Monday, August 14, 2017

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் இது புலம்பெயர் தமிழர் அறியாததா?

•எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்
இது புலம்பெயர் தமிழர் அறியாததா?
வடமாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் மாணவர்கள் அமரும் கதிரையின் படங்களைப் பாருங்கள்.
கல்வி கற்கும் மாணவர்கள் அமருவதற்கு ஒரு நல்ல கதிரைகூட இல்லாத நிலை காணப்படுகிறது.
அதேநேரம் வடமாகாணசபை அவைத் தலைவர் ஒரு வருடத்தில் பல லட்சம் ரூபா செலவில் 3 சொகுசு ஆசனங்களை இதுவரை வாங்கியுள்ளார்.
அவர் பதவியை விட்டு வெளியேறுவதற்குள் இன்னும் எத்தனை சொகுசு ஆசனங்களை வாங்கப் போறாரோ தெரியவில்லை.
எமது தலைவர்கள் எம் மக்களை கைவிட்டாலும் நாம் அப்படி விட்டுவிட முடியாது அல்லவா?
எம்மால் இயன்ற உதவிகளை எமது மக்களுக்கு செய்ய வேண்டியது எமது கடமை அல்லவா?
நல்லூர் திருவிழாவில் பத்தாயிரத்;திற்கு மேற்பட்ட புலம் பெயர் தமிழர்கள் கலந்து கொள்வதாக கூறுகின்றனர்.
இவ்வாறு கலந்து கொள்ளும் ஒருவர் விமான டிக்கட் உட்பட குறைந்தது ஒரு லட்சம் ரூபா செலவு செய்கிறார் என வைத்துக் கொள்வோம்.
அப்படியென்றால் பத்தாயிரம் பேரும் மொத்தம் 100 கோடி ரூபா வரையில் செலவு செய்கின்றனர். ( உண்மையான செலவு இதைவிட அதிகம்.)
இந்த 100 கோடி ரூபாவில் பாடசாலைகளுக்கு நல்ல கதிரை, ஜேசை தாராளமாக வாங்க முடியும்.
அதுமட்டுமல்ல வன்னியில் சில பாடசாலைகள் கூரை கூட மேயாத நிலையில் உள்ளன.
மாணவர்கள் மழையில் நனைந்தும் வெய்யிலில் காய்ந்தும் கல்வி கற்கும் அவல நிலை காணப்படுகிறது.
எனவே இந்த மாணவர்களுக்கு உதவுவது நமது கடமையாகும். அதுமட்டுமல்ல அவர்களுக்கு செய்யும் உதவி கடவுளுக்கு செய்யும் தொண்டாகும்.
ஏனெனில் எழுத்தறிவித்தவன் மட்டும் இறைவன் அல்ல. எழுத்தறிவு பெற உதவுபவனும் இறைவன் தான்.

No comments:

Post a Comment