Sunday, January 31, 2016

•கனடா இந்திய தூதரத்தின் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட விருது?

•கனடா இந்திய தூதரத்தின் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட விருது?
சர்வதேச விசாரணை , சர்வசன வாக்கெடுப்பு போன்றவற்றை புலம்பெயர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
புலம்பெயர் அமைப்புகளிடையே பிளவுகளை ஏற்படுத்தி அவற்றின் கோரிக்கைகளை மழுங்கடிக்க இந்திய உளவு அமைப்புகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றன.
அவற்றின் ஒரு அங்கமாகவே அண்மையில் கனடாவில் சம்பந்தர் அய்யாவுக்கு "வாழ்நாள் வீரர்" விருது வழங்கப்பட்டிருக்கிறது.
இவ் விருது வழங்கலின் பின்னனியிலும் கனடா இந்திய தூதரகமே செயற்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
இந்த விருது வழங்கலின் மூலமாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் சம்பந்தர் அய்யாவின் நடவடிக்கைகளை எற்றுக் கொள்வதாக காட்டுவதே நோக்கமாகும்.
அதாவது புலம்பெயர் அமைப்புகள் வலியுறுத்தி வரும் சர்வதேச விசாரணை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பிற்கு மக்கள் ஆதரவு இல்லை என காட்ட முனையும் சதியாகும் இது.
புலம்பெயர் நாடுகளில் எழும் போராட்டக் குரல்களை நசுக்கிவிட்டால் தமிழ் மக்களை காலம் பூராவும் அடிமையாக வைத்திருக்கலாம் என இலங்கை இந்திய அரசுகள் தப்பு கணக்கு போடுகின்றன.
அவர்கள் விட்டெறியும் இறைச்சி துண்டிற்காக வாலாட்ட புலம்பெயர் நாட்டிலும் சில நாயக்குட்டிகள் இருக்கத்தான் செய்கின்றன.
ஆனால் இவர்களையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு மக்கள் இறுதி வெற்றியை அடைவார்கள். இது உறுதி.

No comments:

Post a Comment