Saturday, September 26, 2020

உயிர்த்தெழும் அற்புதத்தை

•உயிர்த்தெழும் அற்புதத்தை திலீபன் இந்தியாவில் நிகழ்த்துகிறாரா? வடக்கு கிழக்கு முழுவதும் 20 காந்தி சிலைகளை நிறுவுவேன் என்றார் யாழ் இந்திய தூதுவர். அவர் சொன்னதாலே என்னவோ தெரியவில்லை உடனே எம்மவர்கள் கோயில் கோபுரத்தில் காந்தி சிலையை வைத்துள்ளார்கள். இந்தியாவில்கூட எந்த கோயில் கோபுரத்திலும் காந்தி சிலை வைக்கப்பட்டிருப்பதாக நாம் இதுவரை அறியவில்லை. காந்தி ஈழத் தமிழர்களுக்கு என்ன செய்தார்? எதற்காக அவர் சிலையை அதுவும் கோயில் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டும்? காந்தி அகிம்சையை போதித்தமையினால் வைக்கப்பட்டதாக சிலர் நியாயப்படுத்தக்கூடும். அப்படியென்றால் திலீபனும் அகிம்சைப் போராட்டத்தில்;தானே உயிர் நீத்தார். அவருக்கு ஒரு சிலை வைக்க இந்திய தூதர் முயல்வாரா? என்ன இருந்தாலும் திலீபன் ஒரு புலிப் போராளி. எனவே அவருக்கு சிலை வைக்க இந்திய தூதர் எப்படி முன்வருவார் என அந்த சிலர் நியாயம் கூறுவார்கள். சரி. அப்படியென்றால் அன்னை பூபதி புலிப் போராளி இல்லைத்தானே. அவருக்கு சிலை வைக்க இந்திய தூதர் முன்வருவாரா என்று கேட்டால் இந்த சிலர் என்ன நியாயம் கூறுவார்கள்? இந்திய தூதர் முன்வராமல் இருக்கலாம். ஆனால் இந்தியாவில் இருக்கும் தமிழ் மக்கள் முன் வந்துள்ளனர். அவர்கள் திலீபன் பெயரில் பஸ் தரிப்பிடம் கட்டியுள்ளனர். திலீபன் பெயரில் தெரு அமைத்துள்ளனர். தமது குழந்தைகளுக்கு திலீபன் பெயரை சூட்டுகின்றனர். எந்த இந்திய அரசு திலீபனை கொன்றதோ அதே இந்திய அரசின் நாட்டில் திலீபன் உயிர்த் தெழுகிறார் . இப்படி ஒரு அற்புதத்தை திலீபன் நிகழ்த்தப் போகிறார் என்பதை ராஜிவ் காந்தியோ அல்லது அவருக்கு ஆலோசனை கூறிய தூதர் டிக்சிற்றோ நிச்சயம் நினைத்திருக்கமாட்டார்கள். (மீள் பதிவு)

No comments:

Post a Comment