Sunday, September 11, 2016

•ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த தோழர் தமிழரசனை ஈழத் தமிழர்கள் மறக்காமல் நினைவு கூர முன்வர வேண்டும் !

•ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த தோழர் தமிழரசனை
ஈழத் தமிழர்கள் மறக்காமல் நினைவு கூர முன்வர வேண்டும் !
ராஜீவ் காந்தி திருவையாற்றுக்கு வந்த போது குடமுருட்டியில் குண்டு வைத்து தமிழக மக்களின் எதிர்ப்பை அன்றே பதிவு செய்தவர் தோழர் தமிழரசன்.
தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்எனக் கோரி மருதையாற்றில் குண்டு வைத்து முழு இந்தியாவின் கவனத்தையும் திருப்பியவர் தோழர் தமிழரசன்.
இந்திய அரசு ஒருபோதும் ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யாது. அது இலங்கையை ஆக்கிரமிக்கவே ஈழப் பிரச்சனையை பயன்படுத்துகிறது என்று அன்றே தீர்க்க தரிசனமாக கூறியவர் தோழர் தமிழரசன்
தமிழக விடுதலையை முன்னெடுப்பதே ஈழ விடுதலைக்கு செய்யும் உதவியாகும் என்று கூறி தமிழக விடுதலையை முன்னெடுத்தவர் தோழர் தமிழரசன்
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பை தடுக்க ஒரே வழி தமிழக இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் ஈழப் போராளிகளுடன் கலக்க வேண்டும் எனக்கூறி ஈழம் வருவதற்காக தானே வேதாரணியம் கடற்கரைக்கு வந்து காத்து நின்றவர் தோழர் தமிழரசன்
தனது உயிர் பிரியும் இறுதிக் கணம்வரை ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு உறுதியான ஆதரவைத் தந்தவர் தோழர் தமிழரசன்.
ஈழத் தமிழரை ஆதரித்து , ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தமையினால்தான் தோழர் தமிழரசன் உளவுப்படைகளால் அடித்தக் கொல்லப்பட்டார்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்த தோழர் தமிழரசனுக்கு முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அய்யா நெடுமாறன் நினைவு சின்னம் வைக்காதது ஏமாற்றம் தருகிறது.
முத்தக்குமார், அப்துல் ரவூப் போன்றவர்களின் பெயர்களை உச்சரிக்கும் வைகோ, ராமதாஸ் போன்றவர்கள் தோழர் தமிழரசன் பெயரை மறந்தும்கூட உச்சரிப்பதில்லை.
புலம்பெயர் தமிழர்களும் புலம்பெயர் ஊடகங்களும்கூட ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த தோழர் தமிழரசன் பெயரை நினைவு கூராமல் இருப்பது வேதனையான விடயம்.
இனியாவது எமது தமிழ்தேசிய ஊடகங்கள் தோழர் தமிழரசனை நினைவு கூர முன்வரவேண்டும்.

No comments:

Post a Comment