Sunday, January 31, 2016

•சம்பந்தர் அய்யாவுக்கு வாழ்நாள் வீரர் விருது. டேவிட் அய்யா அனாதை ஆச்சிரமத்தில் பரிதாப சாவு

•சம்பந்தர் அய்யாவுக்கு வாழ்நாள் வீரர் விருது.
டேவிட் அய்யா அனாதை ஆச்சிரமத்தில் பரிதாப சாவு
டேவிட் அய்யா,
•தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ் மக்களுக்காக அhப்பணித்தவர்.
•தன் சொத்து முழுவதையும் தமிழ் மக்களுக்கு வழங்கியவர்.
•தான் காந்தீய கொள்கைகளை நம்பிய போதும் ஆயுதம் ஏந்திய போராளிகளை என்றுமே ஆதரித்து வந்தவர்.
•இந்தியாவில் தங்கியிருந்தபோதும் இந்திய அரசின் எந்த உதவிகளையும் அவர் பெற்றுக்கொண்டதில்லை.
•இறுதியில் யாரும் அற்ற நிலையில் கிளிநொச்சி அனாதை அச்சிரமத்தில் பரிதாபகரமாக உயிர் துறந்தார்.
•அவர் வாழும்போதும் சரி, அவர் இறந்தபின்பும்கூட யாரும் அவருக்கு எந்த விருதும் அளிக்கவில்லை.
சம்பந்தர் அய்யா,
•வாழ்நாள் முழுவதும் எம்.பி பதவி பெறுவதிலேயே கவனமாக இருக்கிறார்.
•புலிகள் பலமாக இருந்தபோது அவர்களே தமிழ்மக்களின் ஏக பிரதிநிதி என்றார். அவர்கள் மூலம் எம்.பி பதவி பெற்றார்.
•புலிகள் அழிந்த பின்பு அவர்களை பயங்கரவாதிகள் என்றார். அவர்களை தான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றார்.
•தன் சொத்தில் ஒரு சதமேனும் மக்களுக்கு வழங்காதவர். போதாகுறைக்கு லிங்கநகர் மக்களின் காணிகளையும் அபகரிக்க முயல்கிறார்.
•குடும்பத்தோடு இந்தியாவில் தங்கியிருக்கிறார். தன் இருதய சிகிச்சையை கூட இந்திய உதவியுடனே செய்கிறார்.
•இதுவரை தமிழ்மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. ஆனால் அவருக்கு வாழ்நாள் வீரர் விருது அளிக்கிறார்கள்.
காணமல் போனவர்கள் யாரும் உயிருடன் இல்லை என்று பிரதமர் ரணில் கூறியுள்ளார்.
அப்படியென்றால் அவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டுவிட்டார்களா?
யார் அவர்களைக் கொன்றார்கள்?
கொன்றவர்களுக்கு என்ன தண்டனை?
கொல்லப்பட்டவர்களுக்கு என்ன இழப்பீடு?
இவற்றுக்கு விசாரணை உண்டா?
இவை குறித்து சம்பந்தர் அய்யாவோ அல்லது தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்கூட இதுவரை வாய் திறக்கவில்லை.
இந்த நிலையில் சம்பந்தர் அய்யா என்ன சாதித்தவிட்டார் என்பதற்காக வாழ்நாள் வீரர் விருது வழங்குகிறார்கள்?
•சிறையில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்படவில்லை
•காணாமல் போனவர்கள் கண்டு பிடிக்கப்படவில்லை
•இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை
•இனப்பிரச்சனை தீர்க்கப்படவில்லை
அப்பறம் என்ன ம--க்கு சம்பந்தர் அய்யாவுக்க விருது?
கொடுப்பவனுக்கும் வெட்கம் இல்லை
வாங்கிறவனுக்கும் வெட்கம் இல்லை

No comments:

Post a Comment