•“அரசியல் வேறு, தொழில் வேறு” என்று கூறிய
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் சுத்துமாத்து!
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் சுத்துமாத்து!
புலிகளைப் பயங்கரவாதிகள் என்று நீதிமன்றத்தில் குற்றம்சாட்டிய சுமந்திரன்!
அண்மையில் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஒரு மதகுருவுக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்றது.
அப்போது வழக்காளி சார்பில் ஆஜரான சுமந்திரன் “ இந்த மதகுரு பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர். எனவே கடுமையான தண்டனை வழங்க வேண்டும் “ என்று நீதிபதியிடம் கோரியுள்ளார்.
விசாரணை முடிந்து வெளியே வந்த அந்த மதகுரு சுமந்திரனிடம் “ நீங்களே புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறலாமா?” எனக் கேட்டுள்ளார்.
அதற்கு சுமந்திரன் நக்கலாக சிரித்து கொண்டு “அரசியல் வேறு தொழில் வேறு” என்று பதில் கூறியிருக்கிறார்.
தமிழர் அரசியலில் ஜி.ஜி. பொன்னம்பலம், சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் என்று பல வழக்கறிஞர்கள் இருந்துள்ளனர்.
ஆனால் அவர்கள் ஒருபோதும் தமது அரசியல் நிலைக்கு எதிராக நீதிமன்றத்தில் கருத்து கூறியதில்லை.
குறிப்பாக, அமிர்தலிங்கம் மீது எவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தபோதும் அவர் இளைஞர்களுக்காக இலவசமாக வழக்கு பேசியது மட்டுமன்றி சிலவேளைகளில் தன் கைக்காசையே கொடுத்தும் இருக்கிறார்.
ஆனால் சுமந்திரன் தமிழ் மக்களுக்காக போராடிய இளைஞர்களை பயங்கரவாதிகள் என்றும் அவர்களுடன் தொடர்பு வைத்தமைக்காக மதகுருவை தண்டிக்க வேண்டும் எனவும் ஈவு இரக்கமின்றி கேட்டிருக்கிறார்.
இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனெனில் இவரின் தலைவர் சம்பந்தரே புலிகளை பயங்கரவாதிகள் என்று பாராளுமன்றத்திலே பேசிய நிலையில் சுமந்திரன் நீதிமன்றத்தில் பேசியதில் ஆச்சரியம் என்ன இருக்கு?
ஆனால் இவர்களை இன்னமும் ஒருசிலர் நம்புகிறார்களே! அதை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது.
No comments:
Post a Comment