Sunday, January 31, 2016

•இன்று நான் ஒரு கதை சொல்லப் போகிறேன்

•இன்று நான் ஒரு கதை சொல்லப் போகிறேன்
ஒரு காட்டில் ஒரு அப்பாவி தமிழன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான். அவனிடம் வந்த கிழட்டு கோழி ஒன்று தன்னை வளர்த்தால் ஒரே நாளில் முட்டை இடுவேன் என்றது.
அடித்து குளம்பு வைத்து சாப்பிட வேண்டிய இந்த கிழட்டுக் கோழி இனி எப்படி முட்டை போடும் என்று இந்த அப்பாவி தமிழன் சந்தேகப்படவில்லை. இதுவரை முட்டை போடாத இந்த கோழி இனி எப்படி முட்டை போடும் என்றுகூட அவன் நினைத்து பார்க்கவில்லை. ஒரே நாளில் முட்டை என்றதும் நம்பிவிட்டான் அந்த அப்பாவி தமிழன்.
ஒரே நாளில் முட்டை என்றதும் அதை நம்பி தீனி போட்டான் அந்த கிழட்டு கோழிக்கு. அதுவும் வயிறு முட்ட தின்றுவிட்டு வழக்கம்போல் பக்கத்து காட்டில் போய் தூங்கியது. அதுமட்டுமல்லாமல் பக்கத்து காட்டில் உள்ள சேவலுடன் சேர்ந்து பெரிய முட்டை இடுவேன் என்றும் ஆசை வார்த்தை கூறியது.
கிழட்டு கோழியின் பேச்சைக் கேட்ட அப்பாவி தமிழன் ஆசையுடன் சேவலை எட்டிப் பார்த்தான். அங்கு ஒரு குள்ள நரி தன்னைக் கொல்ல வந்த ஆட்டுக்குட்டியை மன்னித்து விட்டதாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருப்பதைக் கண்டான்.
ஒரு கிழட்டு கோழி தன்னை ஏமாற்றிவிட்டது என்றோ அல்லது ஒரு குள்ள நரியை சேவல் என்று ஏமாற்றியதையோ உணராமல் ஒரு நாளில் முட்டை வரும் என்று அப்பாவி தமிழன் கனவு கண்டு கொண்டிருந்தான்.
இதைப் படிக்கும்போது உங்களுக்கு சம்பந்தர் அய்யா ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவேன் என்று கூறிவிட்டு இந்தியாவில் போய் தூங்குவதும், சிறையில் உள்ள பல இளைஞர்களை விடுதலை செய்ய மறுத்துவிட்டு ஒரு இளைஞரை மன்னித்து விடுவதாக போட்டோ போடும் ஜனாதிபதி மைத்திரியும் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல என்று கூறிக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment