Sunday, January 31, 2016

இந்திய குடியரசுதின வாழ்த்து தெரிவிப்போர் ஒரு நிமிடம் இதை சிந்தியுங்கள்!

•இந்திய குடியரசுதின வாழ்த்து தெரிவிப்போர்
ஒரு நிமிடம் இதை சிந்தியுங்கள்!
இந்தியா செவ்வாய்க்கு ராக்கட் விடுகிறது. ஆனால்
இப்பவும் கையால்தானே மலம் அள்ளுகிறது
இந்தியா ஒரு வல்லரசாக வளர்கிறது என்கிறார்கள்.
ஆனால் 40 வீதம் மக்களுக்கு கக்கூஸ் இல்லையே
இந்தியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வைத்திருக்கிறது
ஆனால் தமிழக மீனவன் 900 பேர் கொல்லப்பட்டதை தடுக்கவில்லையே
இந்தியா,
இலங்கைக்கு 10 ஆயிரம் கோடி ரூபா கொடுத்துள்ளது.
நேபாளத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபா கொடுத்துள்ளது
பூட்டானுக்கு 8ஆயிரம் கோடி ரூபா கொடுத்துள்ளது.
மங்கோலியாக்கு 6ஆயிரம் கோடி ரூபா கொடுத்துள்ளது.
ஆனால்
85ஆயிரம் கோடி ரூபா வரி கட்டும் தமிழ்நாட்டிற்கு
வழங்கப்பட்ட வெள்ள நிவாரணம் வெறும் 2 ஆயிரம் கோடி மட்டுமே
30 முதலாளிகள் வங்கியில் திருப்பி கொடுக்காத கடன் தொகை 121லட்சம் கோடி ரூபா.
ஆனால் அதேவேளை இந்தியாவில் தினமும் இரண்டு விவசாயி வறுமையினால் தற்கொலை செய்கிறான்.
ஆந்திராவில் ஒரு பல்கலைக்கழக மாணவன் தற்கொலை செய்துள்ளான்
விழுப்புரத்தில் மூன்று மாணவிகள் தற்கொலை செய்துள்ளார்கள்.
ஒரு பெண் முதலமைச்சராக உள்ள மாநிலத்திலேயே பெண்கள் தற்கொலை செய்யும் அவலம்.
இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்கள்.
ஆனால் அது தனது 61வது குடியரசு தினத்தை
1லட்சம் இராணுவ வீரர்களின் பாதுகாப்பில்தான் கொண்டாடுகிறது
3 லட்சம் இராணுவத்துடனேயே காஸ்மீரை வைத்திருக்கிறது.
இந்திய ராணுவம் தங்களை பாலியல் வல்லுறவு செய்கிறது என்று
மணிப்பூர் பெண்கள் நிர்வாணமாக போராடும் அவலம்.
இது உலகில் எந்த நாட்டிலும் நடக்காத போராட்டம்.
இதில் ஒரு தமிழனாகவோ அல்லது இந்தியனாகவோ
குடியரசு தினப் பெருமை கொள்ள என்ன இருக்கிறது?
வாழ்த்து சொல்லும் தமிழா ஒரு நிமிடம் சிந்தித்து பார்!

No comments:

Post a Comment