Sunday, September 11, 2016

•இந்தியாவில் நாய்க்கு இருக்கும் மதிப்புகூட தமிழனுக்கு இல்லையா?

•இந்தியாவில் நாய்க்கு இருக்கும் மதிப்புகூட தமிழனுக்கு இல்லையா?
அண்மையில் இரு மருத்துவதுறை மாணவர்கள் மாடியில் இருந்து நாயை தூக்கி வீசியிருந்தார்கள்.
உடனே அவர்கள் கைது செய்யப்பட்டது மட்டுமன்றி அவர்கள் இருவருக்கும் தலா இரண்டு லட்சம் ரூபா அபராதம் கட்ட வேண்டும் என்று தீர்ப்பும் வழங்கப்பட்டுவிட்டது.
இந்தியாவில் ஒரு நாய்க்கு இந்தளவு விரைவாக நியாயம் வழங்கப்பட்டிருப்பது நிச்சயம் பெருமைப் பட்டுக்கொள்ள வேண்டிய விடயம்தான்.
ஆனால் கர்நாடகாவில் ஒரு அப்பாவி தமிழனை விதியில் வைத்து நாயைவிடக் கேவலமாக தாக்கியுள்ளனர்.
இந்த சந்தோஸ் என் தமிழ் இளைஞன் தாக்கப்பட்ட வீடியோ முகநூல் மற்றும் செய்தி ஊடகங்கள் யாவும் பரந்து கிடக்கிறது.
ஆனால் கர்நாடக பொலிஸ் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து மோடி அரசும் ஒரு கண்டனம்கூட இதுவரை தெரிவிக்கவில்லை.
மாடுகளை உணவுக்காகக்கூட வதைக்கக்கூடாது என்று பேசிவரும் பிரதர் மோடி அவர்கள் தமிழன் வதைபடும்போது மௌனமாக இருப்பது ஏன்?
இங்கு எனது கேள்வி என்னவெனில், 2020ல் வல்லரசாகப் போகும் இந்தியாவில் ஒரு நாய்க்கு இருக்கும் மதிப்பு கூட தமிழனுக்கு இல்லையா?
சீ தூ ….. வெட்கம்!

No comments:

Post a Comment