Sunday, September 11, 2016

•தமிழ்நாடு தனிநாடாக விடுதலை பெற வேண்டுமா? தோழர் தமிழரசன் கோரிக்கை அவசியமானதா?

•தமிழ்நாடு தனிநாடாக விடுதலை பெற வேண்டுமா?
தோழர் தமிழரசன் கோரிக்கை அவசியமானதா?
தமிழக அரசின் இன்றைய கடன் 1.21லட்சம் கோடி ரூபா. இதற்கு வட்டியாக 10754 கோடி ரூபா தமிழக அரசு கட்டுகிறது.
ஒவ்வொரு தமிழன் தலையிலும் 13862 ரூபா கடன் சுமத்தப்பட்டுள்ளது அதாவது பிறக்கும் ஒவ்வொரு தமிழக்; குழந்தையும் 13862ரூபா கடனுடனே பிறக்கின்றது.
4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் மொத்த கடன் தொகை 55448 ரூபா. ஒரு குடும்பத்திற்கு கொடுக்கும் இலவச பொருட்கள் பெறுமதி சுமார் 4000 ரூபா எனில் மிகுதி 51448 ரூபா எங்கே சென்றது?
ஒரு சட்டமன்ற உறுப்பினரின் சம்பளம் 50 ஆயிரம் ரூபா. மாதாந்த சம்பளம் 50 ஆயிரம் ரூபா பெற்றுக்கொண்ட கலைஞர் கருணாநிதியின் குடும்ப சொத்தின் பெறுமதி 45 ஆயிரம் கோடி ரூபாக்கள்.
மாதாந்த சம்பளம் 1 ரூபா மட்டுமே பெற்றுவந்த ஜெயா அம்மையாரின் சொத்து மதிப்பு 30 ஆயிரம் கோடி ரூபாக்கள்.
இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் இந்த இருவரும் எப்படி கோடிக் கணக்கான ரூபா சொத்துக்கள் சேர்த்தார்கள்?
ஏன் இவர்களின் வருமானத்திற்கு மேலான சொத்தை இதுவரை பறிமுதல் செய்ய முடியவில்லை? அப்படியாயின் இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா?
இந்திய அரசின் கைப் பொம்மைகளாக இவர்கள் செயற்படுவதற்கு சலுகையாகவே இவர்களது ஊழல் கண்டு கொள்ளப்படாமல் இருக்கிறது.
வெள்ளைக்காரன் காலத்தில் தமிழகத்தில் வசூலிக்கப்பட்ட வரித்தொகை ஒரு வருடத்தில் சுமார் 350 கோடி ரூபா.
ஆனால் தற்போது கொள்ளைக்கார இந்திய மத்திய அரசு தமிழகத்தில் வசூலிக்கும் வரி கடந்த ஆண்டு மட்டும் 85000கோடி ரூபா.
85000கோடி ரூபா வரியாக வசூலிக்கும் மத்திய அரசு தமிழகத்திற்கு திருப்பி உதவியாக கொடுக்கும் பணம் 28000கோடி ருபா மட்டுமே. அதிலும் அடுத்த அண்டு முதல் 6000கோடி ரூபா குறைக்கப்படவிருக்கிறது.
இந்திய மத்திய அரசு, நேபாளத்திற்கு 14000 கோடி ருபாவையும், பூட்டானுக்கு 8000 கோடி ரூபாவையும், இலங்கைக்கு 10000கோடி ரூபாவையும், மங்கோலியாவுக்கு 6000 கோடி ரூபாவையும் வழங்கியுள்ளது.
ஆனால் 85000கோடி ரூபாவை வரியாக வழங்கும் தமிழ்நாட்டிற்கு மழை வந்தபோது வழங்கிய உதவி தொகை வெறும் 1940 கோடி ரூபா மட்டுமே.
தமிழ்நாடு தனக்குரிய உதவியை பெற முடியாதது மட்டுமல்ல தன்னிடமிருந்து பெறப்படும் பணத்தை இலங்கைக்கு வழங்குவதைக்கூட தடுக்க முடியாத அடிமை நிலையில் உள்ளது.
தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து பெறப்படும் பணத்திலதான்; தமிழக மீனவனைக் கொல்லும் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
இலங்கை கடற்படைக்கு யுத்த கப்பல் வழங்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலைக்கும் உதவி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழக தமிழன் அடிமை நிலையில் இருப்பதையும், இந்திய அரசால் தமிழ்நாடு சுரண்டப்படுவதையும் தோழர் தமிழரசன் உணர்ந்துகொண்டார்.
அவர் தமிழ்நாடு விடுதலை பெறவேண்டும் என விரும்பினார். தமிழக தமிழன் தன் அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே ஈழத் தமிழனின் விடுதலைக்கும் உதவ முடியும் என நம்பினார்.
இவ்வாறு அவர் சிந்தித்து, உணர்ந்து செயற்பட்டமையினாலே அவர் இந்திய அரசின் உளவுப்படைகளால் அடித்துக் கொல்லப்பட்டார்.
01.09.2016 அவரது நினைவு தினமாகும்.
அவரது நினைவை போற்றுவோம்!

•பட்டி தொட்டி எல்லாம் பரவும் தோழர் தமிழரசன் புகழ்!

•பட்டி தொட்டி எல்லாம் பரவும் தோழர் தமிழரசன் புகழ்!
சுட்டுக் கொன்று புதைத்தால்
மீண்டும் முளைத்தெழுவர்
துண்டு துண்டாக வெட்டி
கடலில் வீசி எறிந்தால்
பொங்கும் கடல் அலையாய்
மீண்டும் மீண்டும் வருவர்.
தமிழரசனைக் கொன்றுவிட்டால் தமிழ்நாடு விடுதலையை தடுத்துவிடலாம் என கனவு கண்டனர்.
ஆனால் இன்று ஆயிரம் ஆயிரம் தமிழரசன்கள் உருவாகி பட்டி தொட்டி எல்லாம் தமிழரசன் புகழ் பரப்புகின்றனர்.
இறுதி வெற்றி உறுதி!

•அவர்தான் "மாமனிதர்" தோழர் தமிழரசன் !

•அவர்தான் "மாமனிதர்" தோழர் தமிழரசன் !
தனக்கென்று வாழ்ந்து தனக்கென்று உழைப்பவன் மனிதன். ஆனால் தன் வாழ்க்கையையும் தன் உழைப்பையும் பிறருக்கென்று கொடுப்பவன் மாமனிதன்- மாமேதை காரல் மாக்ஸ்
தனகென்று வாழாமல் தமிழ் மக்களுக்காக வாழ்ந்தவர்
தனக்கென்று உழைக்காமல் தமிழ் மக்களுக்காக உழைத்தவர்
இறுதியில் தமிழ் மக்களுக்காவே தன் உயிரை அர்ப்பணித்தவர்
ஆம். அவர்தான் "மாமனிதர்" தோழர் தமிழரசன் !
மூன்று மீற்றர் கயிற்றில் கட்டியிருந்த மாட்டை அவிழ்த்து பத்து மீற்றர் கயிற்றில் கட்டிவிட்டு போனான் ஒருவன். மாடு மா, மா என்று கத்தியது , தனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று.
தமிழக மாடுகளும் மன்னிக்கவும் மக்களும் தமக்கு கிடைத்த சட்டசபையை வைத்துக்கொண்டு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக கற்பனையில் மிதக்கிறார்கள்.
ஆனால் தாங்கள் அடிமையாக இருப்பதால்தான் ஈழத் தமிழின அழிவை தடுக்க முடியவில்லை என்பதை மட்டுமல்ல, தமது காவிரி, முல்லை பெரியாறு பிரச்சனைகளைக்கூட தீர்க்க முடியவில்லை என்பதையும் அவர்களால் உணர முடியவில்லை.
எனவேதான் "ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும்" என்று தோழர் தமிழரசன் கூறினார்.
தமிழக மக்கள் விடுதலை பெற்று வாழ வேண்டும் என்று கூறியதாலேயே தோழர் தமிழரசன் தமிழக காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டார்.
தோழர் தமிழரசனைக் கொன்று விட்டு தமிழக விடுதலையை நசுக்கி விட்டதாக தமிழக அரசும் அதன் காவல்துறையும் கனவு கண்டது.
ஆனால் தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. அவர் விதைக்கப்பட்டார்; என்பதை நிரூபிக்கும் வண்ணம் அவரில் இருந்து அயிரம் ஆயிரம் தமிழரசன்கள் முளைத் தெழுந்துள்ளார்கள்.
அவர்கள் இன்று தோழர் தமிழரசன் பிறந்த ஊரில் பேரணி செல்கிறார்கள்.
வாருங்கள் தோழர்களே!
மாக்சிய லெனிய மாவோயிச சிந்தனை வழிகாட்டலில்
தோழர் தமிழரசன் முன்னெடுத்த பாதையில் செல்வோம்.

•என்னத்தைச் சொல்ல? எம் தமிழ் இனம் திருந்தவே மாட்டாதா?

•என்னத்தைச் சொல்ல?
எம் தமிழ் இனம் திருந்தவே மாட்டாதா?
கொழும்பில் மூவின மாணவர்களும் ஒன்று சேர்ந்து தமது உரிமைக்காக போராடியிருக்கிறார்கள்.
இலவசக் கல்வியை நிறுத்த அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக இம் மாணவர்கள் திரண்டு போராடியிருக்கின்றனர்.
யாழ்ப்பாணத்திலும் எமது தமிழ் மக்கள் ஆயிரக் கணக்கில் திரண்டுள்ளார்கள்.
ஆனால்எ மது தமிழ் மக்கள் திரண்டது,
காணாமல் போனோரை கண்டு பிடிப்பதற்காக அல்ல
சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதற்காக அல்ல
இடம் பெயர்ந்தோரை மீள் குடியேற்றம் செய்வதற்காக அல்ல
தமிழ் பகுதிகளில் நிகழும் இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராக அல்ல
எமது மக்கள் திரண்டது எல்லாம் நல்லுர் கோயில் தேர்த் திருவிழாவிற்காகவே!
இதைவிட கொடுமை என்னவெனில்
அவுஸ்ரேலியாவில் ஒரு வெள்ளை இன பெண் ஈழ தமிழ் அகதி ஒருவரின் வெளியேற்றத்தைத் தடுத்தி நிறுத்தியிருக்கிறார்.
அகதி அலுவலரான அவர் விமானத்தில் ஏறி எதிர்ப்பு தெரிவித்து அந்த தமிழ் அகதியின் வெளியேற்றத்தை தடுத்துள்ளார்.
இதற்காக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இவருக்கு இரண்டு வருடங்கள் தண்டனை கிடைக்கக்கூடும்.
இவர் மீதான வழக்கு விசாரணை 02.09.16 யன்று வருகிறது. இந்த செய்தி எமது தமிழ் ஊடகங்களில் வரவில்லை.
அதேவேளை எமது தமிழ் ஊடகங்களில் இன்னொரு வெள்ளையின பெண் பற்றிய செய்தி இடம் பிடித்துள்ளது.
அந்த வெள்ளையின பெண் நல்லுர் கோயில் வந்து சாமி கும்பிட்டது எமது ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
இலங்கையில் 6000 க்கு மேற்பட்ட இந்து கோயில்கள் உள்ளன. இதில் சுமார் 60000 ஆண்டவன்கள் இருக்ககூடும். இத்தனை சாமி இருந்தும் ஒரு சாமிகூட தமிழ் இன அழிவை தடுத்து நிறுத்தவில்லை.
நல்லுர் திருவிழாவிற்கு வெளி நாடுகளில் இருந்தும் தமிழர்கள் சென்றுள்ளனர். குறைந்தது 250 கோடி ரூபாவிற்கு மேல் செலவு செய்யப்படுகிறது.
இந்தப் பணத்தில்,
250 பாடசாலைக்கு கூரை போட்டிருக்க முடியும்.
500 குழாய் கிணறு போட்டுக் கொடுத்திருக்லாம்.
5000 கழிப்பறை கட்டிக் கொடுத்திருக்கலாம்.
10000 போராளிக் குடும்பங்களுக்கு கொடுத்திருக்கலாம்.
விரும்பினால் இப்படி எத்தனையோ செய்யலாம்.
ஆனால் இதை சொல்லவும் செய்விக்கவும் யாரும் இல்லையே?

•ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த தோழர் தமிழரசனை ஈழத் தமிழர்கள் மறக்காமல் நினைவு கூர முன்வர வேண்டும் !

•ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த தோழர் தமிழரசனை
ஈழத் தமிழர்கள் மறக்காமல் நினைவு கூர முன்வர வேண்டும் !
ராஜீவ் காந்தி திருவையாற்றுக்கு வந்த போது குடமுருட்டியில் குண்டு வைத்து தமிழக மக்களின் எதிர்ப்பை அன்றே பதிவு செய்தவர் தோழர் தமிழரசன்.
தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்எனக் கோரி மருதையாற்றில் குண்டு வைத்து முழு இந்தியாவின் கவனத்தையும் திருப்பியவர் தோழர் தமிழரசன்.
இந்திய அரசு ஒருபோதும் ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யாது. அது இலங்கையை ஆக்கிரமிக்கவே ஈழப் பிரச்சனையை பயன்படுத்துகிறது என்று அன்றே தீர்க்க தரிசனமாக கூறியவர் தோழர் தமிழரசன்
தமிழக விடுதலையை முன்னெடுப்பதே ஈழ விடுதலைக்கு செய்யும் உதவியாகும் என்று கூறி தமிழக விடுதலையை முன்னெடுத்தவர் தோழர் தமிழரசன்
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பை தடுக்க ஒரே வழி தமிழக இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் ஈழப் போராளிகளுடன் கலக்க வேண்டும் எனக்கூறி ஈழம் வருவதற்காக தானே வேதாரணியம் கடற்கரைக்கு வந்து காத்து நின்றவர் தோழர் தமிழரசன்
தனது உயிர் பிரியும் இறுதிக் கணம்வரை ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு உறுதியான ஆதரவைத் தந்தவர் தோழர் தமிழரசன்.
ஈழத் தமிழரை ஆதரித்து , ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தமையினால்தான் தோழர் தமிழரசன் உளவுப்படைகளால் அடித்தக் கொல்லப்பட்டார்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்த தோழர் தமிழரசனுக்கு முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அய்யா நெடுமாறன் நினைவு சின்னம் வைக்காதது ஏமாற்றம் தருகிறது.
முத்தக்குமார், அப்துல் ரவூப் போன்றவர்களின் பெயர்களை உச்சரிக்கும் வைகோ, ராமதாஸ் போன்றவர்கள் தோழர் தமிழரசன் பெயரை மறந்தும்கூட உச்சரிப்பதில்லை.
புலம்பெயர் தமிழர்களும் புலம்பெயர் ஊடகங்களும்கூட ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த தோழர் தமிழரசன் பெயரை நினைவு கூராமல் இருப்பது வேதனையான விடயம்.
இனியாவது எமது தமிழ்தேசிய ஊடகங்கள் தோழர் தமிழரசனை நினைவு கூர முன்வரவேண்டும்.

•காணாமல் போனவர்களுக்காக குரல் கொடுத்து காணாமல் போனவர்கள்!

•காணாமல் போனவர்களுக்காக குரல் கொடுத்து காணாமல் போனவர்கள்!
வடபகுதியில் காணாமல் போனவர்களுக்காக குரல் கொடுத்த லலித் குகன் இருவரும் காணாமல் போயுள்ளனர்.
முன்னிலை சோசலிசக் கட்சியை சேர்ந்த லலித் குகன் இருவரும் கோத்தபாயாவின் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர்.
100 நாளில் காணாமல் போனோரைக் கண்டு பிடிப்பதாக கூறிய நல்லாட்சி அரசு ஒரு வருடம் சென்ற பின்பும் இன்னும் இவர்களைக் கண்டு பிடிக்கவில்லை.
முன்னிலை சோசலிசக் கட்சி தலைவர் குமார் குணரட்னமும் 1 வருடமாக சிறையில் அடைக்கப்ட்டிருக்கிறார்.
இவர் செய்த குற்றம் தமிழ் மக்களுக்கு சமவுரிமை வழங்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தது ஆகும்.
லலித்தை காணாமல் அவரது மூன்று சகோதரிகளும் கண்ணீர் வடிக்கின்றனர்.
குகன் என்றாவது ஒருநாள் தன்னபை; பாhக்க வருவார் என்று அவரது மகள் காத்தக்கொண்டிருக்கிறார்.
சாவதற்குள் தன் மகன் குமார் குணரட்னத்தை காண்பதற்கு 80 வயதான தாயார் ஏக்கத்துடன் இருக்கிறார்.
தமிழர்களுக்காக குரல் கொடுத்த இவர்களுக்காக இதுவரை எந்த தமிழ் தலைவரும் குரல் கொடுக்காதது வெட்ககேடானது மட்டுமல்ல வேதனையுமானது.
தமிழருக்கு சமவுரிமை கொடுக்க வேண்டும் எனக் கோருவது இலங்கை அரசுக்கு விருப்பம் இல்லாமல் இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் சம்பந்தர் சுமந்திரன் போன்றவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.
இன்று கொழும்பில் இம் மூவர் பற்றிய ஆவணப்படம் “துயரத்திற்கு அப்பால்- இலங்கையின் ஜனநாயகம் தொடபான அனுபவங்கள் மூன்று” திரையிடப்பட்டுள்ளது.
இவ் ஆவணப்படம் இலங்கை முழுவதும் அல்ல புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளிலும் காண்பிக்கப்பட வேண்டும்.
ஆவணப்படம் தயாரித்து வெளியிட்டவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

மகஇக புரட்சிகர அமைப்பை சேர்ந்த தோழர் செங்கொடி அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
தமிழகத்தில் இருக்கும் மகஇக புரட்சிகர அமைப்பை சேர்ந்த தோழர் செங்கொடி அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
லங்கைப் பிரச்சனை அல்லது தமீழீழப் பிரச்சனை அல்லது விடுதலைப் புலிகள் பிரச்சனை என்பதை அதற்காக போராடும் அமைப்புகளும், மக்களும் – இலங்கையில் இருக்கும் அமைப்புகளானாலும் தமிழகத்தில் இருக்கும் அமைப்புகளானாலும் – எப்படிப் பார்க்கிறார்கள் என்பது முதன்மையான விசயம்.
இராஜீவ் காந்திக்கு முன் இராஜீவ் காந்திக்குப் பின் என்று பிரித்துப் பார்ப்பவர்கள் உண்டு. அவர்களைப் பொருத்தவரையில் இராஜீவ் கொலை நடந்திராவிட்டால் .. .. .. என்றொரு கற்பனாவாதமே அனைத்திற்குமான மையப் புள்ளி.
இலங்கையில் சீனா ஊடுருவிக் கொண்டிருக்கிறது. இந்தியா இலங்கையில் இன்னும் தீவிரமாக பங்கெடுப்பதே சீனாவின் ஆக்கிரமிப்பைத் தடுக்கும் என்பவர்களும் இருக்கிறார்கள்.
விடுதலைப் புலிகளும் கூட தமிழீழம் அமைவது இந்திய உதவி இன்றி சாத்தியம் இல்லை எனும் கருத்து கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.
சர்வதேச வல்லரசு நாடுகளின் நேர்மையான தலையீடு இருந்தால் இன்றைய இலங்கப் பிரச்சனை சுமூகமாக தீர்ந்து விடும் என்பவர்களும் இருக்கிறார்கள்.
இஸ்ரேலின் வழியில் தமிழீழத்தை சமைத்துக் கொள்ள முடியும் என நம்புகிறவர்கள் கூட இருக்கிறார்கள்.
தமிழ் தேசியவாதிகள் ஈறாக பலருக்கும் பலவாறான கருத்துகள் நிலைப்பாடுகள் இதில் நிலவிக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறான எவரும் புறநிலை யதார்த்தமாக இருக்கக்கூடிய இன்றைய நிலையிலிருந்து, இன்றைய தோல்வியிலிருந்து தங்களின் நிலைப்பாட்டை பரிசீலிக்கவே இல்லை. மாறாக, தங்கள் அகநிலை வாதங்களுக்கு ஏற்ப விளக்கமளிப்பதற்காக மட்டுமே யதார்த்தத்தை சலித்தெடுக்கிறார்கள்.
ஒரு பல்தேசிய நாட்டில், ஒற்றைத் தேசியம் தனியாக பிரிந்து தனிநாடாக அமைவது என்பது முழுக்க முழுக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு உட்பட்டது. உலக வரலாற்றை புரட்டிப் பார்த்து பரிசீலிக்கும் யாருக்கும் இதில் எவ்வித ஐயங்களுக்கும் இடமில்லை.
தொடக்கத்தில் இலங்கை தமிழ் இயக்கங்களுக்கு இந்தியா உதவியதற்கும், தற்போது விடுதலைப் புலிகளையும், அதன் பேரில் தமிழ் மக்களையும் அழித்தொழித்து நிற்பதற்கும் ஒரே காரணம் இலங்கையில் இந்தியாவின் மேலாதிக்கம் என்பதை தவிர்த்து வேறொன்றுமில்லை.
பொதுவாக, அரசியல் நிகழ்வுகளுக்கான சரியான, பொருத்தமான எதிர்வினை என்பது வெகு மக்களிடம் இருப்பதில்லை. காரணம், செய்தி ஊடகங்கள் – அச்சு ஊடகமானாலும், காட்சி ஊடகமானாலும் – சரியான கண்ணோட்டத்தை மக்களிடம் அளிப்பதில்லை.
அரசின் ஊதுகுழலாக இருந்து பக்கச் சார்பான செய்திகளை மட்டுமே நடுநிலமை எனும் பெயரில் வழங்கி வருகின்றன.
நடப்பு விசங்களை, சமூக நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு மக்கள் இந்த செய்தி ஊடகங்களை மட்டுமே நம்பியிருக்கிறார்கள்.
அதனால் தான் சமூக அரசியல் நிகழ்வுகளுக்கு பொருத்தமான எதிர்வினை பெரும்பாலான சமயங்களில் மக்களிடம் வெளிப்படுவதில்லை.
ஆனால், சரியான கண்ணோட்டத்துடன் நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் கடமை மக்களை நேசிப்பவர்களுக்கு இருக்கிறது.
அந்த அடிப்படையில், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் இலங்கையில் இந்தியாவின் ஆக்கிரமிப்பு எந்த அளவில் இருக்கிறது என்பதை எடுத்து வைக்கிறது இந்த சிறுநூல்.
ஏகாதிபத்திய வலைப் பின்னாலில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம்? எதிரிகளாக முன்னிற்பவர் யாவர்? பிபுலத்தில் இருப்பவர்கள் யாவர்? என்பவைகளை அறிந்து அதை கண்முன்னே நடக்கும் யாதார்த்த நிகழ்வுகளில் பொருத்திப் பார்த்து புரிந்து கொள்வதே நம்மை சரியான திசையில் இருத்தி வைக்கும் வழியாகும்.
இலங்கை இந்தியாவானாலும், சீனா அமெரிக்காவானாலும், ஐ.நா வே ஆனாலும் கூட இந்த அடிப்படையில் பரிசீலித்துப் பார்த்தால் மட்டுமே சரியானதில் நிலைக்க முடியும்.
இலங்கை பிரச்சனையில் அந்த வழியைக் கைக்கொள்ள இந்த சிறு நூல் உதவும். படித்துப் பாருங்கள்.

•இது என்ன நியாயம்?

•இது என்ன நியாயம்?
காந்தியை சுட்ட கோட்சேவுக்கு ஆதரவாக
கூட்டம் போட அனுமதிக்கிறார்கள்.
அந்த கோட்சேவுக்கு சிலை வைக்கவும் அனுமதி வழங்கிறார்கள்
ஏன்? எப்படி? என்று கேட்டால்
இந்தியா ஜனநாயக நாடாம்.
இங்கு,
அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டாம்
அனைவருக்கும் எழுத்து சுதந்திரம் உண்டாம்
அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் உண்டாம்.
என்று பதில் அளிக்கிறார்கள்.
அப்படியென்றால் தமிழ் இன விடுதலைக்காக போராடிய
தோழர் தமிழரசனுக்கு
வீர வணக்கம் செய்ய ஏன் தடுக்கிறார்கள்?
பேரணி செல்ல ஏன் கைது செய்கிறார்கள்?
ஒன்றுகூடவே ஏன் தடை போடுகிறார்கள்?
பெற்ற தாயக்கும்கூடவா அனுமதி இல்லை?
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றால்
தோழர் தமிழரசனுக்கு மட்டும் ஏன் தடை?
ஏனென்றால்
தோழர் தமிழரசன் மட்டுமே
அடிமையாக இருக்கும் தமிழனை
விழித்தெழுமாறு கோரியவர்.
ஒரு தமிழரசனைக் கொன்று புதைத்தார்கள்
ஆயிரம் தமிழரசன்கள் முளைத்தெழுந்துள்ளார்கள்.
பேரணிக் தடை என்று பிடித்து அடைத்தார்கள்
அடைத்த இடத்திலேயே அவர்கள் போர் அணியாக மாறினார்கள்.
துப்பாக்கி குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்றார் தோழர் மாஓ சேதுங்
தோழர் தமிழரசன் தோளில் சுமந்த துப்பாக்கி
தோள்களுக்காக காத்து இருக்கின்றது.
எத்தனை தடை போட்டாலும்
எவ்வளவு அடக்குமுறை செய்தாலும்
அத்தனையும் உடைத்தெறிந்து
விரைவில,
தமிழர்கள் கையில் அதிகாரம் கிடைக்கும்.
இது உறுதி.

•நியாயம் கேட்பது தவறா?

•நியாயம் கேட்பது தவறா?
சென்னையில் ஒரு பெண் ரயில் நிலையத்தில் குத்திக் கொல்லப்பட்டார். அந்த செய்தி மறையும் முன்னரே கரூரில் இன்னொரு பெண் கட்டையால் அடித்து கொல்லப்பட்டார். இது தூத்துக்குடி, விழுப்புரம் என்று மாநிலம் முழுவதும் பரவலாக நடைபெறுகிறது.
அதேவேளை சென்னையில் 160 இடங்களில் பிள்ளையார் சிலை வைக்கப்படும் என்றும் அதற்கு துப்பாக்கி ஏந்திய பொலிசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பெண் முதலமைச்சராக உள்ள மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால் கடலில் கரைக்கவுள்ள மண் பிள்ளையாருக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
பிள்ளையாருக்கு ஏன் பொலிஸ் பாதுகாப்பு? என்று நான் பகுத்தறிவுக் கேள்வி கேட்க விரும்பவில்லை. மாறாக பிள்ளையாருக்கு கொடுப்பதுபோல் பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுத்தால் என்ன? என்றே கேட்கிறேன்.
வாசாத்தி என்ற கிராமத்தில் 18 மலைவாழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் 7 பொலிசாருக்கு தலா ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதேவேளை நாயை தூக்கி எறிந்த குற்றத்திற்காக இரண்டு மருத்துவபீட மாணவர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இங்கு எனது கேள்வி என்னவென்றால், இந்தியாவில் மலைவாழ் மக்களை விட நாயின் மதிப்பு அதிகமா?
நான் இவ்வாறு மனிதத்திற்காக நியாயம் கேட்பது சில வேளை நாய்களுக்கு கோபம் வரலாம். ஆனால் தங்களை மனிதர்கள் என்று 4றுமு; சிலருக்கும் என் கொபம் வருகிறது என்று புரியவில்லை.
குறிப்பு- தயவு செய்து தங்களை மனிதத்தை நேசிப்பவர்கள் என கருதுவோர் மட்டும் எனது இந்த பதிவிற்கு கருத்து பகிரவும்.

•வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாட்டில் வள்ளுவனுக்கு சிலை வைக்க மறுப்பு!

•வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான் புகழ் கொண்ட தமிழ்நாட்டில்
வள்ளுவனுக்கு சிலை வைக்க மறுப்பு!
கங்கை கரையில் வள்ளுவன் சிலை உடைக்கப்பட்டவேளை, லண்டனில் , சிங்கப்பூரில், இலங்கை எல்லாம் வள்ளுவன் சிலை இருக்கும்போது வட இந்தியாவில் சிலை வைக்க முடியாதா என நாம் அனைவரும் கவலைப்பட்டோம்.
இப்போது தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் வள்ளுவர் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நிறுவியிருந்த சிலை இரவோடு இரவாக பொலிசார் மூலம் உடைத்து அகற்றப்பட்டுள்ளது.
வள்ளுவன் தன்னை உலகிற்கு தந்து வான் பகழ்கொண்ட தமிழ்நாடு என்று பாரதி பாடினான். பாரதி பாடிய அந்த தமிழ்நாட்டில்தான் வள்ளுவர் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தெலுங்கு நடிகர் சோபன்பாபுவுக்கு சென்னையில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. சோபன்பாபு தமிழ்நாட்டிற்கோ அல்லது தமிழர்களுக்கோ அல்லது தமிழுக்கோ செய்தது என்ன?
நாம் அறிந்தவரையில் சோபன்பாபு செய்ததெல்லாம் நமது தமிழக முதல்வர் ஜெயா அம்மையாருடன் சில காலம் தாலி கட்டாமல் கணவனாக குடும்பம் நடத்தினார் என்பதே. அதற்காகத்தானா தமிழ்நாட்டில் அவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது?
தமிழ்நாட்டில் தமிழ் அறிஞருக்கு சிலை வைக்க அனுமதி இல்லை. ஆனால் தமிழன் அமைதியாக இருக்கிறான்.
இதுவே கன்னட மாநிலத்தில் கன்னட அறிஞருக்கு நடந்திருந்தால் இந் நேரம் கர்நாடகா பற்றி எரிந்திருக்கும்.
இதுவே மாராட்டிய மாநிலத்தில் மாராட்டிய அறிஞருக்கு நடந்திருந்தால் பம்பாய் பற்றி எரிந்திருக்கும்.
ஆனால் தமிழ் நாட்டில் வள்ளுவருக்கு இந் நிலை ஏற்பட்ட பின்பும் தமிழன் அமைதியாக இருக்கிறான் எனில் தமிழன் அடிமையாக மட்டுமன்றி சுய உணர்வும் அற்ற நிலையில் இருக்கிறான்.
தமிழ்நாட்டில் தமிழன் சுய உணர்வு பெறுவது எப்போது?

•லண்டனில் நடைபெற்ற மாலன் உடனான சந்திப்பு

•லண்டனில் நடைபெற்ற மாலன் உடனான சந்திப்பு
கடந்த 03.09.16 யன்று லண்டன் ஈஸ்ட்காம் நகரில் எழுத்தாளர் மற்றும் ஊடக ஆசிரியரான மாலன் அவர்களுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
பௌசர் தலைமையில் தமிழ் மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் இவ் நிகழ்வு நடைபெற்றது.
மூத்த எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் மாலன் குறித்த அறிமுகவுரையை நிகழ்த்தினார்.
மாலன் அவர்கள் தனது உரையில் காமன்வெல்த் நாடுகளுக்கிடையில் புலம்பெயர் இலக்கியத்திற்கான ஒரு அமைப்பின் அவசியம் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்தார்.
இறுதியாக பார்வையாளர்களின் கேள்விகளும் அவர் பதில் அளித்தார். எதிர்வரும் 10.09.16 யன்று லண்டனில் ஆச்வே என்னும் இடத்தில் நடைபெறும் நிகழ்வில் அவர் பங்குபற்றும் விபரமும் அறிவிக்கப்பட்டது.
1994ம் ஆண்டு மாலன் அவர்கள் தினமணி பத்திரிகை ஆசிரியராக இருந்தபோது சமூக விழிப்புணர்வு ஊர்வலங்களில் மாணவர்களை பயன்படுத்தலாமா என்று ஒரு கட்டுரை போட்டி நடத்தினார்.
அப்போது சேலத்தில் ஒரு அமைச்சரை வரவேற்க பல மாணவர்கள் பல மணி நேரம் வெய்யிலில் காக்க வைத்ததால் அவர்கள் மயங்கி விழுந்த செய்தி வெளிவந்த தருணம் அது.
அதனால் போட்டியில் பங்கு பற்றிய பெரும்பாலோனோர் அச் சம்பவத்தை உதாரணம் காட்டி மாணவர்களை சமூக விழிப்புணர்வு ஊர்வலங்களில் பங்கு பற்ற வைக்கக்கூடாது என்றே கட்டுரை எழுதியிருந்தனர்.
அப்போது நான் துறையூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்தேன். நான் மாணவர்கள் இன்னும் அதிகமாக சமூக விழிப்புணர்வில் பயன்படுத்தப்பட வேண்டும் என ரஸ்சியா சீனா போன்ற நாடுகளை உதாரணம் காட்டி எழுதியிருந்தேன்.
மாலன் அவர்கள் எனது கட்டுரைக்கு முதல் பரிசு 500 ரூபா அறிவித்து அதனை தினமணியிலும் பிரசுரம் செய்திருந்தார்.
நான் ஒரு ஈழத் தமிழன் என்பதையும் நான் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கிறேன் என்பதையும் தெரிந்திருந்தும் அந்த வேளையில் தினமணியில் எனக்கு முதற் பரிசை மாலன் தந்தது அவர் ஈழத் தமிழர் மீது கொண்டிருந்த ஆதரவு மனப்பான்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
அவர் தனது பதவிக்காலத்தில் பல ஈழத் எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கியிருக்கின்றார் என்பதையும் நேற்றைய கூட்டத்தில் அவரது உரையில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது.
குறிப்பு- அவர் அறிவித்த பரிசுத் தொகையான 500 ரூபா இதுவரை என் கைக்கு வந்து சேரவில்லை !

•மலேசியாவில் மகிந்தவுக்கு எதிர்ப்பு காட்டிய தமிழர்கள்!

•மலேசியாவில் மகிந்தவுக்கு எதிர்ப்பு காட்டிய தமிழர்கள்!
உலகில் ஒரு மூலையில் தமிழனுக்கு தீங்கு நேர்ந்தாலும் உலகம் பூராவும் உள்ள தமிழன் குரல் கொடுப்பான் என்பதற்கு மலேசியாவில் தமிழர்கள் காட்டிய எதிர்ப்பு ஒரு நல்ல சான்றாகும்.
இலங்கையில் தமிழர்களை இன அழிப்பு செய்யும்போது மலேசியா தமிழர்களும் தன்னை எதிர்ப்பார்கள் என்பதை மகிந்த ஒருபோதும் நினைத்திருக்கமாட்டார்.
இலங்கையில் சம்பந்தரையும் சுமந்திரனையும் விலைக்கு வாங்கிவிட்டால் உலகில் உள்ள தமிழர்களை எல்லாரையும் அடக்கிவிடலாம் என நினைத்த மகிந்தவின் எண்ணத்தில் பேரிடி விழுந்துவிட்டது.
மகிந்த இந்தியா சென்றால் அங்குள்ள தமிழர்கள் எதிர்க்கிறார்கள். மகிந்த மலேசியா சென்றால் அங்குள்ள தமிழர்கள் எதிர்க்கிறார்கள். அவரால் இப்போது எங்கேயும் நிம்மதியாக செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது.
தமிழர்களை ஜ.நா கைவிட்டிருக்கலாம். தமிழர்களை அவர்கள் நம்பிய இந்தியா கைவிட்டிருக்கலாம். ஆனால் ஈழத் தமிழர்களை உலகில் வாழும் தமிழர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள்.
என்றுமில்லாதவாறு இன்று உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் தமக்கிடையே ஒன்று சேருகிறார்கள். போராடுகிறார்கள்.
இனி தமிழினத்தை யாராலும் அழிக்க முடியாது என்ற நம்பிக்கையை மலேசிய தமிழர்கள் தோற்றுவித்துள்ளார்கள்.
தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பது இதுதான் போலும்.!
தமிழன்டா!

•கலைஞர் மனம் இரங்கினாலும் நம்ம சம்பந்தர் மனம் இரங்குதில்லையே?

•கலைஞர் மனம் இரங்கினாலும்
நம்ம சம்பந்தர் மனம் இரங்குதில்லையே?
செப்-15 அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு 10 வருடத்திற்கு மேற்பட்ட தண்டனை அனுபவித்த அனைத்து ஆயுள் சிறைவாசிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என பல்வேறு மனிதவுரிமை அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன.
குறிப்பாக 25 வருடத்திற்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட்ட எழுவரை விடுதலை செய்ய வேண்டும் என பலரும் கோரியுள்ளனர்.
இந்த எழுவரில் ஒருவரான் சாந்தன் அவர்களை தான் இறப்பதற்கு முன் காண விரும்புவதாக அவரின் தாயார் உருக்கமாக வேண்டியுள்ளார்.
சாந்தனை விடுதலை செய்யுமாறு கலைஞர் கருணாநிதி அவர்கள் கூட கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால் ஈழத் தமிழர்களின் தலைவராக தன்னை கூறிக்கொள்ளும் சம்பந்தர் அய்யா ஈழத் தமிழரான சாந்தனின் விடுதலைக்கு இதுவரை குரல் கொடுக்கவில்லை.
முருகனின் தாயார் சம்பந்தர் அய்யா அவர்களை நேரில் சந்தித்து தன் மகன் விடுதலைக்கு உதவுமாறு மன்றாடிக் கேட்டிருக்கிறார்.
ஆனால் சம்பந்தர் அய்யாவுக்கு ஏனோ மனம் இரங்குதில்லை. அவர் இவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்காமல் தவிர்த்து வருகிறார்.
தன்னை விடுதலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. இலங்கை சிறைக்கு மாற்றும்படி சாந்தன் கேட்டிருக்கிறார்.
இலங்கை சிறையில் இருந்தால் தன் தாயாரை அடிக்கடி காண முடியும் என அவர் நம்புகிறார்.
அவர் கேட்பது சலுகை அல்ல. அது அவரது உரிமை. இவ்வாறு சிறைக் கைதிகளை பரிமாறிக்கொள்ள இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒப்பந்தம் உண்டு.
ஆனால் இதைக்கூட சம்பந்தர் அய்யாவால் இந்திய அரசிடம் கோர முடியவில்லை.
இந்த ஈழத் தமிழர்கள் சம்பந்தருக்கு செய்த பாவம்தான் என்ன? ஏன்தான் அவர்களை விடுதலை செய்யும்படி கோராமல் இருக்கிறார்?
ஒவ்வொரு வாரமும் இந்திய தூதரகத்தில் விருந்தில் கலந்து கொள்ளும்போது ஒரு பேச்சுக்காவது இதனை அவரால் கேட்க முடியாதா?
அது சரி. இலங்கையில் உள்ள சிறைவாசிகளின் விடுதலைக்கே தன்னிடம் திறப்பு இல்லை என்று நக்கல் அடித்தவரிடம் இந்தியாவில் உள்ளவர்களின் விடுதலை பற்றி கேட்டால் இந்தியா எங்கே இருக்கிறது என்று கேட்பார்.
இவர் எல்லாம் தமிழ் மக்களின் தலைவர்.!
எல்லாம் தமிழ் மக்களின் தலைவிதி!

•எல்லாம் தலைவிதி என்று நொந்து கொள்வதை விட வேறு வழியிருக்கா இந்த தமிழ் இனத்திற்கு?

•எல்லாம் தலைவிதி என்று நொந்து கொள்வதை விட
வேறு வழியிருக்கா இந்த தமிழ் இனத்திற்கு?
கர்நாடகாக்காரன் தண்ணீர் தரமுடியாது. தேவையானால் மூத்திரம் தரலாம் என்று கொஞ்சம்கூட இரக்கமின்றி திமிராக கேட்கிறான்.
தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் பெற்றுக்கொடுக்க வேண்டிய அமைச்சரோ “விவசாயிகள் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து செழிப்பாக இருக்கிறார்கள்” என்று அறிக்கை விடுகிறார்.
பாவம் தமிழக தமிழர்கள். அவர்களால் தமது அமைச்சரையும் கண்டிக்க முடியவில்லை. கர்நாடகாவையும் எதிர்க்க முடியவில்லை.
மலேசியாவில் இலங்கைத் தூதரை உதைத்த விடயத்தில் பினாங்கு உதவி முதலமைச்சர் தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்.
அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூட மகிந்த தண்டிக்கப்பட வேண்டும் என கோரியுள்ளார். மலேசிய அரசுகூட இது பயங்கரவாத நடவடிக்கை அல்ல என்று கூறியுள்ளது.
ஆனால் நம்ம தலைவர் சம்பந்தர் “அவர்களை கைது செய்து வந்து இலங்கையில் தண்டிக்க வேண்டும்” என்கிறார்.
அவரது கைத்தடி சின்ன கதிர்காமர் சுமந்திரனோ “தூதுவரைத் தாக்கியது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்கிறார்.
யுத்தம் முடிந்து 7 வருடமாகிவிட்டது. இன்னும்,
போர்க்குற்ற விசாரணை நடக்கவில்லை.
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை.
காணோமல் போனோர் கூட இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இவை குறித்து சம்பந்தருக்கும் சுமந்திரனுக்கும் அக்கறை இல்லை. அவர்களது அக்கறை எல்லாம் மகிந்தவுக்கு எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதே.
என்ன செய்வது? இந்த தலைவர்கள் தமக்கு வாய்ச்சமைக்காக தமிழ் மக்கள் தங்கள் தலைவிதியை நொந்து கொள்வதை விட வேறு என்ன வழி இருக்கு?

•குருக்கள் கு- விட்டால் குற்றமில்லைதான்!

•குருக்கள் கு- விட்டால் குற்றமில்லைதான்!
LTTE குழந்தை போராளிகளை வைத்திருக்கிறது என்று பொங்கிய மனிதவுரிமைவாதிகள் இப்போது இந்துத்துவ வெறியர்களின் குழந்தைப் போராளிகளைப் பார்த்து மௌனம் காப்பது ஏன்?
LTTE செய்தால் தவறு. இந்தத்துவா செய்தால் தவறு இல்லையா?
குருக்கள் கு- விட்டால் குற்றமில்லை என்பது இதுதானோ!
குறிப்பு- இந்த நியாயத்தை கேட்டமைக்காக “தோழர் புலி வால் பிடிக்கிறார்” என்று எழுத வேண்டாம். ஏனெனில் அது இந்த வினாவுக்குரிய பதில் இல்லை.