Thursday, August 31, 2017

•அனைத்துலக காணாமல் போனோர் நாள்!

•அனைத்துலக காணாமல் போனோர் நாள்!
காணாமல் போனவர்களின் உறவுகள் 175 நாட்களுக்கு மேலாக போராடி வருகிறார்கள்.
போராடியவர்களில் இதுவரை நாலு பேர் மரணம் அடைந்து விட்டார்கள். ஆனால் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.
காணாமல் போனவர்களை கண்டு பிடிக்குமாறு அனுப்பிய தலைவர்களையும் காணவில்லை.
காணாமல் போனவர்களை ஒருவேளை கண்டு பிடித்தாலும் இந்த தலைவர்களை கண்டு பிடிக்க முடியுமா தெரியவில்லை.
ஒரு தலைவர் பெயர் “வாழ்நாள் வீணர்” சம்பந்தர் அய்யா
இன்னொரு தலைவர் பெயர் “சுத்துமாத்து “ சுமந்திரன்
மற்ற தலைவர் பெயர்” வெடி குண்டு” மாவை சேனாதிராசா
இவர்களை யாராவது கண்டால் தயவு செய்து அறிய தரவும்.
அடுத்த தேர்தல் வரை இவர்களின் தலைக் கறுப்பைக்கூட காணமுடியாது என்று ஒரு நண்பர் பெட் கட்டுகிறார்.
என்னவோ பாவம் மக்கள்!

No comments:

Post a Comment