Sunday, January 31, 2016

•ஊருக்கும் வெட்கமில்லை உலகத்திற்கும் வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை

•ஊருக்கும் வெட்கமில்லை
உலகத்திற்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை
செய்தி 1-அரசியல் கைதிகள் யாருமில்லை. சிறையில் இருக்கும் 215 சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்று தமிழ் மக்கள் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட நல்லாட்சி அரசு ஜனாதிபதி மைத்திரி தெரிவித்துள்ளார்.
செய்தி 2-வடமாகாண முதலைமைச்சரின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறேன் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அய்யா தெரிவித்துள்ளார்.
செய்தி 3- முன்னாள் பெண் போராளியின் உடலை தகனம் செய்ய பணம் இன்மையால் அரச செலவில் அடக்கும் செய்யுமாறு மகள் கோரிக்கை.
ஜனாபதி உறுதி மொழி தந்துள்ளார். அவரை நாம் நம்புகிறோம் என்று சான்றிதழ் வழங்கிய சம்பந்தர் அய்யா தற்போது சிறையில் உள்ளவர்களின் விடுதலையைவிட மாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானிப்பதே முக்கியம் என கருதுகிறார்.
தமிழ் மக்களுக்காக போராடிய பெண் போராளி கண் பார்வையற்ற நிலையில் வறுமையில் மரணம் அடைந்துள்ளார். அவரை அரசு செலவில் அடக்கும் செய்மாறு அவரது மகள் கோரியுள்ள அவல நிலையில் தாயகம் உள்ளது.
இவற்றை தட்டிக்கேட்க வேண்டிய நாங்களோ வேட்டி தினத்திற்கு வேட்டி கட்டிய படம் போட்டு மகிழ்கிறோம். என்னே கொடுமை இது?
தன் மகள் பிறந்த போது பால் புட்டி வாங்க பணம் இருக்கவில்லை. அந்த மகள் இறந்தபோது சவப் பெட்டி வாங்கவும் பணம் இருக்கவில்லை என மாக்ஸ் மனைவி ஜென்னி தமது வறுமை நிலையை குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் நாங்களோ ,
எமது மக்களுக்காக போராடிய போராளிகள் வறுமையில் வாழ்வது குறித்தும் வெட்கப்படவில்லை.
அவர்களது சவ அடக்கத்திற்கும்கூட பணம் இல்லை என்பது குறித்தும் வெட்கம் இல்லை.
இதை எல்லாம் மறந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திலும் எமக்கு கொஞ்சம்கூட வெட்கமில்லை.

No comments:

Post a Comment