுவதன் காரணம் என்னவெனில் தமிழ்நாட்டில் ஒரு பலமான ஆயுத போராட்ட இயக்கம் வளர்ச்சி பெற்றிருக்குமாயின் ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்கள் ஈழப் போராட்டத்தில் பங்குபற்றியிருப்பர். அதுமட்டுமல்ல 2009ல் அழித்ததுபோன்று அத்தனை இலகுவாக சிஙகள அரசும் இந்திய அரசும் தமிழ் மக்களை கொன்று இனப்படுகொலை செய்ய முடியாத நிலை இருந்திருக்கும்.

விமர்சனம் செய்து கொள்வது எப்படி?

•விமர்சனம் செய்து கொள்வது எப்படி? இன்று முகநூலில் உள்ள முக்கிய பிரச்சனை விமர்சனம் செய்வது எப்படி என்பதே. சிலர் தமது நட்பு சக்திகளை “கிழி கிழி என்று கிழித்து தொங்கவிட்டதாக” பெருமையுடன் எழுதுகின்றனர். எதிரியையும் நட்பு சக்திகளையும் எப்படி விமர்சிப்பது என்று தெரியாமலே அப்படி செய்கின்றனர். சரி அப்படியென்றால் முகநூலில் எப்படி விமர்சனம் செய்வது? அல்லது ஆக்கபூர்வமான உரையாடலை எப்படி செய்வது? இதற்கு மாபெரும் மார்க்சிய ஆசான் தோழர் மாவோ சேதுங் அவர்கள் எமக்கு தகுந்த வழி காட்டியுள்ளார். எதிரியின் மீதான நம் விமர்சனம் புலி இரையைக் கவ்வுவதைப் போல வேகமாய் இருக்க வேண்டும். நட்பு சக்திகளின் மீதான விமர்சனம் பூனை தன் குட்டியை கவ்வுவதைப் போல மென்மையாய் இருக்க வேண்டும் ஆம். எதிரி மீதான விமர்சனம் அவனை அம்பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். நண்பன் மீதான விமர்சனம் அவனை எம் பக்கத்திற்கு வென்றெடுப்பதாக இருக்க வேண்டும். உணர்ச்சி வேகத்தில் நாம் நட்பு சக்திகளின் குறைகளை வெறுப்பாய் எதிர் கொள்வது எமது இலட்சியமான தமிழின விடுதலைக்கு ஒருபோதும் உதவாது. நிர்ப்பந்தம் தோலைத்தான் தொடும். ஆனால் அறிவுறுத்தல் ஆத்மாவைத் தொடும் சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளை கையாள்வது குறித்து நாம் இதனைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.. எமது உரையாடல்கள் ஆக்கபூர்வமானவையாக இருத்தல் வேண்டும். குறிப்பு - எதிரி ஆயுதம் ஏந்தாதவரை விமர்சனமே எமது ஆயுதம். எதிரி ஆயுதம் ஏந்திவிட்டால் ஆயுதமே எமது விமர்சனம்

யார் இந்த மணி?

•யார் இந்த மணி? இது கௌத்தூர் மணி பற்றியோ அல்லது வீரமணி பற்றிய பதிவோ இல்லை. இது கலைஞர் தத்து எடுத்த அகதிச் சிறுவன் மணி பற்றியது. நான் இப்போது மட்டுமல்ல கலைஞர் உயிருடன் இருந்தபோதே பல தடவைகள் இந்த அகதிச் சிறுவன் மணி எங்கே என்று கேட்டுள்ளேன். தமிழக அரசியல் தலைவர்களில் பரிதிஇளம்வரிதி மட்டுமே “இந்த அகதிச் சிறுவன் எங்கே?” என்று ஒருமுறை கேட்டு அறிக்கை விட்டிருந்தார். பரிதிஇளம்வரிதி திமுக வில் இருந்தவர். அதுவும் ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்தவர். எனவே அவர் திமுக வை விட்டு வெளியேறியதும் இதைக் கேட்கிறார் எனில் நிச்சயம் அச் சிறுவனுக்கு ஏதோ விபரீதம் ஸ்டாலினால் நடந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். ஊடகவியலாளர் சோமு அவர்கள் பரிதி இளம்வரிதியின் கைத்தொலைபேசி இலக்கத்தை எனக்கு தந்து உதவினார். நான் உடனே பரிதிஇளம்வரிதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அகதிச் சிறுவனுக்கு என்ன நடந்தது என்று கேட்டேன். அதற்கு அவர் “அது முடிந்துபோன விடயம். இனி அதைப் பேசி என்ன பயன்?” என்று கேட்டார். தமிழக அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரையில் அது யாரோ ஒரு அகதிச் சிறுவன் பற்றிய விடயம். ஆனால் எமக்கு அது இன்னொரு ஈழத் தமிழன் பற்றிய விடயம். அதனால்தான் எமக்கு வலிக்கிறது. சரி. நடந்தது என்ன? 1983ல் இலங்கையில் நடந்த இனக் கலவரத்தை அடுத்து ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் அகதிகள் தமிழகம் சென்றனர். அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் மலையாளி என்றும் அதனால் அவருக்கு ஈழத் தமிழர் மீது அக்கறை இல்லை என்றும் கலைஞர் குற்றம் சாட்டியிருந்தார். அப்போது அதை இன்னும் அழுத்தமாக பதிவு செய்வதற்காக ஒரு அகதிச் சிறுவனை தான் தத்து எடுப்பதாக கலைஞர் அறிவித்தார். அந்த அகதி சிறுவனுக்கு மணி என்று பெயர் சூட்டினார். அவரும் அந்த சிறவனும் சேர்ந்து இருக்கும் படங்கள் பத்திரிஜகைகளில் பிரசுரம் செய்யப்பட்டன. அதுமட்டுமல்ல, கனிமொழிக்கு தம்பி இல்லை என்ற குறை இருந்ததாகவும் இச் சிறுவனை தத்து எடுத்ததன் மூலம் அக் குறையும் தீர்ந்து விட்டதாக கலைஞர் கூறினார். சிறுவனை தத்து எடுத்து வளர்ப்பதாக கலைஞர் அறிவித்தபடியால் கலைஞரின் சொத்தில் சட்டப்படியான உரிமை அச் சிறுவனுக்கு வந்துவிடும் என்று அஞ்சிய ஸ்டாலின் அச் சிறுவனை விரட்டிவிட்டதாக பின்னர் செய்திகள் வந்தன. ஆனால் அச் சிறுவன் விரட்டப்படவில்லை, மாறாக கொல்லப்பட்டுவிட்டான் என்ற சந்தேகம் பரிதிஇளம்வரிதியின் பேட்டிகள் உறுதி செய்தன. எமக்கு வருத்தம் என்னவெனில் எம்.ஜி.ஆரைவிட தனக்கு தமிழ் இனப்பற்று அதிகமாக இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக கலைஞர் ஒரு அகதிச் சிறுவனை அநியாமாக பலியிட்டு விட்டார் என்பதே. குறிப்பு – பரிதி இளம் வழுதியின் பேட்டி மற்றும் முதலமைச்சர் ஜெயலதாவிற்கு நான் அனுப்பிய மின்னஞ்சல் யாவும் கீழே பின்னூட்டத்தில் தந்துள்ளேன்.

ஒருவன் அயோக்கியன்

ஒருவன் அயோக்கியன் என்று தெரிந்தும் அவனை நியாயப்படுத்து முயல்பவன் அவனை விட பெரும் அயோக்கியன் - சே கலைஞர் தத்தெடுத்த ஈழ அகதிச் சிறுவன் எங்கே என்று தெரியவில்லை கலைஞர் ஆரம்பித்த சிறப்புமுகாம் இன்னும் மூடப்படவில்லை. அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்படவில்லை 2009ல் உண்ணாவிரத நாடகம் ஆடி இனப்படுகொலைக்கு உதவியவர் கலைஞர் அவருக்கு இலங்கையில் நூற்றாண்டுவிழா கொண்டாடுபவர்கள் அவரைவிட பெரும் அயோக்கியர்கள்.

ஆணையூர் அகதிமுகாமில்

ஆணையூர் அகதிமுகாமில் சிறந்த புள்ளிகள் பெற்ற அகதி மாணவி உயர் கல்வி கற்க உதவி புரிந்துள்ளார் அமைச்சர் பழனிவேல் ராஜன். அமைச்சர் பழனிவேல் ராஜனுக்கு பாராட்டுகளும் நன்றிகளும். தமிழ்நாட்டில் 40 வருடமாக ஈழத் தமிழர் அகதிகளாக இருக்கின்றனர். அவர்கள் இன்னமும் உயர் கல்வி கற்க ஒரு சிலரின் இரக்கத்தையும் உதவியையும் எதிர்பார்க்கும் நிலை இருப்பது தமிழக அரசுக்கு வெட்கக் கேடானது. இனியாவது இந் நிலை மாறிட அமைச்சர் பழனிவேல் ராஜன் முன்வரவேண்டும்.