Sunday, January 31, 2016

•திவாலாகும் தமிழ்நாடு? கலைஞர் சொன்னதும், சொல்லாமல் மறைத்ததும்!

•திவாலாகும் தமிழ்நாடு?
கலைஞர் சொன்னதும், சொல்லாமல் மறைத்ததும்!
தமிழக அரசின் இன்றைய மொத்த கடன் 2லட்சத்து 11 ஆயிரத்து483 கோடி ரூபா ஆகும்.
அதாவது தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் 28 ஆயிரத்து 778 ரூபா கடன் சுமத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் தமிழகம் திவாலாகிறது என்று கலைஞர் கூறியுள்ளார்.
கலைஞர் சொன்னது உண்மைதான். ஆனால் அதேவேளை சில விடயங்களை கலைஞர் சொல்லாமல் மறைத்துள்ளார்.
இந்த தமிழக அரசின் கடனுக்கு ஜெயா அம்மையார் மட்டும் காரணம் அல்ல. மாறி மாறி ஆட்சி புரிந்த தானும் காரணம் என்பதை கலைஞர் சொல்லாமல் மறைத்துவிட்டார்.
வெள்ள நிவாரணம் ஜெயா அம்மையார் கேட்டது 5 ஆயிரம் கோடி ரூபா. ஆனால் மோடி அரசு கொடுத்திருப்பதோ 1940 கோடி ரூபா மட்டுமே.
ஒவ்வொரு வருடமும் இந்திய அரசு தமிழகத்தில் இருந்து வசூலிக்கும் வரி 85 ஆயிரம் கோடி ரூபா.
தமிழகம் தனது கடனுக்காக கட்டும் வட்டியின் தொகை 10754 கோடி ரூபா.
தமிழகம் திவாலாகிறது. ஆனால் ,
இந்திய அரசு இலங்கை அரசுக்கு கொடுத்தது 10 ஆயிரம் கோடி ரூபா.
இந்திய அரசு நேபாளத்திற்கு கொடுத்தது 14 ஆயிரம் கோடி ரூபா
இந்திய அரசு பூட்டானுக்கு கொடுத்தது 8 ஆயிரம் கோடி ரூபா
இந்திய அரசு மங்கோலியாவுக்க கொடுத்தது 6 ஆயிரம் கோடி ரூபா
இந்திய அரசு ஆப்கானிஸ்தானுக்கு கொடுத்தது 1 ரில்லியன் டொலர்.
இது பற்றி ஏன் கலைஞர் சொல்வதில்லை?
ஏன் சொல்லாமல் மறைத்துள்ளார்?

புத்தாண்டு வாழ்த்துக்கள் !

•புத்தாண்டு வாழ்த்துக்கள் !
2015 ம் ஆண்டு முடிகிறது.
2016 ம் ஆண்டு பிறக்கிறது.
அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகள்.
போர் முடிந்து 7 ஆண்டுகள் ஆகின்றன.
இலங்கையில் சிறையில் உள்ள அனைவரும் விடுதலை செய்யப்படவில்லை.
இந்தியாவில் சிறப்புமுகாமில் உள்ளவர்களும் விடுதலை செய்யப்படவில்லை.
2016 ம் ஆண்டு சிறையிலும் சிறப்பு முகாமிலும் உள்ளவர்களின் விடுதலை ஆண்டாக அமையட்டும்.
சிறையிலும் சிறப்புமுகாமிலும் உள்ளவர்களின் விடுதலைக்காக குரல் கொடுப்போம்.

•புத்தாண்டு பிறக்கிறது. ஜெயா அம்மையாரின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் பொங்கியெழ அரம்பித்துவிட்டார்கள்.

•புத்தாண்டு பிறக்கிறது.
ஜெயா அம்மையாரின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக
மக்கள் பொங்கியெழ அரம்பித்துவிட்டார்கள்.
வெள்ள அனர்த்தத்தில் இருந்து மக்கள் விடுபடவில்லை
வெள்ள நிவாரணம்கூட இன்னும் வழங்கப்படவில்லை
இந்த நிலையில் ஜெயா அம்மையாருக்கு 400 கட்அவுட்கள் ஆத்திரம் கொண்ட மக்கள் கட்அவுட்டை கிழித்தெறிப்பு
தமிழக மக்களின் உலகிற்கான புத்தாண்டு செய்தி இது.
பொங்கி எழும் மக்கள் போராட்டத்தை வாழ்த்தி வரவேற்போம்.
கட்அவுட்டை கிழித்த மூவர் சிறையில் அடைப்பு
ஜெயா அம்மையாரின் ஏவல் நாயாக பொலிஸ் செயற்படுகிறது.
மதுவுக்கு எதிராக பாட்டு பாடிய கோவன் சிறையில் அடைப்பு
யட்டி ஸ்டிக்கர் வரைந்தார் என்று வியாபாரி சிறையில் அடைப்பு
முகநூலில் எழுதினார் என்று ஊட்டி வழக்கறிஞர் சிறையில் அடைப்பு
ஜெயா அம்மையாருக்கு எதிராக வாய் திறந்தால் உடனே சிறையில் அடைப்பு
ஜெயா அம்மையாரின் சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்ட
தமிழக மக்கள தீர்மானித்துவிட்டார்கள்.
இன்னும் 4 மாதத்தில் தேர்தல் வரவுள்ளது.
ஆட்சிக்கு யார் வரவேண்டும் என்பதைவிட
யார் மீண்டும் வரக்கூடாது என்பதே முக்கியமாக உள்ளது.
ஜெயா அம்மையாரை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும.
அத்துடன் அவரை மீண்டும் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள்.
ஜெயா அம்மையார் திருந்தவில்லை. அவர் ஒருபோதும் திருந்தப்போவதில்லை.
ஜெயா அம்மையாருக்கு எற்படும் தோல்வி சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்.
மக்கள் சக்தியே மகத்தான சக்தி. அது அணுகுண்டை விட வலிமையானது.
மலரும் 2016 ம் ஆண்டு இதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும்.

இன்னும் 179 நாட்களில் தமிழ் மக்களின் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு?

இன்னும் 179 நாட்களில் தமிழ் மக்களின் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு?
• சிறையில் உள்ளவர்களின் விடுதலை
• காணாமல் போனவர்கள் பிரச்சனை
• மீள் குடியேற்ற பிரச்சனை
• மீனவர் பிரச்சனை
• இனப் பிரச்சனை
அனைத்து பிரச்சனைகளும் இன்னும் 179 நாட்களில் தீர்க்கப்படும்.
தமிழர் தலைவர் சம்பந்தர் அய்யா தெரிவிப்பு.
சம்பந்தர் அய்யா மட்டுமல்ல அவரது சீடர் சுமந்திரன் அய்யாவும் கூறிவிட்டார்.
சிறையில் உள்ளவர்களையே விடுவிக்க இனவாதிகள் விடுகிறார்கள் இல்லை என்று கூறும் அரசு, இனப்பிரச்சனையை எப்படி தீர்க்கும் என்று இவர்களிடம் கேள்வி கேட்காதீர்கள்.
இப்படி கேள்விகள் கேட்டால் நீங்கள் தமிழர் ஒற்றுமையை குழப்புவதாக சம்பந்தர் அய்யா முத்திரை குத்துவார்.
சொன்னபடி தீர்வு கிடைக்காவிட்டால் சம்பந்தர் அய்யா தனது பதவிகளை ராஜினாமா செய்வாரா என்று கேட்டுவிடாதீர்கள்.
அப்படி கேட்டால் அவரது சீடன் சுமந்திரன் அவர்களுக்கு கோபம் வந்துவிடும்.
தமிழ்மக்களை புத்திசாலிகள் என்கிறார்கள். ஆனால் என்ன தீர்வு வரும்? எப்படி வரும்? என்பதை கேட்கக் கூடாது என்கிறார்கள்.
சம்பந்தர் அய்யாவும் சுமந்திரனும் பதவியை அனுபவிப்பதற்கு
தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடிமைகளாக இருக்க வேண்டுமா?
2016 ம் ஆண்டு இதற்கு விடை தருமா?
ஒருபுறம் பார்த்தால் பதவிகள் பெற துடிக்கிறார்.
மறுபுறம் பார்த்தால் (லிங்கா நகரில்) பணம் சுருட்ட முனைகிறார்.
முழுவதும் பார்த்தால் அவர் ஒரு ஈழத்து கருணாநிதியாக தெரிகிறார்.

நண்பர்களே!

நண்பர்களே!
•எனது "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம்" நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை தோழர் தம்பிராஜா அவர்கள் ஆர்வமுடன் செய்து தந்துள்ளார். விரைவில் இவ் ஆங்கில புத்தகம் வெளிவரவுள்ளது. சிறப்புமுகாம் கொடுமைகளை தமிழ் மொழி தெரியாத மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இந்த நூல் பெரிதும் உதவும் என நம்புகிறோம்.
•தோழர்களின் வேண்டுகொளுக்கிணங்க, தோழர்களின் ஆதரவுடன், "தோழர்" வலைப் பக்கம் விரைவில் உருவாக்கவுள்ளோம். இது புரட்சிகர அரசியலை உரையாடவும் , புரட்சிகர சக்திகளை ஜக்கியப்படுத்தவும் பெரிதும் உதவும் என நம்புகிறோம்.
•பலர் இன்பாக்சில் வந்து எனது தொடர்பு விபரங்களை கேட்கிறார்கள். அவர்களுக்காக மீண்டும் அவற்றை இங்கு பதிவு செய்கிறேன்.
HP- 00447753465573
Email- tholar2003@hotmail.com
Viber, Whatsapp - 00447753465573
Twitter- @balantholar
•எனது முகநூல் பதிவுகளை கீழ்வரும் புளக்கிலும் வாசிக்கலாம்.
இதுவரை தந்த ஆதரவிற்கும் ஒத்துழைப்பிற்கும் எனது நன்றிகள்.
இதேபோல் தொடர்ந்தும் தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

•50 நாட்களாக இவரை சிறையில் அடைத்து வைத்திருப்பது ஏன்?

•50 நாட்களாக இவரை சிறையில் அடைத்து வைத்திருப்பது ஏன்?
முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் தோழர் குமார் குணரட்னம் கடந்த 50 நாட்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்.
அவர் செய்த குற்றம் என்ன? அவரை விடுதலை செய்ய நல்லாட்சி அரசு மறுப்பது ஏன்?
•சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யும்படி அவர் கோரியது குற்றமா?
•தமிழ் மக்களுக்கு சமவுரிமை வழங்கவேணடும் என அவர் கூறியது குற்றமா?
•முக மாற்றம் தேவையில்லை. அமைப்பு மாற்றம் வேண்டும் என அவர் கேட்டது குற்றமா?
மத்தியவங்கி தலைவருக்கு ஒரு நாளில் குடியுரிமை வழங்கிய நல்லாட்சி அரசால் குமார் குணரட்னத்திற்கு 50 நாட்களாகியும் ஏன் குடியுரிமை வழங்க முடியவில்லை?
குமார் குணரட்னம் இலங்கையில் பிறந்தவர். இலங்கையில் வளர்ந்தவர். இலங்கையில் ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர். அவருக்கு ஏன் குடியுரிமை வழங்க முடியாது?
ஒருபுறத்தில் புலம் பெயர்ந்தவர்களை திரும்பி வாருங்கள் என அரசு அறைகூவல் விடுகிறது. மறுபுறத்தில் திரும்பி வந்த குமார் குணரட்னத்தை சிறையில் அடைக்கிறது. இதுதான் நல்லாட்சியா?
குமார் குணரட்னத்தை விடுதலை செய்யும்படி 50 நாட்களாக தொடர்ந்து சாத்வீக போராட்டம் நடைபெறுகிறது. அதைக்கூட நல்லாட்சி அரசு மதிக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்?
ஒரு பெண் பாடகருக்கு பிராவை கழற்றி எறிந்துவிட்டார் என்று குமுறிய ஜனாதிபதியின் கண்களுக்கு ஒரு கட்சியின் தலைவர் 50 நாட்களாக சிறையில் அடைத்து வைத்திருப்பது தெரியவில்லையா?
வெள்ளை வான் கடத்தல் புகழ் கோத்தபாயா
பல பெண்களை கெடுத்த நாமல் ராஜபக்ச
பல்லாயிரம் மக்களை கொன்ற மகிந்த ராஜபக்ச
இவர்களில் ஒருவரைக்கூட கைது செய்து சிறையில் அடைக்க முடியாத மைத்திரி அரசு
மக்களுக்காக போராடும் குமார் குணரட்னத்தை மட்டும் சிறையில் அடைத்து வைத்திருப்பது என்ன நியாயம்?
இலங்கை அரசே!
உடனடியாக குமார் குணரட்ணத்தை விடுதலை செய்!
அவருக்கு இலங்கை குடியுரிமையை உடனே வழங்கு!!

•சுந்தரம் கொலையில் அமிர்தலிங்கம் பங்கு மறைக்கப்படுகிறதா? அல்லது மறக்கபடுகிறதா?

•சுந்தரம் கொலையில் அமிர்தலிங்கம் பங்கு
மறைக்கப்படுகிறதா? அல்லது மறக்கபடுகிறதா?
இன்று (2.1.1982) தோழர் சுந்தரம் கொல்லப்பட்ட நாள்.
பட்டப்பகலில் மக்கள் மத்தியில் நடந்த முதலாவது சகோதரப் படுகொலை நாள்.
"புதியபாதை" சுந்தரம் யாழ் வெலிங்டன் தியேட்டருக்கு முன்னால் சித்திரா அச்சகம் அருகில் கொல்லப்பட்ட நாள்.
இன்று முகநூலில் சிலர் அவரை நினைவு கூர்ந்துள்ளனர்.
சுந்தரம் நினைவு கூரப்படவேண்டிய ஒரு போராளிதான்.
ஆனால் புலிகளால் சுந்தரம் கொல்லப்பட்டார் என்றே அனைவரும் குறிப்பிட்டுள்ளனரேயொழிய யாரும் சுந்தரம் கொலையில் அமிர்தலிங்கத்தின் பங்கை குறிப்பிட வில்லை.
இது சுந்தரம் கொலையில் அமிர்தலிங்கத்தின் பங்கு மறைக்கப்படுகிறதா அல்லது மறக்கபடுகிறதா என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது.
புலிகள் இயக்கத்தில் இருந்து விலகியவர்கள் வேறு இயக்கத்தில் சேர்ந்து இயங்கக் கூடாது. அவ்வாறு இயங்கினால் அது மரண தண்டனை குற்றமாகும் என்ற புலிகளின் அமைப்பு விதிக்கு அமைய சுந்தரம் கொல்லப்பட்டார் என்றே அன்று புலிகள் கூறினார்கள்.
புலிகள் அமைப்பில் இருந்து விலகிய பலர் இருக்கும்போது சுந்தரம் மட்டும்; எதற்காக குறி வைக்கப்பட்டார்? அதுவும் பட்டப்பகலில் மக்கள மத்தியில் வைத்து ஏன் கொலை செய்யப்பட்டார்?
இந்த சகோதர படுகொலையை ஏன் தமிழர்விடுதலைக் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கம் உடனே தலையிட்டு தடுக்க முனையவில்லை?
உண்மை என்னவெனில் இந்த சுந்தரம் படுகொலையின் சூத்திரகாரியே அந்த தலைவர் அமிர்தலிங்கம்தான்
துரையப்பா, கனகரட்ணம் போன்றவர்களை துரோகி என்று முத்திரை குத்தி இளைஞர்களால் சுட வைத்தவரும் அமிர்தலிங்கமே.
அதுபோல் "புதியபாதை" பத்திரிகையில் தன்னை தொடர்ந்து அம்பலப்படுத்தி எழுதிய சுந்தரத்தையும் கொல்ல வைத்தவர் அமிர்தலிங்கமே.
இந்த உண்மை அன்று போராளிகள் மத்தியில் நன்கு அறியப்பட்டிருந்தது.
சுந்தரத்தின் படுகொலையை கண்டித்து நாகராஜா(வாத்தி) பத்மநாபா, விசுவானந்ததேவன், "டெலா" தேவன் போன்றவர்கள் ஒன்று சேர்ந்து பிரசுரம் வெளியிட்டிருந்தார்கள். அந்த பிரசுரத்திலும் இந்த உண்மை கூறப்பட்டீருக்கிறது.
இன்று சம்பந்தர் அய்யா ஆயுதம் ஏந்திப் போராடிய இளைஞர்களை பயங்கரவாதிகள் என்கிறார்.
ஆனால் துரோகி ஒழிப்பை ஆரம்பித்து வைத்தவர்கள் இவர்களே என்ற உண்மையை வரலாற்றில் இனி ஒருபோதும் மறைக்க முடியாது.

இதுதான் இந்திய நீதி!

• இதுதான் இந்திய நீதி!
தோழர் சாய்பாபா. இவர் டில்லி பல்கலைக்கழக பேராசிரியர். இவர் ஒரு உடல் ஊனமுற்றவர். இவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறையில் அடைக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர் செய்த குற்றம்தான் என்ன?
பொலிசாரின் கொலைகளை சுட்டிக் காட்டியது குற்றமா?
மனிதவுரிமைக்காக குரல் கொடுத்தது குற்றமா?
இவர் மக்களின் பணம் 66 கோடியை ஊழல் செய்யவில்லை.
இவருக்கு 4 வருட தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை.
இவர் எழுந்து நடமாடமுடியாத ஊனமுற்ற மனிதர்.
இருப்பினும் இவரை ஜாமீனில் விடமுடியாது என்றும்
மீண்டும் சிறையில் அடைக்கும்படி இந்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுதாகரன். இவர் ஜெயா அம்மையாரின் முன்னாள் வளர்ப்பு மகன்.
இவர் மக்கள் பணம் 66 கோடியை ஊழல் செய்தவர்.
இவர் 4 வருட தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி.
நல்ல திடகாத்தரமான தடியன் இவர்.
ஆனாலும் உடல் நலம் இல்லாதவர் என்று இவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
4 வருட தண்டனை பெற்ற குற்றவாளிக்கு 21 நாட்களில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதற்தடவை.
ஒருபுறத்தில்,
ஆள் வைத்து கொலை செய்த காஞ்சி சங்கராச்சாரி விடுதலை
கார் ஏற்றிக் கொலை செய்த சல்மான்கான் விடுதலை
ஏ.கே 47 ஆயுதம் வைத்திருந்த சஞ்சய்தத் நன்னடத்தையில் விடுதலை
4 வருட தண்டனை பெற்ற ஜெயா அம்மையாருக்கு ஜாமீனில் விடுதலை
இதேபோல் வளர்ப்புமகன் சுதாகரனுக்கும் ஜாமீனில் விடுதலை
மறுபுறத்தில்,
ஊடல் ஊனமுற்ற சாய்பாவுக்கு ஜாமீன் விடுதலை இல்லை.
பற்றரி வாங்கி கொடுத்த பேரறிவாளனுக்கு நன்னடத்தை விடுதலை இல்லை
இதுதானா இந்திய நீதி?
குறிப்பு- இது நியாயமா எனக் கேட்ட எழுத்தாளர் அருந்ததிராய் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மாலைதீவு "றோ" வின் திட்டப்படி புளட் தாக்கினார்களா? அல்லது புளட் தாக்கும் போது இந்தியா அதனை பயன்படுத்தியதா?

மாலைதீவு
"றோ" வின் திட்டப்படி புளட் தாக்கினார்களா? அல்லது
புளட் தாக்கும் போது இந்தியா அதனை பயன்படுத்தியதா?
இந்திய உளவுப்படையின் திட்டப்படியே புளட் இயக்கம் மாலைதீவு மீது தாக்குதல் நடத்தியதாக சிலர் தவறாக எழுதுகிறார்கள்.
ஆனால் புளட் இயக்கம் மாலை தீவை தாக்கியபோது அதனை இந்தியா பயன்படுத்திக்கொண்டது என்பதே உண்மையாகும்.
மாலைதீவை தாக்குதல் அல்லது அதில் ஒரு தீவை விலைக்கு வாங்குதல் என்பது புளட் இயக்கத்திற்கு முன்னர் தம்பாபிள்ளை மகேஸ்வரன் திட்டமாக இருந்தது.
மாலை தீவை புளட் தாக்கிய பின்னர் தம்பாபிள்ளை மகேஸ்வரன் ஆப்பிரிக்காவிற்கு அருகில் ஒரு தீவை விலைக்கு வாங்க முயற்சி செய்தார்.
மாலைதீவு எதிர்க்கட்சி தலைவரின் சகோதரர் ஒருவர் பல ஈழ விடுதலை இயக்கங்களை அணுகி தாம் ஆட்சியைக் கைப்பற்ற உதவுமாறு கேட்டார்.
யாரும் உதவிபுரிய முன்வராத நிலையில் புளட் உதவியை நாடினார். அவர் பல மாதமாக புளட் இயக்கத்திடம் இதனை வலியுறுத்தி வந்திருந்தார்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து அனைத்து இயக்கங்களும் இந்திய அரசினால் கைவிடப்பட்ட நிலையினை உணர்ந்தார்கள்.
எனவே அவர்களது தலைமைகள் சில இலங்கைக்கு வந்தன. சில வேறு இடங்களை பெற முயற்சி செய்தன.
புளட் மாலை தீவை தாக்கும்போது விட்ட தவறால் மாலைதீவு அரசு உடனே இலங்கையிடமே உதவி கேட்டது.
இலங்கை அரசு இப்படி ஒரு நிலையை எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் ஜே.ஆர் ஜெயவர்த்தனா இலங்கை படையை அனுப்ப முடிவு செய்தார்.
ஆனால் அழைப்பு விடுக்கப்படாத நிலையிலும் இந்தியா உடனே தனது படையை அனுப்பி சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டது.
இப்போதும் இந்திய ராணவத்தின் ஒருபகுதி மாலைதீவில் இருப்பதாக கூறப்படுகிறது.
மாலைதீவு மக்களின் வெறுப்பை குறைப்பதற்காக இந்தியா ஒரு பெரிய மருத்துவமனையை மாலைதீவில் கட்டிக் கொடுத்துள்ளது.
புளட் தலைமை தனது கட்டுப்பாட்டிற்குள் இருக்க சம்மதிக்காதால் கோபம் கொண்ட இந்திய உளவுப்படை ஒரு புளட் உறுப்பினர் மூலம் உமா மகேஸ்வரனைக் கொன்றது.
உமாமகேஸ்வரனை கொன்ற புளட் உறுப்பினரை இந்திய தூதராலயமே பாதுகாத்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.
பின்னர் அவர் இந்திய உளவுப்படையின் அதரவுடன் சென்னையில் இருக்கம்போது தமிழ்;நாடு அரசு அவரை மேலூர் சிறப்புமுகாமில் அடைத்தது.
உடனே இந்திய உளவுப்படை தமிழ்நாடு அரசுடன் தொடர்பு கொண்டு அவரை விடுவித்து பெங்களுரில் கொண்டு சென்று வைத்திருந்தது. அந்த உறுப்பினர் சில வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் இறந்துவிட்டார்.

இந்தியாவில் "பசு மாதா" இலங்கையில் "சிங்க லே"

•இந்தியாவில் "பசு மாதா"
இலங்கையில் "சிங்க லே"
இந்தியர்களின் தாய் "பசு மாடு" என்று இந்துமத வெறியர்கள் பரப்புகிறார்கள்.
இலங்கையில் அனைவரும் "சிங்க ரத்தம்" என்று இனவெறியர்கள் பரப்புகிறார்கள்.
ஆட்சியை பிடிப்பதற்காகவும் பிடித்த அட்சியை தக்க வைப்பதற்காகவும் அப்பாவி மக்களை இனரீதியா மதரீதியாக பிரிப்பதற்கு வெறியை பரப்புகிறார்கள்.
ஆட்சியில் ஏறியதும் கறுப்பு பணத்தை மீட்டு ஒவ்வாரு இந்தியருக்கும் 13 லட்சம் ருபா தருவேன் என்றார் மோடி. ஆனால் இதவரை ஒரு சதம் கூட தரப்படவில்லை.
மக்கள் தமது அரசுக்கு எதிராக ஒன்றுபட்டு திரண்டுவிடக்கூடாது என்பதற்காக மதவெறியை மோடி அரசு பரப்புகிறது.
அதேபோல் இலங்கையில் ஆட்சியை இழந்த மகிந்த கும்பல்கள் தம்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தடுப்பதற்கும், ஆட்சியை மீண்டும் பிடிப்பதற்கும் சிங்கள இனவெறியை தூண்டுகின்றன.
சிங்க லே என்ற அச்சிட்ட போஸ்டர்கள் முஸ்லிம்கள் வீடுகள் மீது வேண்டுமென்றே ஒட்டப்படுகின்றன. சிங்க லே அச்சிடப்பட்ட ரீ சேர்ட்டுகள் 3500 ரூபாவிற்கு விற்கப்படுகின்றன.
இவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய இலங்கை அரசு வேண்டுமென்றே மௌனம் சாதிக்கிறது.
ஏனெனில் ஆட்சியை பிடித்து ஒரு வருடமாகியும் மக்களுக்கு எதுவும் செய்யாத செயல் திறனற்ற அரசாக இருப்பதால் மக்கள் கவனத்தை திருப்ப இலங்கை அரசு இதரனை பயன்படுத்துகிறது.
இலங்கை நாடு பூராவும் இயற்கைவளங்கள் யாவும் இந்தியாவிற்கு விற்கப்பட்டுள்ளது. இது குறித்து எந்த சிஙக லே தலைவர்களுக்கும் கவலை இல்லை.
தமிழ் மக்களின் சயநிர்ணய உரிமையை அங்கீகரித்து அவர்களுடன் ஜக்கியப்பட்டு போராடுவதன் மூலமே இலங்கையை காப்பாற்ற முடியும். இல்லையேல் முழு இலங்கையும் விரைவில் இந்தியாவின் ஒரு மாநிலமாக மாறிவிடும்.

நடிகர் சஞ்சய்தத் விடுதலை சொல்லும் சேதி என்ன?

•நடிகர் சஞ்சய்தத் விடுதலை சொல்லும் சேதி என்ன?
செய்தி- நடிகர் சஞ்சய்தத் பெப்-27 விடுதலை செய்யப்படவுள்ளார்.
சாட்டப்பட்ட குற்றம்:
நடிகர் சஞ்யத் ஏ.கே 47 துப்பாக்கி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
பேரறிவாளன் பற்றரி வாங்கி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
தண்டனை:
ஏ.கே 47 ஆயுதம் வைத்திருந்த சஞ்சய்தத்ற்கு 5 வருடம் தண்டனை விதிக்கப்பட்டது.
பற்றரி வாங்கி கொடுத்த பேரறிவாளனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சலுகை:
சஞ்சய்தத் பல முறை பரோலில் வந்து வீட்டில் தங்க அனுமதிக்கப்பட்டது.
பேரறிவாளனுக்கு ஒருமுறைகூட பரோலில் வர அனுமதிக்கப்படவில்லை.
தண்டனை அனுபவித்த காலம்:
சஞ்சய்தத் இதுவரை 18 மாதமே தண்டனை அனுபவித்துள்ளார்
பேரறிவாளன் 25 வருடங்கள் தண்டனை அனுபவித்துள்ளார்.
விடுதலை:
சஞ்சய்தத் எதிர்வரும் பிப் -27ம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளார்.
பேரறிவாளனை பொங்கலுக்கு முன்னர் விடுதலை செய்யுமாறு தாயார் கோரியுள்ளார்.
நியாயம்:
இந்தியா ஜனநாயக நாடு. இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் அதே இந்தியாவில் சஞ்சயதத்திற்கு ஒரு நியாயமும் பேரறிவாளனுக்கு இன்னொரு நியாயமும் வழங்கப்படுகிறது.
உள்ளவனுக்கு ஒரு நியாயம்.
இல்லாதவனுக்கு இன்னொரு நியாயம்.
இததான் இந்திய நியாயமா?
இதுதானா சஞ்சயதத் விடுதலை சொல்லும் சேதி?

•ஊருக்கும் வெட்கமில்லை உலகத்திற்கும் வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை

•ஊருக்கும் வெட்கமில்லை
உலகத்திற்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை
செய்தி 1-அரசியல் கைதிகள் யாருமில்லை. சிறையில் இருக்கும் 215 சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்று தமிழ் மக்கள் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட நல்லாட்சி அரசு ஜனாதிபதி மைத்திரி தெரிவித்துள்ளார்.
செய்தி 2-வடமாகாண முதலைமைச்சரின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறேன் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அய்யா தெரிவித்துள்ளார்.
செய்தி 3- முன்னாள் பெண் போராளியின் உடலை தகனம் செய்ய பணம் இன்மையால் அரச செலவில் அடக்கும் செய்யுமாறு மகள் கோரிக்கை.
ஜனாபதி உறுதி மொழி தந்துள்ளார். அவரை நாம் நம்புகிறோம் என்று சான்றிதழ் வழங்கிய சம்பந்தர் அய்யா தற்போது சிறையில் உள்ளவர்களின் விடுதலையைவிட மாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானிப்பதே முக்கியம் என கருதுகிறார்.
தமிழ் மக்களுக்காக போராடிய பெண் போராளி கண் பார்வையற்ற நிலையில் வறுமையில் மரணம் அடைந்துள்ளார். அவரை அரசு செலவில் அடக்கும் செய்மாறு அவரது மகள் கோரியுள்ள அவல நிலையில் தாயகம் உள்ளது.
இவற்றை தட்டிக்கேட்க வேண்டிய நாங்களோ வேட்டி தினத்திற்கு வேட்டி கட்டிய படம் போட்டு மகிழ்கிறோம். என்னே கொடுமை இது?
தன் மகள் பிறந்த போது பால் புட்டி வாங்க பணம் இருக்கவில்லை. அந்த மகள் இறந்தபோது சவப் பெட்டி வாங்கவும் பணம் இருக்கவில்லை என மாக்ஸ் மனைவி ஜென்னி தமது வறுமை நிலையை குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் நாங்களோ ,
எமது மக்களுக்காக போராடிய போராளிகள் வறுமையில் வாழ்வது குறித்தும் வெட்கப்படவில்லை.
அவர்களது சவ அடக்கத்திற்கும்கூட பணம் இல்லை என்பது குறித்தும் வெட்கம் இல்லை.
இதை எல்லாம் மறந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திலும் எமக்கு கொஞ்சம்கூட வெட்கமில்லை.

•இந்திய அரசு பாகிஸ்தான் பாடகருக்கு குடியுரிமை வழங்குகிறது ஈழத் தமிழ் அகதிகளை சிறப்புமுகாமில் அடைக்கிறது!

•இந்திய அரசு
பாகிஸ்தான் பாடகருக்கு குடியுரிமை வழங்குகிறது
ஈழத் தமிழ் அகதிகளை சிறப்புமுகாமில் அடைக்கிறது!
பாக்கிஸ்தான் பாடகர் அத்னான் சாமிக்கு கடந்தவாரம் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அதேவேளை கடந்த 33 வருடங்களாக தமிழகத்தில் வாழ்ந்துவரும் ஈழ அகதிகளுக்கு இன்னும் இந்திய குடியுரிமை வழங்கப்படவில்லை.
பொதுவாக ஒரு நாட்டில் 7 வருடங்கள் வாழ்ந்தாலோ அல்லது அந்த நாட்டில் பிறந்தாலோ அல்லது அந்த நாட்டில் திருமணம் முடித்தாலோ குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்தியாவில் 33 வருடமாக வாழ்ந்து வரும் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை மறுக்கப்படுகிறது.
இந்தியாவில் திருமணம் முடித்த ஈழத் தமிழர்களுக்கும் குடியுரிமை மறுக்கப்படுகிறது.
இந்தியாவில் பிறந்த ஈழதமிழ் குழந்தைகளுக்கும்கூட இந்திய குடியுரிமை மறுக்கப்படுகிறது.
அதுமட்டுமலல இந்தியாவில்; ஈழ அகதிகள் மட்டுமே சிறப்புமுகாமில் அடைக்கப்படுகிறார்கள்.
ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாததால் அவர்களால்
• உயர் கல்வி பெற முடியவில்லை
• நல்ல வேலைவாய்ப்புகள் பெற முடியவில்லை
• டிறைவிங் லைசென்ஸ் எடுக்க முடியவில்லை
• கடவுச்சுPட்டு எடுக்க முடியவில்லை
• இலங்கையில் உள்ள உறவினர்களை சென்று பார்வையிட முடியவில்லை
• வெளிநாடுகளுக்கு செல்ல முடியவில்லை
தமிழகத்தில்தான் "ஈழத்தாய்" ஜெயா அம்மையார் ஆட்சி புரிகிறார்.
தமிழகத்தில்தான் "உலகதமிழினத்தலைவர்" கலைஞர் கருணாநிதி இருக்கிறார்.
தமிழகத்தில்தான் "புரட்சி புயல்" வைகோ இருக்கிறார்
தமிழகத்தில்தான் "நாம் தமிழர் சீமான்" இருக்கிறார்
தமிழ் மக்களுக்காக அயராது பாடுபடுவதாக கூறும் இந்த தலைவர்கள் வாழும் தமிழக மண்ணில்தான் ஈழ தமிழ் அகதிகளுக்கு இந்த அவல நிலை காணப்படுகிறது.
இனி ஈழத் தமிழ் அகதிகளை கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமா?

செய்தி- தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அமைச்சர் பொன்.ராதாகிருஸ்ன்ன் அனுமதி வாங்கி தந்தார்.

செய்தி- தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அமைச்சர் பொன்.ராதாகிருஸ்ன்ன் அனுமதி வாங்கி தந்தார்.
•செய்தி- தமிழ்நாட்டில் வீதி வழியாக கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த முதியவரின் உடலை பொலிசார் காவி சென்று எரித்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்று தந்த அமைச்சர் பொன்னர் அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதி தமிழர்களின் உடல்களும் வீதி வiழியாக கொண்டு சென்று எரிப்பதற்குரிய உரிமையையும் பெற்றுக்கொடுப்பார் என நம்புவோம்!
ஜல்லிக்கட்டிற்காக போராடிய தமிழ் தலைவர்கள் அனைவரும் சாதி ஒழிப்பிற்காகவும் போராடுவார்கள் என நம்புவோம்!

•"நாம் தமிழர்" சீமான் பதில் தருவாரா?

•"நாம் தமிழர்" சீமான் பதில் தருவாரா?
பேரறிவாளனை தமிழக அரசு விடுதலை செய்தால் தமிழக அரசை கலைப்போம்- ராம சுப்பிரமணியன் பேச்சு
தமிழக அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தால் மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழக அரசை உடனே கலைக்கும் என பா.ஜ.க சேர்ந்த ராம சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
ராமசுப்பிரமணியன் பெரிய தலைவர் இல்லை. அவர் யார் என்றே பலருக்கு தெரியாது. ஆனால் அவர்கூட தமிழக அரசைக் கலைப்போம் என்று மிரட்டும் அளவிற்குதான் மாநில அரசின் அதிகாரம் உள்ளது.
இந்நிலையில் ஒரு தமிழன் முதலைமைச்சரானால் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கும் என "நாம்தமிழர்" சீமான் கூறிவருகிறார்.
பன்னீர்செல்வம் தமிழர் தானே. அவர் ஆட்சியில் இருந்தபோது தமிழர்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டதா என்று கேட்டால் பன்னீர் செல்வம் ஒரு அடிமை என்கின்றனர்.
சரி, நாளைக்கு சீமானே ஆட்சியில் வந்தாலும் இதே அதிகாரங்கள்தானே இருக்கும். எப்படி தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கும்?
"நாம்தமிழர்" சீமான் பதில் தருவாரா?
அண்ணா, கலைஞர், எம.ஜி.ஆர் போன்றவர்களால் செய்ய முடியாததை சீமான் எப்படி செய்து முடிப்பார் என்பதை விளக்குவாரா?
தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா என்றும் ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாடு விடுதலை அடைவதே அனைத்து தமிழர்களுக்கும் விடுதலையாக அமையும் என்றும் தோழர் தமிழரசன் கூறினார்.
ஆனால் தேர்தல் மூலம் தமிழக அரசின் ஆட்சியைக் கைப்பற்றுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் என நாம் தமிழர் சீமான் கூறுகிறார்.
சீமான் முதலைமைச்சரானால்,
•வருடம்தோறும் டில்லி அரசுக்கு கட்டும் 85அயிரம்கோடி ரூபா வரியை நிறுத்த முடியுமா?
•தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்படுவதை நிறுத்த முடியுமா?
•இலங்கைக்கு படையெடுத்து கச்சதீவை மீட்க முடியுமா?
•இந்திய அரசு இலங்கைக்கு வழங்கும் உதவிகளை நிறுத்த முடியுமா?
•தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியுமா?
•தமிழகத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமையாவது மூட முடியுமா?
முடியும் என்றால் எப்படி என்பதை கொஞ்சம் விளக்குவீர்களா?

"நாம் தமிழா"; சீமான் அவர்களின் கட்சதீவு மீட்பு!

 "நாம் தமிழா"; சீமான் அவர்களின் கட்சதீவு மீட்பு!
தான் முதலமைச்சாரானால் 50 ஆயிரம் வீரர்கள் கொண்ட சிறப்புபடை அமைத்து கச்சதீவை மீட்பேன் என்று "நாம்தமிழர்" சீமான் கூறியுள்ளார்.
சீமான் அவர்களின் உரையை கீழ்வரும் இணைப்பில் கேட்கலாம்.
https://l.facebook.com/l.php…
1983ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற கூட்டமொன்றில் திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் அவர்களின் பேச்சைக் கேட்டேன். தமிழ்நாட்டு ஏழு கோடி தமிழர்களும் இராமேஸ்வரம் கரையில் வந்து ஒண்ணுக்கு இருந்தால் (மூத்திரம் பெய்தால்) முழு இலங்கையும் மூழ்கிவிடும் என்று ஜெயவர்த்தனாவை எச்சரித்து பேசினார். அப்போது எழுந்த கைதட்டலும் விசிலும் அடங்க பல நிமிடங்கள் ஆயின.
அதுபோல் இன்று சீமான் பேச்சுக்கும் கைதட்டல் வானைப் பிளக்கிறது. ஆனால் தீப்பொறி ஆறுமுகத்தின் குழந்தைதனமான நகைச்சுவை பேச்சுக்கும் சீமானின் பேச்சுக்கும் எந்த வித்தியாசத்தையும் என்னால் காண முடியவில்லை.
இங்கு எனது சந்தேகம் என்னவெனில்,
(1) ஒரு மாநில முதலமைச்சர் படை அமைத்து அந்நிய நாட்டுடன் சண்டைபோட இந்திய அரசு அனுமதிக்குமா?
(2)ஒருவேளை இலங்கை ராணுவம் வரமுன்னர் இந்திய ராணுவம் வந்து குண்டு போட்டால் சீமான் என்ன செய்வார்?
(3) இலங்கையிடம் 3 லட்சம் ராணுவ வுPரர் உண்டு. அதைவிட கடல் மற்றும் விமான படைகளும் உண்டு. இதனை 50 ஆயிரம் சிறப்பு படையால் வெல்லமுடியுமா?
(4) இலங்கைக்கு சீனா மற்றும் வல்லரசு நாடுகள் உதவி பரிந்தால் அதனை எப்படி எதிர் கொள்வது?
(5)கச்சதீவை மீட்டு இந்திய தேசிய கொடியை ஏற்றுவதாயின் அதனால் தமிழர்களுக்கு என்ன பயன்?
சீமான் 50 ஆயிரம் படையை அனுப்பி கச்சதீவை மீட்பதிலும் பார்க்க தமிழ்நாட்டை தனிநாடாக்கினால் கச்சதீவு தானாக கிடைக்கும். அதுமட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கும் விடுதலை கிடைக்கும்.
தமிழ்நாடு விடுதலைக்காக போராட சீமான் தயாரா?
'Will Create Special Battalion Force to Retrieve Katchatheevu' If Wins 2016 Assembly Polls -…
YOUTUBE.COM

•இன்று நான் ஒரு கதை சொல்லப் போகிறேன்

•இன்று நான் ஒரு கதை சொல்லப் போகிறேன்
ஒரு காட்டில் ஒரு அப்பாவி தமிழன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான். அவனிடம் வந்த கிழட்டு கோழி ஒன்று தன்னை வளர்த்தால் ஒரே நாளில் முட்டை இடுவேன் என்றது.
அடித்து குளம்பு வைத்து சாப்பிட வேண்டிய இந்த கிழட்டுக் கோழி இனி எப்படி முட்டை போடும் என்று இந்த அப்பாவி தமிழன் சந்தேகப்படவில்லை. இதுவரை முட்டை போடாத இந்த கோழி இனி எப்படி முட்டை போடும் என்றுகூட அவன் நினைத்து பார்க்கவில்லை. ஒரே நாளில் முட்டை என்றதும் நம்பிவிட்டான் அந்த அப்பாவி தமிழன்.
ஒரே நாளில் முட்டை என்றதும் அதை நம்பி தீனி போட்டான் அந்த கிழட்டு கோழிக்கு. அதுவும் வயிறு முட்ட தின்றுவிட்டு வழக்கம்போல் பக்கத்து காட்டில் போய் தூங்கியது. அதுமட்டுமல்லாமல் பக்கத்து காட்டில் உள்ள சேவலுடன் சேர்ந்து பெரிய முட்டை இடுவேன் என்றும் ஆசை வார்த்தை கூறியது.
கிழட்டு கோழியின் பேச்சைக் கேட்ட அப்பாவி தமிழன் ஆசையுடன் சேவலை எட்டிப் பார்த்தான். அங்கு ஒரு குள்ள நரி தன்னைக் கொல்ல வந்த ஆட்டுக்குட்டியை மன்னித்து விட்டதாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருப்பதைக் கண்டான்.
ஒரு கிழட்டு கோழி தன்னை ஏமாற்றிவிட்டது என்றோ அல்லது ஒரு குள்ள நரியை சேவல் என்று ஏமாற்றியதையோ உணராமல் ஒரு நாளில் முட்டை வரும் என்று அப்பாவி தமிழன் கனவு கண்டு கொண்டிருந்தான்.
இதைப் படிக்கும்போது உங்களுக்கு சம்பந்தர் அய்யா ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவேன் என்று கூறிவிட்டு இந்தியாவில் போய் தூங்குவதும், சிறையில் உள்ள பல இளைஞர்களை விடுதலை செய்ய மறுத்துவிட்டு ஒரு இளைஞரை மன்னித்து விடுவதாக போட்டோ போடும் ஜனாதிபதி மைத்திரியும் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல என்று கூறிக்கொள்கிறேன்.

•லண்டனில் நடைபெற்ற குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவு நிகழ்வு!

•லண்டனில் நடைபெற்ற குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவு நிகழ்வு!
இன்று 09.01.16 யன்று மாலை 6 மணிக்கு ஈஸ்ட்காமில் மறைந்த மாமனிதர் குமார் பொன்னம்பலம்; அவர்களின் நினைவு நிகழ்வு நடைபெற்றது. அத்துடன் சிறையில் உள்ளவர்களின் விடுதலை வேண்டியும் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றது.
தமிழின செயற்பாட்டாளர் முருகானந்தம் அவர்களின் ஏற்பாட்டில் இந் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வு குறித்து பரவலான விளம்பரம் செய்யப்பட்டிருந்தும் நிகழ்விற்கு தமிழ் மக்கள் மிகக் குறைந்தளவே வருகை தந்திருந்தனர்.
குட்டி யாழ்ப்பாணம் என வர்ணிக்கப்படும் ஈஸ்ட்காமில் ஒரு பத்துபேர்கூட குமார் பொன்னம்பலத்தை நினைவு கூரவோ அல்லது சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காகவோ வந்து கலந்து கொள்ளாதது ஆச்சரியமாக இருக்கிறது.
குமார் பொன்னம்பலம் அவர்கள் சிறையில் இருந்து பல இளைஞர்கள் விடுதலை பெற உதவிகள் வழங்கியிருந்தார் என்று நிகழ்வை முன்னின்று நடத்திய முருகானந்தம் அவர்கள் குறிப்பிட்டார். அவரால் பயனடைந்தவர்கள் பலர் லண்டனில் இருக்கின்றபோதும் அவர்கள்கூட அன்னாருக்கு அஞ்சலி செலுத்த வரவில்லையே என அவர் கவலையுடன் தெரிவித்தார்.
தற்போது சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்கு புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ்மக்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கவேண்டும் என்று முருகானந்தம் அவர்கள் தனது பேச்சின்போது கேட்டுக்கொண்டார்.
தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டலோ சிறை வைக்கப்பட்போது அவரை விடுதலை செய்யுமாறு தொடர்ந்து 26 வருடங்கள் ஒவ்வொரு நாளும் லண்டனில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதை சுட்டிக்காட்டிய முருகானந்தம் , அதுபோல் இல்லாவிடினும் ஒருநாளாவது எமது உணர்வுகளை வெளிப்படுத்தி சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்கு குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
லண்டன் தமிழ்தேசிய கூட்டமைப்பு பொறுப்பாளர் போஸ் அவர்கள் உரையாற்றும்போது குமார் பொன்னம்பலம் அவர்கள் எந்தளவு தியாகம் செய்தார் என்று பார்க்காமல் அவரது தியாகத்தை மதித்து நினைவு கூரப்படல் வேண்டும் என்றார். அதேவேளை சிறையில் உள்ளவர்களின் விடுதலை குறித்து தமது தமிழ்தேசியகூட்டமைப்பு என்ன செய்யப்போகிறது என்பது குறித்து அவர் எதுவும் கூறாதது ஏமாற்றமாக இருந்தது.
அவதானிப்பு- பிறந்தநாள் விழாக்கள், சாமத்திய சடங்கு கொண்டாட்டங்களுக்கு பெருவாரியாக குவியும் எமது மக்கள் இதுபோன்ற மாமனிதர் நினைவு நிகழ்வு, சிறையில் உள்ளவர்களின் விடுதலை நிகழ்வுகளுக்கு கலந்துகொள்ளாமல் தவிர்ப்பது தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து கவலையை தோற்றுவிக்கின்றது.

•நூல் அறிமுக நிகழ்வு

•நூல் அறிமுக நிகழ்வு
நான் எழுதிய "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் மற்றும் தோழர் தமிழரசன் அவர்களின் "தனிநாட்டுரிமைக்கு போராடுவோம். சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும்" நூல் அறிமுக நிகழ்வு நடைபெறவுள்ளது.
காலம்- 13.01.2016 மாலை- 4 .00 மணி
இடம் - திருக்கழுங்குன்றம்.
தமிழ்தேசமக்கள் கட்சி இவ் நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளது.
நிகழ்வு வெற்றிகரமாக அமைய எமது வாழ்த்துக்கள்.

ஒரு கொலை இரண்டு பார்வைகள் !!

•ஒரு கொலை
இரண்டு பார்வைகள் !!
2009 ம் ஆண்டு புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கோத்தபாயாவின் உத்தரவின் பேரில் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டான்.
இன்று நிராயுதபாணியான பாலஸ்தீன சிறுவன் ஒருவன் இஸ்ரேலிய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான்.
இரண்டு கொலையும் ஒன்றுதான். சிறுவர்களைக் கொன்ற இந்த காட்டுமிராண்டித்தனம் கண்டிக்கப்பட வேண்டியதுதான்.
ஆனால் சிறுவன் பாலச்சந்திரன் கொலை மறக்கப்பட்டுவிட்டது. பாலஸ்தீன சிறுவன் கொலை உலகம் பூராவும் கண்டிக்கப்படுகிறது.
ஏனெனில்,
இந்த சிறுவன் பிரபாகரனின் மகன். எனவே கொல்லப்படத்தான் வேண்டும் என்று சொல்லும் சுப்பிரமணிய சுவாமிகள் யாரும் பாலஸ்தீனத்தில் இல்லை.
இந்த சிறுவன் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதி . நாம் ஒருபோதும் பயங்கரவாதிகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறும் சம்பந்தர் அய்யாக்கள் யாரும் பாலஸ்தீனத்தில் இல்லை.
சிறுவனைச் சுட்டது வெறும் போர்க்குற்றம்தான். இனப் படுகொலை அல்ல என்று வக்காலத்து வாங்கும் சுமந்திரன்கள யாரும் பாலஸ்தீனத்தில் இல்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக சுட்டவர்கள் நல்லாட்சி செய்கிறார்கள் என்று சேர்டிபிக்கேட் கொடுக்கும் தமிழ்தேசியகூட்டமைப்பு பாலஸ்தீனத்தில் இல்லை.
அதனால்தான் பாலச்சந்திரன் கொலை மறக்கப்பட்டுவிட்டது.
பாலஸதீனிய சிறவன் கொலை உலகம் பூராவும் கண்டிக்கப்படுகிறது.
அதுமட்டுமன்றி நான் அறிந்தவரையில்,
உலக பாலஸ்தீன தலைவர்" கருணாநிதி அவர்களுக்கு இல்லை
"
"பாலஸ்தீன தாய்" ஜெயா அம்மையார் அவர்களுக்கு இல்லை.
இவர்கள் யாரும் இல்லாதபடியால்தான் அவர்களால் சாதிக்க முடிகிறது.
இனியாவது தமிழர்கள் விழித்துக்கொள்வோமா?

மாடுகளா? மனிதர்களா? யார் மதிப்பு மிக்கவர்கள்?

மாடுகளா? மனிதர்களா?
யார் மதிப்பு மிக்கவர்கள்?
மாடுகள் மீது இரக்கம் காட்டுபவர்கள்
மனிதர்கள் மீது இரக்கம் காட்டவில்லையே!
செய்தி- மாடுகள் மீது இரக்கம் கொண்டதாக கூறப்படும் விலங்குகள் நல வாரியம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஜல்லிக்கட்டிற்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மிருகங்களை வைத்து சர்க்கஸ் நடத்தக்கூடாது என சட்டமியற்றியுள்ள இந்திய அரசு சிறுவர்களை வைத்து சர்கஸ் நடத்தவதை ஏன் கண்டுகொள்வதில்லை?
சிறுவர்களை வைத்து சர்க்கஸ் நடத்தப்படுகிறது.
சிறுவர்களை வைத்து வேலை வாங்கப்படுகிறது.
விலங்குகளை வதைக்ககூடாது என அக்கறை கொள்ளும் விலங்குகள் நல வாரியம் சிறுவர் வதை குறித்து அக்கறை கொள்வதில்லை?
சிறுவர்கள் மாடுகளை விட கேவலமானவர்களா? அல்லது
மாடுகள் சிறுவர்களை விட மதிப்பு மிக்கவையா?
சிறுவர்களிடம் வேலை வாங்கக்கூடாது என சட்டம் உள்ளது. ஆனால் நாடு பூராவும் சிறுவர்கள் வேலை வாங்கப்படுகின்றனர்.
இது அரசின் கண்களுக்கு தெரிவதில்லையா? அல்லது
இது விலங்குகள் நலவாரியத்திற்கு அக்கறை இல்லையா?
பீட்டா என்று ஒரு அமெரிக்க பணத்தில் இயங்கும் நிறுவனம். இது மிருகவதைக்கு எதிராக பெரிதாக கூச்சல் போடுகிறது.
சிரியாவில் அமெரிக்க கொடுமையால் மக்கள் உணவின்றி நாய்களையும் பூனைகளையும் பிடித்து உண்கிறார்கள்.
இது குறித்து இந்த பீட்டா ஏன் வாய் திறப்பதில்லை?
மக்களே!
இந்த போலி மிருக நல வாரியங்களை இனம் கண்டு கொள்ளுங்கள்.
முதலில் மனிதர்களை மதிப்போம்.
அப்புறம் மாடுகளை மதிப்போம்.

•யானைகளுக்கும் சிறப்புமுகாம் அகதிகளுக்கும் சிறப்புமுகாம் "ஈழத்தாய்" ஜெயா அம்மையாரின் சாதனைகள் !!

•யானைகளுக்கும் சிறப்புமுகாம்
அகதிகளுக்கும் சிறப்புமுகாம்
"ஈழத்தாய்" ஜெயா அம்மையாரின் சாதனைகள் !!
கருணை உள்ளம் கொண்ட "அம்மா" அவர்கள் யானைகள் மீது இரக்கம் கொண்டு அவற்றுக்கு சிறப்புமுகாம் அமைத்துள்ளார்.
அங்கு யானைகள் காட்டு வாழ்க்கையை வாழலாம்.
குடும்பமாக சுதந்திரமாக நடமாடலாம்.
தாராளமாக உணவு உண்ணலாம்
அவற்றுக்கு மருத்தவ வசதி வழங்க ஒரு மருத்துவ முகாமே நிறுவப்பட்டுள்ளது.
ஆனால் அகதிகள் சிறப்புமகாமில்
அகதிகள் 24 மணி நேரமும் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குடும்பங்களை பிரித்து அடைக்கின்றனர்.
போதிய உணவு மட்டுமல்ல குடிதண்ணீர்கூட வழங்கப்படுவதில்லை
மருத்துவ வசதிகள் தரப்படுவதில்லை
ஈழத்தாய் ஜெயா அம்மையாரின் ஆட்சியில்
யானைகளுக்கு கொடுக்கப்படும் சலுகைகள்கூட
ஈழ அகதிகளுக்கு வழங்கப்படுவதில்லையே!
ஈழத் தமிழனாக பிறந்ததைவிட
தமிழ்நாட்டில் ஒரு யானையாகவாவது பிறந்திருக்கலாம்?

•தை பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

•தை பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
விஜய் மல்லையாக்களுக்கு கோடிக்கணக்கான ரூபா கடன்களை தள்ளுபடி செய்யும் அரசுகள்,
முதலாளி அதானிக்காக பாக்கிஸ்தான் சென்று ஒப்பந்தம் போடும் மோடி அரசுகள,
உலகிற்கே சோறு போடும் இந்த உழைக்கும் மக்களுக்காக எதுவும் செய்வதில்லை!
விவசாயி ஊனமாக இருந்தாலும்கூட அரச உதவியில்லை.
அவன் தனக்காக மட்டுமன்றி உலகிற்காகவும் உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம்
தினமும் இரண்டு விவசாயி வாழ வழியின்றி தற்கொலை செய்கிறான்.
இந்த அவல நிலை மாற வேண்டும்.
உழைக்கும் மக்களின் உரிமைநாளாம் பொங்கல் திருநாளில்
இத் துயர் துடைக்க சபதம் கொள்வோம்!