Sunday, September 11, 2016

•இன்று திலீபன். நாளை ??

•இன்று திலீபன். நாளை ??
திலீபன் மீதான தாக்குதல்
வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.
சுவாதி கொலை தொடர்பாக தான அறிந்த சில தகவல்களை திலீபன் மகேந்திரன் என்பவர் தனது முகநூலில் பதிவு செய்தார்.
அதேவேளை பிரான்சில் உள்ள தமிழிச்சி என்பவர் சுவாதி கொலையை பி.ஜே.பி யை சேர்ந்த கருப்பு முருகானந்தம் என்பவரே செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
உண்மையை அறிவதில் தமிழக பொலிசாருக்கு நாட்டம் இருந்திருந்தால் கருப்பு முருகானந்தத்தை கைது செய்து விசாரித்திருக்க வேண்டும்.
ஆனால் தமிழக பொலிஸ் வழக்கம்போல கருப்பு முருகானந்தத்தின் புகாரின் பேரில் திலீபன் மகேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தது.
அதுமட்டுமல்ல திலீபனின் கைத்தொலைபேசியை பறித்த பொலிசார் அதனை முருகானந்தனிடம் வழங்கியிருக்கிறது. அதில் இருந்து திலீபனின் நட்புகள் மற்றும் தொடர்புகள்; அறியப்பட்டுள்ளன.
பல வழக்குகளிற்காக தேடப்படும் முருகானந்தத்தை கைது செய்யாமல் அவர் கொடுத்த புகாரில் திலீபனை எப்படி கைது செய்யலாம் என்று நீதிபதியே கேட்ட அவலம் நடந்துள்ளது.
ஜாமீனில் வெளிவந்த திலீபனும் அவரது வழக்கறிஞரும் நேற்றைய தினம் திருவாரூரில் கருப்பு முருகானந்தனின் குண்டர் படையினால் தாக்கப்பட்டுள்ளார்.
காயம்பட்ட திலீபனுக்கும் அவரது வழக்கறிஞருக்கும் தஞ்சாவூர் அரச மருத்துமனையில் மருத்துவ உதவிகூட மறுக்கப்பட்டிருக்கிறது.
வர வர காவிக் கூட்டத்தின் அட்டகாசம் தமிழ்நாட்டிலும் அதிகரித்து வருகிறது. இன்று திலீபனுக்கும் அவரது வழக்கறிஞருக்கும் நடந்தது நாளை ஒவ்வாரு தமிழனுக்கும் நடக்கும்.
எனவே காவிப் பாசிசத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் ஆகும்.

No comments:

Post a Comment