Sunday, January 31, 2016

மாலைதீவு "றோ" வின் திட்டப்படி புளட் தாக்கினார்களா? அல்லது புளட் தாக்கும் போது இந்தியா அதனை பயன்படுத்தியதா?

மாலைதீவு
"றோ" வின் திட்டப்படி புளட் தாக்கினார்களா? அல்லது
புளட் தாக்கும் போது இந்தியா அதனை பயன்படுத்தியதா?
இந்திய உளவுப்படையின் திட்டப்படியே புளட் இயக்கம் மாலைதீவு மீது தாக்குதல் நடத்தியதாக சிலர் தவறாக எழுதுகிறார்கள்.
ஆனால் புளட் இயக்கம் மாலை தீவை தாக்கியபோது அதனை இந்தியா பயன்படுத்திக்கொண்டது என்பதே உண்மையாகும்.
மாலைதீவை தாக்குதல் அல்லது அதில் ஒரு தீவை விலைக்கு வாங்குதல் என்பது புளட் இயக்கத்திற்கு முன்னர் தம்பாபிள்ளை மகேஸ்வரன் திட்டமாக இருந்தது.
மாலை தீவை புளட் தாக்கிய பின்னர் தம்பாபிள்ளை மகேஸ்வரன் ஆப்பிரிக்காவிற்கு அருகில் ஒரு தீவை விலைக்கு வாங்க முயற்சி செய்தார்.
மாலைதீவு எதிர்க்கட்சி தலைவரின் சகோதரர் ஒருவர் பல ஈழ விடுதலை இயக்கங்களை அணுகி தாம் ஆட்சியைக் கைப்பற்ற உதவுமாறு கேட்டார்.
யாரும் உதவிபுரிய முன்வராத நிலையில் புளட் உதவியை நாடினார். அவர் பல மாதமாக புளட் இயக்கத்திடம் இதனை வலியுறுத்தி வந்திருந்தார்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து அனைத்து இயக்கங்களும் இந்திய அரசினால் கைவிடப்பட்ட நிலையினை உணர்ந்தார்கள்.
எனவே அவர்களது தலைமைகள் சில இலங்கைக்கு வந்தன. சில வேறு இடங்களை பெற முயற்சி செய்தன.
புளட் மாலை தீவை தாக்கும்போது விட்ட தவறால் மாலைதீவு அரசு உடனே இலங்கையிடமே உதவி கேட்டது.
இலங்கை அரசு இப்படி ஒரு நிலையை எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் ஜே.ஆர் ஜெயவர்த்தனா இலங்கை படையை அனுப்ப முடிவு செய்தார்.
ஆனால் அழைப்பு விடுக்கப்படாத நிலையிலும் இந்தியா உடனே தனது படையை அனுப்பி சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டது.
இப்போதும் இந்திய ராணவத்தின் ஒருபகுதி மாலைதீவில் இருப்பதாக கூறப்படுகிறது.
மாலைதீவு மக்களின் வெறுப்பை குறைப்பதற்காக இந்தியா ஒரு பெரிய மருத்துவமனையை மாலைதீவில் கட்டிக் கொடுத்துள்ளது.
புளட் தலைமை தனது கட்டுப்பாட்டிற்குள் இருக்க சம்மதிக்காதால் கோபம் கொண்ட இந்திய உளவுப்படை ஒரு புளட் உறுப்பினர் மூலம் உமா மகேஸ்வரனைக் கொன்றது.
உமாமகேஸ்வரனை கொன்ற புளட் உறுப்பினரை இந்திய தூதராலயமே பாதுகாத்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.
பின்னர் அவர் இந்திய உளவுப்படையின் அதரவுடன் சென்னையில் இருக்கம்போது தமிழ்;நாடு அரசு அவரை மேலூர் சிறப்புமுகாமில் அடைத்தது.
உடனே இந்திய உளவுப்படை தமிழ்நாடு அரசுடன் தொடர்பு கொண்டு அவரை விடுவித்து பெங்களுரில் கொண்டு சென்று வைத்திருந்தது. அந்த உறுப்பினர் சில வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் இறந்துவிட்டார்.

No comments:

Post a Comment