Thursday, October 27, 2022

சிறுமி – அங்கிள் நீங்கள் நல்லவரா? கெட்டவரா?

சிறுமி – அங்கிள் நீங்கள் நல்லவரா? கெட்டவரா? சுமந்திரன் - ஏன்மா அப்படி கேட்கிறே? சிறுமி – சிறுவன் பாலச்சந்திரனை ஏன் கொன்றார்கள்? சுமந்திரன் - அவர் அப்பா பயங்கரவாதி. எனவே மகனும் பயங்கரவாதி என்று கூறி கொன்றார்கள். சிறுமி - அப்படியென்றால் ஏன் பயங்கரவாதி என்று கொல்லப்பட்ட ஜேவிபி தலைவர் ரோகண விஜேயவீராவின் பிள்ளைகளையும் பயங்கரவாதிகள் என்று சுட்டுக் கொல்லாமல் படிக்க வைத்தார்கள்? சுமந்திரன் - ஆம் அவரது ஆறு பிள்ளைகளையும் மட்டுமன்றி மனைவியையும் பாதுகாத்து பராமரித்து வருகிறார்கள். சிறுமி – பாலச்சந்திரன் தமிழர் என்பதால் கொல்லப்பட்டார். ரோகணாவின் பிள்ளைகள் சிங்களவர் என்பதால் கொல்லப்படவில்லை. எமக்கு நடந்தது இனப்படுகொலை என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும் உங்களுக்கு? சுமந்திரன் - ???? குறிப்பு - இன்று உலகம் சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடுகிறது. நாம் எப்போது கொல்லப்பட்ட எமது தமிழ் சிறுவர்களுக்குரிய நீதியை பெற்றுக்கொடுக்கப் போகிறோம்?

அதனால் என்ன?

அதனால் என்ன? அதிமுக வாக இருந்தால் அமைச்சரின் ஓசிப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை இல்லையா? இது சுத்த அதிகாரத் திமிர்த்தனம். விடியல் ஆட்சி விரைவில் முடியப்போகிறது.

எது அறுவடை செய்யப்பட வேண்டுமோ

எது அறுவடை செய்யப்பட வேண்டுமோ அது விதைக்கப்பட வேண்டும். தமிழத்தேசிய விடுதலைக்காக மாணவர்கள் மத்தியில் விதைக்கப்படுகிறது.

உஷ்! சத்தம் செய்யாதீர்கள்

உஷ்! சத்தம் செய்யாதீர்கள் எமது தலைவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள் மெதுவாக அவர்களுக்கு முதியோர்தின வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

எந்த மருத்துவமனைக்குள் புகுந்து

எந்த மருத்துவமனைக்குள் புகுந்து தமிழ் மக்களை இந்திய ராணுவம் கொன்றதோ அந்த யாழ் மருத்துவமனைக்கு முன்னால் காந்திசிலையை நிறுவி காந்தியின் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் இந்திய தூதர். அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்த திலீபனை கொன்றுவிட்டு அகிம்சையை போதித்த காந்திக்கு விழா எடுக்கும் இந்திய தூதர். என்னே கொடுமை இது?

இங்கிலாந்தில் இந்து ஆலயங்களை தாக்கப்பட்டபோது

இங்கிலாந்தில் இந்து ஆலயங்களை தாக்கப்பட்டபோது கண்டனம் தெரிவித்த இந்திய அரசு, இலங்கையில் சிங்கள அரசால் இந்து ஆலயம் அழிக்கப்படும்போது கண்டிப்பதில்லை. இந்திய அரசின் இந்த இரட்டை இந்து முகத்தை அம்பலப்படுத்தியதால் வேறு வழியின்றி இந்திய தூதர் திருகோணமலை கோவிலுக்கு சென்று பார்வையிட்டிருக்கிறார். இப்போதுகூட கோவில் புனரமைப்புக்கு உதவி செய்ய தயார் என்று கூறுகின்றாரேயொழிய சிஙகள அரசைக் கண்டிக்கவில்லை. ஏன் இந்த இரட்டை நிலை?

இந்திய அரசை எதிர்த்து திலீபன் உண்ணாவிரதம் இருக்கவில்ல

“ இந்திய அரசை எதிர்த்து திலீபன் உண்ணாவிரதம் இருக்கவில்லை. இந்திய அரசை நோக்கியே உண்ணாவிரதம் இருந்தார்” என்று இந்திய அரசின் ஏஜென்டுகள் கூறுகின்றனர். திலீபன் நினைவுதினத்தை குழப்ப முயன்றவர்கள் இப்போது வார்த்தை ஜாலங்களில் கிளப்கவுசில் உருட்ட முனைகின்றனர். இவர்கள் என்னதான் உருட்டினாலும் வரலாற்றில் திலீபன் பெயர் உச்சரிக்கப்படுகின்ற ஒவ்வொருவேளையிலும் இந்திய அரசின் துரோகம் மக்கள் மனதில் தோன்றுவதை இனி இவர்களால் ஒருபோதும் நிறுத்த முடியாது.

காந்தியின் அகிம்சை வழியில் இந்தியா சுதந்திரம் அடைந்ததா?

•காந்தியின் அகிம்சை வழியில் இந்தியா சுதந்திரம் அடைந்ததா? அகிம்சை வழியில் போராடி காந்தி சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார் என்று கூறப்படுகிறது. இதை இந்தியர்கள் எந்தளவுக்கு நம்புகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஈழத் தமிழர் பலர் நம்புகிறார்கள். ஏனெனில் சிறுவயது முதல் இது போதிக்கப்படுகிறது. இதுவே உண்மை என்று நம்ப வைக்கப்படுகிறது. அதனால்தான் அகிம்சை வழியில் போராடியிருந்தால் தீர்வு பெற்றிருக்க முடியும் என்று சுமந்திரனால் தைரியமாக கூறமுடிகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவில் நடந்தது என்ன? இதுபற்றி பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி ஒருவர் தன் நூலில் எழுதியிருப்பது வருமாறு, “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து எப்போதெல்லாம் மக்கள் வீதியில் இறங்கி ஆயுத புரட்சி செய்கிறார்களோ, அப்போதெல்லாம் காந்தி, தன் தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவார். இந்த வழியில் நாம் போராடுவது தவறு, நாம் அகிம்சையை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பார். மக்கள் புரட்சியால் நிலமை கட்டுக்கடங்காமல் போய், போராட்டம் தீவிரமடையும் பட்சத்தில், காந்தி அகிம்சை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க தொடங்குவார். பிறகு அந்த செய்தி நாடு முழுக்க பரவும், மக்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதி ஆவார்கள். இப்படியே நாங்கள் இந்தியாவை மேலும் 10 ஆண்டுகள் என தொடர்ந்து ஆண்டு கொண்டிருந்தோம்”. இதே நிலைமைதான் இலங்கையிலும் நடந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தல் பாதை மூலம் நடத்திய போராட்டம் யாவும் இலங்கை அரசு தொடர்ந்தும் தமிழ் மக்களை இன அழிப்பு செய்வதற்கே உதவி வந்தது. எனவே தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய இரண்டு முக்கிய விடயங்கள், (1) அகிம்சை வழியில் விடுதலை பெற முடியாது (2) ஆயுத போராட்டத்தின் மூலமே விடுதலை பெற முடியும்

வெறும் 800 போராளிகள் ஒரு லட்சத்து இருபதினாயிரம் இந்திய ராணுவத்தை

வெறும் 800 போராளிகள் ஒரு லட்சத்து இருபதினாயிரம் இந்திய ராணுவத்தை எதிர்க்க எப்படி துணிந்தார்கள்? டாங்கிகள் பீரங்கிகள் மட்டும்ல்ல நவீன போர் விமானங்கள் சகிதம் வந்தவர்கள் அமைதிப்படை அல்ல அது ஒரு அழிவுப்படை என்பதை எப்படி உணர்ந்தார்கள்? ஆம். அதற்கு இந்த 12 போராளிகளின் மரணங்கள் ஒரு முக்கிய காரணமாக அமைந்தன. திலீபன் மரணத்திற்கு எந்த இந்திய அரசு பொறுப்போ அதே இந்திய அரசுதான் இந்த 12 போராளிகளின் மரணத்திற்கும் பொறுப்பு ஆகும். இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து தமிழ் மக்கள் மீது போரைத் திணித்த இந்திய அரசு அதற்கான பழியை புலிகள் மீது போடுகிறது. ஆம். காட்டின் வரலாற்றை சிங்கம் எழுதினால் தானாக வந்து தன் வாயில் மாட்டாமல் தப்பி ஓட முயலும் மான்கள் யாவும் தவறானவர்கள் என்றே எழுதும்.

39 வருடமாக கொடிய அகதி வாழ்க்கை

39 வருடமாக கொடிய அகதி வாழ்க்கை. இதுபோதாதென்று அதிகாரிகளின் பாலியல் தொல்லை வேற. இந்த அப்பாவி ஈழத்தமிழ் அகதிப் பெண்களுக்காக யாருமே இரங்க மாட்டார்களா? இந்த துயர வாழ்வுக்கு ஒரு முடிவு அவர்களுக்கு கிட்டாதா? ராஜராஜசோழன் ஒரு இந்து என்று அடம்பிடிப்போர் இந்த இந்து பெண்கள் மீது அக்கறை காட்ட மாட்டார்களா?

திருச்சிமுகாமில் இருக்கும் ஈழ அகதிப்பெண்

திருச்சிமுகாமில் இருக்கும் ஈழ அகதிப்பெண் திருமதி.நளினிக்கு 12.08.2022 யன்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுப்படி இந்திய கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளின் இந்திய குடியுரிமை கோரிக்கைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

"நீ காணாமல் போய்விடுவாய்" - H. ராஜா..

"நீ காணாமல் போய்விடுவாய்" - H. ராஜா.. "உனக்கு என்னப்பா நீ பைத்தியம், என்ன வேணாலும் பேசலாம்" - சீமான் தரமான பதில். பாராட்டுகள்..

எல்லா நாடுகளிலும் குழந்தையை

எல்லா நாடுகளிலும் குழந்தையைக் காணவில்லை என்று அப்பா தேடுவார். ஆனால் இலங்கையில் மட்டுமே அப்பாவைக் காணவில்லை என்று குழந்தை தேடும் நிலை இருக்கிறது. அதுவும் போர் முடிந்து பதினொரு வருடம் கழிந்த பின்பும்கூட அப்பாவைத் தேடும் அவலநிலை தமிழ் இன குழந்தைகளுக்கு மட்டுமே இருக்கிறது. சமர் பல கண்ட களத்தை மறந்தோம் அதில் எமக்காக மாண்டவர்களை மறந்தோம் நிலத்தை மறந்தோம். இனத்தை மறந்தோம். எதிரி விட்டெறியும் எலும்புத் துண்டிற்காக குழந்தைகள் துயர் துடைக்க மறந்தோமே இந்தளவு கேவலமான இனமா இது?

சர்வதேச விலங்குகள் தினம்!

•சர்வதேச விலங்குகள் தினம்! ( இது அரசியல் பதிவு இல்லை) விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 4ம் திகதி சர்வதேச விலங்குகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அழிந்துவரும் விலங்குகளை பாதுகாக்கவும் அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. ஒருவர் தன் நாய்க்கு தமிழ் தெரியும் என்றும் தான் தமிழில் கூறுவதை அது புரிந்து செயற்படுவதற்கு 6 மாதம் எடுத்தது என்றும் கூறிக்கொண்டிருந்தார். அப்போது அவரது நாய் “ இந்த மனிதனுக்கு எனது மொழி புரிய 6 மாதம் எடுத்திருக்கிறது”என்று மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டதாம். இது பகிடிதான். ஆனால் இது கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது. ஏனெனில் உணர்வை வெளிப்படுத்தும் ஒரு ஊடகமே மொழி என்கிறார்கள். அப்படியென்றால் விலங்குகளும் தம் உணர்வுகளை வெளிப்படுத்த தமக்கு ஒரு மொழி வைத்திருக்கின்றனவா? விலங்கிற்கு மொழி இருக்கிறதா இல்லையா என்பதைவிட விலங்குகளுக்கு கணக்கு தெரியுமா என்பது என் மூளையைக் குடைகிறது. ஏனெனில் உதாரணத்திற்கு ஒரு பன்றி தன் 20 குட்டிகளை எப்படி நினைவில் கணக்கு வைத்திருக்கும்? குறிப்பு - இங்குள்ள படங்களை பார்த்துவிட்டு நான் விலங்குகளை கேவலப்படுத்திவிட்டதாக விலங்கு ஆர்வலர்கள் தயவு செய்து என்மீது கோபம் கொள்ள வேண்டாம்.

வந்தார்கள் கொன்றார்கள் சென்றார்கள்!!

•வந்தார்கள் கொன்றார்கள் சென்றார்கள்!! இது ஜீனியர்விகடனில் மதன் எழுதிய “வந்தார்கள், வென்றார்கள், சென்றார்கள்” கதை அல்ல. இது அமைதிப்படை என்று வந்து அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்துவிட்டு சென்ற இந்திய ராணுவத்தின் கதை. கொடுங்கோலன் என்றழைக்கப்பட்ட கிட்லர்கூட எதிரி நாட்டு மருத்துவமனைகளையோ நூலகத்தையோ தாக்கியது கிடையாது. ஆனால் அமைதிப்படை என்று வந்தவர்கள் யாழ் மருத்துவமனையைத் தாக்கி பல அப்பாவி தமிழ் மக்களை கொன்றார்கள். யாழ் மருத்துமனையில் மட்டும் படுகொலைகள் நிகழ்த்தப்படவில்லை. வல்வையில் நடத்தப்பட்டது. பிரம்படியில் நடத்தப்பட்டது. வடக்கு கிழக்கு முழுவதும் சுமார் இரண்டரை வருடங்கள் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். எழுநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்திய ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார்கள். 80 வயதுக் கிழவியைக்கூட பாலியல் வல்லுறவு செய்த பெருமை இந்திய அமைதிப்படைக்கே சேரும் என அன்றைய பிரதமர் பிரேமதாசா கூறியிருந்தார். புலிகள் பொதுமக்களுக்குள் இருந்து துப்பாக்கி பிரயோகம் செய்ததால் அப்பாவி பொது மக்கள் இறக்க நேரிட்டது என இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர். அப்படியென்றால் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டமைக்கு என்ன காரணம்? ஏன் இதுவரை ஒரு ராணுவம்கூட இதற்காக தண்டிக்கப்படவில்லை? அதுமட்டுமன்றி, அமைதிப்படையின் முதல் குண்டு புலிகளை தாக்கவில்லை. மாறாக ஈழநாடு பத்திரிகை அலுவலகத்தையல்லவா தாக்கியது. 48 மணி நேரத்தில் ஒரு லட்ச்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவ வீரர்கள் அமைதிப்படை என்று வந்தார்கள் அவர்கள் வெறும் துப்பாக்கியுடன் மட்டும் வரவில்லை. பீரங்கி, டாங்கி போன்ற கனரக ஆயுதங்களுடன் வந்தார்கள். ஒருபுறம் புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்கும்படி வற்புறுத்தினார்கள். மறுபுறம் புளட், டெலோ போன்ற இயக்கங்களுக்கு ஆயுதங்களை வழங்கி புலிகளை அழிக்கும்படி கூறினார்கள். இத்தனையும் இந்திய ராணுவம் செய்தது தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக அல்ல. மாறாக இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பிற்காகவே. இங்கு கொடுமை என்னவென்றால் இத்தனையும் செய்துவிட்டு அதற்காக இதுவரை ஒரு வருத்தம் கூட தெரிவிக்காதது மட்டுமன்றி தமிழ் மக்கள் தம் உறவுகளை நினைவு கூர்வதைக்கூட மிரட்டி தடுக்கின்றனர்.

காவல்துறையில் பணி புரியும் தன்னையே

காவல்துறையில் பணி புரியும் தன்னையே இப்படி நடத்துகிறார்கள் எனில் ராம்குமாரை எப்படி சிறையில் நடத்தியிருப்பார்கள் என்பதை இப்போது சவுக்கு சங்கர் உணர்ந்திருப்பார் என நம்புகிறேன். குறிப்பாக ஈழத் தமிழ் அகதிகள் எப்படி நடத்தப்பட்டிருப்பார்கள் என்பதை நன்கு உணர்ந்திருப்பார். இனியாவது வெளியில் வந்தபின் பொறுப்பாக பேசட்டும்

பொலிஸ், நீதிபதி, ஊடகம் மூன்றும்

பொலிஸ், நீதிபதி, ஊடகம் மூன்றும் அரசின் ஏவல்நாய்கள். கூட்டுக்களவாணிகள். நீதிபதி உத்தரவுப்படி சிறை வைக்கப்பட்ட எனக்கு மருத்துவசிகிச்சை அளிக்கும்படி நான் கோரியதை கேட்கக்கூட மறுத்துவிட்டார் அந் நீதிபதி. தமிழக சிறையில் ஈழத் தமிழ் அகதிகள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். குறிப்பு – சவுக்கு சங்கர் கவனத்திற்கு

திருவாரூரில் இருந்து

திருவாரூரில் இருந்து உங்க தலைவர் ரயிலில் எப்படி வந்தார்?

இந்திராகாந்தியைக் கொன்றது சீக்கியர்கள் என்றும்,

இந்திராகாந்தியைக் கொன்றது சீக்கியர்கள் என்றும், ராஜிவ் காந்தியைக் கொன்றது ஈழத் தமிழர்கள் என்றும் கூறுபவர்கள், மகாத்மா காந்தியைக் கொன்றது பிராமணர்கள் என்று ஏன் கூறுவதில்லை? அதுமட்டுமல்ல , காந்தி கொலையில் பட்டேல் மற்றும் இந்திய அரசின் பங்கு குறித்தும் இப் படம் பேசுகிறது.

பொன்னியின் செல்வனை படமாக எடுத்து

பொன்னியின் செல்வனை படமாக எடுத்து கோடி கோடியாக சம்பாதிப்பவர்கள் அதில் ஒரு சில கோடிகளை அவரது நினைவிடத்திற்கு செலவு செய்ய மாட்டார்களா?

75 படங்கள் கதை வசனம் எழுதி கலைஞர்

75 படங்கள் கதை வசனம் எழுதி கலைஞர் சம்பாதித்தது நாற்பத்தையாயிரம் கோடி ரூபா ஒரு முந்திரிகை தோட்டத்தில் இருந்து ஜெயா அம்மையார் சம்பாதித்தது முப்பதாயிரம் கோடி ரூபா ஆனால் இவர்கள் இருவரும் மாறி மாறி ஆட்சி செய்து தமிழகம் அடைந்த மொத்த கடன் ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபா இது எப்படி ?

என் கணவர் புலவரோட

"என் கணவர் புலவரோடு நான் வாழ்ந்த காலங்கள் துயரமானதுதான். நான் மட்டுமல்ல என் ஒட்டுமொத்த குடும்பமே பிரிவு துயரம் கொடுமைகளைத்தான் அனுபவித்தது. ஆயினும் இவையனைத்தும் எங்களை மனோரீதியில் பாதிக்காத அளவிற்கு அவரின் சமூக செயல்பாடுகள் நடவடிக்கைகள் மற்றும் அதன் நியாய தன்மைகள் மீது எங்கள் அனைவருக்குமே முழு நம்பிக்கையை ஊட்டியே வளர்த்தார்" - வாலாம்பாள்

இப்ப முதல்வர் ஆண்டு முழுவதும் “அன்னதானம்” என்கிறார்.

இப்ப முதல்வர் ஆண்டு முழுவதும் “அன்னதானம்” என்கிறார். அப்புறம் ஒரு அமைசர் வந்து “ஓசிச்சோறு” என்று கூற மாட்டாரா? அதற்கப்புறம் யாராவது மூதாட்டி வந்து தனக்கு ஓசிச்சோறு வேண்டாம் என்றால் அவர் மீது வழக்கு போடுவார்களே?

கரடியே காறித் துப்பிடிச்சு !!

கரடியே காறித் துப்பிடிச்சு !! இதையே வெற்றிமாறன் கூறியபோது கதறிய எச்ச.ராசா இப்போது கமலுக்கு என்ன செய்யப்போகிறார்?

விடியல் ஆட்சியின் விசித்திரம்!

விடியல் ஆட்சியின் விசித்திரம்! வேலூரில் அகதிகளுக்கு கட்டப்படும் வீடுகள் தரமற்ற முறையில் இருப்பதை சுட்டிக்காட்டினால் வீடுகளையல்லவா பரிசோதிக்க வேண்டும். மாறாக சுட்டிக்காட்டிய நாம்தமிழர் கட்சி உறவுகளை கைது செய்தால் அதன் அர்த்தம் என்ன? ஒருவேளை கமிஷன் முதல்வர் வரை செல்கிறதா?

அகிம்சை வழி, ஆயுத வழி

அகிம்சை வழி, ஆயுத வழி என்று இரண்டு வழிகள் உண்டு. இப்போது மூன்றாவதாக அறிவாயுதம் ஏந்துவோம் என இன்னொரு வழி கூறுகின்றார்கள். இப்படி ஒரு வழி இல்லை. அதுமட்டுமல்ல இது அகிம்சை வழி மற்றும் ஆயுத வழிக்கு அறிவு இல்லை எனவும் கருதுகின்றது. இந்த அறிவாயுத வழி என்பது சாரம்சத்தில் இப்போது இருக்கின்ற சமூகத்தை பேணுவவும் அதற்கு எதிரான மக்கள் போராட்டத்தை மழுங்கடிக்கவுமே வழி செய்யும்.

இந்திய அரசு தமிழர்களை கொச்சைப்படுத்துவதுடன்

இந்திய அரசு தமிழர்களை கொச்சைப்படுத்துவதுடன் தமிழர்களுக்கு ஒருபோதும் உதவாது என்பதை தமிழர்கள் உணர வேண்டும் என்று வவுனியாவில் போராட்டம் நடத்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்ன பதில் கூறப்போகிறார்?

இதைவிட அதிகமாகவும் வாய் விட்டு சிரித்திருக்கிறேன்

இதைவிட அதிகமாகவும் வாய் விட்டு சிரித்திருக்கிறேன். உலக புன்னகை தினத்திற்கு பதிவிட தேடியபோது இந்த படம்தான் சிக்கியுள்ளது. #உலக புன்னகை தினம் (07.10.2022)

உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்

உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று ஜெர்மனியரான காரல் மார்க்ஸ் லண்டனில் இருந்து கூறியதை ஏற்றுக்கொள்ளும் இந்த இந்திய கம்யுனிஸ்ட் கட்சியினர், உலக தமிழர்களே ஒன்று சேருங்கள் என்று ஈழத் தமிழரான நான் லண்டனில் இருந்து கூறக்கூடாதாம். இலங்கை போய் கூற வேண்டுமாம். பாவம் மார்க்ஸ்!

புரட்சியாளர் தோழர் சேகுவாரா!

புரட்சியாளர் தோழர் சேகுவாரா! இன்று புரட்சியாளர் தோழர் சே வின் நினைவு தினம் ஆகும். தன் வாழ்வின் இறுதிக் கணம்வரை உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய ஒரு உன்னதமான போராளியின் நினைவு தினம் ஆகும். துப்பாக்கி அவர் நெஞ்சை குறி பார்த்தபோதும் அவர் உயிருக்காக கெஞ்சவில்லை. “நான் சாகடிக்கப்படலாம். ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்” என்று அவர் முழங்கிய வார்த்தைகள் இன்று ஈழத் தமிழருக்கு உறுதியளிக்கிறது. அவர் தேர்தல் பாதையை முன்வைக்கவில்லை. மாறாக ஆயுதப் போராட்ட பாதையையே முன்னெடுத்தார். “உலகில் எங்கு அநியாயம் காணப்படுகிறதோ அங்கு கோபமும் வெறுப்பும் கொண்டு குமுறி எழுவாய் எனில் நீ என் தோழனே” என்று கூறினார் தோழர் சே.

முழந்தாளிட்டு வாழ்வதைவிட

“முழந்தாளிட்டு வாழ்வதைவிட நிமிர்ந்து நின்று இறப்பது மேல்” – சே

மதுரை சிறையில்

மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தவேளை ஜெயலலிதாவின் தூதுவர்கள் வந்து வழக்கை வாபஸ் பெறுவதுடன் பதவியும் தருவதாக கூறி கட்சி மாறும்படி கேட்டபோது அதை சுப்பக்கா மறுத்ததை நேரில் கண்டவன் நான். அவர் அரசியலில் இருந்து ஒதுங்காமல் தமிழத்தேசிய அரசியலில் பயணிக்க வேண்டும்.

மதுரை சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்தவேளை (

மதுரை சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்தவேளை (1992) கம்யுனிஸ்ட் கட்சி எம்.பி மோகன் அவர்கள் என்னை சந்தித்தார். அப்போது அவரிடம் ஈழத் தமிழர் போராட்டம் பற்றி அவரது கம்யுனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து எனது விமர்சனங்களை தெரிவித்தேன். எனது விமர்சனத்திற்கு அவர்களது இளம் தலைவர் காரத் அவர்களிடமிருந்து பதில் பெற்று தருவதாககூறி என் கடிதம் பெற்றுச் சென்றார். இதுவரை அதற்கான பதில் எனக்கு தரவில்லை. நான் வெளிநாட்டில் சொகுசாக இருந்துகொண்டு தமிழ்த்தேசியம் பேசுவதாக கூறும் கம்யுனிஸட் கட்சி பெண் பிரமுகர் இதை அறிவாரா? குறிப்பு – கீழே உள்ள படம் நான் இந்தியாவில் சொகுசாக(?) இருந்தபோது எடுத்தது.

புலம்பெயர் தமிழரின் வியாபாரத்திற்காக

புலம்பெயர் தமிழரின் வியாபாரத்திற்காக இம்முறையும் ஈழத் தமிழ் பெண் ஒருவரை பிக்பாஸில் இறக்கியுள்ளது விஜய் டிவி.

அக்-10, இன்று உலக மனநல தினம்

அக்-10, இன்று உலக மனநல தினம் இந்த தினம் எந்தளவு முக்கியமானது என்பது பற்றியோ குறிப்பாக இன்றைய நிலையில் எமது தமிழ் இனத்திற்கு இது எந்தளவு முக்கியமானது என்பது பற்றியோ எம்மிடையே போதியளவு விழிப்புணர்வு காணப்படவில்லை. எமது தமிழ் சமூகத்தில் மனக்கோளாறு என்பது பேசாப் பொருளாகவும் பொத்திப் பாதுகாக்கும் ரகசியமாகவும் இருந்து வருகிறது. பைத்தியம், கிறுக்கு, விசர் என்றும் நவீன தமிழில் லூசு, மெண்டல் என்றும் தரக்குறைவாக அழைக்கப்படுகிறது. தமிழ்படங்களில் மனநோய் உள்ளவர்கள் விநோதமானவர்களாகவும் விசித்திரமானவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றார்கள். இதனால் சிறுவர்கள் இவர்கள் மீது கல் எறிகின்ற கோர நிலை எமது சமூகத்தில் காணப்படுகிறது மனநோயாளர்கள் என்று சமூகத்தினால் முத்திரை குத்தப்படுபவர்கள் மீது பாரபட்சமும் வெறுப்பும் குரோதமும் காட்டப்படுகின்றன. குடும்பங்களிடையே இது ஒரு அவமானமாக பார்க்கப்படுகின்றது. மனநோயாளிகள் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்றார்கள். அவர்களை பாதுகாக்க வேண்டிய காப்பகங்கள்கூட அவர்களை கேவலமாக நடத்துகின்றன. அவர்களின் மனிதவுரிமைகள் மீறப்படுகின்றன. அவர்கள் பயங்கரமானவர்கள் , வக்கிர புத்தி கொண்டவர்கள் என்ற பயம் நிலவி வருகிறது. இந்த கருத்துகள் மக்களிடையே சகல மட்டங்களிலும் காணப்படுகின்றது. எனவேதான் இந்த மனநோய் பற்றி உலக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு எற்படுத்துவதற்காக உலக மனநல தினம் கொண்டாடப்படுகின்றது. மன நல பாதிப்பு அறிகுறிகள் தெரிந்தவுடனேயே மன நல சிகிச்சை, ஆலோசனை பெற வேண்டும் என்பதே, மன நல நாளின் நோக்கமாகக் கருதப்படுகிறது. மன நோய்கள் என்பது உடல்நோய்கள் போல யாருக்கு வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமென்றாலும் வரலாம். ஒரு நபர், வாழ்க்கையில் ஏதேனும் ஒரு கட்டத்தில் மன நல மருத்துவரின் ஆலோசனை தேவைப்பட்டவராகவே உள்ளார். குறைந்தது 4 பேரில் ஒருவருக்கு தொடர்ந்து சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு மன நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல் நலத்தைப் பேணுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல், மன நலத்தையும் பேணி பாதுகாப்பது ஒருவருடைய வாழ்க்கை தரத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது. இலங்கையில் நடந்து முடிந்த நீண்ட யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் வாழும் சுமார் 30வீதமான தமிழ் மக்கள் மனநோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. முன்னேறிய நாடுகள் என கருதப்படும் ஜரோப்பிய நாடுகளில் அரசாங்கம் மனநோய் பற்றி அதிக கவனம் எடுக்கிறது. அதற்காக அதிக பணம் ஒதுக்கிறது. ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இது குறித்து அரசு மட்டுமல்ல சமூக அக்கறை உள்ள அமைப்புகள்கூட கவனம் செலுத்தாமை துரதிருஸ்டவசமானது. மக்கள் மத்தியில் மனநோய்கள் மனக்கோளாறுகள் குறித்து பல குழப்பங்களும் தவறான புரிதல்களும் உள்ளன. மனநலம் பற்றிய தமிழ் நூல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. தற்போது மன நோய் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து இருக்கும் போதிலும், இன்னும் பல நேரங்களில் தாங்கள் மன நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை ஏற்க மறுத்து மறுதலிப்பதாலும் ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற்றுக் கொள்வதைப் பலர் தள்ளிப் போடுகின்றனர் . இதனால், எளிதில் செய்ய வேண்டிய சிகிச்சைகளைக் கடினமாக்குவதுடன் வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதார சூழ்நிலையால் பாதிக்கப்படுகின்றனர். அதனால், மன நல நோய்க்கு ஆரம்ப நிலை சிகிச்சை என்பது கட்டாயம். தவிர்த்தால் அதுவே பின்னாளில் சிக்கலாகி விடுகின்றது.

என்னை யாரோ பின் தொடர்கிறார்கள் - சுமந்திரன்

“என்னை யாரோ பின் தொடர்கிறார்கள்” - சுமந்திரன்

தமிழ் உணர்வு இருந்தால்

தமிழ் உணர்வு இருந்தால் அயலானும் தமிழன் ஆகிடுவான் என்று கமலஹாசன் கூறுகின்றார். சரி. நல்லது. ஆனால் ஈழத்தில் கொத்து கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்டபோது இந்த அயலான்களுக்கு ஏன் எந்த உணர்வும் வரவில்லை கமல் அவர்களே?

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை இடிக்கும்படி இந்திய தூதுவர் மிரட்டினார். ஆனால் சீன தூதுவர் இவ்வாறு எதுவும் மிரட்டவில்லை. மாறாக அதே யாழ் பல்கலைக்கழகத்திற்கு 50 லட்சம் ரூபா பெறுமதியான புலமைப்பரிசில்களை வழங்கியுள்ளார். யாழ் இந்துக்கல்லூரியில் இந்தியை திணிக்கும் இந்திய தூதர் இனி என்ன செய்யப்போகிறார்?

இந்திய படையின் பிரம்படிப் படுகொலைகள்

•இந்திய படையின் பிரம்படிப் படுகொலைகள் 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ம் திகதி யாழ்ப்பாணம் பிரம்படி வீதியில் 50க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இந்திய அமைதிப்படையால் கொல்லப்பட்டனர். யாழ் மருத்துவமனை முன்னால் காந்திசிலை நிறுவி காந்தி ஜெயந்தி கொண்டாடும் இந்திய தூதர் ,பிரம்படியில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு குறைந்த பட்சம் ஒரு வருத்தம்கூட இதுவரை தெரிவிக்கவில்லை. இந்திய தூதருடன் சேர்ந்து காந்திக்கு விழா எடுக்கும் எம் தலைவர்களும்கூட பிரம்படியில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதில்லை. ஒருவேளை அஞ்சலி செலுத்தினால் இந்திய தூதர் கோபம் கொள்வாரோ என்ற அச்சமா?

என்னடா இது ஈழத் தமிழனுக்கு வந்த சோதனை?

என்னடா இது ஈழத் தமிழனுக்கு வந்த சோதனை? ஆண்டவரே! பிளீஸ் எங்களை விட்டுவிடுங்கள். நாங்கள் எற்கனவே ரொம்ப நொந்துபோய் இருக்கிறோம்.

யாழ்ப்பாணத்தில் மோடியின் இந்திய தூதர்

யாழ்ப்பாணத்தில் மோடியின் இந்திய தூதர் இந்தி மொழியை திணிப்பதும் தமிழைக் காப்பாற்றவா அண்ணாமலையாரே?

“விபச்சாரி” என்ற சொல் மருவி “மீடியா”

“விபச்சாரி” என்ற சொல் மருவி “மீடியா” என்று வந்ததாக சிலர் கூறுகின்றார்கள். இந்துப் பேப்பரில் வரும் செய்திகளை படிக்கும்போது அது உண்மைதானோ என்று எண்ணத் தோன்றுகின்றது. எப்படி கொஞ்சம்கூட கூச்சம் இன்றி புலிகள் குறித்து பொய் செய்திகளை பரப்புகின்றனர்?

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக தமிழர்களும் ஈழத் தமிழர்களும்

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக தமிழர்களும் ஈழத் தமிழர்களும் சேர்ந்து போராடுவதற்கு எதிரியே நகர்த்துகிறான்.

தமிழன் எல்லா நாட்டிலும் இருக்கிறான்.

“தமிழன் எல்லா நாட்டிலும் இருக்கிறான். ஆனால் தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை” “தமிழ்நாட்டில் எல்லா கட்சியிலும் தமிழன் இருக்கிறான். ஆனால் தமிழனுக்கு என்று ஒரு கட்சி இல்லை” “வீழ்ந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கிற என் தலைவன் பிரபாகரனை பிடிக்கும்” - பிக்பாஸ் போட்டியாளர் அசீம் இவரது கருத்துக்களை விஜய் டிவி அனுமதிக்குமா?

காஷ்மீர் சுதந்திரத்திற்கு குரல் கொடுத்த தலைவர்

காஷ்மீர் சுதந்திரத்திற்கு குரல் கொடுத்த தலைவர் அல்தாப் ஷா இந்திய சிறையில் மரணமடைந்துள்ளார். அவருக்கு எமது அஞ்சலிகள். கடந்த 5 வருடங்களுக்கு மேலாக அவரை அடைத்து வைத்திருந்ததுடன் அவருக்கு மருத்துவ சிகிச்சைகூட அளிக்க மறுக்கப்பட்டதாக அவரது மகள் தெரிவித்துள்ளார். தனது நாட்டில் சிறுபான்மை தேசிய இனங்களை அடக்கி ஆளும் இந்திய அரசு ஈழத்தில் தமிழருக்கு உதவும் என நம்புவர்களை என்னவென்று அழைப்பது?

அரசியல் லாபம் கருதி தேவர் குருபூசையில் கலந்துகொள்ளும் தலைவர்கள்,

அரசியல் லாபம் கருதி தேவர் குருபூசையில் கலந்துகொள்ளும் தலைவர்கள், மோடி இம்முறை கலந்துகொள்வதை அரசியல் லாபம் என்கின்றனர்.

நியாயமானது மட்டுமல்ல

நியாயமானது மட்டுமல்ல அவசியமான கோரிக்கையும்கூட. ஏற்கனவே பிற மாநிலங்களில் இவ்வாறு சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. எனவே தமிழர் நலன் கருதி திராவிட முதல்வர் சட்டம் இயற்றுவாரா?

தன்வாழ்நாள் முழுவதும் தமிழ் இனத்திற்காக அயராது இயங்கிய டேவிட் அய்யா

தன்வாழ்நாள் முழுவதும் தமிழ் இனத்திற்காக அயராது இயங்கிய டேவிட் அய்யா தன்வாழ்நாள் முழுவதும் தமிழ் இனத்திற்காக அயராது இயங்கிய டேவிட் அய்யா அவர்கள் 11.10.2015யன்று தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டார். அவர் தனக்காக எந்த சொத்தும் சேர்க்கவில்லை. மாறாக தனது சொத்தை எல்லாம் தமிழ் இனத்திற்காக செலவு செய்தார். அவர் தனக்கு எந்த பதவியையும் தேடிக்கொள்ளவில்லை. மாறாக தமிழ் இனத்திற்காக தனது உழைப்பையெல்லாம் கொடுத்தார். அவர் தனது இனத்திற்கு ஒருபோதும் துரோகம் இழைத்தவர் அல்லர். மாறாக தமிழ் இனத்திற்காக தன்னையே தியாகம் செய்தவர். அவர் கொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தால் பதவிகளைப் பெற்றிருக்கலாம். சொகுசாக வாழ்ந்திருக்கலாம். எந்த நெருக்கடியிலும் அவர் தனது கொள்கைகளை விட்;டுக்கொடுக்கவில்லை. அதனால் அவரை கொடிய பயங்கரவாதி என்று இந்திய அரசு லிஸ்ட்டில் வைத்திருந்தது. அவர் மீது மதிப்ப வைத்திருந்தவர்கள் பலர் புலம்பெயர்ந்த நாடுகளில் வசதியாக இருக்கின்றனர். அவர் விரும்பியிருந்தால் அவர்களிடம் உதவி பெற்று வசதியாக வாழ்ந்திருக்கமுடியும். அவர் இறுதிவரை எளிமையாக வாழ்ந்து மடிந்தள்ளார். அவருடைய தியாகம் ஒருபோதும் வீண்போகாது. வரலாறு அவரை நிச்சயம் நினைவில் கொள்ளும்.

பின்லாந்து வெளிநாட்டமைச்சரை

பின்லாந்து வெளிநாட்டமைச்சரை சந்தித்து கஜேந்திரன் எம்.பி உரையாடியுள்ளார். அந்தந்த நாடுகளில் அந்தந்த மொழிகளை கற்று அந்தந்த நாட்டு தலைவர்களுக்கு புரியும் மொழியில் பேச ஆரம்பித்துள்ளனர் புலம்பெயர் தமிழர்களின் அடுத்த சந்ததியினர். அவர்கள் தம் இலக்கை அடையாமல் ஓயமாட்டார்கள். இது உறுதி.

பதவியில் இருந்து விரட்டப்பட்ட

பதவியில் இருந்து விரட்டப்பட்ட இனப்படுகொலையாளியை தேடிச்சென்று கொஞ்சம்கூட கூச்சமின்றி கைகுலுக்கும் முன்னாள் நோர்வே சமாதான தூதர். தமிழர்கள் நம்பி ஏமாந்த மனிதர்களில் இந்த சமாதான தூதரும் (எரிக் சொல்கைம்) ஒருவர்

இந்தியாவில் படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலம்

இந்தியாவில் படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலம் அதுவும் கம்யுனிஸ்ட்டுகள் ஆட்சியின் கீழ் உள்ள மாநிலம். அந்த கேரள மாநிலத்தில் நரபலி. அதுவும் தமிழ் பெண் ஒருவர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறார். நாலு சீட்டுக்கும் 25 கோடி ரூபாவுக்கும் அறிவாலயம் வாசலில் வீழ்ந்து கிடக்கும் தமிழக கம்யுனிஸ்டுகள் இதற்கு என்ன கூறப்போகிறார்கள்?

தாம் ஆட்சிக்கு வந்தால் ஏழு தமிழர்களையும்

தாம் ஆட்சிக்கு வந்தால் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தவர்கள், பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தவுடன் அவரை அழைத்து கட்டிப்பிடித்து அவர் விடுதலைக்கு உரிமை கோரியவர்கள், இப்போது அந்த ஏழு தமிழரில் இருவரின் விடுதலைக்கு தம் பொறுப்பை தட்டிக்கழிப்பது ஏன்?

டென்மார்க் சென்ற ஈழத் தமிழன்

டென்மார்க் சென்ற ஈழத் தமிழன் அங்கு குடியுரிமை பெற்று தேர்தலில் போட்டியிடவும் முடிகிறது. ஆனால் வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டை நம்பிச் சென்ற ஈழத் தமிழன் இன்றும் அகதியாகவே இருக்கின்றான். ஈழத் தமிழர் மீதான திராவிட அக்கறை இது?

இலங்கையில் வடக்கில் சீன ஊடுருவலால்

இலங்கையில் வடக்கில் சீன ஊடுருவலால் தமிழ்நாட்டிற்கே பெரும் ஆபத்து உண்டு. இது குறித்து மோடி அக்கறை இன்றி இருக்கலாம். ஆனால் தமிழக முதல்வர் எப்படி கவலை கொள்ளாமல் இருக்கிறார்?

தமிழ்நாடு என்று பெயர் சூட்ட கோரி

தமிழ்நாடு என்று பெயர் சூட்ட கோரி உண்ணாநோன்பு இருந்து உயிர்நீத்த பெருந்தமிழர் சுந்தரலிங்கனார் அவர்களது நினைவைப் போற்றுவோம்...

இந்த உதவி எப்போது யாருக்கு வழங்கப்பட்டது

இந்த உதவி எப்போது யாருக்கு வழங்கப்பட்டது என்ற விபரத்தை யாராவது RSS தெரிவிப்பார்களா? ஒருவேளை இந்துக்கோயில்களை இடிப்பதற்கு நன்றி தெரிவித்து சிங்கள பௌத்த குடும்பங்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டிருக்கிறதா?

இந்திதான் இந்தியா என்றால்

இந்திதான் இந்தியா என்றால் இந்தியாவில் பல நாடுகள் உருவாகும்

நாங்களும் இந்துதான் என்று சொல்லிக்கொண்டு

நாங்களும் இந்துதான் என்று சொல்லிக்கொண்டு டில்லி சென்று இந்திய அரசின் காலை நக்க முயலும் ஈழத்து நாய்க்குட்டிகள். இந்து தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று காசி ஆனந்தன் விதைத்த நச்சு விதையின் விளைச்சல் இது.

சில நாய்க்குட்டிகளை வைத்து திலீபன் நினைவு

சில நாய்க்குட்டிகளை வைத்து திலீபன் நினைவு தினத்தை குழப்ப முயன்ற யாழ் இந்திய தூதருக்கு தமிழ் மக்கள் அளித்துள்ள பதில் இது. யாழ் பிரம்படியில் இந்திய படையால் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்கு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

என்னைப்பற்றி உனக்கு தெரியும்

என்னைப்பற்றி உனக்கு தெரியும் உன்னைப் பற்றி எனக்கு தெரியும் எங்க இரண்டு பேரைப் பற்றியும் ஊருக்கே தெரியும் - கனிமொழி மைன்ட் வொய்ஸ்

சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் எம்.பி களை

சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் எம்.பி களை மோடிக்கு கடிதம் அனுப்ப வைத்தார் இந்திய தூதர். அதற்கு இன்னும் பதில் வரவில்லை. இப்போது சில முன்னாள் போராளிகளை டில்லிக்கு அனுப்பி நாங்களும் இந்து என்று கூற வைத்துள்ளார் இந்திய தூதர் தமிழ் மக்கள் மத்தியில் பல பிரிவுகளை உருவாக்கும் இந்திய தூதரின் சூழ்ச்சிக்கு பலியாகும் நம்மவர்கள்.

ஈழத் தமிழர்களை சிதைப்பதற்கே

ஈழத் தமிழர்களை சிதைப்பதற்கே இந்திய அரசும் அதன் தூதுவரும் இந்துத்துவாவை ஈழத்தில் விதைப்பதாக தோன்றும். ஆனால் பரஸ்பரம் ஆதரவு என்ற நிலையில் இருந்து சேர்ந்து பயணித்தல் என்ற அடுத்த நிலைக்கு ஈழத் தமிழரும் தமிழக தமிழரும் நகர்ந்து விடுவதை தடுப்பதற்காகவே இதனை செய்கின்றனர் என்பதை காலம் உணர்த்தும்.

“குழல் இனிது யாழ் இனிது என்பர்

“குழல் இனிது யாழ் இனிது என்பர் ஈழத் தமிழ் கேளாதவர்” ஜனனி இன்னும் சில நாட்கள் பிக்பாஸில் நீடித்தால் தமிழக மக்கள் பலரை “கதைக்கிறம்” சொல்ல வைத்துவிடுவார்.

வீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி

வீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி இன்னொரு தோளுக்காக காத்துக் கொண்டிருக்கிறது! வீரப்பன் யானைத் தந்தந்களை கடத்திய போது இந்திய அரசால் கொல்லப்படவில்லை. வீரப்பன் சந்தன மரங்களை வெட்டியபோதும் இந்திய அரசால் கொல்லப்டவில்லை. வீரப்பன் பொலிசாரைக் கொன்றபோதும்கூட இந்திய அரசால் கொல்லப்படவில்லை. ஆனால் வீரப்பன் தமிழ்நாடு விடுதலையை முன்வைத்ததும் உடனடியாக இந்திய அரசால் சதி செய்து கொல்லப்பட்டார். தமிழ்நாடு விடுதலையை முன்வைக்கும் பலர் உயிரோடுதானே இருக்கிறார்கள். அப்படியிருக்க வீரப்பனை மட்டும் கொன்றார்கள் என்று எப்படி சொல்ல முடியும்? உண்மைதான். நல்ல கேள்விதான். இதற்கு காரணம் வீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கியே. வீரப்பனின் துப்பாக்கி யானைகளை சுட்டுக் கொன்ற போது இந்திய அரசு கவலை கொள்ளவில்லை. வீரப்பனின் துப்பாக்கி பொலிசாரை சுட்டுக் கொன்றபோதும்கூட இந்திய அரசு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் வீரப்பன் துப்பாக்கி தமிழ்நாடு விடுதலைக்காக சுடப் போகிறது என்று அறிந்ததும் உடனடியாக இந்திய அரசால் கொல்லப்பட்டார். கொலைகாரன், கொள்ளைக்காரன், கடத்தல்காரன் என்று அழைக்கப்படும் வீரப்பன் முன் வைத்த கோரிக்கைகள் சில, (1) 10ம் வகுப்புவரை தமிழ் வழிக் கல்வி வேண்டும் (2) வாசாத்தியில் பாதிக்கப்ட்ட பெண்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் (3) தடா சட்டத்தில் அடைக்கப்பட்ட அப்பாவிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் (4) பெங்களுரில் மூடப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை திறக்க வேண்டும் (5) காவிரி பிரச்சனை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். புரட்சிதலைவி என்று அழைக்கப்பட்ட ஜெயா அம்மையார் சிறையில் அடைக்கப்பட்டபோது முன் வைத்த கோரிக்கைகள் வருமாறு, (1)தனக்கு சுகர், மூட்டுவலி இருப்தால் சலுகை தர வேண்டும் (2)சிறையிலும் தன்கூட சசிகலா இருக்க அனுமதிக்க வேண்டும் (3)வயது மூப்பு காரணமாக ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் தமிழ் மக்களே! இப்போது புரிகிறதா ஏன் வீரப்பன் கொல்லப்பட்டார் என்று? குறிப்பு – 18.10.2022 வீரப்பன் நினைவு தினத்தை முன்னிட்டு இது ஒரு மீள்பதிவு.

ஒவ்வொரு வருடமும் 85000கோடி ரூபா

ஒவ்வொரு வருடமும் 85000கோடி ரூபா தமிழ்நாட்டில் இருந்து வரியாக பெற்றுக்கொள்ளும் இந்திய அரசு, 800 தமிழக மீனவர் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டபோதும் கவலை கொள்ளவில்லை. இப்போது ஈழத்தில் சீன ஊடுருவல் குறித்து தமிழ்நாட்டிற்கு ஏற்படும் ஆபத்து குறித்தும் கவலை கொள்ளவில்லை. தமிழ்நாட்டை இந்தியாவின் ஒருபகுதியாக இந்திய அரசு கருதாதபோது எதற்காக வருடம்தோறும் 85000கோடி ரூபாவை தமிழ்நாடு இந்திய அரசுக்கு வழங்க வேண்டும்?

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயா

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயா தமிழர்களை கடத்தி முதலைக்கு இரையாக்கினார் என்ற குற்றச்சாட்டு உண்டு. கோத்தபாயாவின் உத்தரவுப்படி தமிழர்களை கடத்திய உண்மையை வெளி உலகிற்கு கூறியவரையே இப்போது கடத்தி விட்டார்கள். தமிழருக்கு எப்போது எப்படி நீதி கிடைக்கும்?

காட்டில் உள்ள மரங்கள்

காட்டில் உள்ள மரங்கள் தொடர்ந்து கோடரிகளால் வெட்டி தறிக்கப்படுகின்றன. ஆனாலும் மரங்கள் தொடர்ந்தும் அக் கோடரிகளை நம்பி வருகின்றன. ஏனெனில் மரத்தினால் செய்யப்பட்ட தன் கைப்பிடியைக்காட்டி “ நானும் உங்களில் ஒருவன்தான்” என கோடாரி ஏமாற்றுவதை மரங்கள் நம்புகின்றன. – துருக்கிய பழமொழி

இரு பெண்கள்

இரு பெண்கள் இருவரும் ஈழத் தமிழர்கள் ஆனால் ஜனனிக்கு கிடைத்த புகழ் விளம்பரம் தர்ஜினிக்கு கிடைக்கவில்லை. இதுதான் பிக்பாஸ் பலம்?

மீண்டும் ஆயுத போராட்டம் வெடிக்கும்

மீண்டும் ஆயுத போராட்டம் வெடிக்கும் என்பது உண்மைதான். ஆனால் மீண்டும் அந்த போராட்டத்தை அடக்குபவராக இவர் இருப்பாரேயொழிய, இவர் ஒருபோதும் மக்களை ஆயுத போராட்டத்திற்கு தயார் செய்பவராக இருக்க மாட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் சீமானை சந்தித்திருப்பது வரவேற்கத்தக்கது. இச் சந்திப்பு ஆரியம் திராவிடத்திற்கு மட்டுமன்றி கிளப்கவுசில் சீமான் மீது அவதூறு செய்யும் சுமந்திரன் தம்பிகளுக்கும் நிச்சயம் எரிச்சல் கொடுக்கும்.

மறக்க முடியாத தட்டிவான் பயணம்!

•மறக்க முடியாத தட்டிவான் பயணம்! படிக்கிற காலத்தில் தினமும் பருத்தித்துறையில் இருந்து நெல்லியடிவரை இந்த தட்டிவானில் டிக்கியில் நின்று பயணம் செய்தது இன்றும் நினைவில் இருக்கிறது. நாம் இப்படி டிக்கியில் நின்று வரும்போது எமக்கு அடிப்பதற்காக பொலிஸ் சார்ஜன்ட் மாணிக்கராசா சங்குன்னி கடையில் நீண்ட தடியுடன் ஒளித்து நிற்பார். சார்ஜண்ட் மாணிக்கராசா ஒளித்து நிற்பதை வீதியில் நிற்பவர்கள் இரகசியமாக சிக்னல் தருவார்கள். உடனே தட்டிவான் டிறைவர் எம்மை தலையை உள்ளே செருகும்படி கூறுவார். எமது உடல் முழுவதும் டிக்கியில் நிற்கும். தலையை மட்டும் குனிந்து தட்டி வானுக்குள் செருகி நிற்போம். இப்படி நின்றால் மாணிக்கராசா அடிக்க மாட்டார். அது ஏன் என்று இன்றுவரை எனக்கு புரியவில்லை.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை எதற்காக

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை எதற்காக ஈழத் தமிழர் என செய்தி வெளியிடுகின்றனர்? உணர்வாளர்கள் மீது பொய் வழக்கு போட்டு ஏன் தண்டனை வழங்கப்படுகிறது? புலிகள் மீதான தடையை நீடிப்பதற்காக நடத்தப்படும் நாடகமா இது ? அல்லது, நாம் தமிழர் வளர்ச்சி கண்டு அச்சமா?

35 வது நினைவு தினம்!

• 35 வது நினைவு தினம்! 1987 அக்டோபர் 21 ம் திகதி யாழ் மருத்துவமனையில் பணிபுரிந்த 21 ஊழியர்கள் உட்பட மொத்தம் 68 பேர் இந்திய அமைதிப்படையால் கொல்லப்பட்டனர். இதுவரை இந்த கொலைக்கு இந்திய தரப்பில் இருந்து யாரும் நீதியோ நியாயமோ வழங்கவில்லை. வருத்தம்கூட தெரிவிக்கவும் இல்லை ஆனால் இந்த கொலைகளுக்கு காரணமான ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதை மன்னிக்கவும் முடியாதாம். மறக்கவும் முடியாதாம். ஏனெனில் ராஜீவ்காந்தி உயிர்தான் உயிராம். 68 தமிழன் உயிர் மயிராம். போங்கடா நீங்களும் உங்கட நியாயமும்!

இலங்கைக்கு வந்த இந்திய ராணுவம் அமைதிப்படையா?

•இலங்கைக்கு வந்த இந்திய ராணுவம் அமைதிப்படையா? ஆக்கிரமிப்பு படையா? மறப்பது மக்கள் இயல்பு. நினைவு படுத்த வேண்டியது எமது கடமை. 2009ல் என்ன நடந்தது என்பதே பலருக்கு மறந்துவிட்ட நிலையில் 1987ல் நடந்தது எப்படி நினைவு இருக்கும்? அதுவும் இன்று முகநூலில் பதிவு எழுதும் சிலர் 1987ல் பிறந்தே இருக்க மாட்டார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி “ இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பு” என்றும் “அமைதிப்படையை எதிர்த்து போரிட்டது ஒரு முட்டாள்தனம்” என்றும் ரீல் சுத்த முனைகின்றனர். •முதலில் இந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் பற்றி பார்ப்போம். (1)ஒப்பந்தம் மூலம் இந்தியா அடைந்த அரசியல் இராணுவ நலன்கள் (அ) இலங்கையின் வெளியுறவுகளில் கட்டுப்பாடு செலுத்தும் உரிமை (ஆ)ஒலி ஒளி பரப்புகளை கட்டுப்படுத்தும் உரிமை (இ)திருகோணமலை தளத்தின் மீதான கட்டுப்பாடு உரிமை (ஈ)இலங்கை ராணவத்திற்கு பயிற்சி அளிக்கும் உரிமை,இலங்கை ராணுவம் மீதும் இதர நாடுகளுடனான உறவுகள் மீதும் கட்டுப்பாடு (2)ஒப்பந்தம் மூலம் இந்தியா அடைந்த பொருளாதார நலன்கள் (அ)இந்திய கொருட்களின் ஏற்றுமதிக்கான தடைகள் நீக்கப்படும் (ஆ)திரிகோணமலை எண்ணெய் குதங்கள் புத்துயிர்ப்பு செய்யப்படும். அதன் செயற்பாட்டிலும் லாபத்திலும் இந்தியாவுக்கு உரிமை அளிக்கப்படும் (இ)சுமார் 400 கோடி ரூபா பெறுமதியான கட்டுமான பணிகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் (ஈ)பெற்றோல் மற்றும் எண்ணெய் கிணறுகள் இந்தியாவுக்கு அளிக்கப்படும் (உ)இலங்கை வங்கி மற்றும் திட்டக்குழு அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கும் உரிமை மூலம் இலங்கை பொருளாதார திட்ட வகுப்பில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு (ஊ)இந்திய ரயில் மற்றும் பேரூந்துகளை விற்பனை செய்யும் வாய்ப்பு இவ்வாறு தமிழர் நலனைவிட இந்திய நலனை கொண்ட ஒப்பந்தத்தை ஈழத் தமிழர்கள் எதிர்த்தது தவறு என்று கூறுகின்றனர். •அடுத்து இந்திய ராணுவம் பற்றி கொஞ்சம் பார்ப்போம் பெரும்பாலானோர் 1987ல்தான் இந்திய ராணுவம் இலங்கை வந்ததாக நினைக்கிறார்கள். ஆனால் 1971இலும் இந்திய ராணுவம் இலங்கை வந்தது என்பதை இவர்கள் அறியவில்லை. 1971ல் இந்திராகாந்தியின் ஆட்சி காலத்தில் 2000 இந்திய ராணுவத்தினர் இலங்கை வந்தனர். ஜே.வி.பி கிளர்சியை அடக்குவதாக கூறி அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் சுட்டதில் 6000 சிங்கள இளைஞர்கள் இறந்தார்கள். அடுத்து 1987ல் அமைதிப்படை என்று ஒரு லட்சத்து இருபதாயிரும் இந்திய ராணுவ வீரர்கள் இலங்கைக்கு வந்தார்கள். அமைதிப்படை வந்தபோது தென்னிலங்கைதான் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. தென்னிலங்கையில்தான் பிரதமர் ராஜீவ் காந்தி துப்பாக்கியால் தாக்கப்பட்டார். வந்தது அமைதிப்படை என்றால் தென்னிலங்கையில்தான் அவை நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு லட்சத்து இருபதாயிரம் இராணுவத்தில் ஒரு வீரர் கூட தென்னிலங்கையில் நிறுத்தப்படவில்லை. அதேவேளை எதிர்ப்பே தெரிவிக்காத வடக்கு கிழக்கு தமிழ் பகுதிகளில்தான் 10 தமிழருக்கு ஒரு ராணுவ வீரர் என்ற விகிதத்தில் நிறுத்தப்பட்டார். அதுமட்டுமல்ல, இந்திய ராணுவம் 1965ல் பாகிஸ்தானுடன் நடந்த போர் 22 நாட்களே நடைபெற்றது. 1971ல் வங்கதேசத்தை உருவாக்கிய போர் 14 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. ஆனால் 1987ல் அமைதிப்படை ஈழத்தில் நடத்திய போர் இரண்டரை வருடங்கள் நடைபெற்றது. அதுவும் நாள் ஒன்றுக்கு 6 கோடி ருபா வீதம் 5400 கோடி ரூபா செலவு செய்து நடத்தியது. இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் வரலாறு காணாத வரட்சியில் விவசாயிகள் செத்துக்கொண்டிருந்த வேளை இலங்கையில் இந்திய அமைதிப்படை 5400 கோடி ரூபா செலவு செய்து போர் நடத்தியது. இந்த இந்திய அமைதிப்படையினரால் 10000 மேற்பட்ட அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 800 அதிகமான பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர். பல கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான தமிழ் மக்களின் சொத்துகள் சேதமாக்கப்பட்டன. இந்திய ராணுவம் தமிழ் மக்களின் நலனுக்காக இந்த போரை செய்யவில்லை. மாறாக தென்கிழக்காசிய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடும் மத்தியஸ்தன் என்கிற அரசியல் பாத்திரத்தையும் இப் பிராந்திய வல்லரசு என்கிற இராணுவ பாத்திரத்தையும் அது நிலை நிறுத்திக் கொண்டது. இலங்கைக்கு வந்தது அமைதிப்படை அல்ல. அது இந்திய ஆக்கிரப்புபடை. அதனை ஈழத் தமிழர்கள் எதிர்த்து போரிட்டது சரியே. ஒரு தேசிய இனத்தை அதன் சொந்த மண்ணில் எந்த வல்லரசாலும் தோற்கடிக்க முடியாது என்பதையே ஈழத்தில் தமிழ்மக்கள் செய்து காட்டினார்கள்

உலகில் எங்கு இந்து கோயில்கள் அழிக்கப்பட்டாலும்

உலகில் எங்கு இந்து கோயில்கள் அழிக்கப்பட்டாலும் குரல் கொடுக்கும் இந்திய அரசு, ஈழத்தில் சிங்கள அரசு இந்து கோயில்கள் அழித்து பௌத்த விகாரைகள் கட்டுவதை எதிர்ப்பதில்லை. மாறாக மேலும் உதவி வழங்குகிறது. இதுதான் இந்திய அரசின் இந்து முகம்?

மாலை நேரம் மட்டும் வியாபாரம் நடக்கும்

மாலை நேரம் மட்டும் வியாபாரம் நடக்கும் பருத்தித்துறை ஓடக்கரை வீதி அப்பக்கடைகள். வட்டப்பாறை கடலில் குளித்துவிட்டு இந்த கடையில் வெள்ளைஅப்பம் வாங்கி சாப்பிட்டவர்களுக்கு மட்டுமே தெரியும் சொர்க்கம் மேலே இல்லை பூமியில்தான் உள்ளதென்று.

தமிழ்நாட்டில் மட்டுன்றி ஈழத்திலும்

தமிழ்நாட்டில் மட்டுன்றி ஈழத்திலும் இந்தி திணிக்கப்படுகிறது. இந்தி திணிப்பை போராட்டத்தின் மூலமே தடுக்க முடியும். எனவே சீமான் முன்னெடுக்கும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

காவல்துறை அரசின் ஏவல்நாய்.

காவல்துறை அரசின் ஏவல்நாய். அது எஜமான் கடிக்கச் சொன்னால் கடிக்கும். எனவே தூத்துக்குடியில் அப்பாவி மக்களை கொன்ற காவல் நாயை மட்டுமன்றி அதற்கு உத்தரவிட்ட எஜமான் எடப்பாடியையும் தண்டிக்கப்பட வேண்டும்.

நீண்டகாலம் சிறை வைக்கப்பட்டிருந்த

நீண்டகாலம் சிறை வைக்கப்பட்டிருந்த எட்டு தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவதாக அறிய வருகிறது. மகிழ்ச்சி. மீதமுள்ள தமிழ் அரசியல் கைதிகளைகளையும் விடுதலை செய்யும்படி தமிழ் தலைவர்கள் அரசை வற்புறுத்த வேண்டும்.

துப்பாக்கி சூடு சம்பவத்தை ஆதரித்து,

துப்பாக்கி சூடு சம்பவத்தை ஆதரித்து, முட்டு கொடுத்து, ”தீவிரவாதிகள் உள்ளே புகுந்து விட்டார்கள், காவல்துறையை தாக்கினார்கள், துப்பாக்கி சூடு தவிர்க்க முடியாதது, எனக்கு தெரியும்” என ஆணித்தரமாக அடித்துக்கூறிய நடிகர் ரஜனிகாந்த் இப்போது என்ன கூறப்போகிறார்?

மலையகத்தில் எல்ல ஊவா தோட்டத்தில் அமைந்துள்ள

மலையகத்தில் எல்ல ஊவா தோட்டத்தில் அமைந்துள்ள பழமையான செந்தாகட்டி முருகன் ஆலயம் சிங்கள அரசு அதிகாரிகளால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் மலையகத்திற்கு விஜயம் செய்திருந்தார். அவருக்கு சிங்கள அரசு அளித்துள்ள பதில் இது. அண்ணாமலை இனியாவது சிங்கள அரசை இனங்காணுவாரா?

ஒருபுறம் சிங்கள கடற்படை சுட்டுக்கொல்கிறது.

ஒருபுறம் சிங்கள கடற்படை சுட்டுக்கொல்கிறது. மறுபுறம் பாதுகாப்பு அளிக்க வேண்டிய இந்திய கடற்படையும் சுடுகிறது. தமிழக மீனவனின் இத் துயரத்திற்கு எப்போதுதான் முடிவு கிடைக்கும்?

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால் பிரிட்டன் பிரதமர் பதவி விலகியுள்ளார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திராவிட முதல்வர் இவ்வாறு பதவி விலகுவாரா?

ஒருபுறம் தமிழ்நாட்டில் அலுவலகம் அமைக்கவும்

ஒருபுறம் தமிழ்நாட்டில் அலுவலகம் அமைக்கவும் தமிழக காவல்துறையின் அனுமதி இன்றி செயற்படவும் அனுமதிக்கப்படுகிறது. இன்னொருபுறம் தமிழக அரசு வசம் இருந்த தொலைக்காட்சி அதிகாரம் மத்திய அரசு வசம் சென்றுள்ளது. இவ்வாறு மாநில அரசின் ஒவ்வொரு அதிகாரமும் பறிபோய்க்கொண்டிருக்கிறது.

மறக்கவும் முடியவில்லை

மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை இந்திய இராணுவத்தின் உலங்குவானூர்தி யாழ் அராலித்துறையில் நடத்திய தாக்குதலில் 2மாத பெண் குழந்தை, மாணவர்கள் உட்பட 35 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். 30க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். அராலித்துறை படுகொலை 35ம் ஆண்டு நினைவுதினம்

ஆந்திராவில் தமிழன் தாக்கப்பட்டதும்

ஆந்திராவில் தமிழன் தாக்கப்பட்டதும் ராணிப்பேட்டையில் தமிழனுக்கு வலிக்கிறது. ஏனெனில் “நாம் தமிழர்” எத்தனை கட்சியில் தமிழன் இருந்தாலும் “நாம் தமிழர்” கட்சியில் மட்டுமே தமிழின உணர்வு உண்டு. 2009ல் இந்த “நாம் தமிழர்” இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என சிந்திக்க வைக்கிறது.

ஆழ்ந்த அஞ்சலிகள்

•ஆழ்ந்த அஞ்சலிகள் தோழர் செயப்பிரகாசம் அவர்கள் தமிழ்நாடு அமைப்பு கமிட்டி அமைப்பில் இருந்தபோது அறிமுகம் கிடைத்தது. முற்போக்கு சிந்தனையாளர். ஈழத் தமிழருக்கு இறுதிவரை உறுதியான ஆதரவு வழங்கியவர்.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி வருகிறது

•ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி வருகிறது ஆனால் கடவள் கண்ணன் வருவதில்லை தமிழ் மக்களுக்கு தீர்வும் வருகுதில்லை! “நான் ஒரு தடவை சொன்னால் அது நூறு தடவை சொன்ன மாதிரி” என்ற ரஜனியின் பஞ்ச் வசனத்தை அறியாத தமிழ் மக்கள் இருக்க முடியாது. அதுபோல் “ நான் ஆயிரம் தடவை சொன்னாலும் ஒரு தடவைகூட நடக்காது” என்று பஞ்ச் வசனம் பேச வேண்டியவர் எமது சம்பந்தர் அய்யா. முதலில் ஒரு வருடத்தில் தீர்வு வரும் என்றார். தீர்வு வரவில்லை. ஆனால் அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வந்தது. அப்புறம் இரு வாரங்களில் தீர்வு குறித்து நல்ல செய்தி வரும் என்றார். அவருக்கு இரண்டாவது சொகுசு பங்களாவும் அதற்கு பெயிண்ட் அடிக்க 4 கோடி ரூபா பண ஒதுக்கீடு என்ற நல்ல செய்தி வந்தது. அதன்பின்பு அடுத்த தீபாவளி பண்டிகை தீர்வு கிடைத்து மகிழ்வான சூழ்நிலையில் நடக்கும் என்றார். அடுத்த தீபாவளிகள் வந்து செல்கின்றன. ஆனால் அவர் கூறிய தீர்வும் வரவில்லை. தீபாவளி கொண்டாடக்கூடிய மகிழ்வான சூழ்நிலையும் தமிழ் மக்களுக்கு இல்லை. பொதுவாக, ஒரு பண்பான அரசியல் தலைவர், தான் கூறியது நடக்காவிட்டால் தார்மீக பொறுப்பேற்று தமது பதவியை ராஜினாமா செய்வார். சம்பந்தர் அய்யா பண்பான தலைவரும் இல்லை. அவர் பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு நேர்மையான தலைவரும் இல்லை. ஆனால் குறைந்தபட்சம் தான் சொன்னது ஏன் நடக்கவில்லை என்பதற்கு ஒரு விளக்கமாவது தமிழ்மக்களுக்கு கொடுக்க வேண்டாமா?

கடவுள் கண்ணனுடன் ஒரு உரையாடல்

கடவுள் கண்ணனுடன் ஒரு உரையாடல் தமிழன்- கடவுளே! அநியாயமும் அக்கிரமும் தலைவிரித்தாடும்போது அவதாரமெடுத்து மக்களை காப்பாற்றுவேன் என கூறினீர்களே. ஏன் இன்னும் வரவில்லை? கண்ணன்- தமிழா! உன்னை நினைத்தால் பாவமாக இருக்கிறது. ஆனால் நான் அவதாரமெடுத்து வந்தால் என்னை பயங்கரவாதி என்று உங்கள் சம்பந்தர் அய்யா கூறுவாரே. அதுதான் தயக்கமாக இருக்கிறது. தமிழன்- என்ன சொல்லுகிறீர்கள் கடவுளே. எனக்கு ஒன்றும் புரியவில்லை? கண்ணன்- அன்று நான் அரக்கன் நரகாசுரனை எனது சக்ராயுதத்தால் வதம் செய்ததை தீபாவளி என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் இன்று வந்து அதே ஆயுதத்தை நான் பாவித்தால் உடனே சம்பந்தர் அய்யாவும் யாழ் இந்தியதூதரும் அது “வன்முறை” என்று அறிக்கை விடுவார்கள் அல்லவா? தமிழன்- ஆமாம்! ஆமாம்! இனி நீங்கள் வந்தால் பயங்கரவாதி என்று சிறையில் அடைப்பார்கள். அப்புறம் நீங்கள் உங்கள் வழக்கை விசாரணைக்கு எடுக்கவே பல நாட்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டி வரும். கண்ணன்- போராடும்போது “பயங்கரவாதி” என்பார்கள். நான் செத்த பின்பு “மாவீரர்” என்று புகழ்ந்து மக்களிடம் வோட்டு பெறுவார்கள். உங்கள் தலைவர்கள் பலே கில்லாடிகள். தமிழன்- கடவுளே! அப்ப எமக்கு என்னதான் தீர்வு? நீதி- இனி கண்ணன் ஒருபோதும் வரமாட்டான். ஆனால் அவன் தந்த ஆயுதம் இருக்கிறது. தீர்வு வேண்டும் என்றால் அதை மக்கள் ஏந்த வேண்டும்.

ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்காவிடில்

•ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்காவிடில் “தமிழீழம்” கிடைத்திருக்குமா? மழை பெய்தால் புற்றில் இருந்து பாம்புகள் கிளம்பி வருவதுபோல் ராஜிவ்காந்தி விடயம் வந்துவிட்டால் சிலர் ஓடிவந்து முகநூலில் விஷம் கக்குகின்றனர். ராஜீவ்காந்தியை கொன்றிருக்காவிட்டால் தமிழீழம் கிடைத்திருக்கும். பிரபாகரன் தமிழீழத்தின் பிரதமர் ஆகியிருப்பார் என்றெல்லாம் இவர்கள் எழுதுகின்றனர். இதே இவர்கள்தான் இந்திராகாந்தி இறந்திருக்காவிட்டால் தமிழீழம் கிடைத்திருக்கும், எம.ஜி.ஆர் இருந்திருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் என்றும் கதை எழுதுபவர்கள். ஆனால் இந்திராகாந்தி உயிரோடு இருந்திருந்தாலும் தமிழீழம் கிடைக்க அவர் உதவியிருக்கமாட்டார் என்பதே உண்மை. இந்திராகாந்தி காலத்தில்தான் ஈழப் போராளிகளுக்கு பயிற்சியும் ஆயுதமும் வழங்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் அப்போது பயிற்சி பெற்ற போராளிகளுக்கும் அவர்களின் தலைவர்களுக்கும் தமிழீழம் பெற இந்தியா ஒருபோதும் ஆதரவளிக்காது என்பதை இந்திய அரசு உறுதியாக தெரிவித்திருந்தது. தமிழீழத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என்பது மட்டுமல்ல போராடி தமிழீழம் பெறுவதையும் இந்தியா அனுமதிக்காது என்பதை அமிர்தலிங்கம் உட்பட அனைத்து ஈழத்து தமிழ் தலைவர்களும் உணர்ந்தேயிருந்தார்கள். அதனால்தான் அப்போது தேசியபந்தோபஸ்து அமைச்சராக இருந்த அத்துலத்முதலி இலங்கை பாராளுமன்றத்தில் “ ஒருவேளை சிங்களவர்கள் தமிழீழத்தை கொடுக்க முன்வந்தாலும் இந்தியா அனுமதிக்காது என்பதை ஈழப் போராளிகள் உணர வேண்டும்” என்று பேசியிருந்தார். அதேபோன்று ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்திலும் தமிழீழத்தை இந்திய அரசு ஒருபோதும் ஆதரிக்கவில்லை. எனவே ராஜிவ் காந்தியைக் கொன்றிருக்காவிடில் தமிழீழம் கிடைத்திருக்கும் என்று சிலர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வடக்கு கிழக்குமாகாணசபையின் முதலைமச்சராக இருந்தபோது வரதராஜபெருமாள் தமிழீழ பிரகடனம் செய்திருந்தார். கடந்த வருடம் கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டில் அவர் உரையாற்றிய போது “ இந்தியா ஒருபோதும் தமிழீழத்தை ஆதரிக்கவும் இல்லை.. தமிழீழம் பெற உதவுவதாகவும் கூறவில்லை” என்று தெரிவித்துள்ளார். அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் அமைப்போம் என்று 1983ல் கூறிய டெலோ இயக்க தலைவர்களும்கூட இந்தியா தமிழீழத்தை ஆதரிக்கவில்லை என்ற உண்மையை ஒத்துக்கொள்கின்றனர். இந்தியா தமிழீழத்தை மட்டுமல்ல ஒரு சமஸ்டி தீர்வைக்கூட ஆதரிக்க முன்வரவில்லை என்பதே உண்மையாகும். இந்தியாவில் இருக்கும் மாநில சுயாட்சி முறையிலான தீர்வைக்கூட ஈழத் தமிழர்கள் பெறுவதை இந்திய அரசு விரும்பவில்லை. அதனால்தான் எந்தவித அதிகாரமும் அற்ற மாகாணசபையை தீர்வாக ஒப்பந்தம் மூலம் ஈழத் தமிழர்களுக்கு இந்தியா திணித்துள்ளது. இந்த ஒப்பந்த மூலம் கிடைத்த வடக்கு கிழக்கு இணைப்பைக்கூட இலங்கை அரசு நீதிமன்றம் மூலம் நீக்கிய போதும்கூட இந்திய அரசு அது குறித்து அக்கறை கொள்ளவில்லை. இதுதான் ஈழத் தமிழர் மீது இந்தியா கொண்டுள்ள அக்கறை. ஆனால் இதை மறைத்து சிலர் ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்காவிடின் தமிழீழம் கிடைத்திருக்கும் என நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். இனி யாராவது இப்படி விஷத்தைக் கக்கினால் அவர்களை காலில்போட்டு மிதிக்க வேண்டும்.

ஐயா! தீபாவளிக்கு தீர்வு வரும்

ஐயா! தீபாவளிக்கு தீர்வு வரும் என்று தமிழ் மக்களை ஏமாற்றி வருவது சிங்கள அரசா? அல்லது நீங்களா?

அமெரிக்காவில் நெருக்கடி ஏற்பட்டபோது

அமெரிக்காவில் நெருக்கடி ஏற்பட்டபோது எப்படி கறுப்பு இனத்தவரான ஓபாமாவை அமெரிக்க முதலாளித்துவம் தெரிவு செய்ததோ அதேபோன்று இன்றைய நெருக்கடியில் பிரித்தானிய முதலாளித்துவம் ரிஷியை தேர்வு செய்கிறது. ஒபாமாவால் எப்படி அமெரிக்க கறுப்பு இன மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லையோ அதேபோல் ரிஷியால் பிரித்தானிய கறுப்பு நிற மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை.

இதுதான் திராவிடம் என்றால்

இதுதான் திராவிடம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்.

கோழியின் மூன்றாவது கால் எங்கே?

•கோழியின் மூன்றாவது கால் எங்கே? கோழிக்கு இரண்டு கால் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதையே ரணில் கூறினால் நாம் மூன்றாவது காலை தேட வேண்டும். ஏனெனில் ரணில் மட்டுமல்ல அனைத்து சிங்கள ஆட்சியாளர்களும் எப்போதும் தமிழ் மக்களின் நலனுக்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றனர். மூக்கனாங்கயிறை மாற்றுவதால் மாடுகளுக்கு எந்த பயனும் இல்லை என்பதுபோல் கோத்தாவுக்கு பதிலாக ரணிலை மாற்றியதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை சிங்கள மக்கள் உணர ஆரம்பித்துவிட்டனர். எனவேதான் மக்களை ஏமாற்ற ஒரு வருடத்திற்குள் இனப்பிரச்சனைக்கு தீர்வு என்கிறார் ரணில்.

உலக மகா சாணக்கியம்

உலக மகா சாணக்கியம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றது

கனடா சென்ற ஈழத் தமிழர்கள்

கனடா சென்ற ஈழத் தமிழர்கள் அங்கு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடிகிறது. ஆனால் இந்தியா சென்ற ஈழத் தமிழர்கள் குடியுரிமைகூட பெற முடியாமல் இப்பவும் அகதிகளாகவே இருக்கின்றனர். ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியும்கூட இந்திய அரசு வழங்க மறுக்கிறது.

ஈஸ்டர் குண்டு வெடிப்பு நடத்தி

ஈஸ்டர் குண்டு வெடிப்பு நடத்தி பல தமிழர்களை கொன்ற சகரானுக்கு இந்தியாவில் இருந்து ஆர் டி எக்ஸ் வெடி மருந்து வழங்கியது யார் என்பதை கண்டு பிடித்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்குமா?