Thursday, August 31, 2017

•“ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்”

•“ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்”
தோழர் தமிழரசனை தெரிந்துகொள்வோம்!
தோழர் தமிழரசன் ரயிலுக்கு குண்டு வைத்து மக்களைக் கொன்ற பயங்கரவாதி என்று இந்திய அரசு கூறிவருகிறது.
ஆனால் தோழர் தமிழரசன் இறக்கும்போது அவர் கையில் சப் மிசின்கன் துப்பாக்கி இருந்தது.
அவருடைய தோழர்களிடமும் துப்பாக்கி இருந்தது.
அதைவிட அவர்களிடம் ஒறிஜினல் கிரினைட் என்னும் வெடிகுண்டுகள் இருந்தது. இதில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தியிருந்தாலும் அவர்கள் தப்பி சென்றிருக்க முடியும்.
இறக்கும் அந்த தருணத்தில்கூட அவர் ஆயுதத்தை பயன்படுத்தவில்லை. தன் தோழர்களையும் பயன்படுத்த அனுமதிக்கவில்லை.
அவர் ஏன் மக்களுக்கு எதிராக தன் ஆயுதத்தை பயன்படுத்தவில்லை என்பது பற்றி இந்திய அரசு கூறுவதில்லை.
தான் இறந்தாலும் பரவாயில்லை. தான் நேசித்த மக்களுக்கு எதிராக ஆயுதத்தை பயன்படுத்தக்கூடாது என்று நினைத்தவரையே பயங்கரவாதி என்று அரசு கூறுகிறது.
காவிரிப் பிரச்சனைக்காக கர்நாடக அரசு கட்டிய அணைமீது வெடிகுண்டு வைக்க தோழர் தமிழரசன் திட்டமிட்டிருந்தார். இது ஓரளவு அனைவரும் அறிந்த விடயம்தான்.
ஆனால் தோழர் தமிழரசன் விரும்பிய இன்னொரு பலரும் அறியாத விடயம் நடைபெறாமற் போய்விட்டது.
அது 40க்கு மேற்பட்ட அப்பாவி இளைஞர்களை நக்சலைட்டு என்று கொன்ற பொலிஸ் கமிஷனர் தேவாரத்தை பழி வாங்கவேண்டும் எனபதே.
பொலிஸ் கமிஷனர் தேவாரத்தை கொல்வதற்காக ஒருமுறையல்ல இரண்டுமுறை சென்னை விருகம்பாக்கத்தில் துப்பாக்கியுடன் காத்து இருந்தார் தோழர் தமிழரசன்.
ஆனால் தோழர் தமிழரசன் விருப்பம் நிறைவேற வில்லை. ஏன்? இதுபோன்று பல விபரங்கள் அறிய படியுங்கள் நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்”
செப்டம்பர் முதலாம் திகதி தோழர் தமிழரசனின் 30வது நினைவு நாளில் வெளிவருகிறது நான் எழுதியுள்ள நூல் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்”
குறிப்பு-
தோழர் தமிழரசனின் தயாரை தன் மேடையில் அமர்த்தி கௌரப்படுத்தினார் “நாம்தமிழர்” கட்சி சீமான்.
தோழர் தமிழரசனின் மீன்சுருட்டி அறிக்கையை புகழ்ந்து பேசியவர் “விடுதலை சிறுத்தைகள்” திருமாவளவன்
ஆனால் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த தோழர் தமிழரசனுக்கு தனது முள்ளிவாயக்கால் முற்றத்தில் நெடுமாறன் அய்யா இதவரை நினைவு சின்னம் வைக்கவில்லை.
படியுங்கள் நான் எழுதி வெளிவரும் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்”

No comments:

Post a Comment