Thursday, August 31, 2017

•என் சோத்தை திருடிய பக்கத்து வீட்டு நாய்!

•என் சோத்தை திருடிய பக்கத்து வீட்டு நாய்!
இதுவரை,
என் வீட்டுச் சோத்தை திருடிய நாய்
இப்போது என்னைப் பார்த்து குரைக்கிறது
நான் என் இறந்போன உறவுகளுக்கு
அஞ்சலி செலுத்தக் கூடாது என்று
நான் என்ன செய்ய வேண்டும் நண்பர்களே?
கல் கொண்டு எறிந்துவிட நினைத்தால்
அது பெரிய நாய். ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்கள்.
தடி கொண்டு கலைத்துவிட முனைந்தால்
அப்புறம் சீனா நாய் வந்து விடும் என்கிறார்கள்.
என் வீட்டு நாய்களோ சீன நாயைக் கண்டால்
நன்றாக சத்தம் போட்டுக் குரைக்கின்றன – ஆனால்
பக்கத்து வீட்டு நாயைக் கண்டாலோ
தமது சூ - - க் கொடுத்துக் கொண்டு நிற்கின்றன.
நான் என்ன செய்ய முடியும் நண்பர்களே?
ஒரு பக்கம் இலங்கை (அரச) நாய் குரைக்கிறது
இன்னொரு பக்கம் இந்திய (அரசு) நாய் குரைக்கிறது
என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை.
நான் என்ன செய்ய வேண்டும் நண்பர்களே?
பலாலி விமான நிலையம் கொடுத்தாயிற்று
காங்கேசன் துறைமுகம் கொடுத்தாயிற்று
திருமலை துறைமுகம் கொடுத்தாயிற்று
சம்பூரில் 650 ஏக்கர் நிலம் கொடுத்தாயிற்று
மன்னார் எண்ணெய் வளம் கொடுத்தாயிற்று
இதுபோதாதென்று இப்போது
இறந்த எம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தக் கூடாது என்று
என்னைப் பாhத்து குரைக்கின்றது
நான் என்ன இந்திய அடிமையா நண்பர்களே?

No comments:

Post a Comment