Sunday, January 31, 2016

•50 நாட்களாக இவரை சிறையில் அடைத்து வைத்திருப்பது ஏன்?

•50 நாட்களாக இவரை சிறையில் அடைத்து வைத்திருப்பது ஏன்?
முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் தோழர் குமார் குணரட்னம் கடந்த 50 நாட்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்.
அவர் செய்த குற்றம் என்ன? அவரை விடுதலை செய்ய நல்லாட்சி அரசு மறுப்பது ஏன்?
•சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யும்படி அவர் கோரியது குற்றமா?
•தமிழ் மக்களுக்கு சமவுரிமை வழங்கவேணடும் என அவர் கூறியது குற்றமா?
•முக மாற்றம் தேவையில்லை. அமைப்பு மாற்றம் வேண்டும் என அவர் கேட்டது குற்றமா?
மத்தியவங்கி தலைவருக்கு ஒரு நாளில் குடியுரிமை வழங்கிய நல்லாட்சி அரசால் குமார் குணரட்னத்திற்கு 50 நாட்களாகியும் ஏன் குடியுரிமை வழங்க முடியவில்லை?
குமார் குணரட்னம் இலங்கையில் பிறந்தவர். இலங்கையில் வளர்ந்தவர். இலங்கையில் ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர். அவருக்கு ஏன் குடியுரிமை வழங்க முடியாது?
ஒருபுறத்தில் புலம் பெயர்ந்தவர்களை திரும்பி வாருங்கள் என அரசு அறைகூவல் விடுகிறது. மறுபுறத்தில் திரும்பி வந்த குமார் குணரட்னத்தை சிறையில் அடைக்கிறது. இதுதான் நல்லாட்சியா?
குமார் குணரட்னத்தை விடுதலை செய்யும்படி 50 நாட்களாக தொடர்ந்து சாத்வீக போராட்டம் நடைபெறுகிறது. அதைக்கூட நல்லாட்சி அரசு மதிக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்?
ஒரு பெண் பாடகருக்கு பிராவை கழற்றி எறிந்துவிட்டார் என்று குமுறிய ஜனாதிபதியின் கண்களுக்கு ஒரு கட்சியின் தலைவர் 50 நாட்களாக சிறையில் அடைத்து வைத்திருப்பது தெரியவில்லையா?
வெள்ளை வான் கடத்தல் புகழ் கோத்தபாயா
பல பெண்களை கெடுத்த நாமல் ராஜபக்ச
பல்லாயிரம் மக்களை கொன்ற மகிந்த ராஜபக்ச
இவர்களில் ஒருவரைக்கூட கைது செய்து சிறையில் அடைக்க முடியாத மைத்திரி அரசு
மக்களுக்காக போராடும் குமார் குணரட்னத்தை மட்டும் சிறையில் அடைத்து வைத்திருப்பது என்ன நியாயம்?
இலங்கை அரசே!
உடனடியாக குமார் குணரட்ணத்தை விடுதலை செய்!
அவருக்கு இலங்கை குடியுரிமையை உடனே வழங்கு!!

No comments:

Post a Comment