Sunday, January 31, 2016

•எமது சிறுவர்களும் கல் எறிவார்கள்!

•எமது சிறுவர்களும் கல் எறிவார்கள்!
அவர்கள் கப்பலில் வந்தார்கள்.
தங்கள் கையில் இருந்த பைபிளை எம்மிடம் தந்தார்கள்.
எங்கள் கையில் இருந்த நாட்டை அவர்கள் எடுத்துக்கொண்டார்கள்.
இது ஒரு ஆப்பிரிக்க நாட்டு கவிஞனின் கவிதை வரிகள்.
ஆனால் எதையுமே தராமலே இந்திய அரசு
இலங்கை நாடு முழுவதையுமே ஆக்கிரமித்துவிட்டதே
இதை எழுத எந்த கவிஞனும் எமிமிடம் இல்லையே
ஜயகோ! இனி நான் என்ன செய்வேன்?
இந்தியாவுக்கு,
•சம்பூர் கொடுத்தாயிற்று
•புல்மோட்டை கொடுத்தாயிற்று
•மன்னார் எண்ணெய்வயல் கொடுத்தாயிற்று
•பலாலி விமான நிலையம் கொடுத்தாயிற்று
•காங்கேசன் துறைமுகமும் சீமெந்தும் கொடுத்தாயிற்று
•திருகோணமலை துறைமுக குதங்கள் கொடுத்தாயிற்று
மிஞ்சி இருப்பது கோமணம் மட்டுமே
அதையும் எப்போது உருவி கொடுக்கப்போறாங்களோ தெரியவில்லையே?
ஒரு பக்கம் இலங்கை அரசு ஒடுக்கிறது.
மறுபக்கம் இந்திய அரசு ஆக்கிரமிக்கிறது
தமிழன் எப்படி நீட்டி நிமிர்ந்து உறங்குவது?
இப்படி சிந்திக்க எமக்கு ஒரு (துட்ட) கெமுனு இல்லையே?
இதோ இந்த பாலஸ்தீன சிறுவன் என்ன நம்பிக்கையில் பீரங்கிக்கு கல் எறிகிறான்?
அந்த நம்பிக்கையுடன் எனது மண்ணிலும் ஒரு சிறுவன் கல் எறிவான்.
அவனுக்காக காத்து இருக்கிறேன் ஏக்கத்துடன்.
இந்திய ஆக்கிரமிப்பு குறித்து விபரம் அறிய விரும்புபவர்கள் கீழ்வரும் இணைப்பில் உள்ள கட்டுரையை படிக்கவும்.

No comments:

Post a Comment