Monday, April 29, 2019

தேர்தல் பாதை திருடர் பாதை!

•தேர்தல் பாதை திருடர் பாதை!
தேர்தல் பாதை திருடர் பாதை என்றால் யாருக்கு கோபம் வருகிறதோ இல்லையோ இந்த கம்யுனிஸ்ட்டுகளுக்கு பயங்கர கோபம் வந்துவிடும்.
உடனே ஓடி வந்து “ தோழர்! லெனின் இந்த புத்தகத்தில் இத்தனையாம் பக்கத்தில் தேர்தலில் பங்கெடுக்க வேண்டும் சொல்லியிருக்கிறார்” என்பார்கள்.
ஆனால் பாருங்கள் இந்த கம்யுனிஸ்டுகளுக்கு வந்த நிலையை,
கேரளாவில் காங்கிரஸ் ராகுலை தோற்கடிப்போம் என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் ராகுலை பிரதமர் ஆக்குவோம் என்கிறார்கள்.
இந்த பித்தலாட்டத்தை “திருடர் பாதை” என்று அழைக்காமல் வேறு எப்படி அழைக்க முடியும்?

மறப்பது ஜனாதிபதி மைத்திரி வழமை

•மறப்பது ஜனாதிபதி மைத்திரி வழமை
நினைவூட்ட வேண்டியது எமது கடமை
ஜனாதிபதி அங்கிள்!
கடந்த வருடப்பிறப்புக்கு முன்னர் அப்பா வருவார் என்றீர்களே
அடுத்த வருடப் பிறப்பும் வரப் போகிறது
ஆனால் அப்பா இன்னும் வரவில்லையே?
குழந்தைகள் என்றால் நீங்கள் இரங்குவீர்கள் என்றார்களே
ஆனால் நீங்கள் எங்களுக்கு இரங்கவில்லையே?
குழந்தையானாலும் அது தமிழ் என்றால் இரங்கமாட்டீர்கள் போலும்
சம்பந்தர் அய்யாவுக்கு சொகுசு பங்களா பெறுவதற்காக
உங்களுடன் பேசிய சுமந்திரன் அங்கிளுக்குகூட
எங்களுக்காக பேச வேண்டும் என்று தோன்றவில்லையே
என்ன செய்வது?
கடவுள்கூட எங்களை கைவிட்டுவிட்டாரே!

•அடிமையாக விழுந்து கிடப்பதைவிட எழுந்து நின்று மடிவது மேல்!

•அடிமையாக விழுந்து கிடப்பதைவிட
எழுந்து நின்று மடிவது மேல்!
இந்த மனிதர் மகிந்த ராஜபக்சவை சந்தித்தது கூட தவறு இல்லை
ஆனால் அவர் திமிராக உட்கார்ந்து இருக்க அருகில் இவர் பவ்வியமாக கைட்டி நிற்பதைப் பார்க்கும்போதுதான் வருத்தமாக இருக்கிறது.
ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை கொன்ற மனிதருக்கு முன்னால் இவர் ஏன் கூனிக் குறுகி நிற்கின்றார் அதுவும் மனைவியுடன்.
பார்ப்பாணும் இந்துத்துவாவும் எப்போதும் தமிழனுக்கு எதிராகவே செயற்படும் என்பதற்கு இந்த மனிதர் ஒரு சாட்சி.
இது தெரியாமல் “இந்துத் தமிழீழம்” கேட்டால் இந்துத்வா சக்திகள் ஆதரிக்கும் என்று கூறும் காசி ஆனந்தன் அய்யாவை என்னவென்று அழைப்பது?
இங்கு எனக்கு ஆச்சரியம் என்னவெனில் தமிழ் நாட்டில் இருந்துகொண்டு தமிழ் இனத்திற்கு எதிராக எப்படி இவர்களால் செயற்பட முடிகிறது?
கொஞ்சம்கூட தமிழன் மீது இவர்களுக்கு பயம் இல்லையா?
உலகில் சிங்கள மக்கள் தொகை இரண்டு கோடி மட்டுமே. ஆனால் உலகில் தமிழ் மக்கள் தொகை சுமார் எட்டுக் கோடி.
அப்படியிருக்க, எப்படி எட்டுகோடி தமிழரை கொஞ்சம்கூட பயம் இன்றி மகிந்த ராஜபக்ச போன்றவர்களால் எதிர்க்க முடிகிறது?
அவர்களிடம் எந்த விசேட பலமும் இல்லை. அவர்கள் எமது பலவீனமான துரோகிகளை பயன்படுத்தியே தமிழ் இனத்தை அழிக்கிறார்கள்.
இந்த துரோகிகள் காட்டியும் கூட்டியும் கொடுப்பதால்தான் அவர்கள் தமிழக அரசியல் தலைவர்களை கோமாளிகள் என்று பகிரங்கமாக கிண்டல் செய்கிறார்கள்.
எனவே யாராவது ஒரு துரோகிக்கு தமிழ்நாட்டில் தகுந்த பாடம் புகுத்தப்பட்டால் அதன்பின்பு இந்த மகிந்த ராஜபக்சாக்கள் உணர ஆரம்பிப்பார்கள்.
இப்போது எம்முன் உள்ள கேள்வி,இந்த துரோகிகளுக்கு யார் தகுந்த பாடம் புகுத்தப் போகிறார்கள்?

இன்று காஷ்மீரிய தேசிய இன விடுதலைப் போராளி யாசின் மாலிக் அவர்களின் பிறந்தநாள் ஆகும்.

இன்று காஷ்மீரிய தேசிய இன விடுதலைப் போராளி யாசின் மாலிக் அவர்களின் பிறந்தநாள் ஆகும்.
முதலில் அவருக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
யாசின் மாலிக் ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. அவர் இஸ்லாம் மதத்தை முன்வைத்தும் போராடவில்லை.
ஆனாலும் இந்திய அரசு அவரது அமைப்பை தடை செய்ததோடு அவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இங்கு எமது கேள்வி என்னவெனில், இந்தியாவில் ஆயுதப் போராட்டம் தேவையில்லை. தேர்தல் பாதை மூலம் தேசிய இனங்களின் விடுதலையைப் பெறலாம் என்பவர்கள் இதற்கு என்ன கூறப் போகிறார்கள்?
குறிப்பாக, நாளை இதேபோன்று நாம் தமிழர் கட்சியும் தடை செய்யப்படலாம். அதன் தலைவர் சீமானும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம். அப்போது நாம்தமிழர் அமைப்பினர் என்ன செய்யப் போகிறார்கள்?
இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலைக்கான பாதை ஆயுதம் எந்திய மக்கள் யுத்தப்பாதையா அல்லது தேர்தல்பாதை என்னும் சரணாகதிப் பாதையா?

•இந்திய அரசு இப்பவாவது இந்த அகதிகள் மீது இரங்குமா?

•இந்திய அரசு
இப்பவாவது இந்த அகதிகள் மீது இரங்குமா?
சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த அகதிகளும் இந்துக்கள்தான். ஆனால் பாகிஸ்தானில் இருந்து வரும் இந்துக்கள் மீது இரக்கம் காட்டும் இந்திய அரசு இவர்கள் மீது இரக்கம் காட்ட மறுக்கிறது. ஏனெனில் இவர்கள் தமிழர்கள்.
பாகிஸ்தானில் இருந்து வரும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் இந்திய அரசு இந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க மறுக்கிறது. ஏனெனில் இவர்கள் தமிழர்கள்.
இந்தியாவில் உள்ள அனைத்து அகதிகளும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் இந்த அகதிகள் மட்டும் சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாமில் அடைக்கப்படுகின்றனர். ஏனெனில் இவர்கள் தமிழர்கள்.
இந்தியா ஜனநாயகநாடு என்கிறார்கள். இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் இந்த அகதிகளை நீதிமன்றம் விடுதலை செய்தும் இந்திய அரசு விடுதலை செய்ய மறுக்கிறது. ஏனெனில் இவர்கள் தமிழர்கள்.
அகதிகள் விரும்பினால் அவர்கள் தம் நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் இவ் அகதிகள் விரும்பியும் இந்திய அரசு அனுமதி வழங்காமல் அடைத்து வைத்திருக்கிறது. எனெனில் இவர்கள் தமிழர்கள்.
யுத்தம் முடிந்து 10 வருடமாகிவிட்டது. ஆனாலும் இவர்களை வெளியில் விட்டால் இந்திய அமைதிக்கு ஆபத்தாம் என்று இந்திய அரசு கூறுகிறது. ஏனெனில் இவர்கள் தமிழர்கள்.
இவர்கள் வேறு வழியின்றி உண்ணாவிரதம் இருக்கின்றனர். ஆனால் இந்திய அரசு மட்டுமல்ல அதிகாரிகள் கூட கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் தமிழர்கள்.
இலங்கை அரசுகூட இந்தியாவில் சிங்களவர்கள் கைது செய்யப்பட்டால் உடனே தலையிட்டு அவர்களை விடுதலை செய்விக்கிறது. ஆனால் இவர்களைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. ஏனெனில் இவர்கள் தமிழர்கள்.
இப்போது தேர்தல் நேரம். எல்லா அரசியல் கட்சிகளும் ஈழத் தமிழர் நலன் வலியுறுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். ஆனால் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இவர்கள் நலன் குறித்து எதுவும் கூறவில்லை. ஏனெனில் இவர்கள் தமிழர்கள்.
ஈழத்தில் இந்திய தூதுவர் 20 காந்தி சிலைகளை நிறுவுகிறார். அவரிடம்கூட யாருமே அகிம்சை வழியில் போராடும் இந்த அகதிகள் பற்றி எதுவும் கேட்பதில்லை. ஏனெனில் இவர்கள் தமிழர்கள்.
அகதியாக பிறப்பதுகூட குற்றமில்லை. ஆனால் இந்தியாவில் தமிழராய் இருப்பது பெரிய பாவம். இதையே இந்திய அரசு எமக்கு கூறுகிறது.

சுமந்திரன் அவர்களே!

சுமந்திரன் அவர்களே!
இந்த அம்மாவும் வன்முறையாளரா?
இவரும் யுத்த குற்றத்தில் ஈடுபட்டதாக விசாரிக்க போகிறீர்களா?
இவரையும் தண்டிப்பதற்காகவா இரண்டு வருடம் கால அவகாசம் பெற்றுள்ளீர்கள்?
பரவாயில்லை. ஆனால் ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
அடிப்பது வன்முறை. ஆனால் திருப்பி அடிப்பது வன்முறை இல்லை. ஏனெனில் அது தற்காப்பு.
இலங்கை அரசு சுட்டது இன அழிப்பு. அதற்கு எதிராக தமிழ் மக்கள் திருப்பி சுட்டது தற்காப்பு.
சட்டம் படித்தவர் நீங்கள் , புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்.

இவர் தமிழர்தான்

இவர் தமிழர்தான்
இவர்தான் தமிழக முதல்வர்
இவர் மட்டுமல்ல துணை முதல்வரும் தமிழர்தான்.
இவர்கள் “அம்மா ஆட்சி” நடத்துவதாக கூறுகிறார்கள்
அப்படியென்றால் அம்மா விரும்பிய ஏழு தமிழர் விடுதலையை ஏன் நிறைவேற்றவில்லை?
ஏழு தமிழர் விடுதலையை தாங்கள் விரும்புவதாகவும் “மத்தியஅரசும் ஆளுநரும்தான் தடுக்கிறார்கள்” என்று இவர்கள் கூறுகிறார்கள்.
அப்படியென்றால் மத்திய அரசான பாஜக வுடன் எப்படி கூட்டணி அமைத்தீர்கள்?
தமிழன் முதல்வர் ஆனால் தமிழர் நலன் காக்கப்படும் என்கிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமியும் தமிழர்தானே. அவர் ஏன் தமிழர் நலன் காக்கவில்லை?
தமிழனாக இருந்தால் மட்டும் போதாது தமிழ் இன உணர்வு உள்ளவராகவும் இருக்க வேண்டும் என்கிறார்கள்.
சரி. தமிழ் இன உணர்வுள்ளவர் முதல்வராக இந்த முதலாளித்துவ அமைப்பு அனுமதிக்குமா?
ஒருவேளை அதையும் மீறி ஒரு தமிழ் இன உணர்வுள்ளவர் முதல்வரானாலும் அவர் மத்திய அரசை எதிர்த்து எப்படி தமிழர் நலன் காப்பார்?
இதற்கு யாரிடமாவது பதில் இருக்கிறதா?

ஜே.வி.பி ( மக்கள் விடுதலை முன்னணி)

•ஜே.வி.பி ( மக்கள் விடுதலை முன்னணி)
தமிழ் மக்கள் கவனிக்க வேண்டியது என்ன?
இன்று ஜேவிபி யின் 48வது ஏப்பரல் நினைவு தினம் ஆகும்.
1971ம் ஆண்டு ஏப்பரல் மாதம் ஜேவிபி அமைப்பினர் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்திய அரசின் உதவியுடன் அவர்களது போராட்டம் நசுக்கப்பட்டது. அதில் சுமார் 6000 சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
அதன்பின்னர் 1989ம் ஆண்டு ஜேவிபி அமைப்பினர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதன் தலைவர் ரோகண விஜேயவீரா உட்பட சுமார் 60000 சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
சோமவம்ச மட்டுமே தப்பி சென்றார். அவர் பிரான்சில் இருந்துகொண்டு மீண்டும் ஜேவிபி அமைப்பை கட்டினார். இன்று ஜேவிபி அமைப்பு பலம் பொருந்திய பெரிய அமைப்பாக இருக்கிறது.
இதில் தமிழ் மக்கள் கவனிக்க வேண்டியது என்ன?
முதலாவது,
ஜேவியால் மீண்டும் எழு முடியுமாயின் தமிழ் மக்களால் ஏன் மீண்டும் எழ முடியாது?
இரண்டாவது,
ஜேவிபி இன்று தேர்தல் பாதையை பயன்படுத்தினாலும் அவர்கள் இதுவரை ஆயுதப் போராட்டம் தவறு என்றோ அல்லது அதை தாம் கைவிட்டதாகவோ அறிவிக்கவில்லை.
மூன்றாவதாக,
தமது தலைவர் ரோகண விஜயவீரா எப்படி இறந்தார் என்பது தெரியாத நிலையிலும் அவர் உயிருடன் இல்லை என்ற உண்மையை மக்களுக்கு உடன் தெரிவித்தார்கள்.
நான்காவதாக,
தமது தலைவர் எப்படி கொல்லப்பட்டார் என்ற முழு உண்மைகளையும் கண்டறிந்தார்கள். அவற்றை ஆதாரங்களுடன் மக்களுக்கு தெரியப்படுத்தினார்கள்.
ஜந்தாவதாக
ஜேவிபி அமைப்பும் “பயங்கரவாதிகள்” என்று குறிப்பிட்டே இலங்கை அரசு கொன்றது. ஆனால் அவர்கள் அதற்காக பயந்து அடங்கி இருக்கவில்லை. மாறாக தமது கொல்லப்பட்ட மாவீரர்களுக்காக வருடம்தோறும் பகிரங்கமாக நினைவு அஞ்சலி செய்கிறார்கள்.
• தமிழ் மக்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் என்னவெனில் சிங்கள மக்கள் மத்தியிலும் அரசுக்கு எதிராக போராடி இழப்புகளை சந்தித்து மீண்டும் எழுந்து நிற்கும் ஒரு அமைப்பு உள்ளது என்பதே.

குட்டிமணி தங்கத்துரை அகியோர்

குட்டிமணி தங்கத்துரை அகியோர்
பிரபாகரனால் காட்டிக் கொடுக்கப்பட்டார்களா?
இன்றைய நாளில்தான் (05.04.1981)குட்டிமணி தங்கத்துரை ஆகியோர் கைது செய்யப்பட்ட நாள் ஆகும்.
அன்று முதல் இவர்களை காட்டிக் கொடுத்தது பிரபாகரனே என்று சிலர் கூறிவருகிறார்கள்.
அண்மையில்கூட இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கறிஞரும் இதனை சமூகவலைத்தளங்களில் தெரிவித்திருந்தார்.
அவர்கள் இவ்வாறு கூறுவதற்கு முன்வைக்கும் ஒரே ஆதாரம் குட்டிமணியும் தங்கத்துரையும் இந்தியா செல்லும் விடயம் பிரபாகரனுக்கு மட்டுமே தெரியும் என்பதுதான்.
இந்த ஒரு காரணம் மட்டும் போதுமா?
(1) காட்டிக் கொடுத்தார் என்றால் எப்படி? எப்போது? என்ற விபரங்கள் கூறவேண்டும். அந்த காலத்தில் கைத்தொலைபேசிகள் இல்லை. எனவே காட்டிக்கொடுப்பதென்றால் நேரில் சென்று கூறவேண்டும் அல்லது கடிதம் போட வேண்டும். அல்லது இன்னொரு நபர் மூலம் காட்டிக் கொடுத்தது என்றால் அந்த இன்னொரு நபர் யார் என்பதையாவது கூறவேண்டும். இதுவரை இதுபற்றி எந்த விபரமும் யாரும் தெரிவிக்கவில்லை.
(2) குட்டிமணி தங்கத்துரை ஆகியோரை கைது செய்து முதலில் பருத்திதுறை பொலிஸ் நிலையத்தில்தான் வைத்திருந்தார்கள். அவர்களை யாரோ கடத்தல்காரர்கள் என்று நினைத்து சாதாரண காவலில் வைத்திருந்தார்கள். அப்புறம் அங்கு வந்த ஒருவர் இவர்களை இனங்காட்டிய பின்பே அவர்கள் குட்டிமணி தங்கத்துரை என்பதை பொலிஸ்காரர்கள் தெரிந்துகொண்டார்கள். அதன்பின்பே அதிக காவல் போடப்பட்டது. இங்கு எமது கேள்வி என்னவெனில் பிரபாகரன் காட்டிக்கொடுத்து பிடிபட்டது என்றால் முதலே குட்டிமணி தங்கத்துரை என்று தெரிந்து அதிக காவல் போட்டிருப்பார்கள் அல்லவா?
(3) குட்டிமணி தங்கத்துரை ஆகியோரை காட்டிக் கொடுக்கும் அளவிற்கு அவர்களுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் முரண்பாடு எதுவும் இருந்ததாக இதுவரை அவர்களுடன் இருந்தவர்கள் எவரும் தெரிவிக்கவில்லை.
இவ்வாறு பிரபாகரன் மீது ஆதாரம் இன்றி குற்றம் சுமத்துவோர் குட்டிமணி தங்கத்துரை கொலைக்கும் பிரபாகரனே காரணம் என்று கூறுகின்றனர்.
குட்டிமணி தங்கத்துரை போன்றவர்கள் 1983ம் ஆண்டு வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
அப்படியிருக்க இவர்கள் படுகொலைக்கு பிரபாகரன் எப்படி காரணமாக இருக்க முடியும்?
குட்டிமணி தங்கத்துரை போன்றவர்களை சிறையில் இருந்து மீட்க ரெலோ அமைப்பினர் திட்டம் தீட்டியதாகவும் அதற்காக ஒரு குழவினர் இந்தியாவில் பயிற்சி எடுத்ததாகவும் கூறுகின்றனர்.
எனவே அதுவரை எந்த தாக்குதலிலும் ஈடுபட வேண்டாம் என பிரபாகரனை நேரில் சந்தித்து கூறியதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதனையும் மீறி பிரபாகரன் திண்ணைவேலியில் 13 ராணுவத்தினரை கொன்று அதன்மூலம் குட்டிமணி தங்கத்துரையும் கொன்றுவிட்டார் என இவர்கள் கூறுகின்றனர்.
(1) பிரபாகரனுக்கு நேரில் கூறப்பட்டமையும் அல்லது அவர் அதற்கு சம்மதித்தார் என்பதும் எந்தளவு உண்மை என்று அறிய முடியவில்லை.
(2) அது உண்மையாக இருந்து அதனை பிரபாகரன் மீறியிருந்தால் அது தவறுதான்.
(3) ஆனால் 13 ராணுவத்தினரை கொன்று அதன்மூலம் குட்டிமணி தங்கத்துரை கொல்லப்படுவதற்கு பிரபாரன் திட்டமிட்டார் என்பது ரொம்பவும் ஓவர்.
(4) ஏனெனில் 13 ராணுவத்தினரைக் கொன்றால் அதனால் சிறையில் இருக்கும் குட்டிமணி தங்கத்துரை கொல்லப்படுவார்கள் என்பது பிரபாகரனுக்கு மட்டுமல்ல அப்போதிருந்த எந்த அரசியல தலைவருக்கும் தெரியாது.
எனவே குட்டிமணி தங்கத்துரை போன்றவர்களை காட்டிக் கொடுத்தும் கொல்லப்பட்டமைக்கும் பிரபாகரன் காரணம் என்பது அதாரம் அற்ற குற்றச்சாட்டு ஆகும்.
குறிப்பு- இது பிரபாகரனை நியாயப்படுத்தும் பதிவு இல்லை. எனக்கு தெரிந்த நியாயத்தை கூறியிருக்கிறேன். எனவே கம்பு சுத்த வருபவர்கள் தயவு செய்து பதிவை நன்கு படித்தவிட்டு வரவும்.

•இலங்கை மீதான சீன ஆக்கிரமிப்பு ( பகுதி- 7)

•இலங்கை மீதான சீன ஆக்கிரமிப்பு ( பகுதி- 7)
றோ ( RAW) என்றால் என்ன என்று கேட்டால் இலங்கையில் சிறுவர்கூட உடனே அது இந்திய உளவு நிறுவனம் என்று கூறிவிடுவார்கள்.
இலங்கையில் மட்டுமல்ல பாகிஸ்தான், பங்காளதேஸ், நேபாளம், மாலைதீவு போன்ற நாடுகளில் கேட்டாலும் உடனே கூறிவிடுவார்கள்.
அந்தளவுக்கு இந்திய அரசு தன் றோ உளவு நிறுவனம் மூலம் அயல்நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுகிறது.
இலங்கையில் ஜனாதிபதி மைத்திரியையும் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாயாவையும் றோ உளவு நிறுவனம் கொலை செய்ய முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது அனைவரும் அறிந்திருப்பீர்கள்..
கடந்த மாதங்களில் இந்த குற்றச்சாட்டை சுமத்தியது இலங்கையின் அதி உச்ச அதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதி மைத்திரி என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் ஆகும்.
இது தொடர்பாக உடனடியாக ஒரு இந்தியர் கைது செய்யப்பட்டார். இந்த இந்தியர் கைது செய்யப்பட்டவுடன் அவரை யார் என்று தெரியாது என இந்திய தூதுவர் கூறினார். அதுமட்டுமல்ல அவர் ஒரு மனநோயாளி என்றும் கூறினார்.
கைது செய்யப்பட்ட இந்தியர் யார் என்று தெரியாத இந்திய தூதுவருக்கு அவர் ஒரு மனநோயாளி என்பது மட்டும் எப்படி தெரிந்தது என்று யாராய் இருந்தாலும் இந்திய தூதுவர் மீது சந்தேகம் கொள்வர்.
ஆனால் எமது ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ ஏன் பத்திரிகைகளோகூட இந்திய தூதரில் சந்தேகம் கொள்ளவில்லை.
மாறாக கைது செய்யப்பட்ட இந்தியர் நிரபராதி எனக்கூறி அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவர் விடுதலை செய்யப்பட்ட விபரத்தை இலங்கை ஊடகங்கள் எதுவும் பிரசுரம் செய்யவில்லை. ஆனால் இந்து தமிழ் பத்திரிகை மிக்க பெருமையுடன் இந்த செய்தியை வெளியிட்டிருந்தது.
இங்கு எமக்கு தோன்றும் கேள்விகள் என்னவெனில்,
(1) இலங்கையில் பல வருடங்களாக விசாரணை முடியாமல் தமிழ் சிறைக்கைதிகள் இருக்கும்போது இந்த இந்தியர் மட்டும் எப்படி இவ்வளவு விரைவாக விசாரணை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்?
(2) இந்த வழக்கில் ஒரு பொலிஸ் அதிகாரியும் கைது செய்யப்பட்டார். அவருடைய தொலைபேசி உரையாடல் வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள குரல் அவருடையதுதான் என்று குரல் பகுப்பாய்வு நிறுவனம் நீதிமன்றத்தில் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் இதில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் இந்தியர் மட்டும் ஏன் விடுதலை செய்யப்பட்டார்?
(3) இந்த இந்தியர் முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்ததாக பொலிஸ் கூறுகிறது. அப்படியென்றால் அந்த குற்றத்திற்காவது அவருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா?
கடலில் எல்லலை தாண்டி வந்துவிட்டார்கள் என்பதற்கே தமிழக மீனவர்களை கைது செய்து மாதக்கணக்கில் அடைத்து வைத்திருக்கும் இலங்கை அரசு இந்த இந்தியரை அவ்வாறு செய்யாமல் விடுதலை செய்திருப்பது ஏன்?
(4) இந்த இந்தியர் ஒரு றோ அதிகாரி மட்டுமல்ல அவர் மலையாளி இனத்தவர் என்பதால்தான் இந்திய அரசு தனது தூதுவர் மூலம் செல்வாக்கை பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது என்று கூறப்படுவது உண்மையா?
(5) தன்னை றோ உளவு அமைப்பு கொலை செய்ய முயற்சி செய்கிறது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டிய ஜனாதிபதி மைத்திரி இப்போது இந்த இந்தியர் விடுதலை செய்யப்பட்டது குறித்து கருத்து எதுவும் கூறாமல் மௌனம் காப்பது ஏன்?
(6) இது குறித்து கோத்தபாயா ராஜபக்ச இதுவரை எந்த கருத்தும் கூறவில்லை. அதுமட்டுமல்ல அவரது சகோதரர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும்கூட கருத்து கூறாமல் மௌனம் காத்து வருவது என்?
இந்த வழக்கை அவதானிப்போர் வரக்கூடிய முடிவு
ஒன்றில், ஜனாதிபதி மைத்திரிக்கு விசர் முற்றி விட்டது. அதனால் உளறுகிறார் என்று கருதலாம். அது உண்மையாயின் அவரை உடனடியாக பதவியை விட்டு நீக்கி அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
இல்லையேல் ஜனாதிபதி மைத்திரியைவிட செல்வாக்கான ஒரு சக்தி இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு மூடி மறைக்கிறது என கருதலாம். அது உண்மையாயின் அந்த சக்தி எது என்பதையாவது ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது கடமையாகும்.
அது சரி, றோ என்றால் எமக்கு அனைவருக்கும் உடனே தெரிகிறது. இதேபோன்று சீனாவின் உளவு அமைப்பு பெயர் யாருக்காவது தெரியுமா? அது இலங்கையில் சம்பந்தப்பட்ட விபரம் ஏதும் இருக்கா? இலங்கையில் இந்தியாவைவிட சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகம் என்று கூறுவோர் இது பற்றிய விபரங்களை தெரியப்படுத்துவார்கள் என நம்புகிறேன்.