Wednesday, September 30, 2020

ஒரு பிக்கு அரசு அதிகாரிகளையே அடிக்கிறார்

ஒரு பிக்கு அரசு அதிகாரிகளையே அடிக்கிறார். இன்னொரு பிக்கு திருக்கோணேஸ்வரம் கோயில் தங்களுக்குரியது என்கிறார். வேறொரு பிக்கு தமிழர்கள் வாடகை வீட்டில் இருப்பதுபோல் வாழ வேண்டும் என்று மிரட்டுகிறார். இந்த பிக்குகளுக்கும் அவர்களுடைய பௌத்த மத வளர்ச்சிக்கும் இந்திய இந்துப் பிரதமர் மோடி 15 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கிறார். வழங்கியது பத்தாது என்று அதை தமிழில் வேறு திமிராக டிவீட் செய்கிறார். தமிழ்நாட்டு சங்கிகள் இனி மாட்டு மூத்திரம் குடிப்பதற்கு பதிலாக சிங்கள பிக்குவின் மூத்திரத்தை குடிக்கலாம்.

தோழர் பகத் சிங் அவர்களுக்கு வீர வணக்கம்!

•தோழர் பகத் சிங் அவர்களுக்கு வீர வணக்கம்! ஓ! மரணித்த வீரனே! ஆங்கிலேய அரசை விரட்ட நீ குண்டெறிந்தபோது உன்னை “தியாகி” என்று அழைத்தவர்கள் இந்திய அரசை விரட்ட தமிழரசன் எறிந்தபோது அவரை “பயங்கரவாதி” என்கிறார்கள். நீ விரும்பிய சுதந்திர இந்தியா மலர்ந்தது வெள்ளையர் ஆட்சி போயிற்று - ஆனால் கொள்ளையர் ஆட்சி வந்துவிட்டது. இந்த கொள்ளையர் ஆட்சியில் கல்லெறியும் காஸ்மீர் சிறுவன் ஜிகாத் பயங்கரவாதி சதீஸ்கரில் ஆதிவாசி மாவோயிஸ்ட் பயங்கரவாதி தமிழகத்தில் ஈழ அகதிகள் புலிப் பயங்கரவாதிகள் தலைநகர் டில்லியில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு கறுப்பு பூனை பாதுகாப்பு அன்று முஸ்லிம்களும் சேர்ந்து சுதந்திர இந்தியாவுக்கு போராடினார்கள். இன்று முஸ்லிம்களை கொன்று குவித்தவர் மாண்புமிகு பிரதமர். வெள்ளையர் உன்னை பயங்கரவாதி என்றனர். ஆனால் சுதந்திர இந்தியா உன்னை தியாகி என்றது. இன்று கொள்ளையர் எம்மை பயங்கரவாதி என்கின்றனர். நாளைய விடுதலை எம்மை போராளிகள் என்றழைக்கும். தோழனே! நீ எறிந்த குண்டை கொடு கொள்ளையரை விரட்ட. குறிப்பு - இன்று தோழர் பகத் சிங் அவர்களின் பிறந்ததினம் ஆகும்.(28.09.1907) (இது ஒரு மீள்பதிவு)

ஹர்த்தால் சொல்லும் சேதி

•ஹர்த்தால் சொல்லும் சேதி தமிழ் மக்கள் ஒன்றுபடுகிறார்கள் என்பதே! இராணுவ புலனாய்வாளர்கள் ஓடி ஓடி படம் எடுத்து மிரட்டுகிறார்கள் கடைகளை திறக்கும்படி வவுனியாவில் பொலிஸ் அச்சுறுத்துகிறது. மட்டக்களப்பில் சிங்கள பிக்கு “இது தமிழீழத்திற்கான அழுத்தம்” என்று அரசுக்கு கொம்பு சீவி விடுகிறார். கொரோனோவின் போது பல நாட்கள் ஊரடங்கு போட்டு கடைகளை பூட்டிய அரசு இப்போது தமிழ் மக்கள் ஒருநாள் கடைகளை பூட்டும்போது ஏன் அதை தடுக்கப் பார்க்கிறார்கள்? ஏனெனில் தமிழ் மக்கள் ஒன்றுபடுகிறார்கள் என்ற செய்தி உலகிற்கு தெரியப்போகிறது என்ற அச்சமே காரணம். தமிழ் மக்கள் ஒன்றுபடுகிறார்கள் என்பதே எதிரிக்கு இத்தனை அச்சத்தைக் கொடுக்கிறது என்றால் தமிழ் மக்கள் போராட தயாராகிவிட்டால்? வெற்றி நிச்சயம்.

ஒரு சிறுவன் அதுவும் கல் எறிந்து

ஒரு சிறுவன் அதுவும் கல் எறிந்து டாங்கியை வீழ்த்த முடியுமா என்று ஏளனமாக சிலர் நினைக்ககூடும். ஆனால் வரலாற்றை கூர்ந்து பார்ப்பவர்களுக்கு சிறுவன் கையில் இருக்கும் கல் தெரியாது. மாறாக அவன் மனதில் உள்ள தன்னம்பிக்கைதான் தெரியும். எப்படி உலகில் இதுவரை பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாவற்றுக்கும் ஒரு சிறு தீப்பொறியே காரணமாக இருந்திருக்கிறதோ அதேபோன்று வரலாற்றில் அடைந்த பெரு வெற்றியெல்லாம் கொண்டிருந்த முதல் ஆயுதம் தன்னம்பிக்கை மட்டுமே. ஹர்த்தால் மூலம் எதைச் சாதிக்க முடியும் என ஏளனமாக கேட்பவர்களுக்கு தமிழ் மக்கள் ஒருமித்து காட்டிய இந்த தன்னம்பிக்கையை உணர வாய்ப்பில்லைதான். ஆனால் வரலாறு இதை மறக்காமல் குறித்துக்கொள்ளும். ஈழத்தில் நடந்த ஒரு உரையாடல் சிறுவன் - மாமா இந்த குண்டு போடுற விமானத்தை உங்க கையில் இருக்கும் துவக்கால் சுட்டு விழுத்த முடியாதா? போராளி - இல்லையடா. விமானத்தை சுட்டு வீழ்த்த வேண்டுமென்றால் அதுக்கு ஏவுகணை வேண்டும் சிறுவன் - அப்ப ஏவுகணை வாங்க முடியாதா மாமா? போராளி - அதுக்கு நிறைய பணம் வேணுமடா. பணம் இருந்தாலும் அதை வாங்குவது அவ்வளவு சுலபம் இல்லைடா. சிறுவன் - அப்படியென்றால், எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் கடைசில பறவை கீழே வந்து ஏதாவது ஒரு மரத்தின் கிளையில் உட்காருவதுபோல் இந்த விமானமும் இறுதியில் ஏங்கேயாவது ஒரு நிலத்தில்தானே நிற்கும். அங்கேபோய் அடித்தால் என்ன? ஒரு சாதாரண சிறுவன் கேட்ட இந்த கேள்விதான் புலிகள் கட்டுநாயக்கா விமானநிலையத்தை தாக்கி பல போர் விமானங்களை அழிக்க வழி சமைத்தது.

சீமானும் பரூக் அப்துல்லாவும்

சீமானும் பரூக் அப்துல்லாவும் “காஸ்மீர் மக்கள் சீனா எப்போது வரும் என்று காத்து இருக்கிறார்கள். அந்தளவுக்கு இந்தியாமீது வெறுப்பாக இருக்கிறார்கள்” என்று காஸ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். பரூக் அப்துல்லா இப்படி கூறியதற்காக இதுவரை எந்த சங்கிகளும் பொங்கவில்லை. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவும் இல்லை. ஆனால் இதையே தமிழ்நாட்டில் சீமான் கூறியிருந்தால் எச்ச ராசா முதல் பாண்டேவரை அனைத்து சங்கிகளும் பொங்கியிருப்பார்கள். வழக்கு பதிவு செய்து குண்டர் சட்டத்தில் இந்நேரம் சீமானை சிறையில் அடைத்திருப்பார்கள். உண்மையில் காஸ்மீரில் அதிகளவு ஆபத்து இருந்தும்கூட இந்திய அரசு தமிழ் மக்கள் மீதே அதிக கவனம் செலுத்துகிறது. ஏனெனில் காஸ்மீர் பிரிந்தால் காஸ்மீர் மட்டுமே பிரியும். ஆனால் தமிழ்நாடு பிரிந்தால் முழு இந்தியாவுமே உடைந்துவிடும் என்று இந்திய அரசு அச்சப்படுகிறது. ஹர்த்தாலுக்கு ஈழத் தமிழ் மக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று சீமான் கோரியுள்ளார். இது பரூக் அப்துல்லா கூறியதைவிட அதிக எரிச்சலை இந்திய அரசுக்கு எற்படுத்கூடியது. ஏனெனில் இதுவரை வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலையில் இருந்து சேர்ந்து பங்களித்தல் என்ற நிலைக்கு தமிழக அமைப்புகள் நகருவதையே இது காட்டுகிறது. ஈழத் தமிழர்களும் தமிழக தமிழர்களும் ஒருமித்து செயற்படும் நிலைக்கு வந்துவிட்டால் அதனால் இலங்கை அரசைவிட இந்தியாவே அதிக பாதிப்பை சந்திக்கும் என்று இந்திய அரசு கருதுகிறது. அதனால்தான் தமிழ்நாடு தனிநாடாக பிரிந்துவிடக்கூடாது என்பதற்காக ஈழத் தமிழர்களை இந்திய அரசு நசுக்குகிறது. ஆனால் ஈழத் தமிழர்களை தொடர்ந்து நசுக்கினாலும் தமிழ்நாடு தனிநாடாக பிரியும் என்ற உண்மையை இந்திய அரசு விரைவில் உணர்ந்து கொள்ளும். உணர வைப்போம்.

மகன் - அப்பா! நித்திரை வரமாட்டேங்குது

மகன் - அப்பா! நித்திரை வரமாட்டேங்குது. ஏதாவது கதைச்சிட்டு இருக்கலாம் வாங்கோ. சிறீதரன் - சரிடா. என்ன கதைக்கப்போற? மகன் - இல்லை. நாம் எப்போதும் மொத்தம் 4பேர்தான் வீட்டில இருக்கப்போறோமா? நீங்கள், அம்மா, அண்ணா, நான் ,,,, சிறீதரன் - உனக்கு கல்யாணம் ஆனா நாங்கள் 5 பேர் ஆகிடுவோம்ல? மகன் - அப்ப அண்ணா கல்யாணம் பண்ணி போய்விடுவான் அல்லவா. அப்பவும் நாங்க 4 பேர்தானே ? சிறீதரன் - சரிடா. உனக்கு குழந்தை பிறக்கும் அல்லவா. அப்ப நாங்கள் 5 பேர் ஆகிடுவம்தானே? மகன் - அதெப்படி அப்பா, அப்ப நீங்கள் செத்திடுவீர்கள் அல்லவா? சிறீதரன் - உருப்படாதவனே போய் ஒழுங்கா தூங்கடா. இது ஒரு பகிடி உரையாடல்தான். ஆனால் இனி சீரியஸான ஒரு விடயத்தை பற்றி எழுதப் போகிறேன். நடந்து முடிந்த தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் இறுதிக் கூட்டம் ஒன்று நல்லூரில் நடைபெற்றது. அதில் சிறீதரன் பேசும்போது “ நான் யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொடுக்கவிவில்லை என்று சிலர் என்மீது குற்றம் சாட்டுகிறார்கள். அது உண்மைதான். ஆனால் யாழ்ப்பாணத்தான் வயலுக்கு தண்ணீர் கொடுப்பதற்காகவே குடி நீர் கொடுப்பதை நான் தடுத்தேன்” என கூறியிருந்தார். அவர் குறிப்பிட்ட அந்த யாழ்ப்பாணத்தான் சுமந்திரன் என்றும் அவர் கூறியிருந்தார். என்ன இதுவும் 75 கள்ள வோட்டு போட்ட கதைபோல் இருக்கிறதே என்று எண்ணி சுமந்திரனின் சொத்து விபரத்தை சரி பார்த்தபோது அவரும் தனக்கு கண்டாவளையில் 40 எக்கர் வயல் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆகவே சிறீதரன் கூறியிருப்பது உண்மைதான். அதுமட்டுமல்ல அவர் இதைக் கூறும்போது சுமந்திரனும் மேடையில் இருந்தார். அவரும் இதை மறுக்கவில்லை. சுமந்திரன் வயலுக்கு தண்ணீர் கொடுப்பதற்காகவே யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்கவில்லை என்று சிறீதரன் கூறுவது ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. சரி. இதற்கு தீர்வு என்ன? இது குறித்து பலர் பலவித மாற்று வழிகளை கூறுகின்றார்கள். ஆனால் மலிவானதாகவும் சிறந்த தீர்வாகவும் நான் கருதுவது மதவாச்சிவரை வந்துள்ள மாவலி நீரை இரணைமடுக் குளத்திற்கும் கட்டுக்கரை குளத்திற்கும் கொண்டுவரவேண்டும். இவ்வாறு கொண்டுவந்தால் வன்னி மக்களின் மூன்றுபோக விவசாயத்திற்கும் போதிய நீர் கிடைக்கும். அதுமட்டுமன்றி யாழ் குடாநாட்டு மக்களுக்கும் தேவையான அளவு குடிநீர் கிடைக்கும். இந்த திட்டத்திற்கு உலக வங்கியிடமிருந்து பணம் பெற பெறமுடியும். அதுமட்டுமல்ல வீட்டுத்திட்டத்திற்கு தரும் பணத்தை இதற்கு தரும்படி இந்தியாவிடமும் கோர முடியும். அரசியல்வாதிகள் மனம் வைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த தடையும் இந்த திட்டத்திற்கு இல்லை. குறிப்பு - இந்த பதிவு சிறீதரனுக்கு எதிரானது அல்ல. யாழ் குடா நாட்டு மக்களுக்கு குடிநீர் வேண்டும் என்ற அக்கறையில் எழுதப்பட்டுள்ளது.

இந்த அற்புதம் எப்படி நிகழ்ந்தது?

•இந்த அற்புதம் எப்படி நிகழ்ந்தது? மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்று திலீபன் கோரினார். ஆனால் அவர்கூட எதிர்பார்க்காத வகையில் கனடாவில் சீன இனத்து தாயும் மகனும் ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்துள்ளனர். ஆம். கனடா வாழ் தமிழர்கள் உரத்து குரல் கொடுத்து வருகின்றமைக்கு சர்வதேச மக்கள் பதில் அளிக்க ஆரம்பித்துள்ளார்கள். நாம் ஊமையாக இருக்கும்வரைதான் உலகம் செவிடாக இருக்கும். நாம் பேச ஆரம்பித்து விட்டால் உலகம் நிச்சயம் அதனை கேட்க ஆரம்பிக்கும்.

நான் அவர் இல்லை

•நான் அவர் இல்லை! இந்தியாவில் மதுரையில் தியாகி திலீபன் தெரு இருப்பது யாவரும் அறிந்ததே. இந்த திலீபன் தெரு வருவதற்கு காரணம் அத் தெருவில் வசித்த தோழர் பாலன் என்று ஒருவர் எழுதியிருந்தார். அதைப் படித்த பலரும் என்னை தொடர்பு கொண்டு நீங்களா அந்த தோழர் பாலன் என்று கேட்கின்றனர். மன்னிக்கவும். நான் அவர் இல்லை. எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அந்த தோழர் பாலன் யார் என்பதை அறிய நானும் விரும்புகிறேன். அவருக்கு என் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

மோடி - மகிந்தா உரையாடல் உண்மை விபரம் என்ன?

மோடி - மகிந்தா உரையாடல் உண்மை விபரம் என்ன? மோடி மகிந்தா உரையாடலின் பின் சிங்கள மக்களை ஏமாற்றுவதற்காக பௌத்த மத மேம்பாட்டிற்காக 15 மில்லியன் டாலர் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக 13வது திருத்தம் நீக்கப்படாமல் தமிழருக்கு தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில் மோடி பேசிய விடயங்கள் என்ன? அவை வருமாறு, •2019 ஆம் ஆண்டில் இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே கையெழுத்தான கொழும்பு துறைமுகத்தில் ECT திட்டம் தொடர்பான ஒப்பந்தம் கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு இலங்கை அரசால் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த திட்டங்களை செயல்படுத்த புதிய அரசாங்கம் ஆரம்பகால மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மோடி வலியுறுத்தியுள்ளார். •சில இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு இலங்கை விதித்துள்ள தற்காலிக கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்பட வேண்டும் எனவும் மோடி வலியுறுத்தியுள்ளார். •உளவுத் தகவல் பகிர்வு, தீவிரவாத தடுப்பு, கடும்போக்குவாத மீளாய்வு, திறன் மேம்பாடு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு ஆகியவற்றில் இந்தியாவுடன் சேர்ந்து இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் எனவும் மோடி கேட்டுள்ளார். •இரு தரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி இரு நாடுகளும் இனி அதிக அளவில் ஆலோசனைகள் நடத்தி, துறைமுகங்கள் மற்றும் எரிசக்தி துறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மற்றும் இணைப்புத் திட்டங்களை விரைவுபடுத்தவும் மோடி வலியுறுத்தியுள்ளார். இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பிற்காக மோடி வலியுறுத்திய இத்தனை விடயங்களுக்கும் மகிந்தா சம்மதம் தெரிவித்துள்ளார் என்பதே உண்மை. ஈழத் தமிழ்த்தலைமைகளைப் பொறுத்தவரையில் இந்திய அரசு தம்மை தீர்வு தராமல் ஏமாற்றுவது குறித்து எந்த வருத்தமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்களின் முகத்தில் இந்திய அரசு ஓங்கிக் குத்தினாலும் சரி அல்லது காலில் போட்டு மிதித்தாலும் சரி சிரித்துக்கொண்டே இந்தியா தம்மை அரவணைக்கிறது என்று சொல்லிக் கொண்டிருப்பர். ஆனால் தமிழக மக்களைப் பொறுத்தவரையில் இனப்படுகொலை செய்த மகிந்தாவுக்கு இந்திய அரசு தொடர்ந்து பண உதவி செய்வதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் இப்பவே “ பெத்த பிள்ளை பாலுக்கு அழுகிறது. ; ஆட்டக்காரிக்கு ரவிக்கையில் 500 ரூபா நோட்டைக் குத்துவதா?” என்று விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். கனிமொழி, டிஆர் பாலு போன்றவர்கள் கொழும்பில் முதலீடு செய்திருப்பதால் திமுக மௌனம் காக்கலாம். ஆனால் தமிழக மக்கள் மௌனமாக இனி இருக்க மாட்டார்கள். அதேபோல் சிங்கள மக்கள் மத்தியிலும் இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல்கள் எழ ஆரம்பித்துவிட்டன. இந்தியாவின் காலனித்துவாவிற்கு எதிராக போராடி உயிர்த்தியாகம் செய்ய தயார் என்று மொதகொட அபயதிஸ்ஸ தேரர் என்ற சிங்கள பிக்கு தெரிவித்துள்ளார். பேராசிரியரான இவர் ஜனாதிபதி கோத்தாவின் அரசியற் செயற்திட்டங்களின் முன்னோடிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜாங்க அமைச்சரான சரத் வீரசேகர இலங்கையின் உள் விவகாரங்களில் இந்திய அரசும் அதன் தூதரகமும் தலையிடக்கூடாது என எச்சரித்திருக்கிறார். எப்போதும் இந்திய விரிவாதிக்கத்திற்கு எதிரான கருத்துக்கொண்ட ஜேவிபி யானது தக்க சமயத்திற்காக காத்துக் கொண்டு இருக்கிறது.

இந்தியாவில் நீதி

•இந்தியாவில் நீதி வழங்கப்படுவதில்லை! வாங்கப்படுகிறது!! பாபர் மசூதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதாவது பாபர் மசூதி இடிக்கப்படவில்லை. அது தானாக இடிந்து விழுந்துள்ளது அல்லது வானத்தில் இருந்து இடி தாக்கி விழுந்துள்ளது என இந்திய நீதிமன்றம் கருதுகிறது போலும் . சேகர் ரெட்டி கட்டுக் கட்டாக வைத்திருந்த கோடிக்கணக்கான பணம் வந்தது எப்படி என்று சிபிஐ யாலே கண்டு பிடிக்க முடியவில்லையாம். அதனால் அவர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தியாவில் நீதி வழங்கப்படுவதில்லை மாறாக வாங்கப்படுகிறது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிக்கொண்டே இருக்கிறது.

உத்திரப்பிரதேசத்தில், 19 வயது மனிஷா என்ற இளம்பெண்

உத்திரப்பிரதேசத்தில், 19 வயது மனிஷா என்ற இளம்பெண் கூட்டுபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவர் தப்பி ஓடி விடக்கூடாது என்பதற்காக கழுத்து மற்றும் எலும்புகளை அடித்து முறித்துள்ளனர். அதன் பின்னர் நடந்தவற்றை சொல்லிவிடக்கூடாது என்பதற்காக அவரின் நாக்கை அறுத்துள்ளனர். சிகிச்சை பலனின்றி அப் பெண் இறந்தவிட்டார். நடந்திருப்பது கூட்டு பாலியல் வல்லறவு மற்றும் படுகொலை. ஆனால் அரசோ இரவோடு இரவாக அப் பெண்ணின் உடலை எடுத்துச் சென்று புதைத்துள்ளது. ஏனெனில் பாதிக்கப்பட்ட பெண் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். அவரை படுகொலை செய்தவர்கள் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள். இது எதோவொரு சம்பவம் இல்லை. அதே உத்தர பிரதேச மாநிலத்தில் அதே நாளில் இதே போன்று இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. மீரட்டில் இருந்து டில்லிக்கு பயணம் செய்த பெண் ஒருவர் அதே பஸ் டிறைவர் மற்றும் கண்டக்ரலால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு வீதியோரத்தில் வீசப்பட்டிருக்கிறார். இந்தியாவில் பசு மாட்டுக்கு இருக்கும் பாதுகாப்புகூட பெண்களுக்கு இல்லை.

கோர்ட்டாவது மயிராவது – நன்றி – எச்ச.ராசா.

பல்லாயிரம் பேர் முன்னிலையில் இடிக்கப்பட்ட பாபர் மசூதி வழக்கில் ஆதாரமே இல்லையாம். சேகர் ரெட்டி வீட்டில் எடுக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்திற்கு ஆதாரமே இல்லையாம் . ஆனால் ராஜிவ்காந்தி வழக்கில் பேரறிவாளனுக்கு ஆயள் தண்டனை வழங்க பற்றரி வாங்கிய ஒரு ரசீது துண்டு போதுமாம். இதைவிடக் கொடுமை என்னவென்றால் இதே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் ஏழு தமிழரை விடுதலை செய்யும்படி தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த மனுவை படிக்க கடந்த இரண்டு வருடமாக ஆளுநருக்கு நேரம் இல்லையாம். இதுதான் இந்திய நீதி! கோர்ட்டாவது மயிராவது – நன்றி – எச்ச.ராசா.

Saturday, September 26, 2020

இவர்கள் ஏன் நடக்கிறார்கள்?

•இவர்கள் ஏன் நடக்கிறார்கள்? இவர்கள் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் கொரோனோ என்று வீட்டுக்குள் இருந்திருக்கலாம். அல்லது, இவர்கள் விரும்பியிருந்தால் நண்பர்களுடன் பாபர்கியூ சாப்பிட்டு மகிழ்ந்திருக்கலாம். அல்லது இவர்கள் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் குடுமபத்தினருடனும் பிள்ளைகளுடனும் நேரத்தை செலவு செய்திருக்கலாம். அல்லது இவர்கள் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் வேலைக்கு சென்று பணம் சம்பாதித்திருக்கலாம். ஆனால் இவர்கள் இதையெல்லாம் விட்டிட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கோரி ஒட்டாவா செல்கிறார்கள். உண்மையில் ஒட்டாவில் சென்று கேட்பது என்றால் இவர்கள் காரிலோ அல்லது ரயில் மூலமோ சென்றிருக்கலாம். ஆனால் இவர்களோ கனடாவில் பிறம்டனில் இருந்து நடந்து ஒட்டாவா செல்கிறார்கள். வழியெங்கும் தமிழ் மக்களுக்கு எற்பட்ட இன அழிப்பை மக்களுக்கு கூறிச் செல்கிறார்கள். இதன் மூலம் மக்கள் ஆதரவை திரட்டுகிறார்கள். மக்களின் ஆதரவின் மூலமே தமிழருக்கான நீதியைப் பெற முடியும் என்பதை உணர்ந்து செயற்படுகிறார்கள். சரியான பாதையில்தான் நடக்கிறார்கள். எனவே அவர்கள் தமக்குரிய இலக்கை மக்கள் ஆதரவுடன் அடைந்தே தீருவார்கள்;. கோத்தபாயா ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்கள் பயத்தில் போராட்டத்தை கைவிட்டுவிடுவார்கள் என சிலர் நக்கலாக கூறினார்கள். ஆனால் தாயகத்தில்கூட இரண்டு இடங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதுதவிர தமிழ்நாட்டில் இலங்கை தூதரக முற்றுகை, டிவிட்டரில் கவனயீர்ப்பு என பலவகைப் போராட்டங்கள். இவ்வாறு தமிழ் மக்கள் போராட்டம் நடத்தியிருப்பது மட்டுமல்ல உலகில் பல இடங்களில் ஒன்றுபட்டு போராட ஆரம்பித்திருப்பது நம்பிக்கை தருகிறது. ஆம். போராட்டம் ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை.

சீமான் அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுகள்

•சீமான் அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுகள் செங்கொடி வீர வணக்க நிகழ்வில் தோழர் தமிழரசன் அவர்களின் தாயாரை மேடையேற்றி கௌரவித்த “நாம்தமிழர்” கட்சி தலைவர் சீமான் அவர்களுக்கு எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். மக்கள் மத்தியில் தனது மகன் தமிழரசன் நினைவு கூரப்படுவது நிச்சயம் அத் தாயாருக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுக்கும். தனது மகன் கொள்ளைக்காரன் என பழி சுமத்தப்பட்டு பொலிசாரால் கொல்லப்பட்டுவிட்டானே என்ற ஏக்கம் அத் தாயை இத்தனை நாள் வாட்டியிருக்கும். குறிப்பு - இப் பதிவு 25.08.2014யன்று எழுதப்பட்டது. செப் -1 தோழர் தமிழரசன் நினைவு தினத்தை முன்னிட்டு மீள்பதிவு செய்கிறேன்.

எம்மால் மறக்கவும் முடியவில்லை

•எம்மால் மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை!! “உலகத் தொழிலார்களே ஒன்று சேருங்கள்” என்று காரல் மார்க்ஸ் சொல்லுமுன்னரே “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கூறிய இனம் தமிழ் இனம். வந்தாரை வாழ வைத்த அந்த இனம் கைபர் கணவாய் வழியே வந்த திருட்டு கூட்டத்திடம் இரந்து கேட்டது. 17 பேர் தீக்குளித்து இறந்தும் கேட்டனர். தன் கைக்கெட்டும் தூரத்தில் தன் தொப்புள் கொடி உறவுகள் ஒன்றரை லட்சம்பேர் இறந்தபோது தாய்த் தமிழகம் செய்வதறியாது திகைத்து நின்றது. ஆனாலும் அந்த வெளிவிவகார அமைச்சர் இரங்க மறுத்தார். அவர் கொஞ்சம்கூட இரக்கம் இன்றி “போர் நிறுத்தம் செய்யுமாறு அண்டை நாட்டை நாம் வலியுறுத்த முடியாது, அது அந்நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக ஆகிவிடும்” என்றார். ஆனால் யுத்தத்தை இலங்கை இந்திய அரசுகள் சேர்ந்தே செய்தன. தமிழ் இனப் படுகொலையை சேர்ந்தே செய்தன என்ற உண்மைகள் இப்போது வெளிவந்துவிட்டன. அதுமட்டுமன்றி வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை படுகொலை செய்த விடயத்திலும் இந்திய அரசு சார்பில் இவருக்கும் நேரடிப்பங்கு உண்டு. பல்லாயிரம் ஈழத்தமிழ் மக்களின் மரணங்களுக்கு காரணமானவர். பல கோடி தமிழக தமிழ் மக்களின் கோரிக்கையை மதிக்காதவர். இன்று இவர் மரணமடைந்துவிட்டார் எனில் தமிழனாகிய எம்மால் எப்படி வருத்தப்பட முடியும்? ஏனெனில் எம்மால் இவரை மறக்கவும் முடியவில்லை. மன்னிக்கவும் முடியவில்லை.

சங்க இலக்கியங்களில் ஒரு வீட்டில் மரண ஓலம்

"சங்க இலக்கியங்களில் ஒரு வீட்டில் மரண ஓலம் ஒலிக்கையில் இன்னொரு வீட்டில் மங்கள ஒசை கேட்டது" - நன்றி கலைஞர் கருணாநிதி. இன்று தமிழர் மனங்களில் மகிழ்ச்சி இது கைபர் கணவாய் வழியே வந்தவர்களுக்கு தெரியட்டும்!

மரணம் ஒருவரின் தவறுகளை மன்னித்துவிடுமா

•மரணம் ஒருவரின் தவறுகளை மன்னித்துவிடுமா? எந்தளவுதான் அயோக்கியனாக இருந்தாலும் அவன் மரணமடைந்துவிட்டால் அவனது அயோக்கியத்தனத்தை விமர்சிக்க கூடாது என்று ஒரு மரபு எம்மத்தியில் இருக்கிறது. இது தொடர்பாக கவிஞர் தாமரை கூறிய கருத்துகள் கவனிக்கத்தக்கவை. பாராட்டுக்குரியவை. “சாவதினாலேயே ஒருவர் 'புனித'ராகி விடமாட்டார். செத்தவர்களை விமர்சிப்பதில்லை என்பது தமிழர் நன்மரபு ! எனினும் மரபுகளுக்கும் காலாவதி உண்டு ; காலத்துக்கேற்ற மாற்றம் உண்டு. செத்தாலும் அயோக்கியன் அயோக்கியனே என்று சொல்லப் பழகுவோம். செத்தாலும் அயோக்கியன் புனிதனாக முடியாது என்பதைப் புது மரபாக்குவோம்” என்று கவிஞர் தாமரை கூறியுள்ளார்.

ஈழத் தமிழர்கள்

ஈழத் தமிழர்கள் ஏன் தோழர் தமிழரசனை நினைவு கூரவேண்டும்? செப்-1, இன்று தோழர் தமிழரசனின் 32 வது நினைவு தினம் ஆகும். •அவர் தமிழ் தேசியத்தை முன்வைத்தார் •அவர் தமிழ்நாடு விடுதலை அடைய வேண்டும் என்று விரும்பினார். •அவர் அதற்காக தமிழ்நாடு விடுதலைப்படையை கட்டினார். •அவர் தேர்தல் பாதையை நிராகரித்து ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தார். •அவர் மார்க்சிய லெனிய மாவோயிச சிந்தனைகளை தனது தத்துவ வழிகாட்டியாக கொண்டிருந்தார். அதனால்தான் தமிழகம் எங்கும் அவர் மக்களால் இன்று நினைவு கூரப்படுகிறார். தமிழக மக்கள் நினைவு கூர்வது சரி. ஆனால் ஈழத் தமிழர்கள் ஏன் அவரை நினைவு கூரவேண்டும்? முதலாவது, அவர் ஒருவர் மட்டுமே இந்திய அரசு தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று கூறி மருதையாற்று பாலத்திற்கு குண்டு வைத்தார். இரண்டாவது, இந்திய அரசு ஈழத் தமிழருக்கு நண்பன் இல்லை. அது ஒரு எதிரி என்று அவர் உறுதியாக கூறினார். மூன்றாவது, தமிழக இளைஞர்கள் ஈழப் போராட்டத்தில் கலக்க வேண்டும் என்று கூறியது மட்டுமன்றி அதற்காக தானே முன்வந்தார். நான்காவது, ஈழப் போராளிகள் தமிழக தலைவர்களை நம்புவது தவறு. அவர்கள் தமிழக மக்களை நம்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். ஜந்தாவது, தமிழக மக்களும் அடிமையாக இருக்கிறார்கள். அவர்கள் தமது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு செய்யும் உதவியாகும் என்றார். இவ்வாறு தோழர் தமிழரசன் தவிர வேறு யாரும் கூறியது கிடையாது. எனவேதான் ஈழத் தமிழருக்கு உறுதியாக ஆதரவு தந்த அவரை ஈழத் தமிழர் நினைவு கூர வேண்டும் என்கிறோம். ஆனால் இந்திய அரசின் விசுவாசியான சிலர் அவரை கொலைகாரன் என்கிறார்கள். இங்கு வருத்தத்திற்குரிய விடயம் என்னவெனில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக அவர் குண்டு வைத்ததால்தான் அவர் மீது இக் கொலைகாரன் என்ற பட்டம் சூட்டப்பட்டது. இதுகூடத் தெரியாமல் நன்றி கெட்டத்தனமாக சிலர் விமர்சிப்பது வேதனையாக இருக்கிறது. ஆனாலும் ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் வருகையை தடுக்க முடியாது என்பதுபோல் எத்தனை அவதூறுகள் செய்தாலும் தோழர் தமிழரசன் புகழ் மங்கிவிடாது.

தோழர் தமிழரசனுக்கு வீர வணக்கங்கள்!

• தோழர் தமிழரசனுக்கு வீர வணக்கங்கள்! சோசலிச அமைப்பு இறுதியில் முதலாளித்துவ அமைப்பை பலியாக்கும். இது மனித சித்தாந்தத்திற்கு அப்பாற்பட்ட ஒரு புறநிலை விதி. பிற்போக்குவாதிகள் வரலாற்றுச் சக்கரத்தை தடுத்து நிறுத்த எவ்வளவுதான் முயன்றாலும் இன்றோ, நாளையோ புரட்சி தோன்றுவது நிச்சயம். அது வெற்றிவாகை சூடுவதும் தவிர்க்க முடியாது- தோழர் மாஓ சேதுங் தோழர் தமிழரசனைக் கொல்வதன் மூலம் தமிழ்நாடு விடுதலைப் படையை நசுக்கலாம். அதன் மூலம் தமிழ்நாடு விடுதலையை தடுக்கலாம் என இந்திய அரசும் அதன் உளவுப்படைகளும் திட்டம்போட்டு சதி மூலம் தோழர் தமிழரசனையும் அவரது தோழர்கள் 4 பேரையும் 1987ம் ஆண்டு பொன்பரப்பியில் கொன்றனர். ஆனால் அவர்கள் கனவு பலிக்கவில்லை. படுகொலை செய்யப்பட்ட தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. மாறாக விதைக்கப்பட்டுள்ளார். அவரில் இருந்து பல தமிழரசன்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர். வெகுவிரைவில் தமிழ்நாடு விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழும். அது தோழர் மாஓசேதுங் கூறியதுபோல் வெற்றிவாகை சூடுவது தவிர்க்க முடியாதது. தோழர் தமிழரசன் அவர்கள் பாதையில் தொடர்ந்து செல்வதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும். அவரை என்றும் நினைவில் கொள்வோம். செங்கொடி பதிகிறது! செவ்வணக்கம் செலுத்துகிறது!

இந்த நீண்ட நெடிய உருவம்

•இந்த நீண்ட நெடிய உருவம் ஏன் இந்தளவு கூனிக்குறுகி பிச்சை எடுக்கிறது? இருவரும் தமிழர்கள் மட்டுமல்ல கவிஞர்களும்கூட இருவரும் தமிழ் உணர்வாளர்கள் மட்டுமன்றி ஈழத் தமிழர் ஆதரவாளர்களும்கூட. ஒருவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். மற்றவர் கவிஞர் வைரமுத்து ஈழத் தமிழர்களை கொலை செய்தமைக்காக ராஜீவ்காந்தியை வயிறு வெடித்து சாவாய் என்று அறம் பாடினார் பெருஞ்சித்திரனார். அதனால் தடாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ட்டார். ஆனாலும் அவர் தமிழர்களை கொன்றவர்களை ஒருபோதும் போற்றிப்பாடவில்லை. கவிஞர் வைரமுத்து அவர்கள் முள்ளிவாய்க்காலுக்கே நேரில் வந்து அஞ்சலி செலுத்தியவர். அதுமட்டுமன்றி இந்த முள்ளிவாய்க்கால் அவலம் பற்றி ஒரு காப்பியம் படைப்பேன் என்றும் கூறினார். அவர் முள்ளிவாய்க்கால் அவலம் பற்றி கவிதை எழுதாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அந்த முள்ளிவாய்க்கால் அவலத்தைத் தந்தவரையே புகழ்ந்து பாடுகிறாரே? பிரணாப்முகர்ஜி மறைவுக்கு இந்தியா எழுந்து நின்று மௌனிக்கிறது என்கிறார். இந்தியா உங்களை நீண்டகாலம் நினைக்கும் என்கிறார். கலகம் செய்ய துணிந்தவனுக்கு உதவி செய்வதே ஒரு கவிஞனின் பணியாக இருக்க வேண்டும். பெருஞ்சித்திரனார் உணர்ச்சிக் கவிஞர். அதனால்தான் அவரின் கவிதைகள் இன உணர்வை ஊட்டி போராட்டத்திற்கு உதவி புரிகின்றன. வைரமுத்து ஒரு சோற்றுக் கவிஞர். அதனால்தான் வயிற்றுப்பிழைப்புக்காக குனிந்து பிச்சை எடுக்கிறார்.

தோழர் சோழன்; !

•தோழர் சோழன்; ! அரியலூர் மாவட்ட திமுக தலைவர் சிவசங்கர் எழுதியுள்ள நாவல் இது. தோழர் தமிழரசனின் நினைவு நாளான இன்று அவர் குறித்த நாவல் ஒன்றை படிக்கவும் அது குறித்து ஒரு சிறு குறிப்பை எழுதவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் 2003ல் “தோழர் பிள்ளையார்” என்று ஒரு நாவல் எழுதினேன். அதில் லண்டனுக்கு அகதியாக வரும் பிள்ளையார் அகதி நிராகரிக்கப்பட்டு நாடு திரும்பி தோழராகி போராடுவதாக எழுதியிருந்தேன். அதேபோல் இந்த நாவலில் சோழன் என்பவர் தோழராகி இயக்கத்தில் சேர்ந்து சம்பவம் செய்வதாக உள்ளதால் இயல்பாக இந்த நாவல் ஆர்வத்தை எற்படுத்தியுள்ளது. தோழர் தமிழரசன் சம்பந்தப்பட்ட மருதையாற்று பாலம் மீதான வெடிகுண்டு சம்பவம் மற்றும் பொன்பரப்பி வங்கி கொள்ளை முயற்சி ஆகிய இரு சம்பவங்களை வைத்து இந்த புனைவு நாவல் எழுதப்பட்டுள்ளது. இங்கு ஆச்சரியம் என்னவெனில் சிவசங்கர் அவர்கள் ஒரு முன்னாள் எம்எல்ஏ மட்டுமல்ல அரியலூர் மாவட்ட திமுக தலைவரும்கூட இருப்பினும் சம்பவங்களை நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக தோழர் தமிழரசன் மக்களால் அடித்துக் கொல்லப்படவில்லை,மாறாக பொலிஸ் சதி செய்து கொன்றதை தெளிவாக நேர்மையாக எழுதியுள்ளார். நான் அறிந்தவரையில் தோழர் தமிழரசன் குறித்து வெளிவந்திருக்கும் முதல் நாவல் இதுவென்றே கருதுகிறேன். அதுவும்கூட தோழர் தமிழரசனை கொச்சைப்படுத்தாமல் வந்திருப்பது உண்மையில் மகிழ்ச்சியே. இதுவரை வெறும் அரசியல் வடிவமாக இருந்துவந்த தோழர் தமிழரசன் தற்போது இலக்கிய வடிவங்களையும் பெறுவது இனி அவர் வரலாற்றில் நீண்டு நிலைபெறுவார் என்பதையே காட்டுகிறது. அந்தவகையில் சிவசங்கர் அவர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவசுப்பிரமணியம் அவர்கள் லண்டனில் வாழ்கிறார்

சிவசுப்பிரமணியம் அவர்கள் லண்டனில் வாழ்கிறார். அவர் ஒரு வழக்கறிஞரும்கூட. இருந்தும் சில மாதங்களுக்கு முன்னர் எனது பதிவு ஒன்றின் கீழ் வந்து “ உனக்கு பையித்தியம். போய் ஒரு டாக்டரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்” என்று எழுதியிருந்தார் . ஒரு படித்தவர் பொதுவெளியில் இப்படி எழுதியது ஆச்சரியமாக இருந்தாலும் இவர் எமது முதல் தியாகி சிவகுமாரனின் சகோதரர் என்பதால் நான் மௌனம் காத்தேன். இப்போது அவரே எனது இன்னொரு பதிவின் கீழ் வந்து “தோழர் பாலன் கருத்துடன் உடன்படுகிறேன்” என்று எழுதியுள்ளார். கடந்த 40 வருட அரசியல் பயணத்தில் இவ்வாறு பல அனுபவங்களை நான் பெற்று வருகின்றேன். 2013ம் ஆண்டு முதல் நான் இதுவரை முகநூலில் 3686 பதிவகள் இட்டுள்ளேன் ( கீழ்வரும் இணைப்பில் எனது முகநூல் பதிவுகள் யாவற்றையும் படிக்கலாம் http://tholarbalan.blogspot.com/) வியட்நாம் தந்தை ஹோசிமின் அவர்களிடம் உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டபோது “ கசப்பான உண்மைகளாக இருந்தாலும் அதை மறைக்காது மக்களிடம் கூறினேன். அவர்கள் வெற்றியை பெற்று தந்தார்கள்” என்று பதில் அளித்தார். எனவேதான் சிலருக்கு கசப்பாக இருக்கிறது என்பதற்காக நான் உண்மைகளை மக்களுக்கு கூறாமல் இருப்பதில்லை. மக்களுக்கு உண்மைகளை கூறுவோம். அவர்கள் நிச்சயம் வெற்றியை பெற்று தருவார்கள்.

இவர்கள் எங்கே என்று கேட்டால்

இவர்கள் எங்கே என்று கேட்டால் இலங்கை இந்திய அரசுகளுக்கு கோபம் வருமாம். எனவே இனி கேட்கக்கூடாது என்கிறார்கள். இவர்கள் எங்கே என்று கேட்டால் சிங்கள மக்களின் மனம் புண் படுமாம். எனவே இனி கேட்காமல் பக்குவமாக நடக்க வேண்டுமாம். இனி இவர்கள் எங்கே என்று கேட்பது யதார்த்தத்திற்கு மாறானது. எனவே இனி இவ்வாறு கேட்கக்கூடாதாம். இவர்கள் எங்கே என்று இதுவரை கூறாதது கொடுமை என்றால் அதைவிட கொடுமையானது இவர்கள் எங்கே என்று கேட்கக்கூடாது என்பது. என்ன கொடுமையடா இது? உலகில் தன்னைத்தானே புத்திசாலி என்று கூறும் முட்டாள் இனமாடா ஈழத்து தமிழ் இனம்?

எரிக் சோல்ஹைம் கூற்று பற்றி

•எரிக் சோல்ஹைம் கூற்று பற்றி 2009 ஏப்பிரலில் இந்தியாவும் அமெரிக்காவும் உதவ வந்ததாகவும் ஆனால் பிரபாகரன் மறுத்துவிட்டார் என எரிக் சொல்ஹைம் கூறியுள்ளார். இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அத்துடன் இதை ஏன் பதினொரு வருடம் கழித்து கூறுகின்றார் என்பதும் புரியவில்லை. 2009 மே யில் இதே எரிச்சொல்ஹைம் மற்றும் இந்தியா, ஜநா, சர்வதேச மன்னிப்பசபை எல்லாம் சேர்ந்து ஏற்பாடு செய்தபடி வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்துவிட்டு இவர்கள் கூறியபடி வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை கொன்றுவிட்டு 2009ல் பிரபாகரன் மறுத்துவிட்டார் என்று இப்போது பழி போடுகிறார். ஒருவேளை இவர் கூறியபடி 2009 ஏப்பிரலில் சரணடைந்திருந்தால் அப்போதும் மொத்தமாக கொன்றுபோட்டிருக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அப்போதும் இவர் “1983ல் சரணடைந்திருக்க வேண்டும். பிரபாகரன் மறுத்துவிட்டார்” என்று கூறியிருக்க மாட்டாரா? இதே எரிக்சொல்ஹைமிடம் ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்தித்து தமது உறுப்பினர்களை புலிகள் கொல்வதாக முறையிட்டபோது இவர் கூறியது “ நீங்களும் பதிலுக்கு புலிகளை கொல்லுங்கள்” இதிலிருந்தே இவர்; சமாதானத்திற்காக வரவில்லை. ஈழத் தமிழரின் போராட்டத்தை அழிக்க வந்தவர் என்பதை புரிந்துகொள்ள முடியும். எரிக் சொல்ஹைம் நோர்வேயில் ஒரு இடதுசாரிக்கட்சியின் தலைவர் என்கிறார்கள். இப்போதெல்லாம் இடதுசாரி என்று சொல்பவர்களே இனங்களின் தேசிய உணர்வை மறுப்பதில் முதன்மை வகிக்கிறார்கள். பாவம் தமிழர்கள் மட்டுமல்ல மார்க்சும் லெனினும்தான்.

நீ ஊமையாக இருக்கும்வரை

•நீ ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும்! டயபற்றிக்ஸ்க்கு சுகர் லெவலை குறைப்பதற்காக நடக்கிறார்கள் என சிலர் கிண்டல் செய்யலாம். நடந்துபோவதால் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டு பிடித்துவிட முடியுமா என இன்னும் சிலர் குதர்க்கமாக கேட்கலாம். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இவர்கள் நான்காவது நாட்களாக நடக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களில் 106 கிலோ மீற்றர் நடந்துள்ளனர். உறுதி குலையாமல் கனடாவின் தலைநகர் ஓட்டோவாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். நாடு நாடாக அகதியாக அலைந்த யூத இனத்தவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது அடுத்த முறை இஸ்ரவேலில் சந்திப்போம் என்று கூறிக்கொள்வார்களாம். யூதர்கள் போல் இவர்கள் அடுத்தமுறை தமிழீழத்தில் சந்திப்போம் என்று கூறுவதில்லை. ஆனால் யுதர்கள் தமது இலக்கை அடைய எப்படியான ஒரு நம்பிக்கையை கொண்டிருந்தார்களோ அப்படியான ஒரு நம்பிக்கையை இவர்களும் கொண்டிருக்கிறார்கள். யூதர்கள் ஊமையாக இருக்காமல் உரத்து குரல் கொடுத்தார்கள். எனவேதான் சர்வதேசம் அவர்களுக்குரிய நீதியை பெற்றுக் கொடுத்தது. அதேபோல் இவர்களும் உரத்து குரல் கொடுக்கிறார்கள். எனவே கனடா அரசு இவர்களுக்குரிய நீதியை வழங்காவிட்டாலும் உலக மக்கள் நிச்சயம் பெற்றுக் கொடுப்பார்கள். ஏனெனில் மக்களை நம்பியவர்களை மக்கள் ஒருபோதும் கைவிட்டதில்லை.

யார் இவர்?

•யார் இவர்? இவரை நாம் ஏன் நினைவு கூர வேண்டும்? இவர் வியட்நாம் தந்தை என அழைக்கப்படும் ஹோ சிமின். இன்று அவரின் நினைவு தினம் ஆகும். (02.09.1969) பிரான்ஸ் அமெரிக்க வல்லரசுகளுக்கு எதிராக 20 வருடங்களுக்கு மேலாக போராடி வியட்நாமை விடுதலை பெற வைத்தவர். சரி. இவரை தமிழர்கள் ஏன் நினைவு கூர வேண்டும்? (1) எந்தப் பெரிய வல்லரசாக இருந்தாலும் ஒரு தேசிய இனத்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்க முடியாது என்ற உண்மையை உலகிற்கு காட்டியவர் இவர். (2) தேர்தல் பாதை மூலம் வியட்நாமை விடுவிக்க முடியும் என இவர் மக்களை ஏமாற்றவில்லை. மாறாக மக்களை திரட்டி ஆயுதப் போராட்ட பாதை மூலமே வெற்றி பெற்றார். (3) மிக முக்கியமாக வெற்றி பெற்ற பின்பு இவரிடம் உங்களின் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டபோது “ கசப்பான உண்மையாக இருந்தாலும் அதை மறைக்காமல் மக்களிடம் கூறினேன். மக்கள் எனக்கு வெற்றியை பெற்றுத் தந்தார்கள்” என்றார். இந்தியா என்ற பெரிய நாட்டை ஈழத் தமிழர்கள் எதிர்க்க முடியாது என்பவர்கள், தேர்தல் பாதை மூலம் தமிழருக்கு தீர்வு பெற முடியும் என்பவர்கள் அடுத்த தீபாவளிக்கு தீர்வு வரும் என்று ஒவ்வொரு வருடமும் மக்களுக்கு பொய் அறிக்கை விடுபவர்கள் படிக்க வேண்டிய வரலாறு ஹோ சிமின் வரலாறு ஆகும்.

மக்களிடம் செல்வது பயன் அற்றதா?

•மக்களிடம் செல்வது பயன் அற்றதா? கனடாவில் நடந்து போவதால் அல்லது ஜெனீவாவுக்கு சயிக்கிளில் செல்வதால் என்ன பயன் என்று சிலர் கேட்கின்றனர். உண்மைதான். தீர்வு வந்துவிடப் போவதில்லைதான். ஆனாலும் இதில் ஒரு பயன் இருக்கத்தான் செய்கிறது. வல்லரசு நாடுகள் தாமாக ஒருபோதும் எம்மீது இரக்கம் கொண்டு தீர்வு கிடைக்க வழி செய்யப் போவதில்லை என்பதும் எமக்கு தெரிந்துதான் இருக்கிறது. ஆனால், அமெரிக்க வல்லரசுக்கு எதிராக வியட்நாம் மக்கள் வெற்றிபெற எப்படி உலக மக்களின் ஆதரவு உதவியாக இருந்ததோ, ரஸ்சிய வல்லரசுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மக்கள் வெற்றிபெற எப்படி உலக மக்களின் ஆதரவு உதவியாக இருந்ததோ 2ம் உலக யுத்தத்தின் பின்னர் யூத மக்கள் தமக்கென்று ஒரு நாடுபெற எப்படி உலக மக்களின் அதரவு உதவியாக இருந்ததோ அதேபோன்று ஈழத் தமிழ்மக்களும் தமக்குரிய நீதியைப்பெற உலக மக்களின் ஆதரவை வென்றெடுப்பது அவசியம். அதைத்தான் கனடா, லண்டன், ஜெனீவா வில் எல்லாம் எமது மக்கள் செய்கிறார்கள். இனியும் செய்வார்கள். கனடாவில் நடை பயணம், லண்டனில் பிரதமர் மாளிகை முன்; ஆர்ப்பாட்டம,; ஜெனீவாவில் கவனயீர்ப்பு பேரணி என உலகெங்கும் மக்களை சந்திக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் படுகொலை படங்களை மக்களுக்கு காட்டி நீதி கோருகிறார்கள். உலக மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறார்கள். அதனால்தான் இலங்கை அரசு அச்சம் கொள்கிறது. புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களை நசுக்க பல வழிகளிலும் அது முயற்சி செய்கிறது. தலைவர்களை விலைக்கு வாங்கிவிட்டால் தமிழர்களின் போராட்டம் தானாக மங்கிவிடும் என இலங்கை ஆட்சியாளர்கள் நினைத்தார்கள். ஆனால் தமிழர்கள் தாமாகவே இந்தளவு விரைவாக திருப்பி எழும்புவார்கள் என அவர்கள் நினைத்திருக்கவில்லை. தமிழர்கள் திருப்பி எழும்புவது ஆச்சரியம் இல்லை. அவர்கள் எழும்பாவிட்டால்தான் ஆச்சரியம். ஏனெனில் அவர்கள்; நீண்டதொரு வீரம் செறிந்த போராட்ட வரலாற்றின் சொந்தக்காரர்கள் அல்லவா! குறிப்பு - கீழே உள்ள படம் கனடாவில் 450 கீலோ மீற்றர் தூரத்தை 13 நாட்களாக நடக்கும் உணர்வாளர்களின் படமாகும். அவர்களுக்கு எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

ராஜீவ் காந்தியைக் கொன்றதால்தானா

•ராஜீவ் காந்தியைக் கொன்றதால்தானா இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவ மறுக்கிறது? ஈழத் தமிழர் பிரச்சனையைப் பயன்படுத்தி முழு இலங்கையையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே இந்திய அரசின் திட்டமாகும். எனவே ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிட்டாலும் இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவியிருக்காது என்பதே உண்மை. இந்திய பிரதமரைக் கொன்றதால்தான் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். இதுவும் தவறாகும். ஏனெனில் ராஜீவ்காந்தி கொல்லப்படும்போது அவர் பிரதமர் இல்லை. முன்னாள் பிரதமர் மட்டுமே. முன்னாள் பிரதமரைக் கொன்றதற்காக ஒரு இயக்கத்தை சட்டப்படி தடை செய்ய முடியாது. தமிழர் மீட்சிப்படை என்ற இயக்கத்திற்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்கியதாக கூறியே புலிகள் இயக்கத்தை தடை செய்துள்ளனர். ஆனால் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது சீக்கிய இனத்தவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனாலும் சீக்கிய இனம் புறக்கணிக்கப்படவில்லை. மாறாக அந்த இனத்தை சேர்ந்த மன்மோகன்சிங்கை காங்கிரஸ் கட்சி இரண்டுமுறை பிரதமராக தேர்ந்தெடுத்தது. அடுத்து விஜேமுனி என்ற சிங்கள சிப்பாய் தாக்கியதில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருந்தால் இன்று வரலாறு வேறு விதமாக அமைந்திருக்கும் என சிலர் கூறுகிறார்கள். இதுவும் தவறு. ஏனெனில் ராஜீவ்காந்தி செத்திருந்தாலும் ஜேஆர் ஜெயவர்த்தனா தொடர்ந்தும் இந்திய ஒப்பந்தத்தை ஆதரித்திருப்பார். இங்கு வேடிக்கை என்னவெனில் தான் ராஜீவ் காந்தியைக் கொல்வதற்காகவே தாக்கினேன் என்று அந்த சிங்கள சிப்பாய் கூறியிருந்தும் அவருக்கு வெறும் 6 வருட தண்டனையே வழங்கப்பட்டது. அதுமட்டுமல்ல அவர் சிறையில் இருக்கும்போது தன் தாயாருக்கு எழுதிய கடிதத்தில் “சிறைச் சோறு சாப்பிடுவதற்காக நான் வருந்தவில்லை. மாறாக ராஜிவ் காந்தி சாகாமல் தப்பிவிட்டான் என்பதற்காகவே வருந்துகிறேன்” என்று எழுதியிருந்தான். இவ்வாறு அந்த சிங்கள சிப்பாய் சிறையில் இரண்டு வருடங்கள் மட்டுமே கழித்திருந்தவேளையில் அவருக்கு ஜனாதிபதி பிரேமதாசா பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். தம் பிரதமரைத் தாக்கிய நபரை இலங்கை அரசு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது குறித்து இந்திய அரசு கொஞ்சம்கூட ஆத்திரப்படவும் இல்லை. ஆட்சேபனை தெரிவிக்கவும் இல்லை. சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட இந்த சிப்பாய் இலங்கை இந்திய ஒப்பந்தம்மூலம் பெறப்பட்ட மாகாணசபையைக் கலைப்பதே தமது குறிக்கோள் என செயற்பட்டு வருகிறார். அதற்காக மாகாணசபையை ஒழிப்பேன் என்று கூறும் இன்னொரு இனவாதியான சரத் வீரசேகர என்பவருடன் சேர்ந்து செயற்படுகிறார். இப்போது மகாணசபைகளுக்கான அமைச்சு பொறுப்பை இந்த சரத்வீரசேகர என்பவரிடமே மகிந்த ராஜபக்சா ஒப்படைத்திருக்கிறார். அவரும் பதவியேற்றவுடன் கூறிய முதல் வார்த்தை விரைவில் இந்த மாணாண சபைகளை ஒழிப்பேன் என்பதே. இதனால் சம்பந்தர் ஐயா குழுவினர் ஓடிச்சென்று கொழும்பில் இருக்கும் இந்திய தூதரிடம் முறையிட்டனர். இந்திய தூதரும் வழக்கம்போல் ஈழத் தமிழருக்கு தீர்வு கிடைக்க இந்தியா துணை நிற்கும் என ஒரு பேட்டியை வழங்கினார். ஆனால் அதைக்கூட இந்த அமைச்சர் சரத்வீரசேகரவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உடனே “இலங்கை இறைமை உள்ள நாடு. வெளிநாட்டு தூதர்கள் இதில் தலையிட முடியாது” என ஆணவமாக கூறினார். மாகாணசபை என்பது இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் பெறப்பட்டது. எனவே அந்த மாகாணசபை நீக்கப்படுமானால் அது குறித்து கேட்க இந்திய அரசுக்கு முழு உரிமை உண்டு. இதனைச் சுட்டிக்காட்டி கேட்டிருக்கவேண்டிய இந்திய தூதரோ அல்லது இந்திய அரசோ எதுவும் கூறாமல் மௌனமாகிவிட்டனர். ராஜீவ் காந்தியை கொல்வதற்காக தாக்கியவர்கள் இப்போது அந்த ராஜீவ் காந்தி செய்த ஒப்பந்தம் மூலம் பெற்ற மாகாணசபையையே நீக்க துணிந்துவிட்டனர். இது குறித்து எந்த கோபமோ அக்றையோ இன்றி இந்திய அரசு இருக்கிறது. ஆனால் ராஜீவ் காந்தியைக் கொன்ற கோபத்தில்தான் இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவ மறுக்கிறது என நம்மவர்கள் சிலர் உபதேசம் செய்கின்றனர். அவர்களுக்கு நாம் கூறுவது “முடிந்தால் அந்த சிங்கள சிப்பாயின் மூத்திரத்தை கொஞ்சம் வாங்கி பருகுங்கள். அதன்பின்பாவது உங்களுக்கு புரிகிறதா என பார்ப்போம்”.

இந்தி தெரியாத தமிழன் தீவிரவாதியா?

இந்தி தெரியாத தமிழன் தீவிரவாதியா? இலங்கையில் சிங்கள மொழி தெரியாத தமிழர்களை தீவிரவாதிகள் என்று சிங்கள இனவெறியர்கள் ஒருபோதும் கூறியதில்லை. ஆனால் இந்தியாவில் இந்தி மொழி தெரியாத தமிழர்களை தீவிரவாதிகள் என்று இந்தி வெறியர்கள் கூறுகின்றனர். கனிமொழி கலைஞர் கருணாநிதியின் மகள் மட்டுமல்ல. அவர் ஒரு எம்.பியும்கூட. தனக்கு இந்தி தெரியவில்லை என்று கூறியதால் தான் அவமதிக்கப்பட்டேன் என்று கூறினார். அவர் இவ்வாறு கூறியபோது அரசியல் லாபத்திற்காக கூறுவதாக சங்கிகள் கூறினார்கள். ஆனால் இப்போது தனக்கு இந்தி தெரியவில்லை என்று கூறியபோது தன்னை ஒரு தீவிரவாதி என்று கூறி டில்லி விமானநிலைய அதிகாரி அவமதித்ததாக இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார். வெற்றிமாறன் ஒரு புகழ் பெற்ற இயக்குனர். அகில இந்திய பரிசுகள் பெற்றவர். அதுமட்டுமல்ல இந்தியா சார்பாக கனடா கலாச்சார விழாவில் பங்குபற்றிவிட்டு வரும்போதே அவருக்கு இந்த அவமதிப்பு நிகழ்ந்துள்ளது. தான் தமிழர் என்பதால் இந்தி திரையுலகம் தன்னை திட்டமிட்டு ஒதுக்குவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியிருக்கிறார். தமிழர் என்னதான் தம்மை இந்தியராக நினைத்தாலும் அல்லது இந்துவாக நினைத்தாலும் அவர்கள் தமிழர்களை சக மனிதராக கூட மதிக்க மாட்டார்கள் என்பதே உண்மை. அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றால் தோழர் தமிரசன் பேசிய மொழியில் தமிழர்கள் பேச ஆரம்பிக்க வேண்டும். ஆம். தோழர் தமிழரசன் தோளில் தொங்கிய துப்பாக்கி தயாராக காத்து இருக்கிறது. தமிழர்களே நீங்கள் தயாரா?

போங்கடா நீங்களும் உங்கட நியாயமும்!

•போங்கடா நீங்களும் உங்கட நியாயமும்! திலீபன் மகேந்திரன் என்பவர் தேசியக் கொடியை அவமதித்தார் என்று வழக்கு பதிவு சிறையில் அடைத்ததுடன் அவரின் கையையும் அடித்து உடைத்தார்கள் தமிழக பொலிசார். அதேநேரம் நடிகர் எஸ.வி.சேகர் தேசிய கொடியை அவமதித்தார் என்ற வழக்கில் அவர் மன்னிப்பு கேட்டால் வழக்கை வாபஸ் பெறுவதாக ஆபர் வழங்குகின்றனர் அதே தமிழக பொலிசார். அதையும் ஆறுதலாக சிந்தித்து கூறுவதற்காக ஒரு வார கால அவகாசத்தையும் சேகருக்கு வழங்கினார்கள் இந்த தமிழக பொலிசார். அதேவேளை தேசியக்கொடியை அவமதித்ததாக திருவண்ணாமலையைச் சேர்ந்த உணர்வாளர் கண்ணதாசன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் தமிழக பொலிசார். அத்துடன் தமிழர் கழக பொதுச்செயலர் மணிகண்டன் அவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் இதே தமிழக பொலிசார். திலீபன் மகேந்திரன், கண்ணதாசன், மணிகண்டன் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்த தமிழக பொலிசார் சேகரை கைது செய்யாமல் மன்னிப்பு கோரும்படி கேட்டனர். ஆனாலும் அந்த திமிர் பிடித்த சேகர் மன்னிப்பு கோரவில்லை. மாறாக போனால் போகுது என்று வருத்தம்தான் தெரிவித்திருக்கிறார். மன்னிப்பு என்பது செய்த தவறை உணர்ந்து கேட்பது. வருத்தம் என்பது துயர சம்பவத்திற்கு தெரிவிப்பது. இதுகூடவா நீதிமன்றத்திற்கு தெரியவில்லை? ஆனாலும் இந்தக் கூத்தை எல்லாம் நீதிமன்றமும் அனுமதித்தது. நல்லவேளை சேகரும் பிரசாந்த் பூஷன் போல் மன்னிப்பு கேட்க மறுத்திருந்தால் ஒரு ரூபா தண்டனை வழங்கி அதனைக் கட்டும்படி நீதிமன்றம் கெஞ்சியிருக்கும். நீதிமன்றத்திற்கு அத்தகைய ஒரு நிலையை ஏற்படுத்தாமைக்கு வேண்டுமானால் சேகரைப் பாராட்டலாம்.

குரங்குகள் தாம் விரும்பியபடி

குரங்குகள் தாம் விரும்பியபடி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் காரைக் கைப்பற்றின. ஆனால், அவற்றால் காரை நகர்த்த முடியவில்லை. முன் சில்லையும் (13) பின் சில்லையும் (20) நீக்கினால் கார் நன்றாக ஒடும் எனக் கூறுகின்றன. அதுவும் உண்மைதான் என்று நம்புவதற்கு சில எருமை மாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பு - இதனைப் படிக்கும்போது மகிந்த ராஜபக்சா அரசு உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு கம்பனி பொறுப்பு இல்லை.

முதலில் எம்மை “வந்தேறிகள்” என்றார்கள்

முதலில் எம்மை “வந்தேறிகள்” என்றார்கள் இப்போது எம்மை “வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள்” என்கிறார்கள் ஆனால் நாம்தாம் இந்த மண்ணின் பூர்வீக குடிகள் என்ற உண்மையைக் கூறக்கூடாதாம். அப்படிக் கூறினால் அவர்கள் மனம் புண்படுமாம். அதனால் கலவரம் செய்வார்களாம் இப்படி எம்மை இருக்கச் சொல்பவர்கள் நம்மவரே. வரலாற்றை இழந்தவன் மண்ணை இழக்கிறான் மண்ணை இழந்தவன் இனத்தை இழக்கிறான் இதை ஏன் இந்த நம்மவர்கள் உணர மறுக்கிறார்கள்? காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகின்றதே இவர்கள் மட்டும் ஏன் எழும்ப மறுக்கிறார்கள்? ஒருமுறை எதிர்க்காமல் இருந்துவிட்டால அப்புறம் அதுவே பழக்கமாகி போய்விடுமே ஒல்லாந்தரை எதிர்த்த இனம் போர்த்துக்கேயரை எதிர்த்த இனம் ஆங்கிலேயரை எதிர்த்த இனம் கேவலம் மகிந்த கும்பலுக்கு பயந்து கிடக்கனுமா? பதில் சொல்லுங்க நம்மவர்களே! குறிப்பு - தமிழர் வரலாற்றை கூறிய விக்கினேஸ்வரன் அவர்களை கண்டிக்கும் நம்மவர்களுக்கான பதிவு இது.

ஒருமுறை சுமந்திரனுக்கும்

ஒருமுறை சுமந்திரனுக்கும் அம்பிகா அன்ரிக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது. திடீரென்று சுமந்திரன் கூறிய ஒரு வார்த்தையில் வாக்குவாதம் டக்கென்று நின்றுவிட்டது. சுமந்திரன் “ நீர் ரொம்ப அழகாக இருக்கிறீர் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாமா?” இதற்கப்புறம் அம்பிகா அன்ரி எதுவும் பேசவில்லை. சமையலறைக்கு சென்று டீ போட்டு வந்தார். கூடவே மலாயன்கபே மெதுவடையம் இருந்தது. இதில் இருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய நீதி “ நாம் நோயுடன் போராடவேண்டுமே தவிர நோயாளியுடன் அல்ல.” இது ஒரு பகிடிக்கதைதான். ஆனால் இதை இப்போது இங்கு ஏன் பகிர்கின்றேன் எனில், ஐபிசி ஊடகம் மீது அம்பிகா அன்ரி வழக்கு போட்டிருப்பதாக வந்த செய்தியே. அம்பிகாஅன்ரி அரசியலுக்கு வரமுன்னர் யாரும் அவரை விமர்சிக்கவில்லை. அவர் அரசியலுக்கு வந்தபின்பே அதுவும் சுமந்திரன் மூலம் வந்தபடியால்தான் அதிகளவு விமர்சனங்கள் எழுந்தது. எனவே அவ்வாறான விமர்சனங்கள் தவறென்றால் அதற்கு உரிய பதில் அளிக்க வேண்டும். மாறாக வழக்கு போடுவதாக மிரட்டக்கூடாது. அம்பிகா அன்ரி இதனை உணர்ந்து செயற்படுவார் என நம்புவோமாக.

கடந்த வருடம் 25.08.2019 யன்று

கடந்த வருடம் 25.08.2019 யன்று இக் கருத்தை ஜேவிபி தலைவர் அனுரா அவர்கள் கூறியிருந்தார். ஆனால் இது இப்போது விக்கினேஸ்வரன் அவர்களுக்கு கூறிய கருத்து என்று சிலர் முகநூலில் பகிர்கின்றனர். அப்போதே இது குறித்து பதிவு செய்திருப்பினும் இப்போது அதனை மீண்டும் மீள்பதிவு செய்ய வேண்டியுள்ளது. •தோழர் அனுரா அவர்களே! இனங்கள் சமமாகவும் சமத்துவமாகவும் வாழ வேண்டும் என்று கோருங்கள். ஒத்துக் கொள்கிறோம் இனங்கள் ஜக்கியமாக வாழ வேண்டும் என்று கோருங்கள். ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் ஒருபுறம் பௌத்த இனவாதத்தை ஏற்றுக் கொள்ளும் நீங்கள் மறுபுறம் தமிழர் தம் வரலாற்றை கைவிட வேண்டும் எனக் கோராதீர்கள். ஏனெனில் எம்மிடம் எஞ்சி இருப்பது எமது வரலாறு மட்டுமே. அதையும் தொலைத்து விட்டால் அப்புறம் நாம் எப்படி எழுந்து நிற்க முடியும்?

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

•ஆசிரியர் தின வாழ்த்துக்கள் இந்தியாவில் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடுகிறார்கள். இலங்கையில் அடுத்த மாதம் (05.10.19) கொண்டாடப்படும்; என நினைக்கிறேன். ஆனால் எமது ஆசிரியர்களை ஒவ்வொரு நாளும் நாம் கொண்டாட முடியும். மாதா பிதா குரு தெய்வம் என்று பெற்றவர்களுக்கு அடுத்து கடவுளுக்கும் மேலாக ஆசிரியர்களை மதிப்பதும் எம் தமிழ் இனம் மட்டுமே! பொதுவாக ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுப்பார்கள் ஆனால் ஈழத்தில் ஆசிரியர்கள் பாதுகாப்பும் கொடுப்பார்கள். தன் உயிர் போனாலும் பரவாயில்லை தம் மாணவர் பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என்று நினைக்கும் அசிரியர்களைப் பெற்றதால்தான் எம் தமிழ் இனம் மீண்டும் கல்வியில் தலைநிமிர்கிறது. பாடசாலை பகிஸ்கரிப்பு செய்து பருத்தித்துறை பொலிசில் பிடிபட்டபோது ஓடி வந்து எம்மை மீட்ட காட்லிகல்லூரி அதிபரை மறக்க முடியுமா? பாடசாலையில் இருந்து அப்படியே இயக்கத்திற்கு சென்றுவிட்ட மாணவர்களின் சயிக்கிளை எடுத்துச் சென்று வீடுகளில் ஒப்படைத்ததோடு, பெற்றோருக்கு ஆறுதலும் கூறிய அந்த ஆசிரியர்களையும் மறக்க முடியுமா? தமிழ் ஆசிரியர்களின் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் தமிழ் மக்களின் போராட்டம் இந்தளவு வளர்ந்திருக்குமா? (மீள் பதிவு)

ஆழ்ந்த இரங்கல்கள்!

•ஆழ்ந்த இரங்கல்கள்! குட்டிமணி அவர்களின் மனைவி திருமதி இராச சொரூபராணி அவர்கள் காலமாகிவிட்டார். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள். குட்டிமணி தேடப்பட்ட காலத்தில் குட்டிமணியைவிட அதிகளவு சித்திரவதையை அனுபவித்தவர் அவரின் மனைவியே. ஒருமுறை குட்டிமணியைத் தேடிச் சென்ற பொலிஸ் ஒருவர் நிறைமாதக் கர்ப்பிணியான குட்டிமணியின் மனைவியைப் பார்த்து “ குட்டிமணி வீட்டுக்கு வருவதில்லையென்றால் நீ எப்படி கர்ப்பமானாய்? என்று அசிங்கமாக கேட்டு தவறாக நடக்க முற்பட்டார். இவ்வாறு நடந்துகொண்டவர் ஒரு தமிழ் பொலிஸ். பின்னர் அவர் குட்டிமணியால் சுட்டுக் கொல்லப்பட்டார். நல்லவேளையாக குட்டிமணியின் மனைவியும் பிள்ளைகளும் அகதியாக தமிழ் நாட்டுக்கு வந்துவிட்டனர். இல்லையேல் குட்டிமணியைக் கொன்றதுபோன்று அவரது மனைவியையும் குழந்தையையும் பொலிசார் கொன்றிருப்பார்கள். ஆனால் இவ்வாறு அர்ப்பணிப்பு செய்தவர்களின் மனம் நோகுமே என்ற சிந்தனைகூட இன்றி இவர்களின் போராட்டத்தை வன்முறை என்றும் அதனை தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் சுமந்திரன் கூறினார். சுமந்திரன் இவ்வாறு கூறிய பின்பும்கூட தன் கணவன் போராடச் சென்றது குறித்து குட்டி மணியின் மனைவி ஒருபோதும் வருத்தம் தெரிவிக்கவில்லை. குட்டிமணி மட்டுமல்ல தமிழ் மக்களும் பெருமை கொள்ள வைத்துள்ளார். அவருக்கு நன்றியுடன் விடை கூறுவோம்!

போராடும் புலம்பெயர் தமிழர்கள்!

•போராடும் புலம்பெயர் தமிழர்கள்! ஐந்து தமிழர்கள் கனடாவில் பிறம்டனில் இருந்து தலைநகர் ஒட்டோவா நோக்கி நடந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு ஐந்து தமிழர்கள் கோலண்டில் இருந்து ஐநா நோக்கி சயிக்கிளில் செல்ல ஆரம்பித்துள்ளார்கள். ஒருபுறம் கொரோனோ நெருக்கடி மறுபுறம் காலநிலை மற்றும் பல்வேறு நெருக்கடி. அத்தனைக்கும் நடுவில் புலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி போராடுகிறார்கள். இவர்களின் இந்த போராட்டம் இரண்டு பயன்களை தருகிறது. முதலாவது, இவர்கள் பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து நீதி கோருகிறார்கள். எனவே இது சர்வதேச கவனத்தையும் ஆதரவையும் பெறுகிறது. இரண்டாவது,தாயகத்தில் இருக்கும் மக்களுக்கு இந்த செய்தி நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்கிறது. இவற்றின் விளைவாக ஏற்படும் முக்கிய மாற்றம் என்னவெனில் தாயகத்திலும் புலத்திலும் ஈழத் தமிழர்கள் மீண்டும் எழந்துவிட்டார்கள் என்ற செய்தி தாய்த்தமிழகத்தில் இருக்கும் உறவுகளுக்கு செல்கிறது. எனவே இதன் மூலம் உலகத் தமிழினம் ஒன்றுபட்டு போராடும் வாய்ப்பு கனியப் போகிறது. சரி. உலகத் தமிழினம் ஒன்றுபட்டால் என்ன நடந்துவிடப் போகிறது? உலகெங்குமுள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே நம் இனப் பகைவர் எங்கோ மறைவார். இது உறுதி!

இந்தி தெரியாது போடா !

•இந்தி தெரியாது போடா ! செய்தி – ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அரங்கில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும். – உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி மூலம்தான் இந்தியாவை அடையாளப்படுத்த விரும்பினால் இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரித்து விடுங்கள். ஏனெனில் தமிழ்தான் தமிழ் நாட்டின் அடையாளம். தமிழ்தான் தமிழனின் அடையாளம் “எனக்கு இந்தி தெரியாது போடா” என்று ரீசேர்ட் அணிந்து தமிழ் உணர்வாளர்கள் பதில் அளித்துள்ளார்கள். அவர்களுக்கு எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும். குறிப்பு – ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் முதலில் அதன் மொழியை அழிக்க வேண்டும்.

வாருங்கள்

•வாருங்கள் இந்த அம்மாவைப் பற்றி கொஞ்சம் பேசுவோம்! ஒரு போராளியாக இருப்பது சுலபம். ஆனால் போராளியின் தாயாகவோ அல்லது மனைவியாகவோ இருப்பது மிகவும் கடினம். அதுவும் ஒரு போராளி சிறையில் இருக்கும்போது சிறைச் சோற்றை சாப்பிட்டுவிட்டு நிம்மதியாக தூங்கிவிடுவான். அது அவனுக்கு காலப்போக்கில் பழக்கமாகியும் விடும். ஆனால் அந்த போராளியை பெற்ற தாய் ஒவ்வெரு முறை சாப்பிடும்போதும் மகனுக்கு சாப்பாடு கிடைத்திருக்குமா சாப்பிட்டிருப்பானா என ஏக்கத்தில் தொண்டைக் குழிக்குள் உணவு இறங்காமல் கஸ்டப்படுவார். கொடுமை என்னவென்றால் வரலாறும்கூட போராளியைத்தான் நினைவு கூர்கிறதேயொழிய அவனின் தாயாரை குறித்து வைத்துக்கொள்வதில்லை. 27 வருடமாக இத்தகைய ஒரு கொடுமையை அனுபவித்துவரும் தாயாரே பேரறிவாளனின் அம்மா அவரின் பெயர் மட்டும் அற்புதம் அல்ல வாழ்வும்கூட அற்புதமாகவே இருக்கிறது. தன் மகனின் விடுதலைக்காக 27 வருடங்களாக அவரின் கால்கள் ஓயாமல் நடந்துகொண்டிருக்கின்றன. அவை ஒருபோதும் சோர்வடைந்து உட்கார்ந்ததில்லை. பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் கூறி இன்றுடன் இரண்டு வருடமாகிவிட்டது. ஆனால் இன்னும் பேரறிவாளன் விடுதலை செய்யப்படவில்லை. அதுமட்டுமல்ல அவரை ஒரு மாதம் பரோலில் விடுதலை செய்யுமாறு அற்புதம் அம்மாள் கேட்டும் அதற்கும் தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என்பார்கள். இங்கு பேரறிவாளனுக்கு நீதி மறுக்கப்படுவதற்கு ஒரே காரணம் அவர் ஈழத் தமிழரை ஆதரித்தது மட்டும் அல்ல இப்பவும் ஆதரிப்பதே. ஆனால் ஈழத் தமிழ் தலைவரான சம்பந்தர் ஐயாவும் சுமந்திரனும் பேரறிவாளனுக்கு நீதி மறுக்கப்படுவதை கண்டிக்கவில்லை. மாறாக கொஞ்சம்கூட இரக்கமின்றி “பயங்கரவாதிகள்” “வன்முறை” என்று என்னென்னமோ உளறிக் கொண்டிருகின்றனர். இத்தனைக்கு பிறகும்; இது குறித்து அற்புதம் அம்மாளிடம் கேட்டபோது அவர் கூறியது “ ஈழத் தமிழர்கள் எமது தொப்பள்கொடி உறவுகள். அவர்களை ஆதரிப்பது எமது கடமை. எனவே இதுவரை ஆதரித்தோம். இனியும் அதரிப்போம்” என்றார். ஆம். அதுதான் அற்புதம் அம்மாள்! தமிழருக்கு கிடைத்த பெருமைக்குரிய தாய்.

முதலில் புலிகள் எல்லாம் தமிழர் என்றார்கள்

முதலில் புலிகள் எல்லாம் தமிழர் என்றார்கள் பின்பு தமிழர் எல்லாம் புலிகள் என்றார்கள் அடுத்து புலிகள் பயங்கரவாதிகள் என்றார்கள் எனவே தமிழர் எல்லாம் பயங்கரவாதிகள் என்றார்கள். அதன்பின்பு பயங்கரவாதிகளை கொல்ல வேண்டும் என்றார்கள் எனவே கொல்லப்பட்டவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள் என்றார்கள். செம்மணியில் மாணவி கிருசாந்தியும் கொல்லப்பட்ட கதை இதுதான். குறிப்பு - இன்று மாணவி கிருசாந்தியின் 24வது நினைவு தினம் ஆகும்.

டி - சேர்ட் மூலம் தமிழை வளர்க்க முடியாது

டி - சேர்ட் மூலம் தமிழை வளர்க்க முடியாது என்று வானதி சீனிவாசன் கிண்டல் செய்துள்ளார். டி -சேர்ட் அணிந்தால் தமிழ் வளரும் என்று யாரும் அணியவில்லை. இந்தி ஆதிக்கத்திற்கான தமது எதிர்ப்பின் குறியீடாகவே இதனை செய்கின்றனர். ஆனால் மணி அடித்தால் கொரோனோ போய்விடும் என்று கூறியவருக்கு டி சேர்ட் அணிபவர்களை கிண்டல் செய்ய என்ன தகுதி இருக்கு? தமிழ் மக்களை முட்டாள்கள் என்று வானதி சீனிவாசன் நினைக்கவில்லை. மாறாக தமிழ் மக்கள் மூளையே இல்லாதவர்கள் என்று நினைக்கிறார்.

பௌத்த மதத்தையும்

பௌத்த மதத்தையும் சிங்கள இனத்தையும் மகிந்த ராஜபக்சா குடும்பத்தால் மட்டுமே காக்க முடியும் என நம்புவது இந்த மயிரால்தான் இந்த உயிரை காக்க முடியும் என்பது போலாகும். இந்த உண்மையை சிங்கள மக்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்கள்.

தோழர் மாஓசேதுங் நினைவு தினம்.

தோழர் மாஓசேதுங் நினைவு தினம். செப்-9, மாபெரும் ஆசான் தோழர் மாஓ சேதுங் அவர்களின் நினைவு தினமாகும். அவர் “மக்கள் சக்தியே மகத்தான சக்தி” என்றார் . “மக்கள் சக்தி அணுகுண்டை விட வலிமையானது” என்றார். “மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள் மக்களோடு சேர்ந்து உறங்குங்கள் மக்களோடு சேர்ந்து உழையுங்கள்” என்று போராளிகளுக்கு வழி காட்டினார். “துப்பாக்கி குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது” என்பதை சுட்டிக் காட்டினார். “மக்களை அணிதிரட்ட ஆயிரம் பொதுக் கூட்டங்களை விட கொரில்லா தாக்குதல் மேன்மையானது” என்றார். ஆயுதப் போராட்டத்தின் மூலம் புதிய ஜனநாயகப் புரட்சியை வென்று காட்டினார். பாட்டாளி வர்க்க சர்வாதிகார தலைமையில் கலாச்சாரப் புரட்சியை வழி நடத்தினார். “நூறு மலர்கள் மலரட்டும் ஆயிரம் கருத்துகள் முட்டி மோதட்டும்” என்றார். “மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை” என்றார். ” ஒரு புரட்சி என்பது மாலை நேர விருந்தோ, ஒரு கட்டுரை எழுதுவதோ, ஓவியம் தீட்டுவதோ, பூத்தையல் வேலைப்பாடோ அல்ல……….. ஒரு புரட்சி நிதானமுள்ளதாகவும் பொறுமை, கருணை, பெருந்தன்மையுள்ளதாக இருக்க முடியாது. புரட்சி என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தினை பலாத்காரமாக தூக்கி எறிவதாகும் " - மாவோ மாக்சிச லெனிச மாவோசிச சிந்தனையின் வழிகாட்டலில் புதிய ஜனநாயகப் புரட்சியை வென்றெடுப்போம்!

பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்- தோழர் லெனின்

பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்- தோழர் லெனின் இலங்கையின் பிரதான மணல் வியாபாரி பன்றி பாராமன்றத்தில் எம்.பி இலங்கையின் பிரதான் எத்தனோல்கார பன்றி பாராளுமன்றத்தில் எம்.பி பிரதான அரிசி மாபியாகார பன்றிகள் இரண்டு பாராளுமன்றத்தில் எம்.பி இலங்கையின் பிரதான போதைப்பொருள் வியாபார பன்றி பாராளுமன்த்தில் எம்.பி மத்திய வங்கியை சூறையாடிய பன்றிகள் மற்றும் பிரதான ரேஸ் புக்கிங்கார பன்றி எல்லாம் பாராளுமன்றத்தில் எம்பி இப்படி பன்றிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பினால் அவை என்ன செய்யும்? அவை ஆளை வெட்டியவனுக்கு எம்.பி பதவி கொடுத்துவிட்டு மாடு வெட்ட தடை என்று அறிவிக்கின்றன. கொடுமை என்னவென்றால் தான் சொல்லித்தான் பன்றிகள் மாடு வெட்ட தடை விதித்ததாக மறவன்புலவு சச்சிதானந்தம் என்ற எருமை பெருமை கொள்கின்றது.

உலகம் ஒரு நாடக மேடை

•உலகம் ஒரு நாடக மேடை அதில் இவர்கள் சிறந்த நடிகர்கள்! கடந்த ஏழு வருடமாக ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி இந்தியா முன்னேறாமைக்கு நேருவின் ஆட்சியே காரணம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதுபோல் கடந்த பதினொரு வருடமாக தமிழ் மக்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சுமந்திரன் “தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காமைக்கு புலிகளே காரணம்” என்கிறார். இது எப்படி இருக்கிறது என்றால் உனக்கு ஏன்டா பிள்ளை இல்லை என்று ஒருவனிடம் கேட்டபோது அவன் “என்ன செய்ய, பக்கத்து வீட்டுக்காரன் சரியில்லையே” என்று சொன்னது போல் இருக்கிறது. தெரிந்தே துரோகம் செய்பவர்களிடம் ஒருபோதும் நியாயம் கேட்கக்கூடாது. ஏனெனில் அவர்கள் செய்த துரோகத்தை நியாயப்படுத்த ஆயிரம் பதில்கள் வைத்திருப்பார்கள். ஆம். சுமந்திரன் தன் துரோகத்தை நியாயப்படுத்த வைத்திருக்கும் ஆயிரம் பதில்களில் ஒன்றுதான் இதுவரை தீர்வு கிடைக்காமைக்கு புலிகளே காரணம் என்பது. ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவோம் என்றவர், தீர்வு பெற்றுதரவில்லை என்றால் உடனே ராஜினாமா செய்வேன் என்றவர், இப்போது கூறுகிறார் “ முப்பது வருடமாக புலிகள் ஆயுதம் எந்திப் போராடிப் பெற முடியாததை நாம் எப்படி பத்து வருடத்தில் பெற முடியும்?” தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும் அவற்றை விரைவில் திருத்திக்கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும் என்று தோழர் லெனின் கூறினார். சுமந்திரனைப் பொறுத்தவரையில் அவர் தன் தவறுகளை உணரப்போவதுமில்லை. திருந்தப்போவதுமில்லை. எனவே அவரால் தமிழ் மக்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கப்போவதுமில்லை.

மங்கோலிய புத்த பிக்குவும் ஈழத்து சம்பந்தர் ஐயாவும்!

•மங்கோலிய புத்த பிக்குவும் ஈழத்து சம்பந்தர் ஐயாவும்! மங்கோலியா நாட்டில் 200 வருடங்களுக்கு முன்னர் உயிர் நீத்த புத்த பிக்கு ஒருவரின் உடலை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். நின்ற நிலையிலேயே ஆழ்ந்த தியானத்தில் உயிர் துறந்த பிக்குவின் உடல் இத்தனை வருடங்களாக கெட்டுப் போகாமல் இருப்பது ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. அந்த நாட்டின் காலநிலை மற்றும் உடலில் பூசப்பட்டிருக்கும் ஒருவகை வாசனைத் திரவியம் என்பன உடல் கெட்டுப் போகாமைக்கு காரணமாக இருக்கும் என நம்பப்படுகின்றது. ஆனால் அந் நாட்டு மக்கள் அவர் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதாகவும் வேளை வரும்போது கண்களை திறப்பார் எனவும் நம்புகிறார்கள். இவரது உடலுக்கு அருகில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. அது தமிழ் மொழியில் காணப்படுவதால் சோழ மன்னன் கல்வெட்டாக இருக்குமோ என சந்தேகம் உருவாகியுள்ளது. அந்த கல்வெட்டில் “ ஈழத் தமிழருக்கு சம்பந்தர் ஐயா தீர்வு பெற்றுக் கொடுத்த பின்பு என்னை எழுப்பிவிடுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. உடனே மங்கோலிய நாட்டு அரசு “சம்பந்தர் ஐயா எப்போது தீர்வு பெற்றுக்கொடுப்பார்?” என்று கூகுளில் தேடியது. “அடுத்த தீபாவளிக்கு தீர்வு கிடைக்கும்” என்று சம்பந்தர் ஐயா கூறியதாக உதயன் பத்திரிகை வெளியிட்ட செய்தி கூகுளில் கண்ட மங்கோலியர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். ஈழத்து தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்களோ இல்லையோ ஆனால் இப்போது மங்கோலிய மக்கள் அடுத்த தீபாவளி எப்போது வரும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பு- படித்து முடிந்ததும் சிரித்துவிட்டு கடந்து செல்லுங்கள். இது வெறும் நகைச்சுவைக்கான பதிவு மட்டுமே. (மீள் பதிவு)

இறப்பும் அதனால் எற்படும் இழப்பும் இயற்கையானதுதான்

இறப்பும் அதனால் எற்படும் இழப்பும் இயற்கையானதுதான். விரும்பியோ விரும்பாமலோ அதை நாம் எதிர் கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் இதுவரை நம் எல்லோரையும் சிரிக்க வைத்த ஒரு கலைஞன் சிகிச்சைக்கு பணம் இன்றி மரணித்தான் என்ற செய்தி தாங்க முடியாத துயரத்தை தருகிறது. எங்கிருந்தோ வந்த மராட்டிய நடிகருக்கு 120 கோடி ரூபா சம்பளம் வழங்கும் இந்த திரையுலகம் இப்படியான சிரிப்பு கலைஞர்களுக்கு சிகிச்சைக்குகூட பணம் வழங்குவதில்லை என்ற செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது. இதுவரை இவரைக் காணும்போது சிரிப்பு வந்தது. இனி ………..? மனம் கனக்கிறது. ஆழ்ந்த இரங்கல்.

தற்கொலை செய்வது கோழைத்தனம்

“தற்கொலை செய்வது கோழைத்தனம். கடைசிவரை எதிர்த்து நின்று முயற்சி செய்ய வேண்டும்” என சிறுவயது முதல் எமக்கு போதிக்கப்படுகிறது. இருப்பினும் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. புலிகள் இயக்கம் தற்கொலை தாக்குதல் செய்தபோது அதனை இலங்கை அரசு முதல் ஜ.நா வரை அனைவரும் கண்டித்தனர். ஆனால் இன்று வருடத்திற்கு சுமார் 3000 பேர் இலங்கையில் தற்கொலை செய்கின்றனர். இது குறித்து இலங்கை அரசும் கவலைப்படவில்லை. ஜ.நா வும் அக்கறை கொள்ளவில்லை. கடந்த ஆண்டு இலங்கையில் 2586 ஆண்களும் 677 பெண்களும் தற்கொலை செய்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. யுத்த காலத்தில்கூட இந்தளவு தற்கொலைகள் நடக்கவில்லை. இன்று இது அதிகரித்துள்ளது. யுத்தம் முடிந்தால் பாலும் தேனாறும் ஓடும் என்றார்கள். ஆனால் மாறாக மக்கள் தற்கொலை செய்வதுதான் அதிகரித்துள்ளது. ஒருகாலத்தில் கல்வியில் முதன்மை மாவட்டமாக இருந்த யாழ் மாவட்டம் இன்று அதிகளவு சாராயம் விற்ற மாவட்டமாக விளங்குகின்றது. கேரளாவில் இருந்து கஞ்சா போதைவஸ்து மூட்டை மூட்டையாக தினமும் வந்து யாழ்ப்பாணத்தில் இறங்குகிறது. புலிகளுக்கு வந்த ஆயுதக் கப்பல்களை மடக்கி பிடித்த இலங்கை இந்திய அரசுகளால் போதைவஸ்து கடத்தும் வள்ளங்களை பிடிக்க முடியவில்லையாம். உண்மையில் அரசியல்வாதிகள் தங்களது சலுகைகள்மீது அக்கறை கொள்கினறனரேயொழிய மக்கள் நலன் மீது அக்கறை கொள்வதில்லை. இதில் இலங்கை ஆட்சியாளர் மீது முழு குற்றத்தையும் சுமத்திவிட முடியாது. எமது தமிழ் தலைவர்களுக்கும் பங்கு , பொறுப்பு இருக்கிறது. எமது தமிழ் தலைவர்கள் தமக்கு சொகுசு வாகனம் கேட்கும் அக்கறையில் ஒருசத வீதத்தைக்கூட மக்கள் நலனுக்காக கேட்பதில் காட்டுவதில்லை. குறிப்பு- இன்று 10.09.2020 தற்கொலை செய்து கொள்வதினை தடுப்பது தொடர்பிலான சர்வதேச தினமாகும். கிளிநொச்சியில் இரு காதலர்கள் கூட்டாக தற்கொலை செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன.

செப்-12 தியாகிகள் தினம்.

• செப்-12 தியாகிகள் தினம். தோழர்கள் அப்பு, பாலன் ஆகியோருக்கு வீர வணக்கம்! நக்சல்பாரி புரட்சியாளர்கள் நினைவு நீடூழி வாழ்க! வசந்தத்தின் இடி முழக்கம் தூரத்தில் கேட்கிறது என்று தோழர் மாவோ சேதுங் அவர்களால் வர்ணிக்கப்பட்ட நக்சல்பாரி எழுச்சியை தமிழகத்தில் தோற்றுவித்த தியாகிகளை நினைவு கூர்வோம். நக்சல்பாரி புரட்சித் தோழர்கள் அப்பு மற்றும் பாலன் நினைவுகள் நீடூழி வாழ்க. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள். அவர்களில் இருந்து எண்ணற்ற புரட்சியாளர்கள் முளைக்கிறார்கள். ஆம், தோழர்கள் அப்பு பாலன் வரிசையில் தோழர்கள் தமிழரசன் புலவர் கலியபெருமாள் என பல புரட்சியாளர்கள் தோன்றினார்கள். இனியும் தோன்றிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் புரட்சி என்னும் இலட்சியக் கனவு நிறைவேறும்வரை உருவாகுவார்கள். இது உறுதி. நாம் இழப்பதற்கு எதுவுமில்லை உயிரைத் தவிர. ஆனால் நாம் வெல்வதற்கு ஒரு உலகம் காத்து இருக்கிறது. இறுதி வெற்றி உறுதி எமக்கு!

பிரான்சில் “சொப்பன சுந்தரி”!

•பிரான்சில் “சொப்பன சுந்தரி”! பிரான்சில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் சிறுமி ஒருவர் பாடிய சொப்பனசுந்தரி பாடல் பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது. வொய்ஸ் கிட்ஸ் என்னும் பிரபல டிவி நிகழ்ச்சி ஒன்றில் கனிஷா என்ற தமிழ் சிறுமி பாடிய பாடலே இவ்வாறு பாராட்டைப் பெற்றுள்ளது. நிகழ்வின் நான்கு பிரெஞ்சு நடுவர்களும் எழுந்து நின்று சிறுமியை நன்கு பாராட்டியுள்ளனர். தன்னுடன் கூடவே தமிழ் மொழியையும் எடுத்துச் சென்று பெருமை சேர்க்கும் இச் சிறுமி மேலும் சிறப்படைய வாழ்த்துகள்.

இனி இந்திய அரசு என்ன செய்யப் போகிறது?

•இனி இந்திய அரசு என்ன செய்யப் போகிறது? 1984ல் அன்டன் பாலசிங்கம் மற்றும் சந்திரகாசனை “அமெரிக்க உளவாளிகள்” என்று கூறி இந்தியாவை விட்டு வெளியேற்றியது இந்திய அரசு. உடனே வரலாறு காணாத மக்கள் போராட்டம் தமிழ்நாட்டில் வெடித்தது. வேறு வழியின்றி வெளியேற்றியவர்களை மீண்டும் அழைத்துக் கொண்டது இந்திய அரசு. நான் அறிந்தவரையில் உளவாளிகள் என்று வெளியேற்றியவர்களை மக்கள் போராட்டம் காரணமாக மீண்டும் நாட்டிற்குள் வரவழைத்த ஒரே நாடு உலகில் இந்தியா மட்டுமே. அந்த வரலாற்று அற்புதத்தை ஈழத் தமிழர்களுக்காக நடத்தியவர்கள் தமிழ்நாட்டு தமிழர்களே. அதேபோன்று இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது இந்தியா முழுவதும் 5000க்கு மேற்பட்ட அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். இதுபற்றி கேட்டபோது “ஆலமரம் சரியும்போது சில புற்கள் நசுங்குவது இயற்கை” என்றார் ராஜிவ் காந்தி. ஆனால் அதே ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது ஒரு ஈழத் தமிழன் கூட கொல்லப்படவில்லை. ஒரு புல்லுக்கூட நசுங்கவில்லை. அப்போது இந்தியாவில் இரண்டு லட்சம் ஈழ அகதிகள் இருந்தார்கள். ஒரு ஈழத் தமிழனுக்குகூட ஆபத்து நேராமல் பாதுகாத்தவர்கள் தமிழகத்து தமிழர்களே. ராஜிவ் காந்தி கொலையை அடுத்து இனி ஈழத் தமிழருக்கு தமிழ்நாட்டில் ஆதரவு இருக்காது என்றார்கள். புலிகள் இயக்கத்தை தொடர்ந்து தடை செய்து வருகிறார்கள். பிரபாகரனை பயங்கரவாதி என்கிறார்கள். ஆனாலும் தமிழக மக்கள் மனங்களில் இருந்து ஈழத் தமிழருக்கான ஆதரவை நீக்க முடியவில்லை. எந்த பிரபாகரனை இந்திய அரசு தடை செய்கிறதோ அதே பிரபாகரன் படத்தின் முன்னிலையில் தமது திருமணத்தை நடத்துகின்றனர். இதோ இவர் படித்து பெற்றிருப்பது முனைவர் பட்டம். பார்த்த தொழில் பேராசிரியர். இவர் தனது திருமணத்தை பிரபாகரன் படத்திற்கு முன்னால் நடத்தி இந்திய அரசுக்கு பதில் அளித்துள்ளார். இனி இந்திய அரசு என்ன செய்யப் போகிறது? தம்பதிகளுக்கு எமது திருமண வாழ்த்துக்கள். ( மீள் பதிவு)

டிஜிட்டல் இந்தியா!

டிஜிட்டல் இந்தியா! ஒரு இஸ்லாமிய சவரத் தொழிலாளி வேலை தேடி உ.பி யிலிருந்து ஹரியானா சென்றிருக்கிறார். அவர் தனது வலது கையில் 786 என்று பச்சை குத்தி இருக்கிறார். அந்த ஒரே காரணத்திற்காக அவர் கையை துண்டாக அறுத்திருக்கிறார்கள் இந்து மத வெறியர்கள். மோடியின் ஆட்சியில் இந்தியாவில் மத வெறுப்பு எந்தளவு வளர்ந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று. அதேவேளை பிரதமர் மோடி நடிகை கங்கணாவுக்கு பத்து கமாண்டோ பொலிஸ் பாதுகாப்பை வழங்கியுள்ளார். விபச்சார ஊடகங்களும் நடிகை கங்கனாவைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றன.

சுமந்திரன் பாவநாசம்!

•சுமந்திரன் பாவநாசம்! நல்லாய் கேட்டுங்க, கனடாவில் இருந்து வந்த காசு எங்கேயென்று கேட்பாங்க உடனே மானநஸ்ட வழக்கு போடனும் கவனமாய் கேட்டுங்க, கள்ளவாக்கு சுமந்திரன் என்று கத்துவாங்க. உடனே வழக்கு போடுவேன் என்று மிரட்டனும். இறுதியாக, தீர்வு எங்கேயென்று கேட்பாங்க. எதற்கும் பதில் சொல்லக்கூடாது. உடனே ஓடினனும். சரியா?

ஓடமுடியாதவர்கள் நடக்க வேண்டும்

ஓடமுடியாதவர்கள் நடக்க வேண்டும். நடக்க முடியாதவர்கள் தவழ்ந்தாவது செல்ல வேண்டும். ஆம். அனைவரும் இலக்கை நோக்கி இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் நீதிக்கான நெடும் பயணம் பத்தாவது நாளில் 308 கி.மீ தூரத்தை கடந்துள்ளனர். கனடாவில் பிறம்டன் நகரில் இருந்து ஒட்டோவா நோக்கி இவர்கள் நடந்து செல்கிறார்கள். அவர்கள் தம் இலக்கை நிச்சயம் அடைவார்கள். ஏனெனில் போராட்டம் ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை.

வெல்லும்வரை வீண் முயற்சி என்று இகழ்வார்கள்

•வெல்லும்வரை வீண் முயற்சி என்று இகழ்வார்கள் வென்றபின்பு விடா முயற்சி என்று பாராட்டுவார்கள் 11 வருடமாக நடக்கிறார்கள். சயிக்கிளில் ஓடுகிறார்கள் என்ன பயன் கண்டார்கள்? என சிலர் கிண்டலாக கேள்வி கேட்கின்றனர். இன்று வீண் முயற்சி என்று கிண்டல் அடிப்பவர்கள் வென்றபின்பு விடா முயற்சி என்று பாராட்டுவார்கள். அது சரி. ஆனால் இவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று எப்படி கூறுகின்றீர்கள் என அந்த சிலர் கேட்பார்கள். ஓட முடியாதவர்கள் நடப்பார்கள். நடக்க முடியாதவர்கள் தவழ்ந்து செல்வார்கள். ஆனால் இலக்கை அடையும்வரை அனைவரும் நகர்ந்துகொண்டே இருப்பார்கள். தமிழ் மக்கள் தமது இலக்கை நிச்சயம் அடைவார்கள் ஏனெனில் அதற்காக அவர்கள் பல வழிகளில் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று நாம் அவர்களுக்கு கூறலாம். ஆனால் இதை அந்த சிலரால் புரிந்துகொள்ள முடியாது. எனவே அந்த சிலர் தொடர்ந்தும் என்ன பயன் என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு நாம் சொல்லும் எளிய பதில் “ தமிழ் மக்கள் தமக்கான நியாயத்தை பெறுவதற்காக சர்வதேச மக்களிடம் செல்கின்றனர்”. மக்களிடம் செல்லும் எவரையும் மக்கள் ஏமாற்றியதில்லை. இரண்டு நாட்களில் 40 அயிரம் மக்களை கொன்று புதைத்தால் ஈழத் தமிழ் இனம் போராட்டத்தை கைவிட்டு அடிமையாக கிடக்கும் என இலங்கை இந்திய அரசுகள் நினைத்தன. ஆனால் கடல் கடந்து போனாலும் தம் உறவுகளுக்காக தமக்கு தெரிந்த வழியில் தம்மால் இயன்ற போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்பதை புலம்பெயர்ந்த தமிழர்கள் காட்டி வருகின்றனர். தாம் வாழும் நாடுகளில் அவர்கள் மக்களை சந்தித்து தமக்கான நியாயத்தை கேட்டு வருகின்றனர். மக்களே , மக்கள் மட்டுமே வரலாற்றை படைக்கிறார்கள். தலைவர்கள் அல்ல. எனவே தமிழ் மக்களும் தமக்குரிய வரலாற்றை நிச்சயம் படைப்பார்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

எழுக தமிழ்!

• எழுக தமிழ்! “எழுக தமிழ்” என்று கூறும்போது சிலர் “தமிழ் என்ன வீழ்ந்தா கிடக்கிறது?” என்று நக்கலாக கேட்கிறார்கள். இதில் ஆச்சரியம் இல்லை. தமிழன் எழும் போதெல்லாம் இப்படி கேட்டவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை வரலாறு படித்தவர்களுக்கு தெரியும். ஆனால் அவர்களையும் தாண்டி தமிழ் இனம் எழுந்து நின்றது என்பதே சரித்திரத்தில் வீரம் செறிந்த வரலாறாக இருக்கிறது. வீழ்வது அவமானம் இல்லை. எழுந்து நிற்க முயலாமல் வீழ்ந்தே கிடப்பதுதான் அவமானம். இதை தமிழ் மக்கள் நன்கு புரிந்திருக்கிறார்கள். எனவேதான் அவர்கள் மீண்டும் எழுந்து நிற்க முயல்கிறார்கள். நூறு வருடம் போத்துக்கேயரின் கீழு; வீழ்ந்து கிடந்தார்கள். ஆனால் நூறாவது வருடம் அவர்கள் எழுந்து நின்றார்கள் என்பதே வரலாறு. நூறு வருடம் ஒல்லாந்தரின் கீழ் விழுந்து கிடந்தார்கள். ஆனால் நூறவது வருடம் அவர்கள் எழுந்து நின்றார்கள் என்பதே வரலாறு. நூற்றிஜம்பது வருடம் ஆங்கிலேயரின் கீழ் விழுந்து கிடந்தார்கள். ஆனால் நூற்றிஜம்பதாவது வருடம் அவர்கள் எழுந்து நின்றார்கள் என்பதே வரலாறு. வரலாறு முழுவதும் விழுந்தபோதெல்லாம் எழுந்து நின்ற இனமே ஈழத் தமிழ் இனம். இப்போது எழுபது வருடமாக இலங்கை அரசின் கீழ் வீழ்ந்து கிடக்கிறார்கள். எனவேதான் தமிழ் மக்கள் எழுந்து நிற்க முயல்கிறார்கள். எனவே அந்த இனம் மீண்டும் எழுந்து நிற்க முயல்வது ஆச்சரியம் இல்லை. மாறாக எழுந்து நிற்காவிட்டால்தான் ஆச்சரியம்.

கருத்து மக்களை பற்றிக் கொண்டால்

கருத்து மக்களை பற்றிக் கொண்டால் அது பௌதீக சக்தி பெற்றுவிடும் - மாசே துங் பயங்கரவாதிகள் என்றார்கள் பயங்கரவாத இயக்கம் என்றார்கள் பயங்கரவாதிகளின் கொடி என்று அதையும் தடை செய்தார்கள் எந்த நாடுகள் தடை செய்தனவோ அந்த நாடுகளில் மக்கள் அதை உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்துள்ளனர். ஆம். மக்களை நம்புபவர்களை மக்கள் ஒருபோதும் ஏமாற்றுவதில்லை. மக்களிடம் செல்லும் கருத்துகள் அரசுகளையே புரட்டி எறியும் மாபெரும் சக்தி பெறுகின்றன.

பூணூல் நீதி

•பூணூல் நீதி! இந்திய தேசியக்கொடியை அவமதித்த எஸ்.வி. சேகருக்கு மன்னிப்பு இந்திய உயர்நீதிமன்றத்தை அவமதித்த எச்ச ராஜாவுக்கு மன்னிப்பு ஆனால் மாணவருக்காக நீட்டை எதிர்த்து குரல் கொடுத்த சூரியாவின் மேல் அவமதிப்பு வழக்கு? இதுதான் இந்திய நீதி!

திலீபன் மரணம்

•திலீபன் மரணம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன? திலீபன் ஆயுதம் ஏந்திய போராளி. அவர் ஆயுதப் போராட்டத்தில் மரணித்திருந்தால் மடிந்த ஆயிரக்கணக்கான போராளிகளில் ஒருவராக இருந்திருப்பார். ஆனால் அவர் அகிம்சைப் போராட்டத்தில் மரணித்தார். அதனால் அவரது மரணம் எமக்கு சில பாடங்களை கற்றுக் கொடுக்கிறது. எல்லா போராளிகளின் மரணங்களும் ஏதோ ஒரு வகையில் எமக்கு வரலாற்றுப் பாடங்கள்தான். ஆனால் திலீபன் மரணம் கூடவே சில படிப்பினைகளையும் கற்றுத் தந்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் திலீபன் பெயர் உச்சரிக்கப்படும்போதும் பின்வரும் விடயங்களையும் நாம் கற்றுக்கொள்ளதான் போகிறோம். • அகிம்சைப் போராட்டதின் மூலம் எந்த தீர்வையும் பெற முடியாது. • அகிம்சைப் போராட்டத்தை இலங்கை அரசு மட்டுமல்ல காந்தியின் தேசம்கூட மதிக்காது. • இந்திய அரசை ஈழத் தமிழர்கள் ஒருபோதும் நம்பக்கூடாது. • இந்தியாவில் இருந்து வந்தது அமைதிப்படை இல்லை. அது ஆக்கிரமிப்பு படை. திலீபன் ஒரு புலி உறுப்பினர். அதனால்தான் இந்திய அரசு அவரது அகிம்சைப் போராட்டத்திற்கு மதிப்பு அளிக்கவில்லை என சிலர் காரணம் கூறுகிறார்கள். அவர்களிடம் நாம் கேட்க விரும்புவது “ அப்படியென்றால் அன்னை பூபதி யின் அகிம்சைப் போராட்டத்தை ஏன் இந்திய அரசு மதிக்கவில்லை?” ஆக திலீபன் தன் மரணத்தின் மூலம் எமக்கு எதை கற்றுத் தந்தாரோ அதையே அன்னை பூபதியும் உறுதிப் படுத்தியுள்ளார். ஆம். அகிம்சைப் போராட்டம் மூலம் எதையும் நாம் பெற முடியாது. அகிம்சைப் போராட்டத்தை இந்திய அரசும் மதிக்காது

தோழர்!

•தோழர்! நான் “தோழர்” என்று அழைப்பதற்குரிய தகுதியை இழந்து வெகு காலமாகிவிட்டது என்று இலங்கையில் இருக்கும் பெண் ஒருவர் கூறியுள்ளார். இதை ஒரு சாதாரண பெண் கூறியிருந்தால் நான் பொருட்படுத்தியிருக்கமாட்டேன். ஆனால் அவர் நான் பெரிதும் மதிக்கும் தோழர் செந்தில்வேல் அவர்களின் புரட்சிகர கட்சியில் தான் உறுப்பினராக இருப்பதாக கூறுகிறார். எனவே அவரிடம் நான் “ எப்போதிருந்து நான் தகுதியை இழந்தேன். ஏன் இழந்தேன்? “ என்று கேட்டேன். ஏனெனில் சில மாதங்களுக்கு முன்னர்கூட இன்பொக்சில் என்னை தோழர் என்று அழைத்து நன்றி கூறியிருந்தார். ஆனால் அவர் அதற்கு பதில் அளிக்கவில்லை. மாறாக நான் அம்பிகா அன்ரியை அவதூறு செய்துவிட்டேன் என்று குற்றம் சுமத்தினார். “சரி. அப்படியா? அம்பிகா அன்ரியை நான் செய்த அவதூறு என்ன?”என்று கேட்டேன் அதற்கு அவர் “அம்பிகாவை அன்ரி என்று எழுதுவது அவதூறு. ஆண்களை மாமா என்று அழைப்பது எப்படி கேவலமோ அதேபோன்று பெண்களை அன்ரி எழுதுவதும் அவதூறு” என்றார். அப்படியென்றால் நேருவை மாமா என்று சிறுவயதில் பாடசாலையில் சொல்லித்தந்தது அவரைக் கேவலப்படுத்தவா? என்று கேட்டேன். அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. மாறாக ஐபிசி மீது அம்பிகா அன்ரி வழக்கு போட்டு மிரட்டக்கூடாது என்று நான் எழுதியது தவறு என்கிறார். இதே ஐபிசி என்மீதும் அவதூறு செய்தது. அப்போது நான் வழக்குபோடவில்லை. மாறாக அவர்கள் தவறை சுட்டிக் காட்டினேன். அதேபோல் அம்பிகா அன்ரியும் வழக்குபோடாமல் விமர்சனத்திற்கு பதில் அளிக்க வேண்டும் என்று கோரினேன். ஏனெனில் சுமந்திரனும் தன்மீதான விமர்சனங்களுக்கு வழக்கு போடுவதாக மிரட்டுகிறார். என்னைப் பொறுத்தவரையில் அரசியல்வாதிகள் வழக்கு போடுவதை ஆதரிப்பது என்பது காலப்போக்கில் கருத்துச் சுதந்திரத்திற்கே பாதகமாய் முடியும் என்பதே. இன்னொருவர் என்னை பெண்கள் மீது எப்போதும் வெறுப்பு கொண்ட மார்க்சிச கபடதாரி என்று எழுதியுள்ளார். இவரை நான் லண்டனில் சந்தித்தபோது மார்க்சி;ன் வரலாற்று ஆங்கில நூல் ஒன்றை படித்தக்கொண்டிருந்தார். நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். உடனே அவர் “எனக்கு மார்க்சை ரொம்ப பிடிக்கும்”என்றார். “அப்படியா? மார்க்சின் எந்த கருத்து உங்களுக்கு பிடிக்கும்?” என்று கேட்டேன். அதற்கு அவர் “ மார்க்ஸ் குடித்த பியர் பிராண்ட்; எனக்கும் பிடிக்கும்” என்றார். சத்தியமாக சொல்கிறேன். அதற்கு பிறகு இதுவரை நான் அவருடன் மார்க்சிசம் குறித்து பேசியதே கிடையாது. ஸ்டாலின் கொலைகாரன், மாவோ கொலைகாரன் என்றெல்லாம் சதா பேசிக் கொண்டிருக்கும் இவர் என்னை மார்க்சிச கபடதாரி என்று கூறுவதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் மூப்பனார் வீட்டு திருமணத்தில் 600 ரூபாய்க்கு டான்ஸ் ஆடிய ஜெயா அம்மையாருக்கு 45ஆயிரம் கோடி சொத்து எப்படி வந்தது? என்று நான் எழுதியது தவறு என்றும் இது ஆணாதிக்க சிந்தனை என்றும் கூறுகின்றார். சரி. இந்த உண்மையை ஆணாதிக்க சிந்தனை இல்லாமல் எப்படி எழுதுவுது என்று கேட்டேன். அதற்கு இதுவரை பதில் இல்லை. இவர்களைப் பொறுத்தவரையில் அம்பிகா அன்ரி, ஜெயா அம்மையார் மீது காட்டும் அக்கறையை அவர்களால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிப் பெண்கள் மீது காட்டுவதில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் சம்பந்தப்பட்டவர் எமது நட்பு சக்தியாக இருந்தால் பூனை தன் குட்டியைக் கவ்வுவதுபோல் அவர்மீதான விமர்சனம் இருக்கும். அதுவே எதிரியாகவோ அல்லது துரோகியாகவோ இருந்தால் புலி தன் இரையைக் கவ்வுவது போல் இருக்கும். அவ்வளவுதான். நான் “தோழர்” என்று போட்டுக்கொள்வதற்கு யார் யாரிடமெல்லாம் அனுமதி பெற வேண்டி இருக்கிறது? குறிப்பு - நாம் நோயுடன்தான் போராட வேண்டும். மாறாக நோயாளிகளுடன் அல்ல. எனவேதான் சம்பந்தப்பட்ட பெண் பெயரை தவிர்த்துள்ளேன்.

திலீபனுக்கு அஞ்சலி செலுத்த உரிமை இல்லையா?

திலீபனுக்கு அஞ்சலி செலுத்த உரிமை இல்லையா? திலீபனுக்கு அஞ்சலி செலுத்த யாழ் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. திலீபனுக்கு அஞ்சலி செலுத்த முயன்ற முன்னாள் பாராளுமன்ற மற்றும் மகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. திலீபன் அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து இறந்தாலும் அவர் பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் என்பதால் அனுமதி தர முடியாது என இலங்கை அரசின் சார்பில்; பொலிசார் தெரிவித்துள்ளனர். இறந்த ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதை தடுக்க முடியாது என்று சட்டம் கூறுகிறது. இருந்தும் பொலிசார் தடுக்கின்றனர். சரி. பரவாயில்லை. ஆனால் ஜேவிபி தலைவர் ரோகண விஜேயவீராவும் பயங்கரவாதி என்றுதான் இலங்கை அரசு சுட்டுக் கொன்றது. ஆனால் ரோகன விஜேயவீராவுக்கு சிலை எழுப்பவும் வருடம்தோறும் அஞ்சலி செலுத்தவும் அனுமதி வழங்கும் இலங்கை அரசு திலீபனுக்கு அஞ்சலி செலுத்த ஏன் தடை விதிக்கிறது? ஏனெனில் ரோகண விஜேயவீரா சிங்கள இனத்தை சேர்ந்தவர். திலீபன் தமிழ் இனத்தை சேர்ந்தவர். இதைவிட வேறு என்ன காரணம் இருக்கிறது? இனப் படுகொலை செய்த இலங்கை அரசு அஞ்சலி செலுத்துவதையும் இனவாதக் கண்ணோட்டத்துடனேயே அணுகுகின்றது. இதனை சுட்டிக்காட்டி இலங்கை அரசைக் கண்டிக்க வக்கற்ற சிலர் திலீபனை கொலைகாரன் என்று எழுதி இலங்கை அரசுக்கு கூட்டிக் கொடுக்கும் வேலையை செய்கின்றனர்.

புலிகளை பயங்கரவாதிகள் என்றார்கள்

புலிகளை பயங்கரவாதிகள் என்றார்கள் புலிகள் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றவர்கள் என்றார்கள் புலிகள் தமிழ் சிறுவர்களை படையில் சேர்த்தார்கள் என்றார்கள் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டார்கள் என்றார்கள் எனவே புலிகளிடம் இருந்து தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காகவே யுத்தம் செய்தோம் என்றார்கள். தமிழ் மக்களுக்காகவே பல்லாயிரக்கணக்கான சிங்கள ராணுவ வீரர்கள் தம் உயிரை அர்ப்பணித்தார்கள் என்றார்கள். அப்படியென்றால் தமிழ் மக்கள் சிங்கள ராணுவ வீரர்களை அல்லவா நினைவு கூர வேண்டும். ஏன் திலீபனை நினைவு கூர்கிறார்கள்.? திலீபனை நினைவு கூர்வதை ஏன் சட்டம் மற்றும் அதிகாரம் கொண்டு தடுக்க வேண்டும்? சிவாஜிலிங்கம் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்தியது தவறு என்கிறார்கள் ஈழம் என்பது இலங்கையின் மறுபெயர். பல வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழீழம் என்பதே தனிநாட்டையும் பிரிவினையையும் குறிக்கும். தமிழீழம் என்ற வார்த்தைக்கூட அவர் பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறார். அவருடைய கட்சியின் பெயர் தமிழீழவிடுதலை இயக்கம். இது இலங்கை அரசில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்தக் கட்சியின் சார்பில் அவர் பாராளுமன்றத்தில் எம்.பி யாக இருந்திருக்கிறார். மாகாணசபையில் உறுப்பினராக இருந்திருக்கிறார். அப்பவெல்லாம் மௌனமாக இருந்துவிட்டு இப்ப இதை எல்லாம் ஒரு காரணமாக கூறுவது எதற்காக? எதோ ஒரு வடிவத்தில் தமிழர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன? குறிப்பு – சிவாஜிலங்கம் சிங்கள மக்களின் மனதை புண் படுத்துகிறார். அவர் பக்குவாக நடந்துகொள்ள வேண்டும் என்று இன்னும் நம்மவர்கள் எழுதவில்லையா?

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில்

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் பெரியாரை நினைவு கூர ஒரு முக்கியமான விடயம் உண்டு. தந்தை செல்வநாயகமும் அமிர்தலிங்கமும் பெரியாரை சந்தித்து ஈழத் தமிழர் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டபோது “ நாமே இங்கு அடிமையாக இருக்கிறோம். உங்களுக்கு எப்படி ஆதரவு தருவது?” என்று அவர் கேட்டார். கலைஞர் எதிர்க்கட்சியில் இருக்கும்போது தமிழீழத்தை ஆதரிப்பார். ஆனால் ஆட்சியில் இருக்கும்போது மத்திய அரசின் நிலைப்பாடே தனது நிலைப்பாடு என்று ஏமாற்றுவார். ஆனால் பெரியார் அவ்வாறு ஈழத் தமிழர்களை ஏமாற்றவில்லை. அவர் உண்மையைக் கூறினார். பெரியார் தந்தை செல்வா அமிர்தலிங்கம் ஆகியோரிடம் மட்டும் இதைக் கூறவில்லை. தான் சந்தித்தபோதும் தன்னிடமும் இதையே கூறினார் என்று மாணவர் பேரவைத் தலைவர் சத்தியசீலன் என்னிடம் கூறினார். நாம் அறிந்தவரையில் பெரியாருக்கு பிறகு இந்த உண்மையை கூறிய இன்னொரு தலைவர் தோழர் தமிழரசன்தான். ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும் என்று அவர் தெளிவாக கூறினார்.

நடந்தது இனப்படுகொலை அல்ல.

நடந்தது இனப்படுகொலை அல்ல. வெறும் போர்க்குற்றம்தான் என்று சுமந்திரன் சொல்லிட்டாரே என்று ஏன் தம்பி நெகட்டிவ்வாக பார்க்கிறே இறந்தவர்கள் யாரும் கொல்லப்படவில்லை. அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று அவர் சொல்லவில்லையே என்று பாஸிடிவா நினைச்சு பாரேன் தம்பி. குறிப்பு- சுமந்திரனை ஏன் எப்போதும் நெகட்டிவ்வாக பார்க்கிறீர்கள். பொஸிட்டிவாக ஒரு முறை பாருங்களேன் என ஒருவர் இன்று என்னிடம் கேட்டுக்கொண்டார். அவருக்காக ஒருமுறை நினைத்து பார்த்ததே இது.

திலீபனை நினைவு கூர்பவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்

செய்தி - திலீபனை நினைவு கூர்பவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் - சிங்கள அமைச்சர். வெற்றியை விட பெருசா ஒன்னு இருக்குதுன்னா அது எதிரிகளுக்கு நாம குடுக்கிற நடுக்கம்தான்.

பாலைவன சிங்கம் ஒமர் முக்தார்

பாலைவன சிங்கம் ஒமர் முக்தார் தூக்கில் இடப்பட்ட நாள் இன்று! (16.09.1931) “இரண்டு உயர்ந்த நிலைகளில் ஏதாவது ஒன்றை அடையாமல் நான் இங்கிருந்து போக மாட்டேன். ஒன்று வெற்றி. மற்றது வீரமரணம்” - லிபிய நாட்டு விடுதலை வீரர் ஒமர் முக்தார்

ஈழத் தமிழர்கள் சார்பாக அஞ்சலிகள்!

•ஈழத் தமிழர்கள் சார்பாக அஞ்சலிகள்! பாவலரேறு பெருஞ்சித்pரனார் அவர்களின் மகளும் சொல்லாய்வறிஞர் அருளி அவர்களின் மனைவியுமான தழல் தேன்மொழி அவர்கள் 14.09.2020யன்று மரணமடைந்துள்ளார். தழல் தேன்மொழி அவர்கள் தமிழ் மொழி மீதும் தமிழர்கள் மீதும் அன்பும் ஆதரவும் கொண்டவர் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் அவர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 26 தமிழர்கள் மீதான தூக்குத் தண்டனை நீக்கத்திற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் தன் கழுத்தில் இருந்த அந்த ஒற்றைத் தாலிக்கொடியையும் திடுமெனத் தன் முடிவாகக் கழற்றி நன்கொடையாய்க் கொடுத்தவர் என்பது பலர் அறியாதது. ராஜிவ் காந்தியைக் கொன்றவர்கள் பயங்கரவாதிகள் என்றும் அதனால் இனி தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவு இல்லை என்று பிரச்சாரம் செய்யப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் இவர் அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேரின் விடுதலைக்காக தன் தாலிக் கொடியை கழற்றி நன்கொடை செய்துள்ளார். இப்படிப்பட்டவர்களின் அர்ப்பணிப்பே ஈழத் தமிழர்களுக்கான தமிழக தமிழர்களின் ஆதரவை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது என்ற உண்மை வெளி உலகிற்கு தெரிய வந்தது. நெருக்கடியான அந்த காலகட்டத்தில் தழல் தேன்மொழி போன்றவர்கள் தந்த ஆதரவும் உதவியும் ஈழத் தமிழர்களால் என்றுமே மறக்க முடியாதது. அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பில் அஞ்சலிகள்.

ஜீன் 15ம் திகதி 20 இந்திய ராணுவத்தினரை சீனா எல்லையில் கொன்றது.

ஜீன் 15ம் திகதி 20 இந்திய ராணுவத்தினரை சீனா எல்லையில் கொன்றது. ஜீன் 19ம் திகதி சீனா வங்கியிடம் இந்தியா 9000 கோடி ரூபா கடன் வாங்கியுள்ளது. அதுவும் ஒருமுறை அல்ல இரண்டு தவணைகளில் பெற்றுள்ளது. ஆனால் ஜீலை 29ம் திகதி இந்திய அரசு 59 சீனா அப்ஸ்களை தடை செய்துள்ளது. ஒரு அடி நிலத்தைக்கூட சீனா கைப்பற்ற நாம் அனுமதிக்கவில்லை என பிரதமர் மோடி கூறினார். ஆனால் 38000 சதுர கிலோ மீற்றர் பரப்புள்ள நிலத்தை சீனா கைப்பற்றிவிட்டது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் இப்போது ஒத்துக்கொள்கிறார். அதாவது கிட்டத்தட்ட கேரள மாநில நிலப்பரப்பை இந்தியா சீனாவிடம் இழந்துள்ளது. ஆனால் இந்திய பிரதமரோ மயிலுக்கும் வாத்துக்கும் தீனி போட்டு போட்டோ பிடிப்பதில் அக்கறையாக இருக்கிறார். இந்த விபரங்களை அறியாமல் ஈழத்து ஆய்வாளர் ஒருவர் சீனா ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழீழம் எடுக்க இந்திய அரசு உதவப்போகிறது என்று எழுதிக் கொண்டிருக்கிறார். இலவு காத்த கிளி!

தடை அதை உடை !

தடை அதை உடை ! யாழ்ப்பாணத்தில் திலீபனை நினைவு கூர்வதை இலங்கை அரசு தடை செய்துள்ளது. தடை போட்டால் அதை உடைப்போம் என்கிற மாதிரி உலகெங்கும் திலீபனை நினைவு கூர ஆரம்பித்துவிட்டார்கள் தமிழ் மக்கள். அந்த வகையில் ஜெர்மனியில் ஸ்ரூட்காட் நகரத்தில் திலீபன் நினைவு கூரப்பட்டுள்ளார். அதில் தமிழ் இளையவர்கள் மட்டுமன்றி வெள்ளை இனத்தவர்களும் பங்கு பற்றியுள்ளனர். எனவே திலீபனை உலகெங்கும் பலரும் நினைவுகூர வழி சமைத்த இலங்கை அரசுக்கு நன்றிகள்.

சிங்கம் மானைக் கொல்வது தவறு அல்ல

சிங்கம் மானைக் கொல்வது தவறு அல்ல. மாறாக மான் தப்பி ஓடுவதே தவறு. இதுதான் காட்டில் சிங்கத்தின் நீதி. அதேபோல் சிங்கள அரசு தமிழ் மக்களை கொல்வது தவறு அல்ல. மாறாக தமிழர்கள் அதற்கு எதிராக போராடுவது பயங்கரவாதம். இதுவே சிங்கள அரசின் நீதி. சரி. பரவாயில்லை. ஆனால் ஒரேயொரு கேள்விக்கு மட்டும் பதில் தாருங்கள். பயங்கரவாதி என்று கொல்லப்பட்ட ரோகண விஜேயவீராவுக்கு எப்படி நினைவுகூர அனுமதிக்கிறீர்கள். ரோகண விஜேயவீரா உங்கள் நீதிப்படி “தியாகி” ஆகிவிட்டாரா? போங்கடா நீங்களும் உங்கட நியாயமும்

யோவ் யாரைய்யா அது

யோவ் யாரைய்யா அது பக்கத்தில ஆடாமல் அசையாமல் பிணம் போல இருக்கிறது? அவரு பேரு சம்பந்தர் ஐயா. கோத்தபாயா ஆட்சி முடியிற வரைக்கும் அவர் அப்படித்தான் இருப்பாரு.

கோர்ட்டாவது மயிராவது!

•கோர்ட்டாவது மயிராவது! நீதிபதி – கைதி எப்படி இறந்தார்? சிறை அதிகாரி – கரண்ட் வயரை கடித்து இறந்தார். நீதிபதி – அப்படியா? சரி அந்த சிசிடிவி கமரா பதிவகள் எங்கே? சிறை அதிகாரி – அப்போது கரண்ட் இல்லை. அதனால் அவை வேலை செய்யவில்லை. நீதிபதி - ???? இது ஒரு நகைச்சுவை ஜோக்தான். ஆனால் உண்மையில் நடந்தது இதைவிட மோசமானது. சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த ராம்குமார் கொல்லப்பட்ட நாள் இன்று. இதுவரை சுவாதி வழக்கு உண்மைகள் வெளிவரவும் இல்லை. ராம்குமார் மரணத்திற்கும் நீதி கிடைக்கவும் இல்லை. நான் மதுரை சென்னை சிறைகளில் எட்டு வருடங்கள் இருந்திருக்கிறேன். எந்த சிறையிலும் கைதிக்கு எட்டும் வகையில் கரண்ட் வயர் தொங்கியதை கண்டதில்லை. ஆனால் ராம்குமார் அறையில் மட்டும் அவருக்கு எட்டும் வகையில் கரண்ட் வயர் தொங்கியதாம். ஏனோ தெரியவில்லை. சிதம்பரம் , கனிமொழி சசிகலா போன்றவர்கள் இருந்த சிறை அறைகளில் வயர் தொங்குவதில்லை.

என்ன ஊரய்யா இது?

என்ன ஊரய்யா இது? நான் இப்ப என்ன தப்பாய் கேட்டிட்டன்? நாலு கக்கூசு கட்ட காசு கேட்டது தவறா? அதுக்குப்போய் இப்படியா வேட்டியை உரிஞ்சு விரட்டுவது? பத்து வருசமாய் எம்பியாய் இருந்தவன் பத்து கக்கூசு கட்டவே அரசிடம் பணம் பெற முடியாதவன் எப்படியடா தீர்வு பெற்று தருவான் என்றுதானே நினைக்கிறியள். கனடா காசுக்கு கணக்கு கேட்கிறியள் கண்டவுடன் “கள்ளவாக்கு” என்று கத்திறியள் விடுங்கடா நானும் ஒரு ஓரத்தில பிழைச்சிட்டு போறன்.

என்னே அவலம் இது?

•என்னே அவலம் இது? நேதாஜியின் படையில் சேர்ந்து இந்திய சுதந்திரத்திற்காக போரடிய முதியவர் ரெங்கசாமி மரணமடைந்துள்ளார். இவரின் மரண செய்தி ஊடகங்களில் வரவில்லை. ஆனால் சூரியா சுன்னத் செய்த முஸ்லிம் என்று காயத்திரி ரகுராம் கூறியது செய்தியாக அனைத்து ஊடகங்களிலும் வந்துள்ளது. இதுகூடப் பரவாயில்லை. ஆனால் இறந்த தியாகிக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று சங்கிகளுக்கு தோன்றவில்லை. மாறாக, திருப்பூரில் சில சங்கிகள் சூரியாவின் உருவப் பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். சூரியா அப்படி என்ன தப்பு பண்ணிட்டார்? தமிழ் மாணவர்களின் நலனுக்காக குரல் கொடுப்பது தவறா? அதுவும் பலலாயிரம் மாணவர்களின் கல்விக்கு உதவி செய்துவரும் சூரியாவுக்கு அம் மாணவர்களின் நலன் குறித்து குரல் கொடுக்க தகுதி இல்லையா? கைபர் கணவாய் ஊடாக தமிழகத்திற்கு பிழைக்க வந்தவர்கள் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழன் சோத்தை தின்னுகிட்டே தமிழனுக்கு எதிராக செயற்படுகிறார்கள். இவர்களுக்கு தக்க பதிலை அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

சிலரை அங்கீகரித்தார்கள்

சிலரை அங்கீகரித்தார்கள் சிலரை நிராகரித்தார்கள் சிலருக்கு எச்சரிக்கை வழங்கினார்கள் இதுவே தமிழ் மக்கள் தேர்தலில் வழங்கிய தீர்ப்பு ஆனால் அனைத்தினதும் முக்கிய சாரம்சம் என்னவெனில் அனைவரும் இனி தமிழின நலனுக்காக ஒருமித்து செயற்பட வேண்டும் என்பதே. இதன்படி விக்கினேஸ்வரன் அவர்களும் டெனீஸ்வரன் அவர்களும் வழக்கை கைவிட்டு சமரமாகியுள்ளனர். அதுமட்டுமல்ல, அனைத்து தரப்பினரையும் உள்வாங்க வேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பதவியையும் விக்கினேஸ்வரன் ராஜினாமா செய்துள்ளார். அனைவரையும் ஒன்றினைப்பதற்கான முயற்சியை யாழ் மருத்துவர்களும் பல்கலைக்கழக சமூகமும் முன்னெடுப்பதாக செய்திகள் வருகின்றன. ஆரோக்கியமான நகர்வுகள் நம்பிக்கை அளிக்கின்றன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள்.

“றோ”வும் பொட்டு அம்மானும்!

• “றோ”வும் பொட்டு அம்மானும்! இந்திய உளவுத்துறை நிறுவனமான “றோ” அமைப்பு ( RAW) உருவாக்கப்பட்ட தினம் இன்று ஆகும்.(18.09.1968) ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் முதன்முதலாக இந்திய உளவுத் துறை (இன்டெலிஜென்ஸ் பீரோ) 1933-ல் உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தியா விடுதலை அடைந்த பின்னர் 1968-ல் உளவுத் துறையின் ஓர் அங்கமாக, வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பிரிவான “றோ” இந்திரா காந்தியால் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இரண்டு கோடி ரூபாய் பட்ஜெட், 250 பணியாளர்கள் என தொடங்கப்பட்ட “றோ”வின் இன்றைய ஆண்டு பட்ஜெட் சுமார் 900 கோடி ரூபாய். அதிகாரபூர்வமாக மட்டுமே 25,000 பேர் வேலைபார்க்கிறார்கள். இவர்களில் 3,500 பேர் அந்நிய மண்ணில் பணியாற்றும் கள உளவாளிகள். இது போல் அதிகாரபூர்வமாக இல்லாமல் ஏஜென்டுகளாக எத்தனையோ பேர் வேலை செய்கிறார்கள். அமெரிக்காவின் சிஐஏ மற்றும் இஸ்ரவேலின் மொசாட்டுக்கு இணையாக தற்போது றோவும் உள்ளது என்கிறார்கள். ஆனால் 2009வரை புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கொல்வதற்கும் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கும் இந்த றோ எடுத்த முயற்சிகள் அனைத்தையும் முறியடித்தவர் பொட்டு அம்மான். பொட்டு அம்மான் எந்த புலனாய்வு கல்லூரியிலும் படிக்கவில்லை. உலகின் பிரபல்யமான உளவு நிறுவனங்களில் பயிற்சி பெறவும் இல்லை. ஆனாலும் அவர் றோ வின் சதிகளை எப்படி முறியடித்தார் என்பது இன்று வரையும் ஆச்சரியமாகவே இருக்கிறது. அதுவும் எந்தவித நவீன உபகரணங்களும் இன்றி போதிய வளங்களும் இன்றி ஒரு குறுகிய நிலப்பரப்பில் இருந்துகொண்டு றோவை முறியடிப்பது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத விடயம். கியூப தலைவர் பிடல் காஸ்ரோவை அமெரிக்க சிஐஏ பல தடவைகள் கொல்ல முயன்று தோல்வி அடைந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அதேபோல் பொட்டு அம்மானின் சாதனை வரலாற்றில் இடம் பெறுமா என்று தெரியவில்லை. ஆனால் றோவின் பெயர் உச்சரிக்கப்படும்போதெல்லாம் பொட்டு அம்மானின் பெயர் தமிழர்களின் மனங்களில் நிச்சயம் வந்து போகும்.

சபாஷ் சூரியா!

சபாஷ் சூரியா! இதுதான் சரியான செருப்படி!! அசிங்கப்பட்டான் அர்ஜீன் சம்பத் !!! இந்த முட்டாள் அர்ஜீன் சம்பத் ஈழம் வந்து தமிழ் மக்களிடையே மதக் கலவரத்தை உருவாக்க முயன்றவன். அதுமட்டுமல்ல, மோடி மூலம் தீர்வு பெற்று தருவேன் என ஈழத் தமிழ் மக்களை ஏமாற்றியவன். இவனையும் சில ஈழத் தமிழர்கள் நம்புகிறார்களே என்பதே வேதனையாக இருக்கிறது.

அயோக்கியர்களின் கடைசிப்புகலிடம் தேசபக்தி!

•அயோக்கியர்களின் கடைசிப்புகலிடம் தேசபக்தி! டெல்லி செய்தியாளர் ராஜீவ் சர்மாவை ஓஎஸ்ஏ சட்டத்தின் கீழ் கைது செய்து இருப்பதாக டில்லி பொலிஸ் தெரிவித்துள்ளது அவர் செய்த தவறு சீன பத்திரிகையான குளோபல் டைம்ஸ்க்கு கட்டுரை எழுதியது. அவர் தனது கடடுரையில் ''இதுவரை இருதரப்புக்கும் இடையே நடந்து இருந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் வீணாகியுள்ளது. 1962க்குப் பின்னர் நிலைமை தற்போது மிகவும் மோசமடைந்துள்ளது. தங்களது நாட்டு மக்களுக்கு உதவுவதற்கு பதிலாக ஒருவருக்கொருவர் தங்களுக்குள் சண்டையிட்டு, ராணுவத்தை பலப்படுத்தி வருகின்றனர்” என்று தெரிவித்து இருந்தார். அவர் எழுதியதில் என்ன தவறு? அவர் உண்மையைத்தானே எழுதியிருக்கிறார். எதற்காக அவரை கைது செய்ய வேண்டும்? சீனப் பத்திரிகைக்கு கட்டுரை எழுதியதற்காக ஒரு செய்தியாளரை கைது செய்யும் இந்த அரசுதான் சீன வங்கியில் 9000கோடி ரூபா கடன் வாங்கியுள்ளது. அதுமட்டுமல்ல தற்போது நடைபெறும் ஐபிஎல் கிரிக்ட் போட்டியின் ஸ்பான்சராக சீன நிறுவனமான VIVO தொடரும் என்று BCCI அறிவித்திருக்கிறது. இந்த BCCI யின் செயலாளராக இருப்பவர் உள்துறை அமைச்சர் அமிர்த்ஷாவின் மகன் ஜெ.ஷா போங்கடா நீங்களும் உங்கட தேசபக்தியும்.

பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம்

பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றமை தொடர்பில் கொழும்பு கொகுவெல இராணுவ முகாமை சேர்ந்த மூன்று இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. இராணுவ கோப்ரல் ஒருவரும், லான்ஸ் கோப்ரல்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. யுத்த காலத்தில் சில தவறுகள் நடைபெற்றன. மற்றும்படி இலங்கை ராணுவம் மிகவும் புனிதமானது என்று கூறிவருபவர்கள் இந்த சம்பவம் குறித்து என்ன கூறப்போகிறார்கள்? அதுவும் சிங்கள பிரதேசத்தில் தமது சிங்கள பெண்களையே அச்சுறுத்தும் இந்த சிங்கள ராணுவம் தமிழ் பகுதிகளில் தமிழ் பெண்கள் மீது எப்படி நடந்துகொள்ளும் என்பதை கொஞ்சம் நினைத்து பாருங்கள். 1971ம் ஆண்டு மன்னம்பெரி என்ற சிங்கள பெண்ணை பாலியல் வல்லுறவு செய்து எந்த சிங்கள ராணுவம் கொன்றதோ அதே சிங்கள ராணுவம்தான் கைதடியில் கிருசாந்தி என்ற தமிழ் மாணவியை கொன்று புதைத்தது. கிருசாந்திகளை எந்த ராணுவம் கொன்று புதைத்தோ அதே சிங்கள ராணுவம்தான் முள்ளிவாய்க்காலில் இசைப்பிரியாக்களை பாலியல் வல்லுறவு செய்து கொன்றன. அதே சிங்கள ராணுவம்தான் இப்போதும் பெண்களை பாலியல்ரீதியாக அச்சுறுத்தியும் துன்புறுத்தியும் வருகிறது. இலங்கை அரசு இதனைக் கண்டிக்காமலும் தண்டிக்காமலும் தொடர்ந்தும் தன் ராணுவத்தை பாதுகாத்து வருவதாலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற இந்த நிலை தொடர்கிறது. அது மட்டுமன்றி பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியும் கௌரவிக்கிறது இலங்கை அரசு. இங்கு வேதனை என்னவென்றால் பெண் விடுதலைக்காக முகநூல்களில் பொங்குபவர்கள் மறந்தும்கூட ராணுவத்தின் இந்த பாலியல் வல்லுறவுகளை கண்டித்து ஒரு வரிகூட எழுத மாட்டார்கள். ஒவ்வொரு எழுத்தின் பின்னாலும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிந்திருக்கிறது என்று லெனின் சரியாகவே கூறியிருக்கிறார்.

எந்த திலீபனை பயங்கரவாதி என்ற

எந்த திலீபனை பயங்கரவாதி என்று இந்திய அரசு கொன்றதோ அதே திலீபன் மதுரையில் ஒரு தெருவின் பெயராக விளங்கிறார். எந்த இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று இந்திய அரசு தடை செய்ததோ அதே இயக்கத்தின் திலீபனை தமிழக மக்கள் நினைவு கூர்கிறார்கள். மீண்டும் ஒருமுறை இந்திய அரசின் முகத்தில் ஓங்கி அறைந்துள்ளார் திலீபன் நன்றாகவே. குறிப்பு – இலங்கையில் நினைவுகூர தடைவிதித்து அதனால் உலகமெங்கும் திலீபனை நினைவுகூர வழி சமைத்த இலங்கை அரசுக்கு நன்றிகள்.

எமக்காக குரல் கொடுத்து வந்த

எமக்காக குரல் கொடுத்து வந்த ஒரு உற்ற நண்பனை நாம் இழந்து விட்டோம். ஈழத் தமிழர்கள் சார்பாக “ஆழ்ந்த அஞ்சலிகள்”

நீட்தேர்வை நிரந்தரமாக ரத்துச்செய்யக்கோரி

நீட்தேர்வை நிரந்தரமாக ரத்துச்செய்யக்கோரி 6வது நாளாக சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ள “மக்கள்பாதை” தோழர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம். நீட் என்னும் சமூக அநீதியை தூக்கியெறிவோம்!

இருவரும் சோற்றைத்தான் தின்கின்றனர்.

இருவரும் சோற்றைத்தான் தின்கின்றனர். ஆனால் ஒருவர் விவசாயிகளுக்காக தன் பதவியை ராஜினாமா செய்கிறார். இன்னொருவர் விவசாயிகள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. தனக்கு பதவிதான் முக்கியம் என்று இருக்கிறார். டயர் நக்கிகளிடம் பதவியைக் கொடுத்துவிட்டு அவர்கள் மக்கள் நலனுக்காக செயற்படுவார்கள் என்று எதிர்பார்ப்பது தவறுதான்.

தாயகத்திலிருந்து எந்த பிரதிநிதிகளும் கலந்துகொள்ள முடியவில்லை.

தாயகத்திலிருந்து எந்த பிரதிநிதிகளும் கலந்துகொள்ள முடியவில்லை. லண்டன் கனடா போன்ற நாடுகளில் இருந்தும்கூட யாரும் சென்று பங்கு பற்ற முடியவில்லை. ஏன் சுவிஸில் இருந்துகூட குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் மக்கள் சேர்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. கொரோனோவின் இத்தனை அச்சுறுத்தலுக்கும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் நீதி கோரி ஜ.நா முன்றலில் குரல் எழுப்பியுள்ளனர். எத்தனை வருடமானால் என்ன? இதுவரை நீதி கிடைக்காவிட்டால் என்ன? ஆனாலும் நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டோம் என்பதை காட்டியுள்ளனர். கடல் கடந்து போனாலும் தம் உறவுகளுக்காக அடுத்த சந்ததியும் குரல் எழுப்ப தயங்காது என்பதைக் காட்டியுள்ளனர். போராட்டம் ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை. ஓயாத இவர்கள் போராட்டம் நிச்சயம் ஒருநாள் வெற்றியை பெற்றுக் கொடுக்கும். இது உறுதி.

அடக்குமுறை இருக்கும்வரை

•அடக்குமுறை இருக்கும்வரை அதற்கு எதிரான போராட்டமும் இருக்கும்! அடுத்த சந்ததி எமது போராட்டங்களையும் போராளிகளையும் மறந்துவிடுமோ என்ற அச்சம் இருந்து வந்தது. ஆனால் அடுத்த சந்ததியும் எமக்காக மரணித்த போராளிகளை நினைவு கூரத் தயங்காது என்பது நிரூபணமாகி உள்ளது தடை போட்டு அதனால் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களின் அடுத்த சந்ததியும் திலீபனை நினைவுகூர வைத்த இலங்கை அரசுக்கு நன்றிகள்.

உலகில் எந்த நாட்டின் அரசாவது

உலகில் எந்த நாட்டின் அரசாவது தன் சொந்த மக்கள் மீது விமானம் மூலம் குண்டு வீசியதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுவும் “சமாதானத்திற்கான யுத்தம்” என்று கூறிக்கொண்டு தம் நாட்டு மக்களை கொன்ற பெண் ஜனாதிபதியை அறிந்திருக்கிறீர்களா? ஆம். அத்தனை அதிசயத்தையும் இலங்கையில் நிகழ்த்தியவர் “சமாதான தேவதை” என்று அழைக்கப்பட்ட சந்திரிக்கா குமாரதுங்கவே. 22.09.1995 யன்று யாழ்ப்பாணத்தில் நாகர்கோவில் பாடசாலை மீது சந்திரிக்காவின் இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சில் 21 மாணவர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான மாணவர்கள் காயமடைந்தனர். கொஞ்சம்கூட இரக்கம் இன்றி மாணவர்கள் மீதே குண்டு வீசி வழிகாட்டியவர் சந்திரிக்கா குமாரதுங்கவே. இது குறித்து மனித உரிமை அமைப்புகளோ அன்றி உலக அமைப்புகளோ இதுவரை ஒரு கண்டனம்கூட தெரிவிக்கவில்லை. ஏனெனில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஏன் என்று கேட்பதற்கு யாரும் அற்ற ஒரு நாதி அற்ற இனமாக தமிழ் இனம் இருப்பதால்தான் அவர்கள் தொடர்ந்து இனப்படுகொலை செய்கிறார்கள்.

இலங்கை ஒரு ஜனநாயகநாடு என்பார்கள்

இலங்கை ஒரு ஜனநாயகநாடு என்பார்கள் இங்கு சட்டத்திற்குமுன் அனைவரும் சமம் என்பார்கள் ஜனாதிபதிக்கு அதிக அதிகாரம் உள்ளது என்பார்கள் அந்த ஜனாதிபதியே ஒரு அரச அதிகாரியை கைநீட்டி அடிக்க முடியாது. ஆனால் ஒரு சாதாரண புத்தபிக்கு, அரச அதிகாரிகளை அடிக்கலாம் இந்து மத குருக்களை அவமதிக்கலாம் கிருத்தவ மதகுருவை மிரட்டலாம் ஏன் பொலிசாரைக்கூட சட்டையில் பிடித்து துரத்தலாம். ஏனெனில் இலங்கையில் புத்த பிக்கு சட்டத்திற்கு அப்பாற்பட்டவர். புத்தபிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியைவிட அதிக அதிகாரம் கொண்டவர்? என்னே அவலம் இது?

மறக்க முடியாத “தட்டிவான்”!

மறக்க முடியாத “தட்டிவான்”! 1980களில் யாழ் குடாநாட்டில் படித்தவர்களுக்கு இந்த வாகனம் நன்கு நினைவில் இருக்கும். அந்தளவுக்கு அவர்களின் வாழ்வுடன் இரண்டறக் கலந்த வாகனம் என்றும் கூறலாம். அப்போது பருத்தித்துறையில் இருந்து நெல்லியடிக்கு டிக்கட் இருபது சதம். நாம் அரை டிக்கட் என்பதால் எமக்கு பத்து சதம் மட்டுமே. அந்த பத்து சதத்தைக்கூட கொடுக்காமல் டிமிக்கி விடவே நினைப்போம். ஏனெனில் ஒரு ஜஸ்பழம் ஐந்து சதம் மட்டுமே. மீதி ஐந்து சதத்திற்கு நாவற்பழம் சாப்பிடலாம். பருத்தித்துறையில் இருந்து வரும்போது பெரும்பாலும் தட்டிவானின் டிக்கியில் நின்றுவரவே நாம் விரும்புவோம். டிறைவர் “பொலிஸடா” என்று கத்தியதும் உடனே டிக்கியில் நிற்கும் நாம் எல்லோரும் தலையை மட்டும் வானுக்குள் செலுத்துவோம். ஆனால் மாணிக்கராசா என்ற பொலிஸ் சார்ஜன்ட் மட்டும் எப்படியாவது ஒளிந்து வந்து எங்களை பிடித்துவிடுவார். சிலவேளை ஜீப்பில் வருவார். சிலவேளை பஸ்சில் வருவார். சிலவேளை சயிக்கிளில் வருவார். எதில் வருவார்? எப்படி வருவார்? என்று கணிக்க முடியாது. எதோ ஒன்றில் வந்து எங்களை எப்படியும் பிடித்துவிடுவார். சிலவேளை கையால் கன்னத்தில் அடிப்பார். சிலவேளை பூவரசம் கட்டையால் அடிப்பார். சிலவேளை தோப்புக்கரணம் போட வைப்பார். ஒருமுறை இப்படித்தான் திடீரென வந்து மாலி சந்தியில் வைத்து எம்மை பிடித்துவிட்டார். தட்டிவானின் டிக்கியில் இருந்த எங்களை மாலிசந்தியில் இருந்து நெல்லியடி சந்திவரை நடந்துபோக விட்டார். எங்களுக்கு பயங்கர கோபம். அதனால் வழியில் இருந்த பிள்ளையார் கோவிலில் இந்த மாணிக்கராசா விரைவில் ஏதாவது வாகனத்தில் அடிபட்டு சாக வேண்டும் என்று நேர்த்தி வைத்தோம். அந்த கோவில் பிள்ளையார் ஏனோ எங்கள் நேர்த்தியை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் அவருக்கு எந்த விபத்தும் நடக்கவில்லை. பின்னாளில் அவர் இயக்கங்களுக்கு உதவியதால் இலங்கை அரசு அவரை கைது செய்ய முனைந்தது. இதனால் அவர் தப்பி இந்தியா செல்ல முயன்றார். இந்தியா செல்வதற்காக அவர் எமது இயக்கத்தின் உதவியை நாடினார். அவர் எமது வள்ளத்தில் ஏற வந்தபோது அவருக்கு எம்மை மாலிசந்தியில் இருந்து நடக்க வைத்த கதையைக் கூறினேன். இதைக்கேட்டதும் அவர் பயந்து விட்டார். ஏனெனில் எங்கே அந்த ஆத்திரத்தில் தன்னை கடற்கரை மணலில் உருள வைக்கப்போகிறேனோ என நினைத்துவிட்டார். நான் சிரித்துவிட்டு “பயப்படாதிர்கள். நீங்கள் எமது நன்மைக்காகத்தானே அவ்வாறு செய்தீர்கள். அப்போது அது எமக்கு தெரியவில்லை. ஆனால் இப்போது உணர்கிறேன்” என்றேன். அவருக்கு இதைக் கேட்டபின்பே முகத்தில் நிம்மதி பிறந்தது. சந்தோசமாக கையசைத்துவிட்டு இந்தியா சென்றார். இப்போது அவர் உலகில் எங்கேயாவது ஒரு மூலையில் இருக்கக்கூடும். அவருக்கு இந்த பதிவு சென்றடைந்தால் அவரும் அந்த நினைவுகளை ஒருமுறை மீட்டிப் பார்ப்பார்.

இதோ! சிங்கள புத்த பிக்குவிற்கு

இதோ! சிங்கள புத்த பிக்குவிற்கு தன் வேட்டியை உரிந்து கொடுத்துவிட்டு உட்கார்ந்து இருக்கிறாரே இவர்தான் மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா. இவர்தான் இந்திய உளவு அமைப்புகளால் அனுப்பி வைக்கப்பட்ட ஈழத்து சிவசேனைத் தலைவர். இவரை யாராவது கண்டால் மட்டக்களப்பு மக்கள் தேடுவதாக தயவு செய்து கூறவும். கூடவே கட்டிய கோமணமாவது மிஞ்சி இருக்கிறதா என பார்த்துச் சொல்லுங்கள். அல்லது அதையும் உரிந்து கொடுத்துவிட்டு அம்மணமாக திரிகிறாரா?

உயிர்த்தெழும் அற்புதத்தை

•உயிர்த்தெழும் அற்புதத்தை திலீபன் இந்தியாவில் நிகழ்த்துகிறாரா? வடக்கு கிழக்கு முழுவதும் 20 காந்தி சிலைகளை நிறுவுவேன் என்றார் யாழ் இந்திய தூதுவர். அவர் சொன்னதாலே என்னவோ தெரியவில்லை உடனே எம்மவர்கள் கோயில் கோபுரத்தில் காந்தி சிலையை வைத்துள்ளார்கள். இந்தியாவில்கூட எந்த கோயில் கோபுரத்திலும் காந்தி சிலை வைக்கப்பட்டிருப்பதாக நாம் இதுவரை அறியவில்லை. காந்தி ஈழத் தமிழர்களுக்கு என்ன செய்தார்? எதற்காக அவர் சிலையை அதுவும் கோயில் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டும்? காந்தி அகிம்சையை போதித்தமையினால் வைக்கப்பட்டதாக சிலர் நியாயப்படுத்தக்கூடும். அப்படியென்றால் திலீபனும் அகிம்சைப் போராட்டத்தில்;தானே உயிர் நீத்தார். அவருக்கு ஒரு சிலை வைக்க இந்திய தூதர் முயல்வாரா? என்ன இருந்தாலும் திலீபன் ஒரு புலிப் போராளி. எனவே அவருக்கு சிலை வைக்க இந்திய தூதர் எப்படி முன்வருவார் என அந்த சிலர் நியாயம் கூறுவார்கள். சரி. அப்படியென்றால் அன்னை பூபதி புலிப் போராளி இல்லைத்தானே. அவருக்கு சிலை வைக்க இந்திய தூதர் முன்வருவாரா என்று கேட்டால் இந்த சிலர் என்ன நியாயம் கூறுவார்கள்? இந்திய தூதர் முன்வராமல் இருக்கலாம். ஆனால் இந்தியாவில் இருக்கும் தமிழ் மக்கள் முன் வந்துள்ளனர். அவர்கள் திலீபன் பெயரில் பஸ் தரிப்பிடம் கட்டியுள்ளனர். திலீபன் பெயரில் தெரு அமைத்துள்ளனர். தமது குழந்தைகளுக்கு திலீபன் பெயரை சூட்டுகின்றனர். எந்த இந்திய அரசு திலீபனை கொன்றதோ அதே இந்திய அரசின் நாட்டில் திலீபன் உயிர்த் தெழுகிறார் . இப்படி ஒரு அற்புதத்தை திலீபன் நிகழ்த்தப் போகிறார் என்பதை ராஜிவ் காந்தியோ அல்லது அவருக்கு ஆலோசனை கூறிய தூதர் டிக்சிற்றோ நிச்சயம் நினைத்திருக்கமாட்டார்கள். (மீள் பதிவு)

பாராளுமன்றத்திலும் சரி,

பாராளுமன்றத்திலும் சரி, நீதிமன்றத்திலும் சரி இலங்கை அரசின் எந்த அமைப்பிலும் தமிழருக்கு நீதியோ நியாயமோ கிடைக்காது என்பதை அம்பலப்படுத்துவதைவிடுத்து ஹர்த்தால் , ஒருநாள் உண்ணாவிரதம் என்று செய்வதை எரிச்சலுடன் விமர்சிப்பதா? அல்லது “திலீபன் நினைவுதினம் கொண்டாடினால் அப்புறம் உனக்கு நினைவுதினம் கொண்டாட யாரும் இருக்கமாட்டார்கள்” என்று ஒரு பிரதேசபை உறுப்பினரையே சிங்கள ராணுவ அதிகாரி மிரட்டுகின்ற சூழ்நிலையில் குறைந்தபட்சம் ஹர்த்தால் மற்றும் ஒருநாள் உண்ணாவிரதம் செய்யவாவது முன்வந்தார்களே என ஆறுதல் கொள்வதா? எதுவாயினும் இதுவரை ஒருவருக்கொருவர் எதிர் அரசியல் செய்தவர்கள் இப்போது திலீபனுக்காக ஒருமித்து செயற்பட முன்திருப்பது ஆரோக்கியமானதே. எனவே நம்பிக்கையுடன் வரவேற்போம். ஒருமித்து ஒத்துழைப்பு வழங்குவோம்.

பாடும் நிலா மறைந்தது!

•பாடும் நிலா மறைந்தது! மக்கள் மனம் நிறைந்த பாடகனுக்கு மரணம் ஏது? தன் பாடல்கள் மூலம் என்றும் நிலைத்து நிற்பார். ஆழ்ந்த அஞ்சலிகள்!

இப்போது பிரச்சனை திலீபன் பயங்கரவாதியா இல்லையா என்பதல்ல

இப்போது பிரச்சனை திலீபன் பயங்கரவாதியா இல்லையா என்பதல்ல. மாறாக, தமிழ் மக்கள் தம் உறவுகளை நினைவுகூர உரிமை இருக்கிறதா இல்லையா என்பதே முதலில் திலீபன் நினைவிடத்தில் நினைவுகூரத் தடை என்றார்கள். பின்னர் இது குறித்து பாராளுமன்றத்தில் பேசுவதற்கு தடை என்றார்கள். இப்போது செல்வசந்நிதி கோவிலில் உண்ணாவிரதம் இருப்பதற்கும் தடை என்கிறார்கள். இதன் அர்த்தம் என்ன?

இலங்கை அரசு தன் கோர முகத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது.

இலங்கை அரசு தன் கோர முகத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது. அது தன் பொலிஸ் மற்றும் ராணுவம் மூலம் மாணவர்களை அச்சுறுத்துகிறது. திலீபனை நினைவு கூர்ந்துவிடுவார்களோ என்று யாழ் பல்கலைக்கழக மாணவர்களை மிரட்டுகிறது. நினைவு கூர்வது எமது உரிமை. அதை அச்சுறுத்தலுக்கு பயந்து விட்டுத்தர முடியாது. ஊழியர்களுக்கு சம்பளம்கூட கொடுக்க முடியாமல் அரசு திண்டாடுகிறது. சிங்கள மக்களை ஏமாற்றுவதற்காக இனவாதத்தை அரசு மேற்கொள்கிறது. இப்போது தமிழ் மக்கள் முன் ஒரேயொரு கேள்விதான் இருக்கின்றது. அடிமையாக வீழ்ந்து கிடக்கப்போகிறோமா அல்லது அரசின் அராஜகத்திற்கு எதிராக எழுந்து நிற்கப்போகிறோமா என்பதே

நன்றாக படர்ந்து வளர்ந்த மரத்தை

நன்றாக படர்ந்து வளர்ந்த மரத்தை பாதியில் தறித்து வீழ்த்திவிட்டு அது பட்டுவிட்டது என்று நினைத்திருப்பர். ஆனால் அதன் ஆழமான வேர்களோ தக்க தருணத்திற்காக காத்து கிடக்கும் சிறு துளி ஈரம் கண்டவுடன் துளிர்த்து எழும். அதன் பிஞ்சு இலைகள் காற்றில் ஆடும்போது “வீழ்வேன் என்று நினைத்தாயோ” என கேட்பது போல் இருக்கும் அதுபோலவே ஒன்றரை லட்சம் பேரை கொன்றுவிட்டு போராட்டத்தை அழித்துவிட்டதாக கனவு காண்பவர்கள் மீண்டும் போராட்டம் முளைத்தெழும்போது மாவீரர்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மை புரியும்.

மகிந்த ராஜபக்சா - மல்லி (தம்பி) கோத்தா!

மகிந்த ராஜபக்சா - மல்லி (தம்பி) கோத்தா! நான் சொல்வதை கொஞ்சம் கவனமாய் கேள். இது 2009 அல்ல. துப்பாக்கி காட்டி தமிழனை மிரட்ட முடியாது. பேசாமல் விட்டிருந்தால் ஒரு 40 பேர் அஞ்சலி செலுத்திவிட்டு போய் இருப்பாங்கள். இப்ப பார், நீ தடை என்றவுடன் அவங்கள் அதை உடை என்கிறான். இது தேவையா? நீ யாழ்ப்பாணத்தில் தடை போட்டாய். அவனுகள் என்னடாவென்றால் உலகம் பூரா கொண்டாடுகிறான்கள். பிரிந்து நின்ற கட்சிக்காரன் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து அஞ்சலி செலுத்த ஆரம்பிச்சிட்டாங்கள். ஆயுதம் ஏந்திய போராளிகளை வன்முறையாளாகள்; என்று பேசிய சுமந்திரனே கஜேந்திரகுமாருக்கு ஆதரவாக பேச வைத்துவிட்டாய். மௌனமாக இருந்த சம்பந்தர் ஐயா “சர்வாதிகாரத்திற்கு எதிராக அனைவரும் போராட வேண்டும்” என்று கூற வைத்து விட்டாய். இப்படியே போச்சுன்னா மாகாணசபைத் தேர்தலில் ஒரு சீட்கூட நமக்கு கிடைக்காமல் போய்விடும் போல இருக்கே. நம்ம சிங்கள கவிஞன் ஒருவன் “உன் சமாதியில் முழந்தாளிட்டு வணங்குவேன்” என்று திலீபனுக்கு கவிதை எழுதுகிறான். அதை இன்னொரு சிங்கள பாடகன் பாடி வெளியிடுகிறான். அதுமட்டுமல்ல திலீபன் நினைவு தினத்தை தடை செய்தால் தான் சிங்கள புலியாக மாறுவேன் என்று சிஙகள மாணவி ஒருத்தி பகிரங்கமாக கூறுகிறாள். இதைவிட நம்ம அமைச்சர் வாசுதேவ நாணயக்கார “திலீபன் ஒரு உன்னதமான தியாகி” என்று புகழ் பாடுகிறார். ஜேவிபி தலைவர் அனுரா கூட திலீபனை நினைவு கூர்வதை தடை செய்வது தவறு என்கிறார். இப்படி நம்ம சிங்கள இனத்தவர்களே அவங்களுக்கு ஆதரவாய் பேச ஆரம்பிச்சுட்டாங்க. இனிமேல் இந்த இனவாத விளையாட்டு மூலம் சிங்களவர்களை தொடர்ந்து ஏமாற்றலாம் என நினைக்காதே. தமிழ்நாட்டில திலீபன் நகர், திலீபன் தெரு, திலீபன் பஸ் நிலையம் என பெயர் வைத்து நினைவு கூர்கிறாங்கள். இந்திய அரசே பேசாமல் கண்டுக்காமல் இருக்கும்போது நீ ஏன் தேவையில்லாமல் தடை போடுகிறாய்? நமக்கு வோட்டு போட்ட மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யப்பார். இல்லைன்னா நீ அடுத்தமுறை ஜனாதிபதியாக முடியாது. நீ மட்டுமல்ல என் மகன் நாமல் ராஜபக்சாகூட ஜனாதிபதியாக முடியாமல் போய்விடும்.

ஒருபுறம் கொரோனோ அச்சுறுத்தல்

ஒருபுறம் கொரோனோ அச்சுறுத்தல். மறுபறம் அரசின் தடைகள். ஒருபுறம் பொலிஸ் தடை என்கிறது. மறுபுறம் ராணுவம் துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறது. இத்தனைக்கும் மத்தியில் தமிழ் தலைவர்கள் ஒருமித்து திலீபனை நினைவு கூருகின்றனர். இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் பலரும் திலீபனை நினைவு கூர்கின்றனர். யாருடைய பெயரைக் கூறினால் எதிரிகளும் துரோகிகளும் எரிச்சல் அடைகிறார்களோ அவருடைய பெயர் நினைவு கூரப்பட வேண்டியது. ஆம். திலீபன் பெயர் எதிரிக்கு எரிச்சல் கொடுக்கிறது. எனவே அவர் நினைவு கூரப்பட வேண்டும். எனவே எத்தனை தடைகள் போட்டாலும் அத்தனையும் உடைக்கப்படும்.

மாநிலங்களுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி பாக்கிய கொடுக்கவில்லை.

மாநிலங்களுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி பாக்கிய கொடுக்கவில்லை. கொரோனோவுக்கு நிதி உதவி கேட்டும் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி வழங்கப்படவில்லை தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் இலங்கை அரசு உதவி கோராத நிலையிலும் இலங்கைக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இலங்கை அரசோ இந்திய அரசு செய்த ஒப்பந்தம் மூலம் வழங்கப்பட்ட மாகாணசபையை நீக்க முயல்கிறது. இத்தனைக்கு பிறகும் இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவும் என நம் தலைவர்கள் கனவு காண்கின்றனர். என்னே அவலம் இது?

நேற்று துப்பாக்கி காட்டி மிரட்டிய ராணுவத்திற்கு

நேற்று துப்பாக்கி காட்டி மிரட்டிய ராணுவத்திற்கு இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அளித்த பதில் முழந்தாளிட்டு திலீபனுக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகின்றது தமிழன் அதுவும் பல்கலைக்கழக மாணவன் பயந்து வீழ்ந்து கிடந்துவிடுவானா?

மகிந்தா - மோடிஜி ! இந்த சீமானை அடக்க முடியாதா?

மகிந்தா - மோடிஜி ! இந்த சீமானை அடக்க முடியாதா? மோடி - ஏன்? என்ன பிரச்சனை? மகிந்தா- அவர் திலீபனை நினைவு கூர்கிறார். மோடி - இந்திய சட்டப்படி நினைவு கூர்வதை தடுக்க முடியாது. மகிந்தா- என்ன சேர் பெரிய சட்டம்? எங்க நாட்டிலும்தான் சட்டம் இருக்கு. ஆனாலும் நாங்க தடை போட்டிருக்கோம் அல்லவா. மோடி . இந்தியாவுல அப்படி இலகுவில் செய்திட முடியாது. அப்புறம் உச்சநீதிமன்றம் தலையிடும். மகிந்தா - அப்ப என்னதான் செய்வது சேர்? மோடி - நீங்க அவரை விலைக்கு வாங்கிவிடுங்களேன். மகிந்தா- புலம்பெயர் தமிழர்கள் அனுப்புற காசுக்காகத்தான் அவர் இப்படி நடக்கிறதா சொன்னாங்கள். அதை நம்பி நானும் இரட்டி மடங்கு பணம் தரலாம் என்று கேட்டுப் பார்த்தன். அவரை விலைக்கு வாங்க முடியவில்லை. மோடி - சரி கவலையை விடுங்க. 400 மில்லியன் டாலர் தாறன். சந்தோசமாக இருங்க. மகிந்தா- அந்த கௌதமனையாவது பிடிச்சு சிறையில போடுங்க சேர். மோடி - ஏன் அவர் என்ன பிரச்சனை? மகிந்தா - எங்க எம்பசிக்கு முன்னால போய் போராட்டம் நடத்துறார். மோடி - நலலவேளை . இயக்குனர் களஞ்சியம் இன்னும் உங்கள் உருவப் பொம்மையை எரிக்கவில்லை என்று நிம்மதி அடையுங்க. மகிந்தா- 2009ல் ஒன்றரை லட்சம் தமிழரை நான் கொல்லும்போது அப்போதைய இந்திய அரசு எப்படி இவங்களை எல்லாம் அடக்கி வைச்சது. அது மாதிரி நீங்களும் செய்ய வேணும் சேர். மோடி - யோவ் முட்டாள்தனமாய் உளறாதே. இப்ப ஒன்றரை லட்சம் பேரை கொன்றால் தமிழீழம் மட்டும்மல்ல தமிழ்நாடே தனிநாடாகிவிடும்.