Thursday, August 31, 2017

•பிரான்ஸ் லாச்சப்பல் பிள்ளையார் சிரித்தார்?

•பிரான்ஸ் லாச்சப்பல் பிள்ளையார் சிரித்தார்?
சில வருடங்களுக்கு மன்னர் இந்தியாவில் பிள்ளையார் பால் குடித்த கதை கேள்விப்பட்டிருப்பியள்.
இப்போது பிரான்சில் லாச்சப்பல் பிள்ளையார் சிரித்தார் என்று கதை வருகிறது.( சும்மா கதைதான😉)
வீதியில் போட்டிக்கு தேங்காய் உடைத்ததைப் பார்த்து பிள்ளையார் சிரிக்காமல் வேறு என்னதான் செய்வார்?
ஊரில் கோயில்களில் உடைக்கப்படும் தேங்காய்கள் அப்படியே கொப்பறாவாக்கி எண்ணெய் எடுக்கப்படும்.
அந்த எண்ணெய் கோயிலில் தீபங்கள் எரிக்க பயன்படும். எந்தவொரு தேங்காயும் வீணாக எறிவதில்லை.
ஆனால் பிரான்சில் உடைக்கப்படும் தேங்காய்கள் அப்படியே குப்பை லாரியில் அள்ளி சென்று கொட்டப்டுவதாக கூறுகிறார்கள்.
காசு கொடுத்து தேங்காய் இறக்குமதி செய்து அதை வீணாக வீதியில் உடைப்பதும் அல்லாமல் குப்பை லாரிக்கும் பணம் கொடுத்து அள்ளி வீசுகிறார்கள்.
இங்கு பக்தியில் தேங்காய் உடைப்பதைவிட வீண் பெருமைக்காகவே பலர் உடைப்பதாக தெரிவிக்கிறார்கள்.
ஒருவர் 100 தேங்காய் உடைத்தால் மற்றவர் போட்டிக்கு 200 தேங்காய் உடைக்கிறார்களாம்.
இப்படியே போட்டிக்கு உடைத்துக் கொண்டு போனால் ஒருநாள் பிரான்ஸ் றோட் தேங்காயினால் மூழ்கடிக்கப்பட்டுவிடுமோ தெரியவில்லை?
சந்தணம் மெத்தினால் குண்டியில் பூசுவார்கள் என்பது போல் கஸ்டப்பட்டு உழைத்த பணத்தை இப்படி வீதியில் உடைத்து வீணாக்குகிறார்களே?
இந்த பணத்தை ஊரில் உள்ள வறிய மக்களுக்கு அனுப்பினால் அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்குமே.
தேங்காய் உடைப்பதில் காட்டும் போட்டியை ஊரில் உள்ள மக்களுக்கு உதவி செய்வதில் காட்டலாமே.
மக்கள் சேவையே மகேசன் சேவை.
குறிப்பு- இதைப் படித்தவிட்டு தேவாலயத்தில் மெழுகுதிரிக்கு செய்யும் செலவை ஏன் எழுதவில்லை என்று சிலர் கம்பு சுத்த வருவார்கள் பாருங்கள்.

No comments:

Post a Comment