Sunday, September 11, 2016

•கலைஞர் மனம் இரங்கினாலும் நம்ம சம்பந்தர் மனம் இரங்குதில்லையே?

•கலைஞர் மனம் இரங்கினாலும்
நம்ம சம்பந்தர் மனம் இரங்குதில்லையே?
செப்-15 அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு 10 வருடத்திற்கு மேற்பட்ட தண்டனை அனுபவித்த அனைத்து ஆயுள் சிறைவாசிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என பல்வேறு மனிதவுரிமை அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன.
குறிப்பாக 25 வருடத்திற்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட்ட எழுவரை விடுதலை செய்ய வேண்டும் என பலரும் கோரியுள்ளனர்.
இந்த எழுவரில் ஒருவரான் சாந்தன் அவர்களை தான் இறப்பதற்கு முன் காண விரும்புவதாக அவரின் தாயார் உருக்கமாக வேண்டியுள்ளார்.
சாந்தனை விடுதலை செய்யுமாறு கலைஞர் கருணாநிதி அவர்கள் கூட கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால் ஈழத் தமிழர்களின் தலைவராக தன்னை கூறிக்கொள்ளும் சம்பந்தர் அய்யா ஈழத் தமிழரான சாந்தனின் விடுதலைக்கு இதுவரை குரல் கொடுக்கவில்லை.
முருகனின் தாயார் சம்பந்தர் அய்யா அவர்களை நேரில் சந்தித்து தன் மகன் விடுதலைக்கு உதவுமாறு மன்றாடிக் கேட்டிருக்கிறார்.
ஆனால் சம்பந்தர் அய்யாவுக்கு ஏனோ மனம் இரங்குதில்லை. அவர் இவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்காமல் தவிர்த்து வருகிறார்.
தன்னை விடுதலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. இலங்கை சிறைக்கு மாற்றும்படி சாந்தன் கேட்டிருக்கிறார்.
இலங்கை சிறையில் இருந்தால் தன் தாயாரை அடிக்கடி காண முடியும் என அவர் நம்புகிறார்.
அவர் கேட்பது சலுகை அல்ல. அது அவரது உரிமை. இவ்வாறு சிறைக் கைதிகளை பரிமாறிக்கொள்ள இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒப்பந்தம் உண்டு.
ஆனால் இதைக்கூட சம்பந்தர் அய்யாவால் இந்திய அரசிடம் கோர முடியவில்லை.
இந்த ஈழத் தமிழர்கள் சம்பந்தருக்கு செய்த பாவம்தான் என்ன? ஏன்தான் அவர்களை விடுதலை செய்யும்படி கோராமல் இருக்கிறார்?
ஒவ்வொரு வாரமும் இந்திய தூதரகத்தில் விருந்தில் கலந்து கொள்ளும்போது ஒரு பேச்சுக்காவது இதனை அவரால் கேட்க முடியாதா?
அது சரி. இலங்கையில் உள்ள சிறைவாசிகளின் விடுதலைக்கே தன்னிடம் திறப்பு இல்லை என்று நக்கல் அடித்தவரிடம் இந்தியாவில் உள்ளவர்களின் விடுதலை பற்றி கேட்டால் இந்தியா எங்கே இருக்கிறது என்று கேட்பார்.
இவர் எல்லாம் தமிழ் மக்களின் தலைவர்.!
எல்லாம் தமிழ் மக்களின் தலைவிதி!

No comments:

Post a Comment