Sunday, January 31, 2016

முத்துக்குமாரின் தியாகம் வீணாகிப் போய்விட்டதா?

•முத்துக்குமாரின் தியாகம் வீணாகிப் போய்விட்டதா?
ஈழத்தில் சிவகுமாரன் என்ற போராளி தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் உதவி கேட்டபோது அவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை. இறுதியில் வேறு வழியின்றி வங்கியை கொள்ளையிட அவர் முயன்றபோது பொலிஸ் கைதில் இருந்து தப்பிக்க சயனைட் விழுங்கி தற்கொலை செய்துகொண்டார். அதன் பின்னர் உதவி செய்ய மறுத்த அதே தமிழர்விடுதலைக் கூட்டணி சிவகுமாரனை தியாகி என்று குறிப்பிட்டு பிரச்சாரம் செய்து தேர்தலில் வெற்றிவாகை சூடினார்கள்.
தமிழகத்தில் முத்தக்குமார் உட்பட 19 பேர் ஈழத் தமிழர்களுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்தார்கள். ஆனாலும் இந்திய அரசையோ அல்லது தமிழக அரசையோ ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாற்ற முடியவில்லை. ஈழத் தமிழர்களையும் அழிவில் இருந்து காப்பாற்ற முடியவில்லை.
எதிரிக்கு எந்தவித தீங்கையும் இழைக்காத இந்த தற்கொலைகளை அரசு கொஞ்சம்கூட மதிப்பதில்லை. இத் தற்கொலைகளுக்கு அஞ்சுவதில்லை. எனவேதான் இவர்களுக்கு நினைவு சின்னம் அமைப்பதையோ அல்லது வீர வணக்கம் செலுத்துவதையோ அரசு தடுப்பதில்லை. அதனால்தான் சந்தப்பவாத அரசியல் தலைமைகளும் இந்த தியாகிகளை போற்றி விழா எடுக்கிறார்கள்.
முத்துக்குமார் தன்னைத்தானே எரிக்காமல் சோனியாகாந்தியை எரித்திருந்தால்,
வைகோ அஞ்சலி செலுத்தியிருப்பாரா?
அய்யா நெடுமாறன் முள்ளிவாயக்கால் முற்றத்தில் நினைவு சின்னம் வைத்திருப்பாரா?
நாம் தமிழர் சீமான் தமிழகம் பூராவும் வீர வணக்கம் செலுத்தியிருப்பாரா?
•தோழர் தமிழரசன்தான் முதன் முதலில் தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு கோரி குடமுருட்டியில் ராஜீவிற்கு குண்டு வைத்தவர்.
•தோழர் தமிழரசன்தான் முதன் முதலில் பாலஸ்தீன விடுதலை அமைப்பை அங்கீகரித்ததுபொல் ஈழவிடுதலை அமைப்புகளை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்று என மருதையாற்று பாலத்திற்க குண்டு வைத்தவர்.
•தோழர் தமிழரசன்தான் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு ஒருபோதும் உதவாது. அது ஈழத் தமிழர்களை அழிக்க இலங்கை அரசுக்கு உதவும் என்பதை கூறியவர்.
•தோழர் தமிழரசன்தான் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழக தமிழர்களும் ஈழத் தமிழர்களும் ஒருமித்து ஆயுதம் ஏந்த வேண்டும் என்று கூறியவர்.
•தோழர் தமிழரசன்தான் ஒரு அடிமை தனது அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும் என்று கூறியவர்.
•தோழர் தமிழரசன்தான் தமிழக விடுதலையை முன்னெடுப்பதே ஈழ விடுதலைக்கு செய்யும் உதவியாகும் என்று கூறியவர்.
இங்கு எனது கேள்வி என்னவெனில்
முத்துக்குமாருக்காக அஞ்சலி செலுத்தும் வைகோ அவர்கள் தோழர் தமிழரசனுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்?
முத்துக்குமாருக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய அய்யா நெடுமாறன் அவர்கள் தோழர் தமிழரசனுக்கு நினைவுச்சின்னம் எழுப்பாதது ஏன்?
முத்துக்குமாருக்கு தமிழகம் முழுவதும் வீரவணக்கம் செலுத்திவரும் நாம் தமிழர் சீமான் அவர்கள் தோழர் தமிழரசனுக்கு வீர வணக்கம் செலுத்தாதது ஏன்?
ஈழத்தில் இந்திய அமைதிப்படை தமிழ் மக்களை கொன்று குவித்தபோது தமிழ் பெண்களை பாலியல் வல்லறவு செய்தபோது இந்திய தொலைக்காட்சி பொய்ப் பிரச்சாரம் செய்தது. அந்த பொய்ப் பிரச்சாரத்தை எதிர்த்து கலைஞர் கருணாநிதி டிவி பெட்டியை உடைத்தார்.
தோழர் தமிழரசனின் தமிழ்நாடுவிடுதலைப்படையை சேர்ந்த தோழர் மாறன் கொடைக்கானல் டிவி டவருக்கு குண்டு வைத்தார். அப்போது அவர் குண்டு வெடித்து மரணமடைந்தார்.
ஈழத் தமிழர்களுக்காக மரணமடைந்த தோழர் மாறனுக்கு,
வைகோ அவர்கள் இதுவரை அஞ்சலி செலுத்தவில்லை.
ஈழத் தமிழர்களுக்காக தன் உயிரை அர்ப்பணித்த தோழர் மாறனுக்கு அய்யா நெடுமாறன் நினைவு சின்னம் வைக்கவில்லை.
ஈழத் தமிழர்களுக்காக உயிர் துறந்த மாறனுக்கு "நாம்தமிழா"; சீமான் அவர்கள் வீர வணக்கம் செலுத்தவில்லை.
இங்கு எனது கேள்வி என்னவெனில,
வெள்ளைக்கார்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் குண்டு வீசிய பகத் சிங்கை தியாகி என்கிறார்கள். அனால் கொள்ளைக்கார இந்திய அரசுக்கு எதிராக டிவி டவருக்கு குண்டு வீசிய மாறனை பயங்கரவாதி என்கிறார்களே அது ஏன்?
மாறன் தமிழன் என்பதாலா? அல்லது
மாறன் தமிழர்களுக்காக குண்டு வீசியதாலா?

No comments:

Post a Comment