Thursday, August 31, 2017

இந்தியாவின் 71வது சுதந்திர தினம்!

•இந்தியாவின் 71வது சுதந்திர தினம்!
இந்தியாவில் யாருக்கு சுதந்திரம் இருக்கு?
எதிர்வரும் 2018 ஜனவரி மாதம் சாதாரண மாதமாக இருக்காது என்று பிரதமர் மோடி தனது சுதந்திரதின உரையில் கூறியுள்ளார்.
இவர் அடிக்கடி புதிய இந்தியா பிறக்குது என்பதால் அடுத்த ஜனவரி மாதமும் புதிய இந்தியாவைப் பெறப் போகிறாரோ என்ற பயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் கடைசியாக ரூபா நோட்டு செல்லாது என்று மோடி புதிய இந்தியாவைப் பெத்த போது மக்கள் பட்ட வலி இன்னும் மறக்கவில்லை.
இந்த ரூபா நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டம் என்றார் பிரதமர் மோடி .
ஆனால் இதன் பின்னர் முதலாளிகளின் சொத்து பெறுமதியே அதிகரித்துள்ளது. இதோ சிலரின் சொத்து விபரம்,
முகேஸ் அம்பானி – 4.5 லட்சம் கோடி ரூபா
பிர்லா குழுமம்- 3 லட்சம் கோடி ரூபா
அனில் அம்பானி – 2.5 லட்சம் கோடி ரூபா
டாடா குழுமம் - 1.45 லட்சம் கோடி ரூபா
பஜாஜ் குழுமம் - 1.7 லட்சம் கோடி ரூபா
அதானி குழுமம் - 1.1 லட்சம் கோடி ரூபா
மோடி அரசு பெரு முதலாளிகளின் அரசாகவே இருக்கிறது. அவர்களின் நலனுக்காகவே மோடி ஆட்சி செய்கிறார்.
இந்தியாவின் பெரிய காப்ரேட் கம்பனிகளின் மொத்த வராக் கடன் தொனை 5 லட்சம் கோடி ரூபா.
ரிலைன்ஸ் ( முகேஸ் அம்பானி) – 1,87,070 கோடி ரூபா
ரிலைன்ஸ் (அனில் அம்பானி ) - 1, 21,000 கோடி ரூபா
எஸ்ஸார் குரூப் - 1,01,461 கோடி ரூபா
அதானி குரூப் - 96,000 கோடி ரூபா
ஜேபி குரூப் - 75,000 கோடி ரூபா
ஜிஎம்ஆர் குரூப் - 47,976 கோடி ரூபா
லான்கோ குரூப் - 47,102 கோடி ரூபா
வீடியோகான் - 45,400 கோடி ரூபா
மோடியைப் பொறுத்தவரையில் நாலு முதலாளிகள் நல்லாய் இருப்பதற்காக நாடு நாசமாய் போனாலும் பரவாயில்லை என்பதே அவரது கொள்கை.
இந்தியாவில் பெரிய காப்பரேட ;கம்பனி முதலாளிகள் சுரண்டவும் கொள்ளையடிக்கவும் சுதந்திரம் உண்டு.
71 ஆண்டாகியும் இந்திய மக்களுக்கு இன்னும் சுதந்திரம் வரவில்லை என்பதே உண்மை.

•மனைவியின் சிஸ்டத்தை மாற்ற முடியாதவர்

•மனைவியின் சிஸ்டத்தை மாற்ற முடியாதவர்
தமிழகத்தின் சிஸ்டத்தை மாற்ற முடியுமா?
செய்தி- வாடகைப் பாக்கி செலுத்தாததால் ரஜனி மனைவியின் பாடசாலை இழுத்து மூடப்பட்டுள்ளது.
தனது மனைவியின் சிஸ்டத்தையே மாற்ற முடியாத ரஜனி எப்படி தமிழ்நாட்டின் சிஸ்டத்தை மாற்ற முடியும்?
ரஜனி அரசியலுக்கு வரவேண்டும். தமிழக முதலமைச்சராக வேண்டும் என்பவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

நாய்களில் பலவகை இருக்கலாம்.

நாய்களில் பலவகை இருக்கலாம்.
ஆனால் அவை எல்லாவற்றுக்கும் ஒரு ஒற்;றுமை உண்டு.
அவை இறைச்சி துண்டு போடும் எஜமானுக்கு
எப்போதும் நன்றியுடன் வாலாட்டும்.
எல்லா நாய்களையும் ஒரே இடத்தில் வைத்திருக்க முடியாது.
ஆனால் தன்னால் முடியும் என யாழ் இந்திய தூதர் நிரூபித்திருக்கிறார்.
தமிழ் மக்களின் நலனுக்கு ஒன்றாக சேராத நாய்கள்
இந்திய சுதந்திர கொண்டாட்டத்திற்கு ஒன்று சேர்ந்துள்ளார்கள்.
பாவம் தமிழ் மக்கள்!
குறிப்பு- தயவு செய்து நாய்களை கேவலப்படுத்தியதாக யாரும் என்மீது கோபிக்க வேண்டாம்.

கருணாநிதி மனைவி தயாளு அம்மையாரும் மகிந்த ராஜபக்ச மனைவி சிராந்தி அம்மையாரும்!

 கருணாநிதி மனைவி தயாளு அம்மையாரும்
மகிந்த ராஜபக்ச மனைவி சிராந்தி அம்மையாரும்!
கலைஞர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார் கலைஞர் டிவி முதலாளிகளில் ஒருவர்.
கலைஞர் டிவி க்கு வந்த கோடிக் கணக்கான ரூபா பற்றி விசாரணையில் கேட்ட போது தனக்கு தெரியாது என்று பதில் கூறினார்.
ஒரு முதலாளிக்கு தெரியாமல் எப்படி அவர் கம்பனிக்கு பணம் வந்தது என்று கேட்டபோது தனக்கு மறதி நோய் என்று கூறினார்.
ஊழல் செய்துவிட்டு அதுபற்றிய விசாரணை வந்தபோது கொஞ்சம்கூட கூச்சமின்றி தனக்கு மறதி நோய் இருப்பதாக பொய் கூறினார்.
இது குறித்து கலைஞர் கருணாநிதியும் வெட்கப்படவில்லை. அவர் கட்சி தி.மு.க வும் வெட்கப்படவில்லை.
அதுபோல் மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தியும் தாஜீதீன் கொலை பற்றிய விசாரணையில் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
தனது பொறுப்பில் இருந்த வாகனங்கள் எப்படி கொலைக்கு பயன்படுத்தப்பட்டன என்பது குறித்தும் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமன்றி விசாரணை முடிவில் கையொப்பமிடுமாறு கோரியபோது அவர் தனக்கு சிங்களம் தெரியாது என்று கூறியுள்ளார்.
தனக்கு சிங்களம் தெரியாது என்று பொய் கூறுவதையிட்டு சிராந்தி கொஞ்சம்கூட வெட்கப்படவில்லை.
அதேபோல் சிங்களம் தெரியாது என்று தன் மனைவி பொய் கூறியதையிட்டு மகிந்த ராஜபக்சவும் வெட்கப்படவில்லை.
தாய் தந்தையும் இப்படியென்றால் மகன் ரோகித ராஜபக்சவோ இன்னும் ஒருபடி மேலேபோய் தாஜீதீன் யார் என்றே தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.
கேட்பவன் கேனையன் என்றால் காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டும் என்பார்களாம்.
தங்கள் கணவன்மார் பதவியில் இருக்கும்வரை இந்த மனைவிமாருக்கு எந்த நோயும் வருவதில்லை.
பதவி போனபின் விசாரணைக்கு வா என்று அழைத்தவுடன் திடீரென்று மறதி நோய் வருகிறது. சிங்களம்கூட மறந்து விடுகிறது.
அதுபோல் விசாரணை போகிற போக்கைப் பார்த்தால் தாஜீதீன் கொலை செய்யப்படவில்லை. அவர் தற்கொலை செய்தார் என்று கூறி கேசை மூடப் போகிறார்கள் போல் தெரிகிறது.
பாவம் தாஜீதீன் குடும்பம். நல்லாட்சி அரசு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் என்று அவர்கள் நம்பினார்கள்.
ஆனால் நல்லாட்சி அரசோ மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தை காக்கவே பாடுபடுகின்றது!

செருப்பு இல்லாதவன் கால் இல்லாதவனைப் பார்த்து திருப்திப்படுவது போல்

செருப்பு இல்லாதவன் கால் இல்லாதவனைப் பார்த்து திருப்திப்படுவது போல்
நடிகை சன்னிலியோனுக்கு போன கூட்ட்த்தைப் பார்த்து நல்லவேளை பிஜேபி அமிர்த்ஷா கூட்டத்திற்கு போகவில்லை என்று திருப்திப்பட்டுக் கொள்வோம்!
பீகாரில் மழை வெள்ளத்தில் பலியான குழந்தைகளை எடுத்துச் செல்லக்கூட அம்புலன்ஸ் இல்லை.
செத்த குழந்தைகளை தடியில் கட்டி எடுத்துச் செல்கிறார்கள்.
நாடு சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் கழிந்துவிட்டது.
இதுதான் டிஜிட்டல் இந்தியாவா?

உச்சநீதிமன்றம்- தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லாத வகையில்

உச்சநீதிமன்றம்- தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லாத வகையில் காவிரியின் குறுக்கே அணை கட்டலாம்.
தமிழ் மக்கள்- இந்தியாவுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தமிழ்நாட்டை தனிநாடாக பிரித்து விடலாம்.
தமிழ்நாட்டிற்கு எதிராக பந்த் செய்த அமைப்புகளை அழைத்து கர்நாடக முதலமைச்சர் பாராட்டுகிறார்.
ஆனால் தமிழ்நாட்டில் காவிரி தண்ணிக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளை சந்திக்வே முதலமைச்சர் மறுக்கிறார்.
தமிழன் தனக்காக குரல் கொடுப்பதையே பிரிவினைவாதம் என்றும் தேசத் துரோகம் என்றும் கூறுகிறார்கள்.

•குறும்படத் துறையில் ஈழத் தமிழர்களின் நம்பிக்கை தரும் குறிப்பிடத் தக்க நகர்வுகள்!

•குறும்படத் துறையில் ஈழத் தமிழர்களின்
நம்பிக்கை தரும் குறிப்பிடத் தக்க நகர்வுகள்!
திரைப்படத்துறையில் குறிப்பாக குறும்படத்துறையில் ஈழத் தமிழர்களின் நகர்வுகள் நம்பிக்கை தரும் வண்ணம் இருக்கின்றன.
எதிர்காலத்தில் இந்திய சினிமாவுக்கு மாற்றாக சிறந்த திரைப்படங்களை தரும் வண்ணம் ஈழத் தமிழர்களின் படைப்புகள் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கடந்த மாதம் கிருஸ்ணராஜா தலைமையில் இயங்கும் “விம்பம்” அமைப்பு குறும்படத் திரைப்பட விழாவை நடத்தி கலைஞர்களுக்கு பரிசில்களை வழங்கியிருந்தது.
இந்த வாரம் கோகுல ரூபன் தலைமையில் இயங்கும் “றெட்மூன் திரைப்பட வட்டம”; ஜ டானியல் பிளேக் என்னும் படத்தை திரையிட்டு கலந்துரையாடலை செய்யவிருக்கிறது.
இவ் அமைப்பு ஒவ்வொரு மாதமும் சிறந்த படங்களை திரையிட்டு அது தொடர்பான கலந்துரையாடலை செய்து வருகிறது.
அதேவேளை பௌசர் தலைமையிலான “தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்” சமதி ரூபனுடான சந்திப்பு ஒன்றை நாளை செய்யவுள்ளது.
கனடாவில் வாழும் ஈழத் தமிழரான சுமதி ரூபன் ஒரு குறும்பட இயக்குனரும் எழுத்தாளரும் ஆவார். அவர் நாளை இடம்பெறும் சந்திப்பில் தனது படைப்புகள் குறித்து உரையாடவுள்ளார்.
அதேவேளை கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் “பொதுசன நூலக வாசகர் வட்டம்” சார்பில் மாதாந்த திரையிடலாக சத்யஜித் ரே இயக்கிய ஜலசாஹர் என்ற வங்காளிப்படம் திரையிடப்பட்டது.
சிறந்த பிறமொழிப் படங்களை திரையிட்டு அது தொடர்பான கலந்துரையாடல்களை நிகழ்த்தி தமது அறிவினை வளர்த்துக் கொள்ளும் ஆர்வம் பாராட்டுக்குரியது.
இத்தகைய முயற்சிகள் எதிர்காலத்தில் சிறந்த திரைப்படங்களை ஈழத்து தமிழ் சமூகம் வழங்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

•யாழ் இந்திய தூதரின் அட்காசம்! இதை என்னவென்று சொல்வது?

•யாழ் இந்திய தூதரின் அட்காசம்!
இதை என்னவென்று சொல்வது?
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய ராணுவத்தின் நினைவுக் கல்லை சுத்தம் செய்யுமாறு யாழ் இந்திய தூதர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.
அந்த நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக இந்திய ராணுவக் குழு ஒன்று அடுத்த மாதம் வரவிருக்கிறது.
இறந்து போனவர்களுக்கு யாரும் அஞ்சலி செலுத்தலாம். எனவே இந்திய ராணுவமும் தாராளமாக வந்து அஞ்சலி செலுத்திவிட்டு போகட்டும்.
ஆனால் இறந்த தமது ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்த தூதுவர் ராணுவத்தால் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்கு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்துவதை தடுக்கிறார்.
கடந்த மாதம் வல்வெட்டித்துறையில் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்ட்டபோது அதனை இந்த தூதுவர் தடுத்து நிறுத்தியுள்ளார்.
யாழ் மருத்துவமனையில் இந்திய ராணுவம் நடத்திய படுகொலை பற்றிய கட்டுரை உதயன் பத்திரிகையில் பிரசுரம் செய்த போது அதனை எச்சரித்துள்ளார்.
உதயன் பத்திரிகையில் கட்டுரை எழுதியவர் தனது உயர் படிப்பிற்காக இந்தியா செல்ல முற்பட்டபோது இந்த தூதுவர் விசா வழங்காது பழி வாங்கியுள்ளார்.
இது தொடர்பான விபரங்களை பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் வெளிப்படையாக கூறியிருந்தும் இதுவரை இலங்கை அரசு இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் திருமுருகன்காந்தி அஞ்சலி செலுத்த மற்பட்டபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இப்போது ஈழத்திலேயே ஈழத் தமிழ்மக்கள் இறந்துபோன தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதை இந்திய அரசு தமது தூதுவர் மூலமாக தடுக்கிறது.
சிங்கள அரசுகூட தமது ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களுக்கு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்துவதை தடுக்கவில்லை. அனுமதிக்கின்றது.
ஆனால் இந்தியா ஈழ மண்ணில் வந்து தனது ராணுவத்திற்கு அஞ்சலி செலுத்திக் கொண்டு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்தக்கூடாது என்று கட்டளை இடுகின்றது.
இனி அடுத்து, இந்திய ராணுவம் யாரையும் கொல்லவில்லை. யாரையும் பாலியல் வல்லுறவு செய்யவில்லை என்று வரலாற்றை மாற்றுவார்கள்.
தமிழ் மக்களும் “இறந்தவர்கள் அனைவரும் தாங்களாகவே தற்கொலை செய்து கொண்டார்கள்” என்று நம்புவதைத் தவிர வேறு வழி இல்லை.
இன்னும் எத்தனை நாளைக்கு இந்த அவலத்தை தமிழ் மக்கள் அனுபவிப்பது?
இந்திய தூதருடன் விருந்துண்டு மகிழும் எமது தலைவர்கள் இது தொடர்பாக அக்கறை கொள்ள மாட்டார்களா?
.

•தந்தை பெரியாரின் தடி கொண்டு

•தந்தை பெரியாரின் தடி கொண்டு
சுவாமி நித்தியானந்தாவை வரவேற்போம்!
நடிகை ரஞ்சிதா புகழ் நித்தியானந்தா சுவாமி என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்தளவு பிரபல்யம்.
நாட்டில 70 குழந்தை செத்தால் என்ன. சுனாமியே வந்தால் என்ன. எதைப் பற்றியும் கவலைப்படாமல் அழகான பெண்களுடன் செல்பி எடுத்து வெளியிட்டுக் கொண்டிருப்பவர் இந்த சுவாமி.
நீண்ட நாட்களாக சுவாமிகளின் சிடி , டிவிடி எதுவும் காணவில்லையே என்று பார்த்தால் சுவாமிகள் விரைவில் ஈழத்திற்கு விஜயம் செய்யப் போகிறாராம் என்ற செய்தி வருகிறது.
நடிகை சொர்ணமால்யா புகழ் காஞ்சி சங்கராச்சாரி சுவாமிகளையே வருமாறு முதலில் அழைப்பு விடுக்கப்பட்டதாம்.
ஆனால் கடல் கடக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு காரணமாக காஞ்சி சங்கராச்சாரி வரமுடியாததால் தற்போது நித்தியானந்தசுவாமி வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாம்.
வழக்கம்போல் இதற்கான சகல ஏற்பாடுகளையும் யாழ் இந்திய தூதரே மேற்கொண்டு வருகிறாராம்.
சுவாமிகளுடன் அவருடைய சீடர் ரஞ்சிதா மேடமும் வருவார் என பக்தர்களுக்கு உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளதாம்.
போகிறபோக்கைப் பார்த்தால் சன் டிவிக்கு மீண்டும் ஒரு நல்ல சிடி கிடைக்கும் போல் இருக்கிறது.
ஆனால், தந்தை பெரியாரின் கைத்தடி எம்மிடம் உண்டு. அது கொண்டு சுவாமி நித்தியானந்தாவை எதிர்கொள்ளும் தைரியம் எமக்குண்டு.
“உன் சாத்திரத்தை விட
உன் முன்னோரை விட
உன் வெங்காயம் வெளக்கமாத்த விட
உன் அறிவு பெரிது. அதை சிந்தி”
-தந்தை பெரியார்.

•தனது ராணுவத்திற்கு அஞ்சலி செலுத்தும் இந்திய ராணுவ தளபதி

•தனது ராணுவத்திற்கு அஞ்சலி செலுத்தும் இந்திய ராணுவ தளபதி
தன் ராணுவத்தால் கொல்லப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்குவாரா?
யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் நினைவிடத்தில் இந்திய ராணவ தளபதி நேற்றைய தினம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கொல்லப்பட்ட தமது ராணுவ வீரர்களுக்கு 30 வருடங்களின் பின் இந்திய ராணுவ தளபதி யாழ்ப்பாணம் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதேவேளை இந்திய ராணுவத்தால் கொல்லப்ட்ட தமிழ் மக்களுக்கு இன்னும் நியாயம் வழங்கப்படவில்லை.
1987ம் ஆண்டு அமைதிப்படை என்னும் பெயரில் வந்த இந்திய ராணுவம் 8000ற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்களை கொன்றது.
இந்திய ராணவம் 600க்கும் மேற்பட்ட தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது.
79 வயது மூதாட்டியைக்கூட இந்திய ராணுவம் பாலியல் வல்லுறவு செய்தது என அப்போதைய பிரதமர் பிரேமதாசா பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
பல கோடி ரூபா பெறுதியான தமிழ் மக்களின் சொத்துக்கள் இந்திய ராணுவத்தால் சேதமாக்கப்ட்டன.
இவை குறித்து இதுவரை எந்தவிதமான விசாரணையும் செய்யப்டவில்லை. 30 வருடமாகியும் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கப்படவில்லை.
மிகப் பெரிய துயரம் என்னவெனில், தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குமாறு தமிழ் தலைவர்கள் எவரும் இதவரை இந்தியாவிடம் கோரவில்லை.
ஆனாலும் ஆறுதல் தரும் வண்ணம் தமிழ்தேசிய பண்பாட்டு பேரவையானது இந்திய ராணுவ தளபதியின் விஜயம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளது.
தலைவர்கள் சோரம் போனாலும், தலைவர்கள் துரோகம் புரிந்தாலும் தமிழ் மக்கள் ஏமாற மாட்டார்கள் என்பதை காட்டுவார்கள்.

•என் சோத்தை திருடிய பக்கத்து வீட்டு நாய்!

•என் சோத்தை திருடிய பக்கத்து வீட்டு நாய்!
இதுவரை,
என் வீட்டுச் சோத்தை திருடிய நாய்
இப்போது என்னைப் பார்த்து குரைக்கிறது
நான் என் இறந்போன உறவுகளுக்கு
அஞ்சலி செலுத்தக் கூடாது என்று
நான் என்ன செய்ய வேண்டும் நண்பர்களே?
கல் கொண்டு எறிந்துவிட நினைத்தால்
அது பெரிய நாய். ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்கள்.
தடி கொண்டு கலைத்துவிட முனைந்தால்
அப்புறம் சீனா நாய் வந்து விடும் என்கிறார்கள்.
என் வீட்டு நாய்களோ சீன நாயைக் கண்டால்
நன்றாக சத்தம் போட்டுக் குரைக்கின்றன – ஆனால்
பக்கத்து வீட்டு நாயைக் கண்டாலோ
தமது சூ - - க் கொடுத்துக் கொண்டு நிற்கின்றன.
நான் என்ன செய்ய முடியும் நண்பர்களே?
ஒரு பக்கம் இலங்கை (அரச) நாய் குரைக்கிறது
இன்னொரு பக்கம் இந்திய (அரசு) நாய் குரைக்கிறது
என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை.
நான் என்ன செய்ய வேண்டும் நண்பர்களே?
பலாலி விமான நிலையம் கொடுத்தாயிற்று
காங்கேசன் துறைமுகம் கொடுத்தாயிற்று
திருமலை துறைமுகம் கொடுத்தாயிற்று
சம்பூரில் 650 ஏக்கர் நிலம் கொடுத்தாயிற்று
மன்னார் எண்ணெய் வளம் கொடுத்தாயிற்று
இதுபோதாதென்று இப்போது
இறந்த எம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தக் கூடாது என்று
என்னைப் பாhத்து குரைக்கின்றது
நான் என்ன இந்திய அடிமையா நண்பர்களே?

•நல்லுர் திருவிழா !

•நல்லுர் திருவிழா !
வருடா வருடம் மக்கள் கூட்டம் அதிகரிப்பது ஏன்?
யுத்த நெருக்கடி காலத்தில் கூட இந்தளவு கூட்டம் வந்ததில்லை.
யுத்தம் முடிந்து 8 வருடங்களின் பின் கூட்டம் அதிகரிப்பது ஏன்?
மக்களுக்கு கடவுள் பக்தி அதிகரிக்கிறதா?
அல்லது
மக்களுக்கு தலைவர்கள் மீதான நம்பிக்கை குறைகிறதா?
அல்லது
ஒரு மன ஆறுதலுக்காக கோயிலுக்கு வருகிறார்களா?
அல்லது
தங்கள் ஆடம்பரத்தை காட்ட முனைகிறார்களா?
அமெரிக்க தூதுவர் கூட வந்த கூட்டத்தை பார்த்து ஆச்சரியப்பட்டதாக பெருமையாக போடுகிறார்களே. அது ஏன்?
ஒருபுறத்தில் பல கோடி செலவு செய்து திருவிழா கொண்டாடுகிறார்கள். மறுபுறத்தில் எமக்காக போராடியவர்கள் வாழ்வதற்காக பிச்சை எடுக்கிறார்கள்.
ஒருபுறத்தில் பல கோடி செலவு செய்து கோயில் கட்டுகிறார்கள். மறுபுறத்தில் கூரை கூட வேயாமல் பாடசாலை மழையில் ஒழுகிறது.
காணாமல் போனவர்களின் உறவுகள் 160 நாட்களுக்கு மேலாக போராடுகிறார்கள். இந்த கோயில் திருவிழாவுக்கு கூடிய கூட்டத்தில் ஒரு பாதிக் கூட்டமாவது அவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கலாமே!
இதில் மிகவும் வருத்தம் என்னவெனில், வித்யா கொலை வழக்கில் குற்றவாளி சுவிஸ்குமாருக்கு உதவிய அமைச்சர் விஜயகலா பக்தர்களுக்கு சர்க்ரை தண்ணீர் வழங்குகிறார்.
அப்படியென்றால் எல்லா பாவத்தையும் செய்துவிட்டு திருவிழாவில் கந்தனுக்கு லஞ்சம் கொடுத்தால் அவர் மன்னித்து விடுவாரா?
மாணவி வித்யாவுக்கு கடவுள் கந்தன் நியாயம் வழங்கமாட்டாரா? மாணவி வித்யா குடும்பம் ஏதாவது லஞ்சம் (காணிக்கை) தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா?
பக்தர்களே உங்கள் பதில் என்ன?

இவர் யார்?

இவர் யார்?
30 வருடங்களுக்கு முன்பு இவர் ஏன் கொல்லப்பட்டார்?
இவர் தவறு செய்திருந்தால் கைது செய்து நீதிமன்றத்தில் அல்லவா நிறுத்தியிருக்க வேண்டும்?
இவருக்குரிய தண்டனையை நீதிமன்றம் அல்லவா வழங்கியிருக்க வேண்டும்?
அதைவிடுத்து இவர் ஏன் தமிழக காவல்துறையால் நயவஞ்சகமாக கொல்லப்பட்டார்?
கோடிக் கணக்கான ரூபாய்களை ஊழல் செய்த அரசியல்வாதிகள் எல்லாம் சுதந்திரமாக நடமாடும்போது இவர் மட்டும் ஏன் சட்டவிரோதமாக கொல்லப்பட்டார்?
ஆம். இவர்தான் தோழர் தமிழரசன்.
அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ்நாடு விடுதலை அடைய வேண்டும் என்று ஆயுதம் ஏந்திப் போராடியதால் கொல்லப்பட்டவர்.
தமிழ்நாடு விடுதலை அடைவதே ஈழ விடுதலைக்கு செய்யும் உதவி என்று கூறியதால் கொல்லப்பட்டவர்.
தோழர் தமிழரசன் பற்றி அறிவதற்கு, செப்டம்பர் முதலாம் திகதி அவரது 30 வது நினைவு நாளில் வெளிவருகிறது , நான் எழுதிய “ ஓரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்”

இணைந்திருப்பது பிடல் காஸ்ரோவும் சேகுவாராவும் அல்ல.

இணைந்திருப்பது பிடல் காஸ்ரோவும் சேகுவாராவும் அல்ல.
இணைந்திருப்பது இரண்டு ஊழல் பேர் வழிகள்.
இவர்கள் நடத்தப்போவது புரட்சி அல்ல
இவர்கள் இதுவரை நடத்தியது ஆட்சி அல்ல. கொள்ளை
இனியும் இவர்கள் நடத்தப் போவது கொள்ளை மட்டுமே.
இந்த ஊழல் பேர்வழிகளின் ஆட்சியைக் கலைக்க ஆயிரம் காரணம் கூறலாம்.
ஆனால் இந்த ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதற்கு யாராவது ஒரு காரணம் கூறமுடியுமா?

•ஆமா, ஆபிரகாம் சுமந்திரன் என்று ஒருத்தர்

•ஆமா, ஆபிரகாம் சுமந்திரன் என்று ஒருத்தர் அங்கிட்டும் இங்கிட்டுமாய் ஓடிக்;கிட்டு திரிந்தாரே.
யாராவது பார்த்தீங்களா?
அண்மையில் ஜனாதிபதி தலைமையில் நடந்த அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு பங்காளிக் கட்சிகளை அழைத்துச் செல்லாமல் சம்பந்தர் அய்யாவை மட்டும் அழைத்துச் சென்றுள்ளார் சுமந்திரன்.
அது சரி. தமிழ் மக்கிள் பிரச்சனைகளை பேசுவதாக இருந்தால் பங்காளி கட்சி தலைவர்களையும் அழைத்துச் சென்றிருப்பார். சும்மா இருந்து மிக்சரும் ரீ யும் சாப்பிடுவதற்கு அவர்கள் எதற்கு என்று நினைத்து விட்டார் போலும்.
ஆனால், மகிந்தவை விரட்டி நல்லாட்சி அரசை கொண்டு வந்தது தாங்கள்தான் என்று பேசிவரும் சுமந்திரன் “நாங்கள் இணைந்து ஆட்சி செய்வோம் வாருங்கள்” என்று மகிந்தாவுக்கு சம்பந்தர் அய்யா அழைப்பு விடுத்தது குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார்.
இப்போது பிரச்சனை என்னவென்றால் மாகாணசபை அமைச்சர் டெனீஸ்வரன் பதவி விலக மறுத்து வருவது தொடர்பாக தமிழ்தேசியகூட்டமைப்பு பேச்சாளரான சுமந்திரன் ஏன் மௌனம் சாதிக்கிறார்?
தமிழரசுக்கட்சி அமைச்சர்கள் பதவி விலகிய போதும் டெனீஸ்வரன் பதவி விலக மறுக்கிறார்.
தனது டெலோ அமைப்பு கேட்டுக்கொண்டபோதும் அமைச்சர் டெனீஸ்வரன் பதவி விலக மறுக்கிறார்.
தற்போது டெலோ அமைப்பு அவரை கட்சியை விட்டு நீக்கியபோதும் அவர் பதவி விலக மறுக்கிறார்.
முதலமைச்சர் பதவி நீக்கியபோதும் அவர் ஒத்துழைக்க மறுக்கிறார். அதுமட்டுமல்ல சவால் விட்டுக்கொண்டு திரிகிறார்.
அமைச்சர் டெனீஸ்வரன் நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
அனால் இத்தனைக்கு பிறகும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எந்த கருத்தும் கூறாமல் மௌனமாக இருக்கிறார்.
இங்கு வேடிக்கை என்னவெனில் அமைச்சர் ரவி கருணாயக்கா பதவி விலகியபோது பாராட்டிய சம்பந்தரும் சுமந்திரனும் டெனீஸ்வரன் விடயத்தில் மௌனம் காக்கின்றனர்.